Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

கவிதை அந்தாதி

Recommended Posts

விடுதலை என்பது

விடுகதை இல்லை

வெற்றியும் எளிதில்லை

விடுவலை என்று

வெருட்டியே அழிப்போம்

வெருண்டோடும் சிங்களமே

Share this post


Link to post
Share on other sites

சிங்களமே.. சிரி..

இது உனக்கு சிரிக்கின்ற

காலம் ..

ஒரு இனத்தை அழ வைத்து

அரக்கன் போல்

சிரிக்கிறாய்..

இல்லை

அரக்கனாகியே சிரிக்கிறாய்..

சிரி..

சிங்கமென்ற போர்வைக்குள்தான்..

இருக்கிறாய்..

நிஜப்புலிகள்.. வரும்

போர்ச் சங்கு ஊதும்..

அப்போது நீ எரிவாய்..

நாம் சிரிப்போம்.

Share this post


Link to post
Share on other sites

சிரிப்போம் சேர்ந்தே சிரிப்போம்

சிரித்து சிரித்தே கைகோர்த்து

சிங்காரமாய் நடந்திடுவோம்

சிரித்து சிரித்து கவலைகளை

சிட்டாய் பறக்க வைத்தே

சுதந்திரமான மனதை

சுகமாக்கி மகிழ்ந்திடுவோம்

வாய் விட்டு சிரித்தால்

நோய் விட்டுப் போகும் என்பதால்

வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்

Share this post


Link to post
Share on other sites

"வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்"

இதிலென்ன கஞ்சத் தனம்?

யார் வீட்டு சங்கதியேனும்

சந்திக்கு வந்தால்

சீர்கெட்டுப் போனதப்பா

அக்குடும்பமென

கொடுப்புக்குள் சிரிப்பதுவும்

வார்த்தையாலே வாள் சண்டை

பிடிப்பதுவும் இருக்கட்டும்...

"ஊர் ரெண்டுபட்டால்

கூத்தாடிக்கு கொண்டாட்டம்" எனும்

பழைய பழ மொழியை

எத்தனை நாள் காவடி தூக்குவாய்?

யோசித்துப் பார்...

கேலிப் பேச்சுக்கு மட்டும்

உதடுகளுக்கு சிரிக்கக்

கற்றுக் கொடுத்தாய்!

சிந்தனை மாற்றடா

சந்தனக் காற்று

மேனி தடுவுகையில்

காற்றின் கைகளை தட்டிவிட்டு

மெதுவாய் புன்னகை

அப்படியே நிலைக் கண்ணாடியில்

நின்றுன் மேனி ரசி

எத்தனை அழகடா

நீ

புன்னகைக்கும் போது என

உனை நீயே ரசி

கொஞ்ச நாளில் மறப்பாய்

கேலிச் சிரிப்பை

புன்னகைக்க மட்டுமே

உதடுகளுக்கு உத்தரவிடுவாய்

ஒன்று தெரி்ந்து கொள்

உன் உதடுகள் புன்னகைக்கும்

போதெல்லாம்

நீ அழகாவாய்...

உன்னைப் பார்ப்பவனும்

அழகாவான்...

ஆக

வீட்டுக்கு வரவேற்பறை போல

மனிதனுக்குப்

புன்னகை...

ஆகவே தயங்காது

இன்றே நீயும்

புன்னகை...!

Share this post


Link to post
Share on other sites

புன்னகை...

எந்நகை அணிந்தாலும்..

பெண்ணே..உனக்கு

அழகுந்தன்...புன்னகை

பூக்கள் வாடினாலும்..

என்றும் வாடாதது...

புன்னகை..

பள்ளியறையில்

சினங்கொண்ட கணவனின்

மனங்கொள்ளும்

மனையாளின் புன்னகை

கோடி இன்பங்கள்

கொட்டிக் கொடுத்தாலும்.

ஈடில்லா இன்பம்..

மழலையின் புன்னகை

நெஞ்சத்தே வஞ்சம்

நிலை கொண்ட

மாந்தர்க்கு மண்ணில்

வாராது..அழகுப் புன்னகை

Share this post


Link to post
Share on other sites

அழகுப் புன்னகை சிந்திடும்

அழகு தேவதை அவள்

அழகு ஆபத்தாம்

ஆழம் அறியாமலே

அழகினை அணுஅணுவாய்

அள்ளி ரசித்திட முனைந்தேன்

Share this post


Link to post
Share on other sites

அழகினை அணுஅணுவாய்

அள்ளி ரசித்திட முனைந்தேன்

கிள்ளி எறிந்தாள்

தரையில் விழுந்த

மீனாய்

துள்ளி விழுந்தேன்

பள்ளி கொள்ளும் பாவனையில்

படுத்துறங்குவதாய்

பாசாங்கு செய்தாள்

கள்ளி - கன காலம்

எனை ஏமாற்றிய

பெருங் கள்ளி

முள்ளுள்ள கள்ளிச்

செடி பார்த்ததுண்டு

அழகுள்ள கள்ளிச் செடி

இங்கே கண்டேன்

பாசமுள்ள நெஞ்சத்திற்கு

மோசம் செய்யும்

இவள் வேண்டாமென

தள்ளியே நடக்கிறேன்

பழைய நினைவையும்

தள்ளியே நடக்கிறேன்!

Share this post


Link to post
Share on other sites

தள்ளியே நடக்கின்றேன்

பள்ளிகொள்ளும் உன்னை

மந்திகள் போல நான்

தொந்தரவு செய்யாமல்..

சாந்தமானவனே

நீ நன்றாக தூங்கு என்

காந்த விழிகள் உனை

ஈர்க்காதபடி கண்களை மூடி..

போர்வைக்குள் உன்

தேகத்தை மறைத்து

நிம்மதியாக தூங்கு

நிலவிவளின் சீண்டலின்றி..

Share this post


Link to post
Share on other sites

சீண்டலின்றி..

சிணுங்கலின்றி..

தூங்கலாமோ...பெண்ணே...

காதல் என்பது...

தேன்கூட்டைப்போல கண்ணே...

சத்தமின்றி..

முத்தமின்றி...

நித்திரையேன்.. பெண்ணே...

காதல் என்பது..

தீயைப்போல கண்ணே...

சிரித்திடாமல்..

உரித்திடாமல்...

துயிலுவதேன் பெண்ணே..

காதல் என்பது..

ஓடும் ஆற்றைப் போல கண்ணே...

உன் தூக்கமும்

தூக்கமில்லை..

என் ஸ்பரிசங்கள்..

பூக்கவில்லை..

உன் சுவாசத்தில்...

என் வாசனை..

என் யோசனை..

உன்னில் சோதனை..

பாசாங்குக்காரி நீ

என் பாதி நீ...

முடிச்சிட்ட கணவன்...

மூச்சுபட்டும்.. நீ..

தூக்கம் தொடரலாம்..

எதிர் கண்ணாடி சொன்னதே.. மெய்..

இதழ் களவாக பூத்த புன்னகை..

Share this post


Link to post
Share on other sites

புன்னகை சிந்திடும் வேளைதனில்

புகுந்திடும் ஆனந்தம் மனசுக்குள்ளே

கோபம் கொள்ளும் வேளைதனில்

கொளுந்து விட்டேறியும் எண்ணங்கள்

அன்பு காட்டிடும் வேளையில்

பனியாய் உருகிடும் எந்தன்

உள்ளம் உன் மூச்சுக் காற்று பட்டு

மயங்கிடும் பொழுதுகளில்

எந்தனுயிர் இங்கில்லை

Share this post


Link to post
Share on other sites

என்னுயிர் இங்கில்லை

எழுந்து வாடி பெண்ணே - நீ

தான் என் உள்ளத்தில்

பூத்த முல்லை!

மன்னுயிர் காக்கும்

மன்னவன் போல்

உன்னுயிர் காப்பேன்

நான்...

புதிதாய் பயிர் வளர்க்கும்

விவசாயி போல்

கெதியாய் எனக்குள்

வளர்ந்த காதல் பயிர்

தினம் தினம் நான் பார்க்கிறேன்

வாடாமல் வதங்காமல்

நான் வளர்க்கிறேன்!

தனம் நீ மட்டும்

என்னோடு இருந்தால் போதும்

சினம் விடுகிறேன்

சிகரெட்டும் தொடேன்!

வரம் தாடி பெண்ணே

சிவன் பக்கம் பார்வதி போல் - என்

தனம் பக்கம் கவியிவனென

வரம் தாடி

இல்லையேல் இவன் வளர்க்கக்கூடும்

பெருந் தாடி!

உனக்குப் பிடித்தால்

பிரன்ஞ் தாடி! :lol:

Share this post


Link to post
Share on other sites

பிரெஞ்சு தாடி! பிரெஞ்சு தாடி!

பிண்ணாக்குத் தின்னும் ஆட்டுக்கும் அதே தாடி!

கிடாயின் காலடியில் அதன் காதலிகள் கோடி!

இருந்தும் அதன் தாடையிலும் ஒரு தாடி.

பெண்கள் பின்னே பாய்ந்திடுவார் ஓடி!

அவளின்றேல் உடன் விட்டிடுவார் தாடி!

காதல் தோல்விக்கு விளம்பரமா தாடி!

பெற்றவள் பரிதவிக்க, பார்த்தவர்

பரிகசிக்க தேவையா தாடி!

Share this post


Link to post
Share on other sites

தேவையா தாடி

பாவையெனக்கு பிடிக்காத

கறுப்புத்தாடி ஏன் உனக்கு

முறுக்கிவிடும் மீசையும்

நறுக்கென்ற வீரமான பேச்சும்

வெண்மையாக பற்கள் காட்டி

பெண்மையை கவரும் சிரிப்பும்

இவையனைத்தும் உனதழகு

ஆகையால்.. :lol:

குறுந்தாடியை நீக்கிவிட்டு

குமரியிடம் வா காளையே

குதூகலமாக அணைப்பேன் :lol:

Share this post


Link to post
Share on other sites

அணைப்பேன் என்று

தான் நீயும்

சொல்கிறாய்

எவ்வளவு நேரமாய்

விளக்கு எரிகிறது...

முதலில் அதை அணை

பிறகு என்னை அணை

இருட்டில் உனக்கு நானும்

எனக்கு நீயும் துணை! (சேர்த்துப் படிக்காதீர்கள்... கடவுள் காக்க....)

Share this post


Link to post
Share on other sites

துணையென வந்து

அணைத்து எனை

கணையாழி தந்து

இணைத்து நெஞ்சோடு

பிணைத்தாய் அன்போடு

பிணைமான் என்னை

Share this post


Link to post
Share on other sites

என்னைப் படித்த முதல்

மாணவி...அவள்...

நான் ஒன்றும்..

சமஸ்கிரதம் அல்ல..

தெளிவான அரிச்சுவடிதான்..

ஆனால்..

இந்த அரிச்சுவடிக்குள்..

புதைந்து கிடந்த..

நூலகத்தை பார்த்தவள் அவள்...

படித்தவள் அவள்...

ரசித்தவள் அவள்..

சிரித்தவள் அவள்..

அவள்தான் என் தாய்.

Share this post


Link to post
Share on other sites

தாய் என்றாலே அன்பு

சேய் நான் இங்கே விரும்புவது

சாய்ந்தாட ஒரு மடி

வாய் விட்டு சொல்லமுடியா

துய்யும் துயரங்கள்

காயும் மனதினில் கரைந்தோட

அம்மா நீ வேண்டும்

Share this post


Link to post
Share on other sites

அம்மா நீ வேண்டும்..

உன் மடி வேண்டும்....

மரணமென்றாலும்....

உன் மடிமேல்..தலை

சாய்ந்தால் அது போதும்..

உதரம் மிதித்த கால்களை..

கையிலேந்தி முத்தமிட்டாய்..

கன்னம் கிள்ளிய நகக்குறிகளை

பெருமையாக சொல்லிக்கொண்டாய்..

பள்ளிசெல்ல மறுத்த நாளில்..

கூட வந்து காத்திருந்தாய்..

எனக்குப் பிடித்த உணவைத்தானே..

பார்த்து பார்த்து நீ சமைப்பாய்..

அப்பாவோடு சண்டை போட்டு..

என் ஆசைக்கெல்லாம்..

அங்கீகாரம் பெற்றுத் தந்தாய்..

அம்மா தெய்வம் கூட

ஒரு வரத்தோடு நிறுத்திக்கொள்ளும்..

கோடி வரந் தந்து

வாழ்வு தந்த என் அம்மா..

நீ எனக்காகவே வாழ்கிறாய்..

எனக்குள்ளும் வாழ்கிறாய்..

Share this post


Link to post
Share on other sites

வாழ்கிறாய் அம்மா

என்றென்றும்

வாழ்வாய் அம்மா

என்னுள்ளே சுவாசமாய்

என்னுள்ளே கவிதையாய்

எனக்கே எனக்காக

என்னுயிர் தாயே

அசையும் தெய்வம் அம்மா

நீ அசையும் தெய்வம்

Share this post


Link to post
Share on other sites

தெய்வம்

இருக்கிறதா.. இல்லலையா...

இருக்கின்றதென்றால்..

எங்கே.. எங்கே இருக்கிறது...

உருண்டு சுற்றிய வீதிகளும்..

காவடி எடுத்த தெருவிலும்..

பாற்செம்பு தூக்கிய பாதையிலும்..

அழுதழுது தொழுத தெருவிலும்..

கூட்டம் கூட்டமாய்க்.

கூடி இழுத்த தெருவிலும்..

சந்தன வாசமும்..

ஜவ்வாது வாசனையும்..

கற்பூர புகையில்...வெப்பத்தில்..

அரோகரா என்ற

பெருங்கோசத்தோடு..

கூவித்தொழுத கோபுர வாசலிலும்..

இதெல்லாம் வேண்டாம்..

கடவுளே..

மூலஸ்தானமூர்த்தியே..

உன்... மூலஸ்தானத்தில் கூட..

தர்மம் மீறி..

அப்பாவித் தமிழர்.. இரத்தம் சிந்துவதைக்..

கண்டு காணாமல்..

தெய்வமே...

நீ இருக்கிறாயா..இல்லையா..

Share this post


Link to post
Share on other sites

இருக்கிறாயா இல்லையா

கல்லாலே உன்னை

கட்டித் தொழுததாலே நீயும்

கல்லாக உன்மனதை ஆக்கிக்கொண்டாயோ

பொல்லாத இந்த மனிதர்

புழுத்துவிடும் உடம்பிற்காய்

காட்டிக்கொடுக்கின்றார் கழுத்தறுக்கின்றாரே என

கடவுளே நீயும் கண்மூடிக்கொண்டாயோ

இல்லை

காணாமல் போனாயோ

கண்காணிப்புக் குழுவினில் உன் பெயரும்

கடைசியில் வரும் என்று

காத்துத்தான் கிடைக்கின்றாயோ

Share this post


Link to post
Share on other sites

காத்துத்தான் கிடக்கின்றாயோ..

என் வீட்டுக் காவல்காரா...

நீ நன்றியுள்ளவனடா...

உன்னை மறந்து..

எம் உயிரை மட்டும்

நினைந்து ஓடி வந்தோம்...

நீ வீட்டையே சுற்றி சுற்றி

வருவதாக

அயலவர்கள் சொன்னார்கள்..

இப்போது நீ எங்கே..

எங்கே எப்படி சாப்பிடுகிறாய்..

என்ற என் கேள்ளவிகளே..

என்னை உறுத்துகிறது..

மன்னித்துக்கொள் டைசன்..

உன்னை நாயென்று

யாரும் சொன்னாலே..

கோபப்படும் நான்..

உன்னை மறந்துவிடவில்லை

என் நினைவில்

நீ இன்னமும்.. உண்டு..

டைசன்..ஓ என் டைசன்..

Share this post


Link to post
Share on other sites

ஓ என் டைசன்

என்ன கொடுமையடா

இது?

உனக்குக் கூட

ஆங்கிலத்தில் பெயரா?

பெயரில் என்ன

இருக்கு என்று சும்மா

குரைக்காதே...

உன்னை அடையாளப்படுத்துகின்ற

அவசிய முத்திரையடா அது...!

கொஞ்சம் யோசித்துப் பார்

நீ எப்படிக் குரைக்கின்றாய்?

"வள்... வள்..." என்று தானே

அது கூட தமிழ் என்று தானே

நான் சந்தோசப் பட்டேன்...

ஏனடா உன் எஜமானை

கோபித்துக் கொள்ளவில்லை...?

ஆனாலும் நீ கொடுத்து வைத்தவன்டா

ஈழத்தெருக்களில் தானே

உன் வாசம் இப்போதும்!

Share this post


Link to post
Share on other sites

இப்போதும்...

புரியவில்லையா...

மதியுகி..பார்த்தால்..

புரிந்திருக்குமே...

நான் சொன்னது

நடக்கின்றதென்பது...

இவன் இப்படித்தான்..

Share this post


Link to post
Share on other sites

இவன் இப்படித்தான்

கவன் இழுத்து

கல்லெறிந்து கண்ணாடி

உடைந்த பின்

காலில் விழுந்து

புலம்புவான்

இவன் இப்படித்தான்...!

சிவன் முன் போய் நின்று

நக்கீரப் பரம்பரையின்

கடைசி வாரிசு

நானென இறுமாந்து

சவால் விடுவான்

இவன் இப்படித் தான்...!

சரி விடு அண்ணா

சண்டை வேண்டாம்

பல வரி நான்

தமிழன்னையின் சொல்லழகு

காட்ட எழுதினால்

ஒரு வரி பிடித்து

தொங்குகின்றாயே...

நம் முன்னோரின் வீர

விளையாட்டு அது!

நாம் தான் பரிணாம வளர்ச்சியின்

உச்சியில் நின்று கொண்டு

ஆறறிவு ஆணவத்தில்

ஓரறிவு உயிரின்

குணம் கூட அறியோம்!

வீணே சீர் கெட்டுப்

போனோம்...

யாழில் வந்து

சடுகுடு, கிட்டிப் புள்,

தாச்சி மறித்தல் ஏதேனும்

விளையாடாமல்

சொலோடு விளையாடுகிறோம்

என்ன சின்னத் தனம் இது! (வீணான கற்பனைகளுக்கு இடம் கொடாதீர்... அடியேன் தன்னையே திட்டுவதாக அர்த்தம் கொள்க...)

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • சிங்களவன் இந்திய றோவின் அனுசரனையுடன் நான்றாக கையாளுகின்றான் எம் அரசியல்வாதிகளை. கடைசி காலத்தில் பெட்டி பெட்டியாக வாங்கி பிற்கால சந்ததிகள் சந்தோஷமிழந்து வாழ இப்பவே சேமிக்கனும்
    • நாட்டில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு காணப்படுகின்றன. அவை, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களாகும். மன்னாரை விட்டாச்சு? என்னாச்சு? 🤔
    • மருத்துவபீட மாணவர்களுக்கு மாத்திரம் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு   மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பல்கலைக்கழகங்களை ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக  நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவருவது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக உயர்கல்வி  அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பு கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=129098
    • முஸ்லிம்களின் ’இதயம்’ என்னவாகும்? ஒரு பொதுத் தேர்தல் கணிப்பு   முகம்மது தம்பி மரைக்கார்       நாட்டில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு காணப்படுகின்றன. அவை, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களாகும். கடந்த நாடாளுமன்றில், இறுதியாக அங்கம் வகித்த 20 உறுப்பினர்களில் எட்டுப் பேர், இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாவர். அதிலும் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தை ஐந்து உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களில் இருவர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.   இலங்கை முஸ்லிம்களின் இதயமாக, அம்பாறை மாவட்டம் கருதப்படுகிறது. அதனால்தான், முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும், அம்பாறை மாவட்டத்தைக் குறிவைத்து இயங்கி வருகின்றன. குறிப்பாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அத்திபாரமாக அம்பாறை மாவட்டமே உள்ளது. முஸ்லிம் காங்கிரஸுக்குக் கடந்த நாடாளுமன்றத்தில், அம்பாறை மாவட்டம் சார்பாகத் தெரிவு செய்யப்பட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றையும் அம்பாறை மாவட்டத்துக்கு, முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியிருந்தது. ஆக மொத்தம், முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். கடந்த நாடாளுமன்றத்தில், முஸ்லிம் காங்கிரஸுக்கு மொத்தமாக ஏழு பிரதிநிதிகள் இருந்தனர். இவர்களில் ஆறு பேர், ஐக்கிய தேசிய கட்சி சார்பாகப் போட்டியிட்டும், தேசியப்பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்தனர். ஒருவர் மட்டும்தான், முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகி இருந்தார். கடந்த தேர்தல் அம்பாறை மாவட்டம், ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாகும். கடந்த முறைஇ இந்த மாவட்டத்திலிலிருந்து முஸ்லிம்கள் மூவரும் சிங்களவர் மூவரும் தமிழர் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். குறித்த மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்களாவர். அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைத்து, யானைச் சின்னத்தில், முஸ்லிம் காங்கிரஸ் கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் 10 வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைத்து, யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், தனது சார்பில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே களமிறக்கியது. யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ஏனைய ஏழு பேரும், சிங்களம், தமிழ் வேட்பாளர்களாவர். கடந்த பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், யானைச் சின்னத்துக்கு வாக்களித்ததோடு, தமது மூன்று விருப்பு வாக்குகளையும் தமது கட்சி சார்பில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வழங்கினர். இதன் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றதோடு, யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினர். இதேவேளை, யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு வேட்பாளர் மட்டுமே, அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். பொத்துவில் தொகுதிக்கான அநீதி ஆனால், இம்முறை பொதுத் தேர்தலில், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்து, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதேவேளை, வழமையாகக் கூட்டணியமைக்கும் போது, மூன்று வேட்பாளர்களை மட்டுமே களமிறக்கும் முஸ்லிம் காங்கிரஸ், இம்முறை ஆறு வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. இதனால், முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளும் விருப்பு வாக்குகள், வீழ்ச்சியடைவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. மறுபுறமாக, தொகுதி ரீதியாக வேட்பாளர் பங்கீடு செய்துள்ளமையிலும், இம்முறை மு.கா, அநீதி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அம்பாறை மாவட்டம் (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்), நான்கு தொகுதிகளைக் கொண்டது. அவை, பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை ஆகிய தொகுதிகளாகும். இவற்றில், அம்பாறை சிங்கள வாக்காளர்களையும் ஏனைய மூன்று தொகுதிகள், முஸ்லிம் வாக்காளர்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளாகும். மேற்படி தொகுதிகளில் பொத்துவில், அம்பாறை ஆகியவை இரட்டை உறுப்புரிமையைக் கொண்ட தொகுதிகளாகும். அந்த வகையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவர். அதிக வாக்குகளைப் பெறும் கட்சிக்கு, 'போனஸ்' ஆக - ஓர் உறுப்புரிமை வழங்கப்படும். இம்முறை, ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்து, 'தொலைபேசி' சின்னத்தில், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ், தனது ஆறு வேட்பாளர்களில் கல்முனைத் தொகுதியிலிருந்து ஒருவரையும் சம்மாந்துறைத் தொகுதியிலிருந்து ஒருவரையும் தெரிவு செய்துள்ள அதேவேளை, இரட்டை அங்கத்துவமுள்ள பொத்துவில் தொகுதிக்கு, நான்கு வேட்பாளர்களை நியமித்துள்ளது. அதனால்தான், இந்த வேட்பாளர் பங்கீட்டு முறைமை அநீதியானது எனக் கூறப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில், 74,068 வாக்காளர்கள் உள்ளனர். சம்மாந்துறைத் தொகுதியில், 85,911 வாக்காளர்கள் உள்ளனர். பொத்துவில் தொகுதியில், 159,694 வாக்காளர்கள் இருக்கின்றனர். கல்முனைத் தொகுதியில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் களமிறக்கப்பட்டுள்ளார். சம்மாந்துறைத் தொகுதியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மு.கா சார்பில் போட்டியிடுகிறார். பொத்துவில் தொகுதியில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் போட்டியிடும் அதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம். வாஸித் ஆகியோரும் மு.கா சார்பில் போட்டியிடுகின்றனர். 'வெட்டுக்குத்து' அரசியல் இந்த நிலைவரம் காரணமாக, மேற்படி முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான 'வெட்டுக் குத்து' அரசியல், தேர்தல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையிலேயே ஆரம்பித்துள்ளமையை, வெளிப்படையாகவே காணக் கூடியதாக உள்ளது. உதாரணமாக, பொத்துவில் தொகுதியில் மு.கா சார்பாகப் போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிமைஇ அதேதொகுதியில் மு.காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர், வெளிப்படையாகவே எதிர்த்து, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதேவேளை, பொத்துவில் தொகுதியில் போட்டியிடும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், பைசல் காசிமுக்கு ஆதரவாளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அரசாங்கத்தில், சுகாதார இராஜாங்க அமைச்சராக பைசல் காசிம் இருந்தபோது, அவரின் இணைப்பாளராகத் தவம் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. வேட்பாளர்களிடையே இவ்வாறு 'வெட்டுக்குத்து' அரசியல் ஆரம்பித்துள்ள அதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி, அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று, வெற்றி பெறுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த தேர்தல்களில், ஒன்றாக இணைந்து போட்டியிட்டு வந்த ரணில், சஜித் தரப்பினர், இந்தத் தேர்தலில் இரண்டாகப் பிளவுபட்டுப் போட்டியிடுவதால், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியமைத்துள்ள சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெறுவதில், சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன. கணக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ 259673 வாக்குளையும் (சுமார் 63 வீதம்)இ கோட்டாபய ராஜபக்ஷ 135058 வாக்குகளையும் (கிட்டத்தட்ட 32 வீதம்) பெற்றிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை, ஐந்து இலட்சத்து 3,790 ஆக இருந்தனர். ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவுக்குக் கிடைத்த வாக்குகளில், தமிழர்களின் அதிகப்படியான வாக்குகள், இம்முறை தமிழ்க் கட்சிகளுக்கே போய்ச் சேரும். அவ்வாறான வாக்குகளின் எண்ணிக்கையை, சுமார் 50 ஆயிரமாகக் கணிப்பிடலாம். அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவுக்குக் கிடைத்த, ரணில் அணி சார்பானவர்களின் வாக்குகள் இம்முறை, அநேகமாக ஐக்கிய தேசிய கட்சிக்கே கிடைக்கும். மறுபுறமாக, அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ், ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகளும், ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களும், இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால், குறித்ததொரு கட்சிக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் வாக்குகளிலும் சரிவு ஏற்படுவதற்கான சாத்தியங்களும் உள்ளன. இவற்றை எல்லாம், மொத்தமாகக் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி, அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று, வெற்றி பெறுமா என்கிற கேள்விகள் உள்ளன.  அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியால் அதிகூடிய வாக்குகளைப் பெற்று, வெற்றிபெற முடியாமல் போனால், முஸ்லிம் காங்கிரஸால் அதிகபட்சமாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைத்தான் அந்த மாவட்டத்தில் வெற்றிகொள்ள முடியும் என்கிற கணிப்பீடுகளும் உள்ளன. அம்பாறையில் இணையாத 'கை'கள் இதேவேளை, அநேகமான மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்ணியமைத்தும், புத்தளம் மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸுடனும் கூட்டணியமைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் ரிஷாட் பதியுதீன் தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. இதன் காரணமாகவும், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்ளும் வாக்குகளில் சரிவு ஏற்படும். கடந்த பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 33,102 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில், பகை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கடந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட 52 நாள் அரசியல் குழப்பம் காரணமாக, கைகோர்த்துக் கொண்டு நட்புறவுடன் செயற்படத் தொடங்கின. இதனால், புத்தளம் மாவட்டத்தில் மேற்படி இரண்டு முஸ்லிம் கட்சிகளும் கூட்டணியமைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றன. மேற்படி தராசு, 'முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு' எனும் கட்சியின் சின்னமாகும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ரவூப் ஹக்கீமுடைய மச்சானும் (மாமி மகன்) அவரின் பிரத்தியேகச் செயலாளருமான எம். நயீமுல்லா என்பவர், இந்தக் கட்சியின் செயலாளராகப் பதவி வகிக்கின்றார். எவ்வாறாயினும், புத்தளம் மாவட்டத்தில் கூட்டணியமைத்துப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இலங்கை முஸ்லிம்களின் இதயமாகக் கருதப்படும் அம்பாறை மாவட்டத்தில் பிரிந்து நின்று, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமையானது, என்ன வகையான அரசியல் என்று, சமூக அக்கறையுள்ள முஸ்லிம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு கட்டத்தில் தயாராக இருந்ததாகவும், ஆனால் மக்கள் காங்கிரஸ் எதிர்பார்த்த வேட்பாளர் எண்ணிக்கையை வழங்குவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் சம்மதிக்காமையால்தான், மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்ததாகவும் அறிய முடிகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. எவ்வாறாயினும், அதிக காலத்துக்குத் தேர்தல் தள்ளிப் போகவும் மாட்டாது என்கிற பேச்சுகளும் உள்ளன. இந்தப் பின்னணிகளில், பொதுத் தேர்தலொன்று நடந்தால், தாங்கள் கடந்த முறை பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில், பாரிய வீழ்ச்சி ஏற்படலாம் என்ற அச்சம், முஸ்லிம்களிடம் உள்ளது. ஆனால், முஸ்லிம்களின் விமோசனம், வெறுமனே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இல்லை என்று, வாதிடுவோரும் உள்ளனர். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முஸ்லிம்களின்-இதயம்-என்னவாகும்-ஒரு-பொதுத்-தேர்தல்-கணிப்பு/91-250884