Sign in to follow this  
அன்புத்தம்பி

அன்று ....இளமைகால..நடிகர்கள்

Recommended Posts

முன்பு பார்க்காத.... அருமையான படங்கள், தொடருங்கள் அன்புத்தம்பி.

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, அன்புத்தம்பி said:

இந்த  போட்டோவில் இருக்கும் ஒரு நட்சத்திரம் யார் ,,

ஜெமினி கணேசன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
 
தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி T.P.ராஜலக்ஷ்மிதமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி – முதல் பெண் தயாரிப்பாளர் – முதல் பெண் இயக்குநர் என்று திறன் காட்டியவர், நாடக ராணி – சினிமா ராணி என்று பேறு பெற்ற டி.பி.ராஜலக்ஷ்மி.

 
Image
T.P.ராஜலக்ஷ்மி
 
1. டி.பி.ராஜலக்ஷ்மி – வாழ்க்கை குறிப்பு


தஞ்சாவூர் ஜில்லா திருவையாறு நகரத்தில் கிராமக் கர்ணம் பஞ்சாபகேச சாஸ்திரி – மீனாக்ஷி தம்பதிக்கு 11 – 11 – 11 இல் மகளாக பிறந்தார் ‘திருவையாறு பஞ்சாபகேச அய்யர் ராஜலக்ஷ்மி’ என்ற தி.ப. ராஜலக்ஷ்மி (T.P.ராஜலக்ஷ்மி). டி.பி.ராஜகோபால், டி.பி.ராஜேந்திரன் என்ற இருவரும் ராஜலக்ஷ்மிக்கு உடன் பிறந்த தம்பிகள். டி.பி.ராஜகோபால் சிரந்த ஹார்மோனிய இசைக் கலைஞராக விளங்கியவர். டி.பி.ராஜேந்திரன் ‘ஹிந்துஸ்தான் லிவர்’ கம்பெனியில் வேலை பார்த்தவர். இப்பொழுது இரு சகோதரர்களும் இல்லை. ராஜலக்ஷ்மி சிறு வயதிலேயே அழகுடனும் அறிவுடனும் விளங்கியதுடன் நல்ல குரல் வளமும் கொண்டிருந்தார். அக்காலத்தின் வழக்கப்படி ராஜலக்ஷ்மிக்கு எட்டு வயதிலேயே திருமணம் நடைபெற்றது. முகத்தில் மீசை அரும்பாத முத்துமணி என்பவரை மணந்தார் ராஜலக்ஷ்மி. ராஜலக்ஷ்மிக்கும் புகுந்த வீட்டாருக்கும் வரதட்சணை பிரச்சினையால் ஒத்துப் போகவில்லை. அதனால் வாழாதப் பெண் என்ற வசவைப் பெற்ற ராஜலக்ஷ்மி கணவரிடமிருந்து விடுதலை பெற்றார். கணவனிடமிருந்து விடுதலை பெற்ற மகளின் நிலைமையினால் மனமுடைந்த சாஸ்திகள் பூவுலகிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டார். ராஜலக்ஷ்மியின் பத்தாவது வயதில் அவரின் தந்தை காலமாகி விட்டார். தாரமாக வாழ முடியாமலும், தந்தை இறந்து விட்ட நிலையிலும், பிழைப்புத் தேடி தனது தாயுடன் திருச்சிராப்பள்ளிக்கு சென்றார் ராஜலக்ஷ்மி.

அப்பொழுது திருச்சிராப்பள்ளியில் சாமண்ணா என்பவர் நாடக கம்பெனி நடத்தி வந்தார். அப்பொழுது அந்தக் கம்பெனியில் நாடகப் பேராசிரியர் சங்கரதாஸ் ஸ்வாமிகள் சாகித்யம் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் பெண்கள் நாடகங்களில் நடிக்க தயங்கிக் கொண்டிருந்த வேளையில், ராஜலக்ஷ்மி இந்த நாடக கம்பெனிக்கு சென்று வய்ப்பு கேட்டார். ராஜலக்ஷ்மிக்கு வாய்ப்பளிக்க சாமண்ணா தயங்கினாலும், சங்கரதாஸ் ஸ்வாமிகள் ராஜலக்ஷ்மியை கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார். கம்பெனியில் சேர்ந்த ஒரே மாதத்தில் கதாநாயகியாகிவிட்டார் டி.பி.ஆர். பவுன் 13 ரூபாய் விற்ற அக்காலத்தில் ராஜலக்ஷ்மியின் சம்பளம் 30 ரூபாய் ஆகும். அக்கால கலைஞர்களுக்கே உரிய பாட்டு பாடி நடிக்கும் திறமை கொண்டிருந்த ராஜலக்ஷ்மி, சி.எஸ்.செல்லப்பா, கே.பி.மொய்தீன் சாயபு, கன்னையா நாயுடு, - போன்ற பிரபல நாடக கம்பெனிகளில் நடித்து புகழ் பெற்றார். கன்னையா கம்பெனியில் ராஜலக்ஷ்மிக்கு ஜோடியாக நடித்தவர் நாடகப் புகழ் கிட்டப்பா. எம்.கே.தியாகராஜ பாகவதருடனும் சேர்ந்து நாடகங்களில் நடித்துள்ளார் ராஜலக்ஷ்மி.

தேசத்தின் மீதும் தேசத் தந்தை காந்தி மகான் மீதும் பற்று கொண்ட இவர் ‘இந்தியத் தாய்’ என்ற படத்தை தயாரித்தார். ஆங்கில அரசு செய்த கெடுபிடிகளினால் இந்தியத் தாய் படத்துக்கு விடுதலை கிட்டவில்லை. அதனால் இப்படம் வெள்ளித்திரையை எட்டவில்லை.

‘1, ராஜரத்னம் ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை – 10’ என்ற முகவரியில் ஈகா தியேட்டருக்கு அருகில் இருந்த ‘ராஜ்மகால்’ என்ற பங்களாவில் இவர் வசித்துள்ளார். இந்த பங்களாவின் அருகில் இருந்த இரு வீடுகளை, தன்னுடைய தம்பிகளுக்கு கொடுத்து விட்டர் ராஜலக்ஷ்மி.

டி.பி.ராஜலக்ஷ்மி தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு, வள்ளித் திருமணம் படத்தில் நாரதராக நடித்த டி.வி.சுந்தரத்தை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கமலா என்ற மகளும், ராஜன் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். கமலாவின் மகன் ராகவன் ஏர் இந்தியாவில் வேலை பார்க்கிறார்.

1961 இல் இவருக்கு தமிழக அரசு ‘கலமாமணி’ விருது வழங்கி பொற்பதக்கமும் வழங்கியது. பதக்கத்தை நடிகை பத்மினி அணிவிக்க, சிவாஜி கணேசன் வாழ்த்து மடலை வாசித்து கௌரவித்தார். செப்டம்பர் 2013 இல் டி.பி.ராஜலக்ஷ்மியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடியது.

1964 இல் இவர் தனது 53 வயதில் இயற்கை எய்தினார். டி.பி.ராஜலக்ஷ்மியின் கணவர் டி.வி.சுந்தரம் தனது 98 வது வயதில் 1998 இல் இயற்கை எய்தினார்.

(தொடரும்)
 
அன்புடன்,
பொன். செல்லமுத்து

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, அன்புத்தம்பி said:

ஏசுதாஸூடன் இருப்பவர் யாரென்று தெரிகிறதா?

Image

பாடகி ஜென்சியாக இருக்கலாம் :unsure:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தாருங்கள்-ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர், பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள், அத்துமீறிய குடியேற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.   http://valampurii.lk/valampurii/content.php?id=19316&ctype=news  
  • 90களின் இளைஞர்களின் காதல் தேசிய கீதம்: ஒரு பூ எழுதும் கவிதைசிறு தேன் துளியாய் உருளும்நதி நீர் எழுதும் கவிதைஅலை ஒவியமாய் விரியும்உலகத்தின் மெல்லிய தாள்களின் மேலேஇளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்அழகிய இதழ் கொண்டு வாமுத்தம் என்பது நாம் காணும் தியானம்அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்ஒரு பூ எழுதும் கவிதைசிறு தேன் துளியாய் உருளும்ஊசி துளைத்த குமிழிகள் போலே உடைவது உடைவது வாழ்வுகாற்று துரத்தும் கடல் அலை போல தொடர்வது தொடர்வது காதல்உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காதலேஉடல் தீர்ந்து போன பின்னும் உயிர் வாழும் காதலேகாலங்கள் எங்கு தீரும் அதுவரை செல்வோமாகாலங்கள் தீருமிடத்தில் புது ஜென்மம் கொள்வோமாஉன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும்காற்றில் ஒலிகள் கேட்கும் வரையில் காதல் கொள்வோமாஒரு பூ எழுதும் கவிதைசிறு தேன் துளியாய் உருளும்நதி நீர் எழுதும் கவிதைஅலை ஒவியமாய் விரியும்கண்கள் இருக்கும் பேர்களுகெல்லாம் சூரியன் மட்டும் சொந்தம்காதல் இருக்கும் பேர்களுகெல்லாம் சூரியக்குடும்பம் சொந்தம்உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்சுடர் கோடி எதற்கு வந்தோம் தொலைத்ததை காணத்தான்உதட்டினில் தொடங்கி அந்த உயிர் சென்று தேட தான்நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதிஉன்னில் என்னை என்னில் உன்னை ஊற்றி கொள்வோமா
  • நிச்சயமாக, தொடருங்கள்... ஆவலாயுள்ளோம். 😊
  • இவற்றை விடவும் கிரிட்டிக்கலன வேறு பல பரிமாணங்களும் இங்கே இருக்கு , பதிவு 2 ஒப் 2 இல் அவற்றை தொட்டுச் செல்வேன் ..
  • தமிழ் மக்கள் ஒன்றுபட்டாலே இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற முடியும்-முன்னணியும் எம்முடன் இணைவார்கள் விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியீடு   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்காலத்தில் எம்முடன் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். யாழில் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வுக்காக ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் சி.வி.விக் னேஸ்வரன் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில் நாட்டின் தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தற்போது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகப் பலரும் பிரயத்தனத்துடன் செயற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தை வெளியிட்டால் தான் எங்களுடைய பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையினை ஏற்கும் எந்த கட்சியும் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். கொள்கைகள் என்பது வருங்கால தமிழ் மக்கள் பற்றிய தொன்றாகும். ஆகையால் அதனை எவ்வாறு அமை க்க வேண்டும். அரசியல் ரீதியாக எவ்வா றான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது எமது மக்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து எழுக தமிழ் பேரணியில் பேசவுள்ளோம். இதேவேளை கொள்கைரீதியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்முடன் சேர்ந்தவர்கள்.  சில தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது விடுபட்டு நிற்கின்றனர். எதிர்வரும் காலத்தில் அவர்களும் எம்முடன் வந்து இணைவார்கள் என நம்புகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.           http://valampurii.lk/valampurii/content.php?id=19314&ctype=news