Jump to content

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்


Recommended Posts

டெல்லி அணி 3வது விக்கெட்டையும் பறிகொடுத்தது!

டெல்லி அணியின் ஐயர் 7 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

 


39/3

Link to comment
Share on other sites

  • Replies 449
  • Created
  • Last Reply

டெல்லி அணி 14 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள்

 


5வது விக்கெட்டையும் பறிகொடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி

 


6 பந்துகளில் 9 ரன்கள் அடித்த யுவராஜ்சிங் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு பேக்கப் ஆனார்

வந்த வேகத்தில் நடையைக் கட்டினார் யுவராஜ்சிங்

 


டெல்லி அணி 14.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள்

Read more at: http://tamil.oneindia.com/


6வது விக்கெட்டையும் பறிகொடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ்

 


டெல்லி அணி 15.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள்

 


கேப்டன் டுமினி 5 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியனுக்கு திரும்பினார்

 

Link to comment
Share on other sites

7வது விக்கெட்டையும் இழந்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி

5 ரன்களில் நாதன் அவுட் ஆகி வெளியேறினார்

 

Link to comment
Share on other sites

6 பந்துகளில் 19 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் டெல்லி அணி

 


9வது விக்கெட்டையும் பறிகொடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி

 


டெல்லி அணியை 1 ரன் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்! அணி

 

Link to comment
Share on other sites

8வது ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் 'த்ரில்' வெற்றி! டெல்லி டேர்டெவில்ஸை 1 ரன்னில் வென்றது!

 

சென்னை: 8 வது ஐ.பி.எல். போட்டியின் 2வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி "த்ரில்" வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது. இதை சேஸ் செய்ய களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரின் கடைசி பந்து வரை பரபரப்பை ஏற்படுத்தியது இந்த ஆட்டம். 8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது.

 

முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியிருந்தது. இன்றைய 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் டுமினி பீல்டிங்கை தேர்வு செய்தார். 8வது ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் 'த்ரில்' வெற்றி! டெல்லி டேர்டெவில்ஸை 1 ரன்னில் வென்றது! இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. சென்னையின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் மெக்கல்லமும் களமிறங்கினர்.

 

ஸ்மித் முதல் ஓவரில் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். மறுமுனையில் நின்றிருந்த மெக்கல்லம் 4 ரன்களே எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த ரெய்னா 7 பந்துகளில் 4 ரன்களில் நடையைக் கட்டினார். இந்நிலையில் 31 பந்துகளில் 34 ரன்களை எட்டி அரை சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் பிளிஸ்சிஸூடன் ஜடேஜா கை கோர்த்தார்.

 

10 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த 10 ஓவர்களிலும் சென்னை அணி இதே பாணியிலான ஆட்டத்தையே தொடர்ந்தது. பிளிஸ்சிஸ் 34 பந்துகளில் 32 ரன்கள், ஜடேஜா 18 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். பிராவோ வந்த வேகத்தில் ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார். களத்தில் இருந்த கேப்டன் டோணி விறுவிறுவென ஆடிப் பார்த்தாலும் கடைசி ஓவரில் 30 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில், அஸ்வின் 12 ரன்களுடனும் மொகித் சர்மா 2 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெல்ல 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் நாதன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக அகர்வாலும் கவுதமும் களமிறங்கினர். 2.3வது ஓவரில் டெல்லி 15 ரன்கள் எடுத்த நிலையில் கவுதம் விக்கெட்டை பறிகொடுத்தது. அவர் 5 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து களத்துக்கு வந்தார் அல்பி மோர்கல். அவர் நிலைத்து நின்றாலும் அகர்வால், ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆக 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களே எடுத்திருந்தது டெல்லி அணி. இருப்பினும் மோர்கலும் ஜாதவும் இணைந்து நின்றனர். ரன்களை விறுவிறுவென குவிக்க முடியாமல் சென்னை அணியின் பந்து வீச்சும் இருந்தது.

 

8 ஓவர்கள் இருவரும் நிலைத்து நின்ற நிலையில் 13.1வது ஓவரில் ஜாதவ் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஜாதவைத் தொடர்ந்து களத்துக்கு வந்த யுவராஜ் சிங் ஒரு சில பந்துகளை விளாசினாலும் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து டுமினி, நாதன், மிஸ்ரா ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து பெவிலியனுக்குத் திரும்பினாலும் மோர்கல் அரைசதத்தைக் கடந்து நிலைத்து நின்று விளையாடினார்.

 

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரின் 3வது பந்தில் 9வது விக்கெட்டாக தாஹீர் வீழ்ந்தார். எஞ்சிய 3 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தாக வேண்டும்.. கையில் விக்கெட்டும் இல்லாத நிலை... இதனால் ஆட்டம் பரபரப்பானது. கடைசி 1 பந்தில் 6 ரன்கள் அடித்தால் டெல்லி அணி வெற்றி என்ற நிலையில் க்ளைமாக்ஸ் அரங்கேறியது. பிராவோ வீசிய பந்தை மோர்கல் அடிக்க அது பவுண்டரிக்குப் போனது..

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிம்மதி பெருமூச்சுவிட்டது. டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. ஒரே ஒரு ரன்னில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 'அப்பாடா' வெற்றியை பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெஹ்ரா 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-delhi-daredevils-opt-bowl-against-chennai-super-ki-224430.html

Link to comment
Share on other sites

ராஜஸ்தான்-பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதுகின்றன.

 

ராஜஸ்தான் அணியின் ‘ஹோம் கிரவுண்ட்’டான புனேவில் இந்த ஆட்டம் நடைபெறுவதால் அந்த அணி வெற்றியோடு தொடங்க விரும்பும். அதேநேரத்தில் கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய பலம் வாய்ந்த பஞ்சாப் அணிக்கும் இது முதல் போட்டி என்பதால் அந்த அணியும் வெற்றி யோடு தொடங்க முயற்சிக்கும்.

 

பஞ்சாப் அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. அந்த அணியின் இன்னிங்ஸை வீரேந்திர சேவாக்கும், முரளி விஜயும் தொடங்குவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. முரளி விஜய் கடந்த 7 ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வந்திருக்கிறார். சேவாக் அடிக்க ஆரம்பித்துவிட்டால், அவரை கட்டுப்படுத்துவது கடினம். இந்த ஜோடி பஞ்சாப் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மிரட்டும் மேக்ஸ்வெல்

மிடில் ஆர்டரில் மனன் வோரா, கிளன் மேக்ஸ்வெல், ஜார்ஜ் பெய்லி, டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. இவர்களில் யாராவது ஒருவர் களத்தில் நின்றுவிட்டாலும் ராஜஸ் தான் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள். கடந்த ஐபிஎல் தொடரில் 552 ரன்கள் குவித்த சிக்ஸர் மன்னன் மேக் ஸ்வெல், இந்த முறையும் ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டுவார் என நம்பலாம்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் மிட்செல் ஜான்சன், சந்தீப் சர்மா ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் அக் ஷர் படேல், ரிஷி தவன் அல்லது ஷ்ரதுல் தாக்குல் ஆகியோரும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நம்பிக்கை நாயகன் ரஹானே

பிசிசிஐ-ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் இடையிலான பிரச்சினை காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ‘ஹோம் கிரவுண்ட்’ ஜெய்ப்பூரிலிருந்து புணேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய மைதானத்தில் ஆரம்பக் கட்ட போட்டிகளில் ஆடுவது அந்த அணிக்கு சவாலாக இருக்கலாம் என்றாலும், அதை சமாளிக்கக் கூடிய அளவுக்கு அந்த அணியில் வலுவான வீரர்கள் உள்ளனர்.

 

அஜிங்க்ய ரஹானே, கருண் நாயர் ஆகியோர் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக கள மிறங்குவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ரஹானே, இப்போது உலகக் கோப்பை உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய கையோடு வந்திருப்பதால் இந்த முறை அவர் இன்னும் சிறப்பாக ஆடுவார் என நம்பலாம்.

 

மிடில் ஆர்டரில் ஸ்டீவன் ஸ்மித், சஞ்ஜூ சாம்சன், கேப்டன் வாட்சன், ஸ்டூவர்ட் பின்னி, ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்களில் வாட்சன், பின்னி, ஃபாக்னர் ஆகியோர் ஆல்ரவுண்டர்கள் என்பது அந்த அணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

 

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் கிறிஸ் மோரிஸ், ரஜத் பாட்டியா, தவல் குல்கர்னி, ஃபாக்னர் ஆகியோர் பலம் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. கிறிஸ் மோரிஸ் இடம் பெறும்பட்சத்தில் அந்த அணியில் உள்ள ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கை 4 ஆக உயரும். கிறிஸ் மோரிஸ் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் அசத்தலாக ஆடிய கையோடு ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறார்.

 

பஞ்சாப்:

ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), அக் ஷர் படேல், அனுரீத் சிங், பியூரான் ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், கிளன் மேக்ஸ்வெல், குருகீரத் சிங், கரன்வீர் சிங், மனன் வோரா, மிட்செல் ஜான்சன், பர்விந்தர் அவானா, ரிஷி தவன், சந்தீப் சர்மா, ஷ்ரதுல் தாக்குர், ஷான் மார்ஷ், சிவம் சர்மா, திசாரா பெரேரா, சேவாக், விருத்திமான் சாஹா, முரளி விஜய், நிகில் நாயக், யோகேஷ் கோல்வால்கர்.

 

ராஜஸ்தான்:

ஷேன் வாட்சன் (கேப்டன்), அபிஷேக் நய்யார், அஜிங்க்ய ரஹானே, அங்கித் சர்மா, பென் கட்டிங், தீபக் ஹூடா, குல்கர்னி, திஷந்த் யாக்னிக், ஜேம்ஸ் ஃபாக்னர், கேன் ரிச்சர்ட்ஸன், கருண் நாயர், பிரவீண் டாம்பே, ராகுல் திவேதியா, ரஜத் பாட்டியா, சஞ்ஜூ சாம்சன், ஸ்மித், ஸ்டூவர்ட் பின்னி, டிம் சவுதி, விக்ரம்ஜித் மாலிக், கிறிஸ் மோரிஸ், ஜுவான் தேரான், பரீந்தர் சிங், தினேஷ் சலுங்கே, திரிவேதி, பிரதீப் சாஹு.

 


இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 13 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் 8 ஆட்டங்களிலும், பஞ்சாப் 5 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/article7088300.ece

Link to comment
Share on other sites

பஞ்சாபை பந்தாடிய பாக்னர்: ராஜஸ்தானுக்கு ராயல் வெற்றி!

 

புனேயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டியில் ஜேம்ஸ் பாக்னரின் அபாரமான ஆல்ரவுண்ட் ஆட்டத்தினால், ராஜஸ்தானிடம் சரணடைந்ததது அதிரடி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

 

மிட்செல் ஜான்சன், சந்தீப் சர்மா ஆகிய நல்ல பவுலர்களைக் கொண்ட கிங்ஸ் லெவன் கேப்டன் ஜார்ஜ் பெய்லி டாஸில் வென்று முதலில் ராஜஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தார். பிட்சில் கொஞ்சம் பசுமை தெரிந்தது. ஸ்விங் பந்துக்கு ஆதரவாகவும் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸும் இருந்தது.

 

ஆனால், ராஜஸ்தான் கேட்பன் ஸ்மித், ஹூடா மற்றும் கடைசியில் ஜேம்ஸ் பாக்னரின் அதிரடியினால் ராஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியின் டிம் சவுத்தி, மாரிஸ், பாக்னர் ஆகியோரின் அபாரமான, துல்லியமான நெருக்குதல் பந்துவீச்சுக்கு தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

 

பேட்டிங்கில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 33 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த ஜேம்ஸ் பாக்னர், பிறகு பந்துவீச்சிலும் முக்கிய கட்டத்தில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக அதிரடி வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், கேப்டன் ஜார்ஜ் பெய்லி, மற்றும் மிட்செல் ஜான்சன் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஜேம்ஸ் பாக்னர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆடிய ஆட்டத்தை அவர் அப்படியே தொடர்ந்தார்.

 

தொடக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பவுலர்கள் சந்தீப் சர்மா, அனிரூத் சிங், அபாரமாக வீசினர். ரஹானே 7 பந்துகள் ரன் எடுக்க முடியாத அவஸ்தையில் ஏறி வந்து ஆட முயன்று அனிரூத் சிங்கிடம் 0-வில் வீழ்ந்தார்.

 

சஞ்சு சாம்சனும் தவறான ஷார்ட் தேர்வில் சந்தீப் சர்மாவிடம் எல்,.பி.ஆனார். ரஞ்சி நட்சத்திரம் கருண் நாயர் ஒரு சிக்ஸ் அடித்து 8 ரன்கள் எடுத்து அக்சர் படேலிடம் பவுல்டு ஆக ஸ்கோர் 6 ஓவர்களில் 35/3 என்று ஆனது.

 

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது அற்புதமான ஆட்டத்தை தொடர்ந்தார். 23 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார். 4 ஓவர்களில் ஸ்கோர் 39 ரன்கள் ஏறியது. 10-வது ஓவரின் முடிவில் ஸ்கோர் 74ஆக இருந்த போது மிட்செல் ஜான்சன் ஒரே ஓவரில் ஸ்மித்தையும், ஸ்டூவர்ட் பின்னியையும் காலி செய்தார்.

 

குறிப்பாக பின்னியை அவர் படுத்தி எடுத்து விட்டார். அதற்கு முன்பாக ஜான்சன் வீசிய ஓவரில் ஒரு பந்து கூட மட்டையில் படவில்லை. இந்நிலையில் பின்னிக்கு அதிவேக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசிய ஜான்சன் கடைசியில் ஒரு வெளியே செல்லும் பந்தை வீச பின்னி விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்தார்.

11-வது ஓவரில் ஸ்கோர் 75/5 என்று ராஜஸ்தான் சரிவு முகம் கண்ட போது களமிறங்கினார் ஆபத்பாந்தவன் வில்லியம் பாக்னர்...

ஹூடா அதிரடி... ஜான்சனை விளாசிய பாக்னர்

 

13-வது ஓவர் முடிவில் ஸ்கோர் 88/5 என்ற நிலையில் ஹூடா அடிக்கத் தொடங்கினார். கரன்வீர் சிங் வீச வந்த அந்த 14-வது ஓவரில் ஹூடா லாங் ஆன் மற்றும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் 2 சிக்சர்களை விளாசினார். அடுத்ததாக ஜான்சன் வீசிய ஓவரில் பாக்னர் மேலேறி வந்து மிட்விக்கெடில் அலட்சிய பவுண்டரி ஒன்றை அடித்தார்.

17-வது ஓவரில் ஹூடா, அனுரீத் சிங்கை லாங் ஆஃபில் ஒரு சிக்ஸ், பிறகு கட் ஷாட்டில் ஒரு பவுண்டரி. 15 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் அவர் அந்த ஓவரில் வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்காக 6 ஒவர்களில் 51 ரன்களை இருவரும் எடுத்தனர். 17-வது ஓவர் முடிவில் ஸ்கோர் 128/6 என்று இருந்தது.

18-வது ஓவரை அக்சர் படேல் வீச, பாக்னர் அவரது அரைக்குழி பந்தை சிக்சருக்குத் தூக்கினார். அந்த ஓவரில் 10 ரன்கள்.

 

ஜான்சன் ஆட்டத்தின் 19-வது ஓவரை வீசினார். அது அவரது 4-வது ஓவர், ஜான்சன் வீசிய லெந்த் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்து பந்தை மிட்வீக்கெட் திசையில் சிக்சருக்கு விரட்டினார். அடுத்த பந்தும் லெந்த் பந்து லாங் ஆஃபில் பவுண்டரி. அடுத்த பந்து டீப் மிட்விக்கெட்டில் மீண்டும் ஒரு சிக்ஸ். 20 ரன்கள் அந்த ஓவரில் விளாசப்பட்டது. 3 ஓவர்கள் 14 ரன்கள் கொடுத்திருந்த ஜான்சன் 4 ஓவர்களில் 34 ரன்கள் என்று காலியானார்.

 

20-வது ஓவரில் பாக்னர் அவுட் ஆனார். 33 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் விளாசினார். ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அனுரீத் சிங் 4 ஓவர்களில் 23 ரன்கள் 3 விக்கெட்டுகள். சந்தீப் சர்மா 4 ஓவர்கள் 19 ரன்கள் 1 விக்கெட். அற்புதமான வேகப்பந்து வீச்சை இருவரும் வீசினர். ராஜஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள்.

 

நல்ல பந்துவீச்சில் மடிந்தது அதிரடி கிங்ஸ் லெவன்:

சேவாக் களமிறங்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் நடந்ததென்னவோ எதிர்-உச்சகட்ட காட்சியானது. சவுதி வீசிய முதல் பந்து அருமையான அவுட்ஸ்விங்கராக அமைய, சேவாக் எட்ஜ் செய்ய சஞ்சு சாம்சன் அதனை அபாரமாக பிடித்தார். சேவாக் 'கோல்டன் டக்’.

 

விருத்திமான் சஹா (7), சஞ்சு சாம்சனின் சமயோசிதத்தினால் ரன் அவுட் ஆனார். முரளி விஜய் மட்டும் நன்றாக ஆடினார் அவர் 32 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 37 ரன்கள் எடுத்தார். அவரும் சஞ்சு சாம்சனின் அபார த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். ஜேம்ஸ் பாக்னார், அபாய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை 7 ரன்களில் வெளியேற்ற கிங்ஸ் லெவன் 9 ஓவர்களில் 64/4 என்று ஆனது.

 

ஆனால் அதன் பிறகு ராஜஸ்தான் பந்து வீச்சும் இன்னும் மேம்பாடு அடைந்தது, பீல்டிங் பொறி பறந்தது. அடிக்க முடியவில்லை. 7 ஓவர்களில் 71 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டேவிட் மில்லர் (23), தவல் குல்கர்னி பந்தை அடிக்க முயன்று பந்து முன் எட்ஜில் பட்டு தேர்ட்மேனில் பாக்னரிடம் கேட்ச் ஆனது.

அக்சர் படேல் (24), பெய்லி (23) ஆகியோரால் எதிர்பார்த்த வேகத்தில் அடிக்க முடியவில்லை. மாரிஸ், சவுதி அபாரமாக வீசினர். குறிப்பாக சவுதி, பெய்லியையே கட்டிப் போட்டார். கடைசியில் வெறுப்பில் அக்சர் படேல் சுழற்ற சவுதி பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. பெய்லி மற்றும் ஜான்சனை, பாக்னர் கழற்றினார்.

 

ஜான்சனுக்கு சவுதி வீசிய ஒரு ஓவர் மறக்க முடியாதது. ஒரு பந்து கூட மாட்டவில்லை. கடைசியில் 136/8 என்று முடிந்தனர் கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

 

4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வில்லியம் பாக்னர் ஆட்ட நாயகன்.

இன்றைய ஆட்டத்தில் மாலை 4 மணிக்கு சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் அணிகளும் 8 மணிக்கு கொல்கத்தா-பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.

மொத்தத்தில் அருமையான வேகப்பந்து வீச்சு சாதக ஆட்டக்களம், நல்ல பந்துவீச்சு, அருமையான பீல்டிங், திறமையான பேட்டிங் என்று நல்ல கிரிக்கெட் போட்டியாக இது அமைந்தது. ஐபிஎல் போட்டி போன்றே தெரியவில்லை.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article7092060.ece

 

Link to comment
Share on other sites

தோனி படையின் வெற்றி தொடருமா?- சன்ரைஸர்ஸுடன் இன்று மோதல்
flahae.jpg

 

சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.

முதல் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சூப்பர் கிங்ஸ், இந்த ஆட்டத்தில் இன்னும் சிறப்பாக ஆடி வெற்றி பெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் அணிக்கு இது முதல் போட்டி என்பதால் அந்த அணி வெற்றியோடு தொடங்க முனைப்பு காட்டும்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யைப் பொறுத்தவரையில் வெற்றிக் கூட்டணியை கேப்டன் தோனி மாற்ற விரும்பமாட்டார் என்பதால் அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. டெல்லிக்கு எதிராக டுவைன் ஸ்மித், டூ பிளெஸ்ஸி, கேப்டன் தோனி ஆகியோர் மட்டுமே சிறப்பாக ஆடினர். எஞ்சிய வீரர்கள் சொதப்பியதால் வலுவான ஸ்கோரை எட்ட முடியவில்லை.

 

கடந்த ஆட்டத்தில் 4 ரன்களில் நடையைக் கட்டிய மெக்கல்லம், இந்த ஆட்டத்தில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத் திக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 3-வது வீரராக களமிறங்கிய ரெய்னா ஜொலிக்கவில்லை. அதனால் இந்த ஆட்டத்தில் டூ பிளெஸ்ஸி 3-வது வீரராகவும், ரெய்னா 4-வது வீரராகவும் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பின்வரிசையில் பிராவோ, ஜடேஜா ஆகியோர் வேகமாக ஆடினால் மட்டுமே நல்ல ஸ்கோரை குவிக்க முடியும். ஆமை வேகத்தில் ஆடி வரும் ஜடேஜா, வேகமாக ரன் சேர்ப்பது அவசியம்.

 

பந்துவீச்சைப் பொறுத்த வரையில் கடந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நெஹ்ரா, இந்த முறையும் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மோஹித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, பிராவோ ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அஸ்வின் அசத்தலாக பந்துவீசி வருவது சென்னை அணிக்கு கூடுதல் பலமாகும்.

 

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் டேவிட் வார்னர், ஷிகர் தவன், கே.எஸ்.ராகுல், நமன் ஓஜா, இயோன் மோர்கன்/ரவி போபாரா, ஹனுமா விஹாரி, ஆசிஷ் ரெட்டி, டேல் ஸ்டெயின், டிரென்ட் போல்ட், கரண் சர்மா, இஷாந்த் சர்மா/புவனேஸ்வர் குமார் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

டேவிட் வார்னர், ஷிகர் தவன் ஆகியோர் ஏற்படுத்திக் கொடுக்கும் தொடக்கத்தை பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். அதிரடிக்கு பெயர்போன இவர்களில் ஒருவர் 10 ஓவர்கள் ஆடினாலும், அது அந்த அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும். மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான நமன் ஓஜா, ஹனுமா விஹாரி, ஆசிஷ் ரெட்டி ஆகியோர் நெருக்கடியின்றி அதிரடியாக ஆடி ரன் குவிக்க முடியும். பந்துவீச்சில் டேல் ஸ்டெயின், டிரென்ட் போல்ட், கரண் சர்மா கூட்டணியை நம்பியுள்ளது சன்ரைஸர்ஸ்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7091997.ece

 

Link to comment
Share on other sites

கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த கேட்சுகளில் இதுவும் ஒன்று.. சவுத்தி, கருண் நாயரை புகழும் மீடியாக்கள்

 

புனே: ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் டிம் சவுத்தி நேற்றைய போட்டியில் பிடிக்க உதவிய கேட்ச், உலக கிரிக்கெட் வரலாற்றில் தலை சிறந்த கேட்சுகளில் ஒன்றாக மீடியாக்களால் புகழப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த163 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பயணித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்தில் சேவாக் விக்கெட் வீழ்ச்சியால் சறுக்கல் ஏற்பட்டாலும், முரளி விஜய் அடித்த 37 ரன்கள் சற்று நம்பிக்கை தந்தன.

 

இதனிடையே மிடில் ஆர்டரில் கேப்டன் ஜார்ஜ் பெய்லியும், சிறப்பாக சேஸிங்கை தொடங்கினார். எனவே பஞ்சாப் அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே, பெய்லி பேட்டிங்கை பார்த்த ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் பெய்லி 18 பந்துகளில், 24 ரன்கள் எடுத்திருந்தபோது, அவர் அவுட் ஆனதுதான் மேட்சை திருப்பிபோட்டது. இத்தனைக்கும், பெய்லி சாமானியமாக அவுட் ஆகவில்லை, கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த கேட்சுகளில் ஒன்றால் அவர் அவுட் செய்யப்பட்டார்.

 

ஆம்..பெய்லி பந்தை லாங் ஆன் திசையில் சிக்சருக்கு தூக்கியடித்தபோது, பவுண்டரி எல்லைக்கு ஓடிவந்த டிம் சவுத்தி, அந்த பந்தை லாவகமாக தட்டிவிட்டார். பந்து தட்டிவிடப்பட்டு அந்தரத்தில் நின்றபோது தனது வலது காலை பவுண்டரி எல்லைக்கு அப்பால் வைத்தார். ஆனால், தட்டிவிடப்பட்ட பந்தை, மற்றொரு வீரரான கருண் நாயர், ஒற்றைக் கையால், பிடித்து அசத்தினார். இத்தனைக்கும், கருண் நாயர் அந்த பந்து தன்னிடம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் திடுக்கிட்ட நாயர், சுதாரித்துக் கொண்டு ஒரு கையால் அந்த கேட்சை பிடித்தார். பவுண்டரி எல்லையில் டிம் சவுத்தி சமயோஜிதமாக பந்தை தட்டியதும், அதேபோல கருண் நாயரும் சமயோஜிதமாக பந்தை பிடித்ததும் அருமையான காட்சிகளாக இருந்தன.

16jj9k8.jpg

இந்த கேட்சை உலக மீடியாக்கள், சிறப்பான கேட்சுகளில் ஒன்றாக வர்ணிக்கின்றன. நியூசிலாந்து நாட்டு ஊடகங்களும், டிம்சவுத்தியை பாராட்டுகின்றன. கேட்சுகள்தான், மேட்சை வின் செய்ய வைக்கின்றன என்ற கிரிக்கெட் மொழிக்கு ஏற்ப அமைந்திருந்தது அந்த கேட்ச்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-tim-southee-karun-nair-combine-take-an-incredible-224524.html

Link to comment
Share on other sites

10 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்ற கொல்கத்தாவின் பயணத்தை தடுக்குமா பெங்களூரு?

 

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட்டில், இன்று 8 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. கடைசி 3 சீசன்களில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றும், கடந்த தொடரில் இருந்து தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றும் கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலமான அணியாக வலம் வருகிறது.

 

வெற்றி பயணம் கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லிக்கு எதிராக ஆரம்பித்த கொல்கத்தாவின் வெற்றி பயணம், இந்தாண்டு மும்பைக்கு எதிராக நடந்த முதல் போட்டிவரை தொடருகிறது.

டிவில்லியர்ஸ், கெயில் அதேநேரம், பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோஹ்லி, டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் என நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருப்பதால் அந்த அணியின் பேட்டிங் லைன் வலுவாக உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தால் இமாலய ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பெங்களூரு தடுமாற்றம் இருப்பினும், பெரிய வீரர்கள் அணியில் இருந்தும் தங்களது திறமையை நிரூபிக்கத் தவறியதால் 2009, 2011 ஐபிஎல் தொடர்களில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி பறிகொடுத்தது. எனவே, இந்த முறை அவற்றுக்கு எல்லாம் பதில் சொல்வதுபோல் பெங்களூரு அணியின் செயல்பாடு இருக்கும் என நம்பலாம். கொல்கத்தா அணி வீரர்களும் இதற்கு பதிலடி கொடுக்க தயாராகவே உள்ளனர்.

 

கொல்கத்தாவிலும் பேட்டிங் வலு கடந்த 8ம் தேதி நடந்த மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் கம்பீர் (57 ரன்கள்), மணீஷ் பாண்டே (40 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (46* ரன்கள்) ஆகியோரின் பங்களிப்பில் 169 ரன்களை எளிதாக சேஸ் செய்தது கொல்கத்தா. எனவே இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இந்த ஆட்டம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-rcb-looking-end-kolkata-s-winning-streak-224532.html

Link to comment
Share on other sites

நோ-பால்களாக போட்டு தள்ளுகிறார் ஹைதராபாத் அணி பவுலர் இஷாந்த் சர்மா

 

1.3 ஓவர்கள் வீசுவதற்குள் 3 நோ-பால்கள் வீசி தடுமாற்றம்

 

 


CSK 65/0


CSK 72/0 after 7.2 overs

 

 


மெக்கல்லம், ட்வைன் ஸ்மித் பவுண்டரி, சிக்சர்கள் விளாசுகின்றனர்

 


நோ-பால்களுக்காக வழங்கப்படும் ஃப்ரீ ஹிட்டுகளால் சென்னை ரசிகர்கள் ஆரவாரம்

 


SMITH RUNOUT


75/1 after 8.1 overs

Link to comment
Share on other sites

CSK 176/2 after 17.3 overs

 

B McCULLAM 87

DHONI 34

 

 


CSK 184/2 after 18 overs


B McCULLAM 88

DHONI 40


CSK 198/2 after 19.1 overs

 

B McCULLAM 89

 

DHONI 53


DHONI OUT


Chennai Super Kings 209/4 (20/20 ov)

Link to comment
Share on other sites

ஹைதராபாத்துக்கு எதிராக சென்னை 209 ரன்கள் குவிப்பு..மெக்கல்லம் சதம், டோணி அரை சதம்

 

சென்னை: 8வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் டோணி தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதையடுத்து சென்னை அதிரடியாக ஆட்டத்தை தொடங்கி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை விளாசியது. டோணி தலைமையிலான சென்னை அணி, தனது முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று தனது 2வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். மாலை 4 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் டோணி, தனது அணி முதலில் பேட் செய்யும் என்றார். இதையடுத்து பிரெண்டன் மெக்கல்லம், ட்வைன் ஸ்மித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே, இரு வீரர்களும், அதிரடியை காண்பித்தனர்.

 

முதல் 5 ஓவர்களில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, ரன் வேகத்தை மேலும் அதிகரித்தனர் சென்னை பேட்ஸ்மேன்கள். எதிரணி கேப்டன் வார்னர், விக்கெட் வீழ்ச்சிக்காக, புவனேஸ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, டிரெண்ட் பவுல்ட், சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா, ரவி போபாரா என பந்து வீச்சாளர்களை மாற்றி பார்த்தார். ஆனாலும் சென்னை பேட்ஸ்மேன்கள் விளாசலை நிறுத்தவில்லை. இந்நிலையில், 9வது ஓவரின் முதல் பந்தை போபாரா வீச, அந்த பந்தை கட் செய்துவிட்டு சிங்கிளுக்கு ஓடினார், மெக்கல்லம். மறுமுனையில் நின்ற ஸ்மித், கிரீஸ் வருவதற்குள், டிரெண்ட் பவுல்ட் நேரடியாக ஸ்டம்பில் பந்தை எறிந்து, ஸ்மித்தை அவுட் செய்தார். 26 பந்துகளில் எடுத்த 27 ரன்களுடன் ஸ்மித் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 75ஆக இருந்தது.

 

இதன்பிறகு மெக்கல்லத்துடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். சென்னை அணி 11 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. மெக்கல்லம் 47 ரன்களுடனும், சுரேஷ் ரெய்னா 9 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இந்நிலையில் ரெய்னா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லோகேஷ் ராகுலால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதன்பிறகு யாரும் எதிர்பார்காத வகையில் டோணி 4வது வீரராக களமிறங்கினார். வந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையில், சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினார். நீண்ட நாட்களுக்கு பிறகு டோணி அதிரடியை பார்த்த சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தனர்.

 

வெறும் 29 பந்துகளில் டோணி 53 ரன்கள் விளாசிவிட்டு, பவுல்ட் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன்பிறகு இறங்கிய ஜடேஜா டக் அவுட் ஆக, மறுமுனையில், மெக்கல்லம், விளாசலை தொடர்ந்தார். கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளை மட்டுமே சந்திக்க மெக்கல்லத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் 89 ரன்களுடன் நின்றிருந்தார். இருப்பினும், சிக்சர், பவுண்டரி, சிங்கிள் என 3 பந்துகளில் 11 ரன் விளாசி, தான் சந்தித்த 56வது பந்தில் சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை குவித்துள்ளது. இதை ஹைதராபாத் சேஸ் செய்யுமா என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

 

இவர்கள் தவிர ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் ஆகிய இந்திய பிரபலங்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் இளம் வீரர்களும் நம்பிக்கையுடன் களமிறங்குவதால் தோனி படையை சமாளிக்கும் முனைப்பில் ஹைதராபாத் அணி சனிக்கிழமை ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-csk-vs-srh-match-prview-224527.html

Link to comment
Share on other sites

Chennai Super Kings 209/4 (20/20 ov)
Sunrisers Hyderabad 164/6 (20/20 ov)


Chennai Super Kings won by 45 runs


சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது

 

 

Link to comment
Share on other sites

மெக்கல்லம் சதம், டோணி அரைசதம்.. ஹைதராபாத்தை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே

 

சென்னை: 8வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சையில் நடத்தின. டாசில் வென்ற சென்னை பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது. இரண்டாவது பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால், சென்னை 45 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

 

டோணி தலைமையிலான சென்னை அணி, தனது முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று தனது 2வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். மாலை 4 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் டோணி, தனது அணி முதலில் பேட் செய்யும் என்றார். இதையடுத்து பிரெண்டன் மெக்கல்லம், ட்வைன் ஸ்மித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே, இரு வீரர்களும், அதிரடியை காண்பித்தனர்.

 

முதல் 5 ஓவர்களில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, ரன் வேகத்தை மேலும் அதிகரித்தனர் சென்னை பேட்ஸ்மென்கள். எதிரணி கேப்டன் வார்னர், விக்கெட் வீழ்ச்சிக்காக, புவனேஸ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, டிரெண்ட் பவுல்ட், சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா, ரவி போபாரா என பந்து வீச்சாளர்களை மாற்றி பார்த்தார். ஆனாலும் சென்னை பேட்ஸ்மேன்கள் விளாசலை நிறுத்தவில்லை. இந்நிலையில், 9வது ஓவரின் முதல் பந்தை போபாரா வீச, அந்த பந்தை கட் செய்துவிட்டு சிங்கிளுக்கு ஓடினார், மெக்கல்லம். மறுமுனையில் நின்ற ஸ்மித், கிரீஸ் வருவதற்குள், டிரெண்ட் பவுல்ட் நேரடியாக ஸ்டம்பில் பந்தை எறிந்து, ஸ்மித்தை அவுட் செய்தார். 26 பந்துகளில் எடுத்த 27 ரன்களுடன் ஸ்மித் அவுட் ஆனார்.

 

அப்போது அணியின் ஸ்கோர் 75ஆக இருந்தது. இதன்பிறகு மெக்கல்லத்துடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். சென்னை அணி 11 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. மெக்கல்லம் 47 ரன்களுடனும், சுரேஷ் ரெய்னா 9 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இந்நிலையில் ரெய்னா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லோகேஷ் ராகுலால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதன்பிறகு யாரும் எதிர்பார்காத வகையில் டோணி 4வது வீரராக களமிறங்கினார். வந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையில், சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினார். நீண்ட நாட்களுக்கு பிறகு டோணி அதிரடியை பார்த்த சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தனர். வெறும் 29 பந்துகளில் டோணி 53 ரன்கள் விளாசிவிட்டு, பவுல்ட் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

 

இதன்பிறகு இறங்கிய ஜடேஜா டக் அவுட் ஆக, மறுமுனையில், மெக்கல்லம், விளாசலை தொடர்ந்தார். கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளை மட்டுமே சந்திக்க மெக்கல்லத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் 89 ரன்களுடன் நின்றிருந்தார். இருப்பினும், சிக்சர், பவுண்டரி, சிங்கிள் என 3 பந்துகளில் 11 ரன் விளாசி, தான் சந்தித்த 56வது பந்தில் சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது. இதையடுத்து, ஹைதராபாத் சேஸ் செய்ய தொடங்கியது.

 

தொடக்க வீரர் தவான் அதிரடியாக ஆரம்பித்தாலும், 26 ரன்களில் மோகித் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். லோகேஷ் ராகுல் 5 ரன்கள், ஓஜா 15 ரன்கள், வார்னர் 53 ரன்கள், போபாரா 22 ரன்கள், கரண் ஷர்மா 4 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெஹ்ரா, அஸ்வின் உள்ளிட்ட சென்னை பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சும், மெக்கல்லம், டோணியின் அபார பேட்டிங்கும், சென்னைக்கு தொடர்ந்து 2வது வெற்றியை ஈட்ட உதவியது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-csk-vs-srh-match-prview-224527.html

Link to comment
Share on other sites

மெக்கல்லம், தோனியின் சரவெடியில் நொறுங்கியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

 

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மெக்கல்லம், தோனி ஆகியோரின் அதிரடியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படுதோல்வி அடைந்தது.

மெக்கல்லம் 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 100 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக திகழ, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 53 ரன்களை விளாச சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.

 

 

தொடர்ந்து ஆடிய டேவிட் வார்னர் தலைமை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அஸ்வின், பிராவோ அபாரமான சிக்கனத்துடன் வீசினர். சென்னை அணி 2-வது வெற்றியைத் தொடர்ச்சியாக பெற்றது. டேல் ஸ்டெய்னுக்குப் பதிலாக டிரெண்ட் போல்ட்டை எடுத்திருந்தனர். ஆனால் இஷாந்த் சர்மாவையே உட்கார வைத்திருக்க வேண்டும். இதனை ஏனோ செய்யவில்லை.

மட்டை ஆட்டக்களத்தில் டாஸ் வென்ற தோனி முதலில் பெட் செய்ய முடிவெடுத்தார்.

 

 

மெக்கல்லத்திடம் சிக்கி இஷாந்த் சர்மா பரிதாபம்:

டிவைன் ஸ்மித், மெக்கல்லம் தொடங்கினர், சன்ரைசர்ஸ் துரதிர்ஷ்டம் இன்று மெக்கல்லம் முடிவு செய்துவிட்டார் நிற்பதென்று. பிறகு என்ன செய்ய முடியும்? அதன் பிறகு எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. உலகக் கோப்பையின் சிறந்த பவுலர் டிரெண்ட் போல்ட், புவனேஷ் குமார் ஆகியோர் வீசினர். 3-வது ஓவரில் குமாரை இறங்கி வந்து சிக்ஸ் அடித்து தொடங்கினார் மெக்கல்லம். 5-வது ஓவரி இஷாந்த் வீசினார். 2 நோபால்கள் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் கொடுத்தார்.

 

6-வது ஓவரிலேயே கரண் சர்மா கொண்டு வரப்பட்டார். அரைக்குழி பந்தை பேயடி அடித்தார் மெக்கல்லம் சிக்சருக்குப் பறந்தது. பவர் பிளே முடிவில் 49/0.

7-வது ஓவர் இஷாந்த் சர்மா வந்தார். இவர் பாவம் ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக சர்வதேச போட்டிகளில் கூட காயமடைந்து விடக்கூடாது என்று ஜெண்டில்மேன் பந்துவீசியவர். முதல் பந்தே ஸ்மித் லாங் ஆஃபில் ஒரே அடி அடித்தார், பவுண்டரி. மீண்டும் ஒரு நோபால். ஃப்ரீ ஹிட், மேலேறி வந்து கொசு அடிப்பது போல் அடித்தார் பந்து லாங் ஆனில் சிக்ஸ். கடைசி பந்து யார்க்கர் முயற்சி தவறாக அமைய ஆஃப் திசையில் மீண்டும் ஒரு பேயடி, மெக்கல்லமுக்கு மேலும் ஒரு பவுண்டரி கிடைத்தது. 8 ஓவர்களில் ஸ்கோர் 75/0.

9-வது ஓவரில் 27 ரன்கள் எடுத்த ஸ்மித் ரன் அவுட் ஆனார். 10-வது ஓவரில் பர்வேஸ் ரசூல் வந்தார். மெக்கல்லம் முதல் பந்து ஷார்ட் பிட்ச் ஆஃப் திசையில் பவுண்டரி விளாசினார் மெக்கல்லம், பிறகு ஒரு லாங் ஆனில் ஒரு சிக்ஸ். 10-வது ஓவர் முடிவில் 89/1 என்று இருந்தது சென்னை. ரெய்னா களமிறங்கி ஒரேயொரு பவுண்டரி அடித்தார்.

 

12-வது ஓவரில் மீண்டும் இஷாந்த் சர்மா, மெக்கல்லமிடம் சிக்கினார், ஒரு மிகப்பெரிய சிக்ஸ் அடித்து 38 பந்துகளில் அரை சதம் கண்டார். அதே ஓவரில் நோ-பாலில் மீண்டும் ஒரு பவுண்டரி, பிறகு ஃப்ரீ ஹிட் மிடில் ஸ்டம்பில் வந்த புல்டாஸை கீப்பர் தலைக்குப் பின்னால் ஒரு சிக்ஸ். 23 ரன்களை விட்டுக் கொடுத்தார் இஷாந்த் சர்மா.

அதன் பிறகு கரண் சர்மாவை 2 சிக்சர்களை அடுத்தடுத்து அடித்தார் மெக்கல்லம். சுரேஷ் ரெய்னா 14 ரன்களில் ரன் அவுட் ஆனார். மெக்கல்லம் 85 ரன்களில் இருந்த போது வில்லியம்சன் ஒரு கேட்ச் விட்டார்.

 

தோனி களமிறங்கினார்... அவரது பேட்டிங் மீது சமீபகாலங்களாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவரால் முன்னைப்போல் ரன்களை விரைவாக எடுக்க முடிவதில்லை என்றும், பவுலர்கள் தோனியைக் கண்டு அச்சப்படுவதில்லை என்ற ரீதியிலும் விமர்சனங்கள் எழுந்தன.

 

அதையெல்லாம் கேள்விப்பட்டுத்தானோ என்னவோ இன்று முன்பாகவே களமிறங்கி புவனேஷ் குமாரை ஒரு சிக்சர் விளாசினார். பிறகு கரன் சர்மாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசித் தள்ளினார். பொபாராவை 2 பவுண்டரிகள் பிறகு போல்ட்டை ஒரு பவுண்டரி அடித்து 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து 29-வது பந்தில் அவுட் ஆனார்.

இவர் களமிறங்கும் போது மெக்கல்லம் 80 ரன்களில் இருந்தார். ஆனால் தோனி, அவருக்கு ஸ்ட்ரைக்கே கொடுக்கவில்லை. தோனி 53-ல் அவுட் ஆகிச் செல்லும் போது மெக்கல்லம் 89 ரன்களில் இருந்தார். தோனி, ஜடேஜா அடுத்தடுத்த போல்ட் பந்துகளில் அவுட் ஆகி வெளியேறினர்.

 

அதன் பிறகு அதே 20-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸ், சிங்கிள் எடுத்து 56 பந்துகளில் சதம் கண்டார் மெக்கல்லம் அவரது 2-வது ஐபிஎல் சதம் இது. முதல் சதம் முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக எடுத்தது. 20 ஓவர்களில் சென்னை 209 ரன்கள். நன்றி: இஷாந்த் சர்மா- 3 ஒவர்களில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்து சாத்துமுறை வாங்கினார்.

 

அறுவையாகிப் போன சன்ரைசர்ஸ் பேட்டிங்:

இலக்கைத் துரத்திய களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி எந்த நிலையிலும் வெற்றிபெறும் தோரணையில் இல்லவேயில்லை. ஷிகர் தவன், கே.எல்.ராகுல் ஆகியோர் மோஹித் சர்மாவின் ஸ்லோ பந்தில் காலியாயினர். அதிரடி வீரர் வார்னரைக் கட்டிப்போட்டனர் சென்னை பவுலர்கள்.

 

அவர் மந்தமான ஒரு அரைசதம் எடுத்தார் அவ்வளவே. அஸ்வின் அபாரமாக வீசி 4 ஓவர்களில் 22 ரன்களையே விட்டுக் கொடுத்தார். நமன் ஓஜா விக்கெட்டையும் கைப்பற்றினார். பிராவோ, மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜடேஜா ஒரு ஓவரில் 17 ரன்கள் கொடுத்தார், பிறகு கொண்டு வரப்படவில்லை.

 

முதல் போட்டியில் ஜடேஜா பந்து வீசியதாக நினைவில்லை. பின்பு ஏன் அவரை அணியில் வைத்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்? அபராஜித் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது. 164 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் மட்டுப்பட்டது. தோனியின் ஜடேஜா பாசம் தொடர்கிறது.

ஆட்ட நாயகனாக பிரெண்டன் மெக்கல்லம் தேர்வு செய்யப்பட்டார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/article7093175.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

பெங்களூருவிடம் வீழ்ந்தது கோல்கட்டா: கெய்ல் அரைசதம்


பெங்களூருவிடம் வீழ்ந்தது கோல்கட்டா: கெய்ல் அரைசதம்

கோல்கட்டா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கெய்ல் 56 பந்தில் 96 ரன்கள் விளாச, பெங்களூரு அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. பீல்டிங்கில் சொதப்பிய கோல்கட்டா அணி, பரிதாபமாக வீழ்ந்தது.

எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் 5வது லீக் போட்டி கோல்கட்டாவில் நடந்தது. இதில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

காம்பிர் அரைசதம்: கோல்கட்டா அணியின் உத்தப்பா 35 ரன்கள் எடுத்தார். பவுண்டரி மழை பொழிந்த காம்பிர், அரைசதம் (58) கடந்தார். பாண்டே (23), சூர்யகுமார் (11), யூசுப் பதான் (3), சாகிப் (0) நீடிக்கவில்லை. கடைசி நேரத்தில் ஆன்ட்ரூ ரசல் 17 பந்தில் 41 ரன் குவிக்க, கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. ரசல் (41) அவுட்டாகாமல் இருந்தார்.

கெய்ல் அரைசதம்: கடின இலக்கைத் துரத்திய பெங்களூரு அணிக்கு கோஹ்லி (13) துவக்கத்திலேயே அதிர்ச்சி தந்தார். யூசுப் பதானின் ஒரே ஓவரில் தினேஷ் கார்த்திக் (6), மன்தீப் சிங் (6) போல்டாகினர்.

ரூ. 2.4 கோடிக்கு வாங்கப்பட்ட அறிமுகற்ற சுழற்பந்து வீச்சாளர் கரியப்பா, அபாயமான டிவிலியர்சை (28) அவுட்டாக்கி, நம்பிக்கை தந்தார்.
வெற்றி உறுதி: சிக்சராக விளாசிய கெய்ல், 37வது பந்தில் அரைசதம் அடித்தார். டேரன் சமி (7) விரைவில் அவுட்டான போதும், யூசுப் பதான் பந்துகளில் 33, 63 ரன்னில் கெய்ல் கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை மார்னே மார்கல் நழுவ விட, வெற்றி பெங்களூரு பக்கம் திரும்பியது. சாகிப் சுழலில் தொடர்ந்து இரு சிக்சர் அடித்த கெய்ல், நரைன் ஓவரில் பவுண்டரிகள் அடிக்க, பெங்களூரு வெற்றி உறுதியானது. இவர் 96 ரன்னில் (56 பந்து) மணிஷ் பாண்டேயின் அசத்தல் பீல்டிங், 'த்ரோவில்' ரன் அவுட்டான போதும், அபு நேசிம் ஒரு பவுண்டரி அடிக்க, பெங்களூரு அணி 19 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபு நேசிம் (5), ஹர்சால் படேல் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

கெய்ல் '7000'
நேற்று 25 ரன்கள் எடுத்த போது, அனைத்து விதமான 'டுவென்டி-20' கிரிக்கெட்டில் 7000 ரன்கள் எடுத்த முதல் வீரர் ஆனார் கெய்ல். இவர் இதுவரை 196 போட்டிகளில் 13 சதம் உட்பட 7071 ரன்கள் எடுத்தார். அடுத்த இரு இடத்தில் ஆஸ்திரேலியாவிவ் பிராட் ஹாட்ஜ் (233ல் 6363 ரன்), டேவிட் ஹசி (248ல், 5822 ரன்) உள்ளனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1227135

Link to comment
Share on other sites

ஐபிஎல் தொடரில் இன்று இரு ஆட்டங்கள்..ராஜஸ்தான் vs டெல்லி, மும்பை vs பஞ்சாப்! 

 

ஐ.பி.எல். போட்டியில் இன்று, 2 போட்டிகள் நடைபெறுகின்றன. டெல்லி, பெரோசா கோட்லா மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் டுமினி தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ், வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்கிடம் 1 ரன்னில் தோற்ற டெல்லி அணி சொந்த மைதானத்தில் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

 

ஐபிஎல் தொடரில் இன்று இரு ஆட்டங்கள்..ராஜஸ்தான் vs டெல்லி, மும்பை vs பஞ்சாப்! டெல்லி, கேப்டன் டுமினி, யுவராஜ் சிங் போன்ற முன்னணி வீரர்கள் சொதப்பினர். இதனால் அவர்கள் சிறப்பாக ஆடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அல்பி மார்கல், நாதன் கோல்ட்டர் நல்ல நிலையில் உள்ளனர். ராஜஸ்தான் தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியதால் நம்பிக்கையுடன் உள்ளது. இதனால் 2வது போட்டியை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளது.

 

கடந்த போட்டியில் காயம் காரணமாக, விளையாடாத கேப்டன் வாட்சன் இன்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தொடக்க ஆட்டத்தில் தோல்வி அடைந்தன. இதனால் முதல் வெற்றிக்காக இரு அணிகளும் காத்திருக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடமும், பஞ்சாப் அணி ராஜஸ்தானிடமும் தோற்று இருந்தது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-2-matches-today-224574.html

Link to comment
Share on other sites

டில்லி அணி சிறப்பான பந்துவீச்சு ஏப்ரல் 12,2015
 

 

டில்லி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. டில்லியில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ராஜஸ்தான், டில்லி அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'பவுலிங்' தேர்வு செய்தார்.

 

டில்லி அணிக்கு மயாங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. சவுத்தி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அகர்வால் 37 ரன்களில் அவுட்டானார். மோரிஸ் பந்தில் ஸ்ரேயாஸ் (40) ஆட்டமிழந்தார். 2 சிக்சர் விளாசிய யுவராஜ் 27 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் மாத்யூஸ், டுமினி அதிரடி காட்டினர். டில்லி அணி 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. டுமினி (44), மாத்யூஸ் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ராஜஸ்தான் அணிக்கு ரகானே, சாம்சன் துவக்கம் தந்தனர். சாம்சன் (11) நிலைக்கவில்லை. ஸ்மித் (10), கருண் நாயர் (20), ஏமாற்றினர். ஸ்டூவர்ட் பின்னி ஒரு ரன் மட்டும் எடுத்தார். ராஜஸ்தான் அணி 12 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே (35), ஹூடா (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1228442

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.