கறுப்பி

கவிதை அந்தாதி

Recommended Posts

முயற்சி ஒன்றே உயர்ச்சி தரும்!

அயர்ச்சி இன்றிப்போராடு!

வெற்றி உந்தன் கையில் வரும்!

நிமிர்ந்து நில் முதுகெலும்போடு!

Share this post


Link to post
Share on other sites

முதுகெலும்போடு முட்டிநிக்கும் அரவு

முள்ளன்தன்டூடாய் தாவிடவே துடிக்கும்!

முயற்சி இன்றி நீயிருந்தால் - பாம்பும்

சுருன்டே தன் வாலை நக்கிக் கிடக்கும்!

அந்தி சந்தி அவனை நினைந்து மெய்வருந்த

அந்த அரவும் ஆறுசில்லையும் தாண்டியே

அசைந்து நெளிந்து துடித்து ஏறியே

அய்யனின் உச்சியில் அமுதம் ருசித்து ஆடிடுமே!

Share this post


Link to post
Share on other sites

ஆடிடுமே அவள் விழிகள்

காதல் நர்த்தனம்

தேடிய அவன் வதனம்

காணும் வரை

ஓடிடுமே அவள் மனம்

அலை பாய்ந்து

நாடிய அவன் நல்லுரை

கேட்கும் வரை

தேடிடுமே அவள் உள்ளம்

தெருவெங்கும் இசை

பாடிய அவன் குரல் ஓசை

ஒலிக்கும் வரை

பாடிடுமே அவள் விழிகள்

தேடிய அவன்

அவளைத் தேடி வந்து

மாலை சூட்டும் வேளை

வாத்தியார்

*********

Share this post


Link to post
Share on other sites

தேடி வந்து மாலை

சூட்டும் வேளை

சுற்றிய சுற்றமும்

சூட்டும் மாலையும்

நித்தமும் ஏங்கிய மனசும்

மகிழ்ந்தாடும் உண்மை தான்

கட்டிய கனவு நினைவாகி

காலங்கள் உறவாகி

கனிந்த இதயம் நிறைவாகி

கொடுத்த உரிமை நி;யமாகி

வாழும் நாட்கள் உயிராகி

உண்மை அன்பு கொண்டாடி

உறியவள் வாழ்வு மகிழ்தாடி

உரிமையுள்ளவன் மீண்டும் மீண்டும்

வேண்டுமென சொல்லும் காலம்

எக்காலம்?..............

Share this post


Link to post
Share on other sites

எக்காலமும் எதிர்காலம் நோக்கியே நம் பயணம்

எப்போதும் நம் நிகழ்காலம் தொலைவதை

நாம் உணராத போதும் எம் நினைவெல்லாம்

இரை மீட்டு சுகம் காணும்,சோகம் காணும்

மீண்டுவரா இறந்த காலத்திலேயே!

Share this post


Link to post
Share on other sites

இறந்த காலத்திலேயே...

நித்தியமான என் நினைவுகள்..

நிழலுக்கு ஏங்கிய கோடைகாலம்..

நீருக்கு ஏங்கிய பாலை நிலம்..

காற்றில்லாத காட்டுக்குள்

நமத்துப்போன கனவுகள்..

நிறைவேறாமலே அடங்கிப்போன ஆசைகள்...

எனக்குள் கீறல்கள்

இயலாமை வடுக்கள்

எண்ணி ஏங்கி

மூச்சு முட்டி..

இறக்கும்போதும் இறக்காமலே...

இருக்கும் என் ஆசைகள்..

என் கட்டை வேகினும் வேகாமலே...

வடுவாய் கிடக்கும்-முள்ளி

வாய்க்கால் வலிகள்

Share this post


Link to post
Share on other sites

வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை

வலிகளின் வாசம் புரிந்தால் வேதனைகள் துச்சம்

வலிக்கும் எதுவும் ரணமாவதும் உண்டு அதன் தழும்புகள்

வருடும்போதும் இதமாய் அமைவதும் உண்டு

வலித்த போது அருகில் இல்லாத நட்பும் அதன் அருகாமையும்

வலிதீர்ந்தபோது ஒட்டுவது நகைச்சுவையின் வடிவம்

வலிகள் மனதின் ஓரத்தில் புரியாமல் புரியும் வார்த்தைகள்

வந்த வலியின் தார்ப்பரியங்கள் யாரிடம் சொல்வேன்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இறந்தேனே ஒரு துரோகத்தால் மனசு உடைந்தாலும்

பிறந்தேனே ஒரு நாள் மீண்டும் அக்கினிக்குஞ்சாய்

அலைந்தேனே ஒரு ஜீவனை தேடி அவை எல்லாம்

தொலைத்தேனே ஒரு நாள் அவர்தம் சுயரூபத்தின் முன்பு

தெளிந்தேனே அடங்கா கோபத்தினை அடக்கிய் போது

இழந்தேனே உயிரடங்கும் வேளையை கடந்த போது

புரிந்தேனே உறவுகளின் ஒட்டா மனதினை

திருமால்

Share this post


Link to post
Share on other sites

ஒடடாமனதினை புரிந்த கவியே

அந்தாதி புரிந்து வடிப்பாய் இனியே

புது உறவு நீவிர் வடித்த கவி அழகு

அந்தாதியில் நும் வரவு நல்வரவாகுவதே

முதற் கவியின் அந்தமதை உம் கவியில்

ஆதியாக்கியே கற்பனைப் புரவி பாய்ந்தோடத்

தட்டிடுவாய் திரையினிலே!

Share this post


Link to post
Share on other sites

திரையினிலே கண்ட கவி

ஒழுங்க்கு முறைமை திசைமாறக்கண்டு

அழகு தமிழில் நகைச் சுவை கொண்ட

கவி வடித்த் சுவைக்கவியே

திரைகடல் கடந்தாலும் திரவியத்தமிழ்

மறவா தமிழ் மகனை பார் புகழ

வாழ்த்துகிறேன் வார்த்தைகளை

தேடுகிறேன் தமிழ் மகனே வாழ்க

Share this post


Link to post
Share on other sites

திரையினிலே கண்ட கவி

ஒழுங்க்கு முறைமை திசைமாறக்கண்டு

அழகு தமிழில் நகைச் சுவை கொண்ட

கவி வடித்த் சுவைக்கவியே

திரைகடல் கடந்தாலும் திரவியத்தமிழ்

மறவா தமிழ் மகனை பார் புகழ

வாழ்த்துகிறேன் வார்த்தைகளை

தேடுகிறேன் தமிழ் மகனே வாழ்க

நல்ல கவிதை சகோதரி :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

வாழ்க வென்றுரைத்தே வழியனுப்பி

வைத்தனர் தோழர்கள்

வெல்க வென்றுரைத்தே விருந்து

இட்டனன் எம் தலைமகன்

சூழ்க என விரைந்தே சூழ்ந்து

நின்றது கொடியவர் கூட்டம்

ஒழிக என்று அழித்தே தன்சுடர் தந்து

இருபத்தேழில் அகல்சுடர் கண்டனன் அந்தோ!

நீட்டிய காலை முறித்தவன் சிங்களன் - உதவி நாடி

உயர்த்திய கையை உடைத்தவன் இந்தியன் - இன்னொரு

கையையும் பிடித்தே இடை வேட்டியையும்

உருவினர் இணைந்தே இருவரும்!

எட்டுத் திசையெங்கணும் எமக்கா எதிரிகள்

எல்லோரும் எம்மை ஏதிலியாக்கி

பிச்சை இடுவதிலே கருத்தாயினர்.

பத்துக் கரம் தா பராசக்தி பத்துத் திக்கும் பரவிட

கொத்துச் சிரம் கொய்து நின்தாள் பணிந்திட

ஈழவேள்விக்காய் இளங்கன்றை ஈய்ந்தவன்

வேழமென முழங்கி மீண்டும் வருவானோ

காலமெல்லாம் எம்மிதயத்தில் வாழ்பவன்

கார்த்திகை இருபத்தேழில் இன்னுரை சொன்னவன் - ஐய

உன்னுரை மட்டும் இன்னும் நம் செவியில்

"எதிரி ஈவிரக்கமற்றவன்,

போர்வெறி கொண்டவன்

எம் தாயகத்தை சிதைப்பதும்

எம்மினத்தை அழிப்பதும்

அவனது இலட்சியமே!"

"எமது தேச வளத்தின் அடிப்படையில் நம்

தேசிய பொருளாதாரம் சுயநிறைவு காண வேண்டும்!"

"சுதந்திர எழுச்சியின் உந்துதலால் தான்

மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கிறது!"

Share this post


Link to post
Share on other sites

சுழல்கிறது

வாழ்க்கைச் சக்கரம்

எப்படியோ...

புலா்கின்ற பொழுதுகளில்

மலா்கின்ற பூக்களைப் போல்

விரிகின்ற கதிரின்

ஒளி பட்டு

விலகிப் போகாதோ

கவலையது எமை விட்டு!

தெரிகின்ற பாதையெங்கும்

நடந்தே திரும்பினேன்

ரணங்களின் வேதனையன்றி

வேறேதும் காண்கிலேன்!

சிரிக்கின்ற மழலை

கண்டு வியக்கிறேன்

நாமும் ஒரு நாள்

அவ்வாறு இருந்த

கதை நினைக்கிறேன்!

புரிக்கின்றது எல்லாம்

வீணே புலம்புவது வீணாம்!

மழலை போல் சிரிக்கப் பழகுவதே

கவலை போக்கும் அரு மருந்தாம்!

Share this post


Link to post
Share on other sites

அருமருந்தாம் காலம் - அக்

காலம் கணமேனும் கூடக்

காத்திருப்பதில்லை!

கடல்தான் எழுந்து

கரையெல்லாம் விழுங்கிடினும்

மலைதான் புரண்டு

மாந்தரைப் புதைத்திடினும்

புயலும் சோலையை

பெயர்த்து வீசிடினும்

காதலும் விழுந்து

காதலர் துவண்டிடினும்

காலம் மட்டும் கவலையின்றி

காலடியை கடந்தே செல்லும்!

Share this post


Link to post
Share on other sites

கடந்தே செல்லும் எம் கவலைகள் என

காத்திருப்போம் மன உறுதியோடு

விடிந்திரும் ஒரு நாள் எம்மவருக்காய்

விழிப்போடிருப்போம் செயற்படுவோம் எம்

விடியலுக்காய் காத்திருப்போம்

Share this post


Link to post
Share on other sites

விடியலுக்காய் காத்திருப்போம்

என்று சொன்னவளே

கை நிறைய கரன்சியோடு

மாப்பிளை கண்டவுடன்

கை காட்டி சென்றாயே!

அடுக்குமாடி இது?

அடுக்கு மாடி கொண்டவன்

பின்னால்

செக்கு மாடு போல்

நீ போவது

அடுக்குமாடி?

Share this post


Link to post
Share on other sites

அடுக்குமாடி அந்தோ

அன்னை பராசக்தி

அருந்தவப் புதல்வனை

அவனிக்குத் தந்தவள்

அவ் அன்னையின் உயிரை

அழைத்துக் கொண்டனையோ!

பர்வதம் அம்மாவின்

பாசமிக்க ஆன்மாவை

முற்றம் பெருக்கு முன்னே

முதலாய் நீ கொண்டனையோ

வாசல் தெளிக்குமுன்னே

வாகாய் நீ வாரினையோ

கோலம் போடுமுன்னே

காலனை ஏவினையோ!

நஞ்சனிந்து கொண்ட மகன்

நாடிழந்து சென்ற மகன்

நாடுகொள்ள வரும் வரைக்கும்

பேரனுடன் விட்டனையோ!

Share this post


Link to post
Share on other sites

விட்டனையோ தாயே உன் உயிர் மூச்சை!

கட்டியெழுப்பிய ஈழமாம் தேசத்தை

ஒட்டி நின்று அழித்த கோடாரிக்காம்புகளால்!

விட்டனையோ தாயே உன் உயிர் மூச்சை!

பெட்டிப்பாம்பாய் அடங்கிக் கிடந்தவர்கள்

கொட்டமடிக்கும் நிலை கண்டு

விட்டனையோ தாயே உன் உயிர்மூச்சை

எட்டி நின்றுதான் அழமுடியும்

எம் உறவுகளால்! முட்டி நிற்கின்ற

பகையின் தடைகளினால் எட்டி

நின்றுதான் அழமுடியும் எம் தாயே!

‘வெட்டிப் பகை முடித்து வேங்கை

வரும் செய்தி கேட்டு! எட்டுத்

திக்கும் வெளிக்கும் ஒருநாள்!

என் தாயே! !!!அதுவரை எம்முள்

மெளனமாய் அழுகின்றோம்!

Edited by Thamilthangai

Share this post


Link to post
Share on other sites

மெளனமாய் அழுகின்றோம்

மனமுடைந்து நிற்கின்றோம்

எம் அன்னையாய் உம்மை பாக்கின்றோம்

உம்மை பிரிய மனமின்றி பிரிகின்றோம்

நன்றி அம்மா தங்க தலைவனை தந்தமைக்கு

சென்று வாருங்கள் அம்மா சென்று வாருங்கள்

அங்கிருந்து பாருங்கள் எமக்கே எமக்காய்

என்றோ ஒருநாள் விடியப்போகும் ஈழமதை....!

Share this post


Link to post
Share on other sites

ஈழமதை சுனாமியும் சூழ்ந்தே

கரையதை உடைத்து கரையுறை மாந்தரை

பெருவதை கொடுத்து ஆழ்கடலில் தள்ளியே

காலமதை கடந்து தடங்களை பதித்தது.

விட்ட சுவடுகளை தேடிய கடலும் _ வின்

முட்ட எழுந்தே கருக்கலில் கரை புகுந்தது.

பசிபிக்கின் மேல் சுவாசித்து நின்ற தீவுகளை

அலைக்கரம் நீட்டி அள்ளிச் சென்றது.

கப்பல்களை கரையில்லேற்றி

கார்கள் எல்லாம் தானெடுத்து

சங்குகள் வீசி அணுஉலைகள் உடைத்து

மீன்களை தந்து மாந்தரை கொண்டதே!

Share this post


Link to post
Share on other sites

கொண்டதே கோலம் என்றாகிப்போன நிலைதனில்

கண்டதை எல்லாம் அணிந்து காட்சிப்பொருளாய்

உலா வருவதில் ஆணுக்குப் பெண் நிகராய்

போட்டி போடும் உலகம் தற்கால உலகம் இது

Share this post


Link to post
Share on other sites

கொண்டதே கோலம் என்றாகிப்போன நிலைதனில்

கண்டதை எல்லாம் அணிந்து காட்சிப்பொருளாய்

உலா வருவதில் ஆணுக்குப் பெண் நிகராய்

போட்டி போடும் உலகம் தற்கால உலகம் இது

தற்கால உலகுக்கும்

கற்கால உலகுக்கும்

பேதம் அதிகமில்லை!

அன்று மரவுரி தரித்துத்

திரிந்தது பெண்குலம்,

இன்று,

அரை குறை ஆடையுடன்

'நரை' பெயர்ந்த பின்னும்

நடை பயில்வதைக் காணக்

கோடிக் கண் வேண்டும்

கறுப்பி!

Share this post


Link to post
Share on other sites

கறுப்பின் வண்ணத்தில் சிரிக்கும் கண்ணன்

கம்சனின் சிறையில் பிறந்தான் __ நந்த

கோபனின் கோ மந்தையுடன் வளர்ந்தான்

காளிங்கன் சிரங்களில் தாவி ஆடினான்

கோபியர் மனங்களில் நீங்காமல் நிறைந்தான்

அன்னை தேவகி உதரத்தில் உதித்தான் __ தாய்

யசோதை மடியினில் தவழ்ந்தான்

இந்திரன் இடியாய் இறங்கவே __ கோ

வர்த்தன கிரியால் கோகுலம் காத்தான்!

Share this post


Link to post
Share on other sites

காத்தான் கூத்து விடிய விடிய

பார்த்த உற்சாகம் தணியுமுன்னே

காத்தவராயனிடம் மண்டியிட்டு

காத்திடுவாய் எம் உறவுகளை என்றே

காலைப் பிடித்து தொழுதபோதும்

கைவிட்டான் கைகளை

கால்களை பிடித்ததாலோ என்னவோ

Edited by கறுப்பி

Share this post


Link to post
Share on other sites

என்னவோ கூறுங்கள்!

இலவு காத்த கிளி போன்ற,

எங்கள் இழிநிலை வாழ்வும்,

அந்நிய நாடுகளில் ,

அடையாளம் இழந்து, சொந்த

நிலத்துக்காய் ஏங்கும்,

புலத்துச் சொந்தங்களும்,

கண்ணீரில் கரையும்

வன்னி உறவுகளும்,

காத்திருக்கின்றன!

கால தேவனின்,

முடிச்சு அவிழும் வரை!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.