• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
கறுப்பி

கவிதை அந்தாதி

Recommended Posts

கவிதை அந்தாதி

ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை அல்லது எழுத்தை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம்.

குறிப்பாக புதிதாக கவிதை எழுத இருப்போரும் மற்றும் கவிகள் படைக்கும் பலரும் தங்கள் கவித்திறமையை வளர்க்க ஒர் அடித்தளமாகவும் அமையும் என்பதே எண்ணம்.

எங்கே நீங்களும் இந்தப்பகுதியை அலங்கரித்துத்தான் பாருங்களேன்.

முதலில் நான் எழுதிய முதற்கவிதையோடு தொடக்கி வைக்கிறேன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

காயாத ரணங்கள் கொண்ட மனது

கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால்

கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும்

அழகில் நான் கறுப்பி ஆகிவிட்டதால்

நிலைக்கண்ணாடியும் என் நிறத்தின்

நிஜமாய் நிதர்சனமாய் சொல்கிறதே

Share this post


Link to post
Share on other sites

சொல்கின்றதே அழகின் மகிமையதை உன் கவி

கறுப்பும் அழகுதானே இறைவன் படைப்பில்

கவிதையின் சோகங்கள் என்னையும் -எழுத

தூண்டியது அந்தாதி உன் செயலால் பெண்ணே :wink:

Share this post


Link to post
Share on other sites

சொல்கிறதே..என்றறிந்து

கண்ணாடி முன் நின்று..

இறந்த கவலைகளை

மீண்டும் மீண்டும் பிரசவித்தேன்..

ஏதோ அழுகுரல்..

ஜன்னல்வழி எட்டிப்பார்த்தேன்..

ஓர் காடு சுவாலை

விட்டெரிகிறது..

அடடா..

அது.. மானிடத்தின்

சுடுகாடு..

தானில்லையென்றால்..

இயங்காது உலகென்ற..

பல தலைவர்கள்..

எரிகிறார்கள்..

தன்னைவிட அழகி

யாருமில்லை..என்ற

மோகினிகள் எரிகிறார்கள்..

தன்னைவிட அழகி..

யாருமில்லையென்ற

மோகினிகள் எரிகிறார்கள்

விம்பம் எரிகிறது..

அழ..அழ..அழகு எரிகிறது..

ஆசை எரிகிறது..

ஆணவம் எரிகிறது..

மதம்..பணம்..பந்தா..பகட்டு..

கௌரவம்..

எல்லாமே.. எரிசிறது..

மீண்டும் பார்த்தேன்..

உண்மை புரிந்தது..

கண்ணாடிவழியே..

ஓர் பேரழகி..

அடடா.. அது

நானேதான்..

ஓ.. பிரகாசிக்கும்..

அழகு..

மிளிர்கிறது..

எண்ணங்கள் ஊடாக..

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கவும் சற்றுத் தாமதமாகிவிட்டது..

பெண்ணே..

பேசத்துடிக்கும்..

ஊமையானேன்..

பறக்கத் துடிக்கும்

விழுதானேன்..

நீந்த நினைத்த

நெருப்பானேன்..

எண்ணங்கள்..

ஈடேற்ற முடியாத

ஏழையானேன்.

எல்லாம் விதைத்த

பெண்ணே..

நீ மடடும்

பார்க்க முடிந்தும்...

பார்க்காமல்..

பழக முடிந்தும்

பழகாமல்..

அருகிலிருந்தும் தழுவாமல்

ஆளைக் கொல்வதேன்..

Share this post


Link to post
Share on other sites

கறுப்பி எழுதியது:

"காயாத ரணங்கள் கொண்ட மனது

கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால்

கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் "

இதற்கு என்ன அர்த்தம்? இது கூட விளங்கவில்லையா என்று கேட்காதீர்கள். சத்தியமாக எனக்கு விளங்கவில்லை.

Share this post


Link to post
Share on other sites

ஆளைக் கொல்வதேன்?

வாளாய் ஒரு வீச்சு

காயத்தில் காயமில்லை

மாயமென்னடி மாயமிது?

பாயுமுன் அறியவில்லை - எனைப்

பாடையிலும் வாட்டுமென்று

தீயெரியும் அடர் நடுவே - உன்

தீண்டலின் இன்பம் கண்டு

நான் எரிந்து விட்டேனடி!

நான்.................. எரிந்து விட்டேனடி!

Share this post


Link to post
Share on other sites

எரித்தாரே பட்டினத்தார்

பாட்டாலே பாடையை

எரிகிறார் ஆதியவர்

:P :P :P

படையினில் போகுமுன்

காயமது வேகும் காலம்

காலமதின் கோலம்

அதில் நீயென்ன

நானென்ன

எல்லோரும்தான்

அதற்கிடையில்

கறுப்பென்றும்

சிவப்பென்றும்

கலக்கமேன்

(காயம் என்றால் உடைலையும் குறிக்கும்)

Share this post


Link to post
Share on other sites

கறுப்பி எழுதியது:

"காயாத ரணங்கள் கொண்ட மனது

கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால்

கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் "

இதற்கு என்ன அர்த்தம்? இது கூட விளங்கவில்லையா என்று கேட்காதீர்கள். சத்தியமாக எனக்கு விளங்கவில்லை.

காயாத ரணங்கள் கொண்ட மனதில் கஷ்டங்கள் மேலும் எழுவதால் பழைய ரணங்கள் (மறைந்தே) தற்தொலை செய்யும்.

எல்லாம் இருகோடுகள் சென்டிமென்ட் தான் சபேசன் சார்.

Share this post


Link to post
Share on other sites

கலக்கமேன் கலங்குவதேன என்றே

கேட்டுவிட்ட கணப்பொழுதுகள்

பரந்தமனதுடன் பக்குவமாய்

பல கவிகள் படைத்திட்ட

களஉறவுகள் மேலும் மேலும்

தொடர்ந்திட காத்திருக்கும்

மனதுடன் இங்கே

Share this post


Link to post
Share on other sites

கலக்கமேன் கலங்குவதேன என்றே

கேட்டுவிட்ட கணப்பொழுதுகள்

பரந்தமனதுடன் பக்குவமாய்

பல கவிகள் படைத்திட்ட

களஉறவுகள் மேலும் மேலும்

தொடர்ந்திட காத்திருக்கும்

மனதுடன் இங்கே

இங்கே ஒருவரில்லை இருவரில்லை

தமிழ்த்தாயின் கவிக்குழந்தைகளுக்கு பஞ்சமில்லை

விழிவழியோ வாய்வழியோ வார்த்தைகள் வருவதில்லை

மதிவழிவரும் வார்த்தைகள் வற்றுவதில்லை

வற்றாத வார்த்தைகள் கொண்டு வாருமய்யா கவிபடைக்க

படைக்க என்று தொடங்குங்ள் நண்பர்களே

Share this post


Link to post
Share on other sites

படைக்கத் தெரிந்த இறைவா- உனக்கு

காக்கத் தெரியாதோ.

தமிழர் எங்கள் நிலையை உன்னால்

உணர முடியாதோ

அழிவைச் செய்யும் அரசை - உன்னால்

அடக்க முடியாதோ

அழுது புலம்பும் மக்கள் துயரை

அறிய முடியாதோ உன்னால்

அறிய முடியாதோ

முடியாதோ என்று தொடங்குவோமா?

Share this post


Link to post
Share on other sites

முடியாதோ..

மூத்ததமிழ்..

குடி

மடியேறத் தாய்மண்ணில்..

தடையாவும் உடையாதொ..

தனி.

தமிழ்ஈழம்..காணேனோ..

மதத்திற்காய் மதம்

கொண்ட..

மக்கள் யாமல்ல..

பணத்திற்காய்.

பிணம் செய்யும்..

அமெரிக்கர் யாமல்ல..

எம்மண்ணில்

நாம் வாழ

வழி காணல் பிழையோ..

இது தடையாகும் தவறோ..

Share this post


Link to post
Share on other sites

முடியாதோ..

மூத்ததமிழ்..

குடி

மடியேறத் தாய்மண்ணில்..

தடையாவும் உடையாதொ..

தனி.

தமிழ்ஈழம்..காணேனோ..

மதத்திற்காய் மதம்

கொண்ட..

மக்கள் யாமல்ல..

பணத்திற்காய்.

பிணம் செய்யும்..

அமெரிக்கர் யாமல்ல..

எம்மண்ணில்

நாம் வாழ

வழி காணல் பிழையோ..

இது தடையாகும் தவறோ..

தவறோ என பிறர் கேட்க செய்த பல தவறுகள்

கொல்வதும் தவறுதான் கொல்லப்படுவதும் தவறு

புரட்சிகளில் சிறந்தது காந்தி சொன்ன அஹிம்சை புரட்சி

வாள் தூக்கியவன் வாளால் சாவான் வரலாறு அத்தாட்சி

நீ சுட்டாலும் சுடும் நான் சுட்டாலும் சுடும்

இதற்கு முடிவு இல்லாவிடில் அமைதி எப்படி புறப்படும்

அடுத்து புறப்படும்....

Share this post


Link to post
Share on other sites

புறப்படும் மகனை..

போருக்கு அனுப்புகையில்..

நெற்றியிலே..திலகமிட்டு..

நேசத்துடன் முத்தமிட்டு..

பெருமையோடு அனுப்பும்..

அருமை மாதர் வழி..

வந்த மறத்தமிழ்பெண்..

மார்போடு குண்டு கட்டி..

வீரத்தின் விளைநிலத்தில்..

சுதந்திரத்தை விதைக்கவென

தூள்தூளாய் போவாளடா..

காவியம் ஆவாளடா..

கோடி காலங்கள் வாழ்வாழடா..

அவள் அணையாத தீபமடா..

Share this post


Link to post
Share on other sites

அடுத்து புறப்படும்....

அடுத்து புறப்படும்- எதுவோ?

தமிழர் ஆவி அடுக்கடுக்காய்

சரியும் அதுவோ?

விதியே என்ன செய்ய

சொல்கிறாய்-?

எம் உடல்

எலாம் - தெருவோர

நாய்களுக்கு - தீனியா...

ஆகவா?

அதையும்...

நீயே சொல்லுவாய்!

மலைகளில் முட்டினால்..

மண்டை உடையுமென்றே....

சருகுகளுக்கு - தீ

மூட்டூறார்.- கவனி

சகியே -!!

ஆற்றை கடக்க

ஒரு துடுப்பு தா...!

இல்லை-ஆன்மீகம்

வேண்டாம்-போகிறேன்..

உன் அணைப்பிலிருந்து

ஒரு விடுப்பு- தா!

Share this post


Link to post
Share on other sites

தீபம் ஏற்ற பலர் வாழ்வில் தீக்குச்சியே போதும்

சிறு தொழில் செய்து பெரு வாழ் வாழும்

குண்டுகள் எரிந்து நாம் வெளிச்சமே தேடினால்

வெளிச்சம் வந்த பின் குருடராவோமே

வேண்டாம் இந்த நெருப்புடன் இவ்விளையாட்டு

துப்பாக்கிகள் வெறும் தீபாவளியில் கேப்பைமட்டும் வெடிக்கட்டும்

பெண்ணின் வயிறு பிள்ளை சுமக்க மட்டுமே வலிக்கட்டும்

ஆணின் நெஞ்சுறம் உலக அமைதிக்கே நிற்கட்டும்.

நிற்கட்டும் என்றே துவங்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

உக்களைப்போல என்னால் எழுதமுடியாதுங்கோ ஆளை விடுங்கோ":lol:

Share this post


Link to post
Share on other sites

நிற்கட்டும் என

கடிவாளம் இட்டுமென்..

கற்பனையைக் கட்டி வைத்தேன்..

ஆனாலுமடங்காமல்..

ஆவேசப்புரவியென..

அது

உனைக்காண ஓடுதடி..

வார்ததை..வரியாகப் பாயுதடி..

கவிழ்ந்திருந்த பிறைகள்..

கருந்திராட்சையிரண்டைக்

காக்க காக்க..

ரோஜா இதழிரண்டால்..

மூடிமூடி அவை திறந்து

என்னைப் புூவை

பார்க்க பார்க்க

பரவசமானேனே..

என் பத்தினியை மறந்தேனே..

அழகே..

என் பத்தினியை மறந்தேனே..

Share this post


Link to post
Share on other sites

மறந்தேனே என் மூச்சை விட மறந்தேனே

பிறந்தேனே உன்னைக்கண்டு மீண்டும் பிறந்தேனே

பறந்தேனே காதல் விமானத்தில் பறந்தேனே

இறந்தேனே மீண்டும் பிறக்க இறந்தேனே

இறந்தேனே என்று தொடங்கலாம்....

Share this post


Link to post
Share on other sites

இறந்தேனே என்று சொல்லி எற்றி விட்டார்கள்

படத்துக்கு விளக்கு ஆனாலும் வாழ்கிறார்கள் பலர்

வேண்டும் வரம் இறந்த பின்னும் வாழும் வாழ்க்கை

வேண்டும் வேண்டும் நிரந்தரமாய்

Share this post


Link to post
Share on other sites

நிரந்தரமாய்

வந்து

அன்பே

உன்னை

எனக்கு

தந்து விடு...

நாம்

நிரந்தரமாய்

இணைந்திடுவோம்

நிரந்தரமாய்

வந்து விடு....

கண்ணீரோடு

கவலைகளை

எத்தனை

நாள்

நான்

சுமப்பேன்....???

உன்னை

பிரிந்து

தனிமையிலே

எத்தனை நாள்

நான்

தவிப்பேன்...???

நேரமது

ஓடுதடி

காலமது

கழியுதடி....

காத்திருந்த

போதுமடி

என்னருகில்

வந்து விடு....

உன்னை

எனக்கு

தந்து விடு......

நன்றி

வன்னி மைந்தன்

Share this post


Link to post
Share on other sites

தந்துவிடு

ஏந்திழையே..

உந்தன் மடி...

நான் தவிக்கலாமோ..

நாளும்..

வந்துவிடு..

வானவில்லே நீயும்

என்னை

வதைக்கலாமோ

நாளும்..

Share this post


Link to post
Share on other sites

நாளும்

நல்ல

நாளுமாச்சு....

நம்ம

சேரும்

காலமாச்சு....

காத்திருந்த

காலமது

கனியும்

நேரம்

இன்று ஆச்சு....

எத்தனையோ

கஸ்ரங்களை

நாமயன்று

பட்டிருச்சு...

இன்று

வந்து

திருமணத்தில்

நாமயின்று

கூடயிலே

எல்லமிப்போ

மறந்து போச்சு....

-வன்னி மைந்தன் -

Share this post


Link to post
Share on other sites

மறந்துபோச்சுடா..தமிழா..

காசு பணம் வந்தவுடன்..

கஸ்டப்பட்ட காலமெல்லாம்

எனக்கிப்போ..

மறந்துபோச்சுடா..

தெரிஞ்சுபோச்சுடா..தமிழர..

பாசம்..நேசம்

உறவு எல்லாம்..

காசிருந்தாக் கூடுமென்று

தெரிஞ்சுபோச்சுடா..

கணவன்..மனைவி

வாழக்கை..

இரட்டை மாட்டுவண்டி..

இப்ப வாழ்க்கை வண்டி..

அட

ரெண்டு மாடும் நொண்டி..

பாதை எங்கு போகும்..

எங்கள் பயணமென்னவாகும்?..

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • சந்தர்ப்பங்கள் வளங்கப்படும்போதுதான் ஒவ்வொருவரது அடையாளமும் வெளிவரும். நல்ல தொகுப்பாளர் ஆனால் சமய என்கின்றபோது மிகச் சாதாரண லொஜிகையும் (?) விட்டு விலகுகிறாரோ எனத் தோன்றுகிறது. "சேலத்தில் 1971-ல் பெரியார் நடத்திய பேரணியில் கலந்துகொண்ட பெரியார் தொண்டர் திருச்சி செல்வேந்திரன் நக்கீரனுக்கு அளித்த பேட்டி. ரஜினிகாந்த் பேசியதை கேட்டீர்களா? அந்த ஊர்வலத்தில் என்ன நடந்தது?  டிரக்கில் ராமன், சீதை "பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்' கட் அவுட் வைத்து ஊர்வலம் நடந்தது. ரஜினி சொன்னதுபோல நிர்வாணமாக அல்ல, முழு உடையோடு, அலங்காரங்களோடு தான் இருந்தது. ஊர்வலத்துக்கு தி.மு.க. அரசு கடுமையான தடை போட்டிருந்தது. ஊர்வலம் வரும்போது ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், ஜன சங்கத்தினரும் கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று அனுமதி கேட்டிருந்தனர். போலீசார் அவர்களுக்கு அனுமதி அளித்து, சாலையின் இருபக்கமும் நிற்க வைத்துவிட்டார்கள். ஒவ்வொரு குரூப்பை சுற்றியும் வட்டமாக போலீசார் நின்றனர்.   ஊர்வலத்தில் ஒரு டிரக்குக்கு நான் இன்சார்ஜ். அதில்தான் ராமன், சீதை சிலைகள் இருந்தன. சிலைகள் தூக்கிக் கொண்டு வருவதாக கோஷங்கள் மட்டும்தான் எழுப்பினார்கள். கறுப்புக் கொடி காட்டிய கும்பலில் ஒருவர் எங்களை நோக்கி செருப்பால் அடித்தார். நான் உள்பட இரண்டு பேர் டிரக்கில் நின்றுகொண்டிருந்தோம். சிலை எங்களைவிட உயரமாக இருந்தது. அவர் அடித்த வேகத்தில் செருப்பு சிலை மீது பட்டு கீழே விழுந்தது. சடசடவென்று இரண்டு, மூன்று செருப்புகள் விழுந்தன. இதைப் பார்த்த தி.க.வினர் கைதட்டினார்கள். ஏனென்றால் ஜனசங்கத்தினரே சிலை மீது அடிக்கிறார்களே என்று. அதற்குப் பிறகு கோபம் வந்து இன்னும் வேகமாக அடித்தார்கள். அதில் ஒரு செருப்பு என் முகத்தில் பட்டது. அப்போது கீழே ஊர்வலத்தில் இருந்த ஜனங்கள் வண்டியில் ஏறி சிலையை அடிக்க ஆரம்பித்தார்கள். அதற்கு அப்புறம் நாங்களும் ஒரு அடி அடித்தோம். இதுதான் நடந்தது. அதற்குப் பிறகு ஊர்வலம் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அரை மைல் தள்ளி பெரியார் டிரக்கில் வந்துகொண்டிருந்தார். "துக்ளக்' பத்திரிகையில் பெரியாரே ராமரை அடிக்கிற மாதிரியும், கலைஞர் கைத்தட்டுகிற மாதிரியும் சொல்கிறார்களே?  அது அவர்களே போட்ட ஒரு கார்டூன். நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு போனதா?  விசாரணை நடந்தது. நீதிபதி, "அவ்வளவு உயரம் ஏறி பெரியார் அடித்திருக்க முடியாது. அது நம்பும்படியாக இல்லை' என்று சொன்னார். வழக்கு தள்ளுபடியானது. நிர்வாணமாக கொண்டு வந்தார்கள் என்று ரஜினி சொல்கிறார்?  இல்லவே இல்லை. அந்த படத்தைப் பார்த்தாலே தெரியுமே. அந்த படங்கள் இருந்தால், எடுத்து பார்த்தால் தெரியும். ரஜினி இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன?  அரசியல்தான். இப்போது இதனை ஒரு ஆயுதமாக எடுக்கிறார்கள்."   இன்றைய நக்கீரனில் வெளிவந்த கட்டுரை . 28-01-2020
  • அன்று தமிழரின் வரலாறுகள் அழிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க.... அதை இன்று ஆராய்ச்சி செய்பவர்களை நையாண்டிகள் செய்வது ஒரு புறம். வெள்ளைத்தோல்கள் செய்த ஆராய்ச்சிகளில் தமிழர் சம்பந்தமான தடயங்கள் எதுவுமில்லை என்பவர்கள் ஒருபுறம். கீழடியை தோண்டத் தோண்ட மூடுபவர்கள் ஒரு புறம். தமிழ்  தமிழினம் எவ்விதத்திலும் உயர்ந்து விடக்கூடாது என்பதில் பிற கலாச்சாரங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பது கண்கூடாகவே தெரிகின்றது. எம்மவர்கள் எதிரியையும் தலையில் வைத்து கோண்டாடுவதில் திறமை வாய்ந்தவர்கள்.இதை காலம் காலமாகவே பார்த்து வருகின்றோம். அதை கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரும் கண்டு களித்தோமே. இலங்கையின் தமிழ் பிரதேசங்களில்  பௌத்த விகாரைகளும் முஸ்லீம் குடியேற்றங்களும் வேகமாக பரவி வருகின்றதாம். எனவே இன்றைய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் போல் அன்றைய காலகட்டத்திற்கேற்ப ஒரு மாற்றுக்கருத்து மாணிக்கமாவது பிறந்தே தீரும்.ஏனெனில் தமிழினத்தின் தலைவிதி அப்படி
  • Sri Lanka confirms first case of coronavirus -health official Reuters January 27, 2020 11:46 AM EST COLOMBO — Sri Lanka has confirmed the first case of coronavirus in the country, a senior Sri Lankan health official said on Monday. “A Chinese lady, who is in her 40s, arrived on the 19th as a tourist and fell ill on the 25th and was confirmed as having the coronavirus following a test on Monday,” Sudath Samaraweera, the chief epidemiologist with Sri Lanka’s Ministry of Health, told Reuters, adding that this marks the first confirmed case in the island nation. The new flu-like virus, first reported in the Chinese city of Wuhan, has killed more than 80 people and infected more than 2,700 others. Although most cases identified remain in China, more than a dozen other countries have so far reported cases. (Reporting by Waruna Karunatilake in Colombo; Writing by Euan Rocha; Editing by Alex Richardson)    
  • உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்! குணமாக்கக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கான மருந்தினை கண்டுபிடித்துள்ளதாக சித்த மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். சீனாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனாவிற்கு 106 பேர் தற்போது வரை பலியாகியுள்ளனர். அந்நாட்டை நிலைகுலையச் செய்திருக்கும் இவ்வைரஸ் தொடர்பில் மருத்துவர்கள் தங்கள் முயற்சிகள் அனைத்தையும் முடுக்கி விட்டிருக்கின்றனர். சில நகரங்களை அரசு தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. சீனாவில் தங்கியிருக்கும் பிரஜைகள் தங்கள் சொந்த நாடுகளுக்கு விரைந்துகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு தங்களிடம் மருந்து இருப்பதாகவும் அரசு அனுமதியளித்தால் சீனா செல்லத் தயார் எனவும் சித்த மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் பேசிய அவர்,     https://www.ibctamil.com/world/80/135996?ref=home-imp-parsely
  • தென்னாபிரிக்க அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி By A.Pradhap     இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்து ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டு தொடரை கைப்பற்றியது.  தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்து வசம் போட்டியின் போது, பெப் டு ப்ளெசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 3 ஓவர்களை வீசிமுடிக்க தவறியுள்ளது. இதனை அவதானித்த நடுவர்கள் போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட்ட பின்னர், போட்டி மத்தியஸ்தரான எண்டி பைக்ரொப்ட் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். நடுவர்கள் முறையீட்டின் அடிப்படையிலும், பெப் டு ப்ளெசிஸிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்க அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான விதிமுறைகளின் படி, அணியானது குறித்த நேரத்தில் ஓவர்களை நிறைவுசெய்ய தவறினால், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் இருந்து ஓவருக்கு தலா 2 புள்ளிகள் வீதம் குறைக்கப்படும். அதன்படி, மூன்று ஓவர்கள் வீசத் தவறிய தென்னாபிரி க்க அணிக்கு, 6 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் 30 புள்ளிகளை பெற்றிருந்த தென்னாபிரிக்க அணிக்கு, தற்போது 6 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், அந்த அணி 24 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  http://www.thepapare.com/south-africa-fined-docked-six-championship-points-for-slow-over-rate-tamil/