Jump to content

எமக்கு சுயாட்சி வேண்டும்! கனடா மறுவாழ்வு அமைப்பின் உதவி நிகழ்வில்: இரா.சம்பந்தன்


Recommended Posts

தமிழர் பிரச்சினைக்கு பிராந்திய சுயாட்சி வழங்கிய பின்னரே மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுப்பேற்பது தொடர்பில் பரிசிலிக்க முடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன் கிழமை திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மூதூர், ஈச்சிலம்பற்று, வட்டவான் கிராமத்தில் வெள்ளப் பேரிடரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்த தமிழ் மக்களுக்கு ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தனித்துவமான இனம் என்றும் அவர்களுக்கென்று தனித்துவமான கலை கலாகாரப் பண்பாடும் பாரம்பரியமும் உண்டு என்று தெரிவித்த சம்பவம் எமக்கென தனித்துவ அரசியல் உண்டென்றும் கூறினார். இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கிய பின்னர் மத்திய அரசுடன் இணைந்து செயற்படுவது குறித்து பரிசிலிக்கலாம் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். மாகாணத்தில் மக்களுக்குரிய சில கடமைகளை முன்னெடுப்பதற்காகவே அமைச்சுப் பதவிகளை பொறுப் பெடுத்தாகவும் அவர் கூறினார்.

கடந்த கால அரசாங்கத்தைப் போல கடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போல புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட மாட்டார் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதி மைத்திரி நேர்மையானவர் என்றும் மனசாட்சியின்படி நடந்து கொள்வார் என்று தான் நம்புவதாகவும் கூட்டிக்காட்டிய சம்பந்தர் அனைத்து இன மக்களையும் சமமாக சமத்துவமாக நடத்துவார் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். அந்த அடிப்படையில் அரசாங்கம் தனக்குரிய கருமங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் தற்போது சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளபோதும் எல்லாமும் மாறிவிட்டது என குறிப்பிட முடியாது என்றும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபைக் கல்வி அமைச்சர் திரு.சி.தண்டாயுதபாணி, வெருகல், மூதூர் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் திருகோணமலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு 165 குடுப்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்வின் பொழுது பேசிய திரு.இரா.சம்பந்தன், திரு.சி. தண்டாயுதபாணி மற்றும் வட்டவான் மக்களும் இந்த நிவாரணம் வழங்க உதவிய கனடா மறுவாழ்வு அமைப்புக்குத் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

TNA13-600x400.jpg TNA57-600x400.jpg TNA62-600x400.jpg TNA82-600x400.jpg TNA93-600x400.jpg TNA95-600x400.jpg TNA96-600x400.jpg TNA103-600x400.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/39076.html#sthash.TJlTFB5S.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.