Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

கவிதை அந்தாதி

Recommended Posts

முடியாமல் போனதேன்

படிப்பை தொடரமுடியாமல்

இடிந்து போய் நிற்கின்றேன்

அடியாத மாடு படியாது என்றே

தடி கொண்டு படி படி என்றே

அடித்து அடித்து வளர்த்த அப்பா

அடிக்கு ஓடி ஒளிந்திட்ட என்னை

தேடி தேடி அணைத்திட்ட அம்மா

மடியாது நினைவுகள் என்றும் நெஞ்சினில்

Share this post


Link to post
Share on other sites

நெஞ்சினில்..

நெருஞ்சியடி

வஞ்சியே..

வானவில்லே..

கொஞ்சமும்..

வஞ்சமில்லா

நெஞ்சிலே நீ..

மட்டும் இருந்தால்..

வசந்தம்..உன்..

தங்கையும்.

வந்ததால். இட

நெருக்கம்.

Share this post


Link to post
Share on other sites

நெருக்கமாய்...

நெஞ்சினில் நீ வந்த பின்னால் தான்

என்னையே நான் எனக்கு

அறிமுகமாக்கினேன்...!

அதுவரை நான் எங்கிருந்தேன்...???

உன்னினுள்தான் எங்கோ

ஒழிந்திருந்தேனா..?

இல்லை -உன் வரவால் தான்

தன் நிலை தெளிந்தேனா...?

இத்தனை நாளும்

என்னமோ செய்தேனே..??

உனைசந்தித்த பின்னால் தான்

உனக்காக - ஒவ்வொன்றும்

செய்கிறேன்...!!

அர்த்தமற்ற வாழ்க்கையை

அர்த்தப் படுத்தியவள் - நீ

வெற்றுக் கண்ணாடிக்கு

முலாமிட்டவள்

நீ தானே..... :wub:

Share this post


Link to post
Share on other sites

நீதானே எல்லாம்

என்றென்னை சுட்டுவிரலால்

தொட்டுக்காட்டி..

அழகான பொய்களை அடுக்கி கொண்டு

போகிறாயே.. அன்பே...

நீ என்ன அரசியல்வாதியா..

Share this post


Link to post
Share on other sites

அரசியல்வாதி மட்டுமா

அடுக்கடுக்கா பொய் சொல்லுறான்

ஆண்மகன் எல்லோருமே

அப்படித்தானே வாழ்கின்றனர்

பெண்களை ஏமாற்ற

ஆண்மகன் வாயில்

யாருமே அறியாவண்ணம்

பூசிய உதட்டுசாயமே

பொய்.. பொய்.. பொய்!

ஆமாம்

அது பொய் தான். :wub:

Share this post


Link to post
Share on other sites

பொய்.. பொய்.. பொய்!

ஆமாம்

அது பொய் தான் இன்று

புரியாத

உணர்வு வலிக்க

இதயம் கனக்க ஓர் கவி

ஒளியின் ஒளியாய்

சிரிப்பின் சிரிப்பாய்

உறுதியின் உறுதியாய்

வாழ்ந்திட்ட சரித்திரம்

பூமியில் சரிந்ததேனோ?

விதியென்று இருள்கொண்டு

வந்ததேனோ?

பல பூக்கள் சிகப்பாகி

சேர்ந்ததேனோ?

விடியலின் விடிவெள்ளி

விடிய முதல் சென்றதேனோ?

சாபங்கள் எம்மோடு

தொடர்வதேனோ?

Share this post


Link to post
Share on other sites

தொடர்வதேனோ என்னை?

நிமிர்ந்து பார்த்து

நிலவைக் கேட்டேன்!

தலை கவிழ்ந்து

முகம் பார்த்துச் சொன்னது

நிலவு...

களவு போன என்

உள்ளத்தை களவாடிய கள்வன்

இவனா என அறியத் தொடர்ந்தேன்!

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்தேன் உன்னை

தொலைந்த என்னைத்தேடி

கண்ணாளனே என்னை நான்

கண்டெடுத்தேன் உன்னில்

நிஜமா இது நிஜமா

நீயா திருடினாய் எனை

நான் உனைப் பார்க்க

விண்ணில் இருந்து

மண்ணை நோக்கினேன்

மணவாளனே என்ன அதிசயம்

வெண்பஞ்சு மேகங்கள்

வெண்ணிலாவை மறைக்கின்றன

திருமகனே என் மனமகனே

ஒருமுறை எனை நோக்கு

உன் கண்ணொளி பட்டு

வெண்பஞ்சு மேகம் ஓடட்டும்.

Share this post


Link to post
Share on other sites

வெண்பஞ்சு மேகம்

ஓடட்டும்

வெள்ளி நிலா

ஒளி வீசட்டும்

விழியிரண்டும் அவனைத்

தேடட்டும்

கனவுக்குள் அவன்முகம்

தோன்றட்டும்

நினைவு சொன்ன நாட்கள்

அவனாகட்டும்

Share this post


Link to post
Share on other sites

அவனாகட்டும்

உன் காதல் வானம் - உன்

செவ்விதழாகட்டும்

அவன் பருகும் தடாகம்!

மொட்டு அவிழட்டும்

அவன் கைகள் பட்டு

சொட்டுச் சொட்டாய்

ஜீவன் உருகட்டும்

கட்டு அவனை

காதலில் கட்டு

விட்டுப் பறக்காது இனி

அவன் காமனின் சிட்டு!

காட்டு உன்னழகை

அவன் முன் காட்டு

பார்த்து கண்கள் இமைக்காது

பார்த்து எழுதுவான்

பல பாட்டு!

நிப்பாட்டு

மின்சாரத்தை

அவன் ஆழட்டும்

உன் அழகின் சாரத்தை!!!

Share this post


Link to post
Share on other sites

அழகின் சாரத்தை அடடா இங்கு கண்டேன்

காதல் இரசம் சொட்டும் காமபாணங்கள்

கவி அந்தாதியை காதல் அந்தாதியாக்கி

கறுப்பிக்காவை விரட்டி விட்டதோ? :wub::lol:

காதல் கிறுக்கர்களே!

கவி அந்தாதிக்கு விடுதலை கொடுப்பீர்!

புதிதாய் ஒரு திரியெடுத்து

காமரசம் சொட்டச் சொட்ட

காதல் லீலைகளின் காட்சி பகிர்ந்திடுக!

காதல் அந்தாதியில்

தின்ற ஊண் செறிக்காத தினவர்கள் பார்வையிடப் படைப்பீர்! :D:blink::huh:

Share this post


Link to post
Share on other sites

படைப்பீர் கவிதை அழகாய்

தடையேதும் இல்லை சுவைக்க

படை கொண்டு வந்து தடுத்திட்டாலும்

விடைகொடுத்து முடித்திடமுடியாத அந்தாதி

ஆதிமுதல்வனாய் அந்தாதியில் நனைய

ஆறுமுகனை நினைந்து கவிதை படைத்திடுவீர்

ஆதி அருள் கிடைத்திடும்

Share this post


Link to post
Share on other sites

ஆதி அருள் கிடைத்திடும்

என்று எத்தனை நாள்

காத்திருந்தேன்

பாதி அருள் கூடக் கிடைக்கவில்லை

இது வரை!

என்றாலும்

சோதி ஒரு நாள்

என் வாசல் வரும்

கூவி எனை அழைத்து

புகழ் குன்றில் எனை

ஏற்றிவிடும்...!

காவிப் பல் தெரிய

ஏளனமாய் சிரிக்காதீர்

ஆதி தமிழின்

செல்லப் பிள்ளை நான்!

Share this post


Link to post
Share on other sites

நான்முகன் மைந்தர் நால்வர் நின்றனர்!

மௌன குருவிடம் மௌனம் பயின்றனர்!

நால்வரில் ஒருவன் ஆறுமுகமாயினன்!

ஆறுமுகமானவன் வேலெடுத்து வென்றனன்!

வான்மனளை மணந்தவன் வள்ளியையும் கவர்ந்தான்!

நானிலத்தோர் உய்வதற்காய் நல்லூரில் லுறைந்தான்.

Share this post


Link to post
Share on other sites

உறைந்தான் புன்னகையோடு..

ஊர்கிடந்தழ - தமிழ்

மகன்தான் மறைந்தான்

மண்ணோடுகல்கலங்க..

புன்னகைத்தீபத்தில்...

அமிலந்தெளித்தவனை

மாலையிட்டு கௌரவிக்கும்..

தேசமன்னர்கள்..ஆசைக்கே..

சமாதனப்புறாக்களை

சட்டியிடுவதென்ன.. ஆயுதக்கிடங்கை

அகலமாக்கி.. நவீன

பீரங்கியை விற்கவென்று...

உலகப்பூங்காவை சுடு

காடாய்ச்செய்த சர்வ அதிகாரர்களே...

மழலைப்பூவை ரசிக்க வாருங்கள்..

அம்மா அன்பை உணர்ந்து பாருங்கள்..

அன்பு காட்டி வாழ்ந் பாருங்கள்..

சிரித்து க்கலந்து வாழ்ந்து பாருங்கள்..

எளிமை இன்பம் நுகர்ந்து பாருங்கள்..

ஒருநாள் ஏழையாகி தூங்கிப்பாருங்கள்..

வியர்வை சிந்த உழைத்துப் பாருங்கள்..

இயற்கை காற்றில் நனைந்து பாருங்கள்..

வங்கிக்கணக்கை வளர்க்கும் நீங்கள்...

வாழ்க்கை எது நினைத்துப்பாருங்கள்

Share this post


Link to post
Share on other sites

நினைத்துப் பாருங்கள்

உன்னை காதலிக்கும்

என்னை ஒரே ஒரு கணம்

கண்ணிமைகளை மூடி..

உற்றுப்பாருங்கள்

வெற்றுத்தாள்தான் நான்

என்மேல் எழுதிடு

உன்கவிக் காவியத்தை

உனதழகி நிலவவள்

இன்றும் உனக்காக

உருகுகின்றேன் தினமும்

உயிரே வா கரம் கோர்க்க

Share this post


Link to post
Share on other sites

கரம் கோர்க்க

நான் வருவதானால்

சிரம் தாழ்த்தி

நீ ஒன்று கேட்கவேண்டும்

பரம் பொருள் காலடியன்றி

என் காலடி என்றும்

தொழக்கூடாது...!

ஏனெனில்,

கால் வாருகின்ற

ஆசை உனக்கேதும்

இருந்தால் அடியேன்

பாவமன்றோ...!

Share this post


Link to post
Share on other sites

அன்றோ அவள் பாவை..

அராதித்தேன்..

வார்த்தை யேதும் வாய்வழி

விழாதா எனத் தவங்கிடந்தேன்...

இன்றோ அவள் மேதை..

சிறிது வாய் மூட மாட்டாளாஎன

நொந்து போய் இருக்கிறேன்..

ஆசைபட்டதும் நான்தான்..

அதற்காக இப்படியா இறைவா..

Share this post


Link to post
Share on other sites

இறைவா உனை

இறைஞ்சுகின்றேன்

இந்த ஜென்மம் போல

இனிமையான நம் உறவு

இடைவிடாமல் தொடரணும்

இறுதிக்காலம் வரை

Share this post


Link to post
Share on other sites

இறுதிக் காலம் வரை

இடைவிடாது தொடரும்

உறுதிமொழி ஏதும்

தரமுடியாது என்னால்...

சும்மா உதட்டளவில்

உச்சரிக்கப்படும்

உறவுகளில் எனக்கு

உடன்பாடில்லை!

உள்ளத்தில் கொப்பளிக்கும்

அன்பருவியில்

நீராடுகின்ற உற்சாகத்தை

தருகின்ற உறவு

முற்றுப்புள்ளி எதுவுமின்றி

முடிவிலிக்கு அழைத்துச்செல்லும்!

ஆகவே இறைவா..

என் உள்ளத்தில் என்றும்

அன்புப் பூக்கள்

பூத்துக் குலுங்கவிடு...

அது போதும்

உறவு தொடர...!

Share this post


Link to post
Share on other sites

உறவுகள் தொடரும்

இறுதிவரை இதேபோல

உதட்டளவில் இல்லை

இதயத்தில் இருந்து

கூறு ஒருமுறை அன்பே

மறுப்பேதும் சொல்லாமல்..

நிம்மதியாக இருக்கின்றாயா

அம்மணியை நீங்கியதால்

வருவேன் நாளைமறுதினம்

வரவேற்பியா செங்கம்பளம்

விரித்து இவ்வெண்ணிலாவை...

Share this post


Link to post
Share on other sites

வெண்ணிலாவை

செங்கம்பளம் விரித்து

வரவேற்கின்ற அவசியம்

ஏதேனும் உண்டா?

நீலக் கம்பளம் விரித்து

இயற்கை வரவேற்பதை விட

அடியேன் பெரிதாக என்ன

செய்துவிட முடியும்?

நிம்மதி ஆளை நீங்குவதாலோ

ஆளோடு கூட இருப்பதாலோ

கிடைத்துவிடுமா என்ன?

மனதுக்குள் சாந்தப்

பன்னீர் தெளித்தால்

கூட்டத்தில் கூட

குட்டித் தூக்கம் போடலாம்...

என்றாலும் வரவேற்பியா

என்ற கேட்டபடியால்

யாழ் களம் எங்கணும்

போஸ்டர் அடிக்கலாம்

என்று இருக்கிறேன்...

செலவு மட்டும்

உன் பொறுப்பு..!

Share this post


Link to post
Share on other sites

உன் பொறுப்பு

என்று சொல்லி

சாதுரியமாக நழுவும்

சாந்தமானவனே

வெண்ணிலாவுக்கு

செங்கம்பளமும் வேண்டாம்

போஸ்டரும் வேணாம்

வரவேற்பும் வேண்டாம்

பலவர்ண வானவில்

புடைசூழ...

மின்னும் நட்சத்திரங்கள்

மிளிர..

சட்டென மறையும் மின்னல்

படமெடுக்க..

இடிகள் மேளச் சத்தம்

முழங்க..

பஞ்சு மேகங்கள் என்

பிஞ்சு விரல்களை பிடித்து

அழைத்து வர..

நீலவானமதில் நான்

உல்லாசமாக

உலா வருவேன்.!

எப்படித்தான் வலம்வரினும்

என்னால் உனை மறக்கமுடியாது

சிறு வயதில் நாமிருவரும்

மணல்வீடு கட்டி விளையாடியதை.!!

அன்று மணல்வீடு கட்டி

விளையாடிய நீயா

இணைய வழி ஊடாக வந்து

இன்று கவிதை அந்தாதிக்குள்

நக்கலென்ற பெரிய

கல்லெறிந்து காயப்படுத்துகிறாய்..!

Share this post


Link to post
Share on other sites

நக்கலென்ற பெரிய

கல்லெறிந்து காயப்படுத்துகிறாய்

என்று புலம்பியது கேட்டு

பல முறை எனக்கு

விக்கல் வந்தது

விருந்துண்ணும் போது!

நீ உன் புலம்பலில்

சொன்ன சேதி பல

என் சிந்தை கடைகின்றது...

முந்தை ஒரு நாள்

மணல் வீடு

கட்டி விளையாடியதாய்ச்

சொன்னாய்...

சிந்தை குடைந்து

நினைவு அலுமாரி எங்கும்

தேடியும் ஏதும்

கிடைக்கவில்லை அப்படி!

சில சமயம்

எனகெழுதும் வரிகளுக்கிடையில்

ஏதேனும் தூது

அனுப்புகின்றாயா

வேறெவருக்கும்?

சும்மா இப்படித்தான்

ஏதேனும் கேட்பேன்

மருண்டு போகாதே நீயும்!

Share this post


Link to post
Share on other sites

போகாதே நீயும்

பாவியெனை தவிக்கவிட்டு

காததூரம் நீ சென்றிடில்

ஆவியெனை விட்டு நீங்கும்

நான் புலம்பியது கேட்டு

நீ விக்கியபோதிலும்

வாஞ்சையோடணைத்து

வாய்முத்தம் தரநினைத்து

வஞ்சியிவள் முயன்றபோதும்

வார்த்தைகள் தடுமாறியதால்

வாய்பொத்தி உன்முன்னே

மெளனமாக தலைகுனிந்தேன்..

மண்வீடு கட்டி

வெண்ணிலைவை துரத்தி

ஓடியாடி விளையாடியதை

மறந்து அலுமாரியை

திறந்து தேடினாயா?

அதற்குப்பதில் உன்

இதயவறைகளை திறந்து

கண்மூடி சிந்தனை செய்

மண்வீடு என்ன மாளிகையே

உன் மனக்கண் முன்..!

உனக்கனுப்பும் சேதிகளை

நான் வேறெவருக்கும்

அனுப்பவே மாட்டேன் என

நன்கு தெரிந்தும்

அன்பே எதற்காக

மீண்டும் கல்லெறிகின்றாய்

என்மேல் உனக்கென்ன கோவம்?

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • காங்கேசன்துறைக்கான ரயில்சேவை - புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு சகல அலுவலக ரயில் சேவைகள் இரவுநேர தபால் ரயில் சேவை தூர இடங்களுக்கான ரயில் சேவை என்பன எதிர்வரும் திங்கட் கிழமை முதல் சேவையில் ஈடுபடுத்தப்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் கடுகதி ரயில் சேவை மற்றும் கல்கிஸை - காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட ரயில் சேவைகள் என்பன திங்கள் கிழமை ஆரம்பிக்கப்படமாட்டாது என புகையிரத பொது முகாமையாளர் வி.எஸ் பொல்வத்தகே குறிப்பிட்டுள்ளார். புகையிரத பயணத்திற்கான ஆசனங்களை ஒதுக்கிகொள்ளும் வசதி வழமை போன்று நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத நேர அட்டவணையில் ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு புகையிரத பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணங்களின் போது கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றுமாறும் புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் புகையிரத பயணங்களை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/144693?ref=imp-news
  • நான்கு கட்டங்களாக கல்விச் செயல்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் முழுமையான விபரம்! வடமாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்குரிய யோசனைகள் முன்வைக்கப்பட்டு அதற்கான தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. வடமாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பித்தலுக்காக மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் வடமாகாண கல்விச் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், மற்றும் அலுவலர்களுடன் கடந்த மே 21ம் திகதி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய அரசினால் அறிவிக்கப்படும் திகதியில் இருந்து 4 கட்டங்களாக கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது. முதலாவது கட்டமாக பாடசாலைகளை தயார்படுத்தும் துப்புரவு செய்தலும் (01 வாரம்) இதில் அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலைச் சமூகத்தினரின் பங்கேற்புடன் கைகழுவும் நிலையம், நீர் வசதிகளை ஏற்படுத்தல், டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக சிரமதானம் மேற்கொள்ளல். அத்துடன் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுக்கான புதிய நேரசூசிகள் தயாரிப்பு, பாடங்களை நடாத்துதல் தொடர்பாக ஆசிரியர்களுடன் ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்ளல், சமூக இடைவெளியைப் பேணக்கூடியவாறு ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருக்கத்தக்கவாறு ஏற்பாடு செய்தலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட வகுப்புக்களைப் பிரித்து இரு வேளை பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் திட்டமிடலை மேற்கொள்ளலும். இரண்டாம் கட்டமாக தரம் 10, 11, 12, 13 வகுப்புக்களை ஆரம்பித்தல் (2 வாரங்கள்) இதில் தரம் 10, 11, 12, 13 வகுப்புக்களை ஆரம்பித்தலும் நாளொன்றுக்கு தரம் 12, 13 இற்கு 4.30 மணித்தியாலங்களும் பாடங்கள் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக தரம் 5, 6, 7, 8 என்பவற்றை ஆரம்பித்தல் (01 வாரம் இதில் தரம் 5, 6, 7, 8, 9 வகுப்புகளை ஆரம்பித்து தரம் 5 இற்கு நாளொன்றுக்கு மூன்று மணித்தியாலங்களும் தரம் 6 தொடக்கம் 11 வரை 4 மணித்தியாலங்களும் 12, 13 இற்கு 4.30 மணித்தியாலங்களும் பாடசாலைகளை நடாத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்டமாக நிலைமைகளை அனுசரித்து பாடசாலையின் சகல நடவடிக்கைகளையும் வழமையான நிலைக்குக் கொண்டு வருதல். அதாவது தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்றவறாகவும் கல்வியமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமையவும் மாணவர் வரவு, ஆசிரியர் வரவு மற்றும் வழமையான நேரசூசி அமுலாக்கம் என்பவற்றை நியம நிலைக்குக் கொண்டு வருவதுடன் பாடசாலையின் சகல செயற்பாடுகளையும் அதன்பிரகாரம் தொடர்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள், கை கழுவும் செயற்பாடு, முகக்கவசம் அணிந்திருத்தல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதுடன் பாடசாலையில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு சுகவீனம் ஏற்படும் ஓர் நிலையில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பிலும் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களாலும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையைத் திறப்பது தொடர்பில் அரச அறிவித்தலை எதிர்பார்த்துள்ளோம். பாடசாலைகளில் கைகழுவும் நிலையங்கள், நீர்வளங்கல் வசதிகள், சுகவீன அறை ஏற்படுத்தல் என்பவற்றிற்காக மத்திய கல்வி அமைச்சினது 9.9 மில்லியன் ரூபா நிதி கல்வி அமைச்சின் பிரமாணங்களுக்கு அமைய பாடசாலைகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வெப்பநிலை அளவிடும் கருவி, சுகவீன ஓய்வு அறைக்கான தளபாடங்கள் என்பன நேரடியாக மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இவை தொடர்பில் கிடைக்கப்பெறும் உரிய நிதி பாடசாலைகளுக்கு விடுவிக்கப்படும். இதன் பொருட்டு பாடசாலைகளில் கைகழுவும் நிலையம் மற்றும் நீர் வழங்கல் வசதிகளை ஏற்படுத்தும் ஒத்துழைப்புக்காக வடமாகாணத்தின் 35 கல்விஅ கோட்டங்களிலும் தலா ஒவ்வொரு பாடசாலை வீதம் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க அமைப்பும் கிளிநொச்சி, துணுக்காய் ஆகிய கல்வி நிலையங்களின் மொத்தம் 75 பாடசாலைகளுக்கு இலங்கை சேவ் த சில்ரன் அமைப்பும் மற்றும் கிளிநொச்சியின் 12 பாடசாலைகளுக்கு கொய்கா (KOICA) செயற்திட்டத்தின் கீழ் OFERR நிறுவனமும் முன்வந்துள்ளன. கொவிட் - 19 பரவல் நிலைமைகளை எதிர்கொள்வதற்கு மேற்குறிப்பிட்ட வசதிகள் பாடசாலைகளில் போதுமானவை அல்ல என்பதுடன், இவற்றை ஏற்படுத்துவதற்கு வழங்கப்படும் விசேட உதவிகளும் போதுமானவை அல்ல. எனவே இது தொடர்பில் பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் முதலான சகல சமூக நிறுவனங்களும் தத்தமது பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144671
  • குருக்கள் குளிச்சுக் கிளிச்சு சுத்த பத்தமாக இருக்கின்ற ஆளா என்று செக் பண்ண எட்டிப் பார்த்து இருப்பார். 
  • வட மாகாணத்தில் சொறிலங்கா போலீசுக்கும் முப்படைக்கும் முற்று புள்ளி வைச்சா சட்டவிரோத செயல்களும் முற்றுப்பெறும்.
  • எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஊரடங்குச் சட்டமா? தற்போதுள்ள சூழ்நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டத்தை அமுல் செய்வது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமை இரவு 10 மணிக்கு அமுலுக்கு வந்த ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4மணிக்கு தளர்த்தப்படுகிறது. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் நாளையில் இருந்து ஒவ்வொரு நாளும் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4மணிவரையில் ஊரடங்குச்சட்டம் அமுல்செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்தது. இதுவொருபுறமிருக்க நாளையிலிருந்து ஊரடங்குச் சட்டமானது முழுமையாக நீக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பில் அரசாங்கம் முழுமையான தகவல்களை இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144669