Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி நீங்களா எழுதினீங்கள் சூப்பராய் இருக்குது...பாராட்டுகள்...தொடர்ந்தும் எழுதுங்கள்

ரதியவர்களுக்குப் பாராட்டி ஊக்கப்படுத்துகின்றமைக்கு நன்றிகள்.முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 1.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிற்பீரா நேர்கண்ட சிந்தனையுடன்

கற்ற கல்வி பார் எங்கும் பரப்பிட

நல்லதாய் நாலு வார்த்தைகள் உமிழுங்கள்

நலிந்து போன நல் இதயங்கள்

நா வரண்டு போகும் முன்னே

நவின்றிடுவீர் செல்வமதை விருப்புடனே

Link to comment
Share on other sites

விருப்புடனே எல்லையில் காத்து நின்றோம்!

சா வரினும் விழி பூத்து நின்றோம்!

காலமது காலைவார... - ஊர்

எல்லையையும் தாண்டி வந்தோம்!

காத்துநின்ற காரணத்தால் இரும்புக் கூண்டின் உள்ளே வைத்து

கதறக் கதற செத்துப் போக செந்நீரில் ஊற வைத்தார்!

பதறிப் போய் சொந்தமெல்லாம் எமக்காய்க் கதறுமென்று,

இன்னும் காத்திருக்கும் எஞ்சிய எம் (ஏ)மாந்தர்!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(ஏ)மாந்தர் பார்க்கும் மாந்திரீகங்கள்

சாத்தான் ஓதும் சாத்வீக சாத்திரங்கள்

பார்த்தால் தலை சுத்தும் தட்சணைகள்

வேண்டாம் என தள்ளி வைத்தவனே

வாழ்க்கையில் முன்னேறும் மனிதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் ஒரு மனிதனை

தேடுகிறான் மனித நேயங்களை

குழி தோண்டி புதைத்துவிட்டு

இன்னுமொரு மனிதன் அப்

புதை குழிகளின் மேல்

மனிதர்களை புதைக்கிறான்

இன்னுமொரு மனிதனின்

நப்பாசை புதைத்த புதைகளில்

இருந்து புது மனிதன்

மனித நேயங்களுடன்

பிறக்கமாட்டனா என்ற ஏக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் அறிவை

மழுங்கடிக்க வைக்கும்

காதல் துவர்ப்பாயிருந்தது

காதலிக்க தொடங்கும்வரை

இனித்தது காதலிக்கும் போது

கசந்தது ஊடல்கள் கூடிய போது

உறைத்தது ஏமாற்றப்படுகிற போது

கரித்தது கைவிடப்பட்ட போது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனை மனிதன்

அடிமை கொள்கிறான்,

அழிக்க முயல்கிறான்,

மனிதனை மனிதன்

சுரண்டி வாழ்கிறான்

அன்றுதொட்டு இன்றுவரை

மனிதனே மனிதனின்

முதன்மையான எதிரியாக

விளங்கி வருகிறான் - தேசிய தலைவர்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வருகிறான் பகைவனவன்

பல்வேறு வேடமுடன்

தமிழரே புரிந்து கொண்டு

தவமிருந்த தலைவனது

தடம் தொடர உறுதி கொள்வீர்!

காலம் போடுகின்ற

புரியாத கணக்கினிலே

விலையாகிப் போனோரை

எட்டப்பனைப் பேசுதற்காய்

கட்டப்பொம்மன் எடுத்தாண்ட

சொல்லிய வரிகளது

இவருக்கும் பொருந்துமென்று

சொல்லியா புரிய வேண்டும்!

வேண்டுமெக்கு ஈழமன்றோ

விடுவித்தல் எம் கடனன்றோ

தாழ்நிலையைத் தகர்த்தெழுவோம்

தமிழீழ மண் மீட்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மண் மீட்போம்!

தவழ்ந்து திரிந்த காலத்திலிருந்து,,

தந்தை செல்வாவும்,,

தானைத் தளபதிகளும்,,

திரும்பத் திரும்பக் கூறினர்,

தமிழீழ மண் மீட்போம்!

ஆண்டுகள், தசாப்தங்களாக,

ஆயிரமாயிரமாய் உயிரிழந்து,

ஆயுதங்களை மவுனித்து,

அகிம்சையின் பாதையில்,

உறுதியுடன் நிற்கிறோம்!

ஆனாலும்,

நாங்கள் உழுத வயல்களில்,

சிங்களம் விதைக்கின்றது!

எங்கள் கரங்களே! :wub:

கண்களைக் குத்துகின்றன!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்தேனே நான் இறந்தேனே-என்

இனம் அழிவது கண்டு தினம் இறந்தேனே

இறந்தேனே தினமிறந்தேனே -என்

அண்ணன் வருவானென்று இருந்தேனே

இருந்தேனே தவமிருந்தேனே -மனம்

மரத்தப் போகும் வரை தவ மிருந்தேனே

தவ மிருந்தேனே நான் இருந்தேனே-என்

தலைவன் நீடு வாழத் தவமிருந்தேனே

தொடருங்கள் நண்பர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை வள மண்ணின் வீரத்திருமகன்

வில்லென வருவான் மீண்டுமொரு முறை

சொல்வது என்னுடன் கோடித் தமிழர்கள்

நல்லதே நடந்திடும் நாடும் மலர்ந்திடும்

முள்ளி வாய்க்கால் முடி வல்ல மௌனம்

மெள்ளக் கலைந்திடும் விரை வினில் மௌனம்

துள்ளி எழுந்திடும் தமிழ்ப்படை வீரம்

தள்ளி ஓடிடும் சிங்களம் ஓரம்

சூரியத் தேவனின் சங்காரம் முழங்கும்

ஆரியச் சிங்களத்தின் சங்கு நசுங்கும்

சீரிய தலைவனின் சிரசது நிமிரும்

பாரிய படையுடன் சிங்களம் ஒதுங்கும்

முல்லை மண் சிரிக்கும் ஈழத்தில் முரசொலிக்கும்

வல்வை மைந்தனின் சாணக்கியம் ஜொலிக்கும்

எல்லைகள் நிமிரும் எக்காளம் முழங்கும்

பல்லாண்டு பிர பாகரன் நல்லாட்சி நடக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சி நடக்கும் _ இனி

நாடும் விலங் கொடித்திடும்!

புலம் பெயர்ந்தோர் ஒற்றுமை காண

புலர்ந்தது காண் பொழுது இன்று!

தீயவர் யாவரும் தொலைந்திட

ஏற்றிடுவோம் நிரைத் தீபங்கள்!

தேசமெங்கும் வீறுகொண்டெழ வே

வந்தது கார்த்திகை இருபத்தேழு !!!

(தயவுடன் அந்தாதி கவனித்து கவிதை யாப்பீர்)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை இருபத்தேழு

ஒன்றும் காலப் பெயரல்ல

தேசத் துயரத்தை

துடைத்தெறியும் துணிவோடு

தமிழீழத் திசையெங்கும்

தம்மை யுருக்கியோரின்

பாதச் சுவடுகளில்

ஒளியேற்றி வழிபட்டு

உங்கள் இலட்சியத்தை

உயிருள்ளவரை தொடர்வோமென

இப்பூமிப் பந்தனிலே

வாழும் தமிழினமே

உறுதி பூண்டெழுகின்ற

உன்னத எழுச்சிநாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னத எழுச்சிநாள்!

தேரோட்டிப் போரறைந்து,

வீரம் விழைத்தவன்,

சோரம்போன கதையாகி,

பாரெங்கும் அடிமைகளாய்,

பறையறைந்து,

தூங்கிக் கிடந்தவன்,

துயில் கலைந்த நாள்!

விழியில் நெருப்பேந்தி,

பழியகற்றிய வீர்ரர்களை,

பாரினில் நினைவிலேந்தித்,

தீபமேற்றும் நாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாள் எம் மா வீரர் நாள்

நாள் கார்த்திகை 27ம் நாள்

நாள் தியாகத்தின் நினைவு நாள்

நாள் நா மாராதிக்கும் நாள்

நாள் நாம் தீபமேற்றும் நாள்

நாள் தமிழ் வீரம் கூறும் நாள்

நாள் தமிழன் மானம் காத்த நாள்

நாள் நாம் சபதம் பூணும் நாள்!

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நாள் நல்ல நாள்!

நினைப்பதில்லை என்றும்

இன்றும் மறந்ததில்லை யதனால்!

மெல்லிய தென்றல்

மெல்லியலாள் மேனி தழுவ

"கசோரினா " கடலலைகள்

கால் கொலுசோடு கதைபேச

அநியாயத்துக்கு ஒரு நண்டு

ஆர்வமுடன் உன் கால்கடிக்க

"பாட்டா "வால் அதையடித்து

பட்டென்று எடுத்தெறிந்தாய் !

பார்த்தேன் ரசித்தேன்

பூவொன்று புயலானதை !!

Link to comment
Share on other sites

  • 5 months later...

பூவொன்று புயலானதை

புன்முறுவல் மாறாமல்

நான் ரசித்தேன்

ஏன் என்று நான் சொல்லவும்

வேண்டுமோ?

கட்டிலறைக் கதைகள் எல்லாம்

உமக்கெதற்கு

காதை மூடி

கதவை மூடி போங்கள் ஐயா

பொழுது விடியப் போகுது!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்தேனே உனை எண்ணி தினம் இறந்தேனே

இறந்தேனே என் இறப்பில் எனை மறந்தேனே

மறந்தேனேயெனை ஊனுறக்கமெலாம் துறந்தேனே

துறந்தேனே ஆணவம் துறந்தபின் மீண்டுமுனக்காய் பிறந்தேனே

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தேனே நான் !   பிறந்தேனா நான் !!

 

சின்னச் செடியொன்று வாடி நின்றது

அப்பா அதுக்கும் நீர் விட்டார்

அருகில் நின்ற கள்ளிக்கும் ,

அங்கு வந்த ஜிம்மிக்கும் ,

அதே வாத்சல்யம்.

 

நானும் தண்ணி ஊத்தினேன் ஒருநாள்.

கள்ளியை கவனிக்கவில்லை .

வாலாட்டி வந்த ஜிம்மிக்கு

வாளியால் ஓர் அடி.

 

முற்றத்தில் குந்தி இருக்கின்றோம்.

கலயத்தில் கஞ்சி சூடுபறக்க ,

வனத்தில் நிலா கஞ்சிக்குள் !

 

அம்மா ஊத்தித் தருகின்றாள்

கஞ்சியோடு  வெள்ளித் தட்டு என்னிடம் !

பூப்போட்ட மாக் கோப்பையில்

பூவாய் கஞ்சி  அக்காவிடம் !

தாமரை இலையில் கஞ்சி

தவழ்ந்தபடி  அப்பாவிடம் !

நாலு இலையைப் பிணைத்த

கல்லையில்  கஞ்சி அம்மாவிடம் !

 

சிந்தவில்லை அம்மா !

சிதறவில்லை  அப்பா !

ஒழுகவில்லை அக்கா !

அத்தனையும்  என்னிடம்

கதகளி  ஒப்பனையில்  என் முகம் !!

 

பாத்திரம்  எதுவானால் என்ன

பண்டம்தான்  அவசியம் !

பத்திரமாய்  உண்ணுவது

அதைவிட முக்கியம் !

 

செடியிலே பூக்கள் அதனுடன்

கள்ளியும் பூத்திருக்கு !

கூட கூர்மையாய் முட்களும் !!

 

அப்பா மடியில் ஜிம்மி ,

அக்கா கால் பிடிக்க ,

அம்மா பத்துப் போடுகிறாள் ,

நான் பாத்துப் போகிறேன் !!

 

தலைக்குள் மின்னல் -  அப்பா

விட்ட நீருக்கு பூக்கள் ,

நான் ஊத்திய தண்ணிக்கு முட்கள் !

நொண்டியபடி என்னருகே ஜிம்மி !

தூக்கி மடியில் வைத்து

காலைத் தடவுகிறேனா !

காலைப் பிடிக்கிறேனா !!

 

பிறந்தேனே நான் !   பிறந்தேனா நான் !!

இனியாவது பிறக்க வேண்டும் !!!

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டும் எமக்கு வேண்டும்

தலைவன் ஒருவன்  வேண்டும்

தளிர்த்த எம் விடுதலைப் பயிரிடையே 

முளைத்த ஒட்டுண்ணிகளை  மூலையில் 

ஒடுக்க ஒருவன் வேண்டும்

 

இன்று நம் நாட்டில் உயிரற்ற மானுடரை 

உயிர்ப்பிக்க அவன் வேண்டும் 

அரசியல் என்று அறுவடைக்குத் தயாராகும் 

எம்மினத்தின் அடிவருடிகளை  அடக்க 

மீண்டும் ஒருவன் வேண்டும்.

 

நெருப்பே இல்லாமல் புகைக்கும் 

விடுதலைத் தீ மீண்டும் சுடர்விட 

நாளை எங்கள் நன்னிலம் தழைக்க 

மீண்டும் எங்கள் தலைவன் வேண்டும் 

 

வருவான் ஒரு நாள் எம் தலைவன் 

அன்று திணறுவான்  எதிரி அவன் வருகையால்  

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வருகையால் பெருமை கொண்ட எம் அண்ணன்   - தன்

உள்ளத்தால் உயர்ந்தவன்தான்  மணிவண்ணன் !

தமிழ் ஈழம் வேண்டிக் குரல் கொடுத்தான் - புலிக்

கொடி  மார்பிலாடத்  துயில்கின்றான்.

 

கதைகள் சொல்லிக் கருத்தைக் கவர்ந்தான்

இயக்கம் செய்து இதயம் நிறைந்தான் !

நடிகனாய் தோன்றி விழியில் மலர்ந்தான்  - ஓர்

வேங்கையாய் வாழ்ந்து எம் உணர்வில் கலந்தான் !

 

அமைதிப் படையாய்  வந்து

அட்டூழியம் செய்த நாட்டில்

பாலைவன ரோஜாவாய்

பாசம் தந்த பண்பாளன் !

 

24 மணி நேரம் போதாது !

நூறுநாள் அழுதாலும் காணாது !

மாவீரர்களுக்கு என்றும் மரணமில்லை -ஐய

நின் கோபுரங்களும் சாய்வதில்லை !!

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கோபுரங்கள் சாய்வதில்லை  - தமிழர் 

கொள்கைகளும் வீழ்வதில்லை

முள்ளியில்  வெட்டுண்ட  மக்கள் 

வேரினில் மட்டும் உயிரோடு 

காளையரைக் கலங்கடித்தான்  -பாவிமகன் 

பாவையரைப்  பதற வைத்தான் 

 

நவிப் பிள்ளையும் வந்தார் 

நன்றாகத்தான் சொன்னார் !

 

புரட்டாசி இருபத்தொன்று - முள்வேலி

கட்டவிழ்க்க வந்ததின்று 

கல்வீடிழந்த மாந்தர்க்கு கிடைத்தது 

காகிதவீடு  புள்ளடியிட 

கையிலே மையைப்  பூசினர் - கயவர் 

முகத்திலே கரியைப் பூசினர் 

 

சிதறிய கால்கள்  சிலிர்த்து வந்தன 

வெட்டிய கைகள் வெகுண்டு வந்தன 

வாக்குப்  பெட்டிகள்  எல்லாம் 

வாக்குச் சீட்டால் நிரம்பின 

செல்வாக்கெல்லாம் 

செல்லா வாக்காகியது - மக்கள் 

சொல்வாக்கு  தமிழன் 

தோளைத் தாங்கியது 

 

மன்னவன் படைகள் 

மதியிழந்து விழித்து நிக்க 

ஒட்டுக் குழுக்களும்  ஓலமிட்டு 

ஒழுங்கைககால்  ஓடினர் 

 

ஈழத்து  வேரும் விக்கி ஈரம் தேடுதம்மா 

எழுந்து வந்தான் விக்கி இருகரம் நீட்டி 

விதையான  வீரரெல்லாம் 

செந்நீரைத் தந்தனர் 

கவலைப் பட்ட மாந்தரெல்லாம் 

கண்ணீரைத் தந்தனர் 

வீட்டிலேயே வென்ற வேந்தரெல்லாம் 

விரைந்தோடி வருகின்றார் 

வாக்குக் குவளையில் வருணனை வாரிக்கொண்டு 

 

பாரில் மாந்தர்க்கு பகல்கின்றார் நற்செய்தி 

மாவீரர் இல்லங்கள் மதிப்பாய் மிளிரும் என்றார்  அண்ணன் 

நாம் பயங்கரவாதியல்ல  விதலைப் போராளிகள் ,  அன்னை 

 

துப்பாக்கி விட்ட புலி  தூக்கம் கலையுதம்மா 

எழும்புலி முதுகில் வெண்புறாவும்  அமருதம்மா  !

பட்ட மரம் என்றிருக்க பசுந்தளிர்  தோன்றுதம்மா 

வெட்டிய வேர் பிளந்து வெள்ளை மலர் பூக்குதம்மா !! :D  :D  :icon_idea:

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி விட்ட புலி  தூக்கம் கலையுதம்மா 

எழும்புலி முதுகில் வெண்புறாவும்  அமருதம்மா  !

பட்ட மரம் என்றிருக்க பசுந்தளிர்  தோன்றுதம்மா 

வெட்டிய வேர் பிளந்து வெள்ளை மலர் பூக்குதம்மா !!  :D   :D   :icon_idea:

 

 

அருமை

இத்தனை  நாள் இதற்குள்   வராமல்  விட்டுவிட்டேன்

தொடருங்கள் அண்ணை

(இத்தனை  திறமையை  எதற்கு ஒழித்து வைத்தீர்கள்

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பூக்குதம்மா  காந்தள்தான் புலிவீரர் கல்லறையில்

பாக்குதம்மா பாரெல்லாம் பாலகர்கள் உறங்குவதை

வியக்குதம்மா தேசமெல்லாம் வேங்கைகளின் நெஞ்சுரத்தை

வாழ்த்துதம்மா தமிழினம்தான் வரலாற்றில் நிலைத்தவனை!

 

ஒரு தாயின் கருவறையில் ஜனித்து

ஒரு கோடி மனவறையில்  மலர்ந்திட்டார்

ஒரு ஈழ விடிவிற்காய் எழுந்து

ஓரயிரம் கிளைகலாய் பரந்த்ட்டார்

போர்களத்தின் செந் தனலில் கனிந்தெ

ஆயிரமாயிரம் விதைகளாய் நிறைந்திட்டார்

வித்துக்கலாய் வாழும் தருக்கலுக்கு

கார்த்திகையில் கரம்கூப்பித் தொழுகின்றோம்!

 

கண் கொட்டும்  கண்ணீ ரில்

கையில் புக்ஷ்பங்களும் நனையுதே

நெஞ்சிலே தகிக்கும் கனல்

நினைவெல்லாம் தமிழீழம்

மலர்ந்திடும் நாளும் அருகே

மங்கலாய்த் தெரியுதே!!!

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தெரியுதே ! அகல் தீபமின்று _ இனி

விரியுதே ஆதவன் பேரொளியாய் நின்று

சொரியுதே நறுமலர்கள் நின் சிரசில்

குவியுதே கோடிமலர்கள் உன்  தாளில் !

 

ஆயிரம் ஆண்டுகள் வாழும் பனைமரம்

ஆணியும் ஏறாதது  ஆணிவேரும் இல்லாதது _ இங்கு

ஆணிவேரோடு ஒரு மரம் மோகனமாய் அசைகிறது

அன்பு ஆள்வதால் ஆணிகளையும் சுமக்கிறது !

 

ஐந்து கை ஐராவதமே  உன் தோளில்

நம்பிக்கைகள்  ஐயாயிரம் _ தமிழ்

முகவரி தொலைத்த உறவுகளுக்கு

தேடிக் கொடுத்த கூகுள் நீயே !

 

பலநூறு காண வேண்டும்  முத்தமிழே _ யாழெ

பதிணாறில்  கால் பதிக்கும் நூலகமே

பாசம் கொண்டவர் பல்லாயிரம் காண் _இனி

பாசம் வீச எவன் துணிவான்...!

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.