Jump to content

UK ல் சொந்த கடை / பெட்ரோல் ஸ்டேஷன் நடத்த என்ன தகுதி வேண்டும்?

M.P

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு, கதை,வசனம்,டைரக்சன் எல்லாம் நல்லாய்த்தான் போகுது......இன்னும் இரண்டுநாளைக்கு ஓடவிட்டுட்டு.....இரண்டொரு சீனை நானும் இழுத்து விடுவம் எண்டு பாக்கிறன்.... :D

Link to comment
Share on other sites

  • Replies 175
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

MP யின் ஆளைத்தான் அவர் பெற்றோல் ஸ்டேசனை காட்டி மயக்கிவிட்டார் போலிருக்கு . :icon_mrgreen:அல்லது இவ்வளவு கோவம் வராது .

நான்... இந்தக் கோணத்தில்,JC_idea.gif யோசிக்க வேயில்லை. :D  :lol: lachen%20(24).gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு, கதை,வசனம்,டைரக்சன் எல்லாம் நல்லாய்த்தான் போகுது......இன்னும் இரண்டுநாளைக்கு ஓடவிட்டுட்டு.....இரண்டொரு சீனை நானும் இழுத்து விடுவம் எண்டு பாக்கிறன்.... :D

அண்ணையோட போடர் பாய்ஞ்ச ஒருத்தர் உங்க வந்து உது தானே செய்தவர்.

அத பத்தி சொல்லப் போக, உவர் MP தம்பி, அவர் தான் ஆள் எண்ட, அலுவல் முடிஞ்சுது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திறமை உள்ளவன் உழைக்கிறான், கனவுகளை நிஜமாக்குகிறான். இதற்குப் படிப்பு படிப்பில்லாமை எல்லாம் ஒரு காரணி அல்ல (படிப்பு என்று சொல்வதை விட எம்.பி சொல்லும் படிப்பைச் சான்றிதழ் எனலாம்!). திறமை இல்லாதவர் அல்லது மாற்றுத் திறமை உள்ளவர் படித்தாலும் உழைக்க முடியாமல் கனவுகளை நிஜமாக்க முடியாமல் இருக்கிறார். (அல்லது, அவர் தனக்குரிய கனவுகளைக் காணாமல் பெட்ரோல் செட் மனேஜரின் கனவுகளைக் காணுவதாலும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கலாம்!). சுருக்கமாகச் சொன்னால், காசும் வடிவான பெட்டையும் தான் எல்லோருக்கும் குறிக்கோளாக இருக்க வேணுமெண்டு இல்லை! உங்கள் கனவை  நீங்களே கண்டு பிடியுங்கள் எம்.பி, பெட்ரோல் செட் மனேஜரின் கனவை ஏன் நீங்கள் துரத்துறீங்கள்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்தேசங்களில் பரந்துகிடக்கும் தமிழர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதில் கௌரவக்குறைபாடோ அன்றேல் இழிநிலையோ இல்லை. அவர் எப்படி வாழ்கிறார் என்பதே முக்கியம். தனது சமூகத்தாலும் தனது சமூகத்தை கூர்ந்துகவனிப்பவர்களாலும் மதிக்கப்படும் வகையில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் எனில் எல்லோரும் மேல்மக்களே.

குடும்பச்சூழ்நிலை நாட்டின் கலவர நிலை இவைபோன்றவை ஒருவர் தனது கல்வியைத் தொடரமுடியாது செய்திருக்கலாம். அன்றேல் இயற்கையிலேயே திறமையானவராகவிருந்து அவருக்குக் கல்வியைப் பெற்ருக்கொள்ளக்கூடிய சூழல் அமையாது விட்டிருக்கலாம். அதற்காக எல்லோரையும் மட்டம்தட்டி விமர்சனம் செய்வதைத் தவிர்க்கவும்.

கடந்தவாரம் பரவலாக இணையத்தளங்களில் குமாரணதுங்காவது யாழ்பாணப் பயணம் என்னும் பெயரில் ஒரு ஒளிவடிவம் காணப்பட்டது. அதில் கொழும்பு றோயல் கல்லூரியில் படித்த ரகீம் என்பவர் செய்யும் சேட்டைகள் அந்தக்காலத்தில் பலரால் இரசிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இப்போது பார்க்கும்போது சின்னப்புள்ளைத்தனமாக இருக்கு.

இன்று இணயத்தளங்களில் கருணா ஆங்கிலம் கதைப்பதை கிண்டல் செய்து ஒரு ஒலி வடிவம் இணைக்கப்பட்டிருக்கு.

கருணா பாடசாலைக்கெ போகாதவர் சின்னவயதிலேயே புலிகளில் இணைந்துவிட்டார் வெறும் கேள்விஞானத்தை வைத்தே தனக்கு வரக்கூடிய ஒரு வேற்றுமொழியைக் கதைப்பதை இணையத்தளங்களில் கிண்டலடிக்கிறார்கள்.

ஆக இருவேறுபட்ட சூழலில் வளர்ந்த இருவரது வேற்றுமொழி அறிவில் எத்தனை வேறுபாடுகள். ஒருவர் றோயல் கல்லூரி இன்னுமொருவர் பாடசாலைக்கே போகாதவர். இதில் யார் சிறந்தவர் கிரகிப்பதில் சிரமக இருக்கின்றதல்லவா?

எம்மால் தமிழில் தொடர்ந்து தடுமாற்றமில்லாது நாம் சொல்லவந்த விடையத்தை ஒரு இருபத்து ஐந்துபேருக்குமுன்னால் நின்று சொற்பொழிவாகக் கொடுப்பதற்கே இயலாமல் இருக்கின்றது கவனச்சிதறல்கள் ஏற்படுகின்றன.

இவைபோன்றதே புலம்பெயர் தேசங்களில் வாழும் எம்மவர்களது நடவடிக்கையை விமர்சனம் செய்வதும்.

எம் பி நீங்களும் எக்காரணத்தாலோ ஒரு காலத்தில் லண்டனில் குப்பைகொட்டியவரே இப்போது சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் எனக்கூறக்கூடாது. ஆரம்பமே இப்படியாகவிருந்தால் போகிற போக்கில் எமது அவுஸ்ரேலிய யாழ் உறவு சுண்டலை மிஞ்சிவிடுவீர்கள் போலுள்ளது.

தவிர இப்படியான பலர் இருப்பதாலேயே இன்னுமொருசாரார் பட்டுப்பீதாபரம் குஞ்சம் குடை போன்றவற்றைப் பெற்றுகொள்ளும் நிலையிலிருக்கிறார்கள். எல்லோரும் அறிவாளிகளாக இருந்தால் இங்கு எதுவுமே உருப்படாது.

பின்பு கறிவேப்பிலைக்கும் யாழ்ப்பாணத்து மிளகாத்தூளுக்கும் வேறு நாட்டுக்காரனது கடைகளது வாசல்களையே ஏறி இறங்கவேண்டும் இது ஒரு சின்ன உதாரணமே.

எது எப்படியோ யாழ் களத்துக்கான புதிய வரவான  உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

MP யின் ஆளைத்தான் அவர் பெற்றோல் ஸ்டேசனை காட்டி மயக்கிவிட்டார் போலிருக்கு . :icon_mrgreen: அல்லது இவ்வளவு கோவம் வராது .

அதே தான் !! அதே தான் !! அதே தான் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீயினால் சுட்ட புண்ணும் உள் ஆறும்

ஆறாதே

காதல் தோல்வியினால் பட்ட வடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்தேசங்களில் பரந்துகிடக்கும் தமிழர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதில் கௌரவக்குறைபாடோ அன்றேல் இழிநிலையோ இல்லை. அவர் எப்படி வாழ்கிறார் என்பதே முக்கியம். தனது சமூகத்தாலும் தனது சமூகத்தை கூர்ந்துகவனிப்பவர்களாலும் மதிக்கப்படும் வகையில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் எனில் எல்லோரும் மேல்மக்களே.

குடும்பச்சூழ்நிலை நாட்டின் கலவர நிலை இவைபோன்றவை ஒருவர் தனது கல்வியைத் தொடரமுடியாது செய்திருக்கலாம். அன்றேல் இயற்கையிலேயே திறமையானவராகவிருந்து அவருக்குக் கல்வியைப் பெற்ருக்கொள்ளக்கூடிய சூழல் அமையாது விட்டிருக்கலாம். அதற்காக எல்லோரையும் மட்டம்தட்டி விமர்சனம் செய்வதைத் தவிர்க்கவும்.

கடந்தவாரம் பரவலாக இணையத்தளங்களில் குமாரணதுங்காவது யாழ்பாணப் பயணம் என்னும் பெயரில் ஒரு ஒளிவடிவம் காணப்பட்டது. அதில் கொழும்பு றோயல் கல்லூரியில் படித்த ரகீம் என்பவர் செய்யும் சேட்டைகள் அந்தக்காலத்தில் பலரால் இரசிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இப்போது பார்க்கும்போது சின்னப்புள்ளைத்தனமாக இருக்கு.

இன்று இணயத்தளங்களில் கருணா ஆங்கிலம் கதைப்பதை கிண்டல் செய்து ஒரு ஒலி வடிவம் இணைக்கப்பட்டிருக்கு.

கருணா பாடசாலைக்கெ போகாதவர் சின்னவயதிலேயே புலிகளில் இணைந்துவிட்டார் வெறும் கேள்விஞானத்தை வைத்தே தனக்கு வரக்கூடிய ஒரு வேற்றுமொழியைக் கதைப்பதை இணையத்தளங்களில் கிண்டலடிக்கிறார்கள்.

ஆக இருவேறுபட்ட சூழலில் வளர்ந்த இருவரது வேற்றுமொழி அறிவில் எத்தனை வேறுபாடுகள். ஒருவர் றோயல் கல்லூரி இன்னுமொருவர் பாடசாலைக்கே போகாதவர். இதில் யார் சிறந்தவர் கிரகிப்பதில் சிரமக இருக்கின்றதல்லவா?

எம்மால் தமிழில் தொடர்ந்து தடுமாற்றமில்லாது நாம் சொல்லவந்த விடையத்தை ஒரு இருபத்து ஐந்துபேருக்குமுன்னால் நின்று சொற்பொழிவாகக் கொடுப்பதற்கே இயலாமல் இருக்கின்றது கவனச்சிதறல்கள் ஏற்படுகின்றன.

இவைபோன்றதே புலம்பெயர் தேசங்களில் வாழும் எம்மவர்களது நடவடிக்கையை விமர்சனம் செய்வதும்.

எம் பி நீங்களும் எக்காரணத்தாலோ ஒரு காலத்தில் லண்டனில் குப்பைகொட்டியவரே இப்போது சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் எனக்கூறக்கூடாது. ஆரம்பமே இப்படியாகவிருந்தால் போகிற போக்கில் எமது அவுஸ்ரேலிய யாழ் உறவு சுண்டலை மிஞ்சிவிடுவீர்கள் போலுள்ளது.

தவிர இப்படியான பலர் இருப்பதாலேயே இன்னுமொருசாரார் பட்டுப்பீதாபரம் குஞ்சம் குடை போன்றவற்றைப் பெற்றுகொள்ளும் நிலையிலிருக்கிறார்கள். எல்லோரும் அறிவாளிகளாக இருந்தால் இங்கு எதுவுமே உருப்படாது.

பின்பு கறிவேப்பிலைக்கும் யாழ்ப்பாணத்து மிளகாத்தூளுக்கும் வேறு நாட்டுக்காரனது கடைகளது வாசல்களையே ஏறி இறங்கவேண்டும் இது ஒரு சின்ன உதாரணமே.

எது எப்படியோ யாழ் களத்துக்கான புதிய வரவான உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

பாடசாலைக்கே போகாதவர். செம காமடி

Link to comment
Share on other sites

வணக்கம்,

புதிய உறவாக யாழில் இனைந்தமைக்கு முதலில் எம் நன்றி.

கருத்துகள் / பதிவுகள் எழுதும் முன் யாழ் கள விதிகளை ஒரு முறை பார்க்கவும். கருத்துக்கள விதிகளின் படி அவன் / இவன் / அவள் என்று ஒருமையில் எழுதுவதை முற்றாகத் தவிர்க்கவும். அத்துடன் ஒருவரின் படிப்பை தொழிலை வைத்து மட்டம்தட்டுவதும் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. அத்துடன் அரிச்சுவடியில் அறிமுக பதிவினைத் தவிர்த்து இத்தகைய பதிவுகளை இடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

களத்தில் தொடர்ந்து இணைந்து இருக்க நாகரீகமானதும் ஆரோக்கியமானதுமான உரையாடல்கள் அவசியம்.

நன்றி,

நிர்வாகம்

தயவு செய்து என்னை மன்னிக்கவும். இந்த திரியை எழுத முதல் நான் யாழ் கள விதிகளை பார்கவில்லை. மீண்டும் மனிக்கவும். உடனடியாக இதை வாசிக்கிறேன். யாழ்!. என் மனதில் புதைந்து கிடக்கும் அந்தரங்களையும் ஏக்கங்களையும் பகிரும் ஒரு தளம். இதை மனைவியிடம் பகிர்ந்தால், நாளை விவாகரத்து தருவாள். உற்ற நண்பர்கள் பக்கத்தில் இல்லை. புதிய நண்பர்கள் நம்பிக்கையுடையவர்கள் இல்லை.

Link to comment
Share on other sites

நான் வேலை செய்த 3 பெட்ரோல் செட்டும் நல்ல மேனேஜர்களே.
ஒருவர் மொரட்டுவ பல்கழைகளக இன்சினீயர், இன்னோருவ யூ.கேயில் ‍‍‍‍PHD   செய்த சிவில் இன்சினீர், (சில்லறை கடை செய்தார்) 3வது BP-Marks & Spencers. மூவரும் தமிழர்கள்
 
எல்லேரும் தாங்கள் சுய முயற்சியால் முன்னேறி வந்தவர்கள். ஆனல் நான் வேலை செய்த  ACCA accounting firm  சொந்தக்காரர், 40 வருடம் யூ.கே யில் வசிப்பவர் மிகவும் உலோபி, கடைசிவரை தன்னுடைய வேலைகளுக்கு சுயநலமாக என்னை பயன்படுத்திக்கொண்டார்.
ஐந்து விரல்களும் ஒன்றல்ல.
 
எனவே இப்படி மற்றவரை பார்த்து பொச்செரிச்சல் படாமல், நாங்கள் முயற்சி செய்து முன்னேற வழியப்பாக்க வேண்டும்.

நீங்கள் வேலை செய்த மேனேஜர் நேர்மையான வழியில் முன்னேறியவர், படித்தவர் என்பதனால், உங்களை ஒரு மனிதனாக மதித்து இருப்பார். நான் ஒரு கள்ள கிரெடிட் கார்டு மேனேஜருக்க கீழே வேலை செய்தனான். நான் 5 மணிக்கு திறந்து 11 மணிக்கு பூட்டுவேன். அவன் நல்லா படுத்துட்டு காலை 11 மணிக்கு வந்து, CCTV கேமரா பார்ப்பான், நான் ஏதாவது காசு எடுத்து பாக்கெட்டில் போட்டனானோ எண்டு செக் பண்ண.

Link to comment
Share on other sites

தம்பி எம்பி இப்படி அடுத்தவன் நல்லா வாழுறானே என்று பார்த்து வயிறு எரிஞ்சு புலம்பாம உமது வாழ்க்கையை எப்படி நல்லா வாழலாம் என்று சிந்தியும். நான் படிச்சவன் படிக்காத அவர் எனக்கு எப்படி வேலை சொல்லலாம் என்டு நடப்பு காட்டினால் திரும்ப ஊருக்கு தான் போகவேணும். காதலி விட்டிட்டு போனதுக்காக இவ்வளவு புலம்பல் தேவை இல்லை :icon_mrgreen: அடுத்ததா என்னொன்றை பிக்கப் பண்ணுற வழியை பார்ப்பீங்களா அத விட்டிட்டு..
 
அதுதானே அண்ணே பார்க்கிறமில்ல.. அப்பாக்கு பிள்ளை என்ன படிக்குதுன்னே தெரியாத.. புலம்பெயர் வாழ்கையை. இதில.. துணைவிக்கு.. எல்லாம் போதுமா செய்யப்படுகுது என்று நீங்க நினைச்சுக்கிறீங்க... அல்லது காண்பிக்க விரும்புறீங்க. கோவில் கடா மாதிரி.. திருவிழாவுக்கு சோடிப்பது போல.. சாறியும்.. நகையும்.. நாலு பேர்த்டே பார்ட்டியும் அல்ல அண்ணே வாழ்க்கை. புலம்பெயர் மண்ணில்.. இதை விட்டா நீங்க அப்படி என்ன பெரிய வாழ்க்கையை வாழ்த்துக்கிட்டு இருக்கீங்கண்ணு சொல்லுவியளா..?! :D:icon_idea:

இங்க துணைவன்.. துணைவிக்குள் உள்ள அந்நியோன்னியத்தை விட.. ஊரில குடிசையில்.. அது அதிகம் உள்ளது. :icon_idea::)
 
வந்திட்டார் அடுத்த நாட்டாமை. மற்றவை எப்படி வாழ்ந்தா உங்களுக்கு என்ன ஐயா? அவன் உழைச்சு சாறியும் நகையும் வாங்கிறான் உங்கட வீட்ட வந்து கொள்ளை அடிச்சா வாங்கிறான். சும்மா அடுத்தவன் எப்படி வாழவேணும் என்டு பாடம் எடுக்கிறத நிப்பாட்டி போட்டு உங்கட வாழ்க்கைய எப்படி வாழலாம் என்டு சிந்தியுங்கள். 
 
பக்கத்து வீட்டு வேலிய எட்டிப்பாக்கிற குணம் வெளிநாடு வந்தாலும் போகாது. 
 
இங்க துணைவன்.. துணைவிக்குள் உள்ள அந்நியோன்னியத்தை விட.. ஊரில குடிசையில்.. அது அதிகம் உள்ளது.  :icon_idea:  :)

ஆடத்தெரியாதவள் மேடை பிழை என்டு சொன்னாளாம்  :lol:
Link to comment
Share on other sites

திறமை உள்ளவன் உழைக்கிறான், கனவுகளை நிஜமாக்குகிறான். இதற்குப் படிப்பு படிப்பில்லாமை எல்லாம் ஒரு காரணி அல்ல (படிப்பு என்று சொல்வதை விட எம்.பி சொல்லும் படிப்பைச் சான்றிதழ் எனலாம்!). திறமை இல்லாதவர் அல்லது மாற்றுத் திறமை உள்ளவர் படித்தாலும் உழைக்க முடியாமல் கனவுகளை நிஜமாக்க முடியாமல் இருக்கிறார். (அல்லது, அவர் தனக்குரிய கனவுகளைக் காணாமல் பெட்ரோல் செட் மனேஜரின் கனவுகளைக் காணுவதாலும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கலாம்!). சுருக்கமாகச் சொன்னால், காசும் வடிவான பெட்டையும் தான் எல்லோருக்கும் குறிக்கோளாக இருக்க வேணுமெண்டு இல்லை! உங்கள் கனவை  நீங்களே கண்டு பிடியுங்கள் எம்.பி, பெட்ரோல் செட் மனேஜரின் கனவை ஏன் நீங்கள் துரத்துறீங்கள்? :D

UK பெட்ரோல் ஸ்டேஷன் நடத்த ஒரு திறமையும் வேண்டாம். மூலதனம் தான் வேண்டும். கொஞ்சம் அறிவு உள்ளவன் களவு செய்ய பயப்பிடுவான். பின்விழைவுகள் பற்றி ஆழமாக சிந்திப்பான். மட்டமானவன் எதையும் பற்றி கவலை பட மாட்டான். கார்டு போட்டு ஈஸியா வந்தது சும்மா போனாலும் பரவாயில்லை என நினைத்து ஒரு பெட்ரோல் ஸ்டேஷன், அல்லது பலசரக்கு கடை போட்டு பெருமைக்காக நடத்துவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டார் அடுத்த நாட்டாமை. மற்றவை எப்படி வாழ்ந்தா உங்களுக்கு என்ன ஐயா? அவன் உழைச்சு சாறியும் நகையும் வாங்கிறான் உங்கட வீட்ட வந்து கொள்ளை அடிச்சா வாங்கிறான். சும்மா அடுத்தவன் எப்படி வாழவேணும் என்டு பாடம் எடுக்கிறத நிப்பாட்டி போட்டு உங்கட வாழ்க்கைய எப்படி வாழலாம் என்டு சிந்தியுங்கள்.

வந்திட்டார்யா... நாட்டாமைக்கு நாட்டாமை..!

புலம்பெயர்ந்தும் தமிழர்கள் தமிழர்களிடம் கொள்ளை அடிப்பது தங்களுக்கு தெரியவில்லை போலும். முதலில் இந்த பொய்.. பித்தலாட்டம்.. கொள்ளை.. வெட்டி பந்தா.. சோம்பேறி பிழைப்பு உதுகளை கைவிட்டால் தான் தமிழனை உலகம் மனிசரா மதிக்கும். அதுக்கு நீங்க விடமாட்டியள். விட்டால்.. அப்புறம் எங்க போய் குளிர் காயுறது. :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்... இந்தக் கோணத்தில்,JC_idea.gif யோசிக்க வேயில்லை. :D  :lol: lachen%20(24).gif

இதைத்தானே ராசா

நான் மேலே முதலே சொல்லியிருக்கிறன்......

எல்லாம் விலாவாரியாச்சொல்லணும் உங்களுக்கு...

வெட்டு எனக்கு... :lol:  :D

அதற்கும் மேல......

முறையான பெற்றோல் செட் மனேஜரிட்ட

பறி கொடுத்திருக்கிறார்ர். :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேலை செய்த மேனேஜர் நேர்மையான வழியில் முன்னேறியவர், படித்தவர் என்பதனால், உங்களை ஒரு மனிதனாக மதித்து இருப்பார். நான் ஒரு கள்ள கிரெடிட் கார்டு மேனேஜருக்க கீழே வேலை செய்தனான். நான் 5 மணிக்கு திறந்து 11 மணிக்கு பூட்டுவேன். அவன் நல்லா படுத்துட்டு காலை 11 மணிக்கு வந்து, CCTV கேமரா பார்ப்பான், நான் ஏதாவது காசு எடுத்து பாக்கெட்டில் போட்டனானோ எண்டு செக் பண்ண.

உங்களுடைய மனேஐர் உங்களை மனிதராக மதிக்காமலும் கள்ள மட்டை காரராகவும் இருந்தால் அங்க ஏன் வேலை செய்தீர்கள்? மனேஐர் என்பது உங்களை மாதிரி ஆட்களிடம் வேலை வாங்குவதே தவிர உங்களுக்காக வேலை செய்வது அல்ல.

Link to comment
Share on other sites

தீயன மட்டும் பாராமல் நல்லதையும் சேர்ந்து பார்க்க  வேண்டும். தாயகத்தில் முடியாத ஒன்றை இந்த புலம் பெயர்வு செய்து காட்டியுள்ளது. Social mobilization என்பது கல்வியினால் மட்டுமே வரமுடியும் என்ற யாழ்ப்பாண / தாயக வேத மந்திரத்தினை அறுத்து சுயதொழில் / திறமை உடன் முனேற உதவி உள்ளது. முக்கியமாக அவரகள் தமது அடுத்த தலைமுறைக்கு (தம் பிள்ளைகளுக்கு) கல்வி + சுயதொழில் / திறமை இரண்டையும் கொடுத்துள்ளார்கள்.

We must stop thinking of the individual and start thinking about what is best for society:Hillary Clinton

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
We must stop thinking of the individual and start thinking about what is best for society:Hillary Clinton

மோனிக்காவை... ஏன் கிளிங்டனோட வாழ விடேல்ல... இதை கிலாரி ஏன் தனக்கே தன் குடும்பத்திலையே அப்பிளை பண்ணேல்ல..?! :lol::D

Link to comment
Share on other sites

மோனிக்காவை... ஏன் கிளிங்டனோட வாழ விடேல்ல... இதை கிலாரி ஏன் தனக்கே தன் குடும்பத்திலையே அப்பிளை பண்ணேல்ல..?! :lol::D

ஐயோ ..யரர் எண்டு போடாட்டி கடிபாங்கள் போட்டாலும் கடிபாங்கள் ..இது நாங்க படித்த school ( JHC) அப்பிடி ..... :D :D

Link to comment
Share on other sites

83 கலவரத்துக்கு முதல் கல்விச் சான்றிதழ் இல்லாத வட பகுதித் தமிழன்தான் கொழும்பு உணவு விநியோகத்தையே தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தான்.

தமிழனின் உடமைகளூக்கு தீ வைத்துவிட்டு, கொழும்பில் சாப்பாட்டுக்கு வீதியில் அலைந்து கொண்டிருந்தான் சிங்களவன்!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருந்து என்ன பயன்.. சிங்களவன் அடிக்கிறதை  நிற்பாட்டவோ.. அவனை வலுவிழக்கவோ..செய்யவில்லையே. மாறாக.. 1987-89 க்குள் ஜே வி பி யை சாட்டு வைச்சு போட வேண்டிய எல்லா தமிழ் முதலாளிகளையும் போட்டுத் தள்ளிட்டாங்களே. கடைசியில்.. மண்ணெண்ணை மகேஸ்வரனையும் கூட. நாங்க இன்னும் அந்த பழைய புராணத்தையே பாடிக்கிட்டு தற்புகழ்.. மகிழ்ச்சி அடைய வேண்டியான். அது சிங்களவனையோ.. எங்களை அடக்க நினைக்கிறவங்களையோ  தூசிக்கும் பாதிக்காது.  :rolleyes::o:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

UK பெட்ரோல் ஸ்டேஷன் நடத்த ஒரு திறமையும் வேண்டாம். மூலதனம் தான் வேண்டும். கொஞ்சம் அறிவு உள்ளவன் களவு செய்ய பயப்பிடுவான். பின்விழைவுகள் பற்றி ஆழமாக சிந்திப்பான். மட்டமானவன் எதையும் பற்றி கவலை பட மாட்டான். கார்டு போட்டு ஈஸியா வந்தது சும்மா போனாலும் பரவாயில்லை என நினைத்து ஒரு பெட்ரோல் ஸ்டேஷன், அல்லது பலசரக்கு கடை போட்டு பெருமைக்காக நடத்துவான்.

ஒரு திறமையும் தேவையில்லை எண்டால் ஏன் உங்களுக்கு ஒரு சொந்தப் பெட்டிக் கடை கூடப் போட ஏலாமல் போனது? பிசினஸ் பிளானைக் காட்டினால் கடன் தர வங்கிகள் உண்டே? நீங்கள் செய்யாத ஒரு தொழிலைக் குறைந்த திறமை என்று மட்டம் தட்டுவது உங்களுக்கு உலக அறிவு கொஞ்சம் மட்டமெண்டு காட்டுது! சான்றிதழ் உள்ளவன் கள்ள வேலை செய்யப் பயப்படுவான் என்கிறீர்கள்! உங்களுக்கு ராஜ் ராஜரட்ணம் பற்றித் தெரியுமா? எந்த லோகத்தில் ஐயா இருக்கிறீர்கள்? :D

Link to comment
Share on other sites

வரி ஏய்ப்பு, வியாபார ஏய்ப்பு, சமூகநல கொடுப்பனவு ஏய்ப்புகளை செய்து சிலர் முன்னேறுகிறார்கள்தான்.. அவர்களைக் கண்டால் அடடே.. கெட்டிக்காரனய்யா என்றுதான் முதலில் தோன்றும். ஆனால் அவ்வாறு சொல்லும் நமக்கும் மறைமுகமான பாதிப்புக்கள் வரும் என்பதை பலர் உணர்வதில்லை.

கனடாவில் பழைய கார்களைக் கொண்டு அப்பாவிகளின் கார்களில் மோதி காப்புறுதிப் பணம் எடுக்கிறார்கள்.. இதன் பாதிப்பை எல்லோரும் அனுபவிக்கிறோம்.. காப்புறுதி நிறுவனங்களூக்கும் நல்ல வாய்ப்பு.. விலை ஏற்றம் செய்வதற்கு.

அதுபோலவே வரி ஏய்ப்பும், சமூகநல கொடுப்பனவு சுத்துமாத்துகளும் சாதாரண மக்களின் தலைகளின் மீதுதான் விடியும்.

இசை

இங்கு சிலர்  சொல்வார்கள்

அவன் அப்படி  உழைக்கின்றான்

இவன் இப்படி முன்னேறுகின்றான்

அவன் இவனைச்சுத்துகின்றான் என...

(அண்மையில் இங்கு ஒரு சம்பவம். ஒரு கடைக்கு கடன் அடிப்படையில் ஒருவர் மரக்கறி  விநியோகித்து வந்தார்.

கடன் மெல்ல மெல்ல அதிகரித்து 50 ஆயிரம் ஈரோக்களுக்கு வந்துவிட்டது. கடன் வாங்கியவர் இறுதியில் சொன்ன வசனம். கடைக்குள் இனி கால் வைக்கக்கூடாது என்று.)

நான் அவர்களிடம் கேட்பது

சொல்வது

உன்னால் அதைச்செய்யமுடியுமா

இப்படிச்சொல்லமுடியுமா என.

என்னால் முடியாது

சரியோ பிழையோ அதுவும் ஒருவித  ........  ??? தான்

நமக்கு அது இல்லை

நமக்கு ஒருத்தன் கை காட்டி பேசக்கூடாது

நமக்கு எதற்கு இதெல்லாம்....

ஒத்துக்கொண்டு ஓரம் கட்டவேண்டியது தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
லாச்சப்பலில் அடிக்கடி நடக்கும் கூத்து பின்பு கடன் வேண்டியவர் என்ன செய்வார் என்பதும் தெரியும்.
ஒரு நாலு மதத்திட்க்கு தானே மரக்கறி இறக்குவார் அப்புறம் இங்கு நல்ல ஆடு மாட்டுப்பட்டதும் அங்கு ஒரு 60ஆயிரம் யுரோ விற்க்கு ஒரு வெட்டு பேரும் தெரியும் ஆளையும் தெரியும். :D  :D

இதுக்கு மேல வேண்டாம் ராசா... :lol:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.