-
Topics
-
Posts
-
தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், இந்தியாவை சந்தேகக் கண்கொண்டுப் பார்க்கக்கூடாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், காலத்தாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றின் விழுதுகள் என்கிற நிகழ்ச்சிக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “அரசியல் தீர்வுகளுக்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து, அரசியல் தீர்வு சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. வாய்ப்புகளைப் பார்த்து நாம் ஒருபோதும் அரசியல் தீர்வைத் தேடிப்போவதில்லை.தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அதனைப் பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சிப்போம். அதனை எவராலும் தடுக்க முடியாது. சிங்கள மக்கள், தமிழ் மக்களின் தீர்வுக்கு எதிரானவர்கள் இல்லை. சிங்கள மக்களின் விரும்பமின்றி தமிழ் மக்களின் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். சிங்கள மக்களைப்போல தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகளை வழங்கினால் தான், நாடு பொருளாதார ரீதியாக முன்னேற முடியும். அரசியல் அதிகாரப் பகிர்வினூடாகவே உலகில் உள்ள அனைத்து மக்களும், சமமாகவும், சமாதானமாகவும் வழ்கிறார்கள். இது இலங்கைக்கு புதிமையான விடயமல்ல. சிங்கள மக்களுக்குப் பெரும்பான்மைத் தலைவர்கள் உண்மையைக் கூற வேண்டியக் காலம் விரைவில் வரும். இந்த அரசாங்கத்தை பகைக்க நாம் விரும்பவில்லை. அரசியல் தீர்வைக் காண்பதற்காக, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாம் எப்போதும் உதவத் தயாராகவே இருக்கிறோம். தமிழ் மக்களின் பிரச்சினைகள் காலத்தாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பல தடவைகள் அவருடன் கலந்துரையாடி உள்ளோம். இந்தியாவுக்கு சென்று நாம் பிரதமருடன் கலந்துரையாட உள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடுவோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில தினங்களுக்குள்ளாகவே இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாக வாழ வேண்டுமெனவும், அதற்கான அரசியல் அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கூறியிருந்தார். தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக் கூடாது. தமிழர்களின் பிரச்சினைகள் 70 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்குக்கு அப்பால் சில மாவட்டங்களிலும் போட்டியிடும். மலையக மக்களின் பிரதிநிதிகளுடன் நாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால் எங்களது ஒத்துழைப்பு காரணமாக அவர்கள் பலவீனமாகக் கூடாது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வா உருவாக்குவதற்கு மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதே காரணம். மலையகத்துக்கு வடக்குக்குமான தொடர்பு ஆழமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எந்தவிமானப் பிளவுகளும் இல்லை. ஐ.தே.க அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், ஒற்றுமையின்மை, ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை அறிவிப்பதற்கு எடுத்துக்கொண்டத் காலத்தாமதமே, ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவின் தோல்விக்கு காரணம். புதிய அரசியலமைப்பு கொண்டவருவதில் ஏற்பட்டத் தோல்விக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவுகளே காரணம்.” எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இநதயவ-சநதகக-கண-கணடப-பரககககடத/150-242447
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அண்மையில் இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுடன் நடத்திய சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “பயணிகளுக்கான வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் பொதிகளை நகர்த்தும் பட்டியை அமைப்பதற்கும் இந்தியா 300 மில்லியன் ரூபா கொடையை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. பிராந்திய விமானப் போக்குவரத்துக்காக யாழ்ப்பாணம் விமான நிலையத்தை முன்னைய அரசாங்கம் அவசரமாக திறந்த போதும், அது சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை. அங்கு விமானங்களுக்கு வழிகாட்டும், கட்டுப்படுத்தும், தரையிறங்கும் கருவிகள் கூட இல்லை. எனவே, பிராந்திய விமானங்களை இயக்குவதற்கான வசதிகளை நாங்கள் மேம்படுத்த வேண்டும். இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து விடுத்த வேண்டுகோளின் பேரில், நாட்டை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பதற்கான சாத்தியங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/71036
-
By ராசவன்னியன் · Posted
இல்லை சார், அவருக்கே ஞாபக மறதி அதிகமா போயிட்டுது..! 😋 கிளப்பி வாறேனென ஐக்கிய அமீரகம் வராமல், கடப்பாரையோடு பக்கத்திலிருக்கும் 'செளதி அரேபியா' பக்கம் போய்விட்டால், கதை கந்தலாகிவிடுமென அதிர்ச்சியில் சொன்னேன்.. * UAE is more tolerant than any other gulf countries. -
ர் அவர் ஏற்கனவே அங்கே காம்ப் அடித்திருப்பதால் சுவி அண்ணா அதுவும் படப்பாரையோட போட்டிக்கு வந்தா???😂
-
இன்றைய பெரும்பகிடி கஜன் கிலி பிடித்தாராம் தமிழதேசியக்கடசி தடம்புரள முக்கிய காரணமே இந்த வக்கத்த சைக்கிள் கூடடம் .
-