Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

தவக்கால நற்சிந்தனைகள்....


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தவக்காலம் மிகவும் முக்கியமான ஒரு காலம். சாம்பல் புதன் தொடங்கி உயிர்ப்பு பெருநாள் வரை இந்த தவக்காலம் அமைகிறது.

                               ஒவ்வோர் ஆண்டும் நாம் கடைபிடிக்கும் இந்த வழிபாட்டு காலத்தைப் பற்றிய நமது எண்ணங்களை இந்த சிந்தனையின் துவக்கத்தில் சிறிது ஆழப்படுத்த முயல்வோம். தமிழில் நாம் தவக்காலம் என்று அழைப்பதை ஆங்கிலத்தில் Lenten Season என்று அழைக்கிறோம். Lenten என்ற வார்த்தை Lencten அல்லது, Lengten என்ற Anglo Saxon வார்த்தையில் இருந்து வந்தது. அதன் பொருள் வசந்தம். அதாவது, வசந்தம் வருகிறது என்ற எண்ணத்தை சொல்வதற்கு, Lengten அல்லது Lencten என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. தவக்காலத்தை ஒரு வசந்த காலமாக எண்ணிப் பார்ப்பது ஓர் அழகான எண்ணம். புதுமையான எண்ணம். பொதுவாக. தவக்காலம் என்றதும் சாம்பல். சாக்குத்துணி. சாட்டையடி என்று சோகமான, துயரமான அடையாளங்கள் மனதை நிரப்பும். ஆனால். தவக்காலம் வசந்தத்தைக் கொண்டுவரும் புதியதொரு ஆரம்பம் என்ற பொருளிலும் பாப்பது நல்லது. ‘வசந்தம்’ கேட்பதற்கு அழகான சொல். அழகான எண்ணம். உண்மைதான். ஆனால் அந்த வசந்தம் வருவதற்கு முன் மாற்றங்கள் வேதனைக்குரிய மாற்றங்கள் நடைபெற வேண்டும். மாற்றங்கள் என்றதும், முற்றிலும் அழிந்துபோன ஒன்று மீண்டும் உயிர்பெறுவதும் ஒரு மாற்றம்தானே.
                      மழைக் காலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பிக்கும் போது மரம் செடி கொடி போன்றவற்றில் உள்ள இலைகள் உதிர்ந்து ஒரு வெறுமையான தோற்றம் காணப்படும்.பிறகு வசந்த காலம் ஆரம்பிக்கும் போது மீண்டும் அந்த மரம் செடி கொடிகளில் புதிய தளிர்கள் தோன்ற ஆரம்பிக்கும். பிறகு அவைகள் அனைத்தும் செழிப்பாக காணப்படும். அதுபோல நாமும் இந்த தவக்காலத்தில் நம்மை ஜெப,தவ முயற்சிகளால் நம்மில் உள்ள பழைய கெட்ட பழக்கங்களை உதறி விட்டு புதிய மனிதர்களாய்.மாற முயற்சி செய்வோம்.

                          தவக்காலத்தைப் புத்துயிர் தரும் வசந்தகாலம் என்ற வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதுபோல், சோதனைகளைப் பற்றியும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம். சோதனை என்ற வார்த்தையைக் கேட்டதும், நம்மில் பலருக்கு அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் போல் தோன்றலாம். அவ்வளவு பயம். ஆர அமர சிந்தித்தால், சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய அம்சம், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மைகளை நாம் உணரலாம். இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
                                போதை, மது, பேராசை, பதவிவெறி என்று நம் வாழ்வைச் சுற்றி வருபவை நச்சுப் பாம்புகள் என்று தெரிந்தும் அவற்றைத் தூக்கி கடிபடுகிறோமே!  சோதனைகளை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? தப்பித்துக் கொள்ள முடியாத அளவு பெருகியுள்ள ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவது போல நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட எண்ணங்களை நாம் வளர்த்துக் கொள்வதால், சோதனைகளுக்கு ஓர் அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். சோதனைகளுக்கும் அவற்றின் மூல காரணமான தீய சக்திகளுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை.
                  சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ்மனதில் உள்ள தீய நாட்டங்கள் மிருக உணர்வுகள் இவைகளைத் தட்டி எழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அவற்றை எதிர்த்து நிற்கவும், அவைகளோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும் உறுதியான மனமும் உள்ளன. இதையும் நாம் நம்ப வேண்டும்.
                   நாம் வாழும் உலகில் நல்லவைகளும் ஆக்கப்பூர்வமான செயல்களும் நடக்கின்றன. தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால் ஒரு சாபக்கேடாக நமது செய்தித் தாள்கள் தொலைகாட்சி வானொலி என்று அனைத்துத் தொடர்புச்சாதனங்களும் பெருமளவில் அழிவையே நமக்குப் படங்களாக கதைகளாகச் சொல்லி நம் மனதை உருக்குலைய வைக்கின்றன. வசூலுக்குச் சுவையானவை இந்தக் கோரங்கள்! ஆனால் வாழ்க்கையில் இவை உண்டாக்குவது விபரீதங்கள். இவைகளையே ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்க்கும் போது "ச்சே, என்னடா உலகம்" என்ற எண்ணம் ஆழமாகப் பதிகிறது.
                     இப்படி ஓர் இயலாத்தன்மை நமக்கு ஊட்டப்படும் போது இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு பிரமை ஒரு மாயை நம்மில் வளர்கிறது. இதுவே இன்று நம் மத்தியில் உள்ள பெரிய சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும். இயேசு சோதனைகளைச் சந்தித்தது அவைகளை வென்றது நமக்கு நல்லதொரு பாடமாக அமைய வேண்டும்.
                    இயேசு தமது பணியைத் தொடங்கும் முன் நாற்பது நாட்கள் நோன்பு இருந்து இறைவேண்டல் செய்தார். அவரைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களும் தங்கள் தவ முயற்சிகள் மூலம் இறைவனின் பணியை செய்ய தங்களைத் தயார் செய்கிறார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

 • கிறிஸ்துவின் பாடுகளை தியானம் செய்தல் அல்லது
 • சிலுவைப்பாதை செய்தல் மற்றும்
 • திருப்பலியில் அதிக அளவில் பங்கேற்றல்
                     ஆகியவை தவக்காலத்தின் சிறந்த பக்தி முயற்சிகள் ஆகும். உடல் மன கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுதல் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல் போன்றவையும் சிறந்த தவ முயற்சிகள் ஆகும்.
 

                   "மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். "


                    "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்."


என்று நம் ஆண்டவர் நமக்கு அறிவுறுத்தியது போல நாமும் வாழ்ந்து இறையரசை பற்றிக்கொள்வோம்.

 

நன்றி:
http://raktamilcatholic.blogspot.ca/2014/03/blog-post_5042.html

 

 

 

Link to post
Share on other sites
 • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கிருபனிட்டயும் துல்பனிட்டயும் ஒருக்காச் சொல்லச் சொல்லுங்கோ இலங்கை புலம் பெயரிகளுக்கு சரியான வழிகாட்டலாக யாரைக் கை காட்டுவீர்கள் எண்டு.  அதை ஒருக்கா சொல்லச் சொல்லுங்கோ பார்ப்போம். (துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு ஓடிவிடுவினம்)  
  • அல் அக்­ஸா மீதா­ன இஸ்ரேலின் மிலே­ச்­சத்­த­ன­மா­ன தாக்­கு­தல்­களை வன்­மை­யாகக் கண்­­டிக்­கி­றோம் பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு   http://www.vidivelli.lk/wp-content/uploads/2021/05/SLCSP.pngஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்­ளி­வா­ச­­லில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படையினர் மற்றும் பொலிஸாரினால் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலுக்கு பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்­ளது. பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர் பிமல் ரத்­நா­யக்­க, பொதுச் செய­லாளர் பெளசர் பாரூக் ஆகியோர் இணைந்து வெளி­யிட்­டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்­பி­­டப்­பட்டிருப்பதாவது: ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்­ளி­வா­ச­லில் ரமழானை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படையினரால் கடந்த வாரம் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை வன்­­மை­யாகக் கண்­டிக்­கி­­றோம். அது மாத்திரமன்றி கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷெய்க் ஜர்ராவிற்கு அருகில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்களை சட்டத்திற்கு முரணாக வெளியேற்றுவதற்கும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுவுவதற்குமான முயற்சிகளையும் கண்டிக்கின்றோம். சர்வதேச ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் பலஸ்தீனத்திலிருந்து வெளிவரும் செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் நோக்குகையில், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப்பிரயோம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் பள்­ளி­வா­ச­லுக்குள் இறப்பர் குண்டுகளும் கைக்குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலின் காரணமாக நோன்பு மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையன்று தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்களில் சுமார் 200 பேர்வரையில் காயமடைந்துள்ளனர். இந்த மிகமோசமான மனிதத்தன்மையற்ற அத்துமீறிய தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். பல தசாப்தகால சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றங்களின் அண்மைக்கால பேசுபொருளாக மாறியிருக்கும் ஷெய்க் ஜர்ராவை அண்மித்த பகுதிகளிலும் இஸ்ரேலியப் படையினரின் இந்த நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் இஸ்ரேலியக் குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமானக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானவையாகும். எனவே இஸ்ரேலியப் படைகளின் இந்த மனிதத்தன்மையற்ற செயற்பாட்டைக் கண்டித்துவரும் உலக நாடுகளுடன் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அத்தோடு ஜெருசலேமிலுள்ள அல் அக்ஸா உள்­ளிட்ட புனித தலங்­களின் காவ­லர்­கள் என்ற அடிப்படையில் இது விடயத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று ஜோர்தானைக் கோருகின்றோம். மேலும் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பாளர்கள் சர்­வ­தேச சட்­டங்­களை மதித்து நடக்க வேண்­டும் என்றும் ஐக்­கிய நாடுகள் சபை பலஸ்­தீன மக்­கள் எதிர்­நோக்­கி­வரும் பிரச்­சி­­னை­களை முடி­­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான தனது பொறுப்­புக்­களை நிறை­வேற்ற முன்­வர வேண்­டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   http://www.vidivelli.lk/article/10697
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • 2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது -வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள். 2009 மே 09 சனிக்கிழமை இரவு மற்றும் 10.05.2009  ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மற்றும் , கனொன் பீரங்கித்தாக்குதல்களை தொய்வின்றி செறிவாக மேற்கொண்டதில் 1200 க்கு மேற்பட்ட இறந்த பொதுமக்களின் உடல்களை தாங்கள் எண்ணியிருப்பதாக வன்னியிலிருந்து தெரியவந்தது ஆனாலும் இன்னும் எண்ணி முடிக்காமல் நிறைய உடல்கள் அங்காங்கு கிடக்கலாம் என்றும் அச்சம் நிலவியது அதேவேளை படுகாயமடைந்து 1122 பேரும் இறந்த உடல்களாக  378 பேரும்  வைத்தியசாலைக்கு கொண்டவரப்பட்டதாகவும் இறந்தவர்களில் 106 பேரும் காயமடைந்தவர்களில் 251 பேரும் குழந்தைகள் என வைத்தியசாலை ஊழியர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் காயமடைந்தும் இறந்தும் போனவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவும், மதியவர்களாகவும் இரந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தவண்ணம் இருப்பதுடன் உண்மையான எண்ணிக்கையை கூட கணக்கிடமுடியாத அளவிற்கு  குறுகிய நாட்களுள்  பேரினவாத சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெரும் மனித படுகொலையாகவும் அது மாறிவருவதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.  இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மாற்றப்படுவதற்கு முன்னர் இந்தப்“ போரை முடிக்க  வேண்டும் என இந்தியா விரும்பியதாலேயே வகை தொகையின்றி  தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்              https://www.thaarakam.com/news/458f6bc5-da0e-4c50-a8e3-09da7b429def
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.