Jump to content

புல்லாங்குழல் மேதையும் மருத்துவருமாகிய டாக்டர் தியாகராஜா கெங்காதரன் காலமானார் .


Recommended Posts

புல்லாங்குழல் மேதையும் மருத்துவருமாகிய டாக்டர் தியாகராஜா கெங்காதரன் காலமானார்

.

தியாகராஜா சுகிர்தம் தம்பதியரின் மூத்தமகனாக 1929 ஆம் ஆண்டில் பிறந்த கெங்காதரன் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவர் ஆவார். பள்ளிப் படிப்பில் தேறி மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவாகி 1953இல் மருத்துவராக அரச சேவையில் இணைந்தார். பத்தாண்டுகள் அரச சேவையில் பணியாற்றி பின்னர் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தொடர்ந்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை, மானிப்பாய் கீறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளில் யாழ். மக்களுக்காகத் தனது சேவையை வழங்கினார். வண்ணார்பண்ணையில் தனது வைத்திய நிலையம் ஒன்றை நிறுவியும் சேவை நல்கினார்.

.

1995 இல் இடம்பெற்ற யாழ்ப்பாண இடப்பெயர்வு இவரையும் வன்னியை நோக்கி நகர்த்தியது. 1995 முதல் 2009 வரை வன்னி மண்ணில் முல்லைத்தீவில் இருந்தவாறு மக்களுக்குச் சேவையாற்றினார். 

.

நோயை அறியும் திறனும் அனுபவமும் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன. அவர் கைபட்டால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை மக்களிடம் குடிகொண்டிருந்தது. 2009 இன் அசாதாரண நிலைமைகளின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். வண். மேற்கு வைத்தியசாலையில் தம்பணி தொடர்ந்தார். மருத்துவம் சார்ந்து பொது மருத்துவம், சத்திரசிகிச்சைகள், காது, மூக்கு தொண்டை வைத்தியம் என எல்லாத் துறைகளிலும் சிறப்புற்று விளங்கினார். 2014 ஆம் ஆண்டு இறுதி வரை இவரது பணி தொடர்ந்தது .இந்த வகையில் 61 ஆண்டுகள் மருத்துவச் சேவையாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. 

.

மருத்துவப் பணிகளுக்கு அப்பால் இலங்கையின் மிகப்பிரபலமான புல்லாங்குழல் இசைக்கலைஞர் என்ற பெருமையும் டாக்டர் கெங்காதரனுக்கு உண்டு. 20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வானொலியின் முதற்தரக் கலைஞராகவும் விளங்கினார்.. இத்தனைக்கும் அவர் புல்லாங்குழலைத் தனது சுய முயற்சியினாலேயே கற்றார் என்பது இங்கு ஆச்சரியமானதே!. 

.

இசை மீதிருந்த ஆர்வத்தால் தனது மகனுடைய பங்களிப்புடன் கர்நாடக இசையில் பயன்படும் அளவைக்கருவியான மெற்றொனோம் என்ற கருவியையும் தயாரித்துள்ளார். இது தவிர விவசாயத்தின் மீதிருந்த ஆர்வத்தால் 1950 களில் வற்றாப்பளையில் பாரிய தென்னந்தோப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

.

தமிழ் உணர்வில் தமிழ் உள்ளங்களில் என்றும் வாழும் பெருந்தகையாக விளங்கும் டாக்டரை மிருதங்க கலைஞர் கண்ணதாசனின் மகன் இசைநிலவனின் மிருதங்க அரங்கேற்றத்தின் போதே நேரில் சந்தித்துக் கதைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த நிகழ்வுக்கு நான் தலைமை தாங்கியிருந்தேன். கண்ணதாசன் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட டாக்டர், அக்குடும்பத்தின் அன்புக்குப் பாத்திரமான என்னிடமும் அன்பு செலுத்தியமையை உணர்ந்தேன். 

.

டாக்டர் நோய்வாய்ப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிந்தேன். இன்று 02.03.2015 அவரது பிரிவுச் செய்தியைத் தொலைபேசி வழி கேட்டபோது என்னுள் ஒரு சோகம் இழையோடியது. 

.

கண்ணதாசனும் என்னுடன் தன் துயரைப் பகிர்ந்து கொண்டார்.

.

மக்களுக்காக வாழ்ந்த அம்மாபெருங் கலைஞனின் ஆன்மா சாந்தியடையவதாக

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறந்த பழங்கால (old school) மருத்துவர். ஒரு கட்டைக் கைச்சேட்டும், வெள்ளை நீளக் காற்சட்டையும் பாட்டாவும் போட்டுக் கொண்டு தான் வைத்திய சாலையில் திரிவார். எங்கள் அம்மாவுக்கு ஆஸ்துமா வந்தால் இங்கே தான் அப்பா சைக்கிளில் வைத்து மிதித்துக் கொண்டோடுவார்! மிக எளிமையும் சுறு சுறுப்பும்! இவரது புகழ் வாழும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் !

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் .

ஒரு முறை வயிற்றில் விடாத நோ வந்து இவரிடம் போனேன் சில வாரங்களில் மாற்றியும் விட்டார் ..அருமையான மனிதரும் கூட .. 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்!

 

இவர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கடமையாற்றியபோது இவரிடம் வைத்திய உதவி பெற்றிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//1995 இல் இடம்பெற்ற யாழ்ப்பாண இடப்பெயர்வு இவரையும் வன்னியை நோக்கி நகர்த்தியது. 1995 முதல் 2009 வரை வன்னி மண்ணில் முல்லைத்தீவில் இருந்தவாறு மக்களுக்குச் சேவையாற்றினார். //

 

வண்ணார் பண்ணையில்... இவரின் வைத்திய நிலையத்துக்கு, சென்றுள்ளேன்.
கைராசியான வைத்தியர் என்று, பலரும் சொல்வார்கள்.
இடப் பெயர்வின் பின்... இவர் வன்னியிலிருந்து, தனது மருத்துவ பணிகளை ஆற்றியமையை... இப்போது தான் அறிகின்றேன்.
 

அமரர் கெங்காதரனின் ஆத்ம சாந்திக்கு, பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

1978 மட்டக்களப்பில் புயலினால் பாதிக்கப்பட்டதால் என்னைப் பீடித்த நோய் என்னவென்று தெரியாத நிலையில் என் சித்தப்பா என்னைக் கூட்டிவந்து  டாக்டர் கெங்காதரனுடைய வண்ணார்பண்ணை வைத்திய நிலையத்தில் சேர்ப்பித்தார். அந்த நேரத்தில் நான் அங்கு வந்திராது விட்டால் இன்று நான் இல்லை என்பது உண்மை. அன்று என்னை வருத்தம் பார்க்க வந்த உறவினர்களை இப்போது சந்திக்கும்போதும் அந்தச் சம்பவம் பேச்சில் வருவதுண்டு. எனது உறவினரும், ஒரேவீட்டில் ஒன்றாக வசித்தவருமான புல்லாங்குழல் வித்துவானும், சங்கீத ஆசிரியருமான திரு. செல்வநாயகம் அவர்கள் என்னை வருத்தம் பார்க்க வந்தபோது, அவரும்  டாக்டர் கெங்காதரனும் சந்திக்க நேர்ந்ததும், புல்லாங்குழல் இசைக்கும் நுட்பம் பற்றிச் சிலாகித்த அவர்களின் இனிய உரையாடலும், இன்றும் மனதில் நிற்கிறது.
    
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் டாக்டர் கெங்காதரன் என்றால் அவரை அறியாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு வைத்தியத் துறையில் தனக்கென்று ஒர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவர். குரு இன்றியே புல்லாங்குழல் வாசிக்கப் பயின்றாலும், அதனை இசைக்கும்போது, குரு இன்றியே புல்லாங்குழல் பயின்று புகழ்பெற்ற மாமேதை மகாலிங்கம் அவர்கள்தான் வாசிக்கிறாரோ என எண்ணத்தோன்றும்.
    
டாக்டர் கெங்காதரன்  அவர்கள் மறைவு ஈடுசெய்ய முடியாதது ! ஆழ்ந்த இரங்கல்கள் ! அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்!!.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் டாக்டர் கெங்காதரன் என்றால் அவரை அறியாதவர்கள் இல்லை

யாழ்ப்பாணத்தில் வைத்தியத் துறையில் தனக்கென்று ஒர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவர்

 

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

தமிழீழத்தின் உயிர் காத்த உத்தமனின் இறுதிப் பயணம்.....
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 03:57.26 PM GMT ]
kengatharan_funeral_006.jpg
வைத்திய கலாநிதி கெங்காதரனின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்.தட்டாதெரு ஐயனார் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

பெரும் திரளானோரின் பங்கேற்புடன் பூதவுடன் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் இறுதிச்சடங்களில் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் வைத்தியர் கெங்காதரனால் உருவாக்கப்பட்ட வைத்தியர்கள், வைத்திய தொண்டர்கள், பொதுமக்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் போர் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியிலும் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் இருந்து வைத்திய கலாநிதி கெங்காதரன் மருத்துவப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

kengatharan_funeral_004.jpg

kengatharan_funeral_005.jpg

kengatharan_funeral_006.jpg

kengatharan_funeral_007.jpg

kengatharan_funeral_008.jpg

kengatharan_funeral_009.jpg

kengatharan_funeral_001.jpg

kengatharan_funeral_002.jpg

kengatharan_funeral_003.jpg

 
ஆதாரம் லங்காசிறி இணையம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

இவர் மானிப்பாய் வைத்தியசாலையில் கடமையாற்றியபோது இவரிடம் வைத்திய உதவி பெற்று இருக்கிறோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.