Jump to content

தமிழ் கதைத்தால் மட்டும் போதாதாம்?!


Recommended Posts

புலத்தில் பிறந்தவர்களும், வளர்ந்தவர்களும் -அவமானப்படும் விடயம்

எனக்கு நடந்தது, என்னை சுற்றியிருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு நடக்கும் ஒரு விடயம். (புலத்தில் பிறந்து வளர்பவர்கள், வளர்பவர்கள்)

பிரச்சனை என்ன என்றால்?

நாங்கள் தமிழ் கதைப்பது சரி ஆனால் யாழ்பாண தமிழ் கதைப்பதில்லாயாம்..அதாவது jaffna Slang . எனக்கு அதற்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. (சோழியன் அண்ணாட்டா கேட்டிருக்கன்...பதில் வந்ததும் மாற்றப்படும்)

தமிழ்கதைத்தால் போதாதா? இப்படி சொன்னால், தமிழ் கதைக்கும் பிள்ளை நாளை தமிழ் கதைக்க கூச்சப்படும்...யாராவாது ஏதாவது சொல்வார்களோ என..

காலை முதல் மாலை வரை வெளியே பாடசாலை, வகுப்புகள் என்று இருக்கும் ஒரு பிள்ளை, தமிழ் கதைத்தாலே அது பாராட்டபட வேண்டிய விடயம் இல்லையா?

அப்படி யாழ்பாண தமிழ் தான் கதைத்தாக வேண்டும் எனில்...அதை சொல்ல ஒரு முறை இல்லையா?

எனக்கு புரியவேயில்லை?

உதாரணம்...எங்கள் தூரத்து உறவுக்காரர்கள்...வீட்டிற்கு ஒரே பெண்... மருத்துவர்....ஆங்கிலத்தில் தான்கதைப்பா... எங்கள் வீட்டில் அனைவரும் தமிழில் கதைப்பதை பார்த்து..ஒரே ஆச்சர்யம்..நான் தமிழ் பாடசாலையில் எப்படி படித்தேன் என்று கேட்டா

தானும் தமிழ் படிக்க போனதாகவும்...ஆசிரியர் தன் தமிழைபார்த்து சிரித்து தன்னைஅவமானப்படுத்தியதால்...த

Link to comment
Share on other sites

வணக்கம் தூயா!

இது பற்றி விவாதிக்க வேண்டிய தேவையே இல்லை.

புலத்தில் பிறந்து வளர்ந்த நிங்கள் இவ்வளவு சரளமாக தமிழில் கருத்தாடுவது குறித்து உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

அடுத்ததாக யாழ்ப்பாணத் தமிழ் பெசச் சொல்பவர்களிடம் அவர்கள் வெள்ளையினத்தவரைப் போன்ற நடையுடன் ஆங்கிலம் பேச முடியுமா என்று கேளுங்கள்.

முக்கியமாக மொழியென்பது கருத்துப் பகிர்விற்கான ஊடகமே.

நொட்டை பிடிப்பவர்கள் எதிலும் பிடிக்கத்தான் செய்வார்கள்.

சிலவேளைகளில் அவர்களது பிள்ளைகளால் தமிழ் பேச முடியாமல் இருப்பதால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பாகக் கூட இருக்கலாம்.

இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாதீர்கள்.

தமிழில் கதையுங்கள். சின்னஞ் சிறியவர்களுக்கும் தமிழ் படிப்பியுங்கள். இன்னும் இன்னும் உங்கள் எழுத்தாற்றலை வளர்த்தக்கொள்ளுங்கள்

அன்புடன்

மணிவாசகன்.

(உங்களுடைய கடைசி வசனத்தைக் கவனிக்காமல் கருத்துச் சொல்லிவிட்டேன். பெரயவர்கள் மட்டும் தான் கருத்துச் சொல்ல முடியுமா?)

Link to comment
Share on other sites

:mellow::rolleyes::rolleyes: நீங்களும் பெரியவங்கதான்

நான் பரவாயில்லை.....அந்த அக்கா, தமிழில் விருப்பம் இருந்தும் தமிழ் தெரியாமல்

Link to comment
Share on other sites

தூயா நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து 20 வருடம் வாழ்ந்து பின்னர் இந்தியாவில் சில காலம் வாழ்ந்து, பின்னர் லண்டனுக்கு புலம் பெயர்ந்துள்ளேன். எனக்கு வாய்த்த துணையோ அன்னிய மொழியை சேர்ந்தது. இப்போது நான் பேசும் தமிழைகேட்பவர்கள் முதலில் கேட்பது, நீர் என்ன மட்டக்களப்போ அல்லது மலையகமோ என்றுதான். இவங்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வெறும் காலவிரையம் மட்டும்தான்.

Link to comment
Share on other sites

தூயா நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து 20 வருடம் வாழ்ந்து பின்னர் இந்தியாவில் சில காலம் வாழ்ந்து, பின்னர் லண்டனுக்கு புலம் பெயர்ந்துள்ளேன். எனக்கு வாய்த்த துணையோ அன்னிய மொழியை சேர்ந்தது. இப்போது நான் பேசும் தமிழைகேட்பவர்கள் முதலில் கேட்பது, நீர் என்ன மட்டக்களப்போ அல்லது மலையகமோ என்றுதான். இவங்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வெறும் காலவிரையம் மட்டும்தான்.

ஆகா உங்களுக்கும் அதே கதியா?? நீங்கள் சொல்வது உண்மை தான்..ஆனாலும் சின்ன வயதில் இப்படி சொல்லும் போது அதை கால விரயம் என நினைக்கமனது வளர்ந்து இருக்காதே...

என்னை பொருத்தவரை நாங்கள் "ஒரு விதத்தில்" ஒதுக்கப்பட்டவர்கள்...என் குடும்பம், உறவுகளை தவிர்த்த ஆட்களை பார்க்கும் போது நான் அதை அனுபவித்திருக்கின்றேன்..

வெளிநாட்டில் பிறந்த பிள்ளை என்றாலே..தழிலை கொலை செய்வதும், பெடியங்களோட சுற்றுவதும் தான் தொழில் என நினைப்பவர்கள் தான் ஏராளம்... அது நிஜம் தானே

Link to comment
Share on other sites

ஒருவருடைய பேச்சுநடையை (Slang) அவர் வாழும் சூழலே தீர்மானிக்கின்றது. ஈழ மற்றும் இந்திய அவர்கள் வாழும் இடத்தை பொறுத்து பல்வேறு பேச்சு நடைகள் பாவனையில் உள்ளன. இதில் ஒரு குறிப்பிட்ட பேச்சு நடையை தான் பின்பற்ற வேண்டும் என்று புலம் பெயர்ந்து வாழும் சந்ததியினரை கட்டாயப்படுத்த தேவையில்லை. அது யாழ்பாண பேச்சு நடையாய் இருந்தாலென்ன அல்லது மதுரை பேச்சு நடையாய் இருந்தாலென்ன? அவர்கள் முடிந்தவரையில் பிறமொழி கலப்பில்லாமல் சொற் சுத்தமாக பேசினால் அதுவே போதுமானது என்று நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொழி என்பது என்ன? தகவல்களை பரிமாற்றம் செய்வதற்கு ஒரு முறை... எப்படி பேசினால் என்ன.. கேட்பவருக்கு புரிந்தால் சரி. தூய்ஸ், அதை சொல்பவரின் தமிழ் புலமையை கேட்டுப்பாருங்கள்... :D:D

Link to comment
Share on other sites

தூயா....யதார்த்ததை மீறி. குதிரையை இழுத்து கொண்டு வந்து தண்ணி குடுக்க முக்கிறவாறு... ஒன்றையும் செய்யமுடியாது...சூழலின் தாக்கத்தை மீறி... வானத்திலிருந்து ஒன்றையும் கொண்டு வர முடியாது....புலத்தில் நீங்கள் தமிழ் பேசுவதையே பாராட்டவேண்டும் ...நடை சரியில்லை என்பவரை புறந்தள்ளி விடுங்கள்..

எனது எழுத்துகளில் கட்டுரைகளில் ஆங்கில சொல் கலந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள்...கதைய

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது சரி தான்...... சிறார்களுக்கு இதையெல்லாம் புரிந்துகொள்ளும் மனது இருப்பதில்லையே...\

ம்ம்ம் பாவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா புலம்பெயந்திருக்கும் நாங்கள் எங்கள் இளையவர்கள் யாழ்ப்பாணத்தமிழ் கதைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். முடிந்தவரை தமிழ் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்பதே எமக்குப் பெருமை.

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம் சில பெற்றவர்களே தங்கள் பிள்ளைகள் தமிழ் படிப்பதை விரும்பாத காலம் தானே இது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்டப்பட்டு தமிழ் படித்து கதைத்தால் அதிலும் யாழ்ப்பாணத்தமிழில் கதைக்கோணும் எண்டால் எப்படி

அதொட கொஞ்சம் கதைத்தால் போதும் ஊரில்ல எந்த இடம் எண்டு உடனே கேட்டும் விடுவார்கள்

எல்லா இடத்திலயும் கொஞ்ச கொஞ்ச காலம் வாழ்ந்து ஊரே இல்லாதபோது எந்த இடத்தை சொல்வது

Link to comment
Share on other sites

அது மட்டுமா? சாதி என்ன? வாதி என்ன? என்று எத்தனை கேள்விகள்..

Link to comment
Share on other sites

  • 1 year later...

கஸ்டப்பட்டு தமிழ் படித்து கதைத்தால் அதிலும் யாழ்ப்பாணத்தமிழில் கதைக்கோணும் எண்டால் எப்படி

அதொட கொஞ்சம் கதைத்தால் போதும் ஊரில்ல எந்த இடம் எண்டு உடனே கேட்டும் விடுவார்கள்

எல்லா இடத்திலயும் கொஞ்ச கொஞ்ச காலம் வாழ்ந்து ஊரே இல்லாதபோது எந்த இடத்தை சொல்வது

தற்செயலாக இதை படித்தேன்..எத்தனை வலிதரும் நிஜம் இது... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம் சில பெற்றவர்களே தங்கள் பிள்ளைகள் தமிழ் படிப்பதை விரும்பாத காலம் தானே இது!!!

உண்மை தான் தூயா , தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பேச தெரியாது என்று பீற்றிக்கொள்ளும் முட்டாள் பெற்றோர்களும் உள்ளனர் .

ஏழு , எட்டு வயதிற்குள் ஒரு குழந்தை பல மொழிகளை இலகுவாக கிரகித்து அறியக்கூடிய தன்மை உள்ளது என்பது இவர்களுக்கு ஏனோ புரிவதில்லை .

Link to comment
Share on other sites

இன்றுவரை என் ஒவ்வொரு படைப்பிற்கும் சில பதில்கள் இப்படி வருவதுண்டு.

"உனக்கு தமிழே தெரியாது, இப்படி எழுதி ஆக வேண்டும் என்று யார் அழுகின்றார்கள்" என்று அடிக்கடி ஒரு மறுமொழி என் வலைப்பூவிற்கு வருவதுண்டு :rolleyes:

Link to comment
Share on other sites

இங்கு பலர் குறிப்பிட்டது போல, பிறமொழி அதிகமாக பேசப்படும் சூழலில் இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள் தமிழில் பேசுவதே பெரிய விடயம். அதில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசுவது என்பது மிக மிக கடினமான விடயம். இதை உணர்ந்து பெரியோர்கள் குற்றம் காண்பதை விடுத்து, அவர்களை ஊக்குவிப்பதே பயனுள்ளது.

இப்படி குறை சொல்வோர் இருக்கத்தான் செய்வார்கள். நான் நினைக்கிறேன், இப்போதெல்லாம் இப்படி குறை சொல்லும் வழக்கம் அருகி வருகிறது. கொஞ்ச காலத்தில் இல்லாமல் போய்விடும்.

Link to comment
Share on other sites

இன்றுவரை என் ஒவ்வொரு படைப்பிற்கும் சில பதில்கள் இப்படி வருவதுண்டு.

"உனக்கு தமிழே தெரியாது, இப்படி எழுதி ஆக வேண்டும் என்று யார் அழுகின்றார்கள்" என்று அடிக்கடி ஒரு மறுமொழி என் வலைப்பூவிற்கு வருவதுண்டு :rolleyes:

இப்படி எழுதுபவர்கள் ஒன்றில் பொறாமை கொண்டவர்களாக இருக்க வேண்டும், அல்லது நல்லதை ரசிக்க தெரியாது. இவர்களின் கருத்துகளை செவிமடுப்பது வீண்...

உங்களின் வலைப்பக்கத்துக்கு சென்றிருக்கிறேன். பயனுள்ள தகவல்கள் நல்ல தமிழ் மொழி நடையில் உள்ளனவே... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்செயலாத் தமிழீழம் கிடச்சால் யாழப்பாணத் தமிழ்தான் உத்தியோக மொழியாயிரிக்குமா?

நினைக்கக் கொஞ்சம் பயமாயுமிரிக்கி. பயத்துக்குள்ள பருப்பக் கலந்த மாதிரி சிரிப்பும் வருகிது.

கடவுளே எங்களக் காப்பாத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களாகிய எங்கள் மத்தியில் மட்டும் இந்த பிரச்சனை இல்லை... ஆங்கிலேய நண்பர் ஒருவர் Scottish பொம்பிளையை திருமணம் முடித்து இங்கே என்னுடன் வேலை செய்கின்றார்.... அவருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை... ஓரிரு மாதங்களுக்கு முன்னர் அவரது பிறந்த ஊருக்கு நண்பர், அவருடைய மனைவி, நான், இன்னுமொரு நண்பர் சென்றிருந்தோம்.... அந்த குழந்தை பேசுவதை கவனித்த நண்பரின் தாயும் தந்தையும்..."oh god she is speaking scottish" என்று பெரும் மன வருத்தப்பட்டார்கள்.... இதே நிலமை என்னுடன் வேலை செய்யும் ஆஸி நண்பருக்கும் ஏற்பட்டது... தனது தாய் தன் மகள் Scottish பேசுவதால் பெரும்பாலும் பேச விரும்பவில்லை என்று கூறினார்...

ஆக மொத்தத்தில் தான், தனது அடையாளத்தை பிரதிபலிக்கும் பேச்சு நடை போன்றவற்றை மற்றவர்களை விட சிறந்ததாக நினைப்பவர்க்ள் தமது சந்ததியினரிடத்தில் அது இல்லாது போய் விடுமோ என்ற ஒரு பயத்த்தில் இந்த பேச்சு நடையை திணிப்பதுண்டு....

ஒரு முக்கிய விடயம் என்னவெனில், பேச்சு நடை மற்றும் தொனி ஒருவரை பற்றி கணிப்பிடுவதில் முக்கிய பங்கு வகுக்கின்றன.. உதாரணமாக ஒரு கணக்கெடுப்பில் Scottish பேச்சு நடை மிக மிக நம்பகத்தன்மை வாய்ந்தது என பலர் கூறி இருந்தார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 வருடம் தமிழ்ப் பேசும் இடத்தில் பிறந்து வளர்ந்து தமிழில் படித்த ஒருவர் சொந்த மனைவியையே அஃறினை ஆக்கும் போது, வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகள் எந்தத் தமிழ் கதைத்தாலென்ன, எப்படிக் கதைத்தாலென்ன!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தாய்தான் நம்மளையெல்லாம் ஒண்டு சேத்து தேசிய முனைப்போட சிந்திச்சுச் செயலாற்ற வைப்பாவெண்டு நினைச்சால் அவட புள்ளையள் சும்மா தேள்வையில்லாம இந்தப் பிரச்சனையளக் கொண்டுவந்து நான்பெரிசி நீபெரிசி எண்டு காட்ட வெளிக்கிட்டு எல்லாத்தையுங் கூழாக்கிறதிலதான் நிக்கிறாங்க.

தேசிய முனைப்புக்கு முதலாவது குந்தகமாக நிக்கிறது இந்தத் தேள்வையில்லாத விசயந்தான் பாருங்கோ.

இந்த விசயத்தத் தொடக்கி வச்சி எல்லாத்தையும் நரகலாக்கிறது தமிழ்த்தாயிர எந்தப் புள்ள எண்டிறது எல்லாருக்கும் நல்லாத் தெரியும்.

நாம என்ன செய்யிற. விதி போற போக்கு. மாத்தேலாமத்தான் போகும் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20 வருடம் தமிழ்ப் பேசும் இடத்தில் பிறந்து வளர்ந்து தமிழில் படித்த ஒருவர் சொந்த மனைவியையே அஃறினை ஆக்கும் போது, வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகள் எந்தத் தமிழ் கதைத்தாலென்ன, எப்படிக் கதைத்தாலென்ன!!!

இது எல்லாம் அனுபவித்தால் தான் தெரியும் உங்களுக்கு....

நான் திருமணம் செய்யவிருக்கும் பெண் பிரித்தானிய பெண் (Scottish). ஒருமுறை எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு போன போது.. ஒரு வயதானவரை பார்த்து.. நீ எப்படி இருக்கே என்று கேட்டு எல்லோரையும் பெரும் தர்ம சங்கடத்தில் விட்டு விட்டார். வேற்று இன பெண்களை திருமணம் செய்வதால் பல பிரச்சனைகள் இருக்க தான் செய்கின்றது...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.