Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

கவிதை அந்தாதி

Recommended Posts

பயணமென்னவாகும்

எங்கள்

பயணம்

என்னவாகும்...???

எங்கள்

அணியில்

ஒரு சோடி....

இழந்து

இன்று

நாங்கள் வாடி...

வேதனைகள்

தினமும் கூடி

வருகுதேனோ

எம்மை தேடி....???

எங்கள்

மக்கள்

அவலங்களை

எடுத்து

சொன்னான்

உலகில் ஓடி....

அந்த

உத்தமனை

இழந்து

இன்று

நிக்கிறோமே

நாங்கள் வாடி....

மொத்த

மக்கள்

விழிகளிலே

பாயுதின்று

கண்ணீர் கூடி....

என்ன

செய்வோம்

என்ன

செய்வோம்....

எம்

தமிழை

காத்திடவே

இனி

எம் பணிகள்

என்

செய்வோம்.....!!!

பாடு பொருள் ரவிராஜ்..கூட்டமைப்பு

வன்னி மைந்தன்

Share this post


Link to post
Share on other sites

கூட்டமைப்பு எனும்

குருவிக்கூடு...அது

பாவிகள்..

தோட்டாவில்..

துடிக்கின்றதே..பேசப்

புலமை கொண்டவன்..

தமிழ் பேசி..

கூட்டங் கண்டவன்..

எங்களில் ஒருவன்..

நியாயம்..சொன்னதற்கா..

நீதி கேட்டதற்காக..

தமிழ் மூச்சை

விட்டதற்காக..

ரவியவர்கள்..

மூச்சை பறித்தனர்?.

சிங்களத்தில் யாரும்

செத்தால்..

கண்டனம்..

தமிழ் மக்கள்

nhதகையாயச் செத்தால்

கவலை..

அனுதாபம்..

சர்வதேசமே..

அடச்சீ..

எல்லாமே..

வேசம்தானா...

Share this post


Link to post
Share on other sites

வேசம் தானா

வேசம் தானே

வேடமதாய்

ஆட்சியிலே

போடுகிறார்

வேசம் தானே...

வகை

வகையாய்

வாகரையில்

வறிஞ்சு கட்டி

எறிந்தனரே...

எம் தமிழை

அழித்து விட்டு

வருத்தமதை

சொன்னனரே....

ஊனமாக்கி

எத்தனையை

உறக்கத்திலே

வைத்தனரே....

மக்களதை

அழித்துவிட்டு

மகா பொய்

சொல்லினரே...

புலி

புலியென்று

புளுகி வேறு

தள்ளினரே....

நித்தம்

நித்தம்

உயிர் பலிகள்

தினம் தோறும்

பறிக்கின்ராரே....

இத்தனையும்

கண்டுலகம்

மௌனமாக

இருப்பதேனோ....??

மொத்தத்திலே

உலகத்தாரும்

செய்கின்றார்

வேசம்தானா....???

வன்னி மைந்தன்-

Share this post


Link to post
Share on other sites

வேசமிட்டு வந்தவர் நாம் இவ்வுலகிற்கு

இயற்கை அரிதாரம் ராஜபாட்டை

திரையும் கீழ் விழ முடியும் இந்த நாடகம்

முடியாதே இறை நடத்தும் இந்த கூத்து

Share this post


Link to post
Share on other sites

கூத்துப் போட

நாற்பது பேர்..

பார்த்துப் போக..

நானூறுபேர்..

வாழக்கையெனும் மேடையில்..

நாம் போடும் நாடகங்கள்..

அடப்போடா..

எல்லாம்..

மாயை

Share this post


Link to post
Share on other sites

மாயை

தோற்றமதாய்

வந்துயவள்

மாறிப்

போனாள்...

சுற்றும்

முற்றும்

தேடிப்

பார்த்தேன்

ஜயோ

அவளை

காணவில்லை...

எங்கு போய்

மறைந்தாள்

அவள்....???

Share this post


Link to post
Share on other sites

அவள் நினைவில்

நான் கிடந்து வாட.

அவளோ....

புதுரோஜா போல

ஒவ்வொரு நாளும்..

ஜனவரியில் பார்த்தவளை..

நினைந்து நினைந்து

நாட்காட்டி

தேய்ந்து தேய்ந்து..

வருடம் முடிய நாட்காட்டியை

மாற்றிவிடலாம்..

என்னை....

என்னைக் கொஞ்சம்

நினைத்துப்பார்..

Share this post


Link to post
Share on other sites

நினைத்துபார்

என்

அன்பே...

உன்னருகில்

நான்

இருக்க...

என்

அருகில்

நீ

இருக்க....

ஒருவரை

ஒருவர்

மறந்து

வாழ்ந்த

அந்த

காலமதை...

என்னவளே

ஒருகணம்

உந்தனுக்குள்

நினைத்து பார்...

எத்தனை

ஆனந்தம்

எத்தனை

சில்மிசம்....

இன்னும்

என்னால்

மறக்க

முடியவில்லை...

மறவாமால்

என்னவளே

நீயும்

ஒரு முறை

நினைத்து பார்....

வன்னி மைந்தன்-

Share this post


Link to post
Share on other sites

பார்த்து பார்த்து காதலித்த காதல் குருடானது

பார்க்காமல் காதலித்து கோட்டை உருவானது

காணாமல் காதல் கண்டதும் போதலும் பார்த்தாயிற்று

காதல் போதை மறக்க மற்ற போதைகள் வந்தாயிற்று

காதல் கதைகளுக்காக கட்டிய கோவண்தையும் விற்றாயிற்று

ஆயிற்று அல்லது ஆகியது என்று தொடங்கலாம்

Share this post


Link to post
Share on other sites

ஆயிற்று

இன்று

வெள்ளி....

தருவாயா

நீ தான்

காசு அள்ளி...

பார்ப்பாயா

நீ தான்

வெள்ளி....???

பாவமடா

நான் தான்

தம்பி...

போறேன்

நான்

வண்டி தள்ளி....

ஊத்தனும்

பெற்ரோல தான்

அள்ளி...

அட...

தருவாயா

நீ தான்

காசு அள்ளி....

இல்லை

பார்ப்பாயா

நீ தான்

வெள்ளி....!!!

Share this post


Link to post
Share on other sites

வெள்ளிச் சலங்கை கட்டி

துள்ளி வரும் வெண்ணிலவே..

பள்ளி வரத் தாமதமேன்..

அள்ளியே நானணைக்க..

கொள்ளையாசையடி..தொடத்

தள்ளிப்போவதென்ன கண்ணம்மா..

வெட்கமா..நாணமா..

Share this post


Link to post
Share on other sites

நாணமா

அடி

பெண்ணே

உனக்கென்ன

நாணமா...???

என்னருகில் வர

உனக்கென்ன

இன்று

நாணமா....???

எத்தனை

காலங்கள்

காத்திருந்தேன்...

உனக்காக

நான்

பாத்திருந்தேன்...

கற்பணை

ஆயிரம்

வளர்த்து

நின்றேன்...

உனை

கட்டியணைக்கவே

துடித்து

நின்றேன்...

என்

ஆசையை

புரியா

நீ ஏனடி...

எட்டவே

நிக்கிறாய்

பாரடி...

என்

அன்பே

உனக்கென்ன

இன்னும்

நாணமா.....????

Share this post


Link to post
Share on other sites

நாணமா நானறியேன்

உன் பார்வையின்

அர்த்தம் அது புது புது

அர்த்தங்களின் வடிவங்கள்

புரிந்து கொண்டதே

என் பெண்மையின் உள்ளுணர்வுகள்

மனமோ விழிப்பின் விடியலாய்

Share this post


Link to post
Share on other sites

விடியலாய்

வந்துதித்த

விடியலொன்று

விடியு முன்னே

எங்கள் முன்

விழுந்ததின்று....

வீரமுடன்

வீறு கொண்ட

வீரப் புலியை

இன்று

வீரமில்லா

ஒன்று வந்து

வீழ்த்தியதே...

நெஞ்சமதில்

வேதனையை

மூட்டியதே....

நீதி கேட்டு

நின்றவனை

வீழ்த்தியதை

ஜெனநாயக

வாதியென்று

உரைப்பதுவோ....???

சாவறிந்தும்

சாவுக்குள்ளே

சாவனான்

எங்கள்

விடுதலையின்

வரலாற்றில்

பதிவானான்...

எத்தனையோ

பட்டங்களை

அவன் அடைந்தான்

இருந்தும்

மக்களுக்காய்

வாழ்ந்தேயின்று

அவன் மடிந்தன்....

மா மேதையாய்

எம் முன்னே

அவன் விரிந்தான்

இன்று

மா மனிதனாய்

எமை விட்டு

போய் மறைந்தான்...

-வன்னி மைந்தன்

Share this post


Link to post
Share on other sites

விடியலாய் எண்ணி நானும்

விமானத்தில் காலை வைத்தேன்

விட்டிலாய் விழுந்தேன் இங்கே

விமோசனம் எனக்கும் உண்டோ

மனம்நிறை கணவன் என்று

மகிழ்வுடன் வந்த என்னை

அறிவிலி என்று எள்ளி

ஆக்கினை பண்ணும் கோரம்

மதுவினை மணம் முடித்தான்

மங்கைகள் தேடி நின்றான்

அடிமையாய் வேலை செய்ய

அமர்த்தினான் என்னை இங்கே

புலத்திலே நிறைவே என்று

மனத்திலே கொண்ட எண்ணம்

தவறது உணர்ந்து விட்டேன்

தப்பிட வழியும் உண்டோ

Share this post


Link to post
Share on other sites

ஐஐயோ தட்டச்சுச் செய்து போடுவதற்குள் மைந்தன் முந்திவிட்டார். மன்னிக்கவும்.

Share this post


Link to post
Share on other sites

பறாவாயில்லை தோழா

தொடருங்கள்...

இனி...

Share this post


Link to post
Share on other sites

மறைந்தார் என்று சொல்லி

மறவரை மறக்க மாட்டோம்

மனத்திலே தினம் இருத்தி

மாண்புறக் காத்து நிற்போம்

நாட்டினைக் காப்ப தற்காய்

நன்னுயிர் தந்த வீரர்

மாவீரர் உங்கள் நாமம்

மறையுமோ தமிழர் நெஞ்சில்

Share this post


Link to post
Share on other sites

நெஞ்சில்

உன்கென்ன

காயமோ...???

அன்பே

காதல்

தந்ததது

ஞாயமோ...???

தேம்பியே

அழுகிறாய்

நீ

பாவமே...

இதை

செய்த

அந்த

பாவியோ

யாரம்மா...???

Share this post


Link to post
Share on other sites

யாரம்மா..நீ

அழுக்குத்துணியும்..

ஒட்டியவயிறும்..

குமட்டும் நாற்றமும்

என் சொத்து..

என் வயசுப் பிள்ளையெல்லாம்

பள்ளிக்கு போகையிலே..

பிச்சைக்கு வருகின்ற..

அநாதை மேல்..

இரங்கி..அள்ளி

அணைத்தவளே..

அம்மா நீ

யாரம்மா..

ஞானசம்பந்துனுக்கு

பால் கொடுத்த

உமையாளா..

கறுப்புக்குழந்தைகளைக்

கட்டித்தழுவிய..

வெள்ளை இளவரசி

டயானாவா..இல்லை

ஏழை ஜனங்களுக்காய்..

தன் வாழ்வை அர்ப்பணித்த

தாய் தெரசாவா..

யாரம்மா நீ

என் போல

அநாதைக்

குழந்தைகளை வாழ்விக்க

அன்னை போல்

தந்தை போல்..

அன்பு உள்ளங் கொண்டு

கோடி பேர்

வரவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

வரவேண்டும்

வரவேண்டும்

இறைவா

நீ

வரவேண்டும்....

எந்தன்

வறுமைகள்

போகக்கிடவே

வரமொன்று

தர வேண்டும்...

நின்மதியை

வந்தெனக்கு

நிரந்தரமாய்

தரவேண்டும்...

கண்ணீரோடு

கவலைகளை

களைத்தெறிய

வேண்டும்...

எந்தன்

கஸ்ரமது

தொலைகின்ற

வாழவொன்று

தரவேண்டும்...

நாள்

எல்லாம்

புன்னகையில்

குழிக்கின்ற

முகம் வேண்டும்...

இத்தனையும்

நடந்திடவே

இறைவா

நீ

வரமொன்று

தரவேண்டும்....

வன்னி மைந்தன்

Share this post


Link to post
Share on other sites

தரவேண்டும்..நிம்மதி..

கொஞ்சம்-என்

நெஞ்சில்..

பணம் படைத்து..

புகழ் உடைத்து..

கூட்டம் சேர்ந்து..

குதூகலித்து..அட..

ஆடாத ஆட்டம்

எல்லாமும் போட்டு..

இல்லையப்பனே.. நிம்மதி..

கோவில் சன்னதியில்..

போயிரு வருமென்றார்..

ஐயரும் கும்பிட்டதால்..

அகந்தை பெருகியதே..அல்லால்..

அமைதி வரவில்லையே..

உலக சமனிலையை..

உயர்வும் தாழ்வுமற்ற

ஒப்பற்ற நிலையை..-ஐயனே..

உன் கோவிலிலும்

காணவில்லை.

Share this post


Link to post
Share on other sites

காணவில்லை

காணவில்லை

என் இனத்தை

காணவில்லை....

பள்ளி போன

பிள்ளை

இன்னும்

வீடு இன்னும்

திரும்பவில்லை...

தேடி போன

உறவு கூட

வீடு இன்னும்

திரும்பவில்லை...

எங்கள்

வீட்டில்

மொத்தத்தில

நின்மதியை

காணவில்லை...

ஜயா மகிந்தர்

ஆட்சியிலே

எத்தனையோ

காணவில்லை...

அவலத்திலே

எங்கள்

மக்கள்

ஜயோ உலகம்

காணவில்லை...

நித்தம்

நித்தம்

கொலைகள்

அங்கு

யாருமின்று

தடுக்கவில்லை...

மொத்தத்திலே

இலங்கையிலே

சுதந்திரத்தை

காணவில்லை...

-வன்னி மைந்தன் -

Share this post


Link to post
Share on other sites

(அடடா வன்னிமைந்தன் மீண்டும் காணவில்லையா..)

காணவில்லை -உன்

கண் பட்ட காயம்..

ஆறவில்லை ஏன்..

நீ வந்த இதயம்..

போதவில்லை..நான்

பெற்ற முத்தம்..

குறையவில்லை அடி

சிற்றின்பப் பித்தம்..

தூங்கவில்லை..நீயின்றி

மெத்தை முள் மெத்தை..

உண்ணவில்லை..உணவிருந்தும்..

பசியெனக்கு இல்லை..

தெரியவில்லை.. கணப்பொழுதில்..

என்னானேன். உன்னால்

வருந்தவில்லை..இதுகூட

இன்பந்தான் இந்நாள்...

Share this post


Link to post
Share on other sites

இந்நாள்

இன்று

நானும்

மறக்க

முடியுமா...???

நாங்கள்

இணைந்த

இந்த

திருநாளை

மறக்க

முடியுமா....??

சொர்க்கமதை

தந்த நாளை

மறக்க

முடியுமா....???

நல்ல

சுகந்தங்களை

தந்த நாளை

மறக்க

முடியுமா....???

வாழ்க்கையிலே

இந்த நாளை

மறக்க

முடியுமா....???

நாங்கள்

திருமணத்தில்

இணைந்த நாளை

மறக்க முடியுமா....????

வன்னி மைந்தன்

Share this post


Link to post
Share on other sites