Jump to content

எதனால் மனிசர் இப்பிடி .........

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சிறியவர்களாக இருக்கும் போது எம்மைப் பண்புடன் தான் பெற்றவர் வளர்க்கின்றனர். துணிவு வேண்டும், நேர்மை வேண்டும், தவறைச் சுட்டிக்காட்ட வேண்டும், பொய் சொல்லாதே இப்படி ...... சமூகத்துக்கும் தனி மனிதருக்கும் தேவையான நல்லவற்றையே சொல்லிச் சொல்லி வளர்த்தாலும், வளந்த பின்னர் பல தீய குணங்களின் வடிவங்களாக பலர் மாறிப்போகின்றனர்.

நண்பனாய் இருக்கட்டும் உறவாக இருக்கட்டும் ஏன் கொம்பனாகக் கூட இருக்கட்டும் பொய் பேசுபவர்களைக் கண்டு நீ கூறுவது பொய் என்று அவருக்கு நேரே சொல்ல ஏன் பயம் கொள்கின்றோம். இத்தனைக்கும் அந்த நபர் சார்ந்து நாம் இருக்காது எம் காலிலேயே நின்றாலும் கூட, அவர்களால் எமக்கு எந்தத் துன்பமும் நிகழ முடியாது என்று எமக்கு நன்றாகத் தெரிந்தும் கூட, அநியாயத்தை, பொய்யை, அவர் தவறை ஏன் சொல்ல முடியாது எமக்குள்ளே குமைந்து போகிறோம். காரணம் என்ன ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரும் எனையோரும் எங்களை பற்றி தப்பாக புரிந்து கொள்வார்கள் என்ற சுயநலம் தான்...

சுயநலமாக இருப்பதனால் தானே மேலும் மேலும் தவறுகள் பெருக வாய்ப்பாகின்றன.

Link to comment
Share on other sites

தகுந்த ஆதாரம் இல்லாமல் அனுமானத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டக்கூடாது என்கிற உயர்ந்த பண்பினால் இருக்கலாம்.. :D நீதித்துறையில் அப்படிச் செய்யக்கூடாது.. (சுமந்திரனும் அதைத்தான் சொல்லுறார்.. இனப்படுகொலை vs போர்க்குற்றம் vs மனித உரிமை மீறல் :o )

நான் சொல்லுறது உண்மை தெரிந்தும் வாயை மூடிக்கொண்டிருக்கிறவைக்கு :lol:

ஆதாரம் இருந்தாலும் அதைக் கண்டும் காணாமல் விடுறவைக்கு :icon_idea:

இரண்டு விடயம் இருக்கு சுமே..

1 - தனிப்பட்டது

2 - பொதுநலம் சார்ந்தது

தனிப்பட்ட விடயங்களில் வெட்டு ஒன்ற துண்டு இரண்டு என்ற தான் முடிவெடுக்கணும்

பொது நலம் சார்ந்தது என்றால் நாம் நினைப்பது போல் எதுவுமிராது

நாமே சரியானவர்களா என்பதே கேள்விக்குறியானது

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு போக்கிருக்கும்

வாழ்க்கையிருக்கும்

பிரச்சினைகளிலிருக்கும்.....

அவற்றுடன் எல்லாம் எமது நிலைப்பாட்டை செருகமுடியாது

ஆனால் பொது நலம் சார்ந்து எல்லோருடனும் சேர்ந்து பயணிக்கவேண்டியிருக்கும்

பயணித்தாகணும்...

அப்பொழுது குறியை சார்ந்து தான் முடிவுகளை எடுக்கணுமே தவிர

குறைகள்

குணங்கள் சார்ந்து அல்ல..

இதையே நான் செய்கின்றேன்

தொடர்ந்து பொது நலம் சார்ந்தவிடயங்களில் இன்றும் செயற்படுகின்றேன்..

குறைகளைக்கடந்து பயணிக்கணும் என்று நீங்கள் முடிவெடுத்தால்

ஒருவரும் மிஞ்சமாட்டார்

நீங்கள் உட்பட.......

Link to comment
Share on other sites

ஆகா.. வாயைக் குடுத்திட்டார்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சிறியவர்களாக இருக்கும் போது எம்மைப் பண்புடன் தான் பெற்றவர் வளர்க்கின்றனர். துணிவு வேண்டும், நேர்மை வேண்டும், தவறைச் சுட்டிக்காட்ட வேண்டும், பொய் சொல்லாதே இப்படி ...... சமூகத்துக்கும் தனி மனிதருக்கும் தேவையான நல்லவற்றையே சொல்லிச் சொல்லி வளர்த்தாலும், வளந்த பின்னர் பல தீய குணங்களின் வடிவங்களாக பலர் மாறிப்போகின்றனர்.

நண்பனாய் இருக்கட்டும் உறவாக இருக்கட்டும் ஏன் கொம்பனாகக் கூட இருக்கட்டும் பொய் பேசுபவர்களைக் கண்டு நீ கூறுவது பொய் என்று அவருக்கு நேரே சொல்ல ஏன் பயம் கொள்கின்றோம். இத்தனைக்கும் அந்த நபர் சார்ந்து நாம் இருக்காது எம் காலிலேயே நின்றாலும் கூட, அவர்களால் எமக்கு எந்தத் துன்பமும் நிகழ முடியாது என்று எமக்கு நன்றாகத் தெரிந்தும் கூட, அநியாயத்தை, பொய்யை, அவர் தவறை ஏன் சொல்ல முடியாது எமக்குள்ளே குமைந்து போகிறோம். காரணம் என்ன ????

நான் உப்புடியில்லை.......எதையும் நேருக்கு நேரே சொல்லிப்போடுவன்... :D

Link to comment
Share on other sites

வில்லங்கத்தை ஏன் விலைக்கு வாங்குவான் என்ற எண்ணம் தான் முக்கிய காரணம் .அதைவிட கேள்வி கேட்பவரிடம் நீ என்ன திறமோ என்று திருப்பி கேட்டால் பலரிடம் பதில் இல்லை ஏனெனில் அவர்களும்  சூத்தைகள் தான் .

இவர்கள் எல்லாம் தமக்குள் ஒரு புரிந்துணர்வில் ஒன்றாக வேலை செய்கின்றார்கள் .ஆளுக்கு ஆள் போட்டுக்கொடுக்காமல் காட்டிக்கொடுக்காமல் இருக்கின்றார்கள் .

நம்மளுக்கு மடியில் பாரமில்லை போற இடமெல்லாம் வாயை திறந்துவிடுவேன் .இதில் மிக கேவலம் என்னவென்றால் இவர்களுக்கு இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்று என்னை தனியாக தட்டி கொடுத்துவிட்டு அவர்களுக்கு பின்னால் போவார்கள் .

சுமே, இவ்வாறு நீங்கள் என்றாவது யாருக்காவது கூறியிருக்கின்றீர்களா?

ஓரிரு முறை கூறிய பின் ஏற்படும் விளைவுகள் தான் மீண்டும் அவ்வாறு கூறுவதை தடுத்து விடுகின்றன. நான் பொதுவாக எவ் விடயத்தினையும் நேருக்கு நேராக கூறுவதுண்டு. அது அவர்கள் விடும் தவறென்றாலும் சரி, பொய் என்றாலும் சரி. ஆனால் அவ்வாறு கூறி வந்தமையால் உறவுகள் பலரை இழக்க நேரிட்டதுதான் மிச்சம். அவர்களும் திருந்தவில்லை நானும் அதனால் நிம்மதி அடையவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் செய்த தவறை /சொன்ன பொய்யைச் சுட்டிக் காட்டிய பின் அதே தவறை /பொய்யை நானும் செய்ய வேண்டியும் சொல்ல வேண்டியும் வந்த கொடுமையும் ஏற்பட்டு இருக்கு.

இப்பவெல்லாம், ஒருவர் பொய் சொன்னால், ''ஓகே அதை நான் நம்பிட்டன்'' என்று காட்டிக் கொண்டு என் அலுவல்களை செய்ய கிளம்பி விடுகின்றேன். அதுதான் நிம்மதியும் தருகுது. விழித்துக் கொண்டே தூங்குவதுதான் சாலச் சிறந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில் இசை, அர்ஜூன், நிழலி கூறிய மூன்று பதில்களிலும் அடங்கி விட்டது என்பேன்! இசையின் சிக்னேச்சர் லைனில் இருக்கும் "கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்!" என்பது வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். சொலிட்டான ஆதாரம் கிடைக்கும் வரை ஒருவரை அப்பாவியாகத் தான் பார்க்க வேண்டும். ஆனால் அப்படிப் பார்ப்பதில் பலருக்குப் பிரச்சினை இருக்கிறது. நிழலியும் அர்ஜூனும் சொன்னது போல, குற்றம் சாட்ட முனையும் நாமும் ஒன்றும் சுத்தவான்கள் அல்ல! இதனால் பூமராங் எம்மிடமே திரும்பி வரும்! மீண்டும், பலருக்கு "நானும் பலவீனமான மனிதனே" எனும் நினைப்பு வருவதில்லை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விடயம் இருக்கு சுமே..

1 - தனிப்பட்டது

2 - பொதுநலம் சார்ந்தது

தனிப்பட்ட விடயங்களில் வெட்டு ஒன்ற துண்டு இரண்டு என்ற தான் முடிவெடுக்கணும்

பொது நலம் சார்ந்தது என்றால் நாம் நினைப்பது போல் எதுவுமிராது

நாமே சரியானவர்களா என்பதே கேள்விக்குறியானது

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு போக்கிருக்கும்

வாழ்க்கையிருக்கும்

பிரச்சினைகளிலிருக்கும்.....

அவற்றுடன் எல்லாம் எமது நிலைப்பாட்டை செருகமுடியாது

ஆனால் பொது நலம் சார்ந்து எல்லோருடனும் சேர்ந்து பயணிக்கவேண்டியிருக்கும்

பயணித்தாகணும்...

அப்பொழுது குறியை சார்ந்து தான் முடிவுகளை எடுக்கணுமே தவிர

குறைகள்

குணங்கள் சார்ந்து அல்ல..

இதையே நான் செய்கின்றேன்

தொடர்ந்து பொது நலம் சார்ந்தவிடயங்களில் இன்றும் செயற்படுகின்றேன்..

குறைகளைக்கடந்து பயணிக்கணும் என்று நீங்கள் முடிவெடுத்தால்

ஒருவரும் மிஞ்சமாட்டார்

நீங்கள் உட்பட.......

அப்படி என்றால் நாம் வாழும் வாழ்வில் உண்மையும் நேர்மையும் தேவையில்லை. பொது நலன் என்றுவிட்டு ஒருவரோ பலரோ செய்யும் தவறுகளை நாம் மூடி மறைத்து வாழ்வதில் குற்ற உணர்வு தேவை இல்லை என்கிறீர்களா ???

ஆகா.. வாயைக் குடுத்திட்டார்.. :lol:

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே ......... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, இவ்வாறு நீங்கள் என்றாவது யாருக்காவது கூறியிருக்கின்றீர்களா?

ஓரிரு முறை கூறிய பின் ஏற்படும் விளைவுகள் தான் மீண்டும் அவ்வாறு கூறுவதை தடுத்து விடுகின்றன. நான் பொதுவாக எவ் விடயத்தினையும் நேருக்கு நேராக கூறுவதுண்டு. அது அவர்கள் விடும் தவறென்றாலும் சரி, பொய் என்றாலும் சரி. ஆனால் அவ்வாறு கூறி வந்தமையால் உறவுகள் பலரை இழக்க நேரிட்டதுதான் மிச்சம். அவர்களும் திருந்தவில்லை நானும் அதனால் நிம்மதி அடையவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் செய்த தவறை /சொன்ன பொய்யைச் சுட்டிக் காட்டிய பின் அதே தவறை /பொய்யை நானும் செய்ய வேண்டியும் சொல்ல வேண்டியும் வந்த கொடுமையும் ஏற்பட்டு இருக்கு.

இப்பவெல்லாம், ஒருவர் பொய் சொன்னால், ''ஓகே அதை நான் நம்பிட்டன்'' என்று காட்டிக் கொண்டு என் அலுவல்களை செய்ய கிளம்பி விடுகின்றேன். அதுதான் நிம்மதியும் தருகுது. விழித்துக் கொண்டே தூங்குவதுதான் சாலச் சிறந்தது

லண்டனில் யாரைக் கேட்டாலும் நிவேதாவா முகத்துக்கு நேரே போட்டுடைப்பவள், பொல்லாத ஆள் என்றுதான் கூறுவார்கள். ஆனாலும் என்னை சமூகத்தை விட்டு ஒதுக்கவோ அன்றி என்னிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கவோ யாரும் பின்னின்றதில்லை. ஆனால் யாழ் இணையத்தில் தான் என்னால் அநியாயமாக, பொய்யாக, கண்டும் காணாததுபோல், தமக்கு ஏற்றவர்களுக்கு ஏற்றதுபோல் கதைப்பதைப் பார்த்து என்ன செய்வது என்று பார்த்துக்கொண்டு இருக்க வேண்டிய கொடுமை. ஆனாலும் இப்பொழுதெல்லாம் அதற்கும் துணிவு வந்துவிட்டது.

என்ன ஒருவர் சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாத கேடுகெட்டதுகள் சிலது வீண் பழிகளையும் புனைவுகளையும் கூடப் பரப்ப முற்படுகையில் அவர்களது துணிவற்ற கோழைத்தனமான செயல்களைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டி இருக்கிறது. காரணம் அவர்களின் முகங்கள் எமக்குத் தெரியாத காரணத்தினால்.

மேலே சிவப்பிட்டுள்ளதில் நீங்கள் கூறியிருப்பதுபோல் தவறைத் தவறென்று தெரிந்தும் நீங்கள் செய்கிறீர்கள் எனில் அது ஒரு மாபெரும் தவறே நிழலி. பொய்யில் வாழ்ந்து பொய்யில் உறவாடும் உறவுகள் போலியாக இருந்து என்ன பயன் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் நாம் வாழும் வாழ்வில் உண்மையும் நேர்மையும் தேவையில்லை.

பொது நலன் என்றுவிட்டு ஒருவரோ பலரோ செய்யும் தவறுகளை நாம் மூடி மறைத்து வாழ்வதில் குற்ற உணர்வு தேவை இல்லை என்கிறீர்களா ???

எதற்கு சகோதரி தேவையற்ற சீண்டுதல்கள்...

நான் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்

பொது நோக்கம் சார்ந்து

அந்த நோக்கத்துக்கு பங்கம் வராதவரை நான் அவர்களோடு செயற்படுவேன்...

குறை இல்லா மனிதரில்லை என்பதே எனது நிலைப்பாடு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில் இசை, அர்ஜூன், நிழலி கூறிய மூன்று பதில்களிலும் அடங்கி விட்டது என்பேன்! இசையின் சிக்னேச்சர் லைனில் இருக்கும் "கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்!" என்பது வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். சொலிட்டான ஆதாரம் கிடைக்கும் வரை ஒருவரை அப்பாவியாகத் தான் பார்க்க வேண்டும். ஆனால் அப்படிப் பார்ப்பதில் பலருக்குப் பிரச்சினை இருக்கிறது. நிழலியும் அர்ஜூனும் சொன்னது போல, குற்றம் சாட்ட முனையும் நாமும் ஒன்றும் சுத்தவான்கள் அல்ல! இதனால் பூமராங் எம்மிடமே திரும்பி வரும்! மீண்டும், பலருக்கு "நானும் பலவீனமான மனிதனே" எனும் நினைப்பு வருவதில்லை! :D

நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அவர்கள் மூவரும் சொல்கிறார்கள். அதனால் அவர்கள் கூறுவது சரியாக இருக்கும் என்னும் நிலைப்பாடே அதில் தெரிகிறது. கூடுதலாக ஆண்களால் சில மனிதர்களைக் கண்டுகொள்ள முடிவதில்லை. அவர்களின் பசப்பு வார்தைதைகளில் மயங்கிவிடுவதும், அவர்கள் கூறுவது உண்மைதான் என்று முதலிலேயே ஒரு பிம்பத்தை மனதிலே பதிய வைத்துக் கொள்வதும், பின்னர் தெரிந்தாலும் ஆ ... எனக்கு என்ன என்று பேசாமல் விடுவதுமேயான ஒரு குணம் தான் அது

இந்தக் குணத்தினால்தான் ஆண்களுக்கு இரத்த அழுத்தம் குறைவா இருக்கு.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உப்புடியில்லை.......எதையும் நேருக்கு நேரே சொல்லிப்போடுவன்... :D

நீங்களும் முகத்துக்கு நேர சொல்லுற ஆள்தான் ஆனால் இந்தப் பக்கம் தான் சில நேரம் வராமலேயே இருந்திடுவியள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அவர்கள் மூவரும் சொல்கிறார்கள். அதனால் அவர்கள் கூறுவது சரியாக இருக்கும் என்னும் நிலைப்பாடே அதில் தெரிகிறது. கூடுதலாக ஆண்களால் சில மனிதர்களைக் கண்டுகொள்ள முடிவதில்லை. அவர்களின் பசப்பு வார்தைதைகளில் மயங்கிவிடுவதும், அவர்கள் கூறுவது உண்மைதான் என்று முதலிலேயே ஒரு பிம்பத்தை மனதிலே பதிய வைத்துக் கொள்வதும், பின்னர் தெரிந்தாலும் ஆ ... எனக்கு என்ன என்று பேசாமல் விடுவதுமேயான ஒரு குணம் தான் அது

:D கற்பூரம் மாதிரி நீங்கள்! "எனக்குத் தெரிந்த மூவர் சொல்வதால் சரியாக இருக்கும்" என்று நான் சொல்வதாக உங்களுக்கு விளங்கியிருக்கு! நல்லது. அதில் ஒருவர் மட்டும் சொல்லியிருப்பின் அது 1/3 உண்மை என்றும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வில்லங்கத்தை ஏன் விலைக்கு வாங்குவான் என்ற எண்ணம் தான் முக்கிய காரணம் .அதைவிட கேள்வி கேட்பவரிடம் நீ என்ன திறமோ என்று திருப்பி கேட்டால் பலரிடம் பதில் இல்லை ஏனெனில் அவர்களும்  சூத்தைகள் தான் .

இவர்கள் எல்லாம் தமக்குள் ஒரு புரிந்துணர்வில் ஒன்றாக வேலை செய்கின்றார்கள் .ஆளுக்கு ஆள் போட்டுக்கொடுக்காமல் காட்டிக்கொடுக்காமல் இருக்கின்றார்கள் .

நம்மளுக்கு மடியில் பாரமில்லை போற இடமெல்லாம் வாயை திறந்துவிடுவேன் .இதில் மிக கேவலம் என்னவென்றால் இவர்களுக்கு இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்று என்னை தனியாக தட்டி கொடுத்துவிட்டு அவர்களுக்கு பின்னால் போவார்கள் .

உங்களைப் பார்த்து நான் பலமுறை வியந்திருக்கிறேன் அர்ஜுன். எத்தனை பேர் எத்தனை ஐடியில் வந்து நின்று சுத்திக்கட்டி அடித்தாலும் ஓடாமல் நின்று தனித்துப் பதில் கொடுப்பதைப் பார்த்து :D

:D கற்பூரம் மாதிரி நீங்கள்! "எனக்குத் தெரிந்த மூவர் சொல்வதால் சரியாக இருக்கும்" என்று நான் சொல்வதாக உங்களுக்கு விளங்கியிருக்கு! நல்லது. அதில் ஒருவர் மட்டும் சொல்லியிருப்பின் அது 1/3 உண்மை என்றும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

நான் தான் யார் சொன்னாலும் அதை உண்மை என்று உடனே நம்புவதே இல்லையே உங்களைப் போல் :D

இந்தக் குணத்தினால்தான் ஆண்களுக்கு இரத்த அழுத்தம் குறைவா இருக்கு.. :lol:

இரத்த அழுத்தம் அதிகரிப்பதும் மனிதருக்கு நல்லது என்று வைத்தியர்கள் சொல்கின்றனரே இப்பொழுது :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கதைப்பதுதான் நல்லது என்ற கொள்கைதான் எனக்கும் உண்டு. இதனால் சிலர் என்னைக் rude ஆகப் பேசுபவன், பிறரை மதிக்கத் தெரியாதவன், சபை சந்தியில் எப்படிக் கதைக்கவேண்டும் என்று தெரியாதவன் என்றெல்லாம் சொல்லியுள்ளனர். ஆனால் தொழில்முறையில் பல பாடங்களை கற்றுணர்ந்ததால் எதை எப்படி எவ்வாறு கதைக்கவேண்டும் என்று பழகியுள்ளேன்! அதற்காகச் சொல்லாமல் விட்டுவிடுவதில்லை. சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் மற்றவர்களால் எவ்வாறு கிரகிக்கப்படுகின்றன என்று புரிந்து கதைத்தால் தேவையற்ற பிரச்சினை வராது. அரசியல் இராஜதந்திரிகள் எப்படிப் பேசுகின்றனர் என்பதைக் கவனித்தாலே பலவற்றை இலகுவாகக் கையாளலாம்.

நேர்மை, எருமை, கருமையை விட இடம், பொருள், ஏவல், சேவல் முக்கியம்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் முகத்துக்கு நேர சொல்லுற ஆள்தான் ஆனால் இந்தப் பக்கம் தான் சில நேரம் வராமலேயே இருந்திடுவியள் :D

உண்மைதான். 
படித்தவர்கள் போல் தங்களை காட்டிக்கொண்டு மற்றவர்களை மட்டம் தட்டும் திரிகளில் விலகி விடுவேன். :D
 
பொய்யைக்கூட உண்மை மாதிரி திரித்து கருத்திடுவார்கள். அங்கேயும் நான் தலைகாட்டுவதில்லை... :lol:
 
ஏனென்றால் நான் நாணயஸ்தன்... :icon_mrgreen:
Link to comment
Share on other sites

பொய் சொல்வார்கள். மறைமுகமாகவும் நேரடியாகவும் குறை சொல்வார்கள். எதையும் கவனியாதது போல் இருப்பேன்.
 
இதற்குக் ஒரு காரணம் அவர்களை நான் பெரிது படுத்தவில்லை என்பது. அடுத்தது நாகரீகம் என்ற ஒன்று.
 
பேச்சில் நாகரீகம் அவசியம். மற்றவர்கள் தாழ்ந்து போகும் போது நாமும் அவர்களின் நிலைக்கு இறங்க முடியாது.
 
தமிழர்களின் பேச்சை பெரிசாக எடுப்பதில்லை. (சில விதி விலக்குகள் உண்டு.) 
 
ஒருத்தரோடும் பிரச்சனைக்குப் போகாத படியால் எனக்கும் அவர்கள் பிரச்சனை தருவதில்லை.
 
அவுஸில் முதன் முதலாக 27 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப்பாடசாலை ஒன்றின் நிர்வாகக் குழுவில் அண்மைவரை இருந்தேன். மாணவர்களின் வருடாந்த‌ பேச்சுப் போட்டி ஒன்றில் நடத்துபவராக இருக்கும் போது அதில் ஒரு மாணவனுக்குத் திக்கு வாய். அவனுக்கு நிறைய ஊக்கமும் முன்னுரிமையும் குடுத்து அவனைப் பேசச் செய்தேன். அவனும் ஓரளவு பேசினான். இது ஒரு பிள்ளையின் தகப்பனுக்குப் பிடிக்கவில்லை. அவருடையபிள்ளை நன்றாகப் பேசியது. திக்கு வாய்ப் பெடியனை விட வயதும் குறைவு.  
ஆனால் நானும் அதை பெரிதாக ஊக்கம் குடுக்கத் தவறி விட்டேன்.
அதன் பிறகு அவர் முகத்தைத் திருப்பத் தொடங்கினார். ஆனால் நான் அவரை எங்க கண்டாலும் கை காட்டுவேன்.
 
நிர்வாகக் குழுவுக்குள் பெருஞ் சண்டைகள் நடக்கும். எதிலும் நான் சம்பந்தப் படுவதில்லை. பழைய நிர்வாக்குழுவுக்கும் புதிய நிர்வாகக்குழுவுக்கும் இடையில் பெரும் போர் நடக்கும். அனால் இதிலும் சம்பந்தப்படாமல் நடந்து கொள்வேன். 
 
என்னுடைய அனுமானம்... தமிழர்கள் சில்லறைகள். இப்படி சண்டைபிடித்து, வாய்க்கு வாய் பதிலடி குடுத்து தங்களை பெரிதாக காட்டநினைக்கிறார்கள் என்று. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய் பேசுபவர்களைக் கண்டு நீ கூறுவது பொய் என்று அவருக்கு நேரே சொல்ல ஏன் பயம் கொள்கின்றோம். இத்தனைக்கும் அந்த நபர் சார்ந்து நாம் இருக்காது எம் காலிலேயே நின்றாலும் கூட, அவர்களால் எமக்கு எந்தத் துன்பமும் நிகழ முடியாது என்று எமக்கு நன்றாகத் தெரிந்தும் கூட, அநியாயத்தை, பொய்யை, அவர் தவறை ஏன் சொல்ல முடியாது எமக்குள்ளே குமைந்து போகிறோம். காரணம் என்ன ????

fuchs_28.gif நரி...இடம் போனாலும், வலம் போனாலும்... நமக்கென்ன?fuchs_29.gif

நம் மேல்... பாய்ந்து விறாண்டாமல், போய்த் தொலையட்டும் என்ற.. முன் ஜாக்கிரதை தான் காரணம். :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்வார்கள். மறைமுகமாகவும் நேரடியாகவும் குறை சொல்வார்கள். எதையும் கவனியாதது போல் இருப்பேன்.
 
இதற்குக் ஒரு காரணம் அவர்களை நான் பெரிது படுத்தவில்லை என்பது. அடுத்தது நாகரீகம் என்ற ஒன்று.
 
பேச்சில் நாகரீகம் அவசியம். மற்றவர்கள் தாழ்ந்து போகும் போது நாமும் அவர்களின் நிலைக்கு இறங்க முடியாது.
 
தமிழர்களின் பேச்சை பெரிசாக எடுப்பதில்லை. (சில விதி விலக்குகள் உண்டு.) 
 
ஒருத்தரோடும் பிரச்சனைக்குப் போகாத படியால் எனக்கும் அவர்கள் பிரச்சனை தருவதில்லை.
 
அவுஸில் முதன் முதலாக 27 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப்பாடசாலை ஒன்றின் நிர்வாகக் குழுவில் அண்மைவரை இருந்தேன். மாணவர்களின் வருடாந்த‌ பேச்சுப் போட்டி ஒன்றில் நடத்துபவராக இருக்கும் போது அதில் ஒரு மாணவனுக்குத் திக்கு வாய். அவனுக்கு நிறைய ஊக்கமும் முன்னுரிமையும் குடுத்து அவனைப் பேசச் செய்தேன். அவனும் ஓரளவு பேசினான். இது ஒரு பிள்ளையின் தகப்பனுக்குப் பிடிக்கவில்லை. அவருடையபிள்ளை நன்றாகப் பேசியது. திக்கு வாய்ப் பெடியனை விட வயதும் குறைவு.  
ஆனால் நானும் அதை பெரிதாக ஊக்கம் குடுக்கத் தவறி விட்டேன்.
அதன் பிறகு அவர் முகத்தைத் திருப்பத் தொடங்கினார். ஆனால் நான் அவரை எங்க கண்டாலும் கை காட்டுவேன்.
 
நிர்வாகக் குழுவுக்குள் பெருஞ் சண்டைகள் நடக்கும். எதிலும் நான் சம்பந்தப் படுவதில்லை. பழைய நிர்வாக்குழுவுக்கும் புதிய நிர்வாகக்குழுவுக்கும் இடையில் பெரும் போர் நடக்கும். அனால் இதிலும் சம்பந்தப்படாமல் நடந்து கொள்வேன். 
 
என்னுடைய அனுமானம்... தமிழர்கள் சில்லறைகள். இப்படி சண்டைபிடித்து, வாய்க்கு வாய் பதிலடி குடுத்து தங்களை பெரிதாக காட்டநினைக்கிறார்கள் என்று. 

கெதியில சாமியாராகி மோட்சம் பெற வாழ்த்துக்கள் :D

fuchs_28.gif நரி...இடம் போனாலும், வலம் போனாலும்... நமக்கென்ன?fuchs_29.gif

நம் மேல்... பாய்ந்து விறாண்டாமல், போய்த் தொலையட்டும் என்ற.. முன் ஜாக்கிரதை தான் காரணம். :D 

உது வடிகட்டின சுயநலம் எல்லோ :D

Link to comment
Share on other sites

கெதியில சாமியாராகி மோட்சம் பெற வாழ்த்துக்கள் :D

ஒரு எல்லை... சாமி. 
அடுத்த எல்லை... சில்லறை.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.