• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கவிதை

உனக்காக...

Recommended Posts

Page%2BPoem%2BUnakkaaga.jpg

 

சுடும் மழைக் காலம்...  குளிர் வெயிலாய் நீ வந்தாய் !
இலையுதிர்கால.... வெளிர்ப் பூவை நீ தந்தாய் !!
மனதிழை ஓடும்.... மெல்லிசையாய் உன் பெயரை,
இதழிடை  பாடும்....  இன்னிசையாய் நீ அமைந்தாய் !!!

கனதரம் நினைத்திடும்... கணங்களும் இனித்திடும்...!
நிரந்தர வதிவிடம்...  மனங்களும் கொடுத்திடும்...!!
சிலதரம் பார்த்திடும்...    நால்-விழிகளும்  கலந்திடும்...!
வெண்ணிலா வெட்கத்தில்... மெல்லமாய்ச் சிவந்திடும்...!!

எங்கே நீ சென்றாலும்...

என் நினைவும் பின்னால் அலையுமடி..!
அங்கே  வானவில் வீடு கட்டி... 

உனக்காய் வாசல் வரையுமடி... !!

உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள்  பூக்காதா... ?
பூமொட்டு விரியும்  தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ??
என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்....  கொஞ்சம் நிக்காதா..?
உன் புன்னகை சொட்டும் தேநீர்க் கிண்ணம்.... எனக்காய் இனிக்காதா...??

எனக்கே எனக்கென எனக்காக...  உனையே தந்தாய் எனக்காக!
உயிரென உணர்வென உனக்காக.... என் காதலை தந்தேன் உனக்காக!!
வருவாய் தருவாய் வரமாக   .... உனதாய் எனதாய்... எமதாக !
உனக்கே உனக்கென  உனக்காக...  எனையே தருவேன் எமக்காக...!!

 

************              ************             ***********            ************            ************

 

© ஒருவன்

 

Share this post


Link to post
Share on other sites

பாட்டெல்லாம் எழுத தொடங்கிட்டுது நம்ம கவிதையண்ணே,

 

நல்லாயிருக்கு பாடல்  வரிகள் ..  

அது சரி உங்க கிட்ட ரொம்பநாளா கேக்க நினைச்சன்,

© இந்த ஸ்மைலி ஏன் எல்லா கவிதையிலும் கடைக்குட்டியாய் வருது

Share this post


Link to post
Share on other sites

இசையோடு பாட இசைவான காதல் கவிதை. வாழ்த்துகள்

Share this post


Link to post
Share on other sites

எங்கே நீ சென்றாலும்...

என் நினைவும் பின்னால் அலையுமடி..!

அங்கே வானவில் வீடு கட்டி...

உனக்காய் வாசல் வரையுமடி... !!

உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள் பூக்காதா... ?

பூமொட்டு விரியும் தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ??

என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்.... கொஞ்சம் நிக்காதா..?

உன் புன்னகை சொட்டும் தேநீர்க் கிண்ணம்.... எனக்காய் இனிக்காதா...??

அருமையானவரிகள் . வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

பாட்டெல்லாம் எழுத தொடங்கிட்டுது நம்ம கவிதையண்ணே,

 

நல்லாயிருக்கு பாடல்  வரிகள் ..  

அது சரி உங்க கிட்ட ரொம்பநாளா கேக்க நினைச்சன்,

© இந்த ஸ்மைலி ஏன் எல்லா கவிதையிலும் கடைக்குட்டியாய் வருது

தம்பி இரா.விஷ்வா...! ரொம்ப நன்றி :)

 

ரொம்பப்பேர் பல வ(டை)ரிகளை சுட்டு....தாங்களே சுட்ட வடைபோல பேஸ்புக் அங்க இங்க எண்டு  சுடச்சுட வித்திடுறாங்கள்! :o

எதுக்கும் © இதப் போட்டு வைப்பம் எண்டுதான்.

© ஒருவன் :rolleyes::lol::icon_idea:

Share this post


Link to post
Share on other sites

இசையோடு பாட இசைவான காதல் கவிதை. வாழ்த்துகள்

மிக்க நன்றி செயோன் யாழ்வேந்தன்! :)

Share this post


Link to post
Share on other sites

எங்கே நீ சென்றாலும்...

என் நினைவும் பின்னால் அலையுமடி..!

அங்கே வானவில் வீடு கட்டி...

உனக்காய் வாசல் வரையுமடி... !!

உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள் பூக்காதா... ?

பூமொட்டு விரியும் தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ??

என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்.... கொஞ்சம் நிக்காதா..?

உன் புன்னகை சொட்டும் தேநீர்க் கிண்ணம்.... எனக்காய் இனிக்காதா...??

அருமையானவரிகள் . வாழ்த்துக்கள்

 

மிக்க நன்றி செந்தமிழாளன்...! :)

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • என்ன செய்ய நாங்க கொடுத்து வைத்தது அவ்வளவுதான், சீனாக்காரன் கையை விட்டுவிட்டானே
    • அடையாளங்களை தொலைக்கும் தமிழன்! அடையாளங்களை தொலைக்கும் தமிழன்! வேகமாக சுழலும் பூமிக்கு ஈடுக்கொடுத்து மனிதனும் வேகமாக ஓடும் காலம் இது. நாகரிகம், நவ நாகரிக வளர்ச்சி என்று படிப்படியாக நம்முடைய அடையாளங்களை மறந்தும், மறைத்தும் புதிய நாகரிகத்திற்குள் தானாகவே நகர்ந்து கொண்டிருக்கிறான் மனிதன். புதிய நாகரிகம் நல்லதுதான். அந்த நாகரிகத்தால் நம்முடைய கலாச்சாரம், மொழி, பண்பாடு, நாகரிகம், விருந்தோம்பல் என நம்முன்னோர்கள் காலங்காலமாக கட்டிக்காத்த நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறான் தமிழன். இதற்கு உதாரணமாக, நம்முடைய ஒவ்வொரு செயலும் உள்ளது. முதலாவது தமிழன் மாற்ற நினைப்பது மொழியைதான். தினம் தினம் புதிதாக முளைக்கின்ற ஆங்கிலவழி பள்ளிகளில்தான் பிள்ளைகளை சேர்க்கின்றான். இதனால், 21-ம் நூற்றாண்டில் எத்தனை மாணவர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியும்? என்பதை நினைத்தால் பகீர் என்கிறது. குழந்தைகளின் மேல் சூரியக் கதிர்கள் படுவது நல்லது என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், நாமோ நவீன காங்கீரிட்  கட்டடங்களுக்குள் காற்றுக் கூட நுழையாதவாறு கட்டிக் கொண்டு வசிக்கிறோம். காற்றே நுழையாத வீட்டிற்குள் சூரிய ஒளி எப்படி வரும்? அதனால்தான் இன்றைக்கு பிறந்த குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வந்து மனதை நோகடிக்கிறது. கைகுத்தல் அரிசியில் பலவகை உணவை உண்ட நாம், இன்று மேல்நாட்டு கலாசார உணவுகளான பீட்சா, பர்கர், ஃபிரைட் சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வாயில் பெயர் நுழையாத உணவுகள் இன்று நம் வாயினுள் நுழைகின்றன.     நம் கலாசாரம் இன்று தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை, கைத்தறி ஆடைகளை மறந்து, நவ நாகரிக ஆடைகளுக்கு மாறி, என்றைக்காவது ஒருநாள் மட்டும் நம் கலாச்சார ஆடைகளை அணிவது, நம் கலாச்சாரத்தை நாமே குழித்தோண்டி புதைக்கும் செயலாகும். நாம்  உபயோகப்படுத்தின கைவினைப் பொருட்கள் மாறி, இன்று எல்லாம் பிளாஸ்டிக் மயமாகி விட்டது. பருகும் பானங்களை கூட விட்டு வைக்கவில்லை. உடலுக்கு ஆரோக்கியம் தரும் நுங்கு, இளநீர், மோர், பதநீர் என இயற்கை பானங்களை தவிர்த்து விட்டு, பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானங்களையே  பருகுகிறோம். இயற்கை குடிநீரை கூட கேன்களில் வாங்கி பயன்படுத்தும் சூழல் உருவாகிவிட்டது. முன்னோர்கள் உருவாக்கிய கலைகளை கூட  நாம் பாதுகாப்பது இல்லை. வீட்டை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடிக்கும் போது பழைய பொருட்கள் என்று  புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், மருத்துவ குறிப்புகள் என தெருவிலும், குப்பையிலும் தீயிலுமிட்டு எரிப்பது பழைய பொருட்களை மட்டுமல்ல, நம் முன்னோர்களின் அடையாளங்களையும்தான். இயற்கை மருத்துவ முறைகளை கூட மாற்றி நவீன மருத்துவம் என  சம்பாத்தியங்களையும் தொலைத்து நிற்கின்றோம்.   இன்று தமிழன் என்ற போர்வையில் வேறொரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இதே நிலை நீடிக்குமானால், தொன்மையான நமது நாகரிகத்தையும், மொழியையும், பழக்க வழக்கத்தையும் நாமே அழித்து விடும் நிலைக்கு தள்ளப்படுவோம். நம் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும், வருங்கால நம்முடைய சந்ததிகளுக்கும் கற்று தருவோம். நம் அடையாளங்களை தொலைக்காமல் பாதுகாப்போம்!   https://www.vikatan.com/oddities/miscellaneous/49522-  
    • Share Market பற்றிய முழு அறிவு | பங்கு சந்தையில் லாபம் எப்படி ?