Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

பசுபதி கண்ணைப் பார்த்து

பாவையின் மூக்கில் வேர்த்து..

நாணினால் நிலத்தைப் பார்த்து

சம்மதம் சொன்னாள் இதழ்கள் சேர்த்து..

சந்தோச வானில் ஜோடி இதயங்கள் கூத்து...

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 1.9k
  • Created
  • Last Reply

கூத்துக்கு போக நினைத்து

காத்தில்லாத சைக்கிளில் உன்னை

வைத்து மிதித்து சென்ற வேளை

கூத்து முடிந்துவிட்டதே என்ற

கோவத்தில் இருவரும்

பார்த்தது முறைத்தது

நினைவில் இருக்கிறதா தோழனே

Link to comment
Share on other sites

தோழனே...

இரணங்கள் பாயும் போது

சோர்ந்து போவேன்

ஆதரவாய் சாயத்

தோள்கள் தந்தாய்..

சந்தோசம் பீறிட

உற்சாகமாவேன்..

பகிர்ந்திட நீயும் நின்றாய்..

காதலில் நான் விழுந்தேன்..

சொல்லிட வந்தபோது

அவளையே நீயும்

சொன்னாய்..அமைதியானேன்..

இப்போது இதயத்தில் வலிக்கிறது

சோர்ந்து போகிறேன்..

சாய உன் தோள்கள் இல்லை

நீ என் காதலியோடு..

இல்லை உன் காதலியோடு

உல்லாசமாய் இருப்பாய்..

உன்னை தொந்தரவு செய்யாமல்..

தூரம் போகிறேன் நண்பா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்பா நீ தூரம் சென்றால்

துயரம்தான் தீருமா சொல்! -- சொல்கிறேன் கேள்!

விழியில் எரிந்தால் காதல்!

இடையில் எரிந்தால் காமம்!

மனசில் எரிந்தால் பாசம்!

ஈருடலிலும் சேர்ந்தெரிந்தால் பரவசம்!!!

Link to comment
Share on other sites

பரவசம் என் விழியில்

உன் கனவு பரவசம்...

உன் மார்பில்

என் தூக்கம் பரவசம்..

என் கைகளில்

உன் முகம் பரவசம்

உன் குளியலில்

என் தொடுகை பரவசம்..

என் மடியில்

உன் தூக்கம் பரவசம்...

உன் இடையில்

என்விரல்கள் பரவசம்

என் தோளில்

நீ குழந்தை பரவசம்!!

Link to comment
Share on other sites

பரவசம் அடைந்தேன் அம்மா நான்

பரவசம் அடைந்தேன் அம்மா

ஆயிரம் ஆயிரம் பக்தருக்குள்

என்னையும் மதித்து அணைத்துக்கொண்டாயே அம்மா

என் கவலைகளை பெற்றவாளாய் கூர்ந்து கேட்டாயே அம்மா

கல்லாய் இருந்த கடவுள்கள் கசிந்துருகவில்லையம்மா

கவலையில்லை உன் கருணையேபோதும் அம்மா

post-164-1208650496_thumb.jpg

Link to comment
Share on other sites

அம்மா உன் வருகைக்காக

ஆசையோடு தேடியலைந்து வாங்கிச்

சேமித்த பரிசில்களோடு காத்திருக்கிறேன்

என் கனவுகள் - உன்

நிஜத்தோடு சேர்கையில்

என் நினைவுப் பொருளும்

உன் மடி சேர்ந்திடும்

என்றாவது ஓருநாள்...

காத்திருக்கிறேன் கண்களில்

ஆவலோடு

மனதினில் ஆசையோடு....

Link to comment
Share on other sites

மனதில் ஆசையோடு

எனக்கொரு ஆணைபோடு

மடியில் வந்து விழுந்து

மங்கை உன்னை

வீணையென மீட்டுவேன்!

நாளை என்று இன்னொரு

நாள் தேவையில்லை

ஆளையாள் அணைத்துக் கொள்ள

ஐயர் வந்து நேரம்

பார்க்கத் தேவையில்லை!

காலை விடியும் பொழுதில்

கற்கண்டு நினைப்பில்

உன் முகத்தை

வெட்கம் மெழுகும்

நல்ல சமயமென்றுணர்ந்து

என் கை

உன் இடை தழுவும்!

உடை அவிழும்!

அவிழும் உன்னுடை பற்ற

விரையும்

உன்னிரு கை

படை நடாத்தும்

காமனின் முன்

நடை தளர்ந்து

பஞ்சணையில் நீ

விழுவாய்! - உன்

நெஞ்சணை தேடி

என் முகம் மறையும்!

வேறென்ன சொல்ல

வேதியலில் சொல்லாத

பலவும்

களவியலில் நடக்குமடி

கண்ணே!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே உன் வாழ்வின்

வசந்தங்கள் ஆரம்பிக்கும் தருணம்

உன் மனது போல் அழகான

அமைதியான புதுவாழ்வு வரும்

அந்த இனிமையான பொழுதுக்காய்

வசந்தங்கள் மட்டுமே தென்றலாய்

தாலாட்டும் நிறைவான நிம்மதிக்காய் வரும்

பொழுதெல்லாம் அமைய வேண்டும்

Link to comment
Share on other sites

வேண்டும் நீ

என்னருகில் எப்பொழுதும்

அன்போடு பேசிப்பழகும்

கண்ணே என கொஞ்சும்

காதலனாக வேண்டும் நீ

எப்பொழுதும் என்னருகில்

Link to comment
Share on other sites

என்னருகில் நீ

இல்லை இப்போது

மனசுக்குள் தீ

வளர்க்கும் காதலெனும்

காட்டாறு!

முன்னழகில்

பின்னழகில்

முகத்தழகில்

இவ்வழகில்

எவ்வழகில்

மயங்கினேன் எனும்

எதிர்க் கேள்வி கேட்டால்

மனசழகில் என்னும்

மறுமொழி தவிர

வேறேதும் வாராது!

கண்ணே காலத்தின்

சுவடுகளை கடிகார முள்

அளக்கும்...

நம் காதலின்

தெரியாத சுவடுகளை

யாரும் அறியாமல்

முத்தமிடும்

நம் உதடுகள் அளக்கும்!

பரிவாக தலைகோதும்

உன் விரல்

தரும் சுகத்தில்

வடிவான இளம் பெண்

மீட்டும் வீணையிசையும்

தோற்குமடி!

சரிவாக எனை நோக்கும்

உன்னிரு அழகுப் பெட்டகமும்

விரைவாக என் விரல் தொட

விரகத்தின் உச்சிக்கு

எமை அழைக்கும்!

நிறைவாக எழுதவெண்ணி

சரியான சொல் தேடின்

உயர்வான நம் காதல் எண்ணி

மடை போல சொல் வந்து சேரும்

சொல்லாத கதையெல்லாம்

சொல்லென்று எனைத் தூண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூண்டும் விரல்கள் வேண்டும் இன்று!

துடிக்கும் கரங்கள் உயரும் இன்று!

தாங்கும் தோள்கள் புடைக்கும் நன்கு!

நடக்கும் காலில் நெருப்பு சிதறும்

மிதிக்கும் தருணம் பூமி அதிரும்

உலகம் முழுதும் ஊர்வலம் ஊரும்

தொழிளாளர் ஒற்றுமை எங்கும் ஓங்கும்

தோழரும் நிரையாய் நிறைந்து வாறார்

வியர்வை வாடை வீச்சம் ஓங்க

செந்நிற ஆடை அணிந்து வாறார்

வேலைக்கு நேரமும் உழைப்புக்கு ஊதியமும்

கோரிக்கை வைத்து கொண்ட நாளாம் இன்று

மேதினி போற்றும் மேதினஊர்வலம் காண்போம் நன்று!!! :unsure::unsure:

Link to comment
Share on other sites

நன்று வாழ வழி செய் இறைவா...

இன்றெம் மண்ணை மீட்க

மறத் தமிழன் மானம் காக்க

காட்டில் உருண்டு..

கல்லில் நடந்து...

ஊனை மறந்து..

உறக்கம் இழந்து...

மழையில் வெயிலில்..

சேற்றில்..ஆற்றில்..

சுடுநீரில் நெருப்பில் ...

போர்த்தவம் செய்யும்

தமிழ் வீர இளைஞர்கள்...

ஈழவெற்றி கண்டு...

நன்று வாழ வழி செய் இறைவா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா என்றே

இறைஞ்சி

இரு கரம் கூப்பி

இணைந்திட்டாலும்

ஆழ் மனம் மட்டும்

எங்கோ ஏதையோ தேடி

அலை பாயுதே

Link to comment
Share on other sites

பாயுதே காதல் வெள்ளம்...

வெள்ளை ஐயா...

காதலர் உள்ளம்...ஏன்

பறிக்கிறீர் காதலில் பள்ளம்...

வாழட்டும் சிறுசுகள் என்று

வழிவிடும் சிறகடிக்க...

வானிலே...சந்தோச

வட்டம் போட...

வட்டம் போட...

வட்டம் போட...

Link to comment
Share on other sites

வட்டம் போட

பழகுகிறதா

வானில் சுற்றிவரும்

பருந்து?

கட்டம் வைத்து

சுற்றியொரு சூழ்ச்சி

வலை பின்னி

கணத்தில் தரையிலிறங்கி

தனிமையில் நிற்கும்

குஞ்சைக் கவ்வி

மீண்டும் எழும்

வானில் பருந்து!

"விட்டம் பார்த்து

நோட்டமிட்டது

போதும்...

வானில் வட்டமிடும்

பருந்து போல

உனை வாழ்வில்

கொல்ல பலருண்டு...

எழுந்து நில்

தாழ்ந்து வரும்

பருந்தை பாய்ந்து

கொல்..."

இப்படி பல சொல்லி

தன் அடுத்த குஞ்சுக்கு

பாடம் எடுத்தது

தாய்க் கோழி!

இழப்பு இடிந்து

போகவல்ல...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகவல்ல இந்தப் பாதை தெரிந்தும்

போகிறது மனம் தினம் தினம் நாடியே

சோகம் ஏதுமில்லா வாழ்வில் அறியா

போதை தரும் பழக்கத்துக்கு அடிமையாய்

கோதை இவள் பார்க்கும் விழியிலே

Link to comment
Share on other sites

கவிதைக்கும் எனக்கும் நிறைய தூரம். ஏதோ எழுதியிருக்கிறேன். கவிதை அந்தாதியைப் பாழ்படுத்தியிருந்தால் கவிஞர்கள் மின்னலை மன்னதித்தருளவும் .

விழியிலே விழுந்து

இதயத்தில் புகுந்தவளே

ஏன் எனை வாட்டுகிறாய்?

உண்ணும் போதும் உன்நினைவு

உறங்கும் போதும் உன்நினைவு

உறக்கம் கலைந்தாலும் உன்நினைவு

பெண்ணே ஏற்றுக்கொள் என் காதலை

இல்லையேல் வருந்துவாய் - ஒருவன்

பைத்தியமாக நீ காரணமென்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணமென்று தெரிந்தும்

கரு முகில்களுக்குள் மறைந்திருந்து

மின்னலாய் கண்களை சிமிட்டி

கவிதை மழைச் சாரலுக்குள்

கவிதை அந்தாதிக்குள் அழகாய்

கரம் பதித்துவிட்ட மின்னல்

கவிகள் தொடர்ந்திட

கரம்கோர்த்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கூறி

வாழ்த்த ஓர் இதயம்

இருந்தால்

கூட்டுக்குள் வீணே

அடைபட்டுக் கிடப்பேனோ?

பாட்டுக்குள் பல

சங்கதி வைப்பேன்

பலர் பாடி மகிழ

பல் சுவை

விருந்தளிப்பேன்!

காட்டுக்குள் கூவும்

குயில் போல்

தன் ஓட்டுக்குள்

தலை மறைக்கும்

ஆமை போல்

பூட்டுக்கள் பல கொண்டு

எனை நானே

பூட்டி வைத்தேன்!

தட்டுங்கள் கைகளிரண்டை

வானக் கூரை தட்டி

வாழ்த்துங்கள்

உதிருகின்ற நட்சத்திரங்கள்

என் மேல் பூவாய்

விழட்டும்...

ஒளிருகின்ற நிலவது

நில்லாது

என் கன்னந் தொட்டு

முத்தமிடட்டும்!

ஏதும் செய்யாது

ஏன் இப்படி நிற்கின்றீர்?

போதும் விளையாட்டு

உங்களை நம்பி

எப்படி புனைவேன்

நான் கவி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கவியே

முன் கவியுடன் இனைந்த

தேன் கவிதான்

நின் கவி

உன் கவியுடன் இனையும்

என் கவி என்றும்

இன் திரையில் பூக்கும்

பண் நிறங்கள் கூட்டும்

பொன் வண்ணம் காட்டும்

Link to comment
Share on other sites

வண்ணம் காட்டும்

வானவில் காட்டும்

வண்ணத்துப்பூச்சியாய்.

வெள்ளைப்பூவாய்...

விளையாடும் பிள்ளைநிலவாய்..

வெண் பஞ்சுமேகமாய்..

குட்டித்தென்றல்கள்..

குழந்தைக் குயில்கள்..

செல்லச்சிணுங்கல்கள..

சிரிக்கும் முத்துகள்..

தவளும் தாரகைகள்..

தங்கப் பேழைகள்..

தாமரை மொட்டுகள்..

தெவிட்டாத அமுதங்கள்..

எனை விட்டுப்போன

என் மழலைப் பூவே...

எதிலே இருக்கிறாய்...

எல்லாவற்றிலுமா?.. :-(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றிலுமா உன்வாசங்கள்

பாதையோரம் சிரிக்கும் தளிரிலும்

கண்ணில் புலனாகும் கருத்தினில் சேரும்

வாசங்கள் எல்லாம் உன் வாசங்கள்

கவிதையாய் பேசும் உன் வார்த்தைகளில்

உன் வாசங்களின் எச்சங்கள்

மலராய் மலரும் வாசங்கள் கூட உன்

பெயரை சொல்லுதே

Link to comment
Share on other sites

பெயரைச்சொல்லுதே..இதயம்...

என்னையறியாமல்..

பிறவிப்பயனா இது?...என்று

பேரின்புற்றிருந்த என்னை...

இது முற்பிறவி வினையென்று...

விளங்க வைத்த கன்னியே..

உன் காதல் விளையாட்டை நீ

நேரக் கடப்புக்காய் விளையாடுகிறாய்...

அது என் போன்ற

காளைகளின் உயிரோடு விளையாடும்

விளையாட்டு என்று அறிந்தும்..

விளையாடு.. விளையாடு..

ஏ பெண்ணே...

அடுத்த பிறவி என்று ஒன்று

இருக்குமென்றால்.. நீ

ஆணாகாவும்..உன்னை

அலையவிடும்..அழகியாக

நானும் பிறக்கவேண்டும்..

மெய் காதலின் அவஸ்தை

ஒரு ஆணாயிருந்து நீ

அனுபவிக்கவேண்டுமடி!!

Link to comment
Share on other sites

அனுபவிக்க வேண்டுமடி

அத்தனையும்!

ஆகுதியில் நெய் வார்ப்பது போல்

என் ஆவியில்

அன்பைச் சொரிந்தாய்

என் சோகம் துடைத்தாய்!

வாழும் இவ்வுலகில்

நாளை கூட சொந்தமில்லை

எமக்கு...

போகும் வரை

கூடி வாழ்வது தானே

எம் இலக்கு...!

கூழும் பழஞ்சோறும்

உண்டு மகிழ்ந்தது

ஓர் காலம்

ஆலும் அரசும்

தரு நிழல் தேடி

அதனடி அமர்ந்து

நாளும் மகிழ்ந்ததும்

ஓர் காலம்!

பாழும் போரில்

சாவின் நீளும்

கரத்தை தட்டி

பறந்து வந்து

பாதை மறந்து

ஏதோ வாழ்கின்றோம்

இங்கே...

நீயும் நானும்

திக்குகள் வெடித்துச்

சிதறியதில்

துடித்து விழுந்தவர்கள்!

உன் கரம் தேடி

என் கரம்

நீளும் பொழுதில்

இறுக்கிப் பிடித்தது

நம் வாழ்வின் ஆசை!

வாழ்க்கை வசந்தம் தான்

வீழுகின்றபோதெல்லாம்

தேடி ஒரு கை

கண்ணீர் துடைத்தால்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.