Sign in to follow this  
ரஞ்சித்

முதல்க் காதலின் வலி எதுவரை ?

Recommended Posts

பலர் இதுபற்றி முன்னர் பேசியிருந்தாலும்கூட, எனக்கு இதுபற்றி இன்னும் தெளிவு பிறக்கவில்லை. இதுபற்றி எவர் என்ன சொல்லியும் மனது சமாதானமும் அடையவில்லை. அது நடந்து இன்றுடன் 25 வருடங்கள் ஓடிவிட்டபோதும் கூட அதன் நினைவுகள் பசுமையாகவும் அதேவேளை மிகவும் வேதனையாகவும் இன்றுவரை இருப்பது ஏனென்று எனக்குப் புரியவில்லை. அவ்வப்போது நான் கேட்கும் 80களின் இறுதிக் காலத்திலும், 90 களின் ஆரம்பப் பகுதிகளிலும் வெளிவந்த பாடல்களைக் கேட்கும்போது மனது அந்தக் காலத்தைத் தேடிப் போய் தனியே அழத் தொடங்குகிறது. 

 

அரும்பத் தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே அநியாயமாகப் பிரிக்கப்பட்டுப் போன எனது காதல் பற்றி இன்றும் நான் மனதினுள் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எவ்வளவோ சறுக்கல்களுக்கு மத்தியிலும் கூட அரும்பாமல் அரும்பிய அந்த உணர்வு எனது வீட்டாரின் வற்புறுத்தலினால் இடையிலேயே கருவறுக்கப்பட்டு எனது காதலி கண்ணீர் தோய்ந்த முகத்துடன் மட்டக்கள்ப்பு பஸ்நிலையத்தில் நான் பஸ் ஏறுவதைப் பார்த்திருக்க அவளை விட்டு நிரந்தரமாகப்  பிரிந்த எனது பயணம் தொடங்கியது. 

 

1990 இல் மட்டக்களப்பை விட்டு கொழும்பிற்கு வந்த நான், மட்டக்கள்ப்பிலிருந்து எவர் கொழும்பு வந்தாலும் முதல் கேட்கும் கேள்வி, அவளைப் பார்த்தீர்களா என்பதாகத்தான் இருக்கும். ஒரு சிலர், ஆம் பார்த்தோம், பாவமடா, நீ அப்படிச் செய்திருக்கக் கூடாது. நீ போன பிறகு பலமுறை உன்னிடமிருந்து ஏதாவது செய்தி வந்ததா என்று எங்களிடம் கேட்டிருக்கிறாள். எங்களால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.....இப்படிப் பல பதில்கள். மனது கிடந்தழ அவற்றைக் கேட்டுவிட்டு மெளனமாக இருந்துவிட்டேன். இன்றிருக்கும் வலி அன்று எனக்குத் தெரியவில்லை. சிறிதுநாளில் மறந்துவிடுவேன் என்று நினைத்திருந்தாலும் கூட, தனிமையில் பலமுறை அழுதிருக்கிறேன். 

 

6 வருடங்களுக்குப் பின்னர், 1996 இல், பலகலைக் கழக மஹாபொல புலமைப் பரிசில் நிகழ்விற்காக மீண்டும் மட்டக்கள்ப்பு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அங்கு போய் இறங்கியதும் நான் செய்த முதல் வேலை, நண்பனின் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவளிருந்த வீட்டைப் பார்க்கச் சென்றதுதான். ஆனால் அங்கு யாருமில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு அவள் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. சிறிதுநேரம் அவளது வீட்டின் முன்னால் எதுவுமே செய்யத் தோன்றாது நின்றுவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். 

 

நண்பனின் வீடு வரும் வழியில் நானும் அவளும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் மாதா கோயிலில் மனது இறங்கிவிடத் துடிக்க, சிறிதுநேரம் உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன். எவர் கோயிலிக்குள் வந்தாலும் அவள் வருகிராளா என்று மனம் அங்காலாய்க்க திரும்பித் திரும்பிப் பார்த்தேன். அவளில்லை. 

 • Like 17

Share this post


Link to post
Share on other sites

ம்ம்ம்.. மனம் செய்யும் விளையாட்டு இது.. உங்கள் வாழ்வில் இரண்டு பெண்கள் காட்சிக்குள் வந்துவிட்டதால் ஒப்பீடுகள் தாராளமாக நடைபெறலாம். குற்ற உணர்வாகவும் இருக்கலாம்..

என்னைப் பொறுத்தவரையில் காதல் செய்யக்கூடாது.. அப்படிச் செய்தால் அது திருமணத்தில் முடியவேண்டும்.. :o

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

எவ்வளவு நேரம் இருந்தேன் என்று தெரியவில்லை, எழுந்து நடக்கத் தொடங்கினேன். சற்றுத் தொலைவில் அவளது நண்பி, கையில் குழந்தையுடன் போவது தெரிந்தது. ஓடிப் போய் அவள்பற்றி விசாரிக்கலாம் என்று நான் ஆயத்தமாவதற்குள், அவளின் கனவன் அவளருகில் நிற்பதை அப்போதுதான் நான் பார்க்கிறேன். மனது ஏனோ வேண்டாம் என்றதும், பேசாமல் இருந்துவிட்டேன். 

 

நான் மட்டக்களப்பை விட்டுச் சென்ற அந்த 6 வருடங்களுக்குள் பல மாற்றங்கள். என்னுடன் படித்த, பழகிய எவரையுமே நான் அங்கிருந்த ஒரு வாரத்தில் காண்வில்லை. எவரையாவது சந்தித்து அவள் பற்றி அறியலாம் என்றால், எதுவுமே முடியவில்லை. ஒரேயொரு தகவல் மட்டும் கிடைத்தது, "நீ போனபிறகு, அவளும் வீட்டுக் காரரும் திருகோணமலையின் அவர்களின் சொந்த ஊரான சாம்பல்த்தீவுக்குப் போய்விட்டதாக யாரோ சொல்லக் கேள்விப்பட்டேன்" என்று ஒரு நண்பன் தொலைபேசியில் சொன்னான். அதுகூட உண்மையா என்று தெரியவில்லை. 

 

இன்றுவரை அவளின் நினைவு அடிக்கடி வரும். வரும்போது கூடவே நான் செய்த அநியாயமும் கூட வந்து மனதை உறுத்தும்.

 

இன்றுவரை அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக அந்த பரந்த மட்டக்களப்பு நகரெங்கும் வியாப்பித்து இருக்கின்றன. காலங்களால் அந்த நினைவுகளை நிச்சயம் அழிக்க முடியாதென்பது எனக்குப் புரிகிறது. நான் தெரிந்தே செய்த மிகப்பெரிய பாவம் அதுவென்று இன்றுவரை நான் நம்புகிரேன்.

 

இன்று எனது மனைவிகூட நான் காதலித்தவள்தான். அவளின்மேல் நான் வைத்திருக்கும் அன்பும் உண்மையானதுதான். ஆனால் எனது முதற்காதலின் வலி இன்னும் என்னை விட்டு அகலவில்லை.

 

நான் இன்றுவரை தேடிய தேடல்கள், அவளை மீண்டும் காதலிக்கவல்ல, மாறாக நான் செய்ததற்கு மன்னிபுக் கேட்கத்தான் என்று மனது சொல்கிறது. அவள் எப்படி இருக்கிறாள் என்று அறிய மனம் ஆசைப்படுகிறது. அவள் நன்றாக வாழ வேண்டும் என்று மனம் விரும்புகிறது. ஆனால் இதெல்லாம் நடப்பதற்கு அவள் உயிருடன் இருக்கிறாளா, இருந்தால் எங்கிருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. 

 

ஒன்றுமட்டும் நிச்சயம், இந்த வலி என்னுடன் கூடவே வரும், சாகும்வரை !


ம்ம்ம்.. மனம் செய்யும் விளையாட்டு இது.. உங்கள் வாழ்வில் இரண்டு பெண்கள் காட்சிக்குள் வந்துவிட்டதால் ஒப்பீடுகள் தாராளமாக நடைபெறலாம். குற்ற உணர்வாகவும் இருக்கலாம்..

என்னைப் பொறுத்தவரையில் காதல் செய்யக்கூடாது.. அப்படிச் செய்தால் அது திருமணத்தில் முடியவேண்டும்.. :o

 

 

இசை, நீங்கள் அறியாததா?? 16 வயதில் ஒரு காதலை அங்கீகரிக்கும் நிலையிலா எமது சமூகம் இருக்கிறது ? 

Edited by ragunathan
 • Like 6

Share this post


Link to post
Share on other sites
ஒன்றுமட்டும் நிச்சயம், இந்த வலி என்னுடன் கூடவே வரும், சாகும்வரை !

 

 

 

இது உண்மையானது. மனித மனம் தான் எத்தனை மென்மையானது!!!

Share this post


Link to post
Share on other sites

ரகு

உங்களது வலியை  உணரமுடிகிறது...

 

இந்த திரியின் தலைப்பை பார்த்ததும்

எனது காதலையும் எழதலாம் என ஓடிவந்தேன்

ஆனால் உங்களது வலி அதை எழுதவிடவில்லை......

 

இரண்டையும் ஒப்பீடு செய்து பார்த்தேன்

(எனதையும் உங்களதையும்)

 

எனது காதல்கள் சீரியசாக இருந்ததில்லை

அந்த பருவத்து உணர்வு மட்டுமே...

ஆனால் அவையும் தற்பொழுதும் எனது அடிமனதில் உண்டு

ஆனால் உங்களுக்கும் எனக்கும்உள்ளவேறுபாடு

அதை ஒரு உணர்வாக

அந்தநேர விளையாட்டாக நினைத்து நான் கடந்துபோகின்றேன்

கடந்து  போய்க்கொண்டிருக்கின்றேன்

நீங்கள் அதை ஒரு படிக்கு மேலாக நினைத்து  சந்தோசத்தை தொலைக்கிறீர்கள்

பருவங்களும்  பயணங்களும் வாழ்க்கையும் வெவ்வெறானவை

அவை நின்றுவிடுவதில்லை

தொடர்பவை......

அதன் ஓட்டத்தில் நாம் ஓடியாகணும்

நீங்கள் மட்டுமல்ல

நீங்கள் தேடும் நபரும் ஓடியாகணும்

யாருக்காகவும் எவரும் ஓட்டத்தை நிறுத்தமுடியாது

கிட்டத்தட்ட இந்த 25 வருடகாலத்தில் 

எல்லாமே மாறியிருக்கும்

எல்லாமே மறக்கப்பட்டிருக்கும்

எல்லாவற்றிற்குமே மாற்றுவழி கிடைத்திருக்கும்

அது நீங்கள் நினைப்பதைவிட பல மடங்கு சிறந்ததாகவும் இருக்கக்கூடும்..

 

எனவே மனக்கிலோசம் கலைத்து மகிழ்வுடன் வாழ்க்கையை  வாழுங்கள்

வாழ்க  வளமுடன்...

 

(ஆரம்பத்தில்  எனது காதல் பற்றி இங்கு எழுதலாம் என நினைத்து எழுதத்தொடங்கினேன். ஆனால் முடியவில்லை. காரணம் அவர்கள் இன்று  இன்னொரு பாதையில் ஓடிக்கொண்டிருக்கிறர்கள்.  என்னைப்பற்றி வேண்டுமானால் நான் எழுதலாம். ஆனால் இனி அவர்களைப்பற்றி  எழுத எனக்கென்ன உரிமையுண்டு?. அத்துடன் தேவையற்ற மனக்கிலேசங்களையும் புடுங்குப்பாடல்களையும் அவை தந்துவிடுமல்லவா??)

Edited by விசுகு
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இசை, நீங்கள் அறியாததா?? 16 வயதில் ஒரு காதலை அங்கீகரிக்கும் நிலையிலா எமது சமூகம் இருக்கிறது ?

ஓ.. பதினாறு வயது ஆகக் குறைந்ததுதான்.. நீங்கள் 90 களில் பஸ் ஏறும்போது யாருக்கு 16 வயது? :unsure:

Share this post


Link to post
Share on other sites
காதல் ஜெயித்தால் என்ன ஆகும்... !!?? கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிகளோடு சாதாரண வாழ்க்கையாகி விடும்...சண்டை சச்சரவுகள் தவிர்க்க முடியாதது... 
 
ஆனால் அந்தக் காதல் தோற்றால் அது காவியம் ....!!  நீங்கள் மரணிக்கும் வரை அந்த இனிய நினைவுகள் உங்களுடனே பயணிக்கும்.  உங்கள் உணர்வுகளை உயிர்பிக்கவும்...புதுப்பிக்கவும்...சோர்வு வரும்போது இளைப்பாறவும் அந்த நினைவுகள்  உங்களை தாங்கிப் பிடிக்கும் ...
 
ஆகையால் காதல் தோற்றால் கவலைப்பட தேவையில்லை... கடைசிவரை பயணப்பட அவளது நினைவு உள்ளது என்று சந்தோசம் கொள்ளுங்கள்...:)
 
 • Like 5

Share this post


Link to post
Share on other sites

எல்லாம் நன்மைக்கே என்று ஆறுதல் அடையுங்க அண்ணே! :icon_mrgreen:  :D

Share this post


Link to post
Share on other sites

காதல் என்றாலே அது ஒரு விதமான வலி தான்.அதிலே சின்னன் பெரிது என்று கிடையாது.

 

நானும் காதலித்தே திருமணம் செய்தேன்.சிறு வயதில் தொடங்கியது ஒன்பது வருடங்களின் பின் திருமணத்தில் சுபமாக முடிந்தது.

 

காதலிக்கும் போது எப்படி இருந்தோமோ

அப்போதும் அப்படியே இருக்கிறோம்.

Share this post


Link to post
Share on other sites

பலருக்குள் இப்படியான வலிகள் நிறைந்த வேதனைகள் இருக்கும். காலம் எல்லாவற்றையும் ஆற்றும் மருந்து என்று சொன்னாலும் மாறாத காயங்களும் இருக்கத்தான் செய்யும். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சில விருப்பமில்லாத முடிவுகளை எடுக்கவைக்கின்றன. ஆனால் கடந்த காலத்தை நினைவில் கொண்டு எதிர்காலத்தைக் கட்டமைக்கவேண்டும் என்று நிற்காமலே நகர்ந்துகொண்டிருக்கப் பழகினால் எதையும் மனம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிடும்.

Share this post


Link to post
Share on other sites

ம்ம்ம்....... எப்பிடி மறக்கிறது? அந்த வலி உயிர் மூச்சு அடங்கிற வரை இருக்கும்!

பெண்ணே!

இற்றை வரை

உன் நினைவு மீள்கையிலே

இறுதியாக - நீ

சொல்லிச் சென்ற எனக்கான

உன் மூன்றழுத்து முகவரிச் சொல்

முள்ளு வைத்துக்

என்னைக் குத்துகின்றது,

நெருப்பாகச் சுடுகின்றது!

சவுக்கெடுத்து அடிக்கின்றது!

காவாலி! - நான்

என்றும் உனக்குக் காவாலிதான்!

Share this post


Link to post
Share on other sites
வானம் அது ஒன்றுதான்
வானில் நிலவொன்றுதான்
காதல் கலைந்தாலும் மனதில்
என் நினைவொன்றுதான்
 
 
https://www.youtube.com/watch?v=pnD_FBC6iEE

Share this post


Link to post
Share on other sites

ம்ஹும் ...இந்த திரி ரொம்ப Romantic ஆகவும் உணர்ச்சி பூர்வமாகவும் போகுது 
நெடுக்ஸ் அண்ணை இறங்கினால் தான் சரிப்படும் .....
நெடுக்ஸ் அண்ணை எங்கிருந்தாலும் உடனடியாக வரவும்  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

வாழ்க்கையில் எத்தனையோ தரம்.. விழுந்து எழும்புறம்.. காயங்கள் வருகுது.. சுகமாகுது. அவற்றையே மறந்து போகத் தெரிஞ்ச மூளைக்கு.. இதெல்லாம் யு யு பி. ஒன்றைப் பார்த்தமா.. பழகினமா.. கைவிட்டமான்னு.. வெற்றிகரமா செய்திட்டமுன்னா.. அப்புறம் அடுக்கடுக்கா... அதையே செய்திட்டு.. எந்த குற்ற உணர்வுக்கும் இடமில்லாமல்.. காயா வாழலாம்.

 

அண்ணன்களா.. கொட்டாவியையும் கனவையும்.. மனசில நினைச்சு வைக்க முடியாதில்ல. அப்படித்தான் காதலும். கண்டமா.. பழகினமா.. விட்டமான்னு.. மறந்திடனும். அதை எல்லாம் காவிக்கிட்டு திரியப்படாது. காதலும் பசியும் கொட்டாவியும் தும்மலும் விக்கலும் வரும் போகும். அதுக்காக எல்லாம் கவலைப்படக் கூடாது. ஓகே.

 

காதல்ல.. புனிதம்.. கினிதம் என்று ஒன்றுமில்ல. இரண்டு மனிசர் சம்பந்தப்படுற விசயத்தில.. ஒண்ணுக்குமே உத்தரவாதமில்ல. எப்ப யாரும் ஏமாற்றிட்டு போகலாம். போனும் சிம்மும் போல. காதலும்.. மனிசரும். சிம்முள்ள வரைக்கும் கொண்டாட்டம்.. சிம்மக் கழற்றி வீசிட்டா.. திண்டாடமுன்னு இருந்தோமுன்னு வையுங்க.. அது எங்க முட்டாள் தனமே தவிர.. காதல் சொல்லிச்சா தான் புனிதமுன்னு. இல்லை இல்ல. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

எவ்வளவோ ஆசையா வாங்கிற உடுப்பு.. ஒரு நாள் கிழிஞ்சு போகேக்க.. தூக்கி வீசிட்டு அடுத்ததை வாங்கிறமா... இல்லை கிழிஞ்சதை கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வைச்சுக்கிட்டு.. உடுக்காமலே வாழுறமா.... ?!

 

காதல்ல.. யாரும் தோக்கிறதும் இல்ல. அவரவர் தேவைக்கு பயன்படுத்தினம்.. அப்புறம் உதாசீனம் பண்ணிக்கிற ஒரு அற்ப விடயம்.. உணர்வு தான் காதல். :icon_idea::lol:

Share this post


Link to post
Share on other sites

ஓ.. பதினாறு வயது ஆகக் குறைந்ததுதான்.. நீங்கள் 90 களில் பஸ் ஏறும்போது யாருக்கு 16 வயது? :unsure:

 

 

இசை,

 

நான் பஸ் ஏறியது 90 இல். அப்போது எங்களிருவருக்குமே வயது 17 தான். நான் காதலிக்கிறேன் என்பது தெரிந்ததும் எனது வீட்டார் (எனது தந்தையார் இல்லை, அவர் என்னைக் கைவிட்டு பலகாலம் ஆகிவிட்டது அப்போது) கேட்ட முதற்கேள்வி, "புத்தகம் தூக்கிற வயதில் உனக்குப் பிள்ளை தூக்க ஆசை வந்திட்டுதோ?" என்பதுதான். 

 

நான் எனது சிறுபராயத்திலிருந்து பல நிகழ்வுகளை மறந்துவிட்டேன். ஆனால் காதலித்த அனுபவங்களும், பட்ட அவமானங்களும் அப்படியே அச்சுப்பிழகாமல் , இன்னும் அதே பசுமையுடனும், ரணங்களுடனும் நினைவில் பதிந்திருக்கின்றன. அந்த நிகழுவுகளில் ஒரு சிறிதளவேனும் அழியவில்லை. கனவுகளில் நான் அழுவது எனக்குத் தெரிகிறது. ஆனால் வேறு எவருக்குமே அது தெரிந்திருக்குமா என்று எனக்குத் தெரியாது.

 

அவளது வீடு தேடி மனது கனவுகளில் அடிக்கடி சென்றுவரும், அவளைத் தேடும். ஒன்றில் அவள் அங்கில்லை, அல்லது அவள் மாறியிருப்பாள்.

 

இறுதியாக அவளை ஒரு மனநிலை குன்றிய நிலையில் வைத்தியசாலை ஒன்றில் பார்த்து கனவில் மனம் அழுதது. அந்தக் கனவின் தாக்கம் கலையவே நாட்கள் எடுத்தன.

 

என்னைப் போல வேறு எவருமே இருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.

 

ஆனாலும் பலர் இங்கே சொல்லியதுபோல, அந்த நினைவுகள் அவ்வப்போது சுகமாகவும் இருக்கின்றன என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

எவ்வளவோ ஆசையா வாங்கிற உடுப்பு.. ஒரு நாள் கிழிஞ்சு போகேக்க.. தூக்கி வீசிட்டு அடுத்ததை வாங்கிறமா... இல்லை கிழிஞ்சதை கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வைச்சுக்கிட்டு.. உடுக்காமலே வாழுறமா.... ?!

 

காதல்ல.. யாரும் தோக்கிறதும் இல்ல. அவரவர் தேவைக்கு பயன்படுத்தினம்.. அப்புறம் உதாசீனம் பண்ணிக்கிற ஒரு அற்ப விடயம்.. உணர்வு தான் காதல். :icon_idea::lol:

 

 

அட போங்கைய்யா,

 

உங்களால் எப்படித்தான் இப்படி இருக்க முடிகிறதோ??

 

ஒருமுறை உண்மையாகக் காதலித்துப் பாருங்கள். காதலில் தோற்றும் பாருங்கள். அப்புறம் தெரியும் வலி. 

 

காதல் ஜெயித்தால் என்ன ஆகும்... !!?? கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிகளோடு சாதாரண வாழ்க்கையாகி விடும்...சண்டை சச்சரவுகள் தவிர்க்க முடியாதது... 
 
ஆனால் அந்தக் காதல் தோற்றால் அது காவியம் ....!!  நீங்கள் மரணிக்கும் வரை அந்த இனிய நினைவுகள் உங்களுடனே பயணிக்கும்.  உங்கள் உணர்வுகளை உயிர்பிக்கவும்...புதுப்பிக்கவும்...சோர்வு வரும்போது இளைப்பாறவும் அந்த நினைவுகள்  உங்களை தாங்கிப் பிடிக்கும் ...
 
ஆகையால் காதல் தோற்றால் கவலைப்பட தேவையில்லை... கடைசிவரை பயணப்பட அவளது நினைவு உள்ளது என்று சந்தோசம் கொள்ளுங்கள்... :)

 

 

 

ஆதித்திய இளம்பிறையன்,

 

மிக்க நன்றி. இதுதான் அந்த உணர்வு !!!! உங்களுக்குப் புரிகிறது.

Edited by ragunathan

Share this post


Link to post
Share on other sites

ரகு

உங்களது வலியை  உணரமுடிகிறது...

 

இந்த திரியின் தலைப்பை பார்த்ததும்

எனது காதலையும் எழதலாம் என ஓடிவந்தேன்

ஆனால் உங்களது வலி அதை எழுதவிடவில்லை......

 

இரண்டையும் ஒப்பீடு செய்து பார்த்தேன்

(எனதையும் உங்களதையும்)

 

எனது காதல்கள் சீரியசாக இருந்ததில்லை

அந்த பருவத்து உணர்வு மட்டுமே...

ஆனால் அவையும் தற்பொழுதும் எனது அடிமனதில் உண்டு

ஆனால் உங்களுக்கும் எனக்கும்உள்ளவேறுபாடு

அதை ஒரு உணர்வாக

அந்தநேர விளையாட்டாக நினைத்து நான் கடந்துபோகின்றேன்

கடந்து  போய்க்கொண்டிருக்கின்றேன்

நீங்கள் அதை ஒரு படிக்கு மேலாக நினைத்து  சந்தோசத்தை தொலைக்கிறீர்கள்

பருவங்களும்  பயணங்களும் வாழ்க்கையும் வெவ்வெறானவை

அவை நின்றுவிடுவதில்லை

தொடர்பவை......

அதன் ஓட்டத்தில் நாம் ஓடியாகணும்

நீங்கள் மட்டுமல்ல

நீங்கள் தேடும் நபரும் ஓடியாகணும்

யாருக்காகவும் எவரும் ஓட்டத்தை நிறுத்தமுடியாது

கிட்டத்தட்ட இந்த 25 வருடகாலத்தில் 

எல்லாமே மாறியிருக்கும்

எல்லாமே மறக்கப்பட்டிருக்கும்

எல்லாவற்றிற்குமே மாற்றுவழி கிடைத்திருக்கும்

அது நீங்கள் நினைப்பதைவிட பல மடங்கு சிறந்ததாகவும் இருக்கக்கூடும்..

 

எனவே மனக்கிலோசம் கலைத்து மகிழ்வுடன் வாழ்க்கையை  வாழுங்கள்

வாழ்க  வளமுடன்...

 

(ஆரம்பத்தில்  எனது காதல் பற்றி இங்கு எழுதலாம் என நினைத்து எழுதத்தொடங்கினேன். ஆனால் முடியவில்லை. காரணம் அவர்கள் இன்று  இன்னொரு பாதையில் ஓடிக்கொண்டிருக்கிறர்கள்.  என்னைப்பற்றி வேண்டுமானால் நான் எழுதலாம். ஆனால் இனி அவர்களைப்பற்றி  எழுத எனக்கென்ன உரிமையுண்டு?. அத்துடன் தேவையற்ற மனக்கிலேசங்களையும் புடுங்குப்பாடல்களையும் அவை தந்துவிடுமல்லவா??)

 

 

நீங்கள் சொல்வது சரிதான் குகன்,

 

கால ஓட்டம் எல்லாவற்றையும் மாற்றும் என்றுதானிருந்தேன். ஆனால் அதுவுமே மாறவில்லை, மறையவில்லை.

 

அவள் எப்படியிருக்கிறாள் என்கிற அங்கலாய்ப்பே பாதி இரவுகளில் தூக்கத்தைக் கலைக்கிறது. 

 

அவள் நலமாக இருக்கவேண்டும் என்று சுயநலத்துடன் வேண்டுகிறது மனம். நான் செய்தத்தற்குப் பிராயச்சித்தம் தேட மனம் அலைகிறது. அந்தக் குற்றவுணர்வே இப்போது கனவுகளாகிவிட மனம் அலைந்துகொண்டிருக்கிறதென்று நினைக்கிறேன்.

ம்ம்ம்....... எப்பிடி மறக்கிறது? அந்த வலி உயிர் மூச்சு அடங்கிற வரை இருக்கும்!

பெண்ணே!

இற்றை வரை

உன் நினைவு மீள்கையிலே

இறுதியாக - நீ

சொல்லிச் சென்ற எனக்கான

உன் மூன்றழுத்து முகவரிச் சொல்

முள்ளு வைத்துக்

என்னைக் குத்துகின்றது,

நெருப்பாகச் சுடுகின்றது!

சவுக்கெடுத்து அடிக்கின்றது!

காவாலி! - நான்

என்றும் உனக்குக் காவாலிதான்!

 

 

காவாலி, அந்தக் காதலி இன்று உங்களின் மனைவியா??

Share this post


Link to post
Share on other sites

காதல் என்றாலே அது ஒரு விதமான வலி தான்.அதிலே சின்னன் பெரிது என்று கிடையாது.

 

நானும் காதலித்தே திருமணம் செய்தேன்.சிறு வயதில் தொடங்கியது ஒன்பது வருடங்களின் பின் திருமணத்தில் சுபமாக முடிந்தது.

 

காதலிக்கும் போது எப்படி இருந்தோமோ

அப்போதும் அப்படியே இருக்கிறோம்.

ஈழப்பிரியன், உங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்தாய் எதுவும் எழுத தோன்றவில்லை. உண்மைக்காதலின் தைரியம் உங்கள் வாழ்வின் வெற்றியே. 
 
பலருக்கு காதல் பொழுது போக்கு சட்டைமாதிரியும் சிம்காட் மாதிரியும் கழற்றி விசிவிட்டு போகக்கூடியது. ஆனால் காதலை உணர்ந்து காதலித்தவர்களுக்கும் காதலிப்பவர்களுக்கும் காதல் கடவுளுக்கு நிகர்.

Share this post


Link to post
Share on other sites
ரகு அண்ணா,
உங்கள் பெயரில் ஒரு பகிர்வு இருந்ததை பார்த்தவுடன் வாசித்தேன். நிச்சயம் ஏதோவொரு விடயம் உங்கள் எழுத்தில் பேசப்படுமென்ற நம்பிக்கை.
 
இம்முறை முதல்காதல் பற்றி எழுதியிருக்கிறீங்கள். காதலால் உலகில் யாவையும் வெல்லும் சக்தி உண்டு என்பதனை இங்கே உணர்ந்தவர்கள் மிகச்சிலரே. ஏனெனில் காதல் பலரால் உணரப்படாத அனுபவிக்கப்படாத உணர்வு. உணராத யாராலும் காதலை அதன் வலிமையை புரிந்து கொள்ள முடியாது. 
 
உங்கள் உண்மையான நேசிப்பு மற்றவர்களால் மதிக்கப்படாது மிதிக்கப்பட்டு பிரிந்து போனீர்கள். எனினும் அதனை குற்ற உணர்வாக நீங்கள் நினைத்து வருந்தத்தேவையில்லை.உங்கள் காதலும் நேசிப்பும் உண்மையானது. காதலின் வலிமையே உங்களை இன்றுவரை அந்தக்காதலை நினைத்து கண்ணீர் சிந்த வைக்கிறது. உங்களால் காதலிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஒரு சிறந்தகாதல் நீங்கள். 
 
காலங்கள் எத்தனை யுகங்களை கடந்து போயிருக்கலாம் ஆனால் உங்கள் காதலின் வலிமையை காதல் என்ற பெயரை ஒற்றைச் சொல்லாக கடந்து செல்வோரால் புரிந்து கொள்ள முடியாது.

Share this post


Link to post
Share on other sites

என்னைப் போல வேறு எவருமே இருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை

அச்சு அசலாக இருகிறேன்.. இடங்களையும் வயதையும் பிரிய நேரிட்ட சந்தர்ப்பத்தையும் மட்டும் சற்று மாத்தினால் பிரித்துபார்க்க முடியாத என் கதை இது.. வாசித்துவிட்டு சிறிது நேரமாக எதையும் எழுதமுடியவில்லை.. பழைய நினைவுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்துபோகின்றன.. சில துளி கண்ணீரும்.. எனக்கும் சேர்த்து எல்லாவற்றையும் நீங்கள் எழுதிவிட்டீர்கள் ரகு அண்ணா..

Share this post


Link to post
Share on other sites

காவாலி, அந்தக் காதலி இன்று உங்களின் மனைவியா??

இல்லை அப்போது நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன். இன்னொருவருக்கு திருமணம் செய்துகொடுத்துவிட்டார்கள்!

Share this post


Link to post
Share on other sites

 

காதல் என்பதன் போலி தோற்ற உணர்வைப் பற்றி இந்தக் கவிஞர் பாடியது போல எவரும் பாட முடியாது. பாடியும் என்ன இன்னும் காதலின் பெயரால்.. மனிதர்கள் தங்களை தாங்களே வருத்திக் கொள்வது படு முட்டாள் தனமானாலும் இன்னும் தொடரவே செய்கிறது. அது அவர்களின் மனப் பலவீனங்களிலும் தங்கி இருக்குமோ என்னமோ..!!! :):D:icon_idea:

Share this post


Link to post
Share on other sites

ரகு அண்ணா சாந்தி அடையட்டும். :lol::)

 

Share this post


Link to post
Share on other sites

 

 

என்னைப் போல வேறு எவருமே இருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.

 

 

நிறையப்பேர் இருப்பார்கள் (நான் உட்பட). நீங்கள் வெளியே சொல்லி விட்டீர்கள் மற்றவர்கள் சொல்லவில்லை.

Share this post


Link to post
Share on other sites

 

ரகு அண்ணா,
உங்கள் பெயரில் ஒரு பகிர்வு இருந்ததை பார்த்தவுடன் வாசித்தேன். நிச்சயம் ஏதோவொரு விடயம் உங்கள் எழுத்தில் பேசப்படுமென்ற நம்பிக்கை.
 
இம்முறை முதல்காதல் பற்றி எழுதியிருக்கிறீங்கள். காதலால் உலகில் யாவையும் வெல்லும் சக்தி உண்டு என்பதனை இங்கே உணர்ந்தவர்கள் மிகச்சிலரே. ஏனெனில் காதல் பலரால் உணரப்படாத அனுபவிக்கப்படாத உணர்வு. உணராத யாராலும் காதலை அதன் வலிமையை புரிந்து கொள்ள முடியாது. 
 
உங்கள் உண்மையான நேசிப்பு மற்றவர்களால் மதிக்கப்படாது மிதிக்கப்பட்டு பிரிந்து போனீர்கள். எனினும் அதனை குற்ற உணர்வாக நீங்கள் நினைத்து வருந்தத்தேவையில்லை.உங்கள் காதலும் நேசிப்பும் உண்மையானது. காதலின் வலிமையே உங்களை இன்றுவரை அந்தக்காதலை நினைத்து கண்ணீர் சிந்த வைக்கிறது. உங்களால் காதலிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஒரு சிறந்தகாதல் நீங்கள். 
 
காலங்கள் எத்தனை யுகங்களை கடந்து போயிருக்கலாம் ஆனால் உங்கள் காதலின் வலிமையை காதல் என்ற பெயரை ஒற்றைச் சொல்லாக கடந்து செல்வோரால் புரிந்து கொள்ள முடியாது.

 

 

 

நன்றி சாந்தி,

 

நீங்கள் நான் எழுதியதை மதித்து வந்ததற்கு நன்றிகள். நான் எழுதியவை என்னை இன்றுவரை பாதித்து ஏங்கவைக்கும் எனது முதற்காதலின் நினைவுகள். அவளது முகம் இன்றுவரை மனதை விட்டு அகலவில்லை. என்னை விட்டுப் பிரிய வேண்டாம் என்ற அவளது கெஞ்சள்களை மனம் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. உண்மையாகவே  எனக்காக ஏங்கிய ஒரு ஜீவன் இப்போது எங்கிருக்கிறது, எப்படியிருக்கிறதென்று அறிய பாழாய்ப்போன மனம் ஆசைப்படுகிறது.

 

எப்படி எனது தாயகத்தை விட்டு வெளியேறி நான் வாழ்ந்தாலும், அதன் நினைவுகள் என்னுடனிருக்குமோ, அப்படியே அவள் நினைவுகளும். நானிருக்கும்வரை அவை தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கும் !

அச்சு அசலாக இருகிறேன்.. இடங்களையும் வயதையும் பிரிய நேரிட்ட சந்தர்ப்பத்தையும் மட்டும் சற்று மாத்தினால் பிரித்துபார்க்க முடியாத என் கதை இது.. வாசித்துவிட்டு சிறிது நேரமாக எதையும் எழுதமுடியவில்லை.. பழைய நினைவுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்துபோகின்றன.. சில துளி கண்ணீரும்.. எனக்கும் சேர்த்து எல்லாவற்றையும் நீங்கள் எழுதிவிட்டீர்கள் ரகு அண்ணா..

 

 

எனதருமை சுபேஸ்,

 

உங்களின்மேல் மிகப்பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன் நான் ! உங்களின் எழுத்து எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று, வாழ்த்துக்கள்!

 

உங்கள் வலியும் என்னைப்போன்றதே என்று கவலைப்படவா அல்லது மகிழவா என்று தெரியவில்லை.

 

ஆனால், தோல்வியினாலன்றி அந்த வலியின் மகத்துவம் எமக்குத் தெரிந்திருக்குமா என்றால் சந்தேகமே !

ரகு அண்ணா சாந்தி அடையட்டும். :lol::)

 

 

 

நெடுக்கு, 

 

நான் என்ன இறந்தா விட்டேன்?? எனக்கு எதற்குச் சாந்தி சொல்கிறீர்கள் ? ஓ...என மனதில் இருக்கும் வலியைச் சொல்கிறீர்களா?? அதை நான் சாந்தியடைய விடப்போவதில்லை !

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இதுக்குத்தான்... சுவர் ஏறி குதிச்சு, சிதம்பரத்தை கைது பண்ணினார்களா.  
  • திருக்கோணமலை நகரின் அடையாளமாகவும், உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளை கவருகின்ற மற்றும் அழகு சேர்க்கும் வகையிலும் காணப்படும் மான்களைப் பாதுகாப்பதற்காக திருகோணமலை நகரசபையும், ரொட்றிக் கழகமும் இணைந்து மான்களுக்கு தண்ணீர் தாங்கியுடன் கூடிய கொட்டில் ஒன்று அமைக்கப்பட்டது. எனினும் மான்கள் தற்போது நகரின் பல பகுதிகளிலும் தனித்து நிற்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளதுடன். அவற்றுக்குப் போதிய பாதுகாப்பில்லை. மான்களின் குட்டிகளை அவ்விடத்திலுள்ள நாய்கள் வேட்டையாடி உண்கின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலமை நீடிக்குமாயின் திருகோணமலை நகரிலுள்ள மானினம் அருகிவிடும். எனவே இதனை பாதுகாக்கும் பொருட்டு மான்களுக்கென்று ஒதுக்கப்பட்ட காணியை சுற்றி அமைத்து நகரின் பல்வேறு இடங்களில் அலைந்து திரியும் மான்கள் யாவற்றையும் பாதுகாப்பதற்கு நகரசபையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/15/திருக்கோணமலை-நகரின்-அடைய.html
  • நீல மலைச்சாரல் ....தென்றல் நெசவு நடத்துமிடம்...
  • பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்     படத்தின் காப்புரிமை Getty Images பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை சைபர் உலகில் பின்தொடர்ந்து, கேலி செய்யும் 'டிஜிட்டல் ஸ்டாக்கிங்' குற்றங்கள் அதிகரித்துவருவதாகவும், சென்னை நகரத்தில் கடந்த மூன்று மாதங்களில் நான்கு 'டிஜிட்டல் ஸ்டாக்கிங்' வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னை நகரத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப்பிரிவின் துணை ஆணையராக பொறுப்பேற்ற ஜெயலட்சுமி இணைய உலகில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்க என்ன வழி என பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் விரிவாக பேசினார். Image caption பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப்பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி கேள்வி: சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்துள்ளதாக கூறுகிறீர்கள். இணைய உலகில் பெண்கள், குழந்தைகளுக்கு என்ன விதமான குற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள்? பதில்: டிஜிட்டல் ஸ்டாக்கிங் குற்றம் அதிகரித்துவருவதை பார்க்கிறோம். முன்பெல்லாம், பெண்களை பேருந்திலோ, பொது இடத்திலோ அவரை பின்தொடர்ந்து பாட்டு பாடுவது, கிண்டலாக பேசுவது என கேலி செய்வார்கள். டிஜிட்டல் உலகத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட பெண்களின் படங்களை மற்றொருவர் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். அந்த படத்தை பதிவிடும்போது, பாதுகாப்பு அம்சங்களை குறிப்பிடாமல் போனால், அறிமுகம் இல்லாத நபர்கள் கூட படத்தை எடுக்கலாம். ஒருசிலர் தங்களது அந்தரங்க நிகழ்வுகளை படமாக எடுத்து நெருக்கமானவர்களுக்குப் பகிர்ந்தால், அந்த படம் மோசமாக கையாளப்படுவதற்கு வாய்ப்புண்டு. இணையத்தில் பகிரப்படும் படங்களை நீங்கள் அழித்துவிட்டாலும், நீங்கள் அனுப்பிய படத்தை மற்றவர் வைத்திருக்கலாம். அவர் பிறருக்கு பகிரலாம். அதை உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட பயன்படுத்தலாம். சமீபத்தில் எங்களுக்கு வந்த புகாரில் ஒரு பெண் வெளிநாடு சென்ற பிறகும், அவரது ஆண் நண்பராக இருந்தவர் தொடர்ந்து பெண்ணின் படத்தை வைத்து அவரை இணையத்தில் பின்தொடர்ந்து, தொல்லை தந்திருக்கிறார். அந்த பெண் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என புகார் கொடுத்துள்ளார். நீங்கள் ஒருமுறை பகிரும் படம் பலரிடம் செல்லும் அபாயம் உள்ளது என்பதை அறிந்து செயல்படவேண்டும். கடந்த மூன்று மாதங்களில் நான்கு டிஜிட்டல் ஸ்டாக்கிங் வழக்குகளை பதிந்துள்ளோம். இந்த விவகாரங்களில் காவல்துறையை அணுகி, பாதுகாப்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்களிடம் ஏற்படுத்திவருகிறோம். தெரியாத நபர்களிடம் சமூகவலைத்தளங்களில் நட்பாகி, பிரச்சனை ஏற்பட்ட பின்னர் எங்களிடம் புகார் கொடுக்க வரும்வேளையில்தான், தன்னுடன் இணையத்தில் பழகிய நபரை முதன்முதலாக நேரில் பார்க்கிறார்கள். நேரில் பார்க்காமல், ஒரு நபரிடம் தன்னை பற்றிய தகவல்களை தரக்கூடாது என பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், குடும்ப வட்டத்தில் உள்ள நண்பர்களை தாண்டி, எந்தவித தொடர்பும் இல்லாத நபர்களிடம் தகவல்களை பகிர்ந்தால், பிரச்சனை வந்தால், அவர்களை கண்டறிவதும் சிரமமாக இருக்கும். படத்தின் காப்புரிமை Thinkstock கே: டிஜிட்டல் ஸ்டாக்கிங் பிரச்சனையில் சிக்குபவர்கள் அதிலிருந்து மீள எந்த விதத்தில் உதவுகிறீர்கள்? ப: டிஜிட்டல் ஸ்டாக்கிங்கில் சிக்கினால் ஆயுட்காலம் வரை பாதிப்பு தொடரும் வாய்ப்புள்ளது. படங்களை, நீங்கள் பேசிய குரல் பதிவை (ஆடியோவை) வைத்திருந்து, சில ஆண்டுகள் கழித்துகூட, மீண்டும் உங்களுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புண்டு. அதனால், டிஜிட்டல் ஸ்டாக்கிங்கில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பாதுகாப்பாக சமூக வலைதளங்களை பயன்படுத்தவேண்டும் என்பது முதல்படி. நேரில் செய்ய முடியாததை, சைபர் உலகத்தில் செய்யாதீர்கள் என்பதை வலியுறுத்துகிறோம். உங்களுடைய அந்தரங்க தகவல், முக்கியமான விவரங்களை யாரிடமும் பர்சனல் மெசேஜ் மூலமாககூட சொல்லாதீர்கள். நீங்கள் அனுப்பும் தகவலை வைத்துத்தான் உங்களை ஏமாற்றுவார்கள் என்ற விழிப்புணர்வு செய்தியை இளைஞர்களிடம் கொண்டு செல்கிறோம். அடுத்ததாக, பாதிப்புக்கு ஆளானால் உடனே காவல்துறையை நாடவேண்டும். எங்களிடம் தெளிவாக சொல்லிவிட்டால், பாதிக்கப்பட்ட நபரை மீட்கும் வேலையில் இறங்கலாம். சைபர் உலகத்தில் உள்ள பதிவுகளை நீக்கலாம், அசல் பதிவை முடக்கலாம் தகவல் பரவுவதை தடுக்கலாம். குற்றத்தை தடுப்பதுதான் எண்களின் முதல் கடமை. தகவல் பரவுவதை தடுத்தால், அந்த குற்றம் மேலும் பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்கலாம். படத்தின் காப்புரிமை Getty Images கே: பாலியல் வன்முறை குற்றங்களை இந்த தனிப்பிரிவில் எவ்வாறு கையாள்கிறீர்கள்? ப: பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை குறைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இந்த தனிப்பிரிவு அதிகாரிகள் பாலியல் வன்முறை வழக்குகளுக்கு சிறப்பு கவனம் கொடுக்கவேண்டும், வழக்கு விசாரணை விரைவில் முடிக்க தேவையான உதவிகளை செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் சென்னையில் மட்டும் 70 போக்ஸோ (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்) வழக்குகளில் தீர்ப்பு பெற்றுள்ளோம். புதிதாக 50 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். மேலும் ஒரு வழக்காக போக்ஸோ வழக்கை பார்க்காமல், முதலில் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் குடும்பத்திற்கு நம்பிக்கை தருகிறோம், மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்கிறோம். வழக்கு முடிந்தவுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் நிவாரண தொகையை பெற்றுத்தருவதிலும் கவனம் செலுத்துகிறோம். ஒரு வழக்கில், பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அந்த குடும்பத்திற்கு ஆறு மாதம் மனநல ஆலோசனை தேவை என்பதை மருத்துவர்கள் மூலமாக அறிந்து, அதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். வழக்கு முடிந்தாலும், உதவிக்கரம் நீட்ட நாங்கள் இருக்கிறோம் என ஆதரவாக செயல்படுகிறோம். பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். பெண் மற்றும் ஆண் குழந்தைகள் பயிலும் பள்ளி,கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஆண் குழந்தைகளும் இந்த சூழலுக்கு ஆளாகலாம், அப்படி நேர்ந்தால் அவர்கள் மனம்விட்டு பேசவேண்டும், புகார் தரலாம் என்ற செய்தியை சொல்லிவருகிறோம். படத்தின் காப்புரிமை Getty Images கே: பாலியல் வன்கொடுமை பிரச்னையை சொல்ல தயக்கம் காட்டுவோரின் பிரச்னையை எப்படி பார்க்கிறீர்கள்? ப:பாதிக்கப்பட்டவர்கள் தயங்குவதற்கு சமூக அந்தஸ்து, வழக்கு போட்டால் பல ஆண்டுகள் வழக்கு நடக்கும், ஊடகங்களில் பெயர் வெளியிடப்படும் என்று அச்சப்படுகிறார்கள் . பாதிக்கப்பட்ட நபரை மேலும் துன்பப்படுத்தகூடாது என்பதை வலியுறுத்தி, காவல்நிலைய அதிகாரிகளை பாலியல் வன்முறை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களிடம் எவ்வாறு பேசவேண்டும் என்பதற்கு பயிற்சி அளித்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் எந்த தவறும் செய்யவில்லை, துன்புறுத்தல் செய்த நபரை தண்டிக்கவேண்டும் என்பதை புரியவைக்கிறோம். பிரச்னையை மீண்டும் மீண்டும் பேசக்கூடாது. ஒருமுறை அவர்கள் பேசும்போதே எல்லா தகவல்களையும் சொல்லமுடியாது என்பதால், அவர்களுக்கு நேரம் அளித்து பேசுவோம். மேலும் வழக்கை விரைவில் முடிப்போம் என்பதை வெளிப்படையாக அவர்களிடம் பேசுவோம். https://www.bbc.com/tamil/india-49421975
  • படத்தின் காப்புரிமை MONEY SHARMA ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் ப. சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பது ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார் தி இந்து குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் என்கிறார் அவர். பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு அளித்த பேட்டியிலிருந்து: கே. முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? ப. இது ஓர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அவர் மீது ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படவில்லை. வேறொரு கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட இந்திராணி முகர்ஜி என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் இதில் தொடர்புபடுத்தப்படுகிறார். இந்த விவகாரத்தில் மத்தியப் புலனாய்வுத் துறை முழுக்க முழுக்க தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. அதுவும் சிதம்பரத்தை கைதுசெய்த விதம் மிக மோசமாக இருந்தது. உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில், இப்படி இரவில் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன? புகைப்பட காப்புரிமை BBC News Tamil BBC News Tamil <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="யூடியூப் இவரது பதிவு BBC News Tamil: நாடே வியந்த ஒரு பொருளாதார வல்லுநர் சறுக்கியது எப்படி? | INX Media Case | P Chidambaram" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.youtube.com/watch?v=w-2Nb9wKYWY~/tamil/india-49433917" width="500" height="269"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை BBC News Tamil</span> <span class="story-image-copyright" aria-hidden="true">BBC News Tamil</span> </span> </figure> சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் அமைப்புகள் இந்த விவகாரத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வேறு அரசுகளிலும் இதேபோல நடந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இப்போதும் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இந்த அரசு செய்த மிகப் பெரிய தவறு இது. கே. சி.பி.ஐ. தேடும் நிலையில் அவர் தானாக முன்வந்து கைதாகி தனது தரப்பை நிரூபித்திருக்கலாமே? ப. அவருக்கு எதிராக கடுமையான பொய்ப் பிரச்சாரம் நடந்துவந்தது. நீதிமன்றத்தின் முன்பாக அவரது முன் ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும்போது அவர் எதற்காக கைதாக வேண்டும் அல்லது சரணடைய வேண்டும்? முன் ஜாமீன் மனு விசாரிக்கப்படுவதற்காக அவர், யார் கண்ணிலும் படாமல் விலகியிருந்திருக்கலாம். அதற்காக தலைமறைவு என்பது 'நான்-சென்ஸ்'. கே. பழிவாங்கும் நோக்கத்தில் கைதுசெய்யப்படுவதாக இருந்தால், காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருக்கிறார்கள். ப. சிதம்பரம் ஏன் குறிவைக்கப்பட வேண்டும்? ப. ப. சிதம்பரம் காங்கிரசின் சிறந்த தலைவர்களில் ஒருவர். நிதியமைச்சராக இருந்தவர். இதனால், அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். தவிர, இவரைக் குறிவைக்க ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவ்வளவுதான். கே. இந்த விவகாரத்தால் காங்கிரசிற்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? ப. இந்த விவகாரம் அவர்களை ஒருங்கிணைத்திருக்கிறது. அவர்களுக்கு ஓர் அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. ராகுல் காந்தி பதவிவிலகியவுடன் தடுமாறிப் போயிருந்த கட்சிக்கு இது ஒரு உத்வேகத்தை அளிக்கும். சிதம்பரத்திற்கு 74 வயதாகிறது. அந்த வயதுள்ள ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா? இந்த விவகாரத்தில் மத்திய அரசு தவறிழைத்துவிட்டது. இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவே செய்யும். கே. தமிழ்நாட்டில் தி.மு.கவினர் சமூக வலைதளங்களில் சிதம்பரம் கைதுகுறித்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். ப. கீழ் மட்டத்தில் தொண்டர்கள் அவ்வாறு கருதலாம். ஆனால், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இதில் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். 2 ஜி வழக்கு விவகாரத்தில் கனிமொழியும் ஆ. ராசாவும் நடத்தப்பட்டவிதம் மிக மோசமானதுதான். ஆனால், அதற்கு சிதம்பரத்தை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. அதனை வைத்து இந்த விவகாரத்தை அணுக முடியாது. படத்தின் காப்புரிமை Getty Images கே. இந்த விவகாரத்தில் ஊடகங்கள் நடந்துகொண்டவிதம் எப்படி இருந்தது? ப. பல ஊடகங்கள் அவர் தலைமறைவு எனச் செய்தி வெளியிட்டன. எப்படி அவ்வாறு சொல்ல முடியுமெனத் தெரியவில்லை. ஒன்று, அவர்கள் ஏமாந்து செய்திவெளியிட்டிருக்க வேண்டும். அல்லது அதிகாரிகள் சொல்வதை வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்திருக்கலாம். பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனே கைதாவதில்லை. முன் ஜாமீன் கோருவார்கள்; மாதக்கணக்கில் ஆஜராகாமல் இருப்பார்கள். பிறகுதான் சரணடைவார்கள். காரணம், நமது நாட்டில் போலீஸ் காவல் என்பது மிக மோசமாக இருக்கிறது. பல சமயங்களில் போலீஸ் காவலில் உடல்நலத்திற்கு ஊறு ஏற்படுகிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் அறிந்திருந்தபோதும் ஊடகங்கள் ஏன் இப்படிச் செயல்பட்டன என்பது தெரியவில்லை. https://www.bbc.com/tamil/india-49433917