Jump to content

முதல்க் காதலின் வலி எதுவரை ?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வரும் வயதில் ,நான் காதலிக்கும் மனநிலையில் இல்லை .வேறு திசையில்  காதல் இருந்ததது.இப்போ ஆசைதீர மனைவியை காதலிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, நான் எந்தக் காரணமும் சொல்லவில்லையே? தவறு என்னுடையது என்றுதானே சொல்கிறேன். அதற்குத்தானே பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று கேட்கிறேன்.

ரகு அண்ணா இதில் பதிவிடப்பட்ட கருத்து உங்களுக்காக பதிவிடப்பட்டதல்ல..பொதுவாக எழுதப்பட்ட கருத்து..உங்கள் மனதை கஸ்ரப்படுத்தி இருந்தால் மன்னிச்சு கொள்ளுங்கள்..இப்போ கையில் கொஞ்சம் அலுவலாக இருக்கிறன்...மிகுதி பின்னர் எழுதிறன்...

Link to comment
Share on other sites

முதல் காதலின் தோல்வி ஒரு ஆறாத் துயரம். பொத்தி பொத்தி மனசுக்குள் மறைச்சு வைச்சு இருந்தாலும் நிகழ்காலத்தில் நிகழும் சிறு சிறு சம்பவங்களே மீண்டும் அதனை நிரடிச் செல்லும்.  காதலிக்கும் போது கேட்ட பாடல்கள், தழுவிச் சென்ற குளிர்காற்று, சில சொற்கள் என்று அவை மீண்டும் மீண்டும் மனசுக்குள் முதல் காதலின் வலியை தந்து செல்லும்.

ரகு குறிப்பிட்டளவாறு கனவுகள் தான் மிகவும் வலி தருகின்ற விடயங்கள். இரவில் கனவுகளில் முதல் காதலி வந்தால், அந்த நாள் முழுதுமே பெரும் சுமையாக கழியும்.

முதல் காதலியை மீண்டும் ஒரு முறைதானும் காணாமல் இருப்பது வேதனை என்றால் அக் காதலி தன் வாழ்க்கையை தொலைத்த நிலையில் அதுவும் நாம் குறிப்பிடத்தக்க அளவில் நல்லா இருக்கும் வேளையில் மீண்டும் காணுவது பெரும் வலி தரும் தருணங்கள். நான் கடந்து வந்த / வருகின்ற இத் தருணங்களை ஒரு கட்டுரையில் எழுதுவதை விட ஒரு சிறுகதையாகவோ அல்லது பெருங்கதையின் கிளைக் கதையாகவோ எழுதி மனசை ஆற்ற வேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு.

Link to comment
Share on other sites

எந்தக் காதலியைப் பற்றி சொல்லுறீங்கள், நிழலி?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் காதலியைப் பற்றி சொல்லுறீங்கள், நிழலி?? :D

வில்லன்களை பக்கத்தில வச்சுக்கொண்டு கதை சொல்லக்கூடா ,ஆப்பை இருக்கிவிட்டுருவாங்க :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களிலும் பார்க்க ஆண்களுக்குத்தான் ஆறா காதலின் வடு போல இங்கே. சரி ஒவ்வொருவரா உங்கள் கதைகளை எழுதுங்கள். பொறுமையாகக் காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு எந்தவித காதல் அனுபவமும் இல்லை. பாடசாலை நாட்களில் இனக்கவர்ச்சியால் சில அனுபவங்கள் எற்பட்டதே தவிர ஒருபோதும் காதலில் விழுந்ததில்லை. இதற்கு காரணம் என்னுடய கோழைத்தனமும், பயந்த சுபாவமும்தான். 
 
என்னுடைய திருமணமும் ஒர் ‍‍‍proposed marriage அகும். ஆனால் நான் பெண்பார்கும் போகும்போது பலமுறை மனம் பட படவென அடித்துக்கொள்ளும். வியர்த்துபோகும், நாவறன்டுபோகும், வயிற்றைகலக்கும். படத்தில் பார்த்த்துபோல் நேரில் பல பெண்கள் இருப்பதில்லை. பிடிக்கவில்லை என பெண்ணிடம் நேரிலும் கூற தயக்கம். (எவ்வளவு கற்பனையில் அந்த பெண் தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்து டீ, பிஸ்கட் எல்லாம் என் முன்னால் வைத்து உபசரிக்கின்றாள், அவளை எப்படி பிடிக்கவில்லை என சொல்வது, மனம் வேதனைப்படுமோ என வருந்தியதுண்டு)
 
அச்சந்தர்பத்தில்யாரையாவது காதலித்திருக்கலாம் என யோசிப்பதுண்டு. 
 
பெண்பார்க்க போகும் படலம் மிகவும் ஒர் சங்டமான விடயம். இதை அனுபவித்தவர்கள் இன்னோர் திரியில் அனுபவங்களை பகிர்கவோம்
 
Link to comment
Share on other sites

எனக்கு முதலாவதை விட முன்றாவதுதான் மனதை பாதித்தது . :D

மூன்றாவது தான் உங்கள் முதல்காதல். (அடிக்கவரப்படாது) :lol:

Link to comment
Share on other sites

எழுதீட்டாப் போச்சு. ஆனால் அது தனித் திரியில் தான் :D

எழுதுங்க, நாங்க வாசிப்போம்

காதல் வரும் வயதில் ,நான் காதலிக்கும் மனநிலையில் இல்லை .வேறு திசையில்  காதல் இருந்ததது.இப்போ ஆசைதீர மனைவியை காதலிக்கின்றேன்.

நீங்க சொல்லியயா தெரியணும் அண்ணே, சில திரிகளுக்கை நெடுக அலைவியளே, அப்பவே தெரிஞ்சிகிடோமே  :icon_mrgreen:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, நான் எந்தக் காரணமும் சொல்லவில்லையே? தவறு என்னுடையது என்றுதானே சொல்கிறேன். அதற்குத்தானே பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று கேட்கிறேன்.

நீங்கள் ஏதாச்சும் எழுதினால் வந்து பார்த்து செல்வேன்..எனக்கு வந்து மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு அனுபமும் இல்ல,அறிவும் இல்ல...சும்மா இப்படி யாராவது  பொதுவாக திரி திறந்தால் ஏதாச்சும் எழுத தோன்றினால் எழுதுவது ...  நிறைய எழுத வெளிக்கிட்டாலும் ஏதோ ஒரு காரணி என்னையும் தடுத்துடும்..ஏன் எனில் நானும் விருப்பு,வெறுப்புக்களோடு இருந்து இப்போ ஒண்ணுமே நம்மோடு இல்ல...  வந்த வேகத்திலயே போனதற்கும் நிறைய சொல்ல முடியாத காரணங்கள் இரு பக்கமும் இருந்தது..நான் மட்டும் நிறைய வலிகளை, வேண்டாத பட்டங்களை தாங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டேன் என்பதும் உண்மை..எப்போதும் நான் தனியவே சில சிரமங்களை எதிர் கொள்வது மனதுக்கு சற்றேனும் ஆறுதலாக இருக்கும்..காரணம் காலம் கடந்த பின் வேறு உயிர்களும் எங்களால் கஸ்ரப்பட்டு விடக் கூடாது. அதில்  மிகவும் அவதானமாக இருப்பதனால் எல்லாம் என்னோடையே முடிந்து விடும்.பறவா இல்ல எல்லாம் நன்மைக்குத் தான்

அதனை மனதில் வைத்து தான் எனது முன்னைய கருத்தை முன் வைத்தேன்..மற்றப்படி ஒன்றும் இல்ல...

Link to comment
Share on other sites

எனது முதல் காதலியே எனது மனைவியாகிவிட்டாள் அதனால் காதலினால் வந்த வலி இல்லை. ஆனால் அவளின் முன்னர் என்னுடன் பலவருட காலம் டியூசன் வந்த ஒருத்தியில் விருப்பம்/கவர்ச்சி (crush) இருந்தது. அவளின் பால் நார் ஈர்க்கப்பட்டது எனக்கு பதினோரு வயதாக இருந்தபோது. கூவக் கூடத் தொடங்கியிருக்கவில்லை ஆனால் அவளைப் பிடித்திருந்தது. நான் போகும் பல போட்டிகளுக்கு அவளும் வந்து போவாள், அவளின் நடை உடை பாவனை, குடும்பம் பெற்றோர் படிப்பு திறமைகள் அனைத்தும் என்னுடைய மீடிறனில் இருந்ததாக எனக்குத் தோன்றியது. வசதியான குடும்பம். பெற்றோர் இருவருமே உத்தியோகக் காரர். ஆனால் அவள் என்னிடமோ நான் அவளிடமோ கதைக்கவில்லை. நான் உயர்தரம் படிக்கும் போது என்னுடைய மனைவி எனது பதினெட்டாவது வயதில் அறிமுகமாகி விட்டாள். ஆச்சரியம் என்னவென்றால் பெண்களுக்கும் உருவம், நடை, உடை பாவனை, குடும்பம் என அநேக ஒற்றுமைகள் இருந்தது தான். அவுஸ் வந்தபின்னர் ஒருமுறை அவளுடன் அரைநிமிடம் பேசினேன் அம்மா வாறா என்று விட்டு வைத்துவிட்டாள். எனக்கும் காதலி இருந்த நிலையில் சும்மா இருப்பவளை ஏன் குளப்புவான் என்றுவிட்டு விட்டுவிட்டேன். எனது மனைவிக்கும் இவளைப்பற்றித் தெரியும். கனவுகளிலே வந்ததாக ஞாபகம் இல்லை ஆனால் புணர்ச்சின் போது அவளது ஞாபகம் மின்னல் போன்று வந்து வெட்டியதுண்டு. 

என்னதான் சுத்தியிருந்து சாப்பிட்டு தேநீர் குடித்து கிரிக்கெட் பாத்து A ஜோக்கடிக்கும் அதிஷ்டமுள்ள  குடும்பத்தில் நாங்கள் மூண்டு பெடியங்களும் பிறந்திருந்தாலும் காதல் என்று வரும்போது முதலில படிச்சு முடியடா, நானே கட்டிவைக்கிறேன் என்பது தான் அம்மாவின் கருத்தாக இருந்தது. அந்த வயதில் அதை சீரியஸாக அவர்கள் ஏனோ கதைக்க மறுத்து விட்டார்கள். நான் அசைய மறுத்ததால் எனது முதல் காதலியே எனது மனிவியாகும் பாக்கியம் கிடைத்தது. எனது முதல் கவர்ச்சி காதலியாகி, மனைவியாகியிருந்தால் என்ன நடந்திருக்கும் எனக் கூறத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏதாச்சும் எழுதினால் வந்து பார்த்து செல்வேன்..எனக்கு வந்து மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு அனுபமும் இல்ல,அறிவும் இல்ல...சும்மா இப்படி யாராவது  பொதுவாக திரி திறந்தால் ஏதாச்சும் எழுத தோன்றினால் எழுதுவது ...  நிறைய எழுத வெளிக்கிட்டாலும் ஏதோ ஒரு காரணி என்னையும் தடுத்துடும்..ஏன் எனில் நானும் விருப்பு,வெறுப்புக்களோடு இருந்து இப்போ ஒண்ணுமே நம்மோடு இல்ல...  வந்த வேகத்திலயே போனதற்கும் நிறைய சொல்ல முடியாத காரணங்கள் இரு பக்கமும் இருந்தது..நான் மட்டும் நிறைய வலிகளை, வேண்டாத பட்டங்களை தாங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டேன் என்பதும் உண்மை..எப்போதும் நான் தனியவே சில சிரமங்களை எதிர் கொள்வது மனதுக்கு சற்றேனும் ஆறுதலாக இருக்கும்..காரணம் காலம் கடந்த பின் வேறு உயிர்களும் எங்களால் கஸ்ரப்பட்டு விடக் கூடாது. அதில்  மிகவும் அவதானமாக இருப்பதனால் எல்லாம் என்னோடையே முடிந்து விடும்.பறவா இல்ல எல்லாம் நன்மைக்குத் தான்

அதனை மனதில் வைத்து தான் எனது முன்னைய கருத்தை முன் வைத்தேன்..மற்றப்படி ஒன்றும் இல்ல...

மன்னிக்க வேண்டும் யாயினி,

சரியான புரிதல் இல்லாமல் உங்களின் கருத்துக்குப் பதிலளித்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

உங்களின் சிறிய விளக்கத்தைப் படிக்கும்போதே உங்களின் துயரம் தெரிகிறது. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

ஆனால் ஒரு விடயம், இப்படியே உங்களுக்குள் ஒடுங்கிப் போகாமல் மீதி வாழ்க்கையையாவது சந்தோசமாக வாழமுடியுமா என்று பாருங்கள். நிச்சயம் ஒரு வழி இருக்கும்.

நன்றி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஆனால் கனவில் அல்லோ வந்து தொல்லை தருகினம் .

ரகு கொஞ்சம் சென்டிமென்ரான பேர்வழி போலிருக்கு .இது அவரவர் கரெக்டரை பொறுத்தது என்று நினைக்கிறேன் அல்லது காதலின் ஆழம் ,காலம் எல்லாவற்றிலும் தங்கியிருக்கு என்று நினைக்கின்றேன் .

எனக்கு முதலாவதை விட முன்றாவதுதான் மனதை பாதித்தது . :D

அர்ஜுன் அண்ணா,

அதை சென்டிமென்றா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் மனதை மிகவும் வருத்தும் ஒரு விடயம் என்று மட்டும் சொல்லத் தெரியும். 

நாம் பிரிந்தது என்னால்த்தான் என்கிற குற்றவுணர்வே என்னை காயப்படுத்துகிறதென்றுதான் நினைக்கிறேன். நியாயப்படுத்த முடியாத ஒரு செயல் என்பதால் காரணங்களை நான் தேட விரும்பவில்லை. 

அவள் இப்போது நன்றாக இருக்கிறாள் என்று யாராவது சொல்லமாட்டார்களா என்று ஏங்குகிறேன். அவள் நன்றாக இருப்பதை ஒருமுறை மட்டுமாவது பார்த்தால் நான் அமைதியடைவேன் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால், நான் அறிந்தளவிற்கு அவர்களின் குடும்பம் வசதியானது கிடையாது. நான் பிரிந்து வந்த காலம் கூட இராணுவ ஆக்கிரமிப்பினுள் மட்டக்களப்பு நகர் முற்றாக கொண்டுவரப்பட்டு, இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக காணாமல்ப் போகச் செய்யப்பட்ட காலம். 

ஆகவேதான் அவள் எந்தக் குறையுமில்லாமல் நன்றாக வாழவேண்டும் என்று விரும்புகிறேன்.

அழகி, ஆட்டோகிராப் ஆகிய படங்களைப் பார்த்தபோது நான் அழுதேன். அதில் வரும் கதாப் பாத்திரங்களும், காட்சியமைப்புக்களும் எனக்கு எனது மட்டக்களப்பு வாழ்வை ஞாபகப்படுத்தின. 

அதேபோல, குடகுமலைக் காட்டில் வரும் பாட்டு...., செண்பகமே செண்பகமே........இந்தமான் உந்தன் சொந்தமான்.............எங்கிருந்தோ அழைக்கும் உன்கீதம்....இவைகூட  என்னை வருத்தும் பாடல்கள். ஏனென்றால் இவற்றை மேற்கோள் காட்டி அவள் எனக்குக் கடிதம் வரைந்திருக்கிறாள் !

சரி என்னை விடுங்கள், உங்களின் பிரச்சினைக்கு வருவோம். உங்களின் மூன்றாவது காதல் கல்யாணத்துக்கு முன்பா அல்லது பின்பா ??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதினேழு வயது காதல் இன்று நாற்பது வயதின் பின்னரும் தூக்கத்தை கெடுக்கின்றது என்றால் காதல் என்பதற்கு அப்பால் வேறு சில காரணங்கள் காணப்படலாம். உங்கள் அப்பா மூலம் கிடைக்காத அன்பு, அம்மாவின் பிரிவு (அப்பா எனும் மிருகம் கதையில் இருந்து), இவை இளவயதில் பலவிதமான ஏக்கங்களை ஏற்படுத்தியபோது ஒரு பெண்ணின் அன்பு வலிகளிற்கு ஒத்தடம் கொடுத்துள்ளது போலும். அப்பாவின் ஆதரவும், அம்மாவின் அரவணைப்பும் விட்ட வெற்றிடங்களின் பகுதிகளை இந்தப்பெண் மூலம் கிடைத்த அன்பினால் நிரப்பிக்கொள்வதற்கு மனம் முயன்றதனால் வந்த குழப்பங்களின் தொடர்ச்சி ஆகலாம் இவை.

Link to comment
Share on other sites

முதல் காதல் உண்மை காதலாக (இனக்கவர்ச்சி இன்றி) இருந்தால் அதன் வலி உயிர் உள்ள வரை இருக்கும் ......
எனது அனுபவப்படி என்ன காரணமோ தெரியலை பெரும்பாலான முதல் காதல் வெற்றி பெற தவறி விடுகின்றன. ஆனாலும் அந்த வலிஜை சமாளித்து வாழ்வது தான் வாழ்க்கை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவிக்கும் இவளைப்பற்றித் தெரியும். கனவுகளிலே வந்ததாக ஞாபகம் இல்லை ஆனால் புணர்ச்சின் போது அவளது ஞாபகம் மின்னல் போன்று வந்து வெட்டியதுண்டு. 

ம்ம்ம்

இது போல எல்லோராலும் வெளிப்படையாக எழுதமுடியாது..

ஆனால் அங்கதான் ஒரு கேள்வி வருகுது

இது காதலா?

காமமா? என....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் உச்சிக்குப் போய்விட்டால் பின்பு காமத்தில்தான் விழுந்து இறங்க வேண்டும்...! :)

Link to comment
Share on other sites

ஆனால் புணர்ச்சின் போது அவளது ஞாபகம் மின்னல் போன்று வந்து வெட்டியதுண்டு. 

மின்னல் சில கணம் தானே நிலைக்கும்.

அப்ப...அப்ப...  அதுவும் சில கணம் தானா.. !! ??? 

:D  :D  :lol:  :lol:

Link to comment
Share on other sites

ம்ம்ம்

இது போல எல்லோராலும் வெளிப்படையாக எழுதமுடியாது..

ஆனால் அங்கதான் ஒரு கேள்வி வருகுது

இது காதலா?

காமமா? என....

காதலின் அடிப்படையே காமம் தானே. காதலின்றி காமம் வரலாம் ஆனால் காமமின்றி காதல் வராது. தாம் காதலித்தவருடன்/வளுடன் கற்பனயிலாவது உல்லாசம் அனுபவியாதவன்/வள் உண்டோ?  காமம் அற்ற காதல், தாம்பத்தியம் உப்பில்லாத உணவுக்கு சமன். சாப்பிடலாம் ஆனால் ருசி இருக்காது. எனக்கு வந்தது காதல் என்பதை விட ஒரு கவர்ச்சி என்றுதான் சொல்லுவேன். அதனால் தான்  பதத்தையும் பாவித்திருந்தேன். கூவக் கூடத் தொடங்கியிருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேனே.

மின்னல் சில கணம் தானே நிலைக்கும்.

அப்ப...அப்ப...  அதுவும் சில கணம் தானா.. !! ??? 

:D  :D  :lol:  :lol:

உண்மைதான் அந்த நினைவு சில கணங்கள் தான் நீடிக்கும் ஆனால் மின்னல் போன்று அந்தக் கணம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். நீங்கள் மற்ற விசயத்தப் பத்திக் கேட்டிருந்தால் வெள்ளிக்கிழமை என்றும் பார்க்காமல் வெட்டுக்கிளி கத்தியை வைத்துவிடுவார்

Link to comment
Share on other sites

ரகு

உங்கள் காதல் என் காதலாய் இருந்தது ஆச்சரியமாக இருக்கின்றது.♪அதே வயது அதே பிரிவு சற்று வித்தியாசமாய் ஆண்டுகள் கடந்து தம்பதிகளாய் கண்ணுற்று அக்மகிழ்ந்தேன், காலன் கொடியவன் கடந்தமாதம் அவள் மாங்கலயம் பறித்தான், என்னைத்தொலைத்த காதல் தன்னையும் தொலைத்து நின்றது இன்றுவரை வேதனைதான்,

காதல் வென்றால் அது வாழ்க்கை. தோற்றால் அது காவியம்.

பரணி,

உங்களுக்குக் கிடைத்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் இல்லை. உங்கள் முதற் காதலையை நீங்கள் மீண்டும் சந்தித்ததைத்தான் கூறுகிறேன்.

உங்கள் கதையைக் கேட்டவுடன் ஏனோ புதுக்கவிதை என்கிற படம்தான் கண்முன்னே வந்துபோகிறது. நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

உங்களின் முதற்காதலிக்கு உங்களால் உதவ முடியுமா என்று பாருங்கள் (உங்களின் மனைவியின் சம்மதத்துடன்). 

எனக்கு வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை !

எனது கதை பலரையும் தமது அனுபவங்களைப் பகிர உதவியதை எண்ணி மகிழ்கிறேன்!

காதலின் அடிப்படையே காமம் தானே. காதலின்றி காமம் வரலாம் ஆனால் காமமின்றி காதல் வராது. தாம் காதலித்தவருடன்/வளுடன் கற்பனயிலாவது உல்லாசம் அனுபவியாதவன்/வள் உண்டோ?  காமம் அற்ற காதல், தாம்பத்தியம் உப்பில்லாத உணவுக்கு சமன். சாப்பிடலாம் ஆனால் ருசி இருக்காது. எனக்கு வந்தது காதல் என்பதை விட ஒரு கவர்ச்சி என்றுதான் சொல்லுவேன். அதனால் தான்  பதத்தையும் பாவித்திருந்தேன். கூவக் கூடத் தொடங்கியிருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேனே.

உண்மைதான் அந்த நினைவு சில கணங்கள் தான் நீடிக்கும் ஆனால் மின்னல் போன்று அந்தக் கணம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். நீங்கள் மற்ற விசயத்தப் பத்திக் கேட்டிருந்தால் வெள்ளிக்கிழமை என்றும் பார்க்காமல் வெட்டுக்கிளி கத்தியை வைத்துவிடுவார்

எப்படி இப்படி ??

உங்களுக்கிருக்கும் துணிவே துணிவு. நான் இங்கே எழுதும்போது தயக்கத்துடந்தான் எழுதுகிறேன். 

வெளிப்படையாக , அப்பட்டமாக எழுதும் உங்களைப் பாராட்டுகிறேன் !

நன்றிகள் !

Link to comment
Share on other sites

  • 1 month later...

யாயினி, நான் எந்தக் காரணமும் சொல்லவில்லையே? தவறு என்னுடையது என்றுதானே சொல்கிறேன். அதற்குத்தானே பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று கேட்கிறேன்.

ரகு அண்ணா நீங்கள் உங்கள் காதலிக்கு செய்யகூடிய மிக பெரிய உதவி தேடாமல் இருப்பது தான் .

நடந்தது நல்லாவே நடந்தது !  இப்ப அந்த பெண் உங்களை ஒரு காவாளியா நினைத்து , பழசை மறந்து போய் தன்னுடைய வாழ்கையை இனிதே இன்னொருவருடன் நடத்திக்கொண்டிருக்க கூடும். இப்ப போய் நீங்கள் இந்த பழசை கிளற, அவவுக்கும் தெரிய, ரெண்டு பேரோட குடும்பமும் நடுதெருவுக்கு தான் போக வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு அண்ணா நீங்கள் உங்கள் காதலிக்கு செய்யகூடிய மிக பெரிய உதவி தேடாமல் இருப்பது தான் .

நடந்தது நல்லாவே நடந்தது !  இப்ப அந்த பெண் உங்களை ஒரு காவாளியா நினைத்து , பழசை மறந்து போய் தன்னுடைய வாழ்கையை இனிதே இன்னொருவருடன் நடத்திக்கொண்டிருக்க கூடும். இப்ப போய் நீங்கள் இந்த பழசை கிளற, அவவுக்கும் தெரிய, ரெண்டு பேரோட குடும்பமும் நடுதெருவுக்கு தான் போக வேண்டி வரும்.

நேற்று மறுபடியும் "புதுக்கவிதை" படம் பார்த்தேன்.

அப்படியொன்றும் நடந்துவிடக் கூடாதென்று மனம் விரும்புகிறது.

நீங்கள் சொல்வதும் சரிதான், நான் காவாளிதான் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ரகு இன்னும் வலிக்குதா? இரண்டு கிளாஸ் சிவாஸ் றீகல் அடிச்சிட்டு நித்தா கொள்ளுங்கோ எல்லாம் சரியா போய்விடும்....:D

Link to comment
Share on other sites

பாதச்சுவடு தேடித்தேடி..

கால்கள் ஓய்ந்து போனதே.. :unsure:

நாளும் அழுது தீர்த்ததாலே..

கண்கள் ஏழையானதே.. :o

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.