Jump to content

முதல்க் காதலின் வலி எதுவரை ?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, 

நான் என்ன இறந்தா விட்டேன்?? எனக்கு எதற்குச் சாந்தி சொல்கிறீர்கள் ? ஓ...என மனதில் இருக்கும் வலியைச் சொல்கிறீர்களா?? அதை நான் சாந்தியடைய விடப்போவதில்லை !

 ஐயையோ.. நாங்க மனச்சாந்தியை தான் சொன்னம்.. ரகு அண்ணா..! தப்பா எடுத்துக்காதேங்க.  :)

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 ஐயையோ.. நாங்க மனச்சாந்தியை தான் சொன்னம்.. ரகு அண்ணா..! தப்பா எடுத்துக்காதேங்க.  :)

சரி, எப்போதுதான் காதலிக்கப்போவதாக உத்தேசம் ?? அந்த டியூஷன் பெண்ணையும் தகப்பனையும் அதற்குப் பிறகு கண்டீர்களா என்ன ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, எப்போதுதான் காதலிக்கப்போவதாக உத்தேசம் ?? அந்த டியூஷன் பெண்ணையும் தகப்பனையும் அதற்குப் பிறகு கண்டீர்களா என்ன ?

அது அப்பவே bye uncle எண்டு கையைக் காட்டிவிட்டுப் போயிட்டுதே!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்க் காதலின் வலி எதுவரை ?

எனது அனுபவத்தில் 

இதற்க்கான பதில் .....முதல் காதலியையும் அவளது கணவனையும் அவர்களின் முதற்குழந்தையோடு காணும்வரை ...

மற்றது அழைத்தவுடன் அலாவுதீன் பூதம் போன்று 

திடும் என்று வந்த நெடுக்ஸ் அண்ணைக்கு நன்றிகள் 

......(எங்கையாவது சிண்டு முடிந்து விடுவதில் நமக்கொரு இன்பம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது அப்பவே bye uncle எண்டு கையைக் காட்டிவிட்டுப் போயிட்டுதே!

திரிக்கப்படாது. திருத்திக்குங்க பாஸ்.. அண்ணான்னு தான் சொல்லிச்சுது. அதுவும் நாங்க தங்கச்சின்னு சொன்ன பின்பு தான்.  :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

என்னால் இதை உணர முடிகிறது. என் நண்பன் ஒருவன் ஒருதலையாய் ஒரு பெண்ணை காதலித்தான். அதுதான் முதல் காதல். ஒரு ஆல்பம் வேண்டி அவள் எரியும் பூக்கள், அவள் மயிர் என்று எல்லாமே சேகரித்தான். நாட்டு பிரச்சனை, இடப்பெயர்வு, அவள் எங்கோ போய்விட அவன் வாழ்கை வேறு ஒரு பாதையில் பயணித்தது. 20 வருடங்களின் பின், அவளை facebook இணைக்கும் பாக்கியம் பெற்றான். அவளும் hi சொல்ல, அவனும் hi சொல்ல, நட்பாக கதைக்க தொடங்கினான். அவள் அவனையும் அவன் செய்த அன்பு தொல்லைகளையும் சொல்லி இருக்கிறாள். இவ்வளவு காலமும் அவளை மறந்து இருந்தவன் வாழ்க்கையில் அவளாக வந்து அவன் நிம்மதியை கெடுத்துவிட்டாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணத்துடன் முதல் காதலுக்கு bye சொல்லிப்போடவேண்டும்

தொலைந்த நினைவுகள் மீட்டி மட்டுமே பாக்கவேணும் . விதி வசத்தால் மீண்டும் சந்திக்கும் போது நீங்கள் விட்டு வந்த நினைவுகள் அங்கும் வாழுவதாக உணர்ந்தால்  உங்களுக்கும் சலனம் வரலாம்.தற்போதைய வாழ்வில் தேவையற்ற பிரச்னைகள் உருவாகலாம்.
தொலைந்தவை தொலைந்தவையாகவே இருக்கவேணும் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பமும் துன்பமும் மனம் எனும் தாய் பெற்றெடுத்த இரட்டைக்குழந்தைகள்.
முதற் காதல் துன்பத்தைத் தந்தாலும்
முற்றிய காதலில் இன்பத்தைக் காண முயற்சி செய்யுங்கள் ரகுநாதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு

உங்களது வலியை  உணரமுடிகிறது...

இந்த திரியின் தலைப்பை பார்த்ததும்

எனது காதலையும் எழதலாம் என ஓடிவந்தேன்

ஆனால் உங்களது வலி அதை எழுதவிடவில்லை......

இரண்டையும் ஒப்பீடு செய்து பார்த்தேன்

(எனதையும் உங்களதையும்)

எனது காதல்கள் சீரியசாக இருந்ததில்லை

அந்த பருவத்து உணர்வு மட்டுமே...

ஆனால் அவையும் தற்பொழுதும் எனது அடிமனதில் உண்டு

ஆனால் உங்களுக்கும் எனக்கும்உள்ளவேறுபாடு

அதை ஒரு உணர்வாக

அந்தநேர விளையாட்டாக நினைத்து நான் கடந்துபோகின்றேன்

கடந்து  போய்க்கொண்டிருக்கின்றேன்

நீங்கள் அதை ஒரு படிக்கு மேலாக நினைத்து  சந்தோசத்தை தொலைக்கிறீர்கள்

பருவங்களும்  பயணங்களும் வாழ்க்கையும் வெவ்வெறானவை

அவை நின்றுவிடுவதில்லை

தொடர்பவை......

அதன் ஓட்டத்தில் நாம் ஓடியாகணும்

நீங்கள் மட்டுமல்ல

நீங்கள் தேடும் நபரும் ஓடியாகணும்

யாருக்காகவும் எவரும் ஓட்டத்தை நிறுத்தமுடியாது

கிட்டத்தட்ட இந்த 25 வருடகாலத்தில் 

எல்லாமே மாறியிருக்கும்

எல்லாமே மறக்கப்பட்டிருக்கும்

எல்லாவற்றிற்குமே மாற்றுவழி கிடைத்திருக்கும்

அது நீங்கள் நினைப்பதைவிட பல மடங்கு சிறந்ததாகவும் இருக்கக்கூடும்..

எனவே மனக்கிலோசம் கலைத்து மகிழ்வுடன் வாழ்க்கையை  வாழுங்கள்

வாழ்க  வளமுடன்...

(ஆரம்பத்தில்  எனது காதல் பற்றி இங்கு எழுதலாம் என நினைத்து எழுதத்தொடங்கினேன். ஆனால் முடியவில்லை. காரணம் அவர்கள் இன்று  இன்னொரு பாதையில் ஓடிக்கொண்டிருக்கிறர்கள்.  என்னைப்பற்றி வேண்டுமானால் நான் எழுதலாம். ஆனால் இனி அவர்களைப்பற்றி  எழுத எனக்கென்ன உரிமையுண்டு?. அத்துடன் தேவையற்ற மனக்கிலேசங்களையும் புடுங்குப்பாடல்களையும் அவை தந்துவிடுமல்லவா??)

பெயர் போட்டா அண்ணா எழுதப் போகிறீர்கள். எழுதிவிட்டுப் போங்கள் அதையும் தெரிந்துகொள்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

நான் பஸ் ஏறியது 90 இல். அப்போது எங்களிருவருக்குமே வயது 17 தான். நான் காதலிக்கிறேன் என்பது தெரிந்ததும் எனது வீட்டார் (எனது தந்தையார் இல்லை, அவர் என்னைக் கைவிட்டு பலகாலம் ஆகிவிட்டது அப்போது) கேட்ட முதற்கேள்வி, "புத்தகம் தூக்கிற வயதில் உனக்குப் பிள்ளை தூக்க ஆசை வந்திட்டுதோ?" என்பதுதான். 

நான் எனது சிறுபராயத்திலிருந்து பல நிகழ்வுகளை மறந்துவிட்டேன். ஆனால் காதலித்த அனுபவங்களும், பட்ட அவமானங்களும் அப்படியே அச்சுப்பிழகாமல் , இன்னும் அதே பசுமையுடனும், ரணங்களுடனும் நினைவில் பதிந்திருக்கின்றன. அந்த நிகழுவுகளில் ஒரு சிறிதளவேனும் அழியவில்லை. கனவுகளில் நான் அழுவது எனக்குத் தெரிகிறது. ஆனால் வேறு எவருக்குமே அது தெரிந்திருக்குமா என்று எனக்குத் தெரியாது.

அவளது வீடு தேடி மனது கனவுகளில் அடிக்கடி சென்றுவரும், அவளைத் தேடும். ஒன்றில் அவள் அங்கில்லை, அல்லது அவள் மாறியிருப்பாள்.

இறுதியாக அவளை ஒரு மனநிலை குன்றிய நிலையில் வைத்தியசாலை ஒன்றில் பார்த்து கனவில் மனம் அழுதது. அந்தக் கனவின் தாக்கம் கலையவே நாட்கள் எடுத்தன.

என்னைப் போல வேறு எவருமே இருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனாலும் பலர் இங்கே சொல்லியதுபோல, அந்த நினைவுகள் அவ்வப்போது சுகமாகவும் இருக்கின்றன என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

அட போங்கைய்யா,

உங்களால் எப்படித்தான் இப்படி இருக்க முடிகிறதோ??

ஒருமுறை உண்மையாகக் காதலித்துப் பாருங்கள். காதலில் தோற்றும் பாருங்கள். அப்புறம் தெரியும் வலி. 

ஆதித்திய இளம்பிறையன்,

மிக்க நன்றி. இதுதான் அந்த உணர்வு !!!! உங்களுக்குப் புரிகிறது.

உங்கள் போல் எழுதுவதற்கு மற்றவர்களுக்குத் துணிவு வருவதில்லை. தொடர்ந்தும் நீங்கள் வருந்தாதீர்கள் அண்ணா. அந்தப் பெண் நிட்சயம் நன்றாக வாழ்வார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் போட்டா அண்ணா எழுதப் போகிறீர்கள். எழுதிவிட்டுப் போங்கள் அதையும் தெரிந்துகொள்வோம்.

என்னைக்கிளறும் பல எழுத்துக்கள் இந்த வாரம் தொடர்கின்றன.. :)

வேண்டாம்

சொல்லிப்போட்டன்.. :icon_idea:

Link to comment
Share on other sites

என்னைக்கிளறும் பல எழுத்துக்கள் இந்த வாரம் தொடர்கின்றன.. :)

வேண்டாம்

சொல்லிப்போட்டன்.. :icon_idea:

விசுகு அண்ணா தனது கதையையும் எழுதினால் அது பலருக்கு உதவியாக இருக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

கலியாணத்துடன் முதல் காதலுக்கு bye சொல்லிப்போடவேண்டும்

உண்மைதான் ஆனால் கனவில் அல்லோ வந்து தொல்லை தருகினம் .

ரகு கொஞ்சம் சென்டிமென்ரான பேர்வழி போலிருக்கு .இது அவரவர் கரெக்டரை பொறுத்தது என்று நினைக்கிறேன் அல்லது காதலின் ஆழம் ,காலம் எல்லாவற்றிலும் தங்கியிருக்கு என்று நினைக்கின்றேன் .

எனக்கு முதலாவதை விட முன்றாவதுதான் மனதை பாதித்தது . :D

Link to comment
Share on other sites

என்னைக்கிளறும் பல எழுத்துக்கள் இந்த வாரம் தொடர்கின்றன.. :)

வேண்டாம்

சொல்லிப்போட்டன்.. :icon_idea:

எழுதுங்க விசுகு அங்கிள்  :icon_mrgreen: 

உண்மைதான் ஆனால் கனவில் அல்லோ வந்து தொல்லை தருகினம் .

ரகு கொஞ்சம் சென்டிமென்ரான பேர்வழி போலிருக்கு .இது அவரவர் கரெக்டரை பொறுத்தது என்று நினைக்கிறேன் அல்லது காதலின் ஆழம் ,காலம் எல்லாவற்றிலும் தங்கியிருக்கு என்று நினைக்கின்றேன் .

எனக்கு முதலாவதை விட முன்றாவதுதான் மனதை பாதித்தது . :D

மேனகா, கோபிகா, தீபிகா ......... எல்லாரையும் எழுதுங்க அண்ணே. ( மேனகாவைப் பற்றி எழுதி கலக்கீட்டிங்க, மற்றவங்களைப் பற்றி எழுதுங்க)  :icon_mrgreen: 

அது அப்பவே bye uncle எண்டு கையைக் காட்டிவிட்டுப் போயிட்டுதே!

அடபாவமே ஆட்கள் கிடைக்ககலை எண்டா ஆவேசமாய் திரியிறாங்க :icon_mrgreen:

பெயர் போட்டா அண்ணா எழுதப் போகிறீர்கள். எழுதிவிட்டுப் போங்கள் அதையும் தெரிந்துகொள்வோம்.

நீங்க எப்ப எழுதுவீங்க??? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவமே ஆட்கள் கிடைக்ககலை எண்டா ஆவேசமாய் திரியிறாங்க :icon_mrgreen:

நாங்க எப்பவும் ரெரரா தான் இருப்பம். பெட்டைக்கு பின்னால எல்லாம் அலையிற கூட்டம் கிடையாது. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவமே ஆட்கள் கிடைக்ககலை எண்டா ஆவேசமாய் திரியிறாங்க :icon_mrgreen:

மற்றவர்களை மதிக்காவிட்டாலும் பறவா இல்ல..மற்றவர்களுக்கும் மனசு என்று ஒன்று இருக்கு என்பதை உணர்ந்து எழுதப் பழகுங்கள் அஞ்சலி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வீட்டுப் பெண்ணும் ஒரு மனிதப்பிறப்புத் தானே என்று ஒரு கணம் தன்னும் நினைக்காத ஒரு ஆணை நேசிப்பது,நேசித்தது..முட்டாள் பெண்களின் மடத் தனம்....ஆண்கள் முடிந்தவரைக்கு உம் மீது விருப்பம்,அல்லது இறுதி மட்டும் வைச்சுப் பார்ப்பேன் போன்ற வசனங்களை பேசவே கூடாது....நான் நிறைய எழுதி மறுபடி,மறுபடி மனதை காயப்படுத்திக் கொண்டு வாழ விருப்பப் பட இல்லை.ஆண்கள் விட்ட தவறுகளை விடும் தவறுகளை பக்கம்,பக்கமாக எழுதலாம்..பிடிக்கவில்லை என விலகி செல்பவர்களிடம் காரணம் கேட்காதீர்....காரணங்கள் அவர்களுக்கு தகுந்தாற் போல் உருவாக்கப்படலாம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, நான் எந்தக் காரணமும் சொல்லவில்லையே? தவறு என்னுடையது என்றுதானே சொல்கிறேன். அதற்குத்தானே பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா தனது கதையையும் எழுதினால் அது பலருக்கு உதவியாக இருக்கும்.. :lol:

உங்களுக்காக

இதோ............

http://www.yarl.com/forum3/index.php?/topic/153858-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/#entry1085203

Link to comment
Share on other sites

என்னுடைய காதல் கதை மிகவும் சோகமானது. நிறைய குழப்பங்கள் நிறைந்தது. அவளையும் அவளுடனான காதல் நினைவுகளையும் என்றும் மறக்க முடியாது. வேறு எவரையும் திருமணம் செய்யப்போவதில்லை. அவள் நினைவுகளுடனே எனது  வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை கழிக்கப் போகின்றேன் .

Link to comment
Share on other sites

ரகுநாதன், எனக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் உங்கள் எழுத்து மூலம் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. பேசாப் பொருளைப் பேசத் துணிந்த உங்களுக்கு நன்றி.

இதேபோன்று திருமணமாகிய குடும்பப் பெண் தனது பழைய காதலனை மறக்க முடியவில்லை என்று எழுதினால் எமது புரிதலும் இதே மாதிரி இருக்குமா ? இங்கு பகிரப்பட்ட கருத்துக்களும் இதே திசையில் இருந்திருக்குமா ? 

அப்படியொரு  விடயத்தை சுமே இங்கு எழுதியதாக ஞாபகம்...

பதில்களும் திரியின் போக்கும் எவ்வாறு இருந்தது..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க எப்ப எழுதுவீங்க??? :icon_mrgreen:

எழுதீட்டாப் போச்சு. ஆனால் அது தனித் திரியில் தான் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.