• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
கறுப்பி

கவிதை அந்தாதி

Recommended Posts

சோகங்கள் வாட்டி-நான்

அழுதபோதெல்லாம்

அம்மாவை நிநைத்துக் கொள்வேன்,

இன்று

அம்மாவை நினைக்கும் போதெல்லாம்

நான்

அழுதுவிடுகிறேன்

Share this post


Link to post
Share on other sites

ஆயிரம் ஆண்டுகள் வாழும் பனைமரம்

ஆணியும் ஏறாதது  ஆணிவேரும் இல்லாதது _ இங்கு

ஆணிவேரோடு ஒரு மரம் மோகனமாய் அசைகிறது

அன்பு ஆள்வதால் ஆணிகளையும் சுமக்கிறது !

 

அன்பு ஆள்வதால் யாழ் என் உள்ளத்தையும் ஆள்கிறது !!

Share this post


Link to post
Share on other sites

சோகங்கள் வாட்டி-நான்

அழுதபோதெல்லாம்

அம்மாவை நிநைத்துக் கொள்வேன்,

இன்று

அம்மாவை நினைக்கும் போதெல்லாம்

நான்

அழுதுவிடுகிறேன்

 

அம்மா என்ற வார்த்தையை வாசித்ததுமே உள்ளம் நெகிழ்ந்து விடுகிறதே...

 

Share this post


Link to post
Share on other sites

அழுதுவிடுகிறேன்..யாருமறியாமல் ஆற்றாமையால்-அன்புடையார் யாரும் தேற்றாமையால்..என்ன தடுத்தும் மனம் கேளாமையால் அம்மா அம்மா என ஏங்கும் அம்மாவின் குழந்தைக்கு அம்மா இவ்வுலகிலே இல்லாமையால்

Share this post


Link to post
Share on other sites

இல்லாமையால்

விகடகவி நீ

இவ்வந்தாதியை 

இவ்வளவு நாளாய் 

தீண்டாமையால் 

சொல்லாமல் எங்கோ 

போனார் பலர் என 

எண்ணி 

சுற்றி வந்து பார்த்துச் 

செல்வேன்...! 

 

இறங்கி நடக்கும் 

சூழல் ஒன்று 

இனித் தொடரும் 

வாடிக் கிடக்கும் 

என் தமிழ் வேட்கை 

ஓடிக் களிக்கும்! 

 

காணாமல் போனோர் 

பற்றிய செய்திகளை 

வாசிக்கின்ற போதெல்லாம் 

யாழ் களத்தில் கூட வந்து 

விளையாடிய பலர் 

இருந்தும்

இங்கு வந்து இளைப்பாற 

மனமின்றி காணாமல் போனாரே 

என்று மனம் துணுக்குறும்! 

 

அவ்வகையில் 

உன்னைக் கண்டேன்

விகடகவி 

சொல்லாலே அடித்து விளையாடியவன் 

முன்னாலே வந்து நிற்கின்றாய் 

என்னாலே என்ன சொல்லமுடியும்

தன்னாலே இனி நடக்கும் பாரிங்கு 

தமிழுக்கு திருவிழா! 

Share this post


Link to post
Share on other sites

தமிழுக்குத் திருவிழா... திருவிழாவில் தொலைந்த சிறுவன் நானும்தான் மீண்டு வந்தேன் நண்பா நீ..நான்..நாம்.. இணைந்தோம்..வரைந்தோம் மகிழ்ந்தோம்..மனம் மலர்ந்தோம்..நம் சோலை செஞ்சோலையானதில்.. வாடிப்போனோம்..கவி பாடிப்போன உறவைக்கூட வந்து வந்து தேடிப்போனோம்... காணவில்லையே..விதியைச் சாடிப்போனோம்.. வாழ்க்கை சக்கரம்.. வேரைத்தேடி மழைநீர் வாராது எங்கு போகும்.. பிறந்த இடைத்தில் கரைவதுதானே நியதி தமிழாய் ஜனித்தோம் தமிழால் இனித்தோம்.... இனி...தமிழே.. உறவே தினமும் சந்திப்போம்

Share this post


Link to post
Share on other sites

//

விகடகவி தாங்கள் இடும் கவிதைகள் ஏன் நீண்டு வருகின்றன. பத்திகளாக பிரிக்கப்படவில்லை. ஏதோ சிறு பிழை நடப்பதாக கருதுகிறேன். கவனிக்கவும். 

 

நன்றி. 

//

 

சந்திப்போம்

என்று சொல்லிப் 

போன அத்தான் 

கிஞ்சித்தும் என் நினைவின்றி 

இத்தனை நாள் 

இருந்து விட்டு 

முன் வந்து நின்றார் 

பேச்சிழந்து விட்டேன்!

 

 

அத்தான் அருகில் 

வெள்ளைத் தோல் காரி 

வெள்ளந்தியாய் சிரித்து நின்றாள்! 

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நின்றாள் கதவு நிலையோடு முகிலில் ஒழியும் நிலவு போல பாதி முகம் நாணம் கொப்புளிக்க இதழ்களில் இன்பம் புன்னகையாய் பூ விரிக்க ... விரல்களால் கோலோமிட்டு ஏக்கமும் காதலும் எனக்குள்ளும் ஒட்ட வைத்து ஓடி சென்றாள் உள்ளே..பாதங்கள் சிணுங்க ..பின்னே பின்னால் தலையசைத்த ...."என்ன காத்து செவிடா" இவளின் பேச்சில் மறைந்த அந்த மலராத காதல்..

Edited by விகடகவி
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

காதல்

காமம் 

கல்யாணம் 

கவலை 

கண்ணீர் 

கடைசியில் 

கல்லறை! 

Share this post


Link to post
Share on other sites

கல்லறை மேல் பூ வைத்து போபவளே. நீ. வைத்த ஒற்றை ரோஜாதான் பெண்ணே இவனை கல்லறைக்கனுப்ப. காரணமென்பதை. நீ மட்டுமே அறிவாய்

Share this post


Link to post
Share on other sites

அறிவாய் பெண்ணே 

அரிதாய் பூத்த 

காதல் பூவைக் கிள்ளி 

கள்ளி நீ மனதில் வைப்பாய் 

என்றிருந்தேன்...

தள்ளிக் காலால் மிதித்து 

எள்ளி நகைக்கின்றாய்

சொல்லி அழ 

சோகம் 

கிள்ளி எறிய 

துள்ளி அருகில் வராயோ 

நீயே

புள்ளி மான் போல்! 

Share this post


Link to post
Share on other sites

 புள்ளி மான்  போல்

துள்ளி ஓடும் கன்னிமானே - ஓர்

புண்ணகையால் உரசிப் போவாயே

பொன்மானே - உன்

கடைக்கண் நோக்க

கால் கடுக்க  காத்திருக்கும்

அம்மானும்  நானே...!

Share this post


Link to post
Share on other sites

நானே குழம்பிக் கிடக்கேன்... அச்சில எத அடிச்சாலும் சும்மா நச்சுன்னு வருமே..... இப்ப வரி வரியா அடிச்சாலும் கூட்டம் கூட்டமா வருது... இறைவா..தமிழனுக்கும் சோதனை தமிழுக்கும் சோதனையா?

Share this post


Link to post
Share on other sites

சோதனையா தமிழுக்கு

என்று சோகம் வளர்க்கும் 

கவியே 

தட்டச்சு செய்யும் வேளை 

திரை வெட்டு ஒன்று எடுத்து 

அடியேனுக்கு அனுப்பினால்

ஆராய்ந்து ஏதேனும் 

ஆவன செய்யப்படும்! 

Share this post


Link to post
Share on other sites

ஆவன செய்யப்படும் என நம்பி..நண்பா உன்னை நம்பி.. உன் வார்த்தை நம்பி அனுப்புகிறேன் அஞ்சல்..சரி செய் இதை அதுவே என் கெஞ்சல்

Share this post


Link to post
Share on other sites
 

 கெஞ்சல்  கொஞ்சல் கொண்டு

கொஞ்சும்கிளியோடு

போன மாப்பிள்ளை

 கொஞ்சி கெஞ்சி  களைத்து

வந்தார் அப்பா மறுவீடு  

ஆரத்தி தட்டெடுத்து

வந்தேனப்பா வரவேற்க.....

 

Edited by கஜந்தி
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வரவேற்க வந்த 

மச்சாள் 

சுவடே இல்லாமல் 

மறைந்தே போனாள்! 

 

காதலில் களைப்பும் இல்லை 

களைத்துக் கலைந்து போனால்

அது காதலும் இல்லை! 

 

என்றும் உள்ள இக்காதல் 

உதட்டு முத்தத்தில் மட்டும் 

பூப்பதில்லை 

மௌனமாய் உள்ளங்கள் 

இளைப்பாறும் பொழுதில் 

தள்ளியிருந்து வேடிக்கை 

பார்க்கும் இக் காதல்! 

 

 

Share this post


Link to post
Share on other sites
காதல்   வந்து இன்பம்
கொண்டு துன்பம் வென்று
துயரம் மறந்து வானில்
பறந்த என் ஆசை மச்சான்
 சுமைகள் கூடி
சுயம்பரம் வெறுத்து  தனியாய்
புலம்பிட வந்தானோ!!என
எண்ணி தவித்து அக்கரையாய்
கேட்டேன்  இதில் தப்பில்லை
தவறில்லை  கிண்டலில்லை
கேலியில்லை அக்கரை  தான்
ஆசை மச்சான்

Share this post


Link to post
Share on other sites

ஆசை மச்சான் 

என்று முடித்தவுடனே 

எந்த மச்சானும் 

வந்து எழுதவில்லையே 

ஒரு கவி! 

 

பொறுமை இழந்து 

வந்தேன் நானும் 

அருமை அந்தாதியை 

அடுத்து நகர்த்தும் 

பொறுப்பில் எழுதுகிறேன் 

 

மூலைக் ஒருவராய் 

போனவர்களே 

பாலைக்கு நீர் வார்த்த 

புண்ணியவான் 

நீங்களே ஆவீர் 

 

வாருங்கள் ஐயா 

கவிதையில் கருத்தாடலாம் 

குதிரையே இல்லாது 

குதித்து ஓடலாம்

சண்டித்தனம் பண்ணலாம் 

சிண்டு முடியலாம் 

பெண்டு பிள்ளை கதையெல்லாம் 

இங்கே வந்து 

காவியமாக்கலாம்! 

சீவியம் முடியும் மட்டும் 

உம்மையே நினைத்து வாடும் 

ரசிகா் கூட்டம் பெறலாம்! 

 

பார்ப்போம் 

எத்தனை பேருக்கு 

வால் முளைக்கிறது என்று 

'கவி'க்கு வால் முக்கியம் தானே!!!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் கவி ரூபன்.மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தானே வாழக்கிழவி

தனியே வாழக்கிழவி

கொட்டைப்பாக்கை ண்டால்

உரலைத்தேடும் கிழவி

பாரதிதேடிய புமைதேடாக்கிழவி

கண்ணம்மாவாய் கண்கள்கசக்கும்கிழவி

அடுப்போடு அடிக்கடிசண்டையிடும் கிழவி

அரிசி பருப்பைின்றி அடிவயிற்றுக்கு

தண்ணீகொடுத்து வாழும்கிழவி

காவிபடிந்த பொக்கைவாய்

பாரதிராஐா கிராமத்தின்

வெள்ளைத்தலைக்கிழவி

வெறும்வாயை மென்று

மண்ணின்வாசலில் காத்திருக்கும் கிழவி

மண்ணுக்குள் புதைந்திட

 மரணத்தை சுமக்கும்கிழவிக்கு!

மாமனென்ன மச்சானென்ன

சந்தேகம் வேண்டாம் என் தேகமே

மருகள் அடிக்க மாமியார் வாங்க

மகனுக்கு பெண்தேடும்கிழவி

பெண்தேகத்தை சந்தேகம்

கொள்வது ஆண்தேகதிற்கு அழகல்ல!!

காதல் மச்சானோ கவிபாடு

சந்தேகவிட்டு சந்தோஷமாய்!!

 

Edited by கஜந்தி

Share this post


Link to post
Share on other sites

சந்தோசமாய் 

தமிழோடு விளையாடி 

கவிதை பல 

இவ்வரங்கில் தந்த இவன் 

என் தேசமாய் 
இவ்வந்தாதி இருண்டது 

கண்டு 

வருந்திக் கிடக்கிறேன்!

 

எங்கே ஐயா

போனீர்? 

 

தமிழ் மறந்த 

தமிழர் போல் 

தேசம் மறந்த 

மக்கள் போல்

பாசம் மறந்த 

பிள்ளைகள் போல் 

 

எங்கே ஐயா 

போனீர்?

 

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

                                                                                          போனீர் போனயிடம்

போகநானும் முடியாது!!

பொறுப்பை  பொறுப்பற்று

பொறுப்பாய் என்னிடம் கொடுத்து!!

பொறுமை வாழ்வை சுமக்க வைத்து

போதிப்பர் சுற்றிட போதனை கசந்திட

என்னை தனியா விட்டு ஏன் போனீர்!!

சபைக்கு ஓர்செய்தி  தனியே ஓர்வாழ்வு

தலைக்கு பலதகவல் தனித்தனி கதையாக்கி

வாழ்பவர்மத்தியில்தனியாவிட்டு

ஏன்போனீர் !சரிந்து விழுந்த

இருளுக்குள் சரிசெய்யா கார்காலதிற்குள்

சொஞ்சமும் அன்பில்லா  நஞ்சுக்குள் வஞ்சகமாய்

தொலைத்துவிட்டு ஏன் போனீர் மாமா!!

                                                                                                    என்னைவிட்டு!!

 

Edited by கஜந்தி

Share this post


Link to post
Share on other sites

என்னை விட்டு போகாதே  இளங்காற்றே  உயிர் மூச்சே

மண்ணை விட்டு  மரஞ் செடிதான் உயிர் வாழுமோ தலை சாயுமோ

பண்ணை விட்டு மாங்குயில்தான் பண்பாடுமோ தரை சேருமோ

உன்னை விட்டு என்னுளந்தான் பேதலித்திடுமோ விண்ணேகுமோ

 

கார்முகில் நீங்கி  விழும் துளிகள் முத்தாடுதே புவிமீதிலே

வண்டுவர நறுமலர்தான் இதழ் விரித்தே  தேன் சிந்துதே

மழைவர வண்ண மயில்தான் தோகை அசைத்து நடனமாடுதே

கலைமானோடு பெண்மானும் கலந்துறவாடுதே

 

 

பசும்புல் நிலங் கண்ட  பசுக் கூட்டம் போலே

ஓடும் அருவி கண்ட  களிறுகளின் களிப்புப் போலே

அம்மாவைக் கண்ட குழவி அணைக்கத் தாவுதல் போலே

உச்சிமோந்து உன்னிடம் உறவாடிட உள்ளம் ஏங்குதே...!!

 

 

 

Share this post


Link to post
Share on other sites

ஏங்குதே என் உள்ளம் 

என்றோ பேசித் திரிந்த 

நாட்களை எண்ணி ஏங்குதே...

 

வாழ்க்கை வண்டியின் 

அச்சாணி முறியுமளவு சுமைகள்! 

 

அச்சாணி முறியும் தருணத்திலும் 

கழற்றி எறிந்து விட்டு 

புதிதாய் ஒன்றைப் போட்டு 

சுமக்கின்ற சாமத்தியசாலிகள் நாங்கள்! 

 

போதும் என்று ஓடிப் போகும் 

ஞானம் வந்து கூடவில்லை

 

குறை கூறிக் கொண்டே 

வாழும் வகையில் 

வாழ்க்கையோடு சமரசம் 

செய்து கொண்டோம்! 

 

அருகில் இருப்பது 

சொர்க்கமே எனினும் 

நரகமாக்கிக் கொள்ளும் சமத்தர் 

நாங்கள்! 

 

பல சமயங்களில் 

அருகில் இருப்பது 

மனைவி என்று உணர்ந்தவர் 

பாவ நிவர்த்தி செய்ய 

பகவானுக்கு கற்பூரம்

ஏற்றிக் கொள்க! ;-)

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.