கறுப்பி

கவிதை அந்தாதி

Recommended Posts

பயன் இல்லை என்று

பயந்து போதல் வேண்டாம்

அயர்ந்து படுத்தல் விட்டு

முயன்று பார்த்தல் நன்று

வியக்க வைக்கும் தலைவனவன்

விளக்கம் சில நாளில் வரும்

வழக்கம் என்று எண்ணாதே

ழுழக்கம் போன்று அது இருக்கும்

கலக்கம் வேண்டாம் தமிழா!

வன்னி மைந்தன் எழுதியதை கவனிக்கவில்லை. மன்னிக்கவும்

Share this post


Link to post
Share on other sites

தமிழா

கல் தோன்றி

மண் தோன்றாக்

காலத்தில்

முன் தோன்றிய

மூத்த குடிமகனே..

அளவாகக் குடிமகனே..

Share this post


Link to post
Share on other sites

குடிமகனே விகடகவி

குடி குடியைகெடுக்கும் என்பர்

உன் குடியை நீ காப்பாற்ற

இன்றே மறந்துவிடு திருமணத்தை

Share this post


Link to post
Share on other sites

விடியலாய் எண்ணி நானும்

விமானத்தில் காலை வைத்தேன்

விட்டிலாய் விழுந்தேன் இங்கே

விமோசனம் எனக்கும் உண்டோ

மனம்நிறை கணவன் என்று

மகிழ்வுடன் வந்த என்னை

அறிவிலி என்று எள்ளி

ஆக்கினை பண்ணும் கோரம்

மதுவினை மணம் முடித்தான்

மங்கைகள் தேடி நின்றான்

அடிமையாய் வேலை செய்ய

அமர்த்தினான் என்னை இங்கே

புலத்திலே நிறைவே என்று

மனத்திலே கொண்ட எண்ணம்

தவறது உணர்ந்து விட்டேன்

தப்பிட வழியும் உண்டோ

உண்டோடி பெண்ணே விமோசனம் இவ்விதியிலிருந்து

உண்டேடி என்று சொல்வேன் என் மதியிலிருந்து

வெற்றி தோல்விகள் எங்கெங்கும் உலகம் வந்ததிலிருந்து

செப்பனிடு வாழ்கையை நீ சென்றதை மறந்து

Share this post


Link to post
Share on other sites

மறந்து போக நினைக்கின்றேன்

மங்கை மனம் கனக்கிறதே

பறந்து செல்ல துடிக்கின்றேன்

பேதை மனம் பதைக்கிறதே

தூர தேசம் செல்ல எத்தணிக்கிறேன்

தூயவளின் இதயம் துடிக்கிறதே

பரலோகம் நுழைய முனைகின்றேன்

சொர்க்கமே நீ என்னருகில் வருவாயா ஒருகணம்

Share this post


Link to post
Share on other sites

ஒருகணப் பார்வையில்

ஊறிய அன்பே..

மெய்யா..மாயமா..

இளமையின் வரம்பில்

நடந்திட நிழல்கள்

விழுமா..வாழுமா..

தனிமைக்குத் துணையாய்..

தேடிடும் காதல்..

முதுமை காணுமா.. மாறுமா..

காதல் என்பது..

இந்தக் காலத்தில்

மெய்யா.. பொய்யா..

Share this post


Link to post
Share on other sites

ஒருகணப் பார்வையில்

ஊறிய அன்பே..

மெய்யா..மாயமா..

இளமையின் வரம்பில்

நடந்திட நிழல்கள்

விழுமா..வாழுமா..

தனிமைக்குத் துணையாய்..

தேடிடும் காதல்..

முதுமை காணுமா.. மாறுமா..

காதல் என்பது..

இந்தக் காலத்தில்

மெய்யா.. பொய்யா..

மானுடம் பொய் மக்களும் பொய்

காதல் மட்டும் காணுமெப்படி மெய்

கடவுள் காசாகும் காலமப்பா இது

காதலும் காமமாகும் தடுப்பது எது

Share this post


Link to post
Share on other sites

பொய்யாக

வந்து

ஏனோ

பொய்யாக

பேசுகிறாய்...???

மெய்யான

என்

காதலதை

ஏன்

பொய்யாக

தூற்றுகிறாய்...???

என்

மனதில்

உன்

நினைவு....

உன்

மனதில்

யார்

நினைவு...???

சொல்லிடடி

பெண்ணே...

Share this post


Link to post
Share on other sites

பெண்ணே..

நீ பேசாதிருந்து

அன்று கொன்றாய்..

மணத்தின் பின்..

பேசிப்பேசியே..

என்னைக் கொல்கிறாயே..

Share this post


Link to post
Share on other sites

கொல்கிறாயே

கொல்கிறாயே

மகிந்தா

ஏனோ

கொல்கிறாயோ....???

எம் தமிழை

ஏனோ

வந்து

தினம் தோறும்

கொல்கிறாயோ...???

வானேறி

வந்து

எம்தன்

வாழ்விடங்கள்

அழிக்கிறாயே...

அகதியாக்கி

எம் தமிழை

ஏனோ தினம்

கலைக்கிறாயோ....???

ஆண்டாண்டாய்

நாம்

ஆண்ட

மண்ணை

அட பாவி

வந்து

பறிக்கிறியே...

உந்தன்

படை

கூட்டி வந்து

குந்த வேறு

வைக்கிறியே...

எம் தமிழை

விதைவையாக்கி

இன்று

வேறு

கலைக்கிறியே...

உனக்கே

இது

முறையோ....???

Share this post


Link to post
Share on other sites

முறையோ எனக்கேட்டு

முறை தவறி

நடக்கும்..

சர்வதேசம்..

தலைபோகும் முன்னே

முடமான

யாழ்நாட்டை

காக்க வா...

இல்லை..

காக்குமெம்மவரை

பார்க்காமல் போ..

Share this post


Link to post
Share on other sites

போ...போ...

தமிழா போ....

போர்களம்

நாடியே போ....

தேடியே

பகை

எம்மை

தாக்குறான்..

எங்கள்

திண்ணையில்

குண்டதை

வீசிறான்....

குந்தவே

இடமின்றி

கலைக்கிறான்....

எங்கள்

குடிகளை

வந்தவன்

பிய்க்கிறான்...

எம் தமிழ்

உயிர்களை

குடிக்கிறான்...

தெருவிலே

பிணங்களாய்

எறிகிறான்....

தெரு நாய்க்கு

உணவதாய்

கொடுக்கிறான்...

எத்தனை

கோரங்கள்

ஆடுறான்....

எம்

தமிழ்

என்னடா

செய்கிறான்....???

இத்தனையும்

கண்டேன்

இருக்கிறாய்...???

எழுந்தோடி

களமாடா

போடா....!!!

Share this post


Link to post
Share on other sites

போடா என்ற சொன்னதற்கே கோபப்படுகிறாயே

பையன் என்பதால் தானே அப்படிச்சொன்னேன்

பதிலுக்கு நீயும் என்னை போடி என்று சொல்லியே

உரிமை கொண்டாடி உள்ளத்தினில் நெருங்காதே

Share this post


Link to post
Share on other sites

நெருங்காதே அன்பே நெருங்காதே

நெருப்பாக நீயும் என்னை தீண்டாதே

நெஞ்சினில் வந்து உறங்காதே

நெஞ்சத்தை வருடிப்போகாதே

Share this post


Link to post
Share on other sites

நெருங்காதே

பெண்ணே

நீ

நெருங்காதே....

நான் நீறு

புத்த

நெருப்பு

நெருங்காதே....

நெருங்கி

வந்து

என்னை

நீ

நெரிக்காதே....

நான்

தீண்டிவிடும்

அரவமடி

தீண்டாதே....

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

அவள்

போக்கிடமாய்

ஆக்கிடுவாள்

போகாதே...

ஆசை மொழி

பேசி

உன்னை

இழுத்திடுவாள்...

அம்போ

என்று

வீதியிலே

விட்டிடுவாள்....

காதல்

என்று

போலி

வேடம்

புண்டிடுவாள்...

உன்னை

கண்ணீரிலே

வாழும்படி

விட்டிடுவாள்...

நீ

காலம்

எல்லாம்

தேவதாசாய்

ஆகிடுவாய்...

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

அவள்

போக்கிடமாய்

ஆக்கிடுவாள்

போகாதே...

ஆசை மொழி

பேசி

உன்னை

இழுத்திடுவாள்...

அம்போ

என்று

வீதியிலே

விட்டிடுவாள்....

காதல்

என்று

போலி

வேடம்

புண்டிடுவாள்...

உன்னை

கண்ணீரிலே

வாழும்படி

விட்டிடுவாள்...

நீ

காலம்

எல்லாம்

தேவதாசாய்

ஆகிடுவாய்...

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

Share this post


Link to post
Share on other sites

தீண்டாதே தீண்டாதே

அவள் தீயானாலும்-நீ

தீண்டாதே என் அன்பே

பாம்பு தீண்டினால் விசம்

அவள் தீண்டினால் ரனம்

காதல் என்பது காட்டுத்தீ

அதற்கு நீயும் எரிதருவாகாதே B)

Share this post


Link to post
Share on other sites

இறந்தேனே உன்னை பிரியும் போதெல்லாம் இறந்தேனே

துறந்தேனே யாரின் பாசமெலாம் உனக்காய் துறந்தேனே

பறந்தேனே உன் அன்பு வானில் நான் சிட்டாய் பறந்தேனே

விழுந்தேனே உன் அவநம்பிக்கை அம்பு பட்டு நான்விழுந்தேனே

காயங்கள் மனதெல்லாம் ரணங்களின் வேதனைகள் கல்லாய்

போனதுன் இதயம் கனவாய் போனது உன் அன்பு

Share this post


Link to post
Share on other sites

அன்புடன் கவி படைக்க வந்திட்ட அன்பானவனுக்கு

அன்புடன் வரவேற்புக்களுடன் வடித்த கவி தனி அழகே

கவியின் முடிவுச்சொல்லில் இருந்தே ஆரம்பித்திட வேண்டும்

கவிதை அந்தாதியின் நிபந்தனை நிஜமாய் வடித்திட வேண்டும்

Share this post


Link to post
Share on other sites

வேண்டும் வேண்டும்..

விலக்கவேண்டும்..

ஐயிரண்டு மாதங்கள்

ஈன்றெடுத்த அன்னைமனம்

நோகவைக்கும் பிள்ளைகுணம்

விலக்கவேண்டும்..

மனைவியவளிருக்க..பிறர்

மாதர் நாடும்..சில

ஆடவர் குணம் இன்றே

விலக்கவேண்டும்..

ஆடை விலக்கி-காளை

மனங்கெடுக்கும்..சில

மாதர்குணம் உடனே..

விலக்கவேண்டும்..

இன்சொல் பலவிருக்க

பிறர் இதயம் நொருக்கும்

வன்சொற்கள் பாவனையை

இக்கணமே விலக்கவேண்டும்..

வட்டியென்றும் குட்டியென்றும்

ஏழைவயிறடிக்கும்-பண

விற்பனையை ஒருநொடிக்குள்

விலக்கவேண்டும்..

உறவுஎன்ற பாலங்களை

உடைத்தெறியும் ஏற்றத்

தாழ்வுகளை இன்றே.

விலக்கவேண்டும்..

காதலென்ற வெள்ளைப்பூக்கள்

சேற்றிலிடும் பாதகரை

தேசம்விட்டு..உடனே..

விலக்கவேண்டும்..

பிஞ்சுகளின் நெஞ்சுகளில்

நஞ்சையிடும் வஞ்சகத்தை

செய்வோரை புவிவிட்டு

இன்றே விலக்கவேண்டும்..

ஆசைகளில் கோட்டைகட்டி

இராசலீலை நடத்துகின்ற

மன அலைபாய்ச்சல்

யாவற்றயும்..இந்நாளே..

விலக்கவேண்டும்..

எனக்குள்ளே இருந்துகொண்டு

சமயங்களில் கழுத்தறுக்கும்

அறியாமை அதனை

விலக்கவேண்டும்..

Share this post


Link to post
Share on other sites

விலக்கவேண்டும் விலக்கவேண்டும்

அடிமை விலங்கை தகர்க்கவேண்டும்

விடுதலை பெற்று நம் இனத்தின்

அவலங்கள் நீங்கிடவேண்டும்

பால்மா இல்லாது அழும்-எம்

பச்சிழம் குழந்தகளின் அவலம்

பாரினில் எங்கு உண்டு-எம்

பாச உறவுகளின் சோகம் போல்

Share this post


Link to post
Share on other sites

சோகம் போல்..

முகத்தை வைத்து..

விழிகளாலே..சுட்டெரித்து..

உண்ணாமல்..விட்டொளிந்து..

மாலையாக என் மங்கை..

போர்வைக்குள் போவாளே..

தொட்டால் சிணுங்குவதும்..விரல்

பட்டால் உறுமுவதும்..அன்பு

முத்தத்தில்..ஊடல் தொலைய..

பூப்பூக்கும் கூடலே..

Share this post


Link to post
Share on other sites

கூடலே

வந்து

என்னில்

கூடுதே....

அன்பே

என்னில்

வந்த நேரம்

வந்து கூடுதே...

கண்கள்

வந்து

உன்னுருவை

காவுதே...

எந்தன்

நெஞ்சமது

உன் உருவை

தாங்குதே....

நித்தம்

உன்னை

கனவுயதாய்

காணுதே....

உன்னை

காணவில்லை

என்றால்

நெஞ்சம்

ஏங்குதே ஏன்...???

Share this post


Link to post
Share on other sites

ஏங்குதே ஏன் அன்பே

ஏழை என் மனம்-இங்கு

ஏங்குதே கண்ணே

ஏனிந்த ஏக்கம்

ஏமாந்த என் வாழ்வில்

ஏன் இந்த மாற்றம்

Share this post


Link to post
Share on other sites

ஏங்குவது ஏனென்று

எனைப்பார்த்துக் கேட்டதென்ன?

ஈங்கு இளவேணில் தரும்

இனிய கவி காண்கிலேனே....

வார்த்தை கோர்த்து

வரிகள் செதுக்கி

பாடல் செய்யும் புலவீரே!

அர்த்தமுள்ள ஆயிரம் கவி

அந்தாதியில் வரைகவே!

Share this post


Link to post
Share on other sites

அ ஆ வரிகள்

அந்தாதியில் வரைகவே-என

ஆதங்கம் உந்தனதை

இனிய கவிதையாக

ஈந்த உந்தனுக்கு

உணர்வு அதிகம்-ஆதி

ஊக்கம்தனை நீயும்

என்னக்கருவாக்கி

ஏறிந்தாயே வசமாக

ஜயமில்லை உன் கவி

ஒளிக்கிறது வளமா

ஓசை நயத்துடன்

ஒளவைபோல யார்

அஃதே வரைவது

கவிதை இங்கே

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.