• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • அய்யய்யய்யய்யோ நான் இத்திரியில் கதைக்க வந்தது புலம்பெயர்ந்து வந்தவர்களின் புலம்பெயர் நாடுகளில் பிறந்த பிள்ளைகளின் திருமணம் பற்றி ☺️🤪
  • உண்மை. ஆனால், தொழில்சார் வல்லுனர்கள் இல்லை தெரிந்தவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் என யார் விரும்பினாலும் திருத்தலாம்.  
  • ஆர் நாங்களோ திட்டமிட தெரியாத ஆக்கள். வெளிநாட்டில் வாழும் 90% எங்கள் ஆண்கள், 100 டாலருடன் வந்து, 3 வேலையில் தும்படித்து, படித்து, பட்டம் பெற்று, அல்லது வியாபாரத்தளத்தை வாங்கி, ஊரில் பல குமர்களை கரைசேர்த்து, வீட்டுக்கு மோர்ட்கேஜ் எடுத்து, கலியாணச் செலவும், வீசா கட்டணமும் கட்டி பொம்பிளையை எடுக்கிற ஆக்கள் காண்டியளே. இவ்வளவு வேலையையும் பக்காவாக பிசகில்லாமல் செய்து முடிக்கிற இந்த சிங்கங்களையா இப்படிச் சொல்கிறீர்கள்? இலங்கையில் பிறந்து இன்று வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணிற்க்கு பின்னாலும், அவரிற்கு முன் வெளிநாடு வந்த தந்தையோ, சகோதரனோ, கணவனோ ஏதோ ஒரு ஆணின் அபரிமித உழைப்பும், திட்டமிடலும், சுயசம்பாதியமும், அக்கறையும், பாசமும் இருக்கும்.
  • ரத்த மகுடம்-93 பிரமாண்டமான சரித்திரத் தொடர் ‘‘சிவகாமி...’’ அவளை லேசாக இடித்து நடப்புக்குக் கொண்டு வந்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘இவர்தான் பாண்டிய மண்டலத்தின் சக்கரவர்த்தியான அரிகேசரி மாறவர்மரின் அருந்தவப்புதல்வர் கோச்சடையன் இரணதீரன். தந்தையைப் போலவே மிகப்பெரிய வீரர். தீரர். சூரர். தன் காலத்தில் தமிழக வரலாற்றை இவர் திருத்தி எழுதுவார் என ஜோதிடர்கள் ஆருடம் கூறுகிறார்கள்...’’‘‘பெற்ற பொற்காசுகளுக்குத் தகுந்தபடி அவர்கள் கூறியிருக்கிறார்கள். பெரிதுபடுத்த வேண்டாம் அம்மணி...’’ சிவகாமியைப் பார்த்து நிதானமாகச் சொன்ன கோச்சடையன் இரணதீரன், சாளுக்கிய போர் அமைச்சர் பக்கம் திரும்பினான்: ‘‘இவர் யாரென்று அறிமுகப்படுத்தவில்லையே..?’’ ‘‘இவர்... இவள்... சிவகாமி...’’ என ராமபுண்ய வல்லபர் சொல்லும்போதே வெளியில் அரவம் கேட்டது. திரும்பி வாசலைப் பார்த்தவருக்கு எதுவும் புரியவில்லை: ‘‘இளவரசே...’’‘‘சொல்லுங்கள்...’’ சாளுக்கிய இளவரசன் விநயாதித்தனும் பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனும் ஒருசேர குரல் கொடுத்தார்கள்.பாண்டிய இளவரசன் அருகில் நின்றிருந்த கரிகாலன் வாய்விட்டுச் சிரித்தான்: ‘‘நியாயமாகப் பார்த்தால் நானும் உங்கள் இருவருடனும் சேர்ந்து ‘சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்க வேண்டும்! ஏனெனில் அடியேனும் சோழ மண்டலத்தின் இளவரசன்தான்!’’ அவனை எரித்து விடுவதுபோல் பார்த்தார் ராமபுண்ய வல்லபர்: ‘‘இரண்டு தெரு... மிஞ்சிப்போனால் ஒரு சிற்றூர்... அது மண்டலமாகுமா..?’’ ‘‘ஜீவநதிகளின் பிறப்பிடங்கள் அனைத்தும் சிறிய ஊற்றுதானே..?’’ கேட்ட கரிகாலனின் புருவங்கள் உயர்ந்தன.‘‘உன்னிடம் பேசுவதற்காக நான் இங்கு வரவில்லை...’’‘‘உங்களிடம் பதில் சொல்வதற்காக நானும் இங்கு வரவில்லை...’’‘‘கரிகாலா... என்ன இது..? வயதில் பெரியவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என நீதானே என்னிடம் சொன்னாய்... அப்படியிருக்க நீயே அதிலிருந்து பிறழலாமா... அமைதியாக இரு...’’ நண்பனை சாந்தப்படுத்திவிட்டு ராமபுண்ய வல்லபரை ஏறிட்டான் கோச்சடையன் இரணதீரன்: ‘‘என் நண்பன் பேசியதற்கு தங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...’’ ‘‘என்ன இது... பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்கிறீர்கள்...’’ என்றபடி பாண்டிய இளவரசனின் கரங்களைப் பற்றினார் சாளுக்கிய போர் அமைச்சர்: ‘‘தவறு என்னுடையதுதான்... சாளுக்கிய இளவரசரை அழைத்தேன்...’’‘‘பெயர் சொல்லியே அழைத்திருக்கலாமே? உங்கள் சீடன்தானே விநயாதித்தன்..?’’ கரிகாலன் இடைமறித்தான்: ‘‘என்ன விநயாதித்தா... உன்னைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என இந்த முதியவருக்கு ஏதேனும் கட்டளையிட்டிருக்கிறாயா..?’’ ‘‘அவர் என் குரு... நான் எப்படி அவருக்கு கட்டளை பிறப்பிப்பேன்...’’ பதறிய விநயாதித்தன், ‘‘நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்...’’ என பொதுவாகச் சொல்லிவிட்டு, ராமபுண்ய வல்லபரின் கரங்களைப் பற்றினான்: ‘‘என்ன விஷயம் குருதேவா... வாருங்கள்... அங்கு என்ன அரவம் என்று பார்ப்போம்...’’ இருவரும் நடந்தார்கள். சாளுக்கிய போர் அமைச்சர் தன் பற்களைக் கடித்தார்: ‘‘சின்னப் பயல்... என்ன பேச்சு பேசுகிறான்... அவனை...’’ ‘‘ஷ்... குருதேவா... அமைதி... கரிகாலன் இப்போது பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு... உடன் பாண்டிய இளவரசன் இருப்பதை மறந்துவிட்டீர்களா..? அவனை அழைத்து வந்ததும் கோச்சடையன் இரணதீரன்தான்... இப்போது... இந்த இடத்தில்... நாம் அமைதி காப்பதே புத்திசாலித்தனம்... இது தங்களுக்கே தெரியும்...’’ ‘‘ம்... தெரியும்...’’ சீறினார் ராமபுண்ய வல்லபர். ‘‘ஆடட்டும்... கரிகாலனால் எந்த அளவுக்குச் செல்ல முடியும்..? பாண்டிய இளவரசன் அருகில் இருக்கும்வரைதானே..? அதன் பிறகு அவனைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறேன்... சரி... விநயாதித்தா... நீ செல்...’’ ‘‘சற்று நேரம் கழித்து செல்கிறேன் குருதேவா... இப்பொழுதே சென்றால் கேள்விகள் எழும்...’’‘‘எழட்டுமே..? சிவகாமி அங்கு தனியாக இருக்கிறாள் விநயாதித்தா...’’‘‘அதனால்தான் நிம்மதியாக தங்களுடன் வருகிறேன் குருதேவா... எல்லா சூழல்களையும் சந்திக்கும் திடம் சிவகாமிக்கு உண்டு என்பதுதான் தங்களுக்கே தெரியுமே...’’ ‘‘தெரியும்தான்... ஆனால், கரிகாலன் அங்கிருக்கிறானே... அவளால் அவனை சமாளிக்க முடியுமா..?’’ முணுமுணுத்தார் ராமபுண்ய வல்லபர். சாளுக்கிய போர் அமைச்சர் சந்தேகப்பட்டதுபோலவேதான் அங்கு சூழல் நிலவியது. தன்னை தற்காத்துக்கொள்ள சிவகாமி போராடிக் கொண்டிருந்தாள். அவள் எந்தப் பக்கம் சென்றாலும் அந்தப் பக்கத்தில் அம்பு எய்ய கரிகாலன் தயாராக இருந்தான். அதன் ஒரு பகுதியாகவே முதல் அம்பை எய்தான். ‘‘பாண்டிய இளவரசே... அம்மணி யாரென்று கேட்டீர்கள் அல்லவா..?’’ ‘‘ஆமாம்... சிவகாமி என சாளுக்கிய போர் அமைச்சர் கூறினாரே..!’’ இரணதீரன் புன்னகைத்தான். ‘‘பெயரைத்தானே அவர் சொன்னார்...’’‘‘அதைத்தாண்டியும் இருக்கிறதா..?’’‘‘விந்திய மலை உயரத்துக்கு இருக்கிறது பாண்டிய இளவரசே!’’ சிவகாமியைப் பார்த்தபடி கரிகாலன் சொன்னான். ‘‘அதில் ஒரு பகுதியைச் சொல் கரிகாலா...’’ சுவாரஸ்யத்துக்குத் தயாரானான் கோச்சடையன் இரணதீரன். ‘‘ஒரு பகுதியை விட உச்சி முனையை சொல்கிறேன் பாண்டிய இளவரசே... இந்த அம்மணி சிவகாமிதான் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி!’’ ‘‘அப்பாடா... எங்கே உண்மையைச் சொல்லி, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கோமகனான உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வீர்களோ என்று நினைத்தேன்...’’ சிவகாமி நகைத்தாள். ‘‘அப்படியானால் கரிகாலன் பொய் சொல்கிறானா அம்மணி..?’’ ‘‘பெயர் சொல்லியே என்னை தாங்கள் அழைக்கலாம் பாண்டிய இளவரசே... வயதில் என்னை விட தாங்கள் பெரியவர்...’’ ‘‘அதாவது நீங்கள் கிழவராம்... இந்த அம்மணி குமரியாம்!’’ கரிகாலன் உதட்டைப் பிதுக்கினான். ‘‘பேசாமல் இரு கரிகாலா... அம்மணி... சரி... சிவகாமி... நீ சாளுக்கியர் களின் ஒற்றர் படைத் தலைவி இல்லையென்றால்... யார் நீ..?’’ இரணதீரன் புருவத்தை உயர்த்தினான். ‘‘பல்லவ இளவரசி!’’‘‘என்ன..?’’ பாண்டிய இளவரசன் அதிர்ந்தான். ‘‘ஆமாம்... இரணதீரா...’’ நட்பின் அடிப்படையில் ஒருமையில் விளித்தான் கரிகாலன்: ‘‘இன்னும் சற்று நேரம் இவளிடம் சிரித்துப் பேசிவிட்டு நீ நகர்ந்ததும் ‘நான் பாண்டிய இளவரசி’ என யாரிடமாவது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வாள். காரியத்தைச் சாதித்துக் கொள்வாள். அதற்காகத்தான் ‘வயதில் நான் இளையவள்... தங்கள் சகோதரி போன்றவள்...’ என்றெல்லாம் இவள் தூண்டிலை வீசுகிறாள்...’’ ‘‘தங்கள் நண்பர் வழக்கம்போல் பொய் சொல்லி விளையாடுகிறார்...’’ கரிகாலன் பக்கம் திரும்பாமல் இரணதீரனைப் பார்த்தபடி சொன்னாள். ‘‘விளையாடுவது நானா..? நல்லது... இரணதீரா... இந்த அம்மணிதான் பல்லவ இளவரசி என்றால் எதற்காக மாறுவேடத்தில் மதுரை மாநகருக்குள் நுழைய வேண்டும்..?’’ கண்களால் சிரித்தபடி கரிகாலன் கேட்டான். ‘‘என்ன செய்ய... உடன் வந்தவர் மாறுவேடத்தில் நுழையும்படிதானே நிர்ப்பந்தப்படுத்தினார்...’’ சிவகாமி பளிச்சென்று பதில் அளித்தாள். ‘‘அட... பரவாயில்லையே... நிர்ப்பந்தம் செய்தால் அடிபணிவாயா..?’’ ‘‘அது நிர்ப்பந்தம் செய்பவரைப் பொறுத்தது! உதாரணமாக...’’ ‘‘உதாரணமாக..?’’ ‘‘நிர்ப்பந்தம் செய்யாமல் நீங்கள் சாதாரணமாக எது சொன்னாலும் அதை தலையால் நிறைவேற்றுவேன்! அந்த உரிமையை தங்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறேன்!’’‘‘பலே... இது அடுத்த கட்ட பொய்யா..?’’ ‘‘இறுதிக்கட்ட உண்மை... அதற்கு இரண்டு அத்தாட்சிகள் இருக்கின்றன...’’ ‘‘என்னவோ..?’’ ‘‘முதலாவது, நீங்களும் நானும் இணைந்துதான் மதுரைக்கு வந்தோம். அதுவும் மாறுவேடத்தில்... நீங்கள் கேட்டுக் கொண்டதால் என் தோற்றத்தை நானும் மாற்றிக்கொண்டேன்...’’‘‘வேறு யாரிடமும் இப்படிச் சொல்ல வேண்டாம் அம்மணி... நவ துவாரங்களாலும் சிரிப்பார்கள்...’’ தன் குழலை ஒதுக்கியபடி சொன்னான் கரிகாலன்: ‘‘ஏனெனில் இரணதீரன் என் அத்தை மகன்..! அத்தை வீட்டுக்குள் எந்த தோற்றத்திலும் நான் நுழைவேன்... ஆனால், நீ...’’ ‘‘உங்களை மணக்கவிருப்பவள்! தலைவன் எவ்வழியோ அவ்வழியே தலைவி!’’ மார்புக்கு நேராக தன் கைகளைக் கட்டியபடி கரிகாலனும் சிவகாமியும் உரையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த கோச்சடையன் இரணதீரன் மெல்ல புன்னகைத்தான்: ‘‘மணம் வரை சென்றுவிட்டாயா கரிகாலா... என்னிடம் கூட மறைத்துவிட்டாயே...’’ ‘‘எல்லோரிடமும் எல்லாவற்றையும் மறைப்பதுதானே உங்கள் மாமன் மகனின் இயல்பு..? அதனால்தான் அண்ணா இவரை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கோமகன் என்கிறேன்!’’ தன் பங்குக்கு சிவகாமியும் நகைத்தாள்.‘‘சரி சிவகாமி... இரண்டாவது: அத்தாட்சி என எதனைக் குறிப்பிடுகிறாய்..?’’ இரணதீரன் கேட்டான். கரிகாலன் இடைமறித்தான். ‘‘தங்கள் தந்தையார் இவளிடம் கொடுக்கச் சொல்லி ஓர் ஓலையை உங்களிடம் கொடுத்திருக்கிறார் அல்லவா..?’’ ‘‘...’’‘‘அதை அப்படியே வாங்கி என்னிடம் தந்துவிடும்படி சில நாழிகைகளுக்கு முன் இவளிடம் சொன்னேன். அதைக் குறிப்பிடுகிறாளோ என்னவோ..! ’’ இரணதீரனும் சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்போது எங்கிருந்தோ ஐந்து புறாக்கள் பறந்து வந்து இவர்கள் மூவருக்கும் மேல் வட்டமிட்டன!   (தொடரும்) கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம்   http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16603&id1=6&issue=20200221 ரத்த மகுடம்-94 பிரமாண்டமான சரித்திரத் தொடர் பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனின் முகம் மாறியது. சலனமற்று தன் பார்வையை மேலே உயர்த்தி, பறந்த ஐந்து புறாக்களையும் பார்த்தான்.‘‘பாண்டிய இளவரசே...’’ அழைத்த கரிகாலனின் குரலில் இப்போது மரியாதை வெளிப்பட்டது. நண்பன் என்ற நெருக்கத்தையும், அத்தை மகன் என்ற உரிமையையும் விட்டுவிட்டு இரணதீரனின் அந்தஸ்துக்குரிய சொல்லை உதிர்த்தான். இதைக் கவனித்த சிவகாமியின் நயனங்கள் விரிந்தன. எந்தத் திசையை நோக்கி கரிகாலன் நகர்கிறான் என்பதை உணர்ந்துகொண்டதுபோல் அவள் அதரங்கள் துடித்தன. எதையோ சொல்ல முற்பட்டவள் தொடர்ந்து கரிகாலன் பேசத் தொடங்கியதை அடுத்து மவுனமானாள்.   ‘‘பார்த்தீர்களா பாண்டிய இளவரசே...’’ வானில் பறந்த ஐந்து புறாக்களையும் கரிகாலன் சுட்டிக் காட்டினான். ‘‘இது பாண்டிய தேசத்தின் தலைநகரமான மதுரை. அதுவும் தமிழ் வளர்த்த மாநகரின் விருந்தினர் வீதியில் அமைந்திருக்கும் மாளிகை ஒன்றின் நந்த வனத்தில் போடப்பட்ட பந்தலுக்குள் நாம் நிற்கிறோம்...’’   திரும்பி கரிகாலனைப் பார்த்தான் இரணதீரன்: ‘‘இதை ஏன் என்னிடம் இப்போது குறிப்பிடுகிறாய் கரிகாலா..? இவை எதுவும் எனக்குத் தெரியாது என்று நினைத்து விட்டாயா..? இந்த மண்ணின் இளவரசன் நான்...’’ ‘‘அதனால்தான் தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் இளவரசே...’’ ‘தங்களுக்கு’ என்ற சொல்லுக்கு கரிகாலன் அழுத்தம் கொடுத்தான். ‘‘புரியவில்லை... நேரடியாகவே சொல்... என்ன விஷயம்..?’’‘‘இளவரசே... பல தேசத்தில் இருந்தும் முக்கியப் பிரமுகர்கள் மதுரைக்கு வருகை தருகிறார்கள். பாண்டிய மாமன்னரையும் இளவரசரான தங்களையும் காண பல காத தொலைவில் இருந்து வருகிறார்கள்... அப்படி வருபவர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்ட வீதி அல்லவா இது..?’’  ‘‘ஆமாம்...’’ ‘‘மன்னரும் நீங்களும் அமைச்சர் பிரதானிகளும் குடியிருக்கும் முக்கிய வீதியை ஒட்டி இந்த விருந்தினர் வீதி அமைக்கப்பட்டிருக்கிறதல்லவா..?’’ ‘‘ம்...’’‘‘இங்கிருந்து வணிகர் வீதிக்குச் செல்ல வேண்டுமென்றால் நான்கு வீதிகளைக் கடக்க வேண்டும் அல்லவா..?’’ ‘‘ம்...’’‘‘அப்படியிருக்க இந்த விருந்தினர் வீதிக்கு... குறிப்பாக சாளுக்கிய இளவரசர் விநயாதித்தரை நீங்கள் தங்க வைத்திருக்கும் மாளிகைக்கு... அதுவும் இந்த அந்தி சாயும் நேரத்தில் புறாக்கள் எங்கிருந்து வந்தன..? எதற்காக வந்திருக்கின்றன..? யார் அனுப்பியிருக்கிறார்கள்..?’’ கரிகாலன் சொல்லி முடித்ததும் சிவகாமியின் வதனத்தில் அச்சத்தின் சாயைகள் படர ஆரம்பித்தன.பாண்டிய இளவரசனின் கண்களில் அனல் தெறித்தது: ‘‘என்ன சொல்ல வருகிறாய் கரிகாலா..?’’‘‘எதையும் சொல்ல வரவில்லை இளவரசே... எனது ஐயங்களை எழுப்புகிறேன்... பொதுவாக தூது செல்வதற்காக அரசாங்கப் பணியில் இருப்பவர்கள் புறாக்களைப் பயன்படுத்துவார்கள் அல்லது தங்கள் வியாபார விஷயங்களுக்காக வணிகர்கள் புறாக்களை உபயோகப்படுத்துவார்கள்... இது தவிர வேறு எந்த தேசமும் செய்யாத ஒரு காரியத்தை இந்த பாரத தேசத்திலேயே ஒரேயொரு அரசு மட்டும் செய்கிறது... அதற்காக புறாக்களைப் பயன்படுத்துகிறது...’’ கரிகாலன் நிறுத்தினான். ‘‘சாளுக்கிய தேசத்தைக் குறிப்பிடுகிறாயா..?’’ ‘‘தாங்கள் அப்படிக் கருதினால் அது தவறு என்று நான் சொல்ல மாட்டேன் இளவரசே...’’ கோச்சடையனை நோக்கிச் சொன்ன கரிகாலன், ஓரப் பார்வையால் சிவகாமியைப் பார்த்து நகைத்தான்: ‘‘மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் போர்த் தந்திரங்களில் ‘ஐந்து புறாக்கள்’ என்பது பிரபலமானது என்பதை தாங்கள் அறிவீர்கள்...’’ ‘‘...’’ ‘‘இந்த மாளிகையில் நீங்கள் தங்க வைத்திருப்பவர் சாளுக்கிய தேசத்தின் இளவரசர்... அவர் இந்த தேசத்தின் இளவரசரான உங்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார்... நீங்களும் அதற்கு இசைந்து வருகை புரிந்திருக்கிறீர்கள்...’’ ‘‘...’’‘‘இந்தச் சூழலில்... அதுவும் புறாக்கள் வருவதற்கு அவசியமே இல்லாத இந்த இடத்துக்கு... அதுவும் இந்த நேரத்தில்... அதுவும் சரியாக ஐந்து புறாக்கள் மட்டும் ஏன் பறக்க வேண்டும்..?’’ அதுவும்... அதுவும்... என கரிகாலன் தொடர்ந்து வினாக்களை எழுப்பிக் கொண்டே வந்தபோது - மேலே பறந்த ஐந்து புறாக்களில் ஒன்று சரியாக இறங்கி சிவகாமியின் தோளில் அமர்ந்தது! அவளது கேசத்தைக் கொத்தியது! ‘பார்த்தீர்களா..?’ என இரணதீரனுக்கு ஜாடை காட்டிவிட்டு சிவகாமியை நெருங்கிய கரிகாலன், அவள் தோளில் அமர்ந்த புறாவை லாவகமாகப் பிடித்தான். யாரையும் பார்க்காமல் கருமமே கண்ணாக அதன் இறக்கைகளை விரித்து ஆராய்ந்தான்.ஓரிடத்தில் விரல் இடறியது.புறாவைத் தூக்கிப் பிடித்து இடறிய இடத்தைப் பார்த்தான். அவன் உதடுகளில் புன்னகை பூத்தது. ஆள்காட்டி விரல் நகத்தால் மெல்ல மெல்ல பட்டுச் சுருள் ஒன்றை எடுத்தான். அடுத்த கணம் புறா பறந்து சென்றது. வட்டமிட்டுக் கொண்டிருந்த மற்ற நான்கு புறாக்களும் அதைப் பின்பற்றி வானில் சென்றன. வளர்ந்த நகத்தின் அளவிருந்த அந்தப் பட்டுச் சுருளை கரிகாலன் விரித்தான். ‘எல்லாம் தயார்... வலையை விரித்து மீனைப் பிடிக்கவும்...’அரக்கினால் எழுதப்பட்ட அந்த வாசகங்களை கோச்சடையன் இரணதீரனிடம் காட்டினான் கரிகாலன்: ‘‘இதில் மீன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பாண்டிய இளவரசரான தங்களை என நினைக்கிறேன்... ஒருவேளை நான் எண்ணுவது பிழை என்றால் மன்னிக்கவும்...’’எதுவும் பேசாமல் தன் முன் நீட்டப்பட்ட வெண் பட்டுத் துணியைப் பார்த்துவிட்டு நிமிர்ந்தான் இரணதீரன். பாண்டிய இளவரசனின் கண்கள் சிவகாமியை ஊடுருவின: ‘‘இதற்கு என்ன அர்த்தம்..?’’ சிவகாமி பதில் சொல்வதற்குள் சாளுக்கிய இளவரசன் விநயாதித்தனும் சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். ‘‘சித்திரான்னம் சமைத்துக் கொண்டிருந்த வீரன் மேல் தவறுதலாக வெந்நீர் கொட்டிவிட்டது... அதுதான் அந்த அலறல்... மன்னிக்கவும்...’’ இரணதீரனைப் பார்த்துச் சொன்னார் ராமபுண்ய வல்லபர்.‘‘அதற்கு மன்னிப்பு கேட்டீர்கள். சரி... இதற்கு எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறீர்கள்..?’’ என்றபடி அந்த பட்டுத் துணியை சாளுக்கிய போர் அமைச்சர் முன்பு காண்பித்தான் கரிகாலன். ‘‘எ...ன்...ன... இ...து...’’ வாக்கியத்தை வாசித்தபடியே அதிர்ச்சியுடன் கேட்டார் ராமபுண்ய வல்லபர்.‘‘அதைத்தான் பாண்டிய இளவரசர் கேட்கிறார்... என்ன இது..?’’ இம்முறை கரிகாலன் அழுத்திக் கேட்டான்.நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த விநயாதித்தனுக்கு எங்கோ தவறு நடந்திருப்பது புரிந்தது.சாளுக்கிய போர் அமைச்சரை உற்றுப் பார்த்தான் இரணதீரன்: ‘‘இவள் பெயர் சிவகாமி என்றீர்கள்... ஆனால், உங்களுக்கு இவர் யார் என்று சொல்லவில்லையே..?’’ ‘‘நிச்சயம் சாளுக்கியர்களுக்கு மிக மிக வேண்டப்பட்டவராக இருக்கவேண்டும்! இல்லையென்றால் சாளுக்கிய இளவரசர் தங்களுக்கு அளிக்கும் விருந்துக்கு இந்த அம்மணியையும் அழைத்திருப்பார்களா..?’’ நகைக்காமல் நகைத்தான் கரிகாலன்.பட்டுத் துணியில் இருந்த வாக்கியத்தையும், தலைகுனிந்தபடி நின்றிருந்த சிவகாமியையும், திருதிருவென விழித்துக் கொண்டிருந்த ராமபுண்ய வல்லபரையும், இறுகிய முகத்துடன் காணப்பட்ட பாண்டிய இளவரசனையும், விஷமத்துடன் பேசிக்கொண்டிருந்த கரிகாலனையும் மாறி மாறிப் பார்த்த விநயாதித்தன் சட்டென முன்னே வந்தான்: ‘‘பாண்டிய இளவரசே... இந்த பட்டுத் துணியில் எதற்காக இப்படி எழுதப்பட்டிருக்கிறது... இந்தப் பெண்ணுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு... இதையெல்லாம் நீங்கள் அறியவும் விசாரிக்கவும் முற்படுகிறீர்கள்... அனைத்துக்கும் நாங்கள் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்... சாளுக்கியர்கள் மீது எந்தக் களங்கமும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டே இந்த மண்ணை விட்டு அகலுவோம்...’’ ‘‘அப்படியானால் அதுவரை சந்தேகத்துக்கு இடமான இந்த அம்மணி மதுரை சிறையில் அடைக்கப்படுவதுதான் சரி என்கிறீர்கள்... நல்லது... இரணதீரா...’’ இம்முறை நண்பன் என்ற உரிமையில் ஒருமையில் அழைத்தான் கரிகாலன்: ‘‘சாளுக்கிய இளவரசரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதில் உனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே..?’’ பதிலை எதிர்பார்க்காமல் பாண்டிய வீரர்களை அழைத்த கரிகாலன், சிவகாமியை மதுரையின் பாதாளச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான். முக அசைவில் அதை ஆமோதித்தான் கோச்சடையன் இரணதீரன்.அடுத்த கால் நாழிகைக்குப் பின் மதுரை பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டாள் சிவகாமி. சிறையின் தரையில் கம்பீரமாக அமர்ந்தவள் சோம்பல் முறித்தாள். வாய்விட்டுச் சிரித்தாள். தன் தலைக்கேசத்தைக் கலைத்தாள். அதனுள்ளிருந்து ஒரு பட்டுச் சுருளை எடுத்தாள்.அவள் தோளில் புறா அமர்ந்தபோது தன் அலகுக்குள் மறைத்து வைத்திருந்த நக அளவு பட்டுச் சுருளை அவளது கேசத்தில் சாதுர்யமாக பதுக்கியிருந்தது!   (தொடரும்) கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம்   http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16634&id1=6&issue=20200228