Jump to content

இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிக நன்றாகப் போகிறது கதை அனால் எனக்கும் கூடச் சந்தேகம் தான் நீங்கள் எழுதும் கதைதானா என்று அண்ணா. தொடருங்கள்

 

 

நன்றி சுமே

நானே தான்.. :icon_idea:

 

 

நன்றி 

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

ஏன் விசுகண்ணா இவ்வளவு நாளும் இப்படி எழுதவில்லை?  தொடர்ந்து வாசிக்கிறேன்.

 

நன்றி தம்பி  நுணா

எழுதுவதன் தாக்கத்தை நானே இதை எழுதத்தொடங்கிபின் தான் உணர்ந்தேன்..

இரண்டு நாட்கள் எனக்கே தூக்கம் போச்சு

அந்தளவுக்கு என்னைப்பாதித்த  கரு இது...

 

தொடர்ந்திருங்கள்

அதிர்ச்சி  இனித்தான் இருக்கு. :icon_idea:

 

நன்றி ஐயா

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 97
  • Created
  • Last Reply

விசுகு.. இதற்குள் அவர் இவர் எழுதுவதை விட்டுப்போட்டு நீங்கள் எழுதுவதுதான் முறை.. அதுவே கதையை பூரணப்படுத்தும் வல்லமையும்கூட!!

 

நன்றி!!  :o  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசகண்ணா பயங்கரமான துப்பறியும் கதை பாணியில் செல்கிறது, ஒரே மூச்சில் வாசித்தேன்...

 

எழுத்து நடையும், விவரணையும் இரத்தின சுருக்கமாய் அருமையாய் உள்ளது...

 

தொடருங்கோ ராசா :)

 

 

நன்றி  தம்பி

இதுவும் ஒர  இளவயதின் விருது எனக்கு.. :icon_idea:

 

 

நன்றி தம்பி

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

மக்களே.. நோட் திஸ் பாய்ண்ட்.. ஒரு நல்ல எழுத்தாளனை வெளிக்கொண்டுவந்துள்ளேன்.. :D

 

ஏணிகளை மறப்பதில்லை

அதைச்சொல்ல வெட்கமேன்  ராசா... :icon_idea:  :icon_idea:

இல்லை இல்லை இதை அருமையாக தொடங்கி சிறப்பாக நடத்தி கொண்டு போகின்றீர், நீங்களே தன இதை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும், ஒரு நல்ல கதையை நல்ல முறையாக முடித்து வையுங்கள். தம்பியின்  வேண்டுகோள்.... plss

 (டிஸ்கி : குரு கூட சேராதையுங்கோ கதையின் போக்கை மாற்றி விடுவார் :D )

 

நன்றி தம்பி

அப்ப

ஆரம்பிக்கவேண்டியது தான்..

விசுகு.. இதற்குள் அவர் இவர் எழுதுவதை விட்டுப்போட்டு நீங்கள் எழுதுவதுதான் முறை.. அதுவே கதையை பூரணப்படுத்தும் வல்லமையும்கூட!!

 

நன்றி!!  :o  :lol:

 

நன்றியண்ணா

இதோ

தொடர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவர்கள் சொன்னது தான் தாமதம் தனது TAXI இன்  திறப்பை காவல்த்துறையினரிடம் கேட்டு வாங்கியவன் 
அங்கிருந்து புறப்பட்டான்
இல்லை பறந்தான்...
அவனது GPS - 25 நிமிடங்கள் காட்டியது அவனது வீட்டை அவன் அடைய....
 
வீட்டுக்கு முன்னால் TAXI யை  நிறுத்தியவன்
வீட்டுக்கதவு திறந்தே கிடப்பதைக்கண்டான்....
ஓடி உள்ளே நுளைந்தவனுக்கு அதிர்ச்சி.....
வீடு அல்லோல கல்லோலப்பட்டுக்கிடந்தது...
பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன
அப்படியே தனது அறைப்பக்கம் போனவன் 
அதிர்ச்சியால் உறைந்து போனான்...
 
கட்டிலில் அவள் அலங்கோலமாக மயங்கிக்கிடந்தாள்
பக்கத்தில் கதிரையில் லாவகமாக சாய்ந்தபடி
அந்த உயர் அதிகாரி  சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார்..................
 
இவனைக்கண்டதும்
வந்திட்டியா?
ஒருத்தியைக்கடத்தி
அடைத்து வைத்திருந்ததற்கு என்ன தண்டனை தெரியுமா என்றவாறு இவனை அணுகினார்...
 
தொடரும்... :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பாராட்டதக்க வகையில் உங்கள் எழுத்து நடை உள்ளது அண்ணா.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

முன்வந்து பார்க்கத் தவறினேன். ஆனாலும்,

பின்வந்து நின்று பார்த்தேன்.

நடையா இது நடையா 

ஒரு நாடகம் அன்றோ நடக்குது.

நான் ஒரு பெண்ணின் நடையை ரசித்துச் சொல்லவில்லை 

விரல்கள் தட்ட எழுந்து நடக்கும்

விசுகரின் எழுத்து நடையை ருசித்துச் சொன்னேன்.

அதில்தான் எத்தனை நாடகங்கள்.

வாழ்த்துக்கள்! விசுகர் அவர்களே!!

நெஞ்சம் தவிக்கவிடாமல் தொடருங்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

முன்வந்து பார்க்கத் தவறினேன். ஆனாலும்,

பின்வந்து நின்று பார்த்தேன்.

நடையா இது நடையா 

ஒரு நாடகம் அன்றோ நடக்குது.

நான் ஒரு பெண்ணின் நடையை ரசித்துச் சொல்லவில்லை 

விரல்கள் தட்ட எழுந்து நடக்கும்

விசுகரின் எழுத்து நடையை ருசித்துச் சொன்னேன்.

அதில்தான் எத்தனை நாடகங்கள்.

வாழ்த்துக்கள்! விசுகர் அவர்களே!!

நெஞ்சம் தவிக்கவிடாமல் தொடருங்கள். :rolleyes:

 

பாஞ்ச் அண்ணையும், தொடர் கதைகள் எழுதுவதில் வல்லவர், என்பதை....

தனது "வாலிப வயது குறும்புகள்" மூலம் நிரூபித்தவர்.

இப்போது... ஏன், அமைதியாக இருக்கின்றார், என்று தெரியவில்லை.

ஏதாவது... ஒன்றை, ஆரம்பியுங்க சார்.

வாசிக்க... நாம, ரெடியாக உள்ளோம். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இந்த கதைக்கு உடனேயே கொப்பி ரைறஸ் எடுங்கோ.

 

இல்லாவிட்டால் விரைவில் இந்தியாவில் திரைப் படமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நான் வேலையில் வாசிப்பது அங்கு எழுவதற்கு வசதி இல்லை. இங்கை சிலர் சொன்ன மாதிரி இது உண்மையில் விசுகர்தான் எழுதிறாரோ என்னுமளவுக்கு இருக்குது.அநடதளவுக்கு அருமை.இப்ப என்டை கவலை என்னவென்டால் அந்த நேரம் விசுகரோட சோ்ந்து ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டுட்டன் என்டு.

Link to comment
Share on other sites

பாஞ்ச் அண்ணையும், தொடர் கதைகள் எழுதுவதில் வல்லவர், என்பதை....

தனது "வாலிப வயது குறும்புகள்" மூலம் நிரூபித்தவர்.

இப்போது... ஏன், அமைதியாக இருக்கின்றார், என்று தெரியவில்லை.

ஏதாவது... ஒன்றை, ஆரம்பியுங்க சார்.

வாசிக்க... நாம, ரெடியாக உள்ளோம். :D  :lol:

 

கேள்வி ஞானத்தில் சங்கீதம் பாடுபவனைப்போல் நானும் ஏதோ குறும்புகளைக் கதை என்று எழுதினேன். குறும்புகளை எறும்பு கடித்துவிட்டது. பெண்களை அதிகமாக வருணித்ததால் வந்த வினை.  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கட்டிலில் அவள் அலங்கோலமாக மயங்கிக்கிடந்தாள்
பக்கத்தில் கதிரையில் லாவகமாக சாய்ந்தபடி
அந்த உயர் அதிகாரி  சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார்..................
 
இவனைக்கண்டதும்
வந்திட்டியா?
ஒருத்தியைக்கடத்தி
அடைத்து வைத்திருந்ததற்கு என்ன தண்டனை தெரியுமா என்றவாறு இவனை அணுகினார்...
 
தொடரும்...  :icon_idea:
 
வந்தவன்  கண்டபடி தாக்கத்தொடங்கினான்
அதிகாரமும்  பலமும் கொண்ட அவனை
முகமெட்டால் ஒன்றும் செய்யமுடியவில்லை....
 
அடியின் வலி  தாங்கமுடியாது கீழே விழுந்தவன்
அல்லா 
அறிவு தெரிந்ததிலிருந்து ஒரு நாளும்
ஒரு பொழுதிலும் உன்னை த்துதிக்க மறந்ததில்லையே
ஏன் இப்படி என்னை வதைக்கின்றாய் என அழத்தொடங்கினான்..
 
அல்லாவும் பார்த்தார்
அடப்பாவி மகனே நீ மட்டுமா என்னைக்கும்பிடுகிறாய்
அவனும் தானேயடா என்றவர்
முடிச்சை அவிழ்க்கும் தருணம் வந்ததாக முடிவெடுத்தார்........
 
முகமெட்டுக்கு முன்னால்  இருந்த சோடா மீது முகமெட்டின் பார்வையைப்படவைத்தார்.
அவளை எழுப்பினால் தான் தான் தப்பமடியும் என உணர்ந்த முகமெட்
சோடாவை எடுத்து அதை நன்றாக குலுக்கிவிட்டு மூடியைத்திறந்து அவள் முகத்தில் படவைத்தான்
மெல்ல கண் விழித்தவள்
ஓடிவந்து முகமெட்டின் பின்னால் ஒழிந்தபடி
இவனிடமிருந்து என்னைக்காப்பாற்று முகமெட் என கெஞ்சலானாள்...
அப்படியானால்  இவரை உனக்கு முன்பே தெரியுமா என அப்பாவியாக அழுதபடி கேட்டான்
ஆம்
இவன் தான் அவன்
என் புருசன் என்றாள்...........
:icon_idea:
தொடரும்............
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இடியப்பச் சிக்கலாய்க் கிடக்கு....! அந்தச் சிக்கல்தான்  இடியப்பத்த ருசித்துச் சாப்பிட வைக்குது...!! :)

Link to comment
Share on other sites

ஆகா.. விசுகர் எங்கயோ போவிட்டார்...  :D

சுப்பர்... தொடருங்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்! எனக்கு புல்லரிக்க வெளிக்கிடுது   :D .....தொடருங்கள்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பாராட்டதக்க வகையில் உங்கள் எழுத்து நடை உள்ளது அண்ணா.வாழ்த்துக்கள்.

 

நன்றி சகோதரி........

 

நேரத்துக்கும்   ஊக்கவிப்புக்கும்.....

முன்வந்து பார்க்கத் தவறினேன். ஆனாலும்,

பின்வந்து நின்று பார்த்தேன்.

நடையா இது நடையா 

ஒரு நாடகம் அன்றோ நடக்குது.

நான் ஒரு பெண்ணின் நடையை ரசித்துச் சொல்லவில்லை 

விரல்கள் தட்ட எழுந்து நடக்கும்

விசுகரின் எழுத்து நடையை ருசித்துச் சொன்னேன்.

அதில்தான் எத்தனை நாடகங்கள்.

வாழ்த்துக்கள்! விசுகர் அவர்களே!!

நெஞ்சம் தவிக்கவிடாமல் தொடருங்கள். :rolleyes:

 

 

நன்றி ஐயா

 

ஒரு சிறு கரு கிடைத்தது

அது புதுமையாகவும்

இதவரை கேள்விப்பட்டதற்கு  அப்பால்

சாதாரண வாழ்வில் நடைமுறையில் நடக்காத

கனவில் மட்டுமே  நடக்கும் சம்பவங்களின் உண்மைக்கதையாக இருந்தது

சும்மாவே அரைப்பம்

அவல் கிடைத்தால்..........

ஒரு முயற்ச்சி தான்

கொஞ்சம் மனிதன்

கொஞ்சம் மிருகம்  .... கலந்து........

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்

எல்லாம்  நீங்கள் இருக்கிறீர்கள் என்ற அடிப்படை ஊக்கம் தான் காரணம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இந்த கதைக்கு உடனேயே கொப்பி ரைறஸ் எடுங்கோ.

 

இல்லாவிட்டால் விரைவில் இந்தியாவில் திரைப் படமாகும்.

 

 

நன்றியண்ணா

 

உங்கள் வாழ்த்தும் ஒரு விருது எனக்கு...

ஆனால் அப்படியெல்லாம் ஆசையோ

படைப்பாளி ஆகணும் என்ற நினைப்போ இல்லை....

யாழ் மட்டுமே  எனது தளம்

அதில் உள்ளவர்கள் மட்டுமே எனது உலகம்

உறவுகள்...

 

அவர்களுடன் சேர்ந்து மட்டுமே எனது எழுத்து

ஆடல் பாடல்

கடிபடல்....  எல்லாமே....

அத்துடன் இவை அனைத்தும் நிறைவுபெறும்..

 

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்

 நான் வேலையில் வாசிப்பது அங்கு எழுவதற்கு வசதி இல்லை. இங்கை சிலர் சொன்ன மாதிரி இது உண்மையில் விசுகர்தான் எழுதிறாரோ என்னுமளவுக்கு இருக்குது.அநடதளவுக்கு அருமை.இப்ப என்டை கவலை என்னவென்டால் அந்த நேரம் விசுகரோட சோ்ந்து ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டுட்டன் என்டு.

 

நன்றி சுவைப்பிரியன்

எனக்கு சயீவனைத்தான் பிடிக்கும் (வளர்ந்து விட்டாரா)

 

 

படம் எடுக்க ஏன் மறந்தோம் என்று இப்ப தான் நானும் நினைக்கின்றேன்

அதற்கென்ன  இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகல

நீங்க வாறீர்களா?

நான் வரட்டுமா??

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்...

கேள்வி ஞானத்தில் சங்கீதம் பாடுபவனைப்போல் நானும் ஏதோ குறும்புகளைக் கதை என்று எழுதினேன். குறும்புகளை எறும்பு கடித்துவிட்டது. பெண்களை அதிகமாக வருணித்ததால் வந்த வினை.  :(

 

தொடர்ந்து எழதுங்கள் ஐயா

நாங்கள் கடிக்காத பொருளா அது...??

 

ஆனால் இந்தக்கதையில் முழுமையான 100வீத மரக்கறி மட்டுமே...

முட்டை

பால் கூட தவிர்க்கப்பட்டுள்ளது

(சிலருக்கு ஏமாற்றத்தைத்தந்துள்ளது :D  :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடராக இருந்தால் வாசிக்க ஆரம்பித்துக் காத்திருக்கமுடியாது என்று முன்னர் வாசிக்கவில்லை. இன்றுதான் வாசித்தேன்! Indie படம் பார்த்தது மாதிரி இருந்தது. தொடருங்கள் விசுகு ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

மெல்ல கண் விழித்தவள்
ஓடிவந்து முகமெட்டின் பின்னால் ஒழிந்தபடி
இவனிடமிருந்து என்னைக்காப்பாற்று முகமெட் என கெஞ்சலானாள்...
அப்படியானால்  இவரை உனக்கு முன்பே தெரியுமா என அப்பாவியாக அழுதபடி கேட்டான்
ஆம்
இவன் தான் அவன்
என் புருசன் என்றாள்...........
:icon_idea:
தொடரும்............

 

 

முக்கோண கதையாக.... அதிரடி, திருப்பங்களுடன் கதை நகர்கின்றது.

இதில் முகமட்டுக்கு... ஏழரைசனி உச்சத்திலை நிக்குது  போல் உள்ளது. :icon_idea:

 

அந்த காவல்துறை அதிகாரியின்  மனைவியை.... காலையில் இருந்து காணவில்லை,

அதை தேடுவதை விட்டு விட்டு... என்ன இழவுக்கு .... வேலைக்கு வந்தவர்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை அலுவலகத்திலிருந்த முகமெட்டுக்கு மேலும் கவலை படரத்தொடங்கியிருந்தது..
அந்த உயர் அதிகாரியிடம் தான் உண்மை அனைத்தையும் சொன்னது சரியா?
ஆபத்தை விலைக்கு வாங்கிவிட்டேனா?
அதற்கொரு காரணம் இருந்தது
அந்த உயர் அதிகாரி புறப்படும் போது
இவனது உடமைகள் அனைத்தையும்  (தொலைபேசி பணம் சிகரெட் உட்பட) 
தன்னுடன் எடுத்தச்சென்றதும்
அவர் வாகனத்தில் புறப்படும் போது வாகனத்தின் நாலு ரயர்களும் சுற்றியவிதம்
புழுதியை வாரி எறிந்தவிதம்......
இவனுக்குள் ஒரு பயத்தை உருவாக்கியிருந்தது..

 

இந்த வரிகளை எழுதியவுடன் நான் ஊகித்துவிட்டேன் அதிகாரிதான் கணவன் என. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இடியப்பச் சிக்கலாய்க் கிடக்கு....! அந்தச் சிக்கல்தான்  இடியப்பத்த ருசித்துச் சாப்பிட வைக்குது...!! :)

 

அப்படியானால்  வெற்றி தான்....

நன்றியண்ணா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும்.....

ஆகா.. விசுகர் எங்கயோ போவிட்டார்...  :D

சுப்பர்... தொடருங்கள்!!

 

எல்லாம் உங்கள் போன்ற ஈசன்கள் இங்கே இருக்கிறீர்கள் என்ற நாரதரின் விளையாட்டுக்களே....

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்....

விசுகர்! எனக்கு புல்லரிக்க வெளிக்கிடுது   :D .....தொடருங்கள்.  :)

 

 

இதுக்கே இப்படியென்றால்

நீங்க எழுதத்தொடங்கினால்... :icon_idea:

 

நன்றி  அண்ணா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்....

தொடராக இருந்தால் வாசிக்க ஆரம்பித்துக் காத்திருக்கமுடியாது என்று முன்னர் வாசிக்கவில்லை. இன்றுதான் வாசித்தேன்! Indie படம் பார்த்தது மாதிரி இருந்தது. தொடருங்கள் விசுகு ஐயா!

 

களம் கொஞ்சநாளாக தேவையில்லாத  விடயங்களில்

தேவையற்றவர்களுடன் முட்டுப்பட்டுக்கொண்டிருந்தது

நான் ஒரு பக்கம் ஒதுங்கி

என்னவரையும் இந்தப்பக்கம் இழுக்கும் முயற்சி...

 

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கோண கதையாக.... அதிரடி, திருப்பங்களுடன் கதை நகர்கின்றது.

இதில் முகமட்டுக்கு... ஏழரைசனி உச்சத்திலை நிக்குது  போல் உள்ளது. :icon_idea:

 

அந்த காவல்துறை அதிகாரியின்  மனைவியை.... காலையில் இருந்து காணவில்லை,

அதை தேடுவதை விட்டு விட்டு... என்ன இழவுக்கு .... வேலைக்கு வந்தவர்.  :D

 

 

அந்த  கணவன் பற்றி  சில முடிச்சுக்களை போடவேண்டியிருந்தது...

ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவரைத்தூக்கி நிமிர்த்தி எழுதாமல் பார்த்துக்கொண்டேன்

சுவாரிசியம் குறைந்தவிடும் என்பதால்...

 

உங்களது கேள்விக்கு

ஒன்றில் அல்லா வழி காட்டுவார்தானே என நினைத்து வேலைக்கு வந்திருக்கலாம் :lol:

அல்லது

அவரது எல்லைக்கோட்டை

அவரது மனைவி கடக்கமுடியாது என்ற நம்பிக்கையாக இருந்திருக்கலாம்.. :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வரிகளை எழுதியவுடன் நான் ஊகித்துவிட்டேன் அதிகாரிதான் கணவன் என. :D

 

 

 

நன்றி

சுமே அல்லே....

 

அதற்காகத்தான் அதில் ஒருக்கா நிறுத்திகண்டுபிடித்தீர்களா எனக்கேட்டிருந்தேன்...

 

நன்றி  சுமே

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் ...

 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மெல்ல கண் விழித்தவள்
ஓடிவந்து முகமெட்டின் பின்னால் ஒழிந்தபடி
இவனிடமிருந்து என்னைக்காப்பாற்று முகமெட் என கெஞ்சலானாள்...
அப்படியானால்  இவரை உனக்கு முன்பே தெரியுமா என அப்பாவியாக அழுதபடி கேட்டான்
ஆம்
இவன் தான் அவன்
என் புருசன் என்றாள்...........
:icon_idea:
தொடரும்........
 
முகமெட்டுக்கு தலை சுற்றியது.
ஒழிக்க இடமில்லாமல் விதானையிடம் ஒழித்துவிட்டேனோ??
இவனிடம் எல்லாவற்றையும் சொல்லமுடிவெடுத்தது எவ்வளவு முட்டாள்தனம்
அந்த முடிவுக்கு ஏன் வந்தேன்??
ஏன் இவ்வாறு தப்புக்கு மேல் தப்பாகவே எல்லாம் நடக்கிறது?
இதிலிருந்து தப்புவது எப்படி என யோசித்தபடி இருந்தானே ஒழிய 
அவள் தன் பின்னால் தன்னைக்கட்டிப்பிடித்தபடியிருப்பதை உணர மறந்தான்...
 
திடீரென முகமெட்டின் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது
அவளையும் யாரோ காலால் உதைத்துத்தள்ளுவது தெரிந்தது
வலியுடன் திரும்பிப்பார்த்தான்
அவனது மாமியார் காளி கோலத்தில் நின்றார்.....
பக்கத்தில் முகமெட்டின் மனைவி குழந்தை 
முகமெட்டின் தம்பியார் நின்றிருந்தனர்.....
முகமெட்டின் மனைவியின் முகத்தில் பெருங்கோபம்
அழுகை...
 
கவனித்த முகமெட்
மனைவியிடம் பேச முயன்றான்
சீ  என்றவள் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டாள்...
 
எல்லாமே போச்சு
என் வாழ்க்கை முடிந்தது
எல்லோருமே எனக்கெதிராக நிற்கின்றனர் என்பதை உணர்ந்தவன்
வாசலில் காவல்த்துறையினர் வருவதைக்கண்டு 
அப்படியே மயங்கிவிழுந்தான்.....
 
தொடரும்.......
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கௌரவமாய் மனிசிட்ட உதை வாங்கியிருக்கலாம், மாமியாரிட்ட உதை வாங்குவது கொஞ்சம் கேவலம் மாதிரி இல்லையா ....ம்...ம்... முழுக்க முழுகினாப் பிறகு முகமட்டுக்கு முக்காடு எதற்கு...!! :lol::)

Link to comment
Share on other sites

இவ்வாறாக மாமியாரிடம் உதைவாங்கிய முகமட் பிரான்சில் அகதியாக தஞ்சம் கோரினான்.. :unsure: 'என்னைப்போல் ஒருவன்' எனும் அடிப்படையில் விசுகு அண்ணாவிடம் கதை சொன்னான்.. :icon_idea::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.