Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொறியாகியது வாழ்க்கை அதை

உடைத்தான் மனிதன் முயற்சியால்

பொறிவைத்த மனிதன் விலங்கினங்களை

பொறிவைத்தே அழித்தான்

பொறிவைத்த அரசியல் வாதி

மக்களை தினம் ஏமாற்றினான்

பொறிவைக்கும் அரசியல் நியாயங்கள்

அகப்படும் போராளி

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

போராளி

நெஞ்சுக்குள்

தீ...

பொறி

நூறாகிப்

பாயும்

செந்தீ

இவர்

பேர்

சொல்லும்

போர்க்களத்தீ

மண்ணுக்காய்

மடிதலில்

இன்பத்தீ

புலி

அருகில்

வந்தால்

பொங்குந்தீ

தன்குருதி

தாரையாய் சிந்தி

தமிழ் மானம்

காக்கும் தீ

இவர்

விழிபேசும் தீ

பேச்செல்லாம் தீ

விடுதலை காணுமித்தீ

Link to comment
Share on other sites

தீயென நீயிரு

தீட்டப்படாத

மூடநம்பிக்கை

எரிவதற்காய்

தீயென நீயிரு

முகத்தை

முகமூடியால்

மறைப்பவர் தனை

சுட்டேரிப்பதற்காய்

தீயென நீயிரு

சமூதாய சீரழிவை

வேரோடு தீயிட்டு

கொழுத்திட

தீயென நீயிரு

தீண்டியவர்கள்

தீயில் எரிந்து

சாம்ல் ஆகம்

வரை

Link to comment
Share on other sites

சாம்பல் ஆகும் வரை

எங்கள் உடல்

நெருப்பிலே எரிந்தாலும்

எங்கள் கனவு தேசம்

எங்கள் உள்ளத்தை

விட்டகலாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்தை விட்டகலாது தமிழீழம் என்ற உணர்வு

இல்லத்தை கூடியே விட்டகலாதிருப்பது ஆனந்தம்

கள்ளமில்லா மழலையில் ஒன்றியிருப்பது சிரிப்பு

பள்ளத்தில் விழுந்தாலும் கைகொடுத்திடும் நட்பு

தள்ளாத வயதிலும் துணைதருவதோ ஊன்றுகோல்

Link to comment
Share on other sites

ஊன்றுகோல் ஒன்று

வாங்கிவந்தேன்..

ஊரிலிருந்து..

ஆரம்பத்தில் நடை பழக அடம்

பிடித்தது

போகப் போக

பழகிக்கொண்டது..

சில ஆண்டுகளில்

எனக்கு நடை

பழக்கியது..

இன்னும் சில ஆண்டுகளில்

தனியே நடை

போட்டது

இப்போது

ஊன்றுபோல்...

என்னை விட்டு விலகி

வேறாக நின்று

ஆட்டம் போடுகிறது..

புரிகிறது..

ஊன்றுகோலை வாழ்வில்

எல்லைக்கு வந்து

வாங்கியது

என் தவறு..

வாழக்கை முடியும் தறுவாயில்

புது ஊன்றுகோலை

வாங்கி

முறிக்கப்பார்த்த என்னை உலகம்

சொல்கிறது

கிழஉலக்கை

என்று

Link to comment
Share on other sites

உலக்கை இன்றி

உரலிற்கு வாழ்க்கை இல்லை

எதுனை இன்றி

மோனை எடுபடுவதுமில்லை

வழுக்கை விழுந்தால்

காதல் துளிக்கும் வருவதில்லை

உடுக்கை இழந்தால்

கையி;ல் உரைக்க ஏதுமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதுமில்லை எழுத என்றாலும் நல்

எழுத்துக்கள் அமுழ்ந்த சொல்லெடுத்து

கவிதை அந்தாதியில் அழகாய்

கவி வடித்த பரணிக்கு பாராட்டுகள்தனை

வழங்கி செப்புவதில் மகிழ்ச்சி கண்டு

வளமார கவிதைகளை எதிர்பார்த்தபடியே

Link to comment
Share on other sites

எதிர்பார்த்தபடியே காத்திருப்பேன்

ஏமாற்றிடாதே என்னுயிரே

என்று வரும் அந்த நாள் என

எண்ணிக்கொண்டே இருக்கின்றேன்

அந்த இனிய நாள் வரும்போது

அன்போடு வரும் உன்னை

ஆசையோடு கட்டி அணைக்கவே

ஆதங்கத்தோடு காத்திருக்கின்றேன்

என்னவனே எனை நாடி வா

உனக்கான எனை தேடி வா

எனக்காக ஒரு பாடல் பாடி வா

எனைக்காண ஓடி வா

என்றும் உனக்காக

இன்றுவரை காத்திருக்கும்

வெண்ணிலா

Link to comment
Share on other sites

வெண்ணிலாக்கள் உலா வரும்

கவிதைப்பூங்காடே.... நாங்கள்

தூக்கத்தில் கேட்கும் ஏக்கத்தை கூட

நீதான் துடைத்ததாயே..

கால் நனைத்தோம்.. அட

ஓடும் நதியை உன்னில் கண்டோமே..

நாவில் ஊறும் தேனின் துளியாய்த்

தமிழ் சுவையைக் கொண்டோமே....

தமிழ்த் தரத்தால் பெரு வரத்தால்

நாம் யாழைக் கண்டோமே..

பலநிலத்தில்

வேர் துளைத்தும்

இங்கு ஒன்றாய் நின்றோமே..

வெண்ணிலாக்கள் உலா வரும்

கவிதைப்பூங்காடே.... நாங்கள்

தூக்கத்தில் கேட்கும் ஏக்கத்தை கூட

நீதான் துடைத்ததாயே..

நன்றி என்ற சொல்லை

மனிதன் உணர்ந்து கொண்டால்

அதை உரைப்போம்..உரித்தை

உடைய நல்நெஞ்சே..

ஒருகோடி நன்றிகள் மோகன் அண்ணா..

Link to comment
Share on other sites

அண்ணாய் வந்த

சொந்தம்

எனக்காய் தந்த

பாசம்

புரியாது பூத்த

கோலம்

எதனாலோ தேடும்

ஆர்வம்

உணர்விற்குள் புதிய

வேகம்

ஆனந்தம் தந்த

காலம்

எல்லாமே எனக்காய்

இன்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் வாழ்வில் எது என்று கேட்டால்

இன்பத் தமிழ்மொழியை சுவைத்திட இன்பம்

கவிதையினை வடிப்பதும் இன்பம்

இசைகேட்டு மெய் மறந்திடவும் இன்பம்

மனம் விட்டு காதல் செய்வதும் இன்பம்

திருமணத்தில் இணைவதும் இன்பம்

மழலையின் மொழியில் நனைவதும் இன்பம்

இயற்கையை ரசிப்பதிலும் இன்பம்

மழைத்துளியில் குளித்திடவும் இன்பம்

விதவிதமாய் உணவு உண்பதிலும் இன்பம்

இத்தனை இன்பங்கள் இருந்தும் ஏனோ

இல்லாத இன்பத்துக்காக ஏங்கிடும் மனம்

Link to comment
Share on other sites

மனதோடு கரைந்த

சோகங்கள் இங்கே

கண்ணீர் மழை

பொழிய நாளை

கவிதையோடு

கரைகின்ற என்

இதயம் இங்கே

மனதோடு

மறைந்ததேன்

Link to comment
Share on other sites

மறைந்ததேன் என் விம்பம்

முகில் சூரியனை மறைத்தபோது

முறைத்தேன் முகிலதனை

முரண்டு பிடிக்காமல்

முகில் சூரியனை விட்டு

மறைந்தது கண்டு

மனதுக்குள் சிரித்தேன்

மழலை நான்.

Link to comment
Share on other sites

மழலை நானாவேன்..

மயங்கும் மலர்த்தொட்டில் நீயானால்..

நிலவும் நானாவேன்

நீந்தும் நீலவான் நீயானால்..

துள்ளும் மீன் நானாவேன்..

தாலாட்டும் கடலலை நீயானால்..

புன்னகை நானாவேன்..

உரசும் பூவிதழ்கள் நீயானால்..

கவிதை நானாவேன்..கண்மனியே..

தமிழ் வார்த்தைகள் நீயானால்..

Link to comment
Share on other sites

தமிழ் வார்த்தைகள்

நீயானால்

அழகாய் கவி படைத்து

தமிழுக்காய் நாலுவரி

நான் உரைத்து

அழிகின்ற சமூகத்தை

ஒரு தரம்

சிந்தித்துப் பார்ப்போன்

உன்னை வைத்தே

Link to comment
Share on other sites

உன்னை வைத்தே

ஓவியம் வரைந்தேன்

கண்ணை பார்த்து

பார்க்க பயின்றேன்

மூக்கை முகர்ந்தே

மூச்சுவிட கற்றேன்

குரலைக் கேட்டே

கதைக்க ஆரம்பித்தேன்

பற்களைப் பார்த்தே

ஒளியைக் கண்டேன்

உதட்டை ரசித்தே

புன்னகைக்க தெரிந்தேன்

முடியை மோந்து

வாசனை அறிந்தேன்

நீ ஒரு தேவதையா?

இல்லை என்

உணர்வுகளின் குருவா?

Link to comment
Share on other sites

உணர்ச்சிகளின் குருவா?

இல்லை

உணர்ச்சிகள்

அற்ற இதயமா?

இல்லை

வலிகொண்டு

செதுக்கப்பட்ட சிற்பமா?

இல்லை

சிதைக்க

முடியா கற்பனையா?

இல்லை

கல்லறையை

மட்டு் நேசிப்பவளா?

இல்லை

உணர்ச்சிகள்

விற்று வாழ்கின்றாளா?

யார் இவள்?

புரிந்து கொள்ளாக்

கவிதை

Link to comment
Share on other sites

புரிந்து கொள்ளாக்

கவிதை

உன் புன்னகை!

Link to comment
Share on other sites

மூன்றாம் பிறை

வளர்ந்தால்

பெளர்ணமி

பெளர்ணமி இவள்

வானத்தின்

இருளைப்போக்க

முழு நிலவானாள்

ஐயோ பறிதாவம்

இவள் வாழ்கை

இருட்டுக்குள்

Link to comment
Share on other sites

இருட்டுக்குள்

இருப்பதாக சொல்பவர்களே

ஒரு விளக்கேற்றும்

அறிவில்லையா?

அறிவு இருட்டுக்குள்

இருக்குமெனின்

சிந்தனைத் திரிதூண்டியை

திருகுங்கள்

அடுத்தவரின்

அனுதாபத்திற்காக

ஏங்கின்றீர்கள்

வேண்டாமே...

இந்தச் சமூகம்

வேதனைப்படும் போதும்

வேர்வை வடிக்கும் போதும்

வேடிக்கை பார்பதோடு சரி

தொட்டு அணைத்து

தோளில் சாய்த்து

ஆறுதல் தராது

அறிவுரைகள் தருவதில்

என்ன பயன்?

வேண்டாம் வெங்காயமும்

இந்த வேடிக்கைச் சமூகமும்!

Link to comment
Share on other sites

வேடிக்கை சமூகமும்..

விபரீதவிளையாட்டுகளும்..

விதைத்த வினைகள்..

முளைவிட்டு கிளைவிட்டு

வேர் துருத்த

வேதனை புரியும்..

புரியும்

இம்மதந்தர்க்கு

இதனால்தான் வலியென்று?

Link to comment
Share on other sites

உள்ளிருந்து உதைத்துபோது வலியறியவில்லை

உருண்டு வந்து விழுந்த போது மொழி புரியவில்லை

பல் விழுந்து முளைத்தபோது சொல் வலிக்க கண்டேன்

உன் நிழலில் வீழ்ந்த போது உள்வலியும் உணர்ந்தேன்

தாய்மடியில் தூங்கியதால் நோய் தழுவவில்லை

வேரறுந்து வந்தனால் இலையுதிர்ந்து நின்றேன்

தரமிழந்து போனாலும் தமிழ் மறந்து நில்லேன்

சிரமறுத்து நீ எறிந்தாலும் என் தாய் மொழி அறிவித்துச்செல்வேன்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.