Jump to content

ஜிந்துபிட்டி புனிதர் தோமாவின் ஆலயம்: இரண்டாயிரம் ஆண்டுகளாக இறைபிரசன்னத்தை உணர்த்தும் திருத்தலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

011_0.jpg

 

கொழும்பு - 13, ஜிந்துபிட்டி வீதியில் உள்ள குன்றின் மீது அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி புனிதர் தோமாவின் திருப்பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் அமைந்துள்ளது.
 
இலங்கை திருச்சபைக்கு (அங்கிளிக்கன்) இவ்வாலயத்தின் கட்டிடம் உரியதாக 1815 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட போதிலும் இரண்டாயிரம் ஆண்டுகால நீண்ட வரலாற்றை கொண்ட தலமாக காணப்படுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த புனிதர் தோமா, இக்குன்றின் மீது அமர்ந்து மீனவர்களுக்கு பிரசங்கித்ததாகவும் கிறிஸ்தவ வரலாறு கூறுகிறது.
 
இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான தோமா இயேசுவோடு அவரது திருப்பணியில் அவரது சீடராக பங்கேற்றாலும் இயேசுவின் மரணத்தின் பின்பான உயிர்தெழுதலை நம்பாத ஒருவராகவே இருந்தார். உயிர்த்தெழுந்த கிறிஸ்து சீடர்களைச் சந்தித்தபோது புனிதர் தோமா அவர்களுடன் இருக்கவில்லை.
 
ஏனைய சீடர்கள் "உயிர்த்த இயேசுவை கண்டோம்" என மகிழ்ச்சியுடன் கூறியபோது அதைப் புனிதர் தோமா நம்பவில்லை. "ஆணிகளால் கடாவப்பட்ட அவரது கரங்களையும் கால்களையும் ஈட்டி பாய்ந்த விலாவையும் தொட்டாலொழிய நம்ப மாட்டேன்" என பிடிவாதமாக இருந்தார். இதனாலேயே தோமாவிற்கு சந்தேக தோமா (Doubting Thomas) என்கிற பெயர் உண்டாயிற்று. இருப்பினும் இவரது அறியாமையை அறிந்த உயிர்த்த இயேசு கிறிஸ்து, இவர் முன் தோன்றி தனது காயங்களின் தழும்புகளை காட்டியதாகவும் அதில் கைபோட்டு தொட்டுப்பார்க்க பணித்ததாகவும் தனது அறியாமையை உணர்ந்த புனிதர் தோமா அவர் கால்களில் வீழ்ந்து "என் ஆண்டவரே, என் தேவனே" எனக் கதறி, அவரின் பாதங்களை பற்றிக் கொண்டு இறை மகன் இயேசுவின் பணிக்கு தம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்ததாகவும் திரு விவிலியத்தில் காணலாம்.
 
இயேசுவின்பால் அன்பு கொண்டு அவரின் நற்செய்தி பணிக்கு தன்னை அர்ப்பணித்து, ஆசிய - பெர்சிய நாடுகளில் கிறிஸ்துவைக் குறித்து பிரசிங்கித்ததாக கிறிஸ்தவ வரலாறு கூறுகிறது. இந்தியாவில் நற்செய்தி பணியின் முன்னோடியாக புனிதர் தோமா அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவில் இயேசுவைப் பிரசங்கித்து அங்கேயே மரித்ததாகவும் அவரது கல்லறை சென்னையிலுள்ள மயிலாப்பூர் புனித தோமையார் ஆலயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து புனிதர் தோமா இலங்கை வந்ததாகவும் கடற்கரையை அண்மித்த பகுதியான ஜிந்துபிட்டி குன்றின் மீது அமர்ந்து மீனவர்களுக்கு பிரசங்கித்ததாகவும் இலங்கை கிறிஸ்தவ வரலாறு கூறுகிறது.
 
அவரது திருக்கரங்களாலேயே ஒரு சிலுவை செய்யப்பட்டதாகவும் அது ஜிந்துபிட்டியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வரலாற்றை இலங்கை கத்தோலிக்க திருச்சபை உட்பட அனைத்து திருச்சபைகளும் ஏற்றுகொள்கின்றன. புனிதர் தோமாவின் வருகைக்கு பின்பு பெர்சிய நெஸ்டோரிய கிறிஸ்தவ குழுக்கள் இலங்கையில் குடியேறியதாகவும் அவர்களின் வழிபாட்டு தலமாக இக்குன்று விளங்கியதாகவும் கூறப்படுகிறது.
 
 
001_3.jpg
 
 
007.jpg
 
 
010_0.jpg
 
 
 
 
 
கி.பி நான்காம் நூற்றாண்டில் பெர்சிய கிறிஸ்தவர்களின் துறவற தலைவராக குரு. சாதோக் (Persian Priest Biographer) புனிதர் தோமாவின் துறவறத்தின் இந்தியப் பணியின் தலைவராக இருந்ததாகவும் அவரும் இப்புனித தலத்திற்கு வருகை தந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. (ஆதாரம்:Labourte s book - Le Christianismedans L Empire Perse) இங்கு குடியேறிய பெர்சிய கிறிஸ்தவர்களின் ஆன்மீக பணிகளை குரு. சாதோக் இந்தியாவிலிருந்து மேற்பார்வை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஐந்தாம் நூற்றாண்டில் (கி.பி 522) கடலோடியாக பயணம் செய்த கிரேசியோ எகிப்திய பயணியாகவும் வியாபாரியாகவும் விளங்கிய கொஸ்மோஸ் இன் டிகோபுளுயஸ்டஸ் (Cosmos Indicopleustes) இந்து சமுத்திரத்தில் உள்ள தப்பிரபேன் தீவில் சில கிறிஸ்தவர்களும் ஆலயமும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம்: Christian Topography Book - iii)
 
இதையே அரேபிய பயணி அபு செயித் ஹசன் (Abou zaid Harsan, 851 - A.D), இலியஸ் (Elias, 890 - A.D) இட்றிசி (Edriai, 1154 - A.D) ஆகியோரும் குறிப்பிடுகின்றனர். இவர்கள் குறிப்பிடும் கிறிஸ்தவ ஆலயம் ஜிந்துபிட்டிக் குன்றின் மீது அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது.
 
ஆகவே தொடர்ந்தும் பேர்சிய கிறிஸ்தவ குடியேற்ற வாசிகளின் வழிபாட்டுத் தலமாக பலநூறு ஆண்டுகளாக இக்குன்று அமைந்திருந்தமை உறுதியாகிறது. போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றியபோது தற்போதைய ஜிந்துபிட்டியில் அமைந்துள்ள இந்தக் குன்றின் மீது தேவாலயத்தைக் கட்டினர். அத்தோடு இங்கிருந்த பிரான்சிஸ்கன் துறவற மையத்தையும் அத்துறவற அமைப்பையும் மீளாக்கம் செய்தனர்.
 
இந்நூலில், இவ்வாலய வளாகத்தில் வாழ்ந்த பிரான்சிஸ்கன் துறவியர் ஹொரண பிரதேசத்தில் தனித்து விடப்பட்ட இரண்டு குழந்தைகளுக்காக இல்லத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒல்லாந்தரின் வருகையின் வரை இப்பிரதேசம் (Santhum piti) சான்தொம் பிட்டி என் அழைக்கப்பட்டது.
 
போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்ட அழகிய ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கிய ஒல்லாந்தர், கொழும்பு பிரதேச கடற்கரைக்கு அண்மித்த உயர்ந்த இடங்களைக் கைப்பற்றினர். ஆலயத்தை இடித்த ஒல்லாந்தர் இக்குன்றின் மீது மூன்று மயானங்களை அமைத்தனர்.
 
ஒன்று அடிமைகளுக்காகவும் மற்றையது உள்ளுர் வாசிகளுக்காகவும் மற்றொன்று கடவுளை அறியாத மனிதர்கள் அல்லது ஒல்லாந்தரை எதிர்த்தவர்களுக்காகவும் அமைக்கப்பட்டன. ஒல்லாந்தர்களை ஏற்றுகொள்ளாதவர்களை ஒல்லாந்து மொழியில் (Genthu) ஜிந்து என அழைப்பர்.
 
இதற்கு அமைவாகவே சான்தோம் பிட்டி என்ற பெயர் ஜிந்துபிட்டி என மாற்றம் பெற்றது. ஆங்கிலேயரின் வருகையோடு மலபார் அல்லது தமிழ் கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயரின் அங்கிளிக்கன் பாரம்பரியத்திற்கு மாற்றம் பெற்றனர். அவர்கள் இக்குன்றின் மீது ஆலயம் அமைக்க முயற்சித்தனர். இதற்கு அமைவாக அந்நாட்களில் அவர்களால் ஆலயம் அமைக்க 806 டொலர்கள் சேகரிக்கப்பட்டது.
 
தமக்கென தனியாக ஆலயம் அமைக்க அவர்கள் ஆங்கிலேயரை அணுகினர். அதற்கு அமைவாக அன்றைய பிரித்தானிய ஆளுநர் சேர் ரொபட் பிரவுன் ரிக் அவர்களின் மேற்பார்வையின் கீழ் தற்போதைய ஆலயம் 1815 ஆம் ஆண்டு கோதிக் கட்டிட முறையில் கட்டப்பட்டது. பெருமைக்குரிய இத்தனை பழைமை வாய்ந்த இத்திருத்தலமானது கொழும்பு மாநகரின் சந்தடிக்கு மத்தியிலும் இன்றும் அமைதியாக இக்குன்றின் மீது அமைந்திருப்பது இறை பிரசன்னத்தை உணர வைப்பதாக அமைகிறது. இவ்வாலயத்தில் நுழையும் போதே மன அமைதியும் பக்திப்பரவசமும் இறையுணர்வும் ஒரு விதமான புனித நிலைக்கு நம்மை அழைத்து செல்வதாகவும் அமைகின்றது.
 
இரண்டாயிரம் ஆண்டுகளாக இறை பிரசன்னத்தை உணர்த்தும் இக்குன்றின் ஒவ்வொரு கல்லும் மண்ணும் புனிதமானதுதான். ஏனெனில் இது புனிதர்களின் பாதம்பட்ட மண்தானே! ஜிந்துபிட்டி புனிதர் தோமாவின் ஆலய கட்டிட முறையானது பண்டைய கோதிக் முறையில் கட்டப்பட்டதாகும். கொரிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் தோமஸ் நாம் 2011 ஆம் ஆண்டு இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்தபொழுது இவ்வாலயத்தின் கட்டிட தோற்றத்தைப் பார்த்து ஆசியாவிலேயே புனிதர் தோமாவில் பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஏழு ஆலயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்றார்.
 
புனிதர் தோமாவினால் நிர்மாணிக்கப்பட்ட அனைத்து ஆலயங்களும் கடற்கரையோரமாக குன்றின் மீதே அமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள அனைத்து ஆலயங்களும் இவ்வாலயத்தை ஒத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கமைய தோமா தான் வருகை தந்த அனைத்து நாடுகளிலும் அந்நாடுகளின் கடற்கரையை அண்மித்த குன்றுகளிலேயே இயேசுவைக் குறித்து பிரசங்கித்ததாகவும் இப்பேராசிரியர் தெரிவித்தார். பேராசிரியர் தோமஸ்நாம், புனிதர் தோமா குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல நூல்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
005_1.jpg
 
 
006_0.jpg
 
 
008_0.jpg
 
 
 
 
ஆலயத்தில் காணப்படும் நினைவுச்சின்னங்களும் கல்வெட்டுக்களும் ஜிந்துபிட்டி புனிதர் தோமாவின் ஆலயத்தில் காணப்படும் அநேகமான கல்வெட்டுக்களும் நினைவுத் தூபிகளும் இற்றைக்கு ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாக காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்களும் நினைவு தூபிகளும் அன்றைய காலத்து மக்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் பிறநலசேவையையும் பறைசாற்று கின்றனவாய் அமைகின்றன. இக்கல் ஆலயத்தின் கட்டிட கலை வெட்டுகளில் பிரதானமான ஒன்று நம் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
 
இக்கல்வெட்டு பண்டைய தமிழ் மொழியில் அழகாக செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இக்கல்வெட்டு 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இதில் ஓர் இளம் தமிழ் வாலிபன் தன்னுடைய தாய் நாட்டின் மீது கொண்ட பற்று மற்றும் பாசத்தின் காரணமாக தாய் நாட்டைக் காக்க அன்னிய ஆக்கிரமிப்பாளர்களுடன் போராடி கடலில் உயிர் துறந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டில் இந்த இளைஞனின் வீரமும் அவன் தாய் நாட்டின் மேல் கொண்ட தீராத காதலையும் பாசத்தையும் பற்றையும் குறித்து சிறப்பாகச் சிலாகித்து எழுதப்பட்டுள்ளது.
 
வாசிப்போரை இது மெய்சிலிர்க்க வைக்கின்றது. தொன்று தொட்டு தமிழர்கள் தம் தாய் நாட்டின் மீது கொண்ட விசுவாசத்தை இது பறை சாற்றுவதாக அமைகின்றது.இக்கல்வெட்டுகளிலும் நினைவுச் சின்னங்களிலும் முக்கியமானவைகள் போக, சில கடற்கொள்ளையர்களின் சின்னங்களும் பதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒல்லாந்தரின் காலத்திற்குரியவையாக இவை இருப்பதைக் காண்கின்ம். அண்மையில் நெதர்லாந்து தேசத்தை சேர்ந்த வரலாற்றாசிரியர் ஒருவர் இவ்வாலயத்திற்கு வருகை தந்த போது, இக்கல்வெட்டுகளையும் நினைவுச்சின்னங்களையும் ஆராய்ந்தார். அப்போது வரலாற்றுச் சிறப்பு மிக்க முக்கியமான புதிய விடயம் ஒன்றைக் கண்டுபிடித்தார். இங்கிருக்கும் கல்வெட்டுகளில் ஒன்று நெதர்லாந்து தேசத்தின் கடலோடியான சாந்தா பவுலோஸ் என்பவருடையதாகும்.
 
002_4.jpg
 
 
003_4.jpg
 
 
சாந்தா பவுலோஸ் இலங்கை கடற்பரப்பில் ஒல்லாந்தரின் காலப்பகுதியில் மரித்திருக்கலாம் எனவும் இதுவரைகாலமும் இவரது மறைவு பெரிய புதிராக இருந்ததாகவும் அவரது கல்வெட்டு அவர் இலங்கைக் கடற்பரப்பில் மரித்ததை உறுதிசெய்வதாகவும் கூறி வியந்தார். இவ்வாலயத்தைச் சுற்றிலும் காணப்படும் கல்வெட்டுகளில் இறந்தவரின் பெயருடன் அவர் இறந்த நேரம், நாள், ஆண்டு என்பவை மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளமை இக்கல்வெட்டுகளுக்கும் நினைவு தூபிகளுக்கும் உள்ள தனித்துவமாகும்.
 
நினைவுத்தூபிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது போர்த்துக்கேயரின் காலத்தில் அவர்களின் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய நட்டாலியா என்ற பெண்ணுடையதாகும். இவர் அன்று கொழும்பில் வாழ்ந்த தமிழ் சமூகத்தின் பிரதிநிதியாக இருந்த புள்ளேநாயகம் என்பவரின் மகளாக கருதப்படுகிறார். இவரது கணவரான ரொட்ரிகோ சேன என்பவரும் போர்த்துக்கேயரின் அரசாங்கத்தில் முக்கிய பதவி வகித்தவராக கூறப்படுகிறது. இன்னுமொரு நினைவு தூபி பெயர் அழிந்த நிலையில் காணப்படுகிறது.
 
இதுவும் இற்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்ததாகும். கல்வெட்டுகளிலும் நினைவுதூபிகளிலும் நம் நாட்டிற்குரிய அலங்கார சின்னங்கள், மக்களின் வாழ்வியலோடு இணைந்த சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பல கல்வெட்டுக்கள் அழிவுற்றாலும் புராதன பொருட்கள் சிதைவுற்றாலும் இவைகள் பண்டைய மக்களின் அர்ப்பணிப்பையும் பணியையும் பறைசாற்றுமென்பதில் ஐயமில்லை.
 
-அருட்பணி சந்திரன் கிறிஸ்பஸ்-
படப்பிடிப்பு ஜோய் ஜெயக்குமார்
 
Link to post
Share on other sites

இயக்கர் நாகர்கள் எல்லாம் கிறித்தவர்களாய் இருந்திருப்பார்களோ ?????

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
புரியவில்லையே...
 
கிறிஸ்தவ மதம் பிறந்து 2015 வருடங்கள்.
 
உருவான 15 வருடங்களில் தோமா இலங்கை வந்தாரா??  :rolleyes:
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாராச்சும் போனடிச்சு கேட்டு பாருங்க. 0094 11 243 5743

http://www.lassanaflora.com/churches-page/

Link to post
Share on other sites

என்ன நாதமுனி நீங்கள் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. நான் நினைக்கிறேன் ஆங்கிலேயர் போனதன் பின்னர் தான் யாரோ இந்துமதத்தைப் பரப்பியிருக்க வேண்டும் ஈழத்தில்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நாதமுனி நீங்கள் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. நான் நினைக்கிறேன் ஆங்கிலேயர் போனதன் பின்னர் தான் யாரோ இந்துமதத்தைப் பரப்பியிருக்க வேண்டும் ஈழத்தில்

 

அப்ப புத்தமதத்தை மகிந்தா பரப்பியிருப்பாரோ

Link to post
Share on other sites

அப்ப புத்தமதத்தை மகிந்தா பரப்பியிருப்பாரோ

 

சீச் சீ பண்டாரநாயக்காதான் பரப்பி இருப்பார்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சீச் சீ பண்டாரநாயக்காதான் பரப்பி இருப்பார்

 

 

ஓம்...உண்மை உண்மை....என்ரை கண்ணாலை கண்டனான்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இயேசு எனப்படும் நபர் உண்மையில் வாழ்ந்தவரா?

எவ்வித ஆதாரமும் இல்லத கதைகள் மட்டுமே, சுவிசேஷங்கள்.

 

கிறிஸ்துவம் மிக மெதுவாக வளர்ந்த மதம், 10000 பேர் கிறிஸ்துவர் ஆனது, பொ.கா. 130 வாக்கில் தான், அப்படியிருக்க அவர் சீடர் இந்தியா வந்தார், இலங்கை வந்தார் எனக் கதை பரப்பல் அவசியமற்றது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இயேசு எனப்படும் நபர் உண்மையில் வாழ்ந்தவரா?

எவ்வித ஆதாரமும் இல்லத கதைகள் மட்டுமே, சுவிசேஷங்கள்.

 

கிறிஸ்துவம் மிக மெதுவாக வளர்ந்த மதம், 10000 பேர் கிறிஸ்துவர் ஆனது, பொ.கா. 130 வாக்கில் தான், அப்படியிருக்க அவர் சீடர் இந்தியா வந்தார், இலங்கை வந்தார் எனக் கதை பரப்பல் அவசியமற்றது.

 

சிறிலங்காவுக்கு ராமர் வரலாம் என்றால்,ஜெசுவின் சீடரும் வந்திருக்கலாம் என நம்புவோக.....ஆமேன்...:D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வெறும் நம்பிக்கை கதை எனில் என்னவேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் தன்னிடம் உள்ள பணத்தில், தோமா வந்து சொல்லித் தந்த அறிவில் திருவள்ளுவர் குறள் எழுதினார், அதிலிருந்து தான் சைவமும் வைஷ்ணவும் வந்தது எனப் புனைவதால் வரலாற்று நோக்கில் மறுக்க வேண்டியுள்ளது. 

 

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

http://www.jeyamohan.in/600

 

சாந்தோம் சர்ச் பரப்பும் புனித தோமா பொய் புரட்டுகளும் -தவிக்கிறது தான் செய்த சூழ்ச்சிகளாலும்
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.