Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

சிறைக் கதவுகள்

விரும்பியோ

விரும்பாமலோ

எம்மவர்க்கு

பரிச்சியமான

ஒன்று...

சுதந்திரத்திற்காக

சிறை செல்பவர்கள்

அல்ல

பலரும்

சும்மா

இருந்து

சுருட்டுப் பிடித்த

அப்பு பாவம்....

சிறு சில்லு

சுற்றி விளையாடிய

சிறுவனும்

அங்கே..

காரணம்

புலிகளுக்கு

வாகன ஓட்டியாம்...

தனியாய்

இருக்க

பயமென்று

அவனும்

பிடித்தானோ?

என்ன தான்

என்றாலும்

எம்மைப்

பொறுத்தவரை

சிறை சென்று

வருவது

ஒரு கெளரவம்

வெளிநாட்டில்

தஞ்சம் கோரவும்

வசதி...

ஆனாலும்

மனசுக்குள்

தத்துவார்த்த

விசாரணை ஒன்று...

கிறில் வைத்த

கம்பியால்

ஏன்

சிறைக் கதவுகள்?

அப்பாவிகள்

உள்ளிருந்து

பொலிஸ் காரர்

தான் சிறையில்

என்று

ஆறுதல் கொள்ளவா?

ஆட்சியாளர்கள்

கவனிக்க

பூட்டிய சிறைக்குள்

பிறந்த குழந்தையால்

தான்

கம்ச வதம்!

புரியுமோ

உமக்கு?

புரிந்துவிட்டால்

தனி ஈழம்

எமக்கு!!!

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

எமக்கு வீரம் இருக்கிறது..நெஞ்சில்

ஈரமும் இருக்கிறது..

துயர பாரங்கள் சுயமாய்த் தூக்கி

சற்று சோர்வும் இருக்கிறது..

அழிக்க ஆளனுப்பிளால்

மீண்டும் குருதி கொதிக்கும்..

உயிரின் விலை மறந்து

வீருண்டு எழும் புஜங்கள்

எதிரியை அழிக்கச்சீறும்

சிறுத்தையாகும்..இங்கே..

நாடாளும் நரிகள் மீண்டும்....

பாரதமேறி படையனுப்பக்கேட்கும்..

கேட்கட்டும்.. கேட்டதைக் கொடுக்கட்டும்..

இருந்தென்ன மானம் காக்க

இறப்பதென்றானபின்.. பேர்

அரக்கெனென்று நடுங்கி சாவோமா..

இல்லை அஞ்சாது

மானம் போர்த்திய மறத்தமிழ்ப்புலி

Link to comment
Share on other sites

புலி

மூவேந்தர் கொடியில்

பறந்தது

அன்று

ஈழத்து என்

மண்ணில்

பறக்குது

இன்று...

நரியாக சிலர்

நாட்டுக்குள்

அலைய

பரியாகிப்

பார்ப்பவர் வியக்க

வரிப் புலியாகி

கரிகாலன் காட்டிய

வழியில்

சமராடி

தரையோடு கடலும்

கொண்டு

வானுமாகி வளர்ந்த

வீரம்

சிங்கங்கள் சீறினாலும்

பங்கங்கள் வராமல்

காத்த தனி

வீரம்

அங்கங்கள் கிழித்தே

மனச் சிக்கல்கள்

காட்டும்

பகையே

சங்கங்கள் அமைத்து

சங்குகள் முழங்க

வளர்ந்த வீரமடா

எம் வீரம்

அம்புகள் தொடுத்து

ஆக்கினைகள் கொடுத்து

ஆரையடா பயமுறுத்துவீர்?

வம்புகள் விடுத்து

ஈழத்து வளைகாப்புக்கு

வசதிகள் தருவீர்

இல்லையேல்

வரிசையாய்

மடிவீர்!!!

Link to comment
Share on other sites

மலருக்காக மலர் கொடுத்தும்

மலர்..வாடியது..

கொடுத்த மலரல்ல

அதைச் சூடிய மலர்..

வாடலுக்கு காரணம்..

சூடிய மலரல்ல..

கொடுத்த மன்மதன்..

இன்னொரு மலரை

இன்னொரு மலருக்கு

கொடுத்துக்கொண்டிருக்கிறான்..

Link to comment
Share on other sites

கொடுத்துக் கொண்டிருக்கிறான்..

கொடுத்துக் கொண்டிருந்தான்..

கொடுத்துக் கொண்டிருப்பான்...

அன்பை...

அறிவை...

ஆண்டவன் எனக்கு...

ஆனால்..

நான் இன்னும்

வாழ்கின்றேன்...

அன்பற்றவனாக...

அறிவற்றவனாக...

இந்தப் பூவுலகில்...

ம்....

எனது பெயர்

சோம்பேறி!

Link to comment
Share on other sites

சோம்பேறிகளை எனக்குப் பிடிக்காது..

நான் அவர்களைப்பற்றி பேசமாட்டேன்..

நான் அவர்களுக்கு அறிவுரை சொல்லமாட்டேன்..

நான் அவர்களைப் பற்றி பாடமாட்டேன்..

நான் அவர்களுக்காக எதுவும் செய்யவும் மாட்டேன்..

ஏனென்றால் எனக்கு தூங்கித் தூங்கி

மிகவும் அலுப்பாக இருக்கிறது..

மீண்டும்..தூங்கவேண்டும்..

Link to comment
Share on other sites

சுகந்திரமாக தான் இருந்தோம் - அன்று

இன்று

சுகந்திரமின்றித் தவிக்கின்றோம்

சோம்பேறிகளை எனக்குப் பிடிக்காது..

நான் அவர்களைப்பற்றி பேசமாட்டேன்..

நான் அவர்களுக்கு அறிவுரை சொல்லமாட்டேன்..

நான் அவர்களைப் பற்றி பாடமாட்டேன்..

நான் அவர்களுக்காக எதுவும் செய்யவும் மாட்டேன்..

ஏனென்றால் எனக்கு தூங்கித் தூங்கி

மிகவும் அலுப்பாக இருக்கிறது..

மீண்டும்..தூங்கவேண்டும்..

சோம்பேறியின் கவித நன்று :D:D

Link to comment
Share on other sites

சுதந்திரமாக வாழ்வதற்கு

இன்று எனக்கு

விருப்பமில்லை...

உங்களுக்காக...

சுதந்திரமாக நான்

நாளை வாழ்ந்து

பார்க்கின்றேன்..

ஏனென்றால்..

இப்போது அடியேன்

காதலிற்கு அடிமை!

சுதந்திரமின்றி

தவிக்கின்றோம்

இன்று முதல்...

ஏனெனில்..

நேற்று இரவில் இருந்து

நாமிருவரும் காதலிற்கு

அடிமையாகி விட்டோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிமையாகி விட்டோம் - அன்புக்கு

அத்துடன் பாசம் வந்தது

அதற்கும் அடிமையாகி விட்டோம்

அது மட்டுமா - ஆனந்தம் வந்ததே

அதற்கும் அடிமை

அடிமை அடிமை எதற்கும் அடிமை

வாழ்கையின் நீரோட்டம் அப்படி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீரோட்டம் அப்படி -- மனிதம்

நினைத்தால் அதுவும் மாறுமே!

பரிதியின் நீரோட்டம்

பனித்துளியை வருடிச் செல்லும்!

பௌர்ணமியின் நீரோட்டம்

அல்லியையும் அணைத்துச் செல்லும்!

மாவலியின் நீரோட்டம்

வன்னியையும் முத்தமிடும்!

நீரோட்டம் அப்படி -- மனிதம்

நினைத்தால் அதுவும் மாறும்.

Link to comment
Share on other sites

மாறும் எல்லாமே

ஒரு நாள் மாறும்

மாற்றம்

என்பதைத் தவிர

சீறும் புலியின்

சீற்றத்தின் முன்னே

சீயங்கள் (சிங்கங்கள்)

சிதறி ஓடும்

ரணங்கள் ஆறும்

வாழக்கை

ரம்மியமாய் மாறும்

ரகசியமாய்ச்

சேர்த்து வைத்த

என் ஈழக் காதல்

ஐ.நா வில் முழங்கி

உலக வீதியில்

கேட்கும் ...

ஈழம் இன்னொரு

சிங்கப்பூராய்

ஆகும்

எதுவும் தூரமில்லை

எழுந்து நடந்தால்!

Link to comment
Share on other sites

அதுவும் மாறும்..

இதுவும் மாறும்..

நானும் மாறுவன்...

நீயும் மாறுவாய்...

கையில் கொஞ்சம்

காசு கிடைத்துவிட்டால்...

இது தெரிந்தே

கடவுள் நம்மை

ஏழைகளாகப்

படைத்தாரோ?

Link to comment
Share on other sites

எழுந்து நடந்தால்

எனக்கு தெரியாது

என்ன நடக்குமென்று..

பூகம்பம் வரக்கூடும்..

பூமி அழியக்கூடும்..

இதனாலேயே

தொடர்ந்தும்

உங்களுக்காக..

குந்தி இருக்கின்றேன்

ஓரிடத்தில்...

நான் சூரியன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சூரியன்

உலகத்திற்கே

உயிர் கொடுப்பவன் - ஆனால்

எனக்கோ உன்னில் தானே

என் உயிர் தங்கியிருக்கிறதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கியிருக்கிறதே உன்னிடத்தில் பணம்

வங்கியில் கிடைக்கும் வட்டி குறைவென்றே

பாங்காய் பகுத்தறிவுடன் பணத்தை

ஆங்காங்கே ஆயிரத்துக்கு ஐந்து வீதமாய் கறந்து

தங்கு தடையின்றி வரும் பணமும் இங்கே

இங்கிதமாய் குட்டியும் போடுதே

Link to comment
Share on other sites

போடுதே தாளமே என் மனமே..

பூவைதான் கூறினாள் சம்மதமே...

ஆகுமோ..நம்கதை காவியமே..

அழகிலே என்னவள் ஓவியமே....

போடுதே தாளமே என் மனமே..

பூவைதான் கூறினாள் சம்மதமே...

மெல்ல மெல்ல நெருங்கி வந்து

நேசம் பேசுவாள்..

சின்ன சின்ன இதழ்கள் பிரித்து

சிரிப்புக் காட்டுவாள்..

அவள் செய்வதெல்லாம் எந்தன்

இதயம் அள்ளுமே

அவள் சேவைகொண்டு வாழ

ஆசை தாவுதே..

போடுதே தாளமே என் மனமே..

பூவைதான் கூறினாள் சம்மதமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்மதமே மெளனமான பின்னே

எம்மதங்கள் எதற்கு இனி நமக்கு

எம்மதமும் சம்மதம் என்றே இரு

மனங்களின் சம்மதங்களும் இங்கே

சம்பிரதாயங்கள் கடந்த நிகழ்வாய்

அரங்கேறும்

Link to comment
Share on other sites

அரங்கேறும் என்பாடல்

ஒருநாள்

தமிழ்கூறும் உலகெங்கும்

எழுந்தாடும்

திருநாள்

மரமேறும் மந்தியும்

மகிழ்தாடும்

பலவேறு புதினங்கள்

எனைப் புகழ்ந்தெழும்

ஒருவாறு தமிழ்

உலகாளும் - நாம்

உரையாடும்

பாஷை

தமிழாகும்

அழகுத்

தமிழாகும்

Link to comment
Share on other sites

தமிழாகும்...தென்றல்

ஈழத்தில் வீச..

தமிழ் பாடும் மூங்கில்..

ஈழக் காற்றோடு உரச..

தமிழ் பேசும்.. முகில்கள்

ஈழ வானோடு பேச..

ஈழ உறவெல்லாம் அற்றதாலோ..

என் தமிழ்ப் பிள்ளை

மறந்தான் தாயின்

தேன்தமிழை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன்தமிழை மீட்டுவரும்

தூனனைய உறவுகளே!

தூங்காது வடம்பிடிக்கும்

தூயகள நன்பர்களே!

பண்போடு கவிபுனையும்

பரிவாண பந்தங்களே!

இவ் வந்தாதி தொடக்கிவிட்ட

அன்பான சோதரியே!

பாங்குடன் தூவுகின்றேன் -- நும்

பாதங்களில் மலர்கலையே!!

Link to comment
Share on other sites

மலர்களையே மறந்த

கூந்தல் கொண்டு...

பொட்டிழந்த நெற்றியிலே

நீறிட்டு..நிலைக்குத்தும்

வெறித்த பார்வையோடு..

வெள்ளைச்சேலையும்

வெளிரிய உதடும்..

என்னிதயத்தில் பூஜித்த

பூவை கைம்பெண்ணாக்கி

கலங்கவிட்டதார்

விதியா..

சமுதாயமா..

இறைவனா..

இப்படி ஆயிரம் கேட்டாலும்..

காதலை வீட்டில் சொல்லாமல்

அவனை வேறொருவனுக்கு

விட்டுக்கொடுத்த நானும்

ஒரு காரணம்..

இப்போது அவள் விதவையாம்..

எப்போது அவள் வாழ்க்கை

வசந்தமாகும்.. அந்த இளமை

பூத்துப் புன்னகைக்கும்..

இதற்காக..

அவளுடன் சண்டை போட்டு

சமுதாயத்தோடு சண்டை போட்டு

இயலாமல்..

இறைவனே உன்னோடு

சண்டை போடுகிறேன்..

அவள் மறுமண சம்மதத்தை

வாங்கித் தா..

Link to comment
Share on other sites

வாங்கித் தா

ஈழத்தை

தூக்கத்திலும்

துட்டர் பயம்

வந்தெழுப்பி

'வா' வென்று உறுமி

வசை மொழி பேசி

வரிசையாய் ஏற்றுகின்றார்

பஸ்சில்...

வாழ வழியில்லையாம்

கொழும்பில்

கோழைகாள்

எம்மையடா

துரத்துகின்றீர்?

எமனின் கரம்

தொட்டா விளையாடுகின்றீர்?

சிவப்புத் தோல் போர்த்திய

வெள்ளை நரியே

ஈழத்தின் வீதியெங்கும்

சிவப்பை அள்ளித்

தெளிக்கின்றாய்

சிந்திக்கும் திறன்

மறந்தாய்

அலரி மாளிகையில்

குளறி அழுவாய்

பொறு!

ஈழமே

உன் பெறுமாதம்

நெருங்குகின்றது

காலமே

சுகப் பிரசவம்

நடக்கும்

வகை செய்வாய்

உலகமே

குந்தியிருந்து

குறட்டைவிட்டு

கனவில் விழித்து

'ஆ' வென்று கேட்காதீர்

குழந்தைக்கு

வாழத்துச் சொல்வீர்

அங்கீகரிப்பீர்

முடியாவிடின்

ஊமையாவீர்

எம் விதியை

நாமே வரையும்

பிரமாக்களாவோம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.