Jump to content

இன்று திருநீற்றுப் புதன் (ASH Wednesday)


Recommended Posts

இன்று திருநீற்றுப் புதன் (ASH Wednesday)
February 18, 2015
 

Ash-wednesday.jpg

 

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் இன்று பெப்ரவரி 18 திருநீற்றுப் புதன் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் ஆரம்ப நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த திருநீற்றுப் புதன் வி பூதிப் புதன், சாம்பல் புதன் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
இன்றைய நாளில் ஒரு சந்தியும் சுத்தபோசனமும் (மாமிச தவிர்ப்பு) அனுஷ்டிக்க கத்தோலிக்க திருச்சபை கட்டளையிட்டுள்ளது. சிறியவர்களும் நோயாளர்களும் முதியவர்களும் இந்தக் கட்டளையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.இப்புதனன்று முதல் நாம் தவக்காலத்தில் நுழைகிறோம். இதனைத் தொடர்ந்து வரும் 40 நாட்களும் நமது செப, தவ , ஒறுத்தல் முயற்சிகளுக்காக நமக்கு கொடுக்கப்பட்ட காலமாக இந்த 40 நாட்களும் கருதப்படுகின்றது.

தவக்காலம் வசந்தத்தைக் கொண்டு வருவதற்கு முன்னதான காலமாக கருதப்படுகி;ன்றது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு வழங்கியுள்ள தவக்காலச் செய்தியின் ஆரம்ப வார்த்தைகள் இந்த எண்ணத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
“திருஅவை முழுவதும் மறுமலர்ச்சி பெறும் காலம், தவக்காலம். தனி மனிதரும், குழுமங்களும் மறுமலர்ச்சி பெறும் காலம் இது. அனைத்திற்கும் மேலாக, ‘இதுவே அருள்நிறை காலம்’ (2 கொரி. 6:2)” என்று பரிசுத்த பாப்பரசர் தன் தவக்காலச் செய்தியை ஆரம்பித்துள்ளார்.
தமிழில் நாம் தவக்காலம் என்று அழைப்பதை, ஆங்கிலத்தில் Lent season என்று அழைக்கிறோம். Lenten (அல்லது, Lencten) என்ற வார்த்தை ஒரு Anglo Saxon வார்த்தை. அதன் பொருள் வசந்தம். வசந்த காலம், தவக்காலம் இரண்டையும் இணைப்பதே ஓர் அழகான எண்ணம். புதுமையான எண்ணம்.

வசந்த காலத்தை அனுபவிப்பதற்கு முன்னதாக நம்மில் பல மாற்றங்கள் நடைபெறவேண்டும். அதற்கான அர்ப்பண வாழ்வில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அது நமக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் அந்த நாட்கள் நமக்காகவே கொடுக்கப்பட்டுள்ளன.

தவக்காலத்தில் நாம் கைக்கொள்ளும் நடைமுறை வாழ்க்கை முயற்சிகள் ஆன்மீக வழி நின்று நம்மை புதிய மனிதர்களாக மாற்றிக் கொள்வதற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.
இந்த மனமாற்றங்களை நாம் எவ்வாறு ஏற்படுத்தப் போகின்றோம்?
நமது ஆசாபாசங்களை ஒறுத்து நம்மாலான தானதருமங்கள், உதவிகளை நம்மைச் சார்ந்தவர்களுக்கு செய்யலாம்.

சாம்பலிலிருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் Phoenix பறவையைப்பற்றி கேள்விபட்டிருக்கிறோம். இல்லையா? அந்தப் பறவையைத் தவக்காலத்தின் ஒரு அடையாளமாக நாம் சிந்திக்கலாம்.

திருநீற்றுப் புதனன்று நமது நெற்றியில் குருவானவரால் அடையாளப்படுத்தப்படும் சிலுவை அடையாளத்தின் போது குருவானவர் நமக்கு சொல்லும் வார்த்தைகளான
மனிதா நீ மண்ணாயிருக்கிறாய். மண்ணுக்கே திரும்புவாய் என்ற அழைப்பு இவ்வுலக வாழ்வு நமக்கு நிலையற்றது என்பதை நினைவுறுத்துகின்றது.

ஆகவே இந்த உலகவாழ்வில் நாம் செய்யும் பணிகள் நம்மை இறைவன்பால் அழைத்துச் செல்ல உதவுகின்றன.

இயேசு சிலுவையில் கூறியதாய் சொல்லப்படும் ஏழு வாக்கியங்கள்ளை நம் தவக்காலத்தின் பாடங்களாக எடுத்துக்கொள்வோம்.

தந்தையே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை.” (லூக்கா 23:34)

தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளுக்கு, அடிப்படையாக நமக்குத் தேவையானது, மன்னிப்பு.

இந்தத் தவக்காலத்தை நாம் சரியான வழியில் பயன்படுத்தி நம்மில் மாற்றங்களை உருவாக்கி இறைவனுக்கேற்ற மனிதர்களாக நாம் வாழும் வகையில் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோம்.

நமது பரிசுத்த பாப்பரசர் நமக்காய் இந்த ஆண்டு தவக்காலத்திற்கான சிந்தனையாய் வழங்கிய மடல் இங்கு தரப்படுகின்றது.

இந்த ஆண்டிற்கான பரிசுத்த பாப்பரசரின் தவக்காலமடல்

அன்புநிறை சகோதர சகோதரிகளே!

திருச்சபை முழுமையையும், ஒவ்வொரு சமூகத்தையும், ஒவ்வொரு விசுவாசியையும் புதுப்பிக்கும் காலமே இத்தவக்காலம் ஆகும். எல்லாவற்றிகும் மேலாக இது ‘அருளின் காலம்’ ஆகும் (2 கொரி 6:2). ஏற்கனவே நம்மிடம் கொடுக்காத எதனையும் நம்மிடமிருந்து இறைவன்; ஒருபோதும் கேட்பதில்லை. ~அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்| (1யோவா 4:19). நம்மிடமிருந்து அவர் விலகியிருப்பதில்லை. அவர்தம் உள்ளத்தில் நம் ஒவ்வொருவருக்கும் இடமுண்டு. அவர் நம் பெயரை அறிந்திருக்கிறார்@ நம்மைப் பாதுகாக்கிறார்@ அவரை விட்டு நாம் விலகுகிறபோதெல்லாம் அவர் நம்மைத் தேடுகிறார்@ அவர் நம்மில் அக்கறைக் கொள்கிறார்@ நமக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பற்றி கவலையில்லாமல் இருப்பதற்கு அவர்தம் அன்பு ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நாம் ஆரோக்கியமாகவும் சௌகரியமாகவும் இருக்கிறபோது, இயல்பாகவே, நாம் மற்றவரை மறந்துவிடுகிறோம் (இதனை தந்தையாம் இறைவன் ஒருபோதும் செய்வதில்லை): நமக்கு மற்றவர்களுக்கு நேருகிற பிரச்சனைகளையும், அவர்கள் தம் துயரங்களையும், அவர்கள் எதிர்கொள்கிற அநீதிகளையும் …குறித்து அக்கறையற்றவர்களாக இருக்கிறோம். நம் உள்ளம் அந்த அளவுக்கு இயல்பாக இறுகிவிடுகிறது. நான் உடல் நலத்தோடும், சௌகரியமாகவும் இருக்கிறபோது நான் நலமின்றி இருக்கிறவர்களைப் பற்றிக் கிஞ்சித்தும் நினைப்பதில்லை. இந்த அக்கறையற்ற மெத்தனப்போக்கு இன்று உலகளாவிய அளவில் நீக்கமற நிறைந்திருக்கிறது@ அதாவது எந்தளவுக்கெனில் உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் தற்போது குறிப்பிட்டு பேசுகிற அளவுக்கு வளர்ந்துள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாம், இந்தப் பிரச்சனையை, துணிந்து எதிர்த்து நிற்க வேண்டும்.
இறைமக்கள் ஒவ்வொருவரும் இறைவனின் பேரன்பிற்கு ஆட்படுகிறபோது, இந்த வரலாறு தொடர்ந்து எழுப்பிக்கொண்டிருக்கிற எல்லா கேள்விகளுக்குரிய பதில்களையும் கண்டடையமுடியும். நான் இந்தத் தவக்காலச் செய்தியில் குறிப்பாக, உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மையைப் பற்றிதான் நான் பேச விழைகிறேன். இதுவே நம்முன் உள்ள உடனடி சவாலாகும்.

நமது அயலார்மீதும் இறைவன்மீதும் நாம் கொண்டிருக்கிற இந்த அக்கறையின்மைதான் கிறிஸ்தவர்களாகிய நமக்கு உண்மையானச் சோதனையாக இவ்வமயம் விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்தவக்காலத்தின்போது, நம் மனசாட்சியை தட்டி எழுப்புகிற இறைவாக்கினர்களுடைய கூக்குரலை நாம் மீண்டும் ஒருமுறை கேட்கவேண்டியுள்ளது.
இறைவன் நம் உலகத்தின்மீது ஒருபோதும் அக்கறையின்றியிருப்பதில்லை. அவர் நம்முடைய மீட்புக்காக தம் ஒரே மகனை அளிக்கும் அளவுக்கு நம்மீது அன்பு செலுத்துகிறார். மனுவுருவானபோதும், மனுமகனின் இம்மண்ணுலக வாழ்வு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலிலும், இறைவனுக்கும் மனிதருக்கும் இடையிலான, விண்ணிற்கும் மண்ணிற்குமான வாயில் எக்காலத்திற்குமென திறக்கப்பட்டுள்ளது. திருச்சபை என்பது இவ்வாயிலைத் திறந்திட உதவும் கரம் போல விளங்குகிறது. அவள்தம் இறைவார்த்தை அறிவிப்பிற்கும், அவள்தம் திருவருட்சாதனங்களின் கொண்டாட்டத்திற்கும் அன்பின் வழியாய் செயலாற்றும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி (காண்க: கலா 5:6). ஆனால் இவ்வுலகமோ தமக்குத்தாமே விலகிச் செல்லவும், இறைவன் இவ்வுலகிற்கு வந்திடவும், உலகம் அவரிடம் வந்திடவும் பேருதவியாக இருக்கும் இவ்வாயிற்கதவை இழுத்துமூடிட எத்தனிக்கிறது. ஆகையால் இந்த வாயிற்கதவின்மீது உள்ள திருச்சபையின் கரம், கைவிடப்பட்டாலோ, நசுக்கப்பட்டாலோ, ஏன் காயப்படுத்தப்பட்டாலோ ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஏனெனில் நாம் அக்கறையில்லாதவர்களாகவும் நமக்குள்ளே விலகிக் கொள்ளா திருக்கும்படியும் இறைமக்களாகிய நமக்கு ஒர் உள்ளார்ந்தப் புதுப்பித்தல் அவசியம் தேவைப்படுகிறது. இந்தப் புதுப்பித்தலை இன்னும் ஆழமாக்க, நமது சிந்தனைக்கு மூன்று விவிலியப் பகுதிகளை வழங்க விழைகிறேன்.

1. ஓர்; உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும் (1 கொரி 12:26) – திருச்சபை
அக்கறையின்மை (iனெகைகநசநnஉந) என்று நமக்குள்ளாக விலகிக்கொள்ளுதலை இறைவனின் பேரன்பு சுக்குநூறாக தகர்த்தெறிகிறது. இந்த இறைவனின் அன்பை தமது போதனையின் வழியாகவும் சிறப்பாக திருச்சபைத்தம் சாட்சியத்தின் மூலமாகவும் வழங்குகிறது. நாம் நமக்கு நாமே எதனை அனுபவித்தமோ அதற்குத்தான் நம்மால் சான்று பகரமுடியும். நன்மை மற்றும் கருணை ஆகியவற்றை யார் தங்களுக்கு அணிவிக்க இறைவனை அனுமதிக்கிறார்களோ அவர்கள்தான் கிறிஸ்தவர்கள். அவர்கள் கிறிஸ்துவுடன், இன்னொரு கிறிஸ்துவாக மாறும் பொருட்டு, இறைவனுக்கும் மற்றவர்களுக்கும் தொண்டர்களாகிறார்கள். இதனை பெரிய வியாழன் அன்று நடைபெறும் பாதம் கழுவும் சடங்கின்போது ஒருவர் மற்றவரின் பாதங்களைக் கழுவுவதன் வழியாக தெளிவாகக் காண்கிறோம். பேதுரு, இயேசு தம் பாதங்களைக் கழுவ விரும்பவில்லை@ ஆனால் நாம் ஒருவர் மற்றவருடைய பாதங்களைக் கழுவிட வெறுமனே ஒர் முன்னுதாரணமாக மட்டும் இயேசு இருக்க விரும்பவில்லை என்பதை பேதுரு பின்னர் உணர்ந்தார். தாமே முன்வந்து இயேசு தங்களின் பாதங்களைக் கழுவ முதன்முதலில் அனுமதித்தவர்களால் மட்டுமே, இந்தத் தொண்டினை மற்றவர்களுக்கு வழங்க இயலும். அவரோடு ~பங்கு| (யோவா 13:8) கொள்பவர்களால் மட்டுமே மற்றவர்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்ற முடியும்.
தவக்காலம் என்பது கிறிஸ்து நமக்குத் தொண்டாற்ற அனுமதிக்கிற உகந்த காலம்@ அதன் மூலம் நாமும் அவரைப் போன்று மாறிட இயலும். நாம் இறைவார்த்தையைக் கேட்கிறபோதும் திருவருட்சாதனங்களைப் பெறும்போதும், குறிப்பாக நற்கருணையைப் பெறும்போதும் இது சாத்தியாமாகும். நாம் எதனைப் பெறுகிறோமோ அதுவாகவே மாறுகிறோம்@ கிறிஸ்துவின் உடலாகிறோம். நம் உள்ளத்தை இயல்பாக ஆக்கிரமிக்கும் அக்கறையின்மைக்கு இந்த உடலில் ஒருபோதும் இடமில்லை. கிறிஸ்துவுடன் யார் இருக்கிறார்களோ, அவர்கள் ஒரே உடலைச்சார்ந்தவர்கள்@ அவரில் நாம் ஒருவர் மற்றவரிடம் அக்கறையின்றி ஒருபோதும் இருக்க இயலாது. ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ~ஓர் உறுப்பு பெருமைப் பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் | (1 கொரி 12:26).
திருச்சபை என்பது புனிதர்களின் சமூகஒன்றிப்பு ஆகும்@ இது அவள் தம் புனிதர்களால் மட்டுமின்றி, புனிதப் பொருட்களோடு அவள் கொண்டுள்ள ஒன்றிப்பின் வழியாகவும் வருகிறது.ஏனெனில் இறைவனின் அன்பு கிறிஸ்துவுக்குள் நமக்கு வெளிப்படுத்தப்பட்டு, அவர்தம் கொடைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் அருட்கொடைகளில் இந்த அன்பினால் ஆட்கொள்ளப்பட அனுமதிக்கப்பட்டவர்களுடைய பதிலும் அடங்கியுள்ளது. இந்த புனிதர்களுடனான சமூக உறவில், புனிதப் பொருட்களின் பங்கினில் யாரும் தனக்கென்று எதனையும் கொள்வதில்லை@ ஆனால் மற்றவர்களோடு அனைத்தையும் பங்கிட்டுக்கொள்கிறார்கள். நாம் இறைவனோடு ஒன்றித்திருக்கிறோம்@ ஆகையால், வெகு தொலைவில் உள்ளவர்களுக்கும், நம்மால் ஒருபோதும் அடைய முடியாதவர்களுக்கும் நம்மால் ஏதாவது செய்ய இயலும். ஏனெனில், அவர்களோடும், அவர்களுக்காகவும் நாம் அவர்தம் மீட்புத்திட்டத்தில் செவிசாய்க்க நாம் இறைவனிடம் மன்றாட முடியும்.
2. எங்கே உன் சகோதரன்? (தொநூ 4:9) – பங்குகளும் சமூகங்களும்
அகில உலகத் திருச்சபையைப் பற்றி நாம் சொல்வதனைத்தும் நம்முடைய பங்குகளுக்கும் பங்குச் சார் இறைச் சமூகத்திற்கும் இப்பொழுது செயல்படுத்தப்பட வேண்டும். திருச்சபைச்சார்ந்த இந்தக் கட்டமைப்புமுறை நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்பு என்பதை அனுபவிக்க உதவுகிறதா? இறைவன் எதை நமக்குத் தர விரும்புகிறாரோ அதனை இந்த உடல் பெறுகிறதா? பகிர்கிறதா? பலவீனமானவர்களையும், ஏழைகளையும் மிகவும் ஒடுக்கப்பட்ட அங்கீகாரமற்றவர்களையும் இந்த உடல் அங்கீகரிக்கிறதா? பாதுகாக்கிறதா? நம் மூடப்பட்ட கதவருகே பசியோடு காத்திருக்கிற ஏழை இலாசரைக் கண்டுக்கொள்ளாமல், அகில உலகையும் ஆரத்தழுவுகிற உலகளாவிய அன்பில் நாம் அடைக்கலம் புகுகிறோமோ?
கடவுள் நமக்கு எதை தருகிறாரோ அதனைப் பெறும்பொருட்டும், அது மிகுதியாக கனிதரும்பொருட்டும், நாம் காணும் திருச்சபையின் எல்லைகளை இருவழிகளில் கடந்து செல்ல வேண்டும்.

முதலாவதாக, விண்ணுலகத் திருச்சபையோடு நாம் அனைவரும் செபத்தில் ஒன்றிக்க வேண்டும். இவ்வுலகத் திருச்சபையின் செபங்கள் பரஸ்பர சேவையிலும் நற்குணத்திலும் ஓர் ஒன்றிப்பை ஏற்படுத்தி, அது இறைவனின் அருட்பார்வையைச் சென்றடைகிறது. இறைவனில் முழுநிறைவை கண்டடைந்த புனிதர்களோடு நாமும் ஒன்றிணைந்து, நாமும் அந்த சமூக ஒன்றிப்பின் ஒர்; அங்கமாகி, நமது அக்கறையின்மையை நம் அன்பால் வெற்றிக்கொள்ள வேண்டும். இவ்வுலகத் துன்பத்திலிருந்து தப்பி, உயரிய தனிமையில் அக்களிக்கிற காரணத்தினால், விண்ணுலகத் திருச்சபை என்பது வெற்றித் திருச்சபையன்று@ மாறாக, இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாக, அவர்கள் அக்கறையின்மையையும், கடின உள்ளத்தையும், பகைமையையும் முன்பு வென்றெடுத்தததைத் தற்சமயம் அவர்கள் தங்கள் கண்முன் மகிழ்ச்சியாகக் காட்சித்தியானம் செய்கிறார்கள். இந்த அன்பின் வெற்றி இந்த உலகம் முழுவதையும் ஊடுருவுகிற வரை, புனிதர்கள் இத்திருப்பயணத்தில் நம்மோடு இணைந்து தோழமையோடு உடன் நடக்கிறார்கள். இவ்வுலகில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் துன்புற்று, அதன் வலியால் கதறுகிறவரை சிலுவையில் அறையப்பட்ட அன்பின் வெற்றி, இன்னும் முழுமையடையாமல் அப்படியே இருக்கிறது என்று மறைவல்லுநரான புனித குழந்தைத் தெரசாள் உறுதிப்பட கூறுகிறார். ~நான் விண்ணுலகில் ஒருபோதும் நான் சேம்பேறியாய் இருக்கமாட்டேன் என்று நான் உறுதி கூறுகிறேன். திருச்சபைக்காகவும் ஆன்மாக்களுக்காகவும் நான் தொடர்ந்த உழைக்கவேண்டும் என்பது என் விருப்பம்| என்று கூறுகிறார் (காண்க: மடல் 254, ஜூலை 14,1897)
நாம் புனிதர்களின் மகிழ்ச்சியிலும் அவர்கள் தம் நற்குணங்களிலும் நாம் பங்கெடுக்கிறோம்: அவர்களோ, சமாதானம் மற்றும் ஒப்புரவுக்கான நமது போராட்டங்களிலும் ஏக்கத்திலும் வாஞ்சையோடு பங்கெடுக்கிறார்கள். உயிர்த்த கிறிஸ்துவின் வெற்றியிலுள்ள அவர்களின் மகிழ்ச்சி நம்முடைய அக்கறையின்மையையும் உள்ளக்கடினத்தையும் வெற்றிக்கொள்ள நமக்கு வலிமையைத் தருகிறது.
இரண்டாவதாக, ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகமும் தன்னிலிருந்து வெளியே சென்று, அது ஓர் அங்கமாக விளங்கும் மிகப்பெரிய சமூகத்தின் வாழ்வில் குறிப்பாக ஏழைகளோடும் புறக்கணிக்கப்பட்டவர்களோடும் பங்கெடுக்கவேண்டும். திருச்சபை என்பது இயல்பாகவே மறைப்பரப்பாளராக விளங்குகிறது. அவள் தனக்குத்தானே ஒருபோதும் வேலி அமைத்துக்கொள்வதில்லை: மாறாக, உலகின் கடையெல்லைவரைக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் அனுப்பப்பட்டவளாவாள்.
இப்படைப்பனைத்தையும் ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் தந்தையிடம் இட்டுச்செல்ல விரும்புவருக்கு எப்போதும் சான்றுபகர்வதே அவள்தம் பணியாகும். அனைவருக்கும் அன்பைக் கொண்டுச் சேர்ப்பதே அவள்தம் பணியாகும்@ அந்த அன்பு ஒருபோதும் மௌனித்திருப்பதில்லை. ஒவ்வொரு ஆணிடமும் பெண்ணிடமும், உலகின் கடையெல்லை வரைக்கும் (திருத்தூதர்பணி 1:8) இட்டுச் செல்லும் பாதையில் கிறிஸ்துவை திருச்சபைப் பின்தொடர்கிறது. நம் அயலார் ஒவ்வொருவரிலும், கிறிஸ்து யாருக்காக இறந்து மீண்டும் உயிர்த்தரோ, அந்த சகோதரனையும் சகோதரியையும் நாம் காணவேண்டும். நாம் எதனைப் நமக்காகப் பெற்றுக்கொண்டோமோ அதனை நாம் அவர்களுக்காகவும் பெற்றுக்கொண்டோம். அவ்வண்ணமே, நம்முடைய சகோதர சகோதரிகள் உடமையாக்கியிருக்கிற அனைத்தும் திருச்சபைக்கும் ஒட்டுமொத்த மானுடத்திற்குமான கொடையாகும்.
அன்பான சகோதர சகோதரிகளே! திருச்சபை எங்கெங்கெல்லாம் நிறைந்துள்ளதோ, அவ்விடங்களிலெல்லாம், குறிப்பாக நம்முடைய பங்குகளிலும் நம்முடைய பங்குச்சார் சமூகங்களிலும் திருச்சபையானது, அக்கறையின்மை என்னும் கடலின் நடுவில் அமைந்துள்ள கருணையின் தீவுகளாக துலங்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
3. உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள் (யாக் 5:8)- கிறிஸ்தவர் ஒவ்வொருவரும்
ஒவ்வொருவரும் தனிநபர் என்ற வகையிலும்கூட, அக்கறையின்மையால் நாம் சோதிக்கப்படுகிறோம். மானுடத் துயரம் சம்பந்தப்பட்ட செய்திகளும், மனதைப் பாதிக்கும் புகைப்படங்களும், நமது ஆற்றாமையை நமக்கு அடிக்கடி உணர்த்துகிறது. இந்த அவலநிலையையும் ஆற்றாமையும் தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
முதலாவதாக, இவ்வுலகத் திருச்சபையோடும் விண்ணுலகத் திருச்சபையோடும் ஒன்றித்து நாம் செபிக்க வேண்டும். செபத்தில் இணையும் எண்ணிறந்த குரலை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதிருப்போமாக! ஆண்டவருக்காக 24 மணி நேரம் என்னும் இந்த முன்னெடுப்பு, அகில உலகத் திருச்சபை முழுவதும், மறைமாவட்ட அளவில், மார்ச் மாதம் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கடைப்பிடிக்கப்படும் என்று நம்புகிறேன்@ இது செபத் தேவைக்கான ஒர்; அடையாளமாக இது விளங்குகிறது.
இரண்டாவதாக, நம் அருகிலும், தொலைவில் உள்ளவர்களை, திருச்சபையின் எண்ணிறந்த தொண்டு நிறுவனங்கள் மூலமாக நமது கருணைமிக்கச் செயல்களால் நாம் உதவ முடியும். ஒரே மானுடக் குடும்பத்துடனான நமது சார்புத்தன்மையின் சின்னஞ்சிறிய ஆனால் மெய்யான இந்த அடையாளங்கள் வழியாக, நாம் அடுத்தவர்மீது கொண்டிருக்கிற அக்கறையை அன்பை வெளிப்படுத்த மிகவும் உகந்த காலம் இத்தவக்காலம் ஆகும்.
மூன்றாவதாக, மற்றவருடைய துயரம் என்பது மனமாற்றத்திற்கான ஒர் அழைப்பு@ ஏனெனில் அவர்களுடைய தேவை எனது வாழ்வின் நிலையாமையையும், இறைவனையும், எனது சகோதர சகோதரிகளையும் நான் சார்ந்துள்ளதையும் எனக்கு நினைவுப்படுத்துகிறது. நாம் இறையருளை மனத்தாழ்மையோடு இறைஞ்சி, நமது சொந்தக் குறைகளை ஏற்றுக்கொண்டால், இறைவனின் பேரன்பு நமக்கு உறுதியளிக்கிற முடிவில்லாத சாத்தியங்களில் நாம் நம்பிக்கைக் கொள்வோம். நமது சொந்த முயற்சியின் மூலமாகவே இவ்வுலகையும் நம்மை நாமேயும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று சிந்திக்கும் கொடிய சோதனைகளை நாம் எதிர்த்து நிற்க நம்மால் இயலும்.
இந்த அக்கறையின்மையையும் தன்னிறைவுக்கான நமது வெளிவேடங்களையும் வெற்றிக்கொள்ளுகிற வகையில், இந்தத் தவக்காலத்தை, பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் குறிப்பிடுகிற உள்ளத் தயாரிப்பில் (காண்க:னுநரள ஊயசவையள நளவஇ 31) முனைப்போடு ஈடுபட ஒரு வாய்ப்பாக இந்தத் தவக்காலத்தை வாழ்ந்துக் காட்ட நான் ஒவ்வொருவரையும் மனமுவந்து அழைக்கிறேன். கருணைமிக்க உள்ளம் என்றால் அது பலவீனமான உள்ளம் என்று அர்த்தமல்ல. கருணைமிக்கவர்களாக இருக்க எவர் விரும்பினாலும், அவர் சோதிப்பவரை புறந்தள்ளி, ஆனால் இறைவனுக்கு மனம் திறக்கும் உறுதியான, தடுமாற்றமில்லாத உள்ளத்தைக் கொண்டிருக்க வேண்டும். தூய ஆவியால் ஊடுருவப்பட தன்னைத்தானே அனுமதிக்கிற உள்ளமே, நமது சகோதர சகோதரிகளிடம் இட்டுச் செல்லும் இந்தச் சாலைகள் வழியாக அன்பைக் கொணர்ந்திடும். இறுதியாக, தனது ஏழ்மையை உணரும் ஏழை உள்ளம், மற்றவர்களுக்காக தன்னையே தாரளமாக வழங்கும்.
இந்தத் தவக்காலத்தில், அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இறைவனிடம் இறைஞ்சுவோமாக! ~எங்களுடைய இருதயத்தை உம் இருதயம் போல் ஆக்கியருளும்!| (திரு இருதய மன்றாட்டு மாலை). இவ்வாறு, நாம் உறுதியும் கருணையுமிக்க, விழிப்புணர்வுமிக்க, பரந்த மனப்பான்மையுள்ள, மூடப்படாத, பாரபட்சமில்லாத அல்லது உலகமயமாகிய அக்கறையின்மைக்கு பலியாகாத ஒர்; உள்ளத்தைப் பெற முடியும்.
இத்தவக்காலம் ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒவ்வொரு திருச்சபைச்சார் சமூகத்திற்கும் ஆன்மீகளவில் பலன் தரக்கூடியதாக அமைந்திடும் என செபத்தின் மூலம் நம்புகிறேன். எனக்காகச் செபிக்கும்படி உங்கள்அனைவரையும் வேண்டுகிறேன். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! அன்னை மரியாள் உங்களைப் பாதுகாப்பாராக!

 

 

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்
வத்திக்கான்

 

Link to comment
Share on other sites

https://www.youtube.com/watch?v=a1DQ5QIOiAw

 

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்

மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே

 

பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

 

மரணம் வருவதை மனிதன் அறிவானோ
தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ

 

இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.