Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

கவிதை அந்தாதி

Recommended Posts

இதுவன்றோ சிகரம்

தொட்ட சிந்தனை...

பளிங்கு மேடையில்..

பட்டாடையோடு..

மிடுக்காக வந்து...

புதிய பாரதி வடித்த..

புதுமைக் கவிதை..

சீர்தூக்கி செப்பனிட்டு..

நிந்தனை மறந்து..

சிந்தித்தால்..இவன்...

புலவனல்ல புலமைப்பித்தன்..

கவிஞனல்ல கவிப்பேரரசு..

பாவலனல்ல பாவலர் பெருமான்..

வாழ்க இவன்..மிடுக்கும்..

சொல்லடுக்கும்.. :D (நான் என்னைச் சொன்னதாக கொள்ளவேண்டாம்..களப்பெரியோரை புகழ்ந்ததாக கொள்க)

Share this post


Link to post
Share on other sites

மிடுக்கும் சொல்லடுக்கும் சரி

அடுக்கடுக்காக

சொல்லம்பெறியும்

புலமைச் செருக்கும் சரி

நிலவை நின்று கொண்டே

சுகம் விசாரிக்கும்

கவிதைத் துடிப்பும் சரி

எல்லாமிருந்தும்

இவன் சொல்கிறான்

ஏதுமறியாதவன் இவவென்று! (அடியேன் தன்னையே இப்படிச் சொல்வானா?)

Share this post


Link to post
Share on other sites

சொல்வானா என்று

கேட்டால்..

யாரும் இல்லை என்பார்கள்...

அவ்வளவு நல்லவன்...

இல்லையில்லை...

நல்ல நடிகன்..

வெளிப்படையாய்..

பேசினால்..உலகத்திற்கு

பிடிக்காது..என்பதால்..

உருப்படியாய்..

ஏதும் சொல்லத்தெரியவில்லை..

என் உளறல் பாட்டுக்கே

எத்தனை எதிர்ப்பாட்டு...

அடடா.. என்னைப்

போல எத்தனை பேர்..

Share this post


Link to post
Share on other sites

எத்தனை பேர்

உன்னைப் போல்...

ஓரே தோற்றத்தில்

ஏழு பேர் இருக்க வாய்ப்புண்டு

சிந்தனையும் அப்படியே

அமையுமா அடியேனுக்கு

அறிவு போதாது...

இந்த விடி காலையில்

என்ன எழுத...?

கவிதை எழுதும்

மனநிலை இப்போது இல்லை

"அட...ட... நீ எழுதுவதற்கு

பெயர் கவிதையா?" என்று

எதிர்க்கேள்வி கேட்டால் எப்படி?

உனக்கு மட்டும் ரகசியமாய் ஒன்று...

சும்மா ஏதோ கிறுக்குகிறேன்

"ஆகா கவிதை..." என்று

ஒத்துக் கொள்ளேன்...

அட போங்கப்பா கவிதையும்

கற்பனையும்

"ம்... தம்பி அடக்கிவாசி

நாம் பிழைக்க வேண்டாமா?"

ஓம் அண்ணா அதுவும்

சரி தான்...

Share this post


Link to post
Share on other sites

சரிதான் சரிவில்லாமல்

சாதனை இல்லை என்றனையே...;..

சரிதான்..இன்னும்..

தோல்விகளே வெற்றிப்படிக்கட்டுகள்..

விளக்கமும்..வேதாந்தமும்

சரிதான்..ஆனால்..

தோல்வி என்னைக் கொன்றுவிடும்

அவமானம் என்னை புடுங்கித்தின்னும்..

கண்ணீர் பாராத கண்கள்

அறியாமல் உள்ளுள்ளமழும்

ஆணவமும்.. அகந்தை என்

அப்பன் இரத்தம்..

கறைகலக்காத.. நேர்மையான

இரத்தம்.

இறுமாப்பு எப்போதும்

என் சொந்தம்..தாய்க்கும்..

தமிழுக்கும் மட்டும்தான் இந்த தலை சாயும்...

(சரியான கலக்காரனப்பா..தம்பி)

Share this post


Link to post
Share on other sites

தலை சாயும் பெண்கள் நாணத்தினால்

கோலமிட்ட கால் விரல்கள் அன்று

நாணத்தின் அத்தாட்சியாக

வளைகழுத்தை பின்னிடும் நகைகள் சுமை

தாங்கும் சுமைகளின் வேதனைகள் இன்று

வலியில் பலி கொல்லும்

கலியுகத்தின் மோகமோ

Share this post


Link to post
Share on other sites

மோகமோ..இதயதாகமோ..

இளமை வேகமோ.. நானறியேன்..

என்னுள்ளே..செந்நீர்க்கலவரம்..

செய்த விசித்திரம்..எதிர்பாராமல்..

பிரசவித்த..அந்த முத்தம்..

இன்னும் என்னுள்..குற்றவுணர்வுடன்..

Share this post


Link to post
Share on other sites

குற்றவுணர்வுடன் வாழ்வதைவிட

குட்டையில் வீழ்ந்து சாகலாம்

மற்றவன் வாழ்த்து வேண்டும் என்பதற்காய்

முகத்தை மறைக்க முடியுமா

முகமூடிதான் போட முடியுமா

பூசுகின்ற சாயமெல்லாம்

தூறுகின்ற மழையில் கரையும்

பேசுகின்ற வார்த்தைகளோ

ஆற்றில் இட்டதுபோல

அது போற போக்கில் போகும்

Share this post


Link to post
Share on other sites

போகும் என்

தேகம் உன்னில்

மோகம் கொண்டு

தாகம் மறந்து..

காகம் போல மிக

வேகமாக வேகமாக

மேகமதில் பறந்து

சாகும் வரை உனை

பாகம் பாகமாக

ரசிப்பேன் காதலோடு

Share this post


Link to post
Share on other sites

காதலோடு காத்திருப்பேன்

கனவோடு வாழ்ந்திடுவேன்

உயிரான உனக்காக

உணவையே மறந்திருப்னே;

தகுமோ இது நகுமோ

காதல் சகியோ

கனிமொழியே

தேனினும் இனியவளே

வெண்ணிலவே

Share this post


Link to post
Share on other sites

வெண்ணிலவே..உனை நான்..

வானில் பார்த்து..

பல நாளாகின்றது..

உன் வெளிச்ச இரவுகளை...

என் வாழ்க்கை

விழுங்கிக்கொண்டது..

உன் குளிர் நிழலை

என் கூரை பறித்துக்கொண்டது..

உன்.. சுவாச சுகந்தத்தை

என் ஜன்னல் அடைத்து

வைத்திருக்கிறது...

அம்மாவின் கை சோறு

ஊட்டியதும்..

பாட்டி சொன்ன மாயாஜாலக்கதைகள்..

பக்கத்தில் வந்ததும்..

உன்னால்தான்..

எனக்கு உன்னை பிடிக்கும் வெண்ணிலாவே..

ஆனால்..

என் வெளிநாட்டு வீட்டிற்கும்..

என் வெளிநாட்டு காலநிலைக்கும்தான்..

உன்னை பிடிக்கவில்லை

போல இருக்கிறது..

வெண்ணிலா..

நீ

புரிந்து கொண்டிருப்பாய்..

என் நிலை..

Share this post


Link to post
Share on other sites

என் நிலையே உன் நிலையாக

தன் நிலை மறந்த கணங்கள்

இன் நிலை பெற்ற இன்பம்

வான் நிலை தந்த முழுஅழகு

மண் நிலை கண்ட ரம்மியம்

கண்களுக்கோர் ஆனந்தம்

Share this post


Link to post
Share on other sites

ஆனந்தம் ஆகாயமளவுக்கு

இருந்தது...அன்று..

என் இல்லத்தில்...இன்றென்..

வாழ்வில் எள்ளளவும் இல்லை

இன்பம்..

ஏனெனக் கேட்டால்..ஏதும்..

குழப்பமில்லாமல்.. சொன்னது...

என்மனம்..அப்போது

என்னிடம்..

என் நாடு..

என் வீடு...

என் என்ற நிம்மதி..

சுய ஆளுமை இருந்தது..

இப்போது..

என் ஆத்மா கூட

எனக்கு பாரம்தான்.

Share this post


Link to post
Share on other sites

பாரம்தான்

பாவியாக வாழ்ந்துவிட்டால்

வாழ்க்கையும் பாரம்தான்

பத்துமாதம் சுமக்கும்தாய்

பாரமென்று நினைத்துவிட்டால்

நான் எங்கே

நீ எங்கே

Share this post


Link to post
Share on other sites

நீ எங்கே இருக்கிறாய்

நீண்டகாலமாக தேடி தேடி

என் வாழ்க்கையின் பாதியை

உனக்காகவே இழந்தும்

உயிரோடு வாழ்கின்றேன்

என்றோ ஒருநாள் உனை

எங்காவது சந்திப்பேன் என்ற

அகலாத நம்பிக்கையோடு

Share this post


Link to post
Share on other sites

அகலாத நம்பிக்கையோடு

அகலமாய் ஆசை விரித்து

நிற்பதேனம்மா?

இதழில் தேன் ஊறும்

கண்ணம்மா...

விலகாத அன்பிருந்தால்

இன்னும்

விலகாத இருள் கிழித்து

நிலவாக நீ வரலாம்

ஒளி வெள்ளம் நாம் பெறலாம்!

பல காலம் பழகியென்ன?

அன்பு வெள்ளம் வடிவதுண்டோ?

நிலாக் காலம்

நீ மறந்திருக்கலாம்

உனக்கு அது

கனாக் காலம் போல்

இருந்திருக்கலாம்

விழாக் கோலம்

வீடு தேடி வரும்

விறாந்தை மேல்

பல உறவு கூடி அமரும்

விருந்து நடக்கும்

அப்போது உனக்கு

விசயம் புரியும்!

Share this post


Link to post
Share on other sites

புரியும் என் மனசு

தரிசு நிலமான என்னை

பிரிகின்ற உன்னைப் பார்த்து

பரிகாசம் செய்யாது..

இனிக்கும் சொர்க்கம்

இதழின் பக்கம் தான்

இன்பமுடன் வா

இரவிரவாக இருவரும்

இருகரம் கோர்த்து

தரிசு நிலத்தில் உழுது

பரிசுகளை வெல்லலாம்

Share this post


Link to post
Share on other sites

வெல்லலாம்

பெண் மனதை என்று

வெளிக்கிட்டால்

வில்லெல்லாம்

பழுது பார்த்து - எனைக்

கொல்லலாம் என்று

முடிவுகட்டி

கொவ்வையிதழ் வெடிப்புக்களில்

எனை வீழ்த்தி

புருவ வில் வளைத்து

பருவக் கணை தொடுத்து

நிராயுதபாணியைக் கொல்கின்றீரம்மா!

நிறுத்துங்கள் என்று

ஒரு குரல் வரக் காணோம்...

என்ன செய்குவேன்?

வேறேதும் செய்யாது

வேண்டாமிவள் என்று

விரைந்து செல்லின்

கனவுக் காட்சியில்

முதல் காட்சி

உன் மூச்சு வாங்கும்

முன்னிரு எழில் தானடி...

திடுக்கிட்டு விழித்தெழுந்து

திரு திருவென முழித்து

நாளை மீண்டும்

போர்க்களம் போக முடிவெடுப்பேன்...

நடப்பது நடக்கட்டும்

அடிப்பவளே

அணைப்பது தானே

காதல்...!

Share this post


Link to post
Share on other sites

காதல் வேண்டும்! காதல் வேண்டும்!

நம்மீதும் வேண்டும்! நல்லுறவுகள் மீதும்!

தேசம் மீதும் வேண்டும்! நேச மைந்தர் மீதும்!

கடல் மீதும் வேண்டும்! கரை மலை மீதும்!

கோவில்மீதும் வேண்டும்! கொண்ட இல் மீதும்!

பூமிப் புல் மீதும் வேண்டும்! பறக்கும் புள் மீதும்!

கூவும் குயில் மீதும்வேண்டும்! கொஞ்சும் கிளி மீதும்!

அம்மாவெனும் ஆ மீதும்வேண்டும்! துள்ளும் ஆடு மீதும்!

குரைக்கும் நாய் மீதும்வேண்டும்! கொக்கரிக்கும் கோழி மீதும்!

காதல் வேண்டும்! காதல் வேண்டும்!

கரையெல்லாம் கடந்து வர! விலங்கெல்லாம் தெறித்து விழ!!!!!

Share this post


Link to post
Share on other sites

விழ விழ தூக்கி என்னை

தோளில் போட்டாய்

கையில் எடுத்து

வாயோடு சேர்த்தாய்

வேர்க்கையில் உன்

முகத்தோடு ஒற்றினாய்

எங்கு செல்லும்போதும்

எடுத்துச் சென்றாய்

உன் சொந்தமென

உரைத்து உரசினாய்

வெயிலுக்கு பயந்து

எனக்குள் ஒளிந்தாய்

குளிக்கையிலும்

கூடவே வைத்திருந்தாய்

உன் அங்கங்கள் தழுவிட

எனை பாவித்தாய்

எல்லாம் முடிந்தபின்

எறிந்தாய் எனை நீ

என்னிடத்தில் இன்று

இன்னுமொன்று...

ம்ஹூம் தாங்கவே முடியலை

உன்னோடிருந்த நாட்களை

நினைச்சுப்பார்க்கையில்

என் கிழியலை மறந்தும்

கண்ணீர் வடிக்கின்றேன்

மீண்டும் உன்தோளில்

உரசிட துடிக்கின்றேன்

-தோள் துண்டு-

Share this post


Link to post
Share on other sites

துண்டு துண்டாய்

எனது வாழ்வை

வெட்டிப் பிரித்து

முடிவில் ஒட்டிப் பார்த்தால்

நானும் ஒரு கும்பகர்ணன்

என்று ஒருகாலத்தில்

வரலாறு சொல்லும்..

துக்கத்தை மறக்க

தூக்கத்தை விரும்பும்

என் வாழ்வில்

வேறெதை

வரலாறு

எதிர்பார்க்க

முடியும்?

நித்திலத்தில்

நித்தாவைப் போல்

ஓர் இனிய சுகத்தை

நான் அறியேன்...

ஆதலினால் மாந்தரே

நீரும் நன்கு நித்தா செய்து

நிம்மதியாக வாழ்வீர்!

Share this post


Link to post
Share on other sites

வாழ்வீர் நிம்மதியாய் என்றுதான் தேவன் சிலுவையில் அறைபட்டார்!

தேவனே! எம்பாவங்களை சிலுவையில் சுமந்தீர்!

எமக்காக இறங்கி, இரங்கி நீர் மரித்தீர்!

நாமெல்லாம் பாவம் நீங்கி புண்ணியவான்களானோம்!

பிதாவே! ஆயினும் நீர் உயிர்த்தெழுந்தபோது

உமது தோளில் சிலுவையில்லையே!

அதனால்தான் மீன்டும் நாம் பாவத்தில் வீழ்ந்து விட்டோமா?

கர்த்தரே! நம் பாவத்தால் நிரம்பிய சிலுவையை விண்ணுக்கு எடுத்து,

உமது பரிசுத்தமான அன்பையும், சாந்தியையும் மண்ணுக்குத் தாரும்.

Share this post


Link to post
Share on other sites

மண்ணுக்கு தருவதற்கு

எனதுடலை நான் எப்போதும்

ஆயத்தமாகவே வைத்துள்ளேன்!

நேற்று இருந்தவன்

இன்று இல்லை..

நாளை நானும்

பர லோகம்

போய்விடலாம்!

அமெரிக்க மண்ணாய் இருக்கட்டும்..

ஆசிய மண்ணாய் இருக்கட்டும்..

ஐரோப்பிய மண்ணாய் இருக்கட்டும்..

இறந்தபின் எனதுடல்

எப்படி அழுகப்போகின்றது என்பதில்

மாற்றமேதும் இல்லை!

எரிக்கும்போது எனதுடல்

எப்படி கருகக்போகின்றது என்பதில்

மாற்றமேதும் இல்லை!

இதனால்..

மனிதன் என்றவகையில்

நான் இறந்தபின் எனதுடல்

உலகின் எப்பகுதியிலும்

புதைக்கப்படுவதற்கு..

எரிக்கப்படுவதற்கு..

எனக்கு ஆட்சேபணை இல்லை!

ஆனால்..

அன்பானவர்களே!

என்னுடனான உங்கள் நினைவுகளை மட்டும்

ஒருபோதும் புதைத்துவிடாதீர்கள்!

என்னுடனான உங்கள் நினைவுகளை மட்டும்

ஒருபோதும் எரித்துவிடாதீர்கள்!

ஏனென்றால்..

நான் இறந்தபின்பும்

உங்கள் உள்ளங்களில்

வாழ விரும்புகின்றேன்!

Share this post


Link to post
Share on other sites

வாழவிரும்புகிறேன் என்று

வார்த்தை சொன்ன தம்பி...

ஏன் வீழ்வதைப்பற்றி பேசுகிறாய்..

நீ வாழப்பிறந்தவனடா...

சாதனைகளால் சரித்திரங்களை மாற்றலாம்...

அன்பால் யாவரையும் ஆளலாம்..

நற்பண்பால்... நாளும் நன்றே நீ வாழலாம்....

வாழ்வதை மட்டும் யோசி..

வீழ்வதை மற அது

வரும் போது வரட்டும்..

Share this post


Link to post
Share on other sites

வரும் போது வரட்டும்

வட்ட நிலா என்று

அதுவரை வானத்தை

அண்ணாந்து பார்த்து

சலிப்படைந்த நான்

கையிலிருந்த பையிலிருந்து

சோளப்பொரிகளை

அள்ளி வீசினேன்

வானமெங்கும்

நட்சத்திரங்களாக மின்னின

காலங் கடந்து வந்த

வட்ட நிலா

எட்டிப் பார்த்து

காதருகே சொன்னது

"மச்சான்...

உன் கைவண்ணம்

அற்புதம்!!!"

தலைசாய்த்து

சற்று நிமிர்ந்து

நிலவைப் பார்த்து

"அடியே..

உன் எழில்முகம்

சிந்தும் ஒளியை விடவா

என் செயல் அற்புதம்..?"

Share this post


Link to post
Share on other sites