கறுப்பி

கவிதை அந்தாதி

Recommended Posts

கோவம்...

குற்றாலத்திற்கும்..

குன்றிற்கும்..

என்னடி கோவம்...

குற்றாலம்.. குன்றேறிக்..

குளிப்பாட்ட ஏங்க...

குன்றுக்கோ

குற்றால நீராட

மனதார வாட..

ஏனிந்தக் கண்ணாமூச்சி..

Share this post


Link to post
Share on other sites

கண்ணாமூச்சி விளையாட்டில்

கண்களைக்கட்டி இருளில்

உருவங்களைத் தொலைத்து

முகரும் சுவாச நொடிகளில்

தேடிப் பிடித்து

ஆடி முடிந்த ஆட்டங்களின்

ஞாபகங்கள்

மறக்க நினைத்தாலும்

மறுபடி மறுபடி வருகின்ற

நினைவுகள்

Share this post


Link to post
Share on other sites

நினைவுகள் இன்றும்

நீங்காமல் அன்றுபோல

நிழலாடுகின்றது

என் நெஞ்சில்

சிரட்டையில் சோறு சமைத்து

ருசித்து நாம் சாப்பிட்டதும்

உன் முதுகில் எனைச் சுமந்து

கூனிக் கூனி நீ நடந்ததையும்

கிட்டிப்புள் அடிச்சு பக்கத்துவீட்டு

சட்டிபானை நீ உடைச்சதும்

பிறந்தநாள் சட்டையில் நீ

சேறு பூச நான் அழுததையும்

அரும்பிய உன் மீசை கண்டு

குறும்பாக அதை நான் இழுக்க

அடிக்க ஓங்கிய உன்கைகள்

கட்டி எனை அணைத்ததையும்

இன்னும் இன்னும்

இனிய நினைவுகள்

எத்தனை எத்தனையோ

அவையனத்தையும்

உன்னோடு பகிரணும்

உடனே வா காளையே :(

Edited by வெண்ணிலா

Share this post


Link to post
Share on other sites

காளையே எருமைத்தயிர் உண்டால்

நாளை சிங்களவளை எதிர்த்து

வாழலாம் என்றே அன்னை

பாலை தயிராக்கி ஊட்டி ஊட்டி

வளர்த்தாள் இப்போ

அன்னையோ சிங்களவன் நாட்டில்

காளையோ புலத்தில்

Share this post


Link to post
Share on other sites

புலத்தில்தான் பூவையே..

பொழுதெல்லாம்...ரணம்..

இதயம் தினம் அழும்..

ஈரநினைவுகள் எழும்..

அம்மா மனசுக்குள்...

அழைப்பதும்....

தங்கை காதை..நான்

திருகுவது போல் இருப்பதும்..

அப்பா அருகே கனைப்பது

போல் தோன்றுவதும்..

மாமா..மாமி..

சித்தி..சித்தப்பா..

எல்லோர் பிரியமும் பேச்சும்...

இழந்த காளை

புலத்தில்தானடி பூவே..

புலத்தில்தான்.

Share this post


Link to post
Share on other sites

புலத்தில் தானடி பூவே

புலத்தில் தான் என்று

சிரிக்கும் இதயங்கள்

காட்டும் கோபங்கள்

சொல்லா வார்தை கொண்டு

சொல்லி செல்லும்

மாயங்கள்....

கனத்திடும் பொழுதினில்

காயங்கள் சுமப்பவர்

காயத்தால் செய்திடும்

மாயங்கள்.......

புலத்தில் தானடி பூவே

புலத்தில் தானடி......

Edited by கஜந்தி

Share this post


Link to post
Share on other sites

புலத்தில்தானடி

வெள்ளைப் பூக்களும்..

கறுப்புத்தேனியும்.....

கறுப்புப்பூக்களும் காதல்

கொள்வதைக் காண்கிறேன்...

காதலுக்கு இது

வலுவென சந்தோசம்

கொண்டேன்..

சிரிக்க விரிந்த

இதழ்கள் மூடுமுன்னே...

செடியிழந்த பூக்கள்..

சிதறிக்கிடந்ததும்..

பூ உதறித்தள்ளியதாய்..

தேனீக்கள்..

மதுவருந்திக்கிடப்பதையும்..

கண்டேன்..

அடடா..

இங்கேயும்.. இப்படித்ததானா..

Share this post


Link to post
Share on other sites

இப்படித்ததானா இடித்துரைப்பது நீ

இதயக்கரையில் விழுந்ததோ ஒர் கீறல்

கண்ணீர் விலக்கிய பார்வையின் ஒளியில்

நர்த்தனம் புரியும் உந்தன் உருவம்

Share this post


Link to post
Share on other sites

உருவம்..

பருவக்காலங்களால்

மாறக்கூடும்...

அலங்கோலமாகக்கூடும்...

என்னிதயம்.. தூய்மையாக

இருப்பதை என்னால் உணர முடியாமல்

போகின்ற காலத்தில்..

நான் உன்னருகே

இருக்கமாட்டேன்..

Share this post


Link to post
Share on other sites

மாட்டேன் வரவே மாட்டேன்

வாசல் தேடி வந்த என்னை

விழிமலர மொழி பேசி

வாவென்ற அழைக்காத

வாசல் தேடி எப்படி என்

பாதங்களை பதிப்பேன்

Share this post


Link to post
Share on other sites

பதிப்பேன் உன்

பாதம் அடி வைக்க

அங்கே என்

உள்ளங்கைகளை....

வேண்டாமா விடு..

நீ வராத வீட்டுக்கு...

உன் தங்கை வருவாளா...

கேட்டுப் பார்க்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

பார்க்கிறேன் என் கன்னத்தை

பதிந்துவிட்ட உன் கைவிரல்

பதிப்புக்களை ஆஆஆஆஆஆ

வலிக்கின்றது மனமும் சேர்ந்து

பலிக்கடாவாகி விட்ட என்னை

காளிக்கு ஒப்பாகவா வர்ணிக்கிறாய்

Share this post


Link to post
Share on other sites

வர்ணிக்கிறாய் தினமும்

வெண்ணிலவை உன்கவிகளில்

வர்ணிப்புக்கு எல்லையே இல்லையா

வெள்ளையுள்ளம் கொண்டவனே..

கெஞ்சிக் கேட்கிறேன்

பஞ்சுமேகத்தை வர்ணி

கொஞ்சிக் கேட்கிறேன்

மஞ்சள்வானத்தை வர்ணி

கன்னி நான் கேட்கிறேன்

மின்னும் நட்சத்திரத்தை வர்ணி

சின்ன வாய்திறந்து கேட்கிறேன்

வர்ண வானவில்லதை வர்ணி

இனிமேல் உன்கவிகளில்

இவள் கேட்ட வர்ணனைகள்

மட்டுமே அலங்கரிக்கும் என்று

கட்டளை இடுகின்றேன் மன்னவனே..

Share this post


Link to post
Share on other sites

மன்னவனே என் மஞ்சத்தில்

கஞ்சமின்றி துயில் கொண்டவனே

கொஞ்சி பேசி காதல் சொன்னாய்

கொஞ்சமில்லாமல் விஞ்சியும் நின்றாய்

அஞ்சி அஞ்சி என் அந்தரங்கம் கண்டாய்

இந்த வஞ்சியை கஞ்சிக்கு

ஏங்க வைத்துவிட்டாயேடா ?

Share this post


Link to post
Share on other sites

ஏங்க வைத்துவிட்டாயேடா

நீங்கி எனைச் சென்றதனால்

எங்கே சென்றாய் என்னவனே

வீங்குகின்றன கண்களிரண்டும்

கொங்கைகள் துடிக்கையிலும்

மங்கலமான முகம்வாடுகையிலும்

மங்கையிவள் தவிக்கின்றாள்

வேங்கையே நீ வந்துவிடு...

வங்கக்கடல் அலைகல் போல

பொங்குகின்றன நினைவலைகள்

திங்களிவள் சோருகின்றாள்

சிங்கமே என்முன்னே வா..

இங்கிதமானவனே எனக்கு

தீங்கேதும் நேருமுன்னே

பங்கயக் கழுத்தில் முத்தமிட்டு

சங்கமம் ஆகிவிடு என்னுள்ளே

Edited by வெண்ணிலா

Share this post


Link to post
Share on other sites

என்னுள்ளே வசிப்பவளே

என்னையே சுவாசிப்பவளே

கண்ணிலே மணியாகி

கனவிலும் உறுத்துபவளே

காதல் என்று எண்ணி

கைபிடிக்க நினைத்தேன்

கானல் நீராய் கரைந்து போனாயே!

Share this post


Link to post
Share on other sites

போனாயே...

தமிழ் தந்த செல்வத்தின்

செல்வமே..!

தமிழ் வீரத்தின்

புன்முறுவலே..!

எதிரி படை தோற்கும் நாள்

எட்டும் தொலைவில் தான்

தமிழ் கண்ணே...!

Edited by பூமகள்

Share this post


Link to post
Share on other sites

தமிழ் கண்னே

தமிழ் மண் தந்த

தமிழ்ச் செல்வனே

காலை வேளைதனில்

வானில் வந்த

காலனவன் உன்னோடு

சேர்த்து ஐவரையும்

முழுங்கியதை எப்படிதான்

மறக்க முடியுமோ...

Share this post


Link to post
Share on other sites

மறக்க முடியுமோ

மாவீரனே!

உன் புன்னகை சிந்தும் வதனத்தை

பாவியரின் வல்லூறுகள்

பறந்து வந்து உன் உயிர் குடித்ததே

உன் இழப்பின் வடுச் சுமந்து

எம் மன்னவன் சொல்லும்

சேதிக்காய் காத்திருப்போம்

Share this post


Link to post
Share on other sites

காத்திருக்கிறோம் என்று

கார்த்திகைப்பூக்கள் கண்ணைப்

பார்க்கும்.. தலைமகனே

உன்னைப் பார்க்கும்...

காலங்கள்.. எதுவோ

கண்ணீர்ப்பூக்கள்...

மெல்லப் பார்க்கும்....

கல்யாணக் கனவுகள்..

இல்லாமல் கன்னிப்பூக்கள்

போர்க் களம் பார்க்கும்..

சொல்லாமல் வேள்வியில்

வித்தாகும்... கரும்புலி

விண்ணில் நின்று

தமிழ் மண்ணைப் பார்க்கும்...

காத்திருக்கிறோம் என்று

கார்த்திகைப்பூக்கள் கண்ணைப்

பார்க்கும்.. தலைமகனே

உன்னைப் பார்க்கும்...

காலங்கள்.. எதுவோ

கண்ணீர்ப்பூக்கள்...

மெல்லப் பார்க்கும்....

கல்யாணக் கனவுகள்..

இல்லாமல் கன்னிப்பூக்கள்

போர்க் களம் பார்க்கும்..

சொல்லாமல் வேள்வியில்

வித்தாகும்... கரும்புலி

விண்ணில் நின்று

தமிழ் மண்ணைப் பார்க்கும்...

Share this post


Link to post
Share on other sites

மண்ணைப் பார்க்கும்

கண்கள் இங்கே கருவறை சுமந்திடும்

கல்லறைகளில் நெய்விளக்கேற்றி

கண்ணீரை காணிக்கிட

வந்திடுவீர்

Share this post


Link to post
Share on other sites

வந்திடுவீர் என்றெண்ணி

வாசல் படி நோக்கித்

தவம் கிடந்தேன்!

படலை திறக்கும் ஓசை

கேட்டு

மழலை போல துள்ளியெழுந்து

வாசல் தாண்டி ஓடி

வந்தேன்

கையில் காகிதக் கட்டு

தோளில் தொங்கும் துணிப் பை

எல்லாம் பார்த்து

ஆவலோடு உன் முகம்

பார்த்தேன்...

வழமையாக உதடு சுளிக்கும்

உன் முகம்

புன்னகையோடு...!

மனசுக்குள் ஏதேதோ

இன்பத் துடிப்புகள்...

'அப்பாடா...' இன்றாவது

என் அத்தான் கோபம் தணிந்து

மடல் வரைந்தாரே...!

Edited by kavi_ruban

Share this post


Link to post
Share on other sites

வரைந்தாரே ஓவியம்

உரைத்திட முடியா நினைவுதனை

கரை கண்டு புரளும் கற்பனையாலே

வரைந்து கவியாலே பாடல்

தொடுத்துடுவீரே

இரை தேடும் பறவைக்கு

இரை தருவது போலே களத்தில்

வரையும் ஓவியம் தருவதும் அழகு

கரைபுரண்டோடும் கவியும் அழகு

Share this post


Link to post
Share on other sites

கவியும் அழகு

கவி புனையும்

கவியும் அழகு

சுதியும் நயமும்

நெளியும்

நதி போல

என் நெஞ்சில் பாயும்

விரியும் கற்பனையில்

தெரியும் பல காட்சி

சரியும் பிழையும்

தெரியா

கவியொன்று பிறக்கும்!

அரியும் அவனிடை

தழுவும் உமையும்

விழி மலர்த்தி

கை உயர்த்தி

ஆசீர்வதிப்பார்!

நீயும் நானும்

வெறும் பேனைகள்

தமிழன்னை தன்னை நிரப்பி

தன்னையே தாளில்

எழுதுகிறாள்

நானும் வந்து களத்தில்

பிரதி செய்கிறேன்

அவ்வளவே என் கவி!

Edited by kavi_ruban

Share this post


Link to post
Share on other sites

என் கவிகள்

இயற்கையை தழுவும்

தென்றலாய்

பூக்களை வட்டமிடும்

தேனீக்களாய்

என்றும் உன்னையே

சுற்றி வட்டமிடுகின்றன...

என் கருவிழிப் பார்வையினிலே

நீ விழுந்த நாள் தொடக்கம்

என் மனதினிலே

ஊற்றெடுக்கிறது கவிகள்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை! – அறிக்கை வெளியானது In இலங்கை     April 2, 2020 11:25 am GMT     0 Comments     1032     by : Litharsan வவுனியா, கற்குழியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் நேற்று காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் மரணமடைந்திருந்தார். இதேவேளை இந்தப் பெண், கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்றவில்லை என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே மரணித்ததாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்தில் வவுனியா கற்குழி பகுதியை சேரந்த 56 வயதுடைய அருட்செல்வன் கலாராணி என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/வவுனியாவில்-உயிரிழந்த-ப-2/
    • ஒருவரின் உயிரிழப்பு 2 ஆயிரத்து 800 பேரை முடக்கியது- மருதானையில் சில பகுதிகள் முடக்கம்! In இலங்கை     April 2, 2020 5:41 am GMT     0 Comments     2165     by : Benitlas மருதானையிலுள்ள இமாமுல் அரூஸ் மாவத்தையில் உள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 819 பேரைக் கொண்ட பகுதி முடக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மருதானையினைச் சேர்ந்த ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். இந்தநிலையில் கொரோனா தொற்று நோயாளி வசித்த பகுதி என்ற அடிப்படையிலேயே குறித்த வீதி முடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மருதானையிலுள்ள ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் உள்ள இரண்டாயிரம் பேர் வசிக்கும் பகுதியும் இதே காரணத்தின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ஒருவரின்-உயிரிழப்பு-2-ஆயி/
    • கொரோனா வைரஸ் தாக்கம்! வடக்கு - கிழக்கு மக்களுக்கு உதவ முன்வருமாறு அழைப்பு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்நாட்டு போரானது மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. இதில் வடக்கு, கிழக்கில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் குறைந்தது ஒரு உயிரையாவது காவு கொடுத்திருந்தன. இதனால் மனதளவிலும் பொருளாதார நிலையிலும் இந்த குடும்பங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. என்றபோதும் கூட இன்றும் அதன் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றானது சமூக தொலைவு, முடக்கம், ஊரடங்கு உத்தரவு என்பவற்றை ஏற்படுத்தி இன்னும் இன்னல்களை எதிர்கொள்ள செய்துள்ளது. அதிலும் குறிப்பாக நாள் கூலிக்காக வேலை செய்து ஒரு நேர உணவிற்காக பாடுபட்டு வந்த குடும்பங்கள் அதுவும் இல்லாத நிலையில் நிர்க்கதி நிலையை அடைந்துள்ளன. இது குறித்து அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் கூட இலங்கையர்களாகிய நாமும், எமது உறவுகளாகிய புலம்பெயர்ந்த மக்களும் தம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன் வருவது அவசியமாகும். அந்த வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத இந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கப்படுவது கட்டாயமாகும். https://www.ibctamil.com/srilanka/80/140341?ref=home-imp-flag
    • யாழ். மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 நோயாளர்கள் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியிருந்தவர்களில் மேலும் 10 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாழ்ப்பாணம், அரியாலையில் அமைந்துள்ள தேவாலயத்தில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற ஆராதனையை நடத்திய சுவிஸிலிருந்து வருகை தந்திருந்த மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 20 பேரை காங்கேசன்துறையிலுள்ள ஓர் தனிமைப்படுத்தல் மையத்தில் கடந்த 23 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தோம். இவர்களில் கொரோனா நோய்த் தொற்றுக்கான எந்தவொரு அறிகுறிகளும் இதுவரை தமக்கு ஏற்பட்டதாக எவராலும் அறியப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இவர்களில் முதற்கட்டமாக 10 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை இவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இம்மூன்று பேரும் சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த போதகருடன் நெருங்கிப் பழகியவர்களாவர். இவர்கள் சிகிச்சைக்காக வெலிக்கந்த கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் மேற்படி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியுள்ள ஏனைய 10 பேருக்குமான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏற்கனவே, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஏனையவர்களுக்கும் இப்பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில், வட மாகாணத்தில் மேற்படி ஆராதனையில் பங்குபற்றி சுயதனிமைப்படுத்தலில் தத்தமது வீடுகளில் தங்கியுள்ள 326 பேரையும் சுயதனிமைப்படுத்தல் விதிகளை இறுக்கமாகக் கடைப்பிடித்து வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாமென கேட்டுக்கொள்கின்றோம். இவர்களில் யாருக்காவது காய்ச்சல், வறண்ட இருமல் மற்றும் தொண்டைநோ போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிப்பதுடன் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/யாழில்-சுவிஸ்-போதகருடன்/