Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

முடியவில்லை

நினைப்பதை

தடுப்பதும்

தடுப்பதை

நினைப்பதும்

[கிகிகிகிகிகி]

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

அட..பின்னிட்டியள்... :lol:

நினைப்பது

நான்..

நினைக்காதது

அவள்..

நீங்கி சென்ற

நினைவுகள்

மட்டும்..

மனதில்.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மனதில் நினைத்து

மலரால் பூசிக்கின்றேன்

கைகள் கூப்பி தொழுவேன்

நேரில் உனை காணும் போது

ஏனெனில் நீதான்

என் இதயத்தில்

உறையும் கடவுள்

Link to comment
Share on other sites

கடவுள் என்றும்

கற்சிலை..

என்று நான்

நினைத்ததுண்டு..

இன்று தானறிந்தேன்

கல்லா இருப்பதும்..

கடினமென.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கடினமென நினைக்காமல்

கடித்தேன் கல்லை

முடியாமல் தவித்த

படித்த முட்டாள் நான்

Link to comment
Share on other sites

முட்டாள் நான் என

முட்டிடும் நிலவே

நிலவிலும்

பெண்மை உள்ளது

என..

அறிந்தேன்..

நிலவு

என்னை

சுட்டெறித்த

போது.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நிலவு

என்னை

சுட்டெறித்த

போதுதான்

உணர்ந்தேன்

நிலவிலும்

சுடும் தன்மை

உண்டு என

அப்போதே

நிலவை ஏறிட்டு

பார்த்தேன்

நிலவு சொன்னது

என்னை முறாய்க்காதே

எனக்கு ஒளிதந்த

சூரியனை முறாய்த்துபார்

அவனே என்னையும் சூடாக்கி

என்னைப் பார்த்த

உன்னையும் சுட்டெறித்தான்

அன்பே

Link to comment
Share on other sites

அன்பே

என்றாள்

ஆருயிர்

என்றாள்..

நானும்

அவளின்

வார்த்தையில்..

சொக்கி

விட..

இன்று

அவள்

சிரிக்கிறாள்..

இன்னொருவருடன்... :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:lol::lol::lol::)

இன்னொருவருடன்

இன்பத்தோடு செல்பவளா

உன் காதலி

அச்சோ அச்சோ

அவளை நினைத்து

புலம்பாதே

அவள் உனை ஏமாத்திய

அன்றைய காதலி

இன்று இன்னொருவன் மனைவி

நாளை........ :)

Link to comment
Share on other sites

நாளை

விடியும்..

விடியலுடன்

அவள்

விழி வதனம்

விழிக்கும்..

அந்த விழியில் தெரிவது

யார் முகம்..

என்பது

தெரியாம

தவிர்கிறது..

என்

விழி.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என் விழி

உனைத் தேடி

தவிப்பதை நீ

தெரியாமல்

மறைகிறாயே

என் மொழி

உனைப் பாட

துடிப்பது

புரியாமல்

தண்டிக்கிறாயே

அதற்காக நான்

விழி இருந்தும்

குருடியானேன்

மொழி இருந்தும்

மெளனியானேன்

இப்போ உனக்கு

சந்தோசமா சொல்

Link to comment
Share on other sites

சொல் சொல்

என்கிறாள்..

சொல்லை

தேடுகிறேன்..

சொல்ல..

ஆனால்

என்ன..

சொல்ல

என்பது..

எனக்கு

தெரியவில்லை

அன்று..

இன்று

சொல்லை

சொல்ல

தேடினேன்..

அவளை

காணவில்லை..

என் வாழ்வில்

அவளும்

ஒரு

சொல்லே.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சொல்லே போதுமடி!!

வாழும் என் உயிர் உந்தன்மடி!

விழிகள் பார்த்து இதயம்

சேர்த்து இணைந்தோம் அன்பே

வாழும் காலம் வரையில்

உனக்காய் வாழ்வேன்!! உறவே!

சொர்க்கம் மண்ணில் உன்னால்

வந்தது எந்தன் பெண்ணே!

இமையாய் இருப்பேன் உனக்காய்

பிறந்தேன்!! வா என் கண்ணே!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வா என் கண்ணே

வாடி இருப்பது ஆகாது!

கூடிப் பேசி மகிழப்

பல கதையிருக்கு

ஓடிப் போய் ஒழியாதே

என் கண்ணே...

மாடி வீட்டழகே

தலை அண்ணாந்து

பார்த்து

உன்னழகைப் பருகுகையில்

நிலா என்னவென்று

எனைக் கேட்குதே...!

சூடிக் கொள்

இந்தா புது மலர்...

நீ ஆடி அசைந்து

வருகையில்

உன்னழகெல்லாம்

கை நீட்டி

எனை அழைக்குதே!

உன் மடி மீது

தலைவைத்து

நான் உறங்க

விடிகின்ற இரவை

'சீ விடியாதே' என்று

நீ சிணுங்க

மறுபடியும் வாடும்

இந்த மலர்

இரவோடு இரவாக

மலரவே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலரவே உன் முகம் கண்டேன் அதில் தாமரையாய் உன் விழிகள்

மலரவே உன்குமிழ் இதழ்கள் அன்ரலர்ந்த விழிகளில் அன்பும்

மலரவே உயிரே உன்னால் பாதம் பட்ட அகலிகையாய் நான்

மலரவே மனிதனாய் ஆனேன் இன்று என் மனபாரம் போனதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போனதே .....என் வெண்ணிலா

மீண்டும் வருமா? வாழ வருமா?

நீயும் நானும் சேர்ந்து தான்

புது உலகம் காணலாம் ...நீ வா

நீ வா .....என்று தொடங்கவும்

Link to comment
Share on other sites

நீ வா நிலா

நீ 'வானிலா'?

எங்கிருந்தாலும்

நீ வா நிலா...

ஏனிப்படி

ஏணிப்படியாய்

நிற்பவர் தமை

எட்டி உதைக்கிறாய்?

நானிப்படி

எழுதுவன் என்று

நீ நினையாமல்

இருந்ததும்

தப்படி...!

பல படியேறி

பரமனைத் தொழுதென்ன?

அவன் சொன்னபடி

வாழாமல்...

இப்படிப் பல

சொல்லிப் புலம்புவன்

நான்...

மேற்படி கவிதையில்

முடித்தது போல்

அழகிய வார்த்தையில்

உன் கவி முடிந்தால்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் மலைகணுக்கால் அளவு

மலைப்பவனுக்கு கணுக்கால் மலை அளவு

முடிந்தால் முயச்சி செய்வதல்ல முயற்சி செய்

தோல்வியும் வேதமாகும்

முடிந்தால் மரணத்தை வெல்

அதைவிட புகழுடன் மரணி வாழ்வாய் நீ

முடிந்தால் உன் மனதை வெல் அது தான்

மரணத்தை வெல்லும் மந்திரம்

Link to comment
Share on other sites

மந்திரம் சொல்லின...

கண்கள்..இவர்தாமோ

இந்திரன் தேசத்துப்

பெண்கள்....

தந்திரம் செய்திடும்

புன்னகை..கொல்லுமோ

சுந்தரம் மேவிய

கன்னிகை...

வந்தனம் சொன்னவள்

யாரவள்...வளைந்தாடிடும்

சிந்தனை தின்றிடும்

தூரிகை...

சொந்தமாய் சொத்துகள்

கொண்டவள்..என்னைச்

சந்திரனோ எனச்

சொன்னவள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னவள் வார்த்தைக்காய் தவம் இருக்கும் இவன்

சொன்னவள் மனதில் சிலையாய் இருக்கிறாள் அவளுக்காய்

சொன்னவள் யாரோ வார்த்தையை நம்பிய மாரிசன் மானாய்

சொன்னவள் நம்பியது அவன் தப்பா அவள் தப்பா

Link to comment
Share on other sites

தப்பா தப்பு

செய்து

தப்புத் தப்பாய்

சிந்தனை செய்து

தப்புக்குள் தப்பில்லா

சரியைத் தேடி

அழைகின்றேம்

ஆணும் பெண்ணும்

தப்பில்லா வாழ்விற்காய்

மனிதன் தேடி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனை தேடி அலைகிறேன்

இருந்தால் சொல்கிறேன்

இறைவன் கேட்கிறான்

மனிதன் இருக்கிறானா ?

கள்ளமில்லா பிஞ்சு உள்ளம்

குள்ளனரிக்கூடம் நடுவே

திக்கி திணறினாள்

மனிதம் வாழுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் வாழுமா மனிதன் விலங்காய் மாறும் போது

மனிதம் வாழுமா என்று எங்கே தேடுவாய் மானிடா

மனிதம் வாழும் இடம் எங்கே உயிர் கொடுத்தோமோ அங்கே

மனிதம் வாழுமிடம் பெற்றவள் மடி எனும் கோவில்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் தான் ஆலயம் ,அது தான் உன் இதயம்

உள்ளம் எனும் ஆலயத்தில் தெய்வம் வேண்டும்

என் அன்பே வா நீ இல்லாத் மாளிகையை

பார் மகளே பார் ,உன் நினைவில் வாழ்கிறேன்

புலம் பெயர் தேசம் சென்றாலும்

புதுமைகள் பலவும் கண்டாலும்

தாய் நிலம் என்றும் வர வேண்டும்

தாய் அன்பை எனக்கு தர வேண்டும்

Link to comment
Share on other sites

தர வேண்டும்

நீ

உன் பூ முகம்

என் கையில்...

தாள் மீது

கை கொண்டு

கன கவிதை

எழுதியது போதும்

உன்னிதழ் மீது

என்னிதழ் கொண்டு

எழுத வேண்டும்

சில கவிதை!

குங்குமம் உன் முகத்தில்

அள்ளி பூசியது போல்

நாணமென்ன பெண்ணே

நம்மிருவர் நெஞ்சும்

சங்கமம் ஆக

நேரம் பார்ப்பதுமென்ன?

போது மடி

உன் பொய் விளையாட்டு!

கோது மடி

என் விரல்கள்

உன் கூந்தல் தனை

நீ அருகில் வந்தால்!

ஓது மடி

என் நா

பல காதல் பா...

சம்மதமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.