Jump to content

யாழ்கள உறவு சுமேரியர் அம்மாவின் தந்தையார் காலமாகிவிட்டார்.


Recommended Posts

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.


ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்களுடன் எனது இதய பூர்வமான அஞ்சலிகள் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள் .

Link to comment
Share on other sites

தந்தையின் பிரிவால் துயருறும் சுமே குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் சுமேக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்...

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் தோழி சுமேயின்  குடும்பத்தினருடன் அத்துயரில் நாமும் இணைந்து கொள்வதோடு தந்தையின் ஆன்மசாந்திக்காக பிரார்த்திக்கிறேன்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்களும் , கண்ணீர் அஞ்சலிகளும் .உங்கள் குடும்பத்தின் துயரில் நாமும் பங்கு கொள்ளுகின்றோம்.

Link to comment
Share on other sites

தந்தையை இழந்து தவிக்கும் சுமேக்கும் அவர் குடும்பத்தினருக்கும், எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

திரு இராமலிங்கம் நாகலிங்கம் (தமிழாலயத் தந்தை, ஆசிரியர், முன்னாள் பொறுப்பாளர் தமிழ் கல்விக் கழகம்-ஜெர்மனி)

 

அன்னை மடியில் : 19 மே 1927 — ஆண்டவன் அடியில் : 16 மார்ச் 2015 112266.jpg

 

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Hagen ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நாகலிங்கம் அவர்கள் 16-03-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 

ஆயிலியம்(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

 

நிவேதா(பிரித்தானியா), நித்தியலிங்கம்(பிரித்தானியா), நித்தியா(ஜெர்மனி), நிருபா(கனடா), நிர்மலன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 

காலஞ்சென்றவர்களான கனகமணி, அமிர்தலிங்கம், பரராசசிங்கம், மற்றும் இரத்தினமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 

உதயராயன்(பிரித்தானியா), அகல்யா(பிரித்தானியா), சிவா(ஜெர்மனி), சுடரகன்(கனடா), கிருஸ்ணவேதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 

காலஞ்சென்ற லட்சுமிப்பிள்ளை, பூமணி(இலங்கை), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சப்தஸ்வரயா, மிருதங்கா, அனுகிரகா, ஆரண்யா, அபிசேகா, நித்திலன், லொகானா, ஜெரமாயா, சாரா, அருவி, வேநிலா, நிதிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

வீட்டு முகவரி: 
Enneper Straße 164, 
58135 Hagen, 
Germany.

 

http://www.kallarai.com/ta/obituary-20150317210324.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் அப்பாவின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றேன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள், தங்கள் தமிழ் பணிக்கு நன்றிகள் அய்யா.

Link to comment
Share on other sites

தந்தையை இழந்து வாடும் சுமேஅக்காவுக்கும் , குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்


 

 மதிப்பளித்தபோது.

1510853_10200289441436566_94014542449979

 

 

யேர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதும் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே தமிழ்மொழிக்கல்விஊட்டக் கடுமையாக உழைத்த நாகலிங்கம் ஆசிரியர் அவர்கள்புகலிடநாடுகளில் தமிழ்தேசியஉணர்வோடு தமிழ்மொழிகலைபண்பாடு ஆகியவற்றை வளர்த்துஅடுத்தடுத்ததலைமுறையினரையும் உருவாக்கி அரும்பணி ஆற்றியமைக்காகத் தமிழீழத் தேசியத் தலைவர்அவர்களால் தாயகத்திற்கு வரவழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் அப்பாவின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருறும் சுமேக்கும், அவரது குடும்பத்தினர்க்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

ஆசிரியரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கு

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

 
அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் துயரிலும் பங்குகொள்கிறேன்.
 
Link to comment
Share on other sites

பல்லாயிரம் மக்கள் மத்தியில் நடைபெற்ற மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு

 

 

தமிழ் மொழியையும் தமிழின விடுதலையையும் தனது இரு கண்களாக கொண்டு யேர்மனியில் பேரன் , பேர்த்தி கண்ட தமிழாலயங்கள் வளர்ச்சி முதல் தனது இறுதி மூச்சு வரை உழைத்த மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு பல்லாயிரம் மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது .

புலம்பெயர் தேசமெங்கும் தமிழ் மொழியும், கலையும், பண்பாடும், வரலாறுமே எமது இனத்தைக் தாங்கி நிற்கும் என்பதை எமது எதிர்காலச் சந்ததிக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் எடுத்தியம்பி தனது இறுத்திக்காலம் வரை உழைத்த ஆசானுக்கு யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இறுதி மரியாதை செலுத்தும் முகமாக வித்துடல் தாங்கி வரப்பட்டு மண்டபத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது.

மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் வித்துடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்து வரப்பட்டு போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

 

ஒரு தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு உன்னதமான மனிதருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் "மாமனிதர் " எனும் அதிஉயர் மதிப்பளிப்பு நடைபெற்றதை தொடர்ந்து மண்டபம் நிறைந்த பல்லாயிரம் மக்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள் மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தி தமது இறுதி வணக்கத்தை தெரிவித்தனர் .

மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்கள் தமிழ் மொழிக்காக ஆற்றிய பணியை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டதை மீண்டும் அரங்கம் நிறைந்த மக்களிடம் பதிவு செய்ததை தொடர்ந்து யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பாக மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களுக்கான இரங்கல் உரைகளின் வரிசையில், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாகவும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தமது நாட்டின் சார்பிலும் இரங்கல் உரைகளையும் நிகழ்த்தினார்கள்.

 

பழ.நெடுமாறன் ஐயாவின் மற்றும் புரட்சிக் கவிஞர் காசிஆனந்தன்அவர்களின் இரங்கல் உரையும் காணொளியில் காண்பிக்கப்பட்டது.

உறுதி உரை இடம்பெற்று தமிழீழத் தேசியக் கொடி ஒப்படைப்பு நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றதை தொடர்ந்து மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் வித்துடலை மண்டபம் நிறைந்த பல்லாயிரம் மக்கள் இருபுறம் நிரலில் நின்று மலர் தூவி வழி அனுப்பி வைத்தார்கள் .

 

nlv691.jpg

 

263zdbt.jpg

 

13z68tw.jpg

 

link : https://www.facebook.com/engaleelam.ithutamileelam

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.