Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

கவிதை அந்தாதி

Recommended Posts

உன்முகத்திலே முத்தாடும்

மூக்குத்தி போல்..

உன் நகத்திலே ஜொலிக்கின்ற

நட்சத்திரம் போல்

உன் பார்வையில் தெரிகின்ற

பால் நிலா போல்

உன் கூந்தலில் ஆடிடும்

கொடி மல்லி போல்

உன் இதழ்களில் ஊறுகின்ற

இன்பத்தேன் போல்

உன்சங்குக் கழுத்தாடும்

சத்தமிடும் மணிமாலைகள் போல்

வாழைமடல்க்கால்கள் போல்

வளைவுமிக்க இடையைப்போல்

குவிந்த அல்லி மொட்டுகள் போல்

கூப்பிடுகின்ற தேகக்கட்டுகள் போல்

பூம்பாதம் போல்..

புன்னகைவீச்சுப்போல்

பூங்குயில்ப்பேச்சுப்போல்...

அழகே..எல்லாம் ஒன்று

சேர்ந்த உன்னைக் கண்டு

பேச்சிழந்தேன்..

மூர்ச்சையானேனே..

Share this post


Link to post
Share on other sites

மூர்ச்சையானேனே உன்

மூச்சுக் காற்று பட்டு

மூர்ச்சையானது நான் மட்டுமா

கூந்தலில் சூடிய

வாசமிகு மலர்களுமே

வாசம் இழந்து போனதே

நேசமாய் நீயறிந்தால்

நெகிழ்ந்து போவாயா இன்றேல்

நெருப்பாய் சினந்து நிறம் மாறுவாயா

யென்பதை சொல்லிவிடு ஒருமுறை

Share this post


Link to post
Share on other sites

ஒருமுறை..ஒரேமுறை...

வரைமுறை மீறி..

அறைக்குள் உனை

அறைந்துவிட்டேன்...

மறைவாக நடந்ததற்கே..

குறைபேசிக்கூவி...எனைக்

கறை செய்த பாவியே...

இறைவனே..உனை நான்

இரைந்து கேட்கிறேன்..என்னில்

இரக்கங்காட்டி..இவளை

விரைந்து விரட்டிவிடும்.

Share this post


Link to post
Share on other sites

விரட்டிவிடும் இறைவா விரட்டிவடும்!

நெஞ்சில் ஈரம் சிறிதுமில்லா வீனரை!

கொஞ்சும் குழவிகளை கொடூரமாய் கொல்வோரை!

கெஞ்சும் குமரிகளை குதறும் பேய்களை!

கட்டுடல் வாலிபரை வெட்டிடும் பாதகரை!

தள்ளாடும் முதியோரை பொல்லாலடித்திடும் புலையரை!

பரம்பரை சொத்துகளை பம்பரால் விழுங்கும் பிசாசுகளை!

அரைமுழத்துக் கொரு ஆமி நட்டு சுதந்திரம்

அறுபதில் கொக்கரிக்கும் அரக்கரை!!!!

Share this post


Link to post
Share on other sites

அரக்கரைக் கண்டு அஞ்சிய என்னில்

அக்கறை கொண்டு அன்பாக பேசி

என் மனதுள் நுழைந்தவனே

உனக்கு என்னுடைய காதலர்தின

வாழ்த்துக்கள் கூறுகிறேன் காதலோடு

Share this post


Link to post
Share on other sites

காதலோடு உன்னை சேர்ந்தேன் கனவாக

போகாமல் தினம் உன்னை

கருத்தினில்வைத்தேன் காவியமானவனே

கனவும் இல்லை அதில் பிரிவும் இல்லை

என்னுடன் நீ எப்போதுமே இருப்பது நிஜம்

Share this post


Link to post
Share on other sites

இருப்பது நிஜம், இன்று கண்டது சுபம்!

இன்னல் பல கண்ட கொசொவா இன்று

இருள் கெட்டு புத்தொளி பெற்றதே!

அடிமை விலங்கறுந்து வீழ்ந்ததே!

சுதந்திரப் பறவைகள் சிறகு விரிந்ததே!

போரெனுமரக்கன் தோற்றோடிடவே!

அன்புத் தேவதைகள் மண்ணில் நிறைந்தனவே!

மணமுள்ள மலர்ச் சென்டுகள் தொடுத்து

மக்கள் கரத்தில் வைத்து வாழ்த்தினரே!!! <_<:D:D

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்தினரே மணமக்களை

புகுந்துவிட்ட இல்லறம்

நல்லறமாய் சிறக்க

ஒலித்த வாழ்த்துகள்

கெட்டிமேள சத்தத்துடன்

சங்கமம்

Share this post


Link to post
Share on other sites

சங்கமம் ஆனேன் உனக்குள் நான்

சந்தேகமின்றி எனை ஆதரி

மங்களாம் உண்டாகும் எமக்குள்

சிந்தனையின்றி எனை அணை

பங்கயக் கழுத்தில் முத்தமிடு

சந்திரன் முகிலில் சிக்கும்போது

Share this post


Link to post
Share on other sites

சிக்கும்போதும் சினக்கவில்லை..

சிந்தைக்குளம் அமிழ்ந்தபோதும்..

தெரியவில்லை-இதயத்தாமரை

மொட்டவிழ்ந்த கதை புரியவில்லை..

காதல் என்ற காட்டாறு..என்னை

அடித்துப்போன கதை புதிது!!

Share this post


Link to post
Share on other sites

புதிது புதிதாய் எண்ணங்கள்

சதிராடும் மனதினில்

பதிவிரதைகளாய் பாரினில்

எதிர்த்துப்போராட வழியில்லா

கதி கலங்கிய வாழ்வினில்

விதியே என்றே விளம்பும்

பொறிக்குள் அகப்பட்டுவிட்ட

கொடுமை

Share this post


Link to post
Share on other sites

கொடுமை என்ற கோடாரி

விதி கையில் இருந்தால்..

மதி என்ற வாள் எடுத்து..

மகளாட மாட்டாயோ...

எதிர்நீச்சலில்லாமல்

எது வாழ்வு கண்ணே...

இயலாமை..முயலாமை..

அறியாமை பெண்ணே..

அவனி உனக்கே..நீ

கவனி மகளே..

வாழ்வும் தாழ்வும்

நாம் வைத்த புள்ளி

சமைக்கும் கோலமம்மா..

Share this post


Link to post
Share on other sites

கோலம் அம்மா

போட்டது - ஒரு

புள்ளியில் தொடங்கி

பல புள்ளிகள் சேர்த்து

அழகாக உருவானது!

வாழ்க்கையின் வடிவான

தத்துவம் கோலத்திற்குள்

தன் கோலம் மறைத்து

நிற்பது புரியாது

எத்தனை முறை

கடந்து போயிருப்போம்

கோலத்தை!

ஒரு புள்ளியில் கோலம்

ஒரு துளியில் மனிதன்!

கோலத்தை கூட்டி

அள்ளினால் ஒரு

பிடி...

உடலை எரியூட்டி

அள்ளினால்

ஒரு பிடி சாம்பல்!

அதிகாலையில்

மீண்டும் நேற்றுப்

போட்ட இடத்தில்

மறுபடிபடியும்

புதுக் கோலம்!

ம்...

வாழ்க்கை

இப்படித் தான்!

எம் கோலத்தை

நாமே போட முடிகின்ற

சலுகை மட்டும்

நம் கையில்!

Share this post


Link to post
Share on other sites

நம்கையில் இருக்கிறது

நம் தலை எழுத்து அதை

சரியாய் செய்வது நம்திறமை

நடைமுறையில் நடப்பதை சிந்தித்தால்

நடப்பது எல்லாம் நலமே

நடக்கும் காலம் நல்லதாக அமைய

நம் மனதும் செயலும் நன்றா இருந்தால்

நல்லவைகள் எல்லாம்

நம் வாசல் தேடிவந்து நிற்கும்

Share this post


Link to post
Share on other sites

நிற்கும் மனதில் எல்லாம் நிழலான முகம்

நிற்கும் போதில் எல்லாம் நிலையாமை தத்துவம்

நிற்கும் காலங்கள் என்று எதுவும் இல்லை வயதைப்போல்

நிற்காதது அன்பு மட்டும் தான் அது பிரதி பலன் பார்ப்பது இல்லை

Share this post


Link to post
Share on other sites

இல்லை..அன்பே...

அன்பாலாகாதது எதுவுமில்லை...

இல்லை அடியே...

ஆணவத்தால் நன்மை

ஏதுமில்லை..ஏதுமில்லை!!!

Share this post


Link to post
Share on other sites

ஏதுமில்லை... ஏதுமில்லை

ஊருமில்லை உறவுமில்லை

உனக்கு நீயே சொந்தமில்லை

உலவிடும் உயிர் பறந்துபோனால்

தேடிவரப் பருந்துமில்லை இங்கே

போடா போ...

தமிழன் நீ என்பதால்

கோடி சாமி உனக்குண்டு

தேடி ஒரு சாமி வரவில்லை

உதவிட இன்று!

Share this post


Link to post
Share on other sites

இன்று உதவிட

அன்று உனைப்போல

இங்கில்லை யாரும்

எங்கிருக்கின்றாய் நீ

எப்போது வருவாய் நீ

கண்கள் அழுதுகொண்டே

உன்னைத் தேடுகின்றன

சொல்லு நீ எப்போ வருவாய்?

Share this post


Link to post
Share on other sites

வருவாய் வானமதில் வெண் நிலவாய்

வசந்தமாய் நீயே எந்தன் வெண்ணிலாவாய் ஆனாய்

வட்ட வடிவமான உந்தன் வெள்ளை அழகுவதனத்துக்கு

வளம் சேர்ப்பது அந்த கறுப்பாயிருக்கும் உந்தன் மச்சம்

Share this post


Link to post
Share on other sites

மச்சம்..

எனக்கில்லையே...

இருந்திருந்தால்..

மச்சானாய் பிறந்திரேனா

உனக்கு?..

அழகு ஒளிர..

அறிவு மிளிர...

ஆயிரத்தில் ஒருத்தியாய்

நீயிருந்தும்..

தொலைவிலே இருக்கும் நான்..

மச்சக்காரனல்லடி..ஒரு

பிச்சைக்காரன்!

Share this post


Link to post
Share on other sites

பிச்சைகாரன் கண்ணில் ஜம்பது

காசிட்டவன் எல்லாம் தர்மவான்

ஆயிரம் கோடியில் புரள்பவனுக்கும்

அன்பில்லா உறவு கிடைத்தால்

அவனும் பிச்சைகாரன் அன்பு பிச்சைகாரன்

அவன் மனது சுயநலம் இல்லா மனதை தேடும்

சாதகபறவை போல் அன்பை மட்டும்

நினைத்தபடியே வாழ்க்கை பயணங்கள்

Share this post


Link to post
Share on other sites

பயணங்கள் முடிவதில்லையா

யார் சொன்னது...

தவழும் பயணம் நடக்கமுடியும்..

நடக்கும் பயணம்..படுக்கையில் முடியும்..

படுக்கைப்பயணம் பாடையில் முடியும்..

பாடைகொண்டான்.. சந்ததியிழந்தால்..

சரித்திரம் முடியும்..பயணங்கள்..

யாவும் என்றோ முடியும்!!

Share this post


Link to post
Share on other sites

யாவும் என்றோ முடியும்

ஆகும் அத்தனையும்

அழியும் என்ற விதியின் படி

யாவும் என்றோ முடியும்!

நீயும் நானும்

நொடியில்

மயான மடியில்!

சாவின் மடியில்

சண்டியனும் போவான்

நொடியில்!

தாயின் பாலில்

உடம்பில் ஓடும்

இரத்தம்

நோயில் விழுந்து

பாயில் படுத்த பின்னர்

ஓடி அடங்கும்!

வாழும் நாளில்

சூழும் சோகம்

வாடி வதங்கிச்

சோரும் நெஞ்சம்!

ஆழும் கடவுள்

அருள் ஒன்று தரவேண்டும்

நாளும் பொழுதும்

சோகச் சுவடறுத்து

சிந்தனைச் சுடர் வளர்த்து

தூய அன்பில்

உயிரத்தனையும் மூழ்கி

தேட வேண்டும்

பெரும் வாழ்வு தரும் ஜோதி!

Share this post


Link to post
Share on other sites

ஜோதி தெரிந்தது..

அவள் கண்கள் மோதி...

நினைவு பாதி

ஆசை பாதி...

வேறென்ன மீதி...

மோகம் அடித்துப்போகும் நதி

அவள் ஒரு ரதி

அவள் விழிகளின் சதி..

முடியுமொ ஆண் விதி...

இறைவா நீயே கதி..

ஆண்கள் நிர்க்கதி..

Share this post


Link to post
Share on other sites

நிர்க்கதியென புலம்பும் மதி!

நித்தமும் நிர்மலன் தாளே கதி!

நிலையற்ற வாழ்வில் கானும் சுதி!

நீர்க்குமிழியாய் மாறும் விதி!

நினைவில் கனவில் செய்யும் சதி!

நீங்கினால் சிந்தையில் நிறையும் பசுபதி!!!

Share this post


Link to post
Share on other sites