Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

கவிதை அந்தாதி

Recommended Posts

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு உம் கவி பிடிச்சிருக்கு

கவலை மறந்து பாடல் ரசிக்க பிடிச்சிருக்கு

மழலைகளுடன் மழலையாய் மாற பிடிச்சிருக்கு

மழையில் நனைய பிடிச்சிருக்கு

மலர்கள் அழகில் மயங்கிட பிடிச்சிருக்கு

கண்ணாடி வழி விற்பனை பிடிச்சிருக்கு

தினம் தினம் செய்திகள் வாசிக்க பிடிச்சிருக்கு

விகடமாய் எழுதும் கவிதை பிடிச்சிருக்கு

விதண்டாவாதம் பண்ண பிடிச்சிருக்கு

வீசும் காற்று புயலாய் தழுவிட பிடிச்சிருக்க

இத்தனை பிடித்திருந்தும்

என்னை தான் எனக்கு பிடிக்கவில்லை

Share this post


Link to post
Share on other sites

இல்லை..

என்னை எனக்குப் பிடிக்குதே..

என்னோட முதல் இரசிகன்..

நானேதானே...

அடுத்தபிறவி என்றாலும்..

இதே உடல்..

இதே அம்மையப்பன்..

இதே சகோதரங்கள்..

இதே நண்பர்கள்..

இதே.. உலகம்...

எல்லாமும் வேண்டும்...

ஆனால் அப்போதாவது..

தமிழனுக்கென சொந்தமாய்..

ஒரு நாடு வேண்டும்..

Share this post


Link to post
Share on other sites

ஒரு நாடு வேண்டும்

தமிழர் நாம் வாழ

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

ஒரு நாளேனும் வாழ

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

நமக்கென மட்டும்

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

அது எப்போ கிடைக்கும்?

Share this post


Link to post
Share on other sites

ஒரு நாடு வேண்டும்

அது எப்போது கிடைக்கும்?

வெளியில் வந்து

புன்னகைத்து

பொது மேடைகளில்

ஆசையாக இப்படிக்

கேட்பதால் கிடைக்குமா?

ஒன்று செய்யலாம்

ஊரெல்லாம் வலம் வரும்

வானத்து வெண்ணிலாவை

உளவு பார்க்கச்

சொல்லலாம்!

ஏதேனும் சேதி

கிட்டின்

கேட்டுச் சொல்லுங்கள்

கனக்க எழுத

ஆசை தான்

எனக்கும்...

நேர முட்கள்

எந்தன் கட்டைவிரல்

உரசி அடுத்த வேலையின்

அவசியம் உரைப்பதால்

மீண்டொரு கணம்

வருவேன்

மெதுவாகப் பேசலாம்!

Share this post


Link to post
Share on other sites

மெதுவாக பேசலாம்

பதுமையே வா

பொது மைதானத்தில்

கை கோர்த்தபடி

மெல்லமாக நடந்து

செல்லமாக கொஞ்சி

Share this post


Link to post
Share on other sites

கொஞ்சி

விளையாடலாம் தான்

அஞ்சி அஞ்சி

நீ போனால்

ஆவதெப்போது?

பஞ்சி பார்க்காது

பக்கத்தில் வாவேன்

கஞ்சி குடித்தபடி

கதைக்க

பல கதை உண்டு!

குஞ்சி பார்த்தால்

குடும்பத்திற்கே

தெரியவரும்...

ஆதலால் யாரும்

பார்க்காமல் என்னிடம்

வா நீ!

கை கோர்த்தபடி

பொது மைதானத்தில்

நடை பழக

எனக்கு விருப்பமில்லை

மெல்லிய இருட்டில்

நட்சத்திர வானம்

பார்த்தபடி

நடப்பதெனில் கொள்ளைப்

பிரியம்...

என்ன ஒன்று

கூடவே வெண்ணிலாவும்

வரும்...

Share this post


Link to post
Share on other sites

வரும் வெண்ணிலா

தரும் வெளிச்சத்தில்

சேரும் இருவரையும்

யாரும் பார்த்தால்

என்ன நடக்கும் என்பதை

அன்ன நடை நடந்து என்

கன்ன்க் குழி ரசிச்சு உன்

சின்ன மனசினில் அசைபோடு

நடப்பது ஏது என நீ கூறின்

தடைகளை தாண்டி உடன்

வருவேன் உன் பக்கத்தில்

தருவாயா முத்தங்களை

Share this post


Link to post
Share on other sites

முத்தங்களை நான்

தருவேன்

அர்த்தங்களை நீ

புரிவாயா?

வித்தகக் கவியிவன்

விண்ணாளாவும் தமிழோடு

விளையாடும் வெள்ளை நிலாவே

கொள்ளையழகும் சின்னவிதழும்

நான் சுவைப்பேன்

சிணுங்காமல் சிறைப்பட்டு

நீ கிடப்பாயா?

பாஷை பல பேசி

நேர முட்களை

சோம்பலோடு நோக்குவதென்ன?

ஆசை புரிய வைக்க

அன்பால் சிறை வைக்க

மீசை குற்றினாலும்

மிடுக்காக நான் தரும்

முத்தங்களே பல

பாஷை பேசுமடி!

பதிலாக நீ ஏதும்

பேசாதே...

சரியாகக் கணக்கிட்டு

முத்தங்கங்களைத்

திருப்பித் தருவாயா?

Share this post


Link to post
Share on other sites

திருப்பித் தருவாயா

திருமகனே

பருவத்துடிப்பின்

இன்பமதை?

புள்ளி மானாய்

துள்ளி வருவேன்

கள்ளி நான்

உன் முன்னால்!

விண்ணிலாவின் ஒளியில்

மண்ணில் இருந்து நாம்

கண்கள் இறுக மூடி

நம்மை நாமே ரசிப்போமா?

ரசிப்போம்

மறப்போம்

சுவைப்போம்

துடிப்போம்

வா வா அன்பே வா

என்னருகே வா

உல்லாசமாக சிறகின்றி

பல்லக்கில் ஏறி

செல்லமாக கதைபேசி

நிலாவுக்கு செல்வோம்

Share this post


Link to post
Share on other sites

நிலாவுக்கு செல்வோம்...

உலாவவல்ல..

நிலாக்குழிகள்..

நீர் சுரக்கவில்லையாம்..

பூமியில் நீர் வாங்கி

நிலாவில் ஒரு குடித்தனம்...

நீயும் நானும்..

நெடுநேரம் பேசிக்கொண்டு...

பசி கேட்கும் வேளை..

உனக்கு நானும்..

எனக்கு நீயும்....

தூக்கம் சேரும்.

என்மடி உனக்கும்..

உன்மடி எனக்கும்..

காலப்போக்கில்..

உன் முகமெனக்கும்..

என் முகமுனக்கும் சலிக்கும்..

..தெரியும்..

மெய் வலிக்கும்..

ஆனால்..

உணமை அதுதான்..

அன்று பூமி திரும்புவதைக் காட்டிலும்.

இன்றிலிருந்தே..

பெண்ணே..

யதார்த்தவாதிகளாய்..

அழகான இந்த பூமியிலேயே..

அன்பாக வாழ்வோமே.. :blink:

Share this post


Link to post
Share on other sites

அன்பாக வாழ்வோமே

துன்பங்கள் மறந்து

இன்பங்கள் நிறைந்து

கண்களால் பேசி

கைகளால் அணைத்து

மெய்களை மூடி

யாருமேயில்லாத வேளை

இருவரும் தனித்திருந்து

வான்வெளியில் ஒலிக்கும்

நட்சத்திரத்தை பிழையின்றி

எண்ணுவோம் வா அன்பே

Share this post


Link to post
Share on other sites

அன்பே என்றழைத்தது..

யாரோ..

ஆள் மாறி அழைத்தாயோ..

வெண்ணிலாவே..

உன்னொளியில் பால் வெளியில்

துள்ளித்திரிந்த காலம்..

நெஞ்சிலிக்கிறதோ...

..

நேசம் மறந்த நிலை

மாறிப் பேசத்துடிக்கிறதோ...

இருளில் மூழ்கி இருந்தவன்தான்..

வெண்ணிலா வெளிச்சத்தில் தெரிந்தவன்தான்..

இன்று

நான்.. அவனில்லை

புஜங்கள் திணவெடுத்து..

எரிவிழியில்..தணலெடுத்து..

வெறுப்புமிழ்ந்து..

வேறான.. இவன்..

நிலாவுக்கும் பொருந்தான்.

உலாவுக்கும்.. பொருந்தான்..

எரிமலை மேல் பூவுக்கு

ஏதடி மெத்தை..என்..

இளையவன்..

வருவான்.. காட்டங்கே வித்தை.. :blink:

Share this post


Link to post
Share on other sites

வித்தை காட்ட

விருப்பப்பட்டே நானும்

இங்கே வந்தேன்!

மெத்தை மீது

தத்தை தவழ்கின்ற

காலம் எப்போது வரும்?

உலகுக்கு ஒளியூட்டும்

வானத்து நிலாவே...

மண்ணகத்தில் உலவுகின்ற

பெண்ணவளின் உள்ளத்தை

உளவு பார்த்துச் சொல்லாயோ?

களவு போனதெந்தன்

உள்ளம் மென்று

நிலவு நீயும்

சொல்லாயோ?

அழகு நிலா ஓடி வந்து

அருகில் அமர்ந்தால் போதும்...

பங்கயக் கன்னம் வருடி

என்கையில் முகத்தை ஏந்தி

இதழிலே எழுதுவேன்

பல கவிதை நான்!

எழுத எழுத

ஏதேதோ உளறுகிறேன்

கள்ளுண்டு மயங்கலாம்

கன்னியவள் இதழ் உண்டும் மயங்கலாம்

கன்னித் தமிழ் அறிய அறிய மயங்கலாம்

எதனால் நான் மயங்கினேன்?

ஏன் இப்படி உளறினேன்?

பெரியவர்(ன்) வந்து

என் சிந்தை

தெளிய வைப்பீர்(பான்) என்றெண்ணிப்

போகிறேன் - மீண்டும்

இங்கு ஏகுவேன்!

மிடுக்காகப்

பல கதை பேசுவேன்!

Share this post


Link to post
Share on other sites

பல கதை பேசுவேன்

மண்ணோடு நான்

சில நிமிடம் என்னை

மூடாதே முகிலே

விண்ணில் இருக்கும்

வெண்ணிலாவின்

செல்லக் காதலன்

மண்ணில் இருக்கிறான்

அவனோடு சற்று

அன்போடு பேச

என்னை மூடாதே

கரும் முகிலே

வித்தைகள் காட்ட

மெத்தையருகே வந்து

நத்தை போல ஊரும்

தத்தை எனை வாரி

அணைக்க வரும் என்

அன்பானவனைக் காண

கண்திறந்து காத்திருக்கிறேன்

கருமுகிலே எனை மூடாதே

Share this post


Link to post
Share on other sites

கருமுகிலே எனை மூடாதே -- என

காவிறையும் காரிகையே

கருமுகில்தான் நினைத்தாலும்

கன்னியுன்னை மூடாதே!

கடுகி வரும் காற்று

கருமுகிலில் மோதிடும் போதே

கண்ணீராய்க் கொட்டிடுமே

காய்ந்த நிலம் களிகொள்ளுமே!

கன்னிநிலா முறுவலிக்க

கருங் குவளையும் ப+த்திடும்பார்.

Share this post


Link to post
Share on other sites

பார் வேடிக்கை

வினோத..இவர்

நிகழ்ச்சி..

ஏட்டில் முதலெழுதும்... நாள்...

"அ"வும்.. "ஆ"வும்...

கடமை என...

ஏடு தொடக்கல்..

இன்று..நாடு விட்டு நாடு வந்து..

நம் தமிழ் வளருதென்று..

பெருமை எதற்கு...

யாரைக்கேட்டாலு..

தமிழ் எழுதத் தெரியவில்லை..

படிக்கதெரியவில்லை...

பேசத்தெரியவில்லை..

கடமை..

ஏடு தொடக்குதல் அல்ல..

தமிழை நம் பிள்ளையிடம் வளர்த்தல்..

செய்வாயா

புலத்தே வாழ் தமிழா...

Share this post


Link to post
Share on other sites

தமிழா எனக்கொன்றும்

புரியவில்லையடா...

எங்கேயோ தொடங்கி

பேச்சை வேறு திசையில்

நகர்த்திப் போவதென்ன?

நிலாவொன்று முகம்

காட்டக் காத்திருக்க

நின்று ரசிக்கக் கூட

நேரமில்லையா?

ஒன்றுக்கு இரண்டு வேலை

ஓயாமல் "ஐ யாம் பிஸி"

சேர்த்துச் சேர்த்து

என்ன கண்டாய்?

பால் போல பல நிலா

இங்கே பவனி வருகையில்

கால் மேல் கால் போட்டு

கண்ணடிச்சு ரசிக்க வேண்டாமோ?

வேல் எறியும் விழிகளுக்கு

உன்னிதயம் காட்டவேண்டாமோ?

கீல்ஸ் போட்டு நடக்கும்

வெள்ளைக் காரி கதை விடு

பார்க்காமல் பார்கின்ற

நிலாவுக்காய் உயிரை விடு!

Share this post


Link to post
Share on other sites

நிலாவுக்காக உயிரை விடு

உன்னைச் சரணடைவேன்

வெள்ளைக் காரி கதை மற

என்னையே தினமும் நினை

எங்கோ தொடங்கி

எங்கோ முடிவதுதானே

எங்கள் வாழ்க்கை

ஏங்காதே கண்ணா நீ

பால்போல நிலா தினம்

உலா வருவாள் இங்கு

கால் மேல் கால்போட்டு

வேல்விழிகளை ரசித்திடு

கலங்காதே தயங்காதே

கலங்கரை வெளிச்சமாய்

ஒளித்திடு மங்கலாகாதே

ஓயாமல் நீ வரவேண்டும்

படைப்போம் நாம் காவியம்

உடைப்போம் நம் தடைகளை

வந்திடு கவிதை பல படைத்திடு

வானத்து நிலாவை பிடித்திடு

Share this post


Link to post
Share on other sites

நிலாவைப் பிடித்திடுவென்று

நிலாவே சொல்லும் போது

இன்னொரு

கலாவை நான் நினைப்பேனா?

கற்பனைத் தேரேறி

கவிதை கூட எதுமா என் பேனா!

பலாவை மொய்கின்ற

ஈயாவேன்...

மார்போடு உனை அணைத்து

உனக்கொரு தாயாவேன்!

இராவை இன்னும்

கொஞ்சம் நீளச்செய் - இந்தப்

புறாவை நான் இன்னும்

முத்தமிட!

நாம் காவியம்

படைக்கவேண்டாம் கண்ணே

நம் உறவு கண்டு

பலர் இங்கே கவிகளாவார்!

நாம் படைக்கின்ற காவியம்

உன் வயிற்றில் வளரப்போகும் ஓவியம்!

ஓயாமல் நான் வருவேன்

கலங்காதே கண்ணே

என் நெஞ்சில்

சாயாமல் சாய்ந்திடு

சல்லாபம் புரிந்திடு!

Share this post


Link to post
Share on other sites

புரிந்திடு என்னை

பிரியாதே என்னவனே

ஓவியம் என்னில் வளர

காவியங்கள் நீ எழுது

சிரித்திடுவேன் உனைக்கண்டு

சிலிர்த்திடுவேன் எனை மறந்து

அணைப்பேன் கனவில் உனை

துணையாவாயா நனவில் நீ

Share this post


Link to post
Share on other sites

நீ

எய்கின்ற கவிப் பூக்கள் நன்று

நிமிடத்தில் பல கவிதை

எனக்குள்ளே தோன்றதடி இன்று!

பூ

பூக்கின்ற மெல்லிய ஓசை

செடி அறிந்திடும்

பெண் மனசில் பூக்கின்ற

காதலின் பாஷை

அவள் கண்ணில் புரிந்திடும்!

விழியாலே அழைப்பாள்

விரதங்கள் உடைப்பாள்

மெளன மொழி பேசுவாள்

மயக்கத்தில் ஆழ்த்துவாள்

முதல் ஸ்பரிசத்தில்

இதயத்தில் சிறகு முளைக்கும்

அவள் அருகிருந்தால்

எல்லாமே அந்நியமாகும்!

காதல்

சொல்வது போல்

அழகானதல்ல - அது

அழகிய

அவஸ்தையானது!

Share this post


Link to post
Share on other sites

அவஸ்தையானது உன் காதலா

அருவருப்பாகின்றேன் நான்

உன்னதமானது நம் காதல் என

உன்னை எண்ணி நானிருந்தேன்

காதலால் தவித்தேன் அன்று

காதலால் துடிக்கின்றேன் இன்று

காதலே எனக்கு வேண்டாம்

காதலே என்னை நீ நெருங்காதே

காதலை மறக்கின்றேன்

கவிதையை துறக்கின்றேன்

உன்னிடமிருந்து விலகுகிறேன்

உத்தமனே நீ நீடூழி வாழ்க

Share this post


Link to post
Share on other sites

வாழ்கவென வாழ்த்தியென்னை

போகின்ற ஒளி நிலாவே...

மறக்கின்றேன் காதலையென்று

மற்றவர் அறியச் சொன்னாய்

துறக்கின்றேன் கவிதையையென்று

துறவறம் பேசி நின்றாய்

அவஸ்தையானது காதலென்று

நான் உரைத்தேன்

காதல் ஆகாதது என்று

எங்கேனும் நான் உரைத்தேனா?

'அழகிய' என்ற அடைமொழி

கவனிக்க கன்னியே...

சொல்லுகின்ற சொல்லுக்கு

நேர் பொருள் நோக்கின்

நேருகின்ற பெருந் தவறு

உன்னாலே அறிந்தேன்!

எழுதுகின்ற எழுத்துக்குள்

எழுதாத பொருள் ஒன்று

ஏங்கிக் தவிக்குமே

ஏனடி மறந்தாய்!

கட்டை விரல் மண் தேய்க

கடைக் கண் எனைப் பார்க்க

அறிந்தவர் சொல்வார்

இதற்குப் பெயர் காதலென்று

அறியாதவர் சொல்வார்

அவளுக்கு ஏதோ வியாதியென்று!

ஏதும் அறியாது

ஏங்கித் தவிக்கின்றாய்

போதும் விளையாட்டென்று

விலகிப் போகின்றாய்!

மண் மீது கொண்ட காதலை

வானத்து நிலா என்றேனும்

மறந்ததுண்டா...?

ஒளி தர மறுத்ததுண்டா?

கல் மனமடி பெண் மனம்

காட்சி புரியாவிட்டால்

கல் எறியும்!

புரிந்து விட்டால்

கற்கண்டு போல்

கசிந்துருகும்!

Share this post


Link to post
Share on other sites

கசிந்துருகும் கன்னி மனம் கண்டு

நேசித்திடு என்னவனே

குடைகள் மோதியதால்

கடைவிழி பார்வையில்

உன்னில் விழுந்தவள் நான்

என்னை விட்டு போகாதே

அழகிய அவஸ்தையை

அவசரத்தில் மறந்தேன்

மீண்டும் வருகின்றேன்

மாண்டு போகாத காதலோடு

போகாதே நீ போகாதே

வந்தேன் நான் வந்தேன்

உனக்காகவே வந்தேன்

எனக்காக நீ போகாதே

Share this post


Link to post
Share on other sites

போகாதே தள்ளிப்போகாதே

என் தேசம் விட்டுப்போகாதே

போர்மேகம் சூழுதடா

புலி வீரர் வெற்றிவாகை சூடுறாருடா

புகழ்பாடா வாடா நீயும்

புத்தம் சரணம் கச்சாமி

சத்தமில்லாமல் செத்தும்போச்சு

களமாடிய புலி எல்லாம் - இன்று

கரும்புலியாகி கொடியேற்றுதடா

விழியெல்லாம் நீர்சொரிய

தமிழன்னை வெற்றியள்ளித்தாறளடா

போகாதே தமிழா தள்ளிப்போகாதே

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற அவதார் 2 படக்குழு தனிமைப்படுத்தப்பட்டது   ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. இந்த சாதனையை கடந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7, 500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் தொடர்ந்து நடந்து வந்தன.   இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க நியூசிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் அவதார் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழுவினர் வெளியேறினார்கள். 2 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஜான் லேன்ட்ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதார் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்றும் படப்பிடிப்புக்காக நியூசிலாந்து செல்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார். ஜேம்ஸ் கேமரூன் உள்பட 50 பேர் கொண்ட படக்குழுவினர் தனி விமானத்தில் நியூசிலாந்து சென்றுள்ளனர். இது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. இருப்பினும் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால் நியூசிலாந்து அரசின் விதிமுறைப்படி அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். படப்பிடிப்புகளில் தாமதம் ஏற்பட்டாலும் அவதார் 2 படம் அடுத்த வருடம் டிசம்பர் 17-ந் தேதி திட்டமிட்டபடி திரைக்கு வரும் என்று ஜேம்ஸ் கேமரூன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.   https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/04074431/1575767/James-Cameron-Goes-Into-14Day-New-Zealand-Quarantine.vpf  
    • சிட்னி முருகன் வைகாசி விசாக திருநாள் 
    • பிள்ளையை தத்தெடுத்தல் நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/).    அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்றைக்கு எனக்கு வந்த கடிதத்தை பார்த்துவிட்டு, தான் வைத்திருந்த AUD20/- தந்தார் அவர்களுக்கு சேர்த்து அனுப்ப சொல்லி.  நான் கேட்கவில்லை, அவராக தந் து மிகவும் சந்தோஷமாக இருந்திச்சு (மூன்று பிள்ளைகளுக்கும்  உதவி செய்ய விருப்பம், ஊருக்கு போகும் போது வொள்ளவத்தை யாழ்பாணத்தில் நிற்கும் வறியவர்களுக்கு பணம் அவர்களை கொண்டுதான் கொடுப்பேன்).  வந்த கடித்ததில் இருந்த படம் :    பிறகு கேட்டார் தான் ஒரு பிள்ளையை தத்தெடுத்து படிப்பிக்கப் போகின்றேன் என்று, அந்த பிள்ளை சின்ன பிள்ளையாக இருக்கனும் என்பது அவாவின் வேண்டுகோள். அப்ப நில்மினி தந்த  மகளிர் இல்லத்தில் (https://mahalirillam.org/au/sponsorship/) ஒருவரை தேர்ந்து எடுக்க சொல்லியுள்ளேன், அவர் அவர்களை இன்று தொடர்பு கொண்டுள்ளார், பார்ப்போம். அவரின் கனவு ஊரில் ஒரு வைத்தியசாலை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்ப்பது தான். பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.   மனைவியிடம் கர்நாடக சங்கீத படிக்க வந்த சின்ன பிள்ளைகளில் சிலர் மகளிடம்தான் படிக்கனுமென்று விரும்பினார்கள், அதனால் அவருக்கும் வருமானம் வருகின்றது, இப்ப ஆண்டு 11. அத்துடன் வரைதல் பாடமும் எடுக்கின்றவா சிலருக்கு, அவர் வரைந்த படம், போனகிழமை தன் நண்பிக்கு கொடுக்க வரைந்த படத்தை, நாங்கள் சுட்டு வீட்டில் மாட்டிவிட்டோம், இப்ப வேற வரைகின்றா    
    • நீங்கள் எழுத நினைப்பதை என்னை சாட்டி எழுதுறீங்கள் போல. நாங்கள் எங்கே எழுதினோம்.. கறுப்பர்கள் எல்லாரும் கள்ளர் என்று. மேலும்.. அமெரிக்காவில்.. கறுப்பர்கள் இனவிடுதலைக்காகவா.. போராடுறார்கள். சமூகக் குற்றங்களை செய்துவிட்டு..  அதில் இருந்து தப்ப வன்முறையை தெரிவு செய்கிறார்கள். அதுவே.. அவர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கும் காரணத்தை தேடிக் கொடுக்கிறது என்பதை தான் சொல்லி இருக்கிறோம். கறுப்பர்கள் (பொதுவாக.. எல்லோரும் அல்ல) எடுத்ததுக்கு எல்லாம் வன்முறையை கையாளாமல்..  சட்டத்தை மதித்து.. சமூக அக்கறையோடு மற்றைய சமூகங்களையும் மக்களையும் மதித்து நடந்து கொண்டால்.. அவர்கள் மீதான மனித உரிமை மீறல்களை வெகுவாகக் குறைக்க முடியும். மற்றும்படி.. கறுப்பர்கள் நாடுகளின் பொருண்மிய வளர்ச்சிக்கு கட்டுமான வளர்ச்சிக்கு மற்றும் இதர சேவைகளுக்கு ஆற்றும் பணியை நாங்களும் எல்லோரும் மதிக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்தில்லை.  ஆனால் வீதி வன்முறைகளில்.. போதைப்பொருள் விற்பனை.. வன்முறைகளில்.. கத்தி வன்முறைகளில்..  இவர்களின் பங்களிப்பு மற்றையவர்களை விட அதிகம் இருப்பதும் துரதிஷ்டம். இதனை அவர்கள் களைய வேண்டும்.