Jump to content

அமெரிக்காவில் கை வைத்த புலிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே Google இல் கைவைத்த புலிகள் எண்டு ஒரு ஆக்கம் யாழில வந்து பலத்த சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் அது ஏன் எழுதப்பட்டது எண்டதை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. இன்று மாற்றுக் கருத்து எண்ட பெயரில் எப்படியெல்லாம் புலிகளை அர்ச்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் அர்ச்சிக்கும்.. யதார்த்தம் தெரியாமல் சும்மா கண்ட மேனிக்கு பாசிசம் ஜனநாயக புரட்சி எண்டெல்லாம் கதை விடும் ஒரு சில கருத்தாளர்களை மனதில் வைத்து அவர்கள் இப்படித்தான் எழுதவார்கள் என்ற ஓட்டத்தில் அது எழுதப்பட்டது. அதே போலத்தான் இந்த ஆக்கமும். இதை தமிழில் வஞ்சப்புகழ்ச்சி என கூறுவார்கள் என நினைக்கிறேன்.. ( இதற்கு மேலும் இதை சிரியசாக எடுத்துக்கொண்டு யாரும் எழுதினால் நான் பொறுப்பல்ல )

ஏற்கனவே "கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்" என்று விவரமான கட்டுரையொன்றை எழுதியிருந்தோம்.

பாசிசப்புலிகளின் உலகளாவிய அடாவடிகளை இனங்கண்டு அவற்றை வேரோடு களைய அனைவரையும் அணிதிரளும் வண்ணம் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

அதை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதற்கப்பால் எம்மை நையாண்டி வேறு செய்தார்கள்.

இப்போது பார்த்தீர்களா புலிகளின் வேலையை?

இப்போதாவது நம்புகிறீர்களா நாம் முன்பு சொன்னதை?

அப்படி என்னதான் செய்தார்கள் புலிகள்?

அமெரிக்காவில் அண்மையில் நடந்த தேர்தலில் தமது கைவரிசையைக் காட்டிவிட்டார்கள்.

அங்கு நடந்த பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் புலிகளின் தீவிர ஆதரவாளர் டேனி டேவிஸ் 87 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

புலிகளின் பணத்தில் வன்னி சென்று அங்கு புலிகளைச் சந்தித்துத் திரும்பி வந்தவர் இவர். இவரின் பயங்கரவாதிகளுடனான தொடர்பு எல்லா ஊடகங்களிலும் பிரச்சினையாக்கப்பட்டது. இந்தத் தேர்தலிலும் இவரை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டது. எல்லா இடத்திலும் இவரின் பயங்கரவாதத் தொடர்பு பற்றி தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது. புலிகளுடனான இவரின் தொடர்பைக் கருத்திற்கொண்டே இவருக்கெதிரான தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அவ்வகையில் இவருக்குப் படுதோல்வி ஏற்படுமென்று நினைத்திருந்தவேளைஇ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் இந்த புலி ஆதரவாளர்.

இது எப்படிச் சாத்தியம்?

இங்குத்தான் புலிகளின் கைவரிசை காட்டப்பட்டுள்ளது. தேர்தலில் மோசடி செய்து அவரை வெல்ல வைத்துள்ளனர் புலிகள். கொஞ்சநஞ்ச வாக்கு வித்தியாச வெற்றியல்லஇ 87 சதவீத வாக்குகளைப்பெற்று மாபெரும் வெற்றி.

தங்களுக்குத் தெரிந்த அனைத்து அடாவடி முறைகளையும் பாவித்து இவரை வெற்றிபெற வைத்த புலிகளின் கைங்கர்யம் அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு மட்டுமன்றி உலகத்துக்கே ஆபத்து. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து இப்போது அமெரிக்காவையே கடித்துவிட்டனர் பாசிசப்புலிகள்.

இதை நான் மட்டும் சொல்லவில்லை. 'நெருப்பு" என்கிற சர்வதேசப் புகழ்பெற்ற இணையத்தளமும் சொல்கிறது.

அதைச் சிலர் நக்கலடிக்கிறார்கள். விசயம் தெரியாத சின்னப்பொடியங்கள்.

நாம் கூகிள் விவகாரத்தில் அன்றே சொன்னதை இப்போது வேறும் சிலர் புரியத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் வாசகர்களேஇ

இப்பயங்கரத்தை நாம் எதிர்கொள்ள வேண்டாமா?

ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியபடி புலிகளின் கை உலகம் முழுவதும் நீள்கிறது. உடனடியாக இதைத் தறிக்க வேண்டும். இதற்கு எமக்குத் தோள்கொடுங்கள். மக்களைத் திரட்டி 'புதிய ஜனநாயகப் புரட்சி'க்கு (இது என்ன சாமான் எண்டு தெரியாத ஆக்கள் குழம்ப வேண்டாம்.) வித்திடுவதன் மூலம் பாசிசப் புலிகளின் ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம்.

புலிகளின் இப்படியான தகிடுதத்தங்களை நன்குணர்ந்த ஒருவர் எமக்குப் பக்கத்துணையாகக் கிடைத்திருக்கிறார். புலிகளை முறியடிக்க அவரால் மட்டுமே முடியும். தமிழரை மட்டுமன்றி அமெரிக்காவை - ஏன் உலகத்தையே பயங்கரவாதத்தின் பிடியினின்று காப்பாற்ற காலம் எமக்குத் தந்த தலைவன் கருணாவின் துணையோடு எமது இயக்கம் இந்தப் பாசிசப் புலிகளை முறியடிக்கப் புறப்படுகிறது.

"தூரம் அதிகமில்லை -துயரம்

வழியிலில்லை"

_____________

"வாருங்கள் வீரர்களே -ஒன்றாய்ச்

சேருங்கள் தோழர்களே"

தோழமை வேண்டி

-உம்மாண்டி-

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவராக பதியப்பட்டு விட்டது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆ...அமெரிக்காவிலும் கையை வைத்துவிட்டர்களா பாசிசப்புலிகள்? :rolleyes: உலகதிற்கே படியளக்கும் அமெரிக்காவுக்கே இப்படியென்றால்....................ம் :D கொதித்தெழுங்கள் தோழர்களே. :D :P :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆ...அமெரிக்காவிலும் கையை வைத்துவிட்டர்களா பாசிசப்புலிகள்? :rolleyes: உலகதிற்கே படியளக்கும் அமெரிக்காவுக்கே இப்படியென்றால்....................ம் :lol: கொதித்தெழுங்கள் தோழர்களே. :lol: :P :P

நான் கடைசியாக கேள்விப்பட்டதன் படி டேனி டேவிஸ் வென்ற மானிலத்துக்கு

நேட்டோ படைகள் தாக்குவதுக்கு தயாரகிவிட்டார்கள் என்றும் அதுக்கு உளவு வேலை

செய்ய லண்டனில் இருந்து டமில் F15புலன்நாய்வுத்துறை

தங்கள் புலன் ஆய்வு திறமைகளை பாவித்து தாக்கவேண்டிய இடங்களை இனம் கண்டு கொண்டு இருபதாகவும் தெரிவிக்க படுகிறது அத்துடன் எப்படியும் டேனி டேவிஸ் அவர் ஆதரவு புலிகளிடமும் இருந்து மீட்டுவிடுவார்கள் என்று யாழ்நேட்டோ படைகளின் பேச்சாளர் தேரிவித்துள்ளார்................................

.........

Link to post
Share on other sites

;) இது நகைச்சுவை!!!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.