• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Athavan CH

இது கடவுள் தந்த பரிசு: உற்சாகத்தில் ‘சூப்பர் சிங்கர்’ ஜெஸ்ஸிகா

Recommended Posts

  • jessica_2324449g.jpg
    ஜெஸ்ஸிகா
 
‘‘நம்முடைய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் அடிக்கடி கூறுவார்கள். இறுதிப்போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன் என் பெற்றோர், ‘போட்டியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசை இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுக்கலாமா?’ என்று கேட்டார்கள்.
 
அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற கிடைத்த சந்தர்ப்பமாகத்தான் இதைக் கருதுகிறேன். போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி இங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் சிறிது நிதியை ஒதுக்கியுள்ளோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெஸ்ஸிகா.
 
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியான இவர், விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 4’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதற்காக தனக்கு பரிசாகக் கிடைத்த 1 கிலோ தங்கத்தின் மூலம் கிடைக்கும் ரூ.30 லட்சத்தை இலங்கையில் வாழும் ஆதரவற்ற தமிழ்க் குழந்தைகளின் வளர்ச்சிக்கு வழங்கியுள்ளார்.
 
இசையின் மீது உங்களுக்கு ஆர்வம் வரக் காரணம் என்ன?
 
இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள பருத்தித்துறைதான் எங்களின் சொந்த ஊர். அப்பா, அம்மா, பாட்டி எல்லோரும் அங்கே வசித்தவர்கள்தான். அப்பாவுக்கு கனடாவில் வேலை கிடைத்ததால் சிறுவயது முதல் நான் கனடாவில்தான் இருக்கிறேன்.
 
அங்கே டொரண் டோவில்தான் படிக்கிறேன். ஒன்றிரண்டு முறை எங்கள் சொந்த ஊருக்கு போய் வந்திருக்கிறேன்.
 
என் அப்பா இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடுவார். அந்த ஆர்வம்தான் எனக்குள் ளும் இசையை விதைத்தது. பள்ளிக்கு போகும்போதே பாட்டு வகுப்புக்கும் போக வேண் டும் என்று விரும்பினேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கடந்த ஒரு ஆண்டு முழுவதும் சென்னையில் இருந்துள்ளேன்.
 
என் அம்மாவும் வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு என்னுடன் இருந்தார். அப்பா, அடிக்கடி வந்து என்னை பார்த்துவிட்டு போனார். இப்படி ஒரு பெற்றோர் கிடைத்ததும் என் வெற்றிக்கு முக்கிய காரணம்.
 
‘சூப்பர் சிங்கர்ஸ்’ இறுதிப்போட்டியில் ‘விடைகொடு எங்கள் நாடே’ பாடலை நீங்களே தேர்வு செய்து பாடினீர்களா?
 
இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற பாடல் அது என்பது இதை நான் தேர்வு செய்ததற்கு முதல் காரணம். இரண்டாவது காரணம், நான் இறுதிப் போட்டியில் இந்தப் பாடலை பாடவேண்டும் என்று எங்கள் நாட்டு மக்கள் பலரும் குறுஞ்செய்தி மூலமாக கேட்டனர்.
 
இப்படி எங்களது உணர்வுகள் மொத்தமும் ஒன்று சேர்ந்ததால் இந்தப் பாடலை தேர்வு செய்தேன்.
 
முதல் பரிசு கிடைக்காததால் வருத்தப் படவில்லையா?
 
நிச்சயமாக இல்லை. கனடாவில் இருந்து வந்து இறுதிப்போட்டி வரைக்கும் சென்றதையே பெரிய வெற்றியாக நினைக்கிறேன். அப்பா, அம்மா இரு வருமே ஒரு கட்டத்தில் ஊருக்கு போகலாம் என்று முடிவெடுத்தார் கள்.
 
ஆனால் என் ஆசைக்காக மட்டுமே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டனர். இந்த வெற்றி அவர்களுக்கும் மகிழ்ச்சி யளித்துள்ளது. இது எனக்கு கடவுள் தந்த பரிசு.
 
இந்த வெற்றியால் திரைப்பட பின்னணிப் பாடகியாகும் ஆசை பிறந்திருக்குமே?
 
கண்டிப்பாக. அதே நேரத்தில் படிப்பையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். இரண்டையும் சரி நிகராக்கி பயணிக்க வேண்டும் என்பது என் ஆசை. இந்தப் போட்டியில் கலந்து கொண்டதால் எஸ்.பி.பி அங்கிள், ஜானகி அம்மா, சித்ராம்மா, மனோ அங்கிள் இப்படி பல பாடகர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
 
என்னுடன் போட்டியில் கலந்துகொண்ட ஸ்ரீஷா உள்ளிட்ட தோழிகளை விட்டுப் பிரியப் போகிறேன் என்பதுதான் வருத்தமாக உள்ளது. இங்கே பாட்டுப் பாட திரும்பி வருவதன் மூலம்தான் இதையெல்லாம் மீண்டும் பெற முடியும். அதற்காகவே நிறைய பாடல்களைப் பாட வேண்டும்.
 
யாருடைய இசையில் பாட ஆசை?
 
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். யாரோட இசையில் முதல் பாட்டு அமையப்போகிறதோ என்கிற எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே போகிறது.
 
தமிழ் பேச கற்றுக் கொண்டேன்
 
சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசை வென்ற கையோடு பெங்களூருவுக்கு பறந்துவிட்டார் ஒன்பது வயதான ஸ்பூர்த்தி. தொலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டபோது உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
 
‘‘ ஒரு ஆண்டுக்கு முன் எனக்கு தமிழில் பேசத் தெரியாது. இந்த போட்டிக்காக தமிழ் கற்றுக்கொண்டதால், இன்று தடையில்லாமல் தமிழ் பேசுகிறேன். சூப்பர் சிங்கர் போட்டியால் பல நாட்கள் பள்ளிக்கு போக முடியவில்லை. இந்த நேரத்தில் என் பள்ளித் தோழிகள்தான் தேர்வுகளுக்கான பாடங்களை சொல்லிக்கொடுத்தார்கள். அவர்களை இந்த நேரத்தில் நினைத்துப்பார்க்கிறேன்.
 
முதல் மூன்று இடத்தில் ஒரு இடத்தை பிடிப்பேன் என்ற நம்பிக்கையோடு களத்தில் இறங்கிய எனக்கு முதல் பரிசாக வீடு கிடைத்திருக்கிறது. கடவுளை நேசிப்பதைப்போல இசையை நேசித்ததால் கிடைத்த பரிசு இது’’ என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஸ்பூர்த்தி
 
தமிழ் பாடகர்கள் ஒதுக்கப்படுகிறார்களா?
 
‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர்களுக்கு வேண்டுமென்றே பரிசு தராமல் ஒதுக்குவதாகவும் பிற மாநிலத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தலைமை பொறுப்பாளர் பிரதீப்பிடம் கேட்டோம்.
 
‘‘இசைக்கு மதம், மொழி எதுவும் கிடையாது. தமிழில் சிறப்பான 500 பாடல்களை தேர்வு செய்து பார்த்தால் அந்தப்பாடல்களில் நிச்சயம் எஸ்.பி.பி, சுசிலா உள்ளிட்ட பாடகர்களின் பாடல்கள் இல்லாமல் இருக்காது. இவர்கள் வேற்றுமொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான்.
 
தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், சங்கர்மகாதேவன் உள்ளிட்ட கலைஞர்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கிறார்கள். இதெல்லாம் இசைக்கு எல்லையே இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
 
நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் தமிழ் உச்சரிப்பு, வார்த்தைகளை வெளிப்படுத்தும் விதம் வரைக்கும் எல்லாவற்றையும் வைத்துதான் அவர்கள் போட்டியில் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்கள். தமிழ் மொழியே தெரியாமல் வந்து, நிகழ்ச்சியின் இறுதியில் அழகாக தமிழ் பேசக் கற்றுப்போகிறார்கள். அது நமக்கு பெருமையான ஒன்றுதானே” என்றார் அவர்.
 
 

Share this post


Link to post
Share on other sites

எப்ப பார்த்தாலும் குறை பிடிக்கிறதே ரதியின் வேலை என்று நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. உண்மையிலேயே "ஜெசிக்காவின்" அப்பா வேலை கிடைத்தோ கனடாவுக்கு வந்தவர்?...அகதியாக வந்தால் அதைச் சொல்வதில் என்ன தயக்கம்?...பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு "விடை கொடு எங்கள் நாடே" என்னும் பாட்டை ஜெசிக்காவை பாட வைச்சவர்கள் என்று நான் கேட்க மாட்டேன். கேட்டால் எந்த பாட்டை பாடுவது என்பது அவர்களது இஸ்டம் என கொஞ்சப் பேர் வக்காலத்து வாங்க வந்து விடுவார்கள் :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

எப்ப பார்த்தாலும் குறை பிடிக்கிறதே ரதியின் வேலை என்று நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. உண்மையிலேயே "ஜெசிக்காவின்" அப்பா வேலை கிடைத்தோ கனடாவுக்கு வந்தவர்?...அகதியாக வந்தால் அதைச் சொல்வதில் என்ன தயக்கம்?...பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு "விடை கொடு எங்கள் நாடே" என்னும் பாட்டை ஜெசிக்காவை பாட வைச்சவர்கள் என்று நான் கேட்க மாட்டேன். கேட்டால் எந்த பாட்டை பாடுவது என்பது அவர்களது இஸ்டம் என கொஞ்சப் பேர் வக்காலத்து வாங்க வந்து விடுவார்கள் :icon_mrgreen:

 

ஏன் ரதி, ஊரில் இருந்து கனடாவுக்கு வருகின்ற எல்லாத் தமிழர்களும் அகதியாகவா வருகின்றனர்?

Share this post


Link to post
Share on other sites

ஏன் ரதி, ஊரில் இருந்து கனடாவுக்கு வருகின்ற எல்லாத் தமிழர்களும் அகதியாகவா வருகின்றனர்?

நான் அப்படிச் சொல்லவில்லை. அவர் எப்படிப் போனவர் என்று தான் கேட்கிறேன்?

Share this post


Link to post
Share on other sites

நான் அப்படிச் சொல்லவில்லை. அவர் எப்படிப் போனவர் என்று தான் கேட்கிறேன்?

அவர் எப்படி போனால் உங்களுக்கு என்ன பிரச்சினை? சும்மா அடுத்தவன்ரை பர்சனல் விசையதிலை மூக்கை நுழைக்க வேண்டாம்.

Share this post


Link to post
Share on other sites

நான் அப்படிச் சொல்லவில்லை. அவர் எப்படிப் போனவர் என்று தான் கேட்கிறேன்?

அவர் எப்படிப் போனார் என்று தெரியாது. ஆனால் நான் படிக்கத்தான் வந்தேன் ஆனால் அகதியாக! :icon_mrgreen:

 

Share this post


Link to post
Share on other sites

ஏன் ரதி, ஊரில் இருந்து கனடாவுக்கு வருகின்ற எல்லாத் தமிழர்களும் அகதியாகவா வருகின்றனர்?

 

அப்போ என்ன பெருளாதார அகதிகள் என்று சொல்ல வருகிறீர்களா?

Share this post


Link to post
Share on other sites

அவர் எப்படி போனால் உங்களுக்கு என்ன பிரச்சினை? சும்மா அடுத்தவன்ரை பர்சனல் விசையதிலை மூக்கை நுழைக்க வேண்டாம்.

 

பர்சனல் பிரச்சனையெண்டால் பர்சனலாகவே உங்கடை போட்டியளை நடத்தியிருக்கலாமே? வாழ்த்துக்கள் வரேக்கை மட்டும் சந்தோசம்....மற்றும் படி எதுவுமே கதைக்கக்கூடாது போலை....
பொதுவுக்கு வந்திட்டால்(ஊடகங்கள்) பலதையும் பத்தையும் கதைக்கத்தான் செய்வார்கள். :icon_idea:
அதை தாங்கும் சக்தி பொது மேடைக்கு வரும் போது இருக்க வேண்டும். :icon_idea:
 
அவனவன் விஜய்ரிவி சுத்துமாத்து பண்ணீட்டுது எண்டு துள்ளிக் கொதிக்கிறான்..... இவ கடவுள் தந்த பரிசு எண்டுறா... :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

எப்ப பார்த்தாலும் குறை பிடிக்கிறதே ரதியின் வேலை என்று நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. உண்மையிலேயே "ஜெசிக்காவின்" அப்பா வேலை கிடைத்தோ கனடாவுக்கு வந்தவர்?...அகதியாக வந்தால் அதைச் சொல்வதில் என்ன தயக்கம்?...பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு "விடை கொடு எங்கள் நாடே" என்னும் பாட்டை ஜெசிக்காவை பாட வைச்சவர்கள் என்று நான் கேட்க மாட்டேன். கேட்டால் எந்த பாட்டை பாடுவது என்பது அவர்களது இஸ்டம் என கொஞ்சப் பேர் வக்காலத்து வாங்க வந்து விடுவார்கள் :icon_mrgreen:

 

//என்ன மண்ணாங்கட்டிக்கு "விடை கொடு எங்கள் நாடே" //

குரூரமான...... சொல்லாடல், ரதி.

 

ஜெசிக்காவின், நிகழ்ச்சியை... பார்க்காததால்,

அதனைப் பற்றி கருத்து எழுதுவதை, தவிர்த்து வந்துள்ளேன்.

இப்போ... ரதி எழுதிய வசனம் மனதை நோகடித்து விட்டது.

 

ஜெசிக்காவின் தந்தை, கனடா வரும் போது....

ஜெசிக்கா பிறந்து இருப்பாரோ... தெரியாது.

 

அப்படி, பிறந்து இருந்தாலும்... அதை அறியும் ஆற்றல்.. அவருக்கு இருந்திருக்காது.

ஒவ்வொரு மனிதனுக்கும், சராசரியாக பத்து வருடங்களுக்கு முன் இருந்த சிந்தனை, இப்போது இருப்பதில்லை.

விதி விலக்காக.... தாயக நினைவுகள். அதனை.... "ஹோம் சிக்" என்று சொல்வார்கள். அது...என்றும், ஒரு மனதில் உட்கார்ந்து கொண்டே இருக்கும்.

 

அது... ஜெசிக்காவின் தந்தைக்கு, வந்ததில் வியப்பில்லை.

அதனை, அவர் அருமையாக பெற்ற மகள் மூலம்... தமிழுலகம் அறியச் செய்திருக்கின்றார்.

 

நன்றி.   

Share this post


Link to post
Share on other sites

14 வயதுப் பிள்ளை...
கடவுள் தந்த பரிசு, என்றால்... என்ன தவறு?
 

அதே... இடத்தில, அதன் வயதுடைய... பிள்ளைகளும் இருக்கின்றார்கள்.
ஒரு சோதனையில்... சித்தியடைந்தால்,  நன்றி கடவுளே... போன்ற வசனங்கள் தான்... வாயிலிருந்து வரும்.
 

ஏதோ... அவள் வயது முதிர்ந்த அரசியல்வாதி மாதிரி  கதைக்க வேண்டும், என்று... எதிர் பார்ப்பது உங்களின் பிழை.
அவள்... நினைத்த, காரியத்தை, சாதித்து விட்டாள்.
 

அதற்காக.... ஜெசிக்காவை, நினைத்து... பெருமைப் படுகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு தொலைகாட்சியில் பேசுவது என்றால்...
அதற்கு, தனி நாகரீகம் வேண்டும்.
அதனை.. ஜெசிக்காவோ, அவரது தந்தையோ பேசியிருந்தால்... தப்பில்லை

"கவிதைக்கு, பொய்யழகு."
இதன்  அர்த்தம், எந்த நூற்றாண்டில் இயற்றப் பட்டது என்றாவது தெரிந்தால்...

அடிப்படை.. நாகரீகமாவது. உங்களுக்கு தெரிந்து இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites