Archived

This topic is now archived and is closed to further replies.

விசுகு

சிறு வயதுக்காதல் -- இப்ப வேண்டாமே..

Recommended Posts

சிறு வயதுக்காதல் -- இப்ப வேண்டாமே..

 

இளம் வயசில் ஆயிரம் பூக்கள் பூக்கும்

அப்படித்தான் காதலுமா?

யாருக்குத்தெரியும்

அதை காதல் என்பதா?

உணர்வா?

காமமா?....

இன்றும் தெரியவில்லை...

 

இப்படித்தான் அவளுக்கும் எனக்கும் ஒரு இது இருந்தது...

பகிடி விடுவது

நக்கலடிப்பது

நுள்ளப்போவது (தொட்டது கிடையாது)

 

இப்படித்தான் நேரம் போச்சு..

ஒரு நாள் கேட்டாள்

என்னை  பிடிச்சிருக்கா.....?

பதில் சொல்லவரவில்லை

அதற்கு நான் தயாரில்லை........

அதை நான் எதிர்பார்க்கவுமில்லை.....

 

 

ஒன்றும் சொல்லாது  விலகிச்சென்று விட்டேன்

வீட்டுக்கு போன எனக்கு இதே யோசனை...

 

அவளுக்கும் எனக்கும் ஒரே வயசு

நான் படித்து முடித்து வர......??

ஆனால் அவளைப்பிடித்திருந்தது

அதேநேரம் எனக்காக இன்னும் குறைந்தது 10 வருடங்களாவது காக்கணும்

அதற்கு அவளவு குடும்பநிலை இடம் தராது..

 

ஆனால் ஒன்று மட்டும் அன்று தெரிந்திருக்கவில்லை

அவள் எதற்கு தானே அவசரமாக இதைக்கேட்டாள் என்று...??

தொடரும்....

Share this post


Link to post
Share on other sites

என்ன விசுகர்!.... நுள்ள போனீர்களா?  z49.gif:D

Share this post


Link to post
Share on other sites
ஆனால் ஒன்று மட்டும் அன்று தெரிந்திருக்கவில்லை அவள் எதற்கு தானே அவசரமாக இதைக்கேட்டாள் என்று...??
உங்களுக்கு அவள் மேல் வந்த கவர்ச்சி போன்று அவளுக்கும் உங்கள் மீது ஒரு கவர்ச்சி வந்திருக்கும்......அதுதான் அப்படி கேட்டிருப்பாள்(ர்) தொடரட்டும் ...

Share this post


Link to post
Share on other sites

அவவின் காதலுக்கு கண் இல்லை பட்டென்று கேட்டுட்டா...!

 

உங்களின் காதலுக்கு , லுக்கு இருந்திருக்கு.... அதுதான் படிப்புக்கு 10 வருடம், குடும்ப நலவரம் எல்லாம்  70 எம் . எம் . மில் விரிஞ்சிருக்கு...!!  :D

Share this post


Link to post
Share on other sites

ஆனால் ஒன்று மட்டும் அன்று தெரிந்திருக்கவில்லை

அவள் எதற்கு தானே அவசரமாக இதைக்கேட்டாள் என்று...??

தொடரும்....

 
அடுத்த நாள் விடிய நேரத்துக்கு எழும்பி
எனது நண்பரிடம் சென்று விசயத்தை சொன்னேன்..
(அவர் நண்பர் என்பதற்கு அப்பால் எனது ஒன்றுவிட்ட அண்ணர்.  யாழ்ப்பாணத்தில் கடை வைத்திருந்தார். 
என் மீது ரொம்ப பாசம். என் மீது தூசி படவும் விடமாட்டார். நான் என்ன ஆசைப்பட்டாலும் வாங்கித்தருவார். )
அவர் சொன்னது  இன்று இரவு அவளவு வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோயில் திருவிழாவுக்கு வரச்சொல்லி
பனைகள் உள்ள இடத்துக்கு கூட்டிக்கொண்டு   போய் அலுவலைக்கொடுத்திடு என்று....
 
நண்பர்கள் என்றாலே எம்மீது இவ்வாறு தான் அன்பு வைக்கிறார்கள்.
இது போன்று தான் வழி காட்டுகிறார்கள்
இதுவும் ஒருவித பாசமா? இதுவரை புரியாதது இதுவும் தான்.
இப்போ நம்ம தம்பி  சுண்டல் வந்து
இவ்வாறு தான் சொல்வார்... :icon_mrgreen:
 
அவர் இவ்வாறு சொன்னதும்
வயதுக்கோளாறோ என்னமோ
சிறகுகள் முளைத்தது போலவும்
வானத்தில் பஞ்சு போல பறப்பது போலவும்
இன்று இரவு வேறு ஒரு உலகத்தை தரிசிக்க இருப்பது   போலவும்
பறக்க ஆரம்பித்தேன்..
உடம்பில் ஒரு முறுக்கும் மிடுக்கும் வந்தது தெரிந்தது..
அவரிடமிருந்து விலகும் போது
இன்றிரவு போவது என்ற முடிவோடுதான் புறப்பட்டேன்...
 
அநேகமாக கதை எழுதுவோர் இவ்விடத்தில் தொடரும்  போடுவார்கள்...
வாசகரின் கற்பனையைத்தூண்டுவது..
கண்டபடி நினைக்கவைப்பது..
 
நான் நிச்சயம் அதைச்செய்யமாட்டேன்
காரணம் அவள் மீது ஒரு தூசி  படக்கூடாது என இன்றும் நினைக்கின்றேன்....
 
வீட்டுக்கு திரும்ப  வரவர
மனம் குரங்கிலிருந்து இறங்க ஆரம்பித்திருந்தது....
நன்றாக யோசித்தேன்
மனம் இரண்டு முடிவுகளைத்தந்தது
1- போகாதே
2- போனால் தொட்டால் ...கட்டுவேன் என்ற முடிவெடுத்துப்போ..
 
இரண்டாவதே முடிவானது
போகவில்லை...
அன்றிலிருந்து அவளைப்பார்ப்பதை தவிர்க்கத்தொடங்கினேன்............
தொடரும்....
 
 
 
 

Share this post


Link to post
Share on other sites

உண்மையா தொடவில்லையே ....ச்சே கதை சப்பின்டு போயிட்டுது.....தொடருங்கள் தொடுதலை :D

Share this post


Link to post
Share on other sites
இரண்டாவதே முடிவானது
போகவில்லை...
அன்றிலிருந்து அவளைப்பார்ப்பதை தவிர்க்கத்தொடங்கினேன்............
தொடரும்....
 
தவிர்க்கத்தொடங்கியதற்கு இன்னுமொரு காரணமுண்டு..
நண்பர்கள் சிலருடன்   பேசியபோது
என்னையும் அவளையும் இணைத்து ஏற்கனவே ஒரு கதை ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது
அது எனது குடும்பத்தார் வரை தெரிந்தும் இருந்தது....
சின்ன வயது 
அல்லது சிறுபிள்ளை விளையாட்டு என்று நினைத்தார்களோ என்னவோ
என்னோடு எதுவும் பேசவில்லை...
 
அப்படியே
படிப்பு
வகுப்பில் பெட்டைகளுடன் பகிடி
தனகல்
நுள்ளல் என எனது காலம் வேறு ஒரு பக்கமாக   போகத்தொடங்கியது..
 
இடைக்கிடை அவள் பற்றிய செய்திகள் காதுக்கு எட்டும்....
கடைசியாக வந்தது
அவள் திருமணம் முற்றாகி வெளிநாடு போய்விட்டாள் என்று.
ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும்
கொஞ்சம் வலித்தது
காரணம் அவருக்கு அதிக வயசு
குடிகாரர்.....
இவர் தான் வேண்டும் என்று கேட்டு வெளிநாட்டுக்கு அழைத்தாராம்....
 
காலப்போக்கில் எல்லாம் மறைந்து போனாலும் 
இடைக்கிடை அவள் பற்றிய செய்திகள் காதுக்கு எட்டும்.
நன்றாக இருக்கிறார் என்ற செய்திகள் தான் வரும்
நிம்மதி......
 
83 கலவரத்தால் பாதிக்கப்பட்டு நானும் வெளிநாடு புறப்படும் போது
மீண்டும் வந்தது
அவர் வாழ்ந்த நாட்டின் ஊடாக
அவரது வீட்டுக்கு  போய்
அவரது உதவியினால் தான் எமது உறவுகள் எல்லோரும்  வெளிநாடுகளுக்கு வந்து கொண்டிருந்தநிலையில்
எனக்கும் அப்படியொரு ஒழுங்கு செய்தார்கள்
மறுத்துவிட்டேன்
அதேநேரம் பிடியும் கொடுக்கக்கூடாது
இதைத்தவிர்ப்பதற்காக
அகதி முகாம் என்றும்
குளிரும் மழையும் என நான் பட்ட வேதனைகள் கொஞ்சம் அதிகம் தான்..
இருந்தாலும் இந்த அவதி பரவாயில்லை என்று தான்  தோன்றியது..
 
அப்புறம் சந்திப்பு என்று ஒன்று  உண்டல்லவா...
அத்துடன் முடியும்..
இப்ப நேரமின்மையால் தொடரும்...
 

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் அண்ணா. நானும் எதோ முடித்துப்போட்டுத்தான் நிறுத்துவீர்கள் என்று நினைத்தால் இடையில் நிறுத்திவிட்டு .......... சரி நேரம் கிடைத்தால் மிகுதியையும் இன்றே எழுதி முடியுங்கள் :D:lol:

Share this post


Link to post
Share on other sites

வருடங்கள் ஓடின

நானும் திருமணமாகி கிளை பரப்பி  வளர்ந்திருந்தேன்.....

அவருக்கும் பிள்ளைகள் வளர்ந்து

படிப்புக்கருதி கணவர் அங்கேயே இருக்க

பிள்ளைகளுடன் நாடு மாறியிருந்தார்....

பிள்ளைகள் கொஞ்சம் குளப்படி அப்படி இப்படி என கேள்விப்பட்டேன்...

 

ஒரு பெரிய மனிதரின் இறப்புக்காக அவரது  நாட்டுக்கு  போகவேண்டிவந்தது

சொந்தக்காரர் அல்ல என்பதால் இவரது வருகையை  எதிர்பார்க்கவில்லை...

 

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பின் அங்கு கண்டேன்

ஓடி வந்தார்

25 வருடத்தில் அவரில் பெரிதாக மாற்றெமெதுவுமில்லை

பக்கத்தில் வந்ததும் கண்ணைப்பார்த்தேன்

கலங்கியிருந்தது

அந்தக்கண்கள் ஆயிரம் கேள்விகள் கேட்டன...

அந்த பார்வைக்கு பதில் சொல்லமுடியாது

அதற்கு அத்தனை வலிமை

தண்ணி அடிப்பவனாக இருந்தால்

அவ்வளவு தான்........

 

கிட்டத்தட்ட 6 மணி நேரம் அந்த இடத்தில் நின்றேன்

அதிகம் பேசவில்லை

பேச எதுவும் இல்லை

பேசித்தான் என்ன.....?

என்னுடனேயே நின்றார்

.

கொடுமையான சந்திப்பு அது

ஒருவாறு விடை பெற்று வந்தேன்..

 

வழியில் என்னுடன் சேர்ந்து வந்த நண்பன் கேட்டான்

என்ன பழைய ....... ? என

இல்லை சிறிய வயதிலிருந்து தெரியும் என மழுப்பினேன்...

அவன் நம்பியிருக்கமாட்டான் என்று தெரியும்...

 

 

வந்ததும் மனைவியிடம் விடயத்தை சொன்னேன்..

அவருக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும் என்பதால்  எப்படியுள்ளா?

பிள்ளைகள் என்ன செய்கிறார்களாம் என்ற வழமைக்கேள்வியுடன் சரி...

எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்..

யாவும் கற்பனை

முற்றும்...

 

இதை இங்கு எழுத காரணமான ரகுவுக்கு  நன்றிகள்.

இதை எழுதவேண்டாம் எனத்தான் நேற்றுவரை நினைத்திருந்தேன்.

ஆனால் நான் அடிக்கடி இங்கு  சொல்லவதுண்டு

கட்டையில் என்னுடன் சிலதுகள்  போகும் என்று..

சரி

இது அதிலொன்று யாழில் இருக்கட்டுமே  சாட்சியாக..

நன்றி.

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

உங்களுக்கு மனம் கொஞ்சம் இலேசாகி இருக்கும் அண்ணா. எமக்காக விதிக்கப்பட்டிருப்பதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது என்பது மட்டும் உண்மை.

Share this post


Link to post
Share on other sites

இது மட்டுந்தானா அல்லது இன்னும் இருக்கா?
தொடர்ந்து எழுதுங்கள் விசுகு அண்ணா
வாசிக்க நன்றாக  இருக்கின்றது :D

Share this post


Link to post
Share on other sites

உண்மையா தொடவில்லையே ....ச்சே கதை சப்பின்டு போயிட்டுது.....தொடருங்கள் தொடுதலை :D

 

இதுக்கு 2  பேர் பச்சை போட்டிருக்கிறார்கள்..

ஒன்றுமே புரியலே உலகத்திலே..... :lol:  :D

Share this post


Link to post
Share on other sites

யாழில் ஞாபகப் பூக்கள் பூத்துக் குலுங்கும் காலம் இதுபோலும். அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே என்றொரு பாட்டு நினைவுக்கு வருகுது. விசுகு நல்ல அழகாக ஞாபகச்சிறகை விரித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

Share this post


Link to post
Share on other sites

அந்த நாள் பசுமையான ஞாபகங்கள் உங்களிடம் அலை மோதுகின்றனவே விசுகு அண்ணா .

மிகவும் சுவாரசியமாக எழுதியிருந்தீர்கள் . உங்கள் மற்றைய காதல் அனுபவங்களையும் எங்களுடன் பகிருங்களேன் .  :wub: நன்றி

Share this post


Link to post
Share on other sites

அனுபவங்கள் எழுத்தையும் உயிர்ப்புடன் விரித்தன!

 

அது சரி.. பிறகேன் 'யாவும் கற்பனை' என்றொரு வசனம்!!  :o  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

உண்மையோ பொய்யோ கதாசிரியர் தன்னுடைய பெயரைக் கெடுக்காதவண்ணம் எழுதியிருக்கிறார்.

 

 

அண்ணா இதெல்லாம் காதலே அல்ல.. யஸ்ட் ஒரு சம்பவம் அல்லது ஒரு உரையாடல் அவ்வளவே.... உங்களுக்கு அவர் திருமணம் செய்தபோது வலித்தது என்று எழுதியுள்ளீர்கள் அது காதலின் அடையாளம் அல்ல ஒரு மனிதாபிமான ரீதியான இரக்கம் மட்டுமே... அத்தோடு இல்லாத ஒன்றை வெளிப்படையாக எழுதும்போது சில தரவுகளை கொடுப்பதை தவிர்த்திருக்கலாம். உங்களை நன்கு அறிந்தவர்கள் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நபரை அறிய வாய்ப்பளித்துள்ளீர்கள். பெண்ணின் பார்வை உங்களைப்பாதித்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள்..... இயல்பாகவே பெண்களின் பார்வை ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவரக்கூடியது. உங்கள் மனதிற்குள் உங்களுடன் பேசியவள் என்ற நினைவு விட்டகுறை தொட்டகுறையாகத் தேங்கிக் கிடந்ததனால் அக்கணம் அவையே உங்கள் மனதை வியாபித்திருக்கக்கூடும் .......... அசைபோடல் எழுத்தாக பரிணமித்திருக்கிறது. வாழ்த்துக்கள் அண்ணா. :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

நன்றாக எழுதுகிறீர்கள். உங்களின் மற்றைய ஆக்கங்களை நேரம் கிடைக்கும்போது வாசிப்பேன்.

Share this post


Link to post
Share on other sites