• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

அமெரிக்காவில் நூறு கோடி மின்னஞ்சல் முகவரிகள் திருட்டு! - மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு உறுதி!

Recommended Posts

Email-thift-080315-400-world.jpg

அமெரிக்காவில் இணையதளம் வாயிலாக 100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி, அந்த முகவரிகளுக்கு விளம்பர அஞ்சல் அனுப்பியதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிய வழக்கில் மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜியார் ஹோங் வூ (25), வியட் குவோக் குயேன் (28) ஆகிய வியத்நாமைச் சேர்ந்த இருவரும், டேவிட் மானுவேல் சான்டாஸ் டாசில்வா (33) என்ற கனடா நாட்டைச் சேர்ந்தவரும் குற்றவாளிகள் என அட்லாண்டா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

   

இதுகுறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி - இரண்டு வணிக நிறுவனங்களின் மின்னணு தகவல் சேமிப்பகத்தில் இணையதளம் வாயிலாக ஊடுருவிய அந்த நபர்கள், அந்த நிறுவனங்களின் 100 கோடி வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திருடியுள்ளனர். மேலும், அந்த முகவரிகளுக்கு அந்த நிறுவனங்களின் இணையதளத் தொடர்பைப் பயன்படுத்தி விளம்பர அஞ்சல்களை அவர்கள் அனுப்பியுள்ளனர்.

 

இந்த விளம்பரங்களால் பலனடைந்த நிறுவனங்களிடமிருந்து 20 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ.12.6 கோடி) வருவாயாகப் பெற்றுள்ளனர். இணையதளத்தைப் பயன்படுத்தி மிகப் பிரம்மாண்டமான அளவில் மின்னணுத் தகவல்கள் திருடப்பட்ட மிகச் சில வழக்குகளில் இதுவும் ஒன்று என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

http://seithy.com/breifNews.php?newsID=127893&category=WorldNews&language=tamil

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • கொழும்பின் சில பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற பெயரில்  பராமரித்துச் செல்லப்பட்ட 25 சட்டவிரோத விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக விபச்சார விடுதிகள் பராமரிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய 35 மசாஜ் நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, 25 விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு விபச்சார விடுதியின் முகாமையாளர்கள், விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை, வெல்லவத்தை, கிருலபனை, பம்பலப்பிட்டிய, நாரஹேன்பிட, கிரேன்பாஸ், மருதானை மற்றும் தலங்கம பிரதேசங்களில் பராமரித்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதிகளே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த பொலிஸ் அதிகாரப்பிரிவிற்குட்பட்ட நீதிமன்றங்களில் முற்படுத்தப்படவுள்ளனர். https://newuthayan.com/கொழும்பில்-25-விபச்சார-விட/
  • 0 கிளிநொச்சி இரணைமடுக் குளத்திற்குள் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் இன்று (18) காலை 11 மணியளவில் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையினால் விடப்பட்டன. குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இரணைமடு நன்நீர் மீன்பிடி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரணைமடு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு இலட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். https://newuthayan.com/இரணைமடு-குளத்திற்குள்-100000-ம/
  • இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன், இருநாட்டு இராணுவத்தினருக்குமிடையே பலமான ஒத்துழைப்புகள், சமுத்திர பாதுகாப்பு, கரையோர பாதுகாப்பு படைகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் செயற்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியாவுக்கிடையிலான சமுத்திர வலயம் தொடர்பான விடயங்களை மீளாய்வு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர், ஏனைய பிராந்திய நாடுகளையும் கண்காணிப்பாளர்களாக இந்த செயற்பாட்டில் இணைத்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். இரகசிய தகவல்களை ஒன்றுதிரட்டும் தொழிநுட்பத்திற்கு இலங்கைக்கு உதவியளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது.  அத்துடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் பலப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளது.  மேலும் பூகோள ஒருங்கிணைப்பு மையத்தினை ஸ்தாபித்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/73447
  • படத்தின் காப்புரிமை kovai police கோயம்புத்தூரில் ஒரு வாலிபர் பல்வேறு  வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்ப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் அருகே ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இரவு 10.30 மணிக்கு வந்து, வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து படுக்கை அறை ஜன்னல் அருகே சென்று துணியை விலக்கி படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் வீடியோ காட்சி பதிவாகியிருந்தது.  இதனால் அதிர்ச்சியான அந்நபர் அக்கம்பக்கத்து வீடுகளிடமும் விசாரித்தார். அதில் மூன்று வீடுகளில் படுக்கை அறையை வாலிபர் ஒருவர் எட்டிப்பார்க்கும் காட்சி பதிவாகியுள்ளது.  வாலிபரின் இரு சக்கர வாகன பதிவு எண்ணை வைத்து காவல்துறை இவரை தேடி வருகிறது. அந்த வாலிபர் படுக்கை அறைகளை எட்டிப்பார்க்கும் சைக்கோ மனநிலை கொண்டவராக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி கூறுகிறது. ''எதற்காக அந்த நபர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறார், பொருட்களை திருடுவதற்கா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்துடன் வந்தாரா என்பது மர்மமாகவே உள்ளது. மேலும், அவர் பார்ப்பதற்கு வடமாநிலத்தில் இருந்து இங்கு வந்தவர் போல் தெரிகிறது. சமீப காலங்களாக இதுபோன்ற மர்ம நபர்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, காவல்துறை அந்த நபரை கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ள கோரிக்கை வைத்துள்ளோம்,'' என அப்பகுதியில் வசிக்கும் பழனி தெரிவிக்கிறார்.https://www.bbc.com/tamil/india-51159418