Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

கவிதை அந்தாதி

Recommended Posts

கோவம்...

குற்றாலத்திற்கும்..

குன்றிற்கும்..

என்னடி கோவம்...

குற்றாலம்.. குன்றேறிக்..

குளிப்பாட்ட ஏங்க...

குன்றுக்கோ

குற்றால நீராட

மனதார வாட..

ஏனிந்தக் கண்ணாமூச்சி..

Share this post


Link to post
Share on other sites

கண்ணாமூச்சி விளையாட்டில்

கண்களைக்கட்டி இருளில்

உருவங்களைத் தொலைத்து

முகரும் சுவாச நொடிகளில்

தேடிப் பிடித்து

ஆடி முடிந்த ஆட்டங்களின்

ஞாபகங்கள்

மறக்க நினைத்தாலும்

மறுபடி மறுபடி வருகின்ற

நினைவுகள்

Share this post


Link to post
Share on other sites

நினைவுகள் இன்றும்

நீங்காமல் அன்றுபோல

நிழலாடுகின்றது

என் நெஞ்சில்

சிரட்டையில் சோறு சமைத்து

ருசித்து நாம் சாப்பிட்டதும்

உன் முதுகில் எனைச் சுமந்து

கூனிக் கூனி நீ நடந்ததையும்

கிட்டிப்புள் அடிச்சு பக்கத்துவீட்டு

சட்டிபானை நீ உடைச்சதும்

பிறந்தநாள் சட்டையில் நீ

சேறு பூச நான் அழுததையும்

அரும்பிய உன் மீசை கண்டு

குறும்பாக அதை நான் இழுக்க

அடிக்க ஓங்கிய உன்கைகள்

கட்டி எனை அணைத்ததையும்

இன்னும் இன்னும்

இனிய நினைவுகள்

எத்தனை எத்தனையோ

அவையனத்தையும்

உன்னோடு பகிரணும்

உடனே வா காளையே :(

Share this post


Link to post
Share on other sites

காளையே எருமைத்தயிர் உண்டால்

நாளை சிங்களவளை எதிர்த்து

வாழலாம் என்றே அன்னை

பாலை தயிராக்கி ஊட்டி ஊட்டி

வளர்த்தாள் இப்போ

அன்னையோ சிங்களவன் நாட்டில்

காளையோ புலத்தில்

Share this post


Link to post
Share on other sites

புலத்தில்தான் பூவையே..

பொழுதெல்லாம்...ரணம்..

இதயம் தினம் அழும்..

ஈரநினைவுகள் எழும்..

அம்மா மனசுக்குள்...

அழைப்பதும்....

தங்கை காதை..நான்

திருகுவது போல் இருப்பதும்..

அப்பா அருகே கனைப்பது

போல் தோன்றுவதும்..

மாமா..மாமி..

சித்தி..சித்தப்பா..

எல்லோர் பிரியமும் பேச்சும்...

இழந்த காளை

புலத்தில்தானடி பூவே..

புலத்தில்தான்.

Share this post


Link to post
Share on other sites

புலத்தில் தானடி பூவே

புலத்தில் தான் என்று

சிரிக்கும் இதயங்கள்

காட்டும் கோபங்கள்

சொல்லா வார்தை கொண்டு

சொல்லி செல்லும்

மாயங்கள்....

கனத்திடும் பொழுதினில்

காயங்கள் சுமப்பவர்

காயத்தால் செய்திடும்

மாயங்கள்.......

புலத்தில் தானடி பூவே

புலத்தில் தானடி......

Share this post


Link to post
Share on other sites

புலத்தில்தானடி

வெள்ளைப் பூக்களும்..

கறுப்புத்தேனியும்.....

கறுப்புப்பூக்களும் காதல்

கொள்வதைக் காண்கிறேன்...

காதலுக்கு இது

வலுவென சந்தோசம்

கொண்டேன்..

சிரிக்க விரிந்த

இதழ்கள் மூடுமுன்னே...

செடியிழந்த பூக்கள்..

சிதறிக்கிடந்ததும்..

பூ உதறித்தள்ளியதாய்..

தேனீக்கள்..

மதுவருந்திக்கிடப்பதையும்..

கண்டேன்..

அடடா..

இங்கேயும்.. இப்படித்ததானா..

Share this post


Link to post
Share on other sites

இப்படித்ததானா இடித்துரைப்பது நீ

இதயக்கரையில் விழுந்ததோ ஒர் கீறல்

கண்ணீர் விலக்கிய பார்வையின் ஒளியில்

நர்த்தனம் புரியும் உந்தன் உருவம்

Share this post


Link to post
Share on other sites

உருவம்..

பருவக்காலங்களால்

மாறக்கூடும்...

அலங்கோலமாகக்கூடும்...

என்னிதயம்.. தூய்மையாக

இருப்பதை என்னால் உணர முடியாமல்

போகின்ற காலத்தில்..

நான் உன்னருகே

இருக்கமாட்டேன்..

Share this post


Link to post
Share on other sites

மாட்டேன் வரவே மாட்டேன்

வாசல் தேடி வந்த என்னை

விழிமலர மொழி பேசி

வாவென்ற அழைக்காத

வாசல் தேடி எப்படி என்

பாதங்களை பதிப்பேன்

Share this post


Link to post
Share on other sites

பதிப்பேன் உன்

பாதம் அடி வைக்க

அங்கே என்

உள்ளங்கைகளை....

வேண்டாமா விடு..

நீ வராத வீட்டுக்கு...

உன் தங்கை வருவாளா...

கேட்டுப் பார்க்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

பார்க்கிறேன் என் கன்னத்தை

பதிந்துவிட்ட உன் கைவிரல்

பதிப்புக்களை ஆஆஆஆஆஆ

வலிக்கின்றது மனமும் சேர்ந்து

பலிக்கடாவாகி விட்ட என்னை

காளிக்கு ஒப்பாகவா வர்ணிக்கிறாய்

Share this post


Link to post
Share on other sites

வர்ணிக்கிறாய் தினமும்

வெண்ணிலவை உன்கவிகளில்

வர்ணிப்புக்கு எல்லையே இல்லையா

வெள்ளையுள்ளம் கொண்டவனே..

கெஞ்சிக் கேட்கிறேன்

பஞ்சுமேகத்தை வர்ணி

கொஞ்சிக் கேட்கிறேன்

மஞ்சள்வானத்தை வர்ணி

கன்னி நான் கேட்கிறேன்

மின்னும் நட்சத்திரத்தை வர்ணி

சின்ன வாய்திறந்து கேட்கிறேன்

வர்ண வானவில்லதை வர்ணி

இனிமேல் உன்கவிகளில்

இவள் கேட்ட வர்ணனைகள்

மட்டுமே அலங்கரிக்கும் என்று

கட்டளை இடுகின்றேன் மன்னவனே..

Share this post


Link to post
Share on other sites

மன்னவனே என் மஞ்சத்தில்

கஞ்சமின்றி துயில் கொண்டவனே

கொஞ்சி பேசி காதல் சொன்னாய்

கொஞ்சமில்லாமல் விஞ்சியும் நின்றாய்

அஞ்சி அஞ்சி என் அந்தரங்கம் கண்டாய்

இந்த வஞ்சியை கஞ்சிக்கு

ஏங்க வைத்துவிட்டாயேடா ?

Share this post


Link to post
Share on other sites

ஏங்க வைத்துவிட்டாயேடா

நீங்கி எனைச் சென்றதனால்

எங்கே சென்றாய் என்னவனே

வீங்குகின்றன கண்களிரண்டும்

கொங்கைகள் துடிக்கையிலும்

மங்கலமான முகம்வாடுகையிலும்

மங்கையிவள் தவிக்கின்றாள்

வேங்கையே நீ வந்துவிடு...

வங்கக்கடல் அலைகல் போல

பொங்குகின்றன நினைவலைகள்

திங்களிவள் சோருகின்றாள்

சிங்கமே என்முன்னே வா..

இங்கிதமானவனே எனக்கு

தீங்கேதும் நேருமுன்னே

பங்கயக் கழுத்தில் முத்தமிட்டு

சங்கமம் ஆகிவிடு என்னுள்ளே

Share this post


Link to post
Share on other sites

என்னுள்ளே வசிப்பவளே

என்னையே சுவாசிப்பவளே

கண்ணிலே மணியாகி

கனவிலும் உறுத்துபவளே

காதல் என்று எண்ணி

கைபிடிக்க நினைத்தேன்

கானல் நீராய் கரைந்து போனாயே!

Share this post


Link to post
Share on other sites

போனாயே...

தமிழ் தந்த செல்வத்தின்

செல்வமே..!

தமிழ் வீரத்தின்

புன்முறுவலே..!

எதிரி படை தோற்கும் நாள்

எட்டும் தொலைவில் தான்

தமிழ் கண்ணே...!

Share this post


Link to post
Share on other sites

தமிழ் கண்னே

தமிழ் மண் தந்த

தமிழ்ச் செல்வனே

காலை வேளைதனில்

வானில் வந்த

காலனவன் உன்னோடு

சேர்த்து ஐவரையும்

முழுங்கியதை எப்படிதான்

மறக்க முடியுமோ...

Share this post


Link to post
Share on other sites

மறக்க முடியுமோ

மாவீரனே!

உன் புன்னகை சிந்தும் வதனத்தை

பாவியரின் வல்லூறுகள்

பறந்து வந்து உன் உயிர் குடித்ததே

உன் இழப்பின் வடுச் சுமந்து

எம் மன்னவன் சொல்லும்

சேதிக்காய் காத்திருப்போம்

Share this post


Link to post
Share on other sites

காத்திருக்கிறோம் என்று

கார்த்திகைப்பூக்கள் கண்ணைப்

பார்க்கும்.. தலைமகனே

உன்னைப் பார்க்கும்...

காலங்கள்.. எதுவோ

கண்ணீர்ப்பூக்கள்...

மெல்லப் பார்க்கும்....

கல்யாணக் கனவுகள்..

இல்லாமல் கன்னிப்பூக்கள்

போர்க் களம் பார்க்கும்..

சொல்லாமல் வேள்வியில்

வித்தாகும்... கரும்புலி

விண்ணில் நின்று

தமிழ் மண்ணைப் பார்க்கும்...

காத்திருக்கிறோம் என்று

கார்த்திகைப்பூக்கள் கண்ணைப்

பார்க்கும்.. தலைமகனே

உன்னைப் பார்க்கும்...

காலங்கள்.. எதுவோ

கண்ணீர்ப்பூக்கள்...

மெல்லப் பார்க்கும்....

கல்யாணக் கனவுகள்..

இல்லாமல் கன்னிப்பூக்கள்

போர்க் களம் பார்க்கும்..

சொல்லாமல் வேள்வியில்

வித்தாகும்... கரும்புலி

விண்ணில் நின்று

தமிழ் மண்ணைப் பார்க்கும்...

Share this post


Link to post
Share on other sites

மண்ணைப் பார்க்கும்

கண்கள் இங்கே கருவறை சுமந்திடும்

கல்லறைகளில் நெய்விளக்கேற்றி

கண்ணீரை காணிக்கிட

வந்திடுவீர்

Share this post


Link to post
Share on other sites

வந்திடுவீர் என்றெண்ணி

வாசல் படி நோக்கித்

தவம் கிடந்தேன்!

படலை திறக்கும் ஓசை

கேட்டு

மழலை போல துள்ளியெழுந்து

வாசல் தாண்டி ஓடி

வந்தேன்

கையில் காகிதக் கட்டு

தோளில் தொங்கும் துணிப் பை

எல்லாம் பார்த்து

ஆவலோடு உன் முகம்

பார்த்தேன்...

வழமையாக உதடு சுளிக்கும்

உன் முகம்

புன்னகையோடு...!

மனசுக்குள் ஏதேதோ

இன்பத் துடிப்புகள்...

'அப்பாடா...' இன்றாவது

என் அத்தான் கோபம் தணிந்து

மடல் வரைந்தாரே...!

Share this post


Link to post
Share on other sites

வரைந்தாரே ஓவியம்

உரைத்திட முடியா நினைவுதனை

கரை கண்டு புரளும் கற்பனையாலே

வரைந்து கவியாலே பாடல்

தொடுத்துடுவீரே

இரை தேடும் பறவைக்கு

இரை தருவது போலே களத்தில்

வரையும் ஓவியம் தருவதும் அழகு

கரைபுரண்டோடும் கவியும் அழகு

Share this post


Link to post
Share on other sites

கவியும் அழகு

கவி புனையும்

கவியும் அழகு

சுதியும் நயமும்

நெளியும்

நதி போல

என் நெஞ்சில் பாயும்

விரியும் கற்பனையில்

தெரியும் பல காட்சி

சரியும் பிழையும்

தெரியா

கவியொன்று பிறக்கும்!

அரியும் அவனிடை

தழுவும் உமையும்

விழி மலர்த்தி

கை உயர்த்தி

ஆசீர்வதிப்பார்!

நீயும் நானும்

வெறும் பேனைகள்

தமிழன்னை தன்னை நிரப்பி

தன்னையே தாளில்

எழுதுகிறாள்

நானும் வந்து களத்தில்

பிரதி செய்கிறேன்

அவ்வளவே என் கவி!

Share this post


Link to post
Share on other sites

என் கவிகள்

இயற்கையை தழுவும்

தென்றலாய்

பூக்களை வட்டமிடும்

தேனீக்களாய்

என்றும் உன்னையே

சுற்றி வட்டமிடுகின்றன...

என் கருவிழிப் பார்வையினிலே

நீ விழுந்த நாள் தொடக்கம்

என் மனதினிலே

ஊற்றெடுக்கிறது கவிகள்

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • புரிந்து கொண்ட படியால் தான் எழுதுகிறேன். நான் எந்த இயக்கத்தினையும் சார்ந்தவனோ, அல்லது ஆதரவு கொடுத்தவனோ இல்லை. கொழும்பில் இருந்திருக்கிறேன். சிங்களவர்களுடன் பழகி இருக்கிறேன். அவர்கள் மொழியில், கொழும்புத் தமிழிலும் சரளமாக பேசுவேன். நாட்டின் ஒரு மாகாணத்தின் முக்கியமான இராணுவ தளபதியுடன் மிகுந்த நட்பில் உளேன். கொழும்பில் நண்பரின் வீட்டில் சந்தித்த போது, சீமான் குறித்த பேச்சு வந்தது. அவருக்கு நாயகர்கள், சிங்களவர்களான கதை குறித்து விளங்கப்படுத்திய போது, அதிர்ந்து போனார். அவருக்கு தெரிந்திருக்க வில்லை.  ஆகவே, சீமான் புலி ஆதரவா, போலியா என்பது எனது கவலை இல்லை. நாம் தமிழர் கட்சி, பிரபாகரனை தலைவனாக கொண்டுள்ள படியால் தான், அதனால், முத்துராமலிங்க தேவரையும், காயிதே மிலத்தினையும். தீரன் சின்னமலையினையும், ஐயா வைகுந்தரினையும் ஒன்றாக தமிழர்கள் என்று சாதியத்துக்கு வெளியே எடுத்து பேச முடிகிறது. இது புரிந்ததால், திமுக, அலறிக்கொண்டு, இப்போது பிரபாகரனை நேரடியாக எதிர்க்க தொடங்கி உள்ளனர். இந்த நுண்ணிய, ஆனால், ஆபத்தான திராவிட அரசியல் புரியாமல், இங்கே, வெறுமனே வாயை மென்று துப்புவதன் காரணம் என்ன என்று புரியவில்லை.  இந்த திராவிடர்கள் தீர்வுக்கு தேவையாம். செத்தவீட்டுகே வராதவன், வேறு எதுக்கு வருவான் என்ற புரிதல் இல்லை. இந்த திராவிடர்களால் எமக்கு அவலமாக கிடைத்ததே போதும்.
  • அவையை விர‌ல் நீட்டி கேக்க‌ நிறைய‌ இருக்கு / அவையின் பொய் புழுகுக‌ளை நேற்று க‌ண்டாச்சு ,  சூசை அண்ணாவோடு அருகில் நின்ற‌வை புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு த‌ப்பி வ‌ர‌ முடியுது , போர்க‌ள‌த்தில் ச‌க‌ போராளிக‌ளோடு சிங்க‌ள‌வ‌னை எதிர்த்து போர் செய்த‌ போராளிக‌ள் இப்ப‌வும் சிறைக்குள் வாடுதுக‌ள் , பெரிய‌ பெரிய‌ த‌லைக‌ளை வ‌லை போட்டு தேடின‌ க‌ருணாவின் ஆட்க‌ளும் சிங்க‌ள‌ ப‌டையும் அவையிட‌ம் இருந்து சீக்கிர‌மா த‌ப்பி புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து அண்ண‌ன் சீமானை பார்த்து கேள்வி கேக்கின‌ம் , நாதா , நான் பிற‌ந்து வ‌ள‌ந்த‌து  ஏழாலையில் , ஆனால் யாழ்பாண‌த்திலும் கூட‌ த‌ங்கி இருக்கிறேன் , அங்கு எங்க‌ளுக்கு மூன்று வீடு இருக்கு / உங்க‌ளுக்கு சிறித‌ர் திரைய‌ர‌ங்கு தெரியும் என்று நினைக்கிறேன் , அதுக்கு பின்னுக்கு தான் எங்க‌ள் வீடு ,  அந்த‌ திரைய‌ங்கில் அனைத்து த‌மிழீழ‌ திரைப்ப‌ட‌ங்க‌ளும் ஓடின‌து , அந்த‌ இட‌த்தை 22வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு பார்த்த‌ போது என‌து கைபேசியில் இருந்து ப‌ட‌ம் எடுக்க‌ விரும்பினேன் ,அந்த‌ திரைய‌ர‌ங்கு   இப்ப‌ ட‌க்ள‌ஸ்தேவான‌ந்தாவின் ஒவ்பிசா இருக்கு , சீடிவி க‌ம‌ரா அதில் பூட்டி இருந்த‌த‌ நான் க‌வ‌ணிக்க‌ வில்லை , ந‌ண்ப‌ன் சொன்னான் போன‌ உள்ள‌ வைய‌டா வேவு பார்க்க‌ வ‌ந்த‌து என்று விசார‌னைக்கு கூட்டிட்டு போவாங்க‌ள் என்று ந‌ண்ப‌ன் சொன்னான் , அப்ப‌டி ப‌ல‌ சிக்க‌ல்க‌ளில்  முன்னால் போராளிக‌ள் வாழுகின‌ம் ,   முன்னால் போராளிக‌ளை வெளியில் எடுக்க‌ கொழும்பில் தெரு நாய் மாதிரி அங்கையும் இங்கையும் என்று அலைந்து திரிய‌ வேணும் , அதோடு சாட்சிக்கு ப‌ல‌ரின் கை எழுத்தும் தேவை , இப்ப‌டி ப‌ல‌ சிக்க‌ல்க‌ள் இருக்கு நாதா ,  எல்லாம் அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம் புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் 
  • மலையகத்தை சேர்ந்த பிராந்திய செய்தியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் போலியான செய்தியை வெளியிட்டு வருகின்றன. அவருக்கு கொரோனா தொற்று இல்லையென பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அவர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் செய்திசேகரிப்பில் ஈடுபட்ட நிருபர் ஒருவர், தடிமன் காரணமாக நேற்று வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் சமூகநலன்கருதி பொறுப்புடன் தாமாக முன்வந்து தன்னை சுயதனிமைக்கு உட்படுத்திக் கொண்டார். இன்னும் பிசிஆர் பரிசோதனை முடிவுகள்கூட வெளியாகவில்லை. அதற்குள் இன்று காலை முதல் அவருக்கு கொரோனா பரவிவிட்டது, அறிகுறிகள் தென்படுகின்றன என சிங்கள ஊடகங்கள் பீதியை பரப்பி வந்தன. எனினும், அவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று அல்ல, அது சாதாரண காய்ச்சல், தடிமன் என தெரிய வந்துள்ளது. https://www.pagetamil.com/128152/
  • இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக தமிழ் நாட்டுக்கு இடம்பெயர்ந்தவர்களில் கணிசமானவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் இலங்கைக்குத் திரும்பிவிட்டனர். ஆனாலும் இலங்கைக்குத் திரும்ப முடியாத சூழ்நிலையில் பல ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொரோனா நிவாரணமாக உலர்உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி ஒன்றியத்திலுள்ள வாணியாறு ஈழத்தமிழர் முகாம் மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு தலைமையிலான குழுவினர் நேற்று(02) நேரில் சென்று நிலைமையினைப் பார்வையிட்டு உலர்உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர். அங்கு ஈழத்தமிழ் மக்களிடம் வன்னிஅரசு கருத்துத் தெரிவிக்கையில் முகாம்களில் வாழுகின்ற ஈழத்தமிழ் உறவுகள் கொரோனா காரணமாக தொழில் வாய்ப்பை இழந்ததால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்திற் கொண்டே கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்களின் அறிவுரைக்கமைவாக தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் வாழுகின்ற அனைத்து முகாம்களுக்கும் நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஈழத்தமிழர்கள் மீது விடுதலைச் சிறுத்தைகள் கொண்டிருக்கும் உறவு என்றுமே மாறாது. இலங்கையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியான விடுதலை பெற்று வாழுகின்ற நிலை ஏற்படும்போதே முகாம்களில் தங்கிவாழுகின்ற ஈழத்தமிழர்கள் அவர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் தாயகத்திற்குச் செல்வதே பொருத்தமானது. அதுவரையில் உங்களை எவரும் வற்புறுத்தி இலங்கைக்குத் திருப்பி அனுப்பமுடியாது எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்போது தலைமை நிலையச் செயலாளர் தமிழ்ச்செல்வன், அமைப்புச் செயலாளர் கி.கோவேந்தன், மாவட்டச் செயலாளர் ஜானகிராமன், மின்னல் சக்தி அதியமான் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் பலர் கலந்துகொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்தனர்.    https://www.pagetamil.com/128137/
  • கறைபடியாத கலைஞர்,பிறந்த நாள் ஷ்பெசல் பார்வை... By Alias - திமுக என்னும் ஓர் உத்தமக் கட்சி ! தமிழ்நாட்டிலே ஏன் உலகத்துலயே ஊழல் கறை படியாத கட்சின்னா அது திமுகதான்னு நம்மில் எத்தன பேருக்கு தெரியும். இதுவரை எந்த ஊழல், கொலை வழக்கிலும் பெருசா தண்டனை பெற்றதே இல்லன்னு சொல்லலாம்; அந்த அளவுக்கு தெளிவா செய்வோம். எங்க ஊர்ல ஒரு அண்ணன் அடிக்கடி சொல்லுவாரு திருடுனா திமுக காரன் மாதிரி திருடனும்னு… அண்ணா இருந்த ரெண்டு வருசம் எந்த குற்றச்சாட்டும் வராத நிலைல தலீவர் வந்த கொஞ்ச நாள்ல வீராணம், விமானத்தில பூச்சிமருந்து தெளிக்கறது உட்பட 28 குற்றச்சாட்டுகள் (கடைசில இணைச்சிருக்கேன்) எழுகிறது. உடனே ஆட்சிய கலைச்ச இந்திரா சர்க்காரியா கமிசன் விசாரணைய அமைக்கறாங்க. பாவம் நீதிபதி சர்க்காரியா நம்ம 2ஜி நீதிபதி ஷைனிய விட அதிகமா நொந்து போய் ஊழல் செஞ்சது தெளிவா தெரியுது ஆனா நிரூபிக்க முடியல, விஞ்ஞான பூர்வ ஊழல் அப்டினு பொலம்புறாரு. நம்ம தலைவரு அடுத்த தேர்தல்ல (எமர்ஜென்சியால பல உயிர்களை பறிகொடுத்த ஈரம் காயுமுன்னேயே) “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக” அப்டினு பல்லவி பாடி கூட்டணி போட்டு ஜெயிக்கறாங்க அப்புறம் இந்திரா சர்க்காரியா கமிசனை நீக்கிடறாங்க (இதே இந்திரா மண்டைய ஒடச்சி ரத்தம் வந்தப்ப பெண்களுக்கு தலைல மட்டும்தான் ரத்தம் வருமானு கேட்ட கில்லாடிங்கோவ்). அங்க ஆரம்பிச்ச வரலாறு… *கூவத்த சுத்தம் செய்றோம்னு கொஞ்சம்.. *அப்றம் நிதி நெருக்கடினு மது விலக்கு ரத்துனு ஆரம்பிச்சி.. *16 வருசம் மத்தில அதிகாரத்துல இருந்தும் காவிரி பிரச்சனைக்கு ஒன்னும் செய்யாதது. *அது வளந்து கச்சத்தீவு தாரை வார்த்து சந்தோசப்பட்டது வரை போச்சு… ( சரி சட்டசபைல நல்லா பேசுனாங்களானு பாத்தா திராவிட நாடு எங்கனு கேட்ட காங் அனந்த நாயகி கிட்ட நாடாவை அவுத்து பாவாடைய தூக்கி பாரு அங்க இருக்கு திராவிட நாடுனு சொன்ன ஆளுக). *ஓட்டுக்கு பணம் கொடுக்க திருமங்கலம் பார்முலானு ஒன்ன இந்த நாட்டுக்கே அறிமுகம் பண்ணி வச்சது. *திமுக முக்கியப் புள்ளிகள, சாராய அதிபர்கள கல்வித் தந்தை ஆக்குனது. *அண்ணாசாலையில டாடாவுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள இடத்தை ராஜாத்தி அம்மையார் பேரம் பேசி வாங்குனது *டிவி, சினிமாத் துறைய தன்னோடு குடும்ப கட்டுப்பாட்டுல வச்சிருந்தது. *எந்த மதவாதத்தை எதிர்க்கறோம்னு சொன்னாங்களோ அதே பாஜக வோட கூட்டணி மத்திய அமைச்சர் பதவி (முரசொலி மாறன் இலாகா இல்லாத அமைச்சர்). *அப்புறமா மறுபடியும் காங். கூட்டணி இந்த காலகட்டத்துலதான் மீத்தேன் ஒப்பந்தம் அனுமதி தந்தது. *அப்புறம் நம்ம ராசா கனிமொழி 2ஜில மாட்னாங்க; இப்ப விடுதலை ஆகிட்டாங்க. ஆனா கலைஞர் டிவிக்கு ₹200 கோடி எப்படி வந்துச்சினு தெரியல. *ஸ்பெக்ட்ரம் புகழ் நீரா ராடியாவும் உளவுத்துறை ஜாபர்சேட்டும் மட்டும் டேப் உரையாடல் மானாட மயிலாட பத்தி பேசுனாங்களாம். *அப்றம் நம்ம உத்தம சகோதரங்க மாறன் பிரதர்ஸ் மெர்க்கண்டைல் பேங்க ஆட்டைய போட்ட சிவசங்கரனையே மிரட்டி ஏர்செல் மேக்சிஸ் க்கு எழுதி வாங்குனது. *ரத்தன் டாடா கண்ணுல விரல விட்டு ஆட்டுனது, தனியா கேபிள் பதிச்சி சன் டிவிக்கு BSNL ல இருந்து டெலிபோன் கனெக்சன் எடுத்தது. *சென்னைல மேம்பாலங்கள் கட்டுனதுல பணத்த ஆட்டைய போட்டது. *புதுசா சட்டமன்றக் கட்டடம் கட்டுனதுல ஊழல் செஞ்சது. *மதுரை பக்கம் ஹார்லிக்ஸ் லாரிய கடத்துனது. *பல கிரானைட் மலைகள் காணாம போயும் ஒரு பெட்டி கேஸ் கூட போடமுடியாம இருக்குறது. *மதுவிலக்க ஒவ்வொரு தேர்தலப்பவும் பேசிக்கிட்டே மது ஆலைகள நடத்தறது. *ஜெ ஆட்சியில் நில அபகரிப்புக்குனே தனிகவனம் செலுத்தி எல்லா அமைச்சர்களையும் சுளுக்கெடுத்தது. *சில்லறை வர்த்தகத்துல அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்னு சொல்லி ஆதரிச்சது. *நீட்தேர்வு வரைவு நிலைல இருந்தப்பவே எதிர்க்காம அமைதியா இருந்தது. *ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான மசோதாவை ஆரம்பநிலைல எதிர்க்காம விட்டது. *முஸ்லிம்களா இலக்கா வச்சி பாஜக கொண்டு வந்த NIA க்கு ஆதரவா ஓட்டு போட்டது. *காஷ்மீர்ல அரசியலமைப்புச் சட்டம் 370 வது பிரிவ நீக்கினத பின்னாடி ஆதரிச்சது. *CAA, NPR, NRC சட்டங்கள் வந்த தொடக்க காலத்துல எதிர்க்காம ஆதரிச்சிட்டு இப்ப எதிர்க்கறதுன்னு இன்னும் நிறைய இருக்கு. *இது போக மதுரை கவுன்சிலர் லீலாவதி தன்னதானே வெட்டி செத்துபோனது. *சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவன் உதயகுமார் தற்கொலை(?) செஞ்சி செத்துபோயி அவனோட அப்பா அம்மா அது என் மகனே இல்லனு சொன்னது. *தா.கிருட்டிணன் கத்திய எடுத்து தானே வெட்டி செத்தது. *ஆலடி அருணாவும் அப்டியே செத்தது. *கே.என்.நேரு தம்பி இராமஜெயம் தானே கம்பியில கட்டிகினு தற்கொலை செய்துகிட்டது. *அண்ணா நகர் ரமேஷ் 2ஜில சம்பந்தப்பட்டப்புறம் தற்கொலை. *சாதிக் பாஷா வயித்து வலினு தூக்குல தொங்குனது. *யார் பெரியவங்க அழகிரியா ஸ்டாலினா மாறனா னு கருத்து கணிப்பு வந்தப்ப தினகரன் ஊழியர்கள் 4பேர் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்திகினு செத்து போனது. இன்னும் எவ்வளவோ நடந்துச்சி எதையாவது நிரூபிக்க முடிஞ்சதா. தேக்குடா தேக்கு யாருகிட்ட. சத்தமா சொல்லுவோம் திமுக ஊழல் கறை படியாத கட்சி.. சர்க்காரியா கமிசன் அமைக்க காரணமான வழக்குகள்… 1. மேகலா பிக்சர்ஸ் ஊழல் 2. அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல் 3. டிராக்டர் ஊழல் 4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம் 5. முரசொலி ஊழல் 6. திருவாரூர் வீட்டு ஊழல் 7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல் 8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல் 9. ஊழல் அதிகாரியை காப்பாற்றி முறைகேடு செய்தது 10. வீராணம் ஊழல் 11 (அ).நாதன் பப்ளிகேசன்ஸ் ஊழல் 11. (ஆ) பூச்சி மருந்து தெளிப்பு ஊழல் 12. மணி அரிசி ஆலை கடன் ஊழல் 13. ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி ஏய்ப்பு ஊழல் 14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல் 15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல் 16. பிராட்வே டைம்ஸ் ஊழல் 17. சர்க்கரை ஆலை ஊழல் 18. கூட்டுறவு சங்க ஊழல் 19. மது ஆலை ஊழல் 20. கொடைக்கானல் & பழனி சாலை ஊழல் 21. தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல் 22. நில ஆக்கிரமிப்பு & கொலை குற்றச்சாட்டு 23. ஊழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவு 24. தொழிற்சங்க ஊழல் 25. ஊடகங்களுக்கு மிரட்டல் 26. மின் திருட்டு 27. எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் 28. இழப்பீட்டு தொகை ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாத வகையில் விஞ்ஞான முறையில் திமுகவினர் ஊழல் செய்துள்ளனர் என்று தான் சர்க்காரியா ஆணையம் கூறியதே தவிர, ஊழலே நடக்க வில்லை என்று கூறவில்லை.. திமுக துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரி, பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவரது மனைவி, எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி, என்.கே.கே.பி. இராஜா அவரது மனைவி(கள்), கோவை பொங்கலூர் பழனிச்சாமி, கே.என். நேரு அவரது மனைவி சாந்தா, மகன் அருண், தங்கம் தென்னரசு அவரது மனைவி மணிமேகலை, சாத்தூர் இராமச்சந்திரன் அவரது மனைவி ஆதிலட்சுமி, கீதா ஜீவன் சுரேஷ் ராஜன் அவரது மனைவி பாரதி, தந்தை நீலகண்ட பிள்ளை, ஆ ராசா அவர் கூட்டாளிகள் என்று திமுகவின் தலைகள் யார் மீது இல்லை ஊழல் வழக்கு? கருணாநிதி குடும்பத்த பத்தி சொல்லவே வேணாம். இந்தியாவுலயும், வெளிநாடுகள்லயும் இருக்கற பல்லாயிரங்கோடிகள் மதிப்புள்ள மொத்த குடும்ப சொத்தையும் சேர்த்தா அம்பானி அதானிலாம் இவங்ககிட்ட பிச்ச எடுக்கனும். அந்தளவு கொடூரமான கொள்ளைக் கூட்டம் இது. அவங்க குடும்ப சொத்துப் பட்டியல இங்க போட்டனா உங்களால படிக்க முடியாது; பக்கம் பக்கமா இருக்கு. இந்தியாவுலயே ஒரு கட்சியோட சொத்துக்கள நிர்வகிக்க சொத்துப் பாதுகாப்புக் குழு, சொத்துத் தணிக்கை குழுன்னு வச்சிருக்க ஒரே கட்சி திமுக தான். திமுக அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளையின் சொத்து மதிப்பு மட்டும் பல ஆயிரங்கோடிகள தாண்டுமாம். தமிழகம் முழுக்க இந்த அறக்கட்டளைங்களுக்கு எக்கச் சக்க சொத்துக்கள் இருக்கு. இந்த அறக்கட்டளைகள ஸ்டாலினும், அவரோட பையன் உதயநிதியும் தான் இப்ப பாத்துக்கறாங்க. இப்பவும் திமுக வுல இருக்க சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள்ல 20 பேருக்கு மேல சொத்துக்குவிப்பு வழக்கு, நில மோசடி வழக்கு ன்னு பல வழக்குகள் நடந்துட்டுதான் இருக்கு. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் னு ஐவகை பஞ்ச பூதங்கள்லயும் ஊழல் செஞ்ச கட்சி ஒன்னு இருக்குன்னா அது இந்த உலகத்துலயே நம்ம திமுக தான்! ஆகவே திமுக ஒரு உத்தமக் கட்சிதான்! உதய்ணா க்கு ஜெய்.. இன்பாவுக்கு ஜெய்.. Saravanan https://orupaper.com/hbd-kalaingnar/