Jump to content

கி.பி .அரவிந்தன் காலமாகிவிட்டார்


Recommended Posts

கி பி அரவிந்தன் அவர்கள் இன்று காலை காலமாகி விட்ட துயர செய்தி கிடைத்தது 70 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிவகுமரோடு தீவிரமாக இயங்கிய சிலரில் இவரும் ஒருவர் .பின்னர் ஈழப்புரட்சிகர அமைப்பின் மைய உறுப்பினராக இருந்து நீண்டகாலம் செயற்பட்டவர். 1977 இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தவர். பாலம் இதழின் வெளியீட்டிற்காக தமிழகத்தில் இருந்து பங்களித்தவர். புலம்பெயர்ந்து பிரான்ஸில் இருந்த சுந்தர் இறுதிவரை அங்கே குடியுரிமை பெறாமல், அதற்காக விண்ணப்பிக்காமல் வாழ்ந்தவர். அப்பால் தமிழ் என்ற இணையத்தளத்தை இயக்கியவர். அதற்கு முன் மௌனம் என்ற இலக்கிய இதழை நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டார். பல கவிதை நூல்களை வெளியிட்ட கி.பி.அரவிந்தனின் அண்மைய நூல் பிரெஞ்சில் வெளியானது. ஈழப்போராட்டத்தில் தன்னுடைய பாத்திரத்தைச் சார்ந்த வரலாற்றுப் பதிவொன்றையும் எழுதியிருக்கிறார். பல நூல்களை வெளியிடுவதற்குத் துணை நின்றிருககிறார். அண்மையி்ல் வெளியான “நஞ்சுண்ட காடு“ நாவலின் வெளியீட்டிலும் கி.பி.அரவிந்தனின் பணி முக்கியமானது. அஞ்சலிகள்

11024728_10202589818106424_1325048308510

·

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

இணைப்புக்கு நன்றி சாத்திரி...!!

Link to comment
Share on other sites

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் பிரான்சில் காலமானார்

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) காலமானார்
கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், பிரான்சில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

கவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

1990களின் முற்பகுதியில் பிரான்சில் குடியேறிய அவர், அங்கிருந்து கடைசி வரை ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பணியாற்றி வந்தவராவார்.

எழுபதுகளில் இளைஞர் இயக்கங்களுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர் ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் பணியாற்றினார்.

விக்கிப்பீடியாவிலிருந்து கி. பி. அரவிந்தன் தகவல்

கி. பி. அரவிந்தன் (பிறப்பு: 1953, நெடுந்தீவு, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளர்.

அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார்.

அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்திவருகின்றார்.

1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர்.

1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறினார்.

1990 இல் இவருக்குத் திருமணமாகி மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
 

 

aravinthan.jpg

 

 

http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms2A.html

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!
 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனிதர்

தமிழருக்காக எவ்வளவோ செய்தவர்

எல்லோரோடும் அன்பாக அரவணைப்பாக பழகுபவர்

கலை மற்றும் படைப்பாளிகள் சார்ந்து எல்லோரையும் ஊக்கப்படுத்துபவர்

தூக்கி விட்டவர்

மாபெரும் இழப்பு...

 

 

ஆழ்ந்த இரங்கல்கள்

 

Link to comment
Share on other sites

கண்ணீர் அஞ்சலிகள்!!

குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார் 

ஆழ்ந்த இரங்கல்கள்!

குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/154770-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.