கறுப்பி

கவிதை அந்தாதி

Recommended Posts

அற்புதம் தான்

அத்தான்

உன் கைவண்ணம்

யாரடித்தோ அழுத நான்

உன் கையணைப்பில்

உலகு மறந்தது

உனக்குத் தெரியாது!

Share this post


Link to post
Share on other sites

உனக்குத் தெரியாது செல்லம் உன்

விழி என்னை விழுங்கிய போதே

எனக்குள் காதல் விதை விழுந்தது

உனக்குத் தெரியாது செல்லம்!

உன் செல்லச் சிணுங்கலும்...ம் ..ம்

கொட்டிக் கொட்டிக் கதை இரசிக்கும்

அழகும் உன்னை எனக்குள் ஈர்த்தது

உனக்குத் தெரியாது செல்லம்!

என் நாசி நரம்பெங்கும் உன் பெயர்

சொல்லித் துடிக்கிறதே அறி கண்மணி

இதுதானடி 'காதல்"....

Share this post


Link to post
Share on other sites

காதல்

அவரவர் இஷ்டப்படி

தான் விரும்பிய

உருவமெடுப்பதால்

காதலும் கடவுளே!

வென்றவர்கள்

ஆஹா... அற்புதம்

என்றார்கள்

தோற்றவர்கள்

வெறும் கல்லென்று

காறி உமிழ்ந்தார்கள்!

Share this post


Link to post
Share on other sites

உமிழ்ந்தார்கள்...மெய்தான்..

பொய்யான ஒன்றைப்..

பொருளாக்க எண்ணி

இமைப்பொழுதும்..இளகிய..

நெஞ்சோடும்..நம்பிக்

கெட்ட பேதைப் பெண்ணை...

பார்த்தல்லவா உமிழ்ந்தார்கள்..

மரத்தால் விழுந்தவனை

மாடேறி மிதித்தாற்போல்...

நொந்தவனைத்தான்

நோகடிக்கின்றார்கள்..

Share this post


Link to post
Share on other sites

நோகடிக்கின்றார்கள்.. மனதை

புறங்கூறி கூறியே

பிறந்துவிட்ட புத்தாண்டிலும்

இறந்துவிட்ட நிகழ்வுகள் தந்த

உறைந்துபோன வலிகள்

உறக்கத்திலும் ஊர்ந்து ஊர்ந்து

அரிக்கின்றது இதயத்தை

Share this post


Link to post
Share on other sites

இதயத்தை இலவம் பஞ்சாக்காதே!

இரும்பாக்கு! நிகழும் காலத்தில்

நடப்பவை ஏற்க உரமேற்று!

காலையில் எழுந்தால் காதில்

விழும் செய்திகள் யாவுமே!

களவு,கொலை, கொள்ளை

கடத்தல், ஆழிப்பேரலை

அளவற்ற மழை! தொடரும்

இந்த வேதனைச் செய்திகளால்

துவளாதே! போராட்டமே

வாழ்க்கை என்பதனை

மறவாதே!.

Share this post


Link to post
Share on other sites

மறவாதே என்னுயிரே...

மனதை தந்துவிட்டு..

கிடந்து தவிக்கிறேன்...

சுழன்று உடைகின்றேன்..

பகலில் தூங்கி முழிக்கிறேன்..

இரவில் விழித்து அழுகின்றேன்..

என்னை அடிமையாக்கி..

அலையவிடும் உன் சந்தோசம்..

எனக்கும் சந்தோசம்தான்...உன்

சந்தோசத்தில் சின்னத் திருத்தம்..

என்னிடம் வாங்கிய முத்தங்கள்..

கசப்பாக இருக்காது... இருந்தால்.

அடுத்த முறை வரும் போது திருப்பி தா..

Share this post


Link to post
Share on other sites

திருப்பித் தா

தந்த முத்தங்கள்

அனைத்தையும்

அன்போடு

எழுதித் தா

என்றுமே

"இவளே உன்னவள்" என

கையொப்பமிட்டு

Share this post


Link to post
Share on other sites

கையொப்பமிட்டு

கைதாகிப் போனேன்

கைவிலங்கு தான் இல்லை

கைதியாகி நிற்கிறேன்

கைபாவையான என்னை தன்

கைவரிசை காட்டியே என்

பல்வரிசையும் நிலைகுலைந்து

தலைவிரித்தாடும் நிலை

Share this post


Link to post
Share on other sites

நிலை மாறலாம் பெண்ணே...

நீ நீயாயிரு...

விலகப் பார்க்காதே..

விலக நினைக்காதே..

திருத்தப்பார்.. அவனை..

அன்புக்குள் அடக்கு..

பந்தங்களை பாதியில் முறிப்பது..

பாவங்களில் ஒன்று...

அவனது மனது உன்னை நாடிட

அவனது அன்பு உன்னில் சேர்ந்திட..

உனக்காக வாழ்வான்..

நிலை குலைந்த உன் பல்வரிசையை

விலை கொடுத்து அவனே சீர் செய்வான்.. :)

Edited by vikadakavi

Share this post


Link to post
Share on other sites

சீர் செய்வான் அண்ணன்

பார் போற்ற வாழ்ந்திடுவாள் தங்கை

ஏர் பூட்டி வாழ்ந்திடுவான் விவசாயி

சோர்வின்றி சொகுசாய் உண்பான் சோம்பேறி

Share this post


Link to post
Share on other sites

சோம்பேறியாய் மாறினாலும்

சோடை போகவில்லை

சோகங்கள் சூழ்ந்திட்டாலும்

சொந்தங்கள் உண்டு என்றும்

பற்றிப் படர்ந்திட உறவு

Share this post


Link to post
Share on other sites

உறவு வெறுத்துப் போய்

துறவு கொள்ள ஆசைப்பட்டேன்

கண்ணே உனை என்

கண்கள் காணும் வரை

Share this post


Link to post
Share on other sites

காணும்வரை

களிப்போடு

நானிருந்தேன்

கண்டபின்தான்

புரிந்தேன்

உன்னை விட

அன்று எனக்கு நீ

அறிமுகப்படுத்திய

உன் நண்பன் அழகென

Share this post


Link to post
Share on other sites

அழகென அவனை

நினைத்தாய்

அவனிலும் அழகன்

அவன் நண்பனாகிவரில்

உன் நிலை

பாவம் அம்மா!

Share this post


Link to post
Share on other sites

அம்மா பாவம்தான்..

தினமும் எனக்காய்

கும்பிடுற சாமிகள்..

சமைக்கின்ற சாப்பாடுகள்..

தருகின்ற அறிவுரைகள்..

எல்லாம் எனக்கே எனக்காக..

ஆனால்..

தினமும் அம்மாவுக்கு நான்

கொடுக்கின்ற அறிவுரை தவிர

மரமண்டை என்னால்

இன்னும்தான் எனது அம்மாவுக்காய்

ஒரு தரம் சாமி கும்பிட முடியவில்லை..

ஒரு தரம் சமைச்சு கொடுக்கமுடியவில்லை..

இதுவும்..

எல்லாம் எனக்கே எனக்காக!

Share this post


Link to post
Share on other sites

எல்லாம் எனக்கே எனக்காக!!

எங்கும் இன்பம் பொங்கும்!

எதிலும் எழில் துலங்கும்!

மேகம் அமிழ்தம் பொழியும்!

நதிகள் நிறைந்து வழியும்!

கொடியில் மலர்கள் சிலிர்க்கும்!

கிளையில் கனிகள் குலுங்கும்!

குலுங்கும் மடியில் ஆவின் பால் சுரக்கும்!

கிழவி மொண்டு சங்கால் ஊட்ட!

குழவி குடித்து குலுங்கிச் சிரிக்கும்!!!!!

Share this post


Link to post
Share on other sites

குழுங்கிச் சிரிக்கும்

உலகத்து உள்ளார்ந்தம்

விளங்கிய அப்பாவி

வெங்காயங்களே நீங்கள்,

அழுகிப் போகும்முன்

ஆக்களின் கண்களில்

கண்ணீரை வழியவிடும்

கைங்கரியம் தனை

என்னவென்று நான் சொல்வேன்?

எப்படித்தான் உங்களுக்கு

இப்படிப்பட்ட திறமையை

தந்தாரோ எங்கள்

தெய் வீகன்!

Share this post


Link to post
Share on other sites

தெய்வீகன்! கண்ட தெய்வீகமே வெங்காயம்!

கண்ணில் நீர்காட்டி காரியம் சாதிக்க

கண்ணருகே வேண்டும் காரமான வெங்காயம்!

கணக்கு வாத்திக்கு டிமிக்கி கொடுக்க

காய்ச்சல் காட்டி லீவு போட

கக்கத்தில் வேண்டும் வெங்காயம்!

வெளியே விளையாடி லேட்டாய் வீடுவர

கண்ட அன்னை கட்டிவைக்க

கண்ணான அக்காள் கொண்டு வருவாள்

கண்ணில் பிழிய வெங்காயம்!

உண்ணாக்கு உரசி உரசி இருமித் தெலைக்க

அன்பான அம்மம்மா அழகான பூவரசம்மிலையில்

'காட்டுத் தேனிலே காரவெங்காயம் நறுக்கிவைத்து"

கடைவாயிலே அதக்கி சப்பியே விழுங்கிவைக்க

விலகியே நழுவிப்போகும் வீரமான உண்ணாக்கு!

பகுத்தறிவால் பழுத்த பெரியவர் பாரில் பெருமைகொண்ட

அடைமொழியுமாகுமே அந்த அழகிய வெங்காயம்!

உரிக்க உரிக்க உள்ளே ஒன்டுமில்லை! -- ஆனால்

உள்ளிருந்தே முளைவிட்டு உறைப்பு நீர்

சுரந்திடும் உன்னதம் வெங்காயம்!

வின்முகிலில் நீந்தும் விகாரையின் விதானம்போல்

மண்ணினுள்ளே முடிசூடி நிக்கும் மகத்துவமே வெங்காயம்!

Share this post


Link to post
Share on other sites

வெங்காயம் இதுவென

வெறுத்து ஒதுக்க முடியாது

உரிக்க உரிக்க

தன் காயம் பொறுத்து

தனக்காய் உனை அழவைத்து

சமையலுக்கு சுவை

சேர்ப்பதால்

வெங்காயம் இதுவென

வெறுத்து ஒதுக்கமுடியாது!

உன் காயம்

வெறும் உயிர் தாங்கும்

கூடு

பெருங்'காயம்' பட்டுவிட்டால்

தாங்காது வாடும்!

யமதூதன் உன் உயிர்

பறித்தபின்

உன் காயம்

சதத்திற்கும் உதவாது

மயான பூமியில்

தானே போய் எரியாது!

நாலு பேர் கத்தியழ

நாலு பேர் சுமந்தோட

நாலு பேர் நினைவில்

என்றும் இருக்க - நீ

செய்ய வேண்டிய

செயல் நாலல்ல பல!

ஆகவே

கறிக்குதவும் வெங்காயம்

போல் உன் காயம்

யாருக்கும் உதவாது

மரித்துப் போனால்

உன் பரம்பரை

சுமக்கும் பெரும் பாவம்!

Edited by kavi_ruban

Share this post


Link to post
Share on other sites

பெரும் பாவம்

சுமக்கும்

என் அன்பே

உன் பாவம் சுமக்க

நான் வந்தேன்

தேய்பிறையாய் தேய்யாது

வளர்பிறையாய் வந்து

விடு

இனிய உதயம் காண்போம்

என் நாளும்.....

Share this post


Link to post
Share on other sites

நாளும் பொழுதும்

நகர்கின்ற திசை நோக்கி

விளி திறந்து பார்

நீயும் நானும்

இன்னும் அதே

உவமை வட்டத்தில்

உழுதுகொண்டிருக்கிறோம்...

நிலவை விட்டால்

காதலியின் முகத்திற்கு

உவமை இல்லை...

தேய்பிறை... வளர்பிறை

எனும் வார்த்தை

விளையாட்டையே

கவிதை என்று

கற்பிதம் செய்கிறோம்...

கோபித்துக் கொள்ளாதே

என்னை...

யாரையும் இங்கே

திட்டுவதாக அர்த்தப்படுத்தாதே

என்னை நானே

வம்புக்கிழுக்கிறேன்...

சத்திர சிகிச்சை செய்து

கவிக் குழந்தை

பெறுவதில் எனக்குள்

உடன்பாடு ஏதும் இல்லை

தானே வலியெடுத்து

நெஞ்சுக் கூட்டில்

பல முறை முட்டி

காட்டாறாக வருகின்ற

கவிதையை

தாள் எடுத்து

ஒழுங்கமைத்து

நடை போட செய்வது

மட்டுமே என் பணி...

இப்படித் தான்

அருமையாய்

முடித்து வைத்த

உன் கவிதைக்கு

பதில் கவிதை

எழுத வந்து

ஏதோ எழுதி நிற்கிறேன்...!

என் செய்வேன் நான்

இன்னும் அதே

விளையாட்டுப் பிள்ளை

கூட கோபியர்

மட்டுத் தான் இல்லை!

இருந்துவிட்டால்

என் விளையாட்டுக்கு

ஏது எல்லை...?

Edited by kavi_ruban

Share this post


Link to post
Share on other sites

ஏது எல்லை என்று தெரியா வாழ்க்கையில்

ஏதையோ தேடி தேடி நித்தம் நித்தம் ஓடுகின்றோம்

முனிவன் கூட தவத்தால் தேட முடியா

வானத்தின் கடலின் எல்லை அறியாவிடத்து

மனிதனின் ஆசையின் எல்லை எதுவரை

Share this post


Link to post
Share on other sites

எதுவரை அறியேன்

உன்மன ஆழம்..

ஆழ்கடலினும் பெரிதாமே..

அப்படியா பெண்ணே...

இருக்காது..என்ற

ஆண்களில்லை எந்தப்

பெண்ணும் கூட இதை

மறுக்கவில்லை..அன்பான

பெண்ணே...மெய்யாய்த்தான்

கேட்கிறேன்..பெண்ணின்

மனம் ரொம்பத்தான் ஆழமோ..

Share this post


Link to post
Share on other sites

ஆழமோ பெண்ணின் மனசு?

ஆழியில் ஆழ்ந்து ஆழ ஆழ

முழ்கித் தேடினாலும் கடலினடி

ஆழம் தெரியா கடலல்ல

பெண்ணின் மனம் என்ன என்று

மண் பார்த்து நிற்கும் அழகும்

கண் பார்த்து சொல்லும் கதையும்

எண்ணமாய் மலரும் முகத்திலே

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.