Jump to content

அம்மாவும் நானும்.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா - முதலில் சிறிய குறிப்பு.

 

எனதம்மா

எங்கள் குடும்ப விளக்கு..

குடிக்கு அடிமையான எனது தகப்பனாருடன் 60 ஆண்டு பொறுமையோடு குடும்பம் நடாத்தி

எம்மை வளர்த்தவர். 

எனது தகப்பனாருக்கு குடி தான்  என்றும் முதலாவது.  

எப்பொழுதும் வெள்ளை வேட்டி கட்டும் அவர்

3 தலைப்புக்களில் 3 நாளைக்கு குடிக்கத்தேவையான பணத்தை பதுக்கி  வைத்து

மீதியையே அம்மாவிடம் கொடுப்பார் எம்மை வளர்க்க.

3 அண்ணன்களுக்கு ஒரு பெண் பிள்ளையாக பிறந்த எனது தாயார்

பாடசாலைக்கே சென்றதில்லை.

இத்தனைக்கும் அவரது 3 அண்ணன்களும் பின்நாளில் அதிபர்களாக இருந்தார்கள்.

அதிலொருத்தர்  இலங்கையில் தமிழ் மற்றும் சைவசமயநெறிப்படிப்பு  சார்ந்து இன்றுவரை முதலிடத்திலுள்ள வித்துவான் பொன்.அ. கனகசபையாவார்.

34 பேரப்பிள்ளைகளையும்

32 பூட்டப்பிள்ளையையும் கண்டவர்

முதலாவது பூட்டப்பையனுக்கு 27 வயசு.

அவன் திருமணம் முடித்தால் அடுத்த தலைமுறையையும் கண்டுவிடுவார்..

காணவேண்டும் என்பதே எனது கனவு.

அம்மாவின் இன்றைய வயசு 88.

சீனி கொழுப்பு நெஞ்சுவருத்தம் என பாவிக்கும் மருந்துக்கள் நாளொன்றுக்கு 20க்கு மேல்.

 

இனி விடயத்துக்கு வருகின்றேன்.

 

தம்பி வீட்டில் இருக்கும் அவரைப்பார்க்க நானும் மனைவி மற்றும் மக்களும் சனிக்கிழமைகளில் செல்வது வழமை.

நேற்றும் சென்றிருந்தேன்.

அம்மாவின் மடியில் தலைவைத்து சிறிது படுத்துவிட்டு

அவருக்கு வலிக்கும் என்பதால் பக்கத்தில் இருந்தேன்.

(வழமையாக போனவுடன் சிறிது நேரம் மடியில் படுப்பதும் அவர்தலையை வாரி விடுவதும் சிறுவயதிலிருந்து பழக்கம்.  இது எனக்கு மட்டும் தான்.  தம்பி கேட்பான் நானும் தான் மடியில் படுக்கின்றேன்.  இந்தக்கை எனக்கு ஒரு நாளும் எனக்கு தலைவாரி விட்டதில்லை என.   5 பெண் பிள்ளைகளுக்குப்பின் பிறந்ததால் வந்த பாசமது)

 

 

தம்பியின் சிறிய மகள் சொக்கலேற் எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுத்தபடி வந்தாள்

நானும் எடுத்தேன்

பக்கத்தில் பார்த்தால் அம்மா கையை நீட்டியபடி.

எனக்குத்தெரியும் அவருக்கு அது கூடாது என்று.

ஆனால் கையை   நீட்டியிருப்பது எனது அம்மா

என்ன வேண்டுமென்றாலும் வாங்கிக்கொடுப்பேன் அவாவுக்கு

ஒரு சொக்கலேற்றுக்கா யோசிப்பேன்

எடுத்துக்கொடுத்தேன்

அந்த மாதிரி ருசித்துச்சாப்பிடத்தொடங்கினார்.

 

இது அவரைப்பராமரிப்பவர் கண்ணில்  பட்டுவிட்டது

இஞ்ச வாங்கோ

நேற்று உங்கட தம்பி 

அவாவுக்கு  லா சப்பலில் இருந்து பலப்பழத்தை வாங்கி வந்து கொடுத்து அவாவுக்கு மூச்சுவாங்கி 

ரொம்ப கடினமாகிவிட்டது

ராத்திரி முழுவதும் நித்திரை கொள்ளாது சிரமப்பட்டார்

இப்பத்தான் ஒரு மாதிரி இருக்கிறார்

இப்ப நீங்க சொக்கலேற் கொடுக்குறீர்கள்

ஏதாவது நடந்தால் என்னை குறை சொல்லக்கூடாது என்று முடித்தார்..

 

அம்மாவைப்பார்த்தேன்

அவர் முன்பைவிட அவசரமாக சொக்கலேற்றை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்

பறித்துவிடுவார்கள் என்ற பயம் போலும்...

 

அப்படியே உடல்  முழுவதும் ஒரு முறை ஆட்டம் கண்டு

எனது இயலாமை 

வேதனை

என்ன செய்வது என்ற தவிப்பு

அப்படியே கண்ணெல்லாம் சிவந்து ......

 

ஒன்றுமே சொல்லாது வருகின்றேன் என்றபடி அம்மாவுக்கு கை காட்டிவிட்டு

அவரும் கை காட்ட வந்துவிட்டேன்.

இரவு முழுவதும் நித்திரை வரவில்லை

மனைவி கேட்டார் என்னப்பா  நடந்தது இன்று நித்திரை கொள்ளாதிருக்கிறீர்கள் என்று.

விசயத்தைச்சொன்னேன்.

அதற்குத்தானே மருந்து குடிக்கிறார்

கொஞ்சம் ஆசைக்கு சாப்பிடட்டுமே என்றார்.

ஆனாலும் மனசு கேட்கல.

இரவு முழுவதும் மனச்சங்கடம்.

அவர் நூறு வருசம் வாழணும் என்றும் ஆசை (இன்றும் 12 வருடங்கள்)

அவர் எல்லாவற்றையும் அனுபவிக்கணும் என்றும் ஆசை.

ஆனால் ஒன்றைத்தானே செய்யமுடியும்........??

 

 

கொடுக்கலாமா?

வேண்டாமா உறவுகளே..?

 

குறிப்பு : வயசான அப்பா அம்மாவை வைத்திருப்பவர்கள் படும் இது போன்ற வேதனையை

அதனால் மனதால் சிரமப்படுபவர்களும் மற்றவர்களும் பார்க்கவும்

அனுபவங்களைப்பகிரவும் என்றே இங்கே பதிகின்றேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கலாம் என மனம் சொல்லுது, கொடுக்கக் கூடாது என அறிவு சொல்லுது..!

ஆகையால் வாழும் தெய்வம்-தாய் எம்முடனேயே இருக்க, மனதை கல்லாக்கிவிட்டு அவரின் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் எப்பொருளையும் மறைப்பதே நன்று..

Link to comment
Share on other sites

கொடுக்கலாம் என்பதே என் கருத்து, நான் அப்படிக் கொடுத்து இருக்கிறேன். விரும்பியதுகளைச் சாப்பிடாமல் 100 வருடம் இருப்பதிலும் பார்க்க இருக்கும் போது விரும்பியதைச் சாப்பிடலாம் என்பதே என் கருத்து.

 

உங்கள் அம்மா நீங்கள் தான் முடிவு எடுக்க வேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கலாம். அவ ஆசைப்படுவதை எனி எப்போ சாப்பிடுவது?

 

சும்மா ஒன்றும் சாப்பிடாமல், குடிக்காமல் நீண்ட நாட்கள் ஆசையுடன் இருந்துவிட்டு போவதை விட, எல்லாவற்றையும் ஆசை தீர அனுபவித்துவிட்டு போவது தான் எனது விருப்பம். ஒரு சின்னப்பிரச்சினை, வருத்தம் வந்து படுக்கையில் இருந்தால் மற்றவர்களுக்கு பிரச்சினையாகப் போய்விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகர்! உங்கள் அம்மா தினசரி மருந்துகள் பாவிக்கின்றபடியால் விரும்பிய உணவுவகைகளை ஆசைதீர சாப்பிடாமல் ஆசைக்கு சாப்பிடலாம் என நினைக்கின்றேன்.  இரவு நேரங்களை தவிர்த்து பகல் நேரங்களில் ஆசைப்பட்டதை செய்து குடுக்கலாம் என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் ஆசையை நிறைவெற்றலாம் என்பது எனது கருத்து....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைப் படுகிறா என்பற்காக அதிகம் கொடுக்கக் கூடாது. பின் வேதனைப் படுவதும் அவதான்...! நாவின் ருசிக்காக எதுவும் சிறிதளவு கொடுக்கலாம், ஆனால் அதுவும் தப்பு. மருந்து அள்ளியா உண்கிறோம்..! அதுவும் துளிகள் தானே என்பதை நினைக்க வேண்டும்...!

 

நாங்கள் எமது மாமியையும் , தாயாரையும் எங்கள் வீட்டிலேயே வைத்துப் பார்த்தோம், இரு வருடங்களுக்கு முன் மாமி ( என் சதியின் தாயார்) காலமாகினார். அவவுக்கு இதயத்தில் பற்றி வைத்திருந்தது. அத்துடன் வயோதிபத்துக்குரிய இழுப்பு, மூட்டு வருத்தங்கள் எனப் பலவும் இருந்தன. அதனால் பத்தியமான உணவுவகைகள்தான் அவவுக்கு. சாக்கிலேட் மிக விருப்பம், ஆனல் எப்பவாவது சிறு துண்டு எடுப்பா. கொண்டாட்டங்களில் கூட சுய கட்டுப்பாட்டுடன் சிறிதளவுதான்.. நல்லூரில் வசித்தவ., படித்தவ ஆங்கிலம் சரளம்!

 

என் அம்மா 5 மாதங்களுக்கு முன் காலமானார். அவ சிறுவயதில் இருந்தே மாவிடித்து ,நெல்லுக் குத்தி வாழ்ந்தவ. பின் மாவிட்டபுரத்தில் அதிக காலம் வசித்தவ. அதிகம் பனைமர உணவு வகைகள், குத்தரிசிச் சோறு என்று அந்தக் கிராமத்துக்குரிய இயற்கையான உணவு வகைகள். 83 வயதுவரை வாழ்ந்தா. ஒரு வருடமளவில்தான் பார்வை சிறிது மங்கள், பல்லுகளும் பறவாயில்லை. பீட்சாவெல்லாம் இழுத்து இழுத்து சாப்பிடுவா. ஆஸ்பத்திரி என்று போய் படுத்ததில்லை. கடைசி மூன்டு மாதமளவில்தான் நடக்க ஏலாமல் படுக்கையில். ஆனால் எது கொடுத்தாலும் சாப்பிடுவா. பான் வாழைப் பழம், மைக் டொனால்ட் எல்லாம் நல்ல விருப்பம். கடைசி 20 நாளுக்கு முன் ஒரு சின்னப் புண் இடுப்பில். வீட்டிலேயே ஆஸ்பத்திரிபோல் எல்லா வசதிகளும் செய்து பார்த்தோம். சாப்பிடுவது குறைந்து விட்டது.தொன்டையில் நோவு. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகவேணும் என்டார்கள், ஆம்புலன்ஸ் வந்தது , கட்டிலில் கிடத்தி வீட்டு வாசலைக் கடக்கும் போது முன்னுக்கு இருந்த பிள்ளையார் படத்தைக் கையெடுத்துக் கும்பிட்டா,  மருமகளைக் கொஞ்சினா, மகளையும் கொஞ்சிப் போட்டு போனவ இரு நாட்களில் இறைவனிடம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கலாம் என மனம் சொல்லுது, கொடுக்கக் கூடாது என அறிவு சொல்லுது..!

ஆகையால் வாழும் தெய்வம்-தாய் எம்முடனேயே இருக்க, மனதை கல்லாக்கிவிட்டு அவரின் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் எப்பொருளையும் மறைப்பதே நன்று..

 

நேற்றே  உங்கள் இந்த கருத்தை வாசித்தேன்

மிகவும் ஆறுதலாக இருந்தது

 

நன்றி  ஐயா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் நிலைமை பிள்ளைகளுக்குத்தான் தெரியும்.
எப்போதாவது அவரின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகளை வழங்கலாம்.
எப்போதும் வழங்கினால் ஆபத்தாகும் என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வயது வந்தவர்கள்,நோயாளிகள் எந்த வித வருத்தங்களும் இல்லாது றூறாண்டுகள் வாழ்ந்தால் விரும்பியதை சாப்பிடலாம்,குடிக்கலாம் எந்த வித தடையும் போட ஏலாது..ஆனால் இனிப்பு,உப்பு இப்படியானவற்றை எடுக்கக் கூடாது என்று தெரிந்தும் தேடி,தேடிச் சாப்பிட்டு விட்டு நீண்ட காலத்திற்கு கட்டிலிலில் கிடக்கும் நிலை ஏற்பட்டால் எத்தனை விதமான பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.நானும் வயது வந்த பெற்றோருடன் அதுவும் உடல் நலக் குறைவோடு இருப்பவர்களோடு தான் இருக்கிறன்..நான் இதை எழுதுவதற்கு காரணம் தொடர்ந்து வைத்து பராமரிக்கும் ஒருவருக்கும் இடைக்கிடை போய்ப் பார்ப்பவர்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கிறது...எப்படிப் பார்த்தாலும் கடசியில் நம் உறவுகளிடத்தில் நன்மையும் கேட்க முடியாது என்பதும் உண்மை.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ விரும்பியதை அளவோடு கொடுக்கலாம் என்பது எனது எண்ணம்.

அது சரி 34 பேரப்பிள்ளைகளிலும் 32 பூட்டப்பிள்ளைகளிலும் எத்தனை போராளிகள் மாவீரர்கள் இருக்குறார்கள் என்பதைச் சொல்ல மறந்துவிட்டீர்களே!

Link to comment
Share on other sites

அவ விரும்பியதை அளவோடு கொடுக்கலாம் என்பது எனது எண்ணம்.

அது சரி 34 பேரப்பிள்ளைகளிலும் 32 பூட்டப்பிள்ளைகளிலும் எத்தனை போராளிகள் மாவீரர்கள் இருக்குறார்கள் என்பதைச் சொல்ல மறந்துவிட்டீர்களே!

என்ன கேள்வி இது? அவர்கள் எல்லாம் சுக போகமாக அமெரிக்கா,கனடா, ஐரோப்பாவில்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால்... எனது மனது மிகவும் சங்கடப்பட்டிருக்கும்!

 

ஆனால்.. பின்வருமாறு தான் நடந்திருப்பேன் என்று எண்ணுகின்றேன்!

 

அம்மா.. கோவிக்கக் கூடாது....!

 

நான் கொஞ்சம் கடிச்சுப் போட்டுத்தான் தருவேன்!

 

எனது மனத்தைக் கல்லாக்கி... ஒரு சின்னத்துண்டு மட்டுமே கொடுத்திருப்பேன்! :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ விரும்பியதை அளவோடு கொடுக்கலாம் என்பது எனது எண்ணம்.

அது சரி 34 பேரப்பிள்ளைகளிலும் 32 பூட்டப்பிள்ளைகளிலும் எத்தனை போராளிகள் மாவீரர்கள் இருக்குறார்கள் என்பதைச் சொல்ல மறந்துவிட்டீர்களே!

என்ன கேள்வி இது? அவர்கள் எல்லாம் சுக போகமாக அமெரிக்கா,கனடா, ஐரோப்பாவில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  உறவுகளே பதிலுக்கும்

அக்கறைக்கும் அறிவுரைக்கும்...

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ விரும்பியதை அளவோடு கொடுக்கலாம் என்பது எனது எண்ணம்.

அது சரி 34 பேரப்பிள்ளைகளிலும் 32 பூட்டப்பிள்ளைகளிலும் எத்தனை போராளிகள் மாவீரர்கள் இருக்குறார்கள் என்பதைச் சொல்ல மறந்துவிட்டீர்களே!

 

அம்மாமேல் பெரிய பாசமான  பிள்ளை நீங்கள்

இதன் மூலம் தான் நாம் அறிமுகமானோம்.

எனவே பேசலாம்

ஆனால் இதற்குள் வேண்டாம்..

 

வேறு ஒரு திரியை  ஆரம்பியுங்கள்....

நான் எப்பவுமே திறந்த புத்தகம்...

Link to comment
Share on other sites

விசுகு அண்ணனின் வயதை நான் தப்பாக கணித்திருந்து விட்டேன் போலும்....

அம்மா செஞ்சரி அடிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு

நூறு வயசல்ல அதற்கு மேலே இருந்தாலும் சந்தோசமே.

ஆனால் சுகமாக இருக்க வேண்டும்.

 

கூடிய காலம் இருக்க வேண்டுமென்பதை விட இருக்கும் வரை சுகமாக இருக்க வேண்டும்.

 

மருந்துகளை விட பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பக்கத்தில் இருந்தால் அதுவே ஒரு தனிச் சுகம்.

உங்கள் அம்மா சுகமாகவும் நீண்ட ஆயுளோடும் இருக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின்அம்மா பாசத்தைகண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன் .

அம்மா ஆசைபடுகையில் எல்லாவற்றையும் கொடுக்க தான் மனம் விரும்பும் . அளவோடு கொடுங்கள் . ஆனால் நிச்சயம்

அம்மாவின் உடம்புக்கு தீங்கு என்று தெரிந்தால் அவருக்கு காட்டாமல் தவிர்த்து விடுங்கள் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதி  

ஆலோசனை சொன்ன அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.