Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்


Recommended Posts

வைணவப் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிய ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
பொய்கையாழ்வார்> நம்மாழ்வார்     ஆண்டாள்
பூதத்தாழ்வார்>     மதுரகவியாழ்வார்     தொண்டரடிப்பொடியாழ்வார்
பேயாழ்வார்>     குலசேகர ஆழ்வார்>     திருப்பாணாழ்வார்
திருமழிசையாழ்வார்>    பெரியாழ்வார்>    திருமங்கையாழ்வார்.
இவர்கள் மொத்தம் 4>000 பாசுரங்களைப் பாடியுள்ளனர்.  அப்பாசுரங்களைப் பின்வரும் 24 தலைப்புகளில் அடக்கலாம்:
திருப்பல்லாண்டு     அமலனாதிபிரான்     நான்முகன் திருவந்தாதி
பெரியாழ்வார் திருமொழி     கண்ணிநுண் சிறுத்தாம்பு     திருவிருத்தம்
திருப்பாவை     பெரிய திருமொழி     திருவாசிரியம்
நாச்சியார் திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     பெரிய திருவந்தாதி
பெருமாள் திருமொழி     திருநெடுந் தாண்டகம்     திரு எழுகூற்றிருக்கை
திருச்சந்த விருத்தம்     முதல் திருவந்தாதி     சிறிய திருமடல்
திருமாலை     இரண்டாம் திருவந்தாதி     பெரிய திருமடல்
திருப்பள்ளி எழுச்சி    மூன்றாம் திருவந்தாதி    இராமானுச நூற்றந்தாதி
திவ்வியப்பிரபந்தங்களைத் தொகுத்தவர் நாதமுனி என்பவராவார்.
ஆண்டாளின் திருப்பாவை மார்கழி மாதத்தில் வைணவர்களாற் பாடப்படுகின்றது.  மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் சிவனின் பெருமைகளைக் கூறிச் சிவ பக்தைகள் தம் தோழியர்களைச் சிவபூசைக்குக் கூட்டிச் செல்லத் துயிலெழுப்புவது போன்றே திருப்பாவையிலும் கிருஷ்ணனின் புகழ்கூறிக் கிருஷ்ண பக்தைகள் தம் தோழிமார்களைத் துயிலெழுப்புகிறார்கள். அதற்காக முதலில்  ஆற்றிற்குச்சென்று நீராடுவதற்காக அவர்களை அழைக்கும்பாடல்  

    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்   (நேரிழை> ஆயிழை)
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்   என்று தொடங்குகின்றது.

மார்கழி மாதம் முழுநிலவு நாள் இன்று! நீராட வாருங்கள்! வாருங்களேன் சிறந்த நகைகளை அணிந்தவர்களே! செல்வச் சீர் மல்கும் திருவாய்ப்பாடியின் செல்லச் சிறுமியர்களே! கூரிய வேலைக் கொண்டு பகைவர்களை அழிக்கும் நந்தகோபனின் திருக்குமரன்> நீண்ட அழகிய கண்களை உடைய யசோதையின் இளஞ்சிங்கம்> கரிய திருமேனியும் சிவந்த கண்களும் கொண்டு> சு+ரியனையும் சந்திரனையும் ஒத்த திருமுகத்தான்> நாராயணனே நமக்கே வேண்டியதெல்லாம் தருவான்! உலகத்தவர் புகழ நீராடுவோம்!  

என்பது அந்தப் பாடலின் கருத்தாகும்.  இதற்கு அடுத்த பாடல் சமய உலகில் சிறு சர்ச்சையை ஏற்படுத்திய பாடலாகும். அந்தப் பாடல்:

    வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.    


 
என்ற பாடலாகும். உலகத்தில் வாழ்பவர்களே! நாங்கள் எங்கள் பாவை நோன்பிற்காகச் செய்யப் போகும்செயல்களைக்கேளுங்கள்!
பாற்கடலுள் ஓய்வாகப் படுத்திருக்கும் பரமனின் திருவடிகளைப் பாடுவோம்! நெய் உண்ண மாட்டோம்! பால் உண்ண மாட்டோம்! அதிகாலையில் நீராடுவோம்! கண்களுக்கு மை இட்டு அழகு செய்ய மாட்டோம்! மலர்களைக் கூந்தலில் சு+டி முடிய மாட்டோம்! முன்னோர்கள் செய்யாதனவற்றைச் செய்ய மாட்டோம்! தீமை தரும் கோள் சொல்லை சொல்ல மாட்டோம்! (குறளை - கோள் சொல்லுதல்) மாணவர்களுக்கும் (பிரம்மசாரிகளுக்கும்)> துறவிகளுக்கும் அவர்கள் வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனதார கையால் காட்டித் தருவோம்! நாம் உய்வதற்கு உரிய வழியான திருமால் திருவடிகளை எண்ணி மகிழ்ச்சியுடன் இருப்போம்!  
என்பதாக அதன் கருத்தைக் கூறுகின்றனர். ஆனால் காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்  இந்தப் பாடலில் வரும் “தீக்குறளைச் சென்றோதோம்” என்ற வரிகளுக்கு திருக்குறளைக்கூடப் படிக்கமாட்டோமென்ற விளக்கத்தையே கொடுத்திருக்கிறார். இதனால் திருப்பாவையின்மேல் சைவத் தமிழர்கள் மத்தியில் வெறுப்பேற்படக்கூடிய நிலைமையுருவாகியது.

மேற்படி கூற்று அவரால் 1963 ஜுன்மாதம் மதுரையில் அவர் திருக்குறள் பற்றிப் பேசியபோது வெளிப்படுத்தப்பட்டது. (hவவி:ஃஃயபபசயாயசயஅ.டிடழபளிழவ.உழ.ரமஃ2013ஃ01ஃடிடழப-pழளவ_21.hவஅட -18ஃ10ஃ13-11.55pஅ).  அவரது அந்தக் கூற்றுக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் மாத இதழ் தனது சோதி16 ஒளி12 இல் தலையங்கம் தீட்டிக் கண்டனத்தை வெளியிட்டது. 21-11-1963 குமுதம் இதழும் தனது தலையங்கத்தில் திருக்குறளுக்கு எதிரானதாகத் திருப்பாவையைச் சிலாகித்த பெரியவாளின் கருத்துக்கு மறுப்பையும் வருத்தத்தையும் தெரிவித்தது.   

காஞ்சிப் பெரியவர் தனது கூற்றைத் தவறானதாக ஒப்புக்கொள்ளவில்லை.  ஆனால் 5-12-63 குமுதத்தில் அவர் கொடுத்த விளக்கத்தில்: தான் “தீக்குறளைை” என்ற சொல்லை (தீந்தமிழ்> தீஞ்சுவை என்பது போல) இனிய குறளை என்ற அர்த்தத்திலேயே எடுத்தாண்டதாகவும்> அந்த இனிய குறளையும் ஓதமாட்டோமென்று திருப்பாவை குறளைப் பெருமைப்படுத்துவதாகவே கருதுவதாகவும் கூறிச்சமாளித்தார். இதனை ஒருவகைச் சப்பைக்கட்டாக எடுத்த அறிஞர்கள் இனிய குறளெனக் கொள்வதாயின் “தீங்குறள்” என்றே திருப்பாவை கூறியிருக்கவேண்டும். ஆனால் “தீக்குறளைச் சென்றோதோம்” என்பதால் அந்த வாக்கியத்திலுள்ள “ச்” ஐ எடுத்துவிடும்போது தீக்குறளை – அதாவது தீயதான கோள்களைக் காவித்திரியமாட்டோமென்ற அர்த்தமேயுள்ளதென்றும்>  ஆகவே ஆண்டாள் அந்த அர்த்தத்திலேயே பாடியிருக்கவேண்டுமென்றும் கூறி திருப்பாவை  குறளை இழிவு செய்யவில்லையென்று சமாதானஞ் செய்துகொண்டனர்.

மொத்தத்தில் ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போல தெய்வத்தின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்த காஞ்சிப் பெரியவாளின் கூற்றிலும் தவறு நேர்ந்ததா அல்லது  நாச்சியார் தன் திருப்பாவையில் குறளை இழிவு செய்தாரா என்பது தெளிவற்றதாகவேயுள்ளது.  இத்தகைய விடயங்களுக்கு திருப்பாவையை எழுதிய நாச்சியாராலன்றி வேறு யாராலும் விடைகூறமுடியாது.  ஒருவேளை திவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனி போன்றவர்கள் அல்லது அதனை அச்சுக்குக் கொண்டு வந்தவர்கள் தங்களுக்கிருந்த வைஷ்ணவ வெறியினாலும் திருக்குறள் விரோதப் போக்கினாலும் இத்தகைய அபத்தங்களுக்குக் காரணமாய் இருந்திருக்கக் கூடும்.  எதையும் ஆராயாமல் முடிவெடுப்பது தவறானதாகையால்> “தீக்குறளைச் சென்றோதோம்” என்னும் வாக்கியம் தீயதான கோளைக் காவுவதைச் செய்யோமென்ற அர்த்தத்தையே கொடுக்கிறது என எடுத்துக்கொள்வதே சிறப்பானதாகும்.

இருப்பினும் திருக்குறளை நன்கறிந்து இருந்திருக்கக்கூடிய தமிழறிவாளரான ஆண்டாள் இத்தகைய குழப்பநிலை பிற்காலத்தில் ஏற்படக்கூடுமென்று கருதியாவது அப்பாடலில் வரும் தீக்குறளை என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாமென்று எண்ணத் தோன்றுகின்றது.

 

-By Karu-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீ ஆண்டாள்   ஶ்ரீ ரங்கநாதனின் திருவடிச் சிந்தனையில் ஆழ்ந்து பாடியவர். அரங்கனின் எண்ணங்களே ஆண்டாளின் வார்த்தைகளாக வந்தது , தப்பாக இருக்காது.

 

திருக்குறளில் அறத்துப்பால் , பொருட்பால் எல்லோர்க்கும் உரியது. காமத்துப்பால் பெரும்பாலும் இல்லறத்தார்க்குரியது. (18+).

இங்கு ஆயர்குலச் சிறுமியர்களான ஆண்டாலும் ,அவர் தோழியரும் அக் காமத்துப்பாலைப்  படிக்கும் பருவத்தினர் அல்ல. ஆகையால் அது போன்றவற்றை தேடிப் பிடித்து ஓதமாட்டோம் எனக் கூறியிருக்கலாம்.

 

பண்ணிரு ஆழ்வார்கள் , அறுபத்திமூன்று நாயன்மார்கள் இவர்களில் ஶ்ரீ ஆண்டாளும், காரைக்கால் அம்மையாருமே பெண்களளானால் ஏனைய ஆண்களுக்கில்லாத சிறப்பு அவர்களுக்கு இருந்தது. ஆண்டாள் திருவரங்கனுடன் கருவறைக்குள் சென்று இரண்டறக் கலந்தவர்.  அம்மையார்  அந்த ஆடல்வல்லானுக்கே அன்னையராகும் சிறப்புப் பெற்றவர்.

 

மஹா பெரியவருக்கு ஸ்தோத்திரம்...!

 

Link to post
Share on other sites

நன்றி சுவி

தங்கள் கருத்துகள் சிந்தனைக்குரியவை.  இருப்பினும் திருக்குறளின் காமத்துப்பாலை ஆண்டாள் படிக்கும் பருவத்தினளல்ல என்பதை ஏற்க முடியவில்லை.   "கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ..." என்று   பக்திச் சுவையைக் காமச்சுவையுடன் கலந்து காட்டிய ஆண்டாள்  கண்ட கனவுகளும் ஓர் முதிர் கன்னி காணக்கூடிய கனவுகளேயன்றி சிறுமியொருத்தி காணக்கூடிய கனவுகளல்ல.   தனது பாசுரங்களில் இத்தகைய சிருங்கார ரசங்களைக் கலந்த ஆண்டாள் திருக்குறளை மட்டும் அதன் காமத்துப் பாலுக்காக எப்படி ஒதுக்கியிருக்க முடியும்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கோபியர்  கண்ணனுக்காக  ஏங்கியதற்கும் , ஶ்ரீ ஆண்டாள் நேசித்ததற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. அவர்கள் அனுபவித்து அனுபவித்து அவனைக் காணாத போதெல்லாம் அவனுக்காக ஏங்கினார்கள். கோதை ஆண்டாள் அப்படியல்ல..., அரங்கனை அவள்தான் வரித்துக் கொண்டாளே தவிர..., அவன் வருவானா தன்னை ஏற்பானா என்டும் தெரியாது. பெரியாழ்வாரின் கதைகளைக் கேட்டு கேட்டு பித்துப் பிடித்தவள் போலாகி விட்டாள்.

 

வண்டு வந்து தேன் எடுக்குமுன் கூம்பிய மொட்டாகப் பறித்து வந்து மாலை தொடுத்து சேவை செய்பவர் பெரியாழ்வார். சுவாமிக்குப் பிரசாதமாகப் போகிற மாலையையே அதன் தன்மை புரியாமல் குழந்தைத் தனமாக தான் அணிந்து கொடுத்தவள். நீங்கள் கூறியதுபோல் பார்த்தாலும் கற்பூரமும், கமலப் பூவும் நாறுமோ , இதழ் தித்திக்குமோ என்று  கேள்வியாகத்தான் கேட்கின்றாள். காரணம் அவற்றின் சுவைகள் அவளுக்குத் தெரியாது.

 

ஆண்டாள் பெருமாளுடன் ஐக்கியமான பின்னும்  ஆழ்வார் பெருமாளிடம் விண்ணப்பின்றார் .... ஆண்டாள் குழந்தை அவளுக்கு சமைக்கத் தெரியாது, உப்பு கூட சரியாய் போடத் தெரியாது என்கின்றார். அப்போது அசரீரியாக யாம் உப்பில்லாமலே ஏற்றுக் கொள்ளுகின்றோம் என்கின்றார் அந்த ஒப்பிலியப்பன்.

Link to post
Share on other sites

நன்றி சுவி

தங்களுக்கு ஆண்டாள் பாசுரங்களிலுள்ள ஈடுபாடு புரிகிறது. அனால் ஆண்டாள் பெரியாழ்வாரின் ஓர் கற்பனைப் பாத்திரமேயன்றி அப்படியொருவர் இருந்ததில்லையென்றும் சிலர் கூறுவர்.  உதாரணம் மூதறிஞர் ராஜாஜி.  ஆதலால் பெரியாழ்வாரின் அதீத வைஷ்ணவ வெறி திருக்குறளை அவமதிக்கும்படி செய்ததோ தெரியவிலை.  இக்காலத்தில் இத்தகைய சர்ச்சைகள் அடங்கிவிட்டன.  ஆண்டாளை எல்லோரும் ஆழ்வார்களுள் ஒருவராகவே ஏற்கிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
திருக்குறள் கல்வி நூலாக இருந்தது.
 
பரமன் நினவில்..
 
உண்ணோம்
மையிடோம்
மலர் சூடோம்
கல்லோம் ( குறளை )
அவன் நினைவு ஒன்றிலேயே நின்றோம்.
 
 
காஞ்சிப் பெரியவர் அது திருக்குறளே என்றாலும் அதில் தப்பிருப்பதாக தெரியவில்லை. விருப்புக்குரியவை, மதிப்பிற்குரியவை எல்லாவற்றையும் பரமன் நினைவு ஒன்றிற்காக கைவிட்டோம் என்னும் கருத்தில் பாசுரம் வருகிறது. திருக்குறள் இழிவாகச் சொல்லப்படவில்லை. மதிப்பிற்குரியதாகவே சொல்லப்படுகின்றது.
 
பரமனுக்காக மதிப்புக்குறைந்த‌ ஒன்றைச் செய்யாமல் விடுவோம் என்று சொல்வார்களா ?
 
 
.
 
Link to post
Share on other sites

நன்றி ஈசன்

ஆனால் தீக்குறளைச் சென்றோதோம் என்றல்லவா சொல்லப்படுகிறது.  குறள் யாருக்கு என்ன தீமை பயத்தது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருப்பாவையில் வரும் இரண்டாவது பாடலைத்தான் நீங்கள் குரிப்பிடுகின்றீர்கள். அவர்கள் ஶ்ரீமன் நாராயணின் குணங்களையும் அவனது சேவைகளையும் , நியமங்களையும் சொல்லித் துதித்துக் கொண்டு போகின்றார்கள். அதில்...

 

 1.  மார்கழித் திங்கள் .....................         நாராயணன் நமக்கே பறை தருவான்.

  2. வையத்து வாழ்வீர்காள்.............      விரதம் இருக்கும் முறையும் , கைப்பிடிக்க வேண்டிய முறைகளும்.

( காலையில் நீராடி நேய் பால் அருந்தாமல் நோன்பிருந்து , அலங்காரங்களைக் கைவிட்டு, வீணான பேச்சுக்கள் , வம்புகள் பேசாமல் பாடாமல்  பாற்கடலில் பாம்பணையில் துயிலும் பரமணைத் துதித்து வீடுபேறடைவோம்.

 

  3. ஓங்கி உலகலந்த ........................       அவனைத் துதிக்க  திங்கள் மும்மாரி , பசுக்கூட்டம் பெருகும் போன்றவை.

  4. ஆழிமழைக் கண்ணா................. நாம் வாழ மழை பொழியச் செய்.   ( அந்த மழை எப்படி கருவாகி உருவாகி வருகின்றது என்பதை நினைத்து நினைத்து உருகலாம்).

 

இப்படியே ஒவ்வொரு விடயமாகப் போகின்றது அவ்வளவுதான்......!

 

குறள் :  குறளிவித்தை, மாயத்தோற்றம், வதந்திகள் , வம்பளத்தல் இதுபோல் போகும் என நினைக்கின்றேன். நீங்கள் கூறியதுபோல் கோள் சொல்லல் என்றும் வரும், அதாவது நோன்புக்கு பங்கமானவைகள்.

 

 

ஆண்டாள் கற்பனை என்பதும் எனக்கு சரியென்று படவில்லை.

 

திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தத்தில்   49 வது பாடலில்:

 

கொண்டை கொண்ட கோதைமீது

தேனுலாவு  கூனிகூன்,

உண்டை கொண்ட  ரங்கவோட்டி

யுள்மகிழ்ந்த நாதனூர்,

நண்டையுண்டு நாரைபேர

வாளைபாய நீலமே,

அண்டைகொண்டு கெண்டைமேயு

மந்தணீர ரங்கமே !

 

என்று சாதிக்கின்றார்.

 

எனினும் ஒரு நல்ல சம்பாசனைக்கு வித்திட்ட உங்களுக்கு மிகவும் நன்றி கரு...!  :)

 

 

 

 

 

Link to post
Share on other sites

திருமழிசையாள்வாரை மேற்கோள்காட்டி ஆண்டாள் கற்பனைப்பாத்திரமல்ல என்று சாதித்த தங்களின் பாசுரங்கள் தொடர்பான அறிவைப் பாராட்டுகிறேன் நன்றி.  நீங்கள் குறிப்பிட்ட அந்த செய்யுளின் சந்த நடை மிவும் சிறப்பாயிருக்கிறது.  எனினும் மூதறிஞர் ராஜாஜி எதை வைத்துக்கோண்டு ஆண்டாளைக் கற்பனைப் பாத்திரமாக்கினார் என்று புரியவில்லை.  அது தொடர்பாக அவரெழுதிய முதல் மூவர் என்னும் கட்டுரையைத் தேடுகிறேன்.  கிடைக்கவில்லை.  கிடைத்தால் மீண்டும் வருகிறேன்.  
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆஞ்சநேயா அந்தப் புத்தகத்தை அபேஸ் பண்ணிவிடு..., கருவுக்கு  கருவும், கட்டுரையும் காணாமல் இருக்கட்டும் ....! :huh::)

 

பொய்கையாழ்வாரே  பொய்கைக்குள் போட்டு விடுங்கள்...!

பூதத்தாழ்வாரே   கிணற்றினுள் அமுக்கி விடுங்கள்...!

பேயாழ்வாரே   மயாணத்தில் மறைத்து விடுங்கள்...!

 

 

அவதரித்த ஆண்டாளை

கருவறுக்க  கருநிக்க

கோதை உயிர் தரிக்க

உதவிடுவீர்...!  :D :D

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈசன்

ஆனால் தீக்குறளைச் சென்றோதோம் என்றல்லவா சொல்லப்படுகிறது.  குறள் யாருக்கு என்ன தீமை பயத்தது?

 

 

தீந்தமிழ்  !!   :icon_idea:  :)

Link to post
Share on other sites

ஆஞ்சநேயா அந்தப் புத்தகத்தை அபேஸ் பண்ணிவிடு..., கருவுக்கு  கருவும், கட்டுரையும் காணாமல் இருக்கட்டும் ....! :huh::)

 

பொய்கையாழ்வாரே  பொய்கைக்குள் போட்டு விடுங்கள்...!

பூதத்தாழ்வாரே   கிணற்றினுள் அமுக்கி விடுங்கள்...!

பேயாழ்வாரே   மயாணத்தில் மறைத்து விடுங்கள்...!

 

 

அவதரித்த ஆண்டாளை

கருவறுக்க  கருநிக்க

கோதை உயிர் தரிக்க

உதவிடுவீர்...!  :D :D

 

சுவி

உங்கள் ஆதங்கம புரிகிறது.  ஆனால்

இது கலியாணத்தை நிறுத்தக் கரண்டியை ஒழிக்கும் கதையாகவல்லவோ இருக்கிறது.

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மாணவர்களை அவர்கள் செல்லும் கல்வி  வழியில் விட்டு அவர்களை நாம் பின்னின்று ஊக்குவித்தாலே காணும். எங்கள் ஆசைகளை பிள்ளைகளின் மீது திணிக்காமல் இருந்தாலே போதும். மாணவர்களே தங்கள் எதிர்காலக் கல்வியின் வழியினை முடிவு செய்ய பெற்றோர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் 
  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்று கூடும் அனைவரும் கைது செய்யப்படுவர் – இராணுவ தளபதி May 10, 2021 நாட்டில் கோவிட் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார். கோவிட் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் நிகழ்வுகள் மற்றும் நயினாதீவில் இடம்பெறவிருந்த வெசாக் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கோவிட் கட்டுப்பாட்டுக்காக விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. நினைவுகூரலுக்கு மக்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினால் அரசில்வாதிகள் மக்கள் என்ற வேறுபாடு இல்லாது கைது செய்யப்படுவார்கள். இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை நாம் மறுக்கவில்லை. வீடுகளில் தனித்து அதனைச் செய்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.   https://www.meenagam.com/முள்ளிவாய்க்கால்-நினைவ-4/    
  • சிங்கள இனத்துடன், முஸ்லிம்களை பிரிப்பதை டயஸ்போறாக்கள் தெளிவாக செய்கிறார்கள்..... அடப்பாவி.... வெடி போட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்களை, அவர்களது வணக்க தளத்தில் கொல்ல சொன்னது, டயஸ்போறாக்கள் தானே... இவனுகளுக்கு, சிங்களவன் இன்னும் ஆப்பு வைத்தால் தான் சரி.
  • ஆழ்ந்த இரங்கல்கள்.....! 
  • சீனாவும் இந்தியாவும் இலங்கையும் -என்.கே. அஷோக்பரன்  ஆசியாவின் பூகோள அரசியலில், இலங்கைத் தீவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை இலங்கைங்கு அளித்துள்ள வரமும், சாபமும் அதன் பூகோளத்தந்திரோபாய இடவமைவுதான் (geostrategic location).    இலங்கை, ஒரு மிகப்பெரிய உபகண்டத்தின் தெற்கில் அமைந்துள்ள, கடலால் பிரிந்துள்ள நாடு. பட்டுப்பாதை உள்ளிட்ட கடற்பாதைகளின் முக்கிய தொடுபுள்ளி. இந்த அமைவிடம்தான், பல்வேறு நாடுகளும் இலங்கையில் ஆர்வம் கொள்ள முக்கிய காரணம்.    சர்வதேச அளவிலான அதிகாரம், செல்வாக்கு என்பவை, இன்று மாற்றத்துக்கு ஒ உள்ளாகி வருவது அனைவரும் உணரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பனிப்போரில் அமெரிக்கா வென்றபோது, சர்வதேச அரங்கின் அதிகாரத்தின் மையமாக அமெரிக்கா இருந்தது. ஆனால், இன்றைய நிலை அதுவல்ல!    இன்று, உலகத்தின் ஒரே அதிகார மையம் அமெரிக்கா அல்ல! மாறாக, உலகத்தின் அதிகார மையங்களுள் அமெரிக்காவும் ஒன்று! மறுபுறத்தில், ஐரோப்பிய ஒன்றியம் இன்னோர் அதிகார மையமாக விளங்கும் அதேவேளை, 1990களின் பின்னரான பொருளாதார ஏற்றத்தின் காரணமாக, உலகின் உற்பத்திச்சாலையாக இந்தியாவும் பொருளாதார இராட்சசனாக சீனாவும் வளர்ந்து, இன்று ஆசியாவின் அதிகார மையங்களாக உருவாகி இருக்கின்றன.    இந்த ஒவ்வோர் அதிகார மையத்துக்கும், சர்வதேச அளவிலான அதிகார அரசியல் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. சர்வதேச அளவில், அமெரிக்க-சீனா போட்டி இன்னொரு பனிப்போராகவே உருப்பெற்றுள்ள அதேவேளை, தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரும் இறுக்கமடைந்துவருகிறது. மறுபுறத்தில், ஆசியாவைப் பொறுத்தவரையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி இன்னும் இறுக்கமாகி உள்ளது.   தன்னைத் தெற்காசியாவின் தன்னிகரில்லாத ‘ பெரியண்ணன்’ ஆகவே, இந்தியா எப்போதும் கருதிவந்துள்ளது. பாகிஸ்தான் என்ற தனது எதிரி நாட்டைத் தவிர, தன்னைச் சூழவுள்ள நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா சாம, தான, பேத, தண்ட என, எல்லா வழிமுறைகளையும் கையாண்டு இருக்கிறது.    பொருளாதார ரீதியில், இலங்கைக்கு சாதக பலன்களை வழங்கி இருக்கக்கூடிய ‘ஆசியான்’ என்ற தென்கிழக்காசிய நாடுகளின் ஒன்றியத்தில், இலங்கை இணைவதற்கான வாய்ப்பை மறுத்து, ‘சார்க்’ என்ற தெற்காசிய நாடுகளின் ஒன்றியத்தில் இலங்கை இணைந்துகொண்டமை கூட, இந்தியாவின் கைங்கரியம் ஆகும்.    தெற்காசியப் பிராந்தியத்தை, அதாவது, இந்தியாவின் அண்டை நாடுகளை, எப்பாடுபட்டேனும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் அடிப்படை வௌியுறவுக்கொள்கை. இதை, பபானி சென் குப்தா ‘பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான இந்தியக் கோட்பாடு’ என்று விளித்தார். காலவோட்டத்தில், அது ‘இந்தியக் கோட்பாடு’ என்றும் ‘இந்திரா கோட்பாடு’ என்றும் பின்னர், ‘ராஜீவ் கோட்பாடு’ என்றும் குறிக்கப்பட்டது.    இந்தக் கோட்பாடானது, மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாடுகளில் தலையிட, இந்தியாவுக்கு எந்தவோர் எண்ணமும் கிடையாது. அதேவேளை, எந்த நாடும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை, இந்தியா கடுமையாக எதிர்க்கும்.    இரண்டாவது, இந்திய நலன்களுக்கு, வெளிப்படையாகவோ உள்ளார்ந்த வகையிலோ எதிராக அமையும் வெளிநாடொன்றின் அணுகுறை, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாட்டில் தலையிடுவதை, இந்தியா சகித்துக் கொள்ளாது. ஆகவே, எந்தத் தெற்காசிய நாடும் இந்தியாவுக்கு எதிராக அமையத் தக்கவகையில், வெளிநாடு ஒன்றிடமிருந்து இராணுவ உதவியைப் பெறக் கூடாது.   மூன்றாவது, ஒரு தெற்காசிய நாட்டுக்குப் பாரதூரமான உள்ளக முரண்பாட்டை எதிர்கொள்ளவோ சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்துக்குச் சகிக்கமுடியாத அச்சுறுத்தல் காரணமாக, வெளியக உதவி உண்மையாகவே தேவைப்படுமானால், அது இந்தியா உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகளிடம் உதவி கோரலாம். அத்தகைய சூழலில், இந்தியாவைத் தவிர்த்தலானது, குறித்த அரசாங்கத்தின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும்.   தெற்காசிய நாடுகள், குறிப்பாகத் தனது நெருங்கிய அண்டை நாடுகள் தொடர்பான இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையின் சுருக்கம் இதுதான். ‘இந்த நாடுகளில் வேறெந்த வௌிநாடும் தலையிடுவதை இந்தியா விரும்பாது’. இந்த இடத்தில் தான், சீனா இன்று இந்தியாவுக்குப் பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது.   தெற்காசிய அளவிலான அதிகாரப் போட்டியில் சீனாவும் இந்தியாவும் மும்முரமாக மோதிக்கொள்ளும் ஒரு வகையான பனிப்போர் காலம் இது எனலாம். கடந்த ஒரு தசாப்த காலத்தில், இந்தியாவின் அண்டை நாடுகளைக் குறிவைத்து, சீனா தனது காய்களைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றிகரமாகவே நகர்த்தி வருகிறது.    இந்தியாவின் ‘எதிரி’ நாடாக உருவகிக்கப்படும் பாகிஸ்தானை, சீனா தன்னுடைய ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்துள்ளது என்றால் அது மிகையல்ல. 2013ஆம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுதிமிக்க உட்கட்டமைப்பு அபிவிருத்தி, ‘சீனா-பாகிஸ்தான் பொருளாதார நடைக்கூட திட்டம்’ என்ற பெயரில், சீனாவின் ‘வார்பட்டியும் பட்டுப்பாதை’ முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.    இந்தத் திட்டத்தின் கீழ், உலகின் பல நாடுகளில் சீனா முதலிட்டு இருந்தாலும், 2018ஆம் ஆண்டு வரையான தரவுகளின் படி, அவற்றில் அதிகளவு முதலீட்டைச் செய்தது பாகிஸ்தானில்தான். இந்தியாவின் வட மேற்கு எல்லையில் அமைந்துள்ள மியன்மாரிலும் சீனா தன்னுடைய முதலீடுகளை பெருமளவுக்கு முன்னெடுத்து வருகிறது.    இராணுவ ஆட்சி நடைபெறும் மியன்மாரில், அண்மையில் ஜனநாயகத் தேர்தல் முடிவுகளைத் தகர்த்தெறிந்து, மீண்டும் இராணும் தன் கோரப்பிடியை இறுக்கியுள்ள நிலையில், சீனாவின் செல்வாக்கு அங்கு மேலும் அதிகரிக்கும்.    இதைப்போலவே, இந்தியாவின் ஏனைய எல்லை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம், பலநூறு மைல் தூரம் தாண்டி அமைந்துள்ள மாலைதீவிலும் சீனா தன்னுடைய பொருளாதார இரும்புக்கரத்தின் மூலம், தனது செல்வாக்கை வளர்த்து வருகிறது.    இதன் ஒரு பகுதியாகவே, இலங்கையில் சீனா முன்னெடுக்கும் முதலீடுகள், வாரி வழங்கும் கடன்கள், முன்னெடுக்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் என்பனவும் பார்க்கப்பட வேண்டும்.    இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளைக் ‘கைப்பற்றுவதன்’ மூலம், சீனா இந்தியாவைச் சூழ்ந்துகொண்டுள்ளது. இதுதான், இந்தியா இன்று எதிர்நோக்கி இருக்கும் பெருஞ்சவால்.   தெற்காசியப் பிராந்தியத்தின் ‘பெரியண்ணன்’ ஆக இந்தியா இருக்க விரும்பினாலும், சீனாவுடன் மல்லுக்கட்டக்கூடிய பொருளாதார பலம் இந்தியாவிடம் தற்போது இல்லை. இந்தியாவின் பொருளாதாரம், மும்முரமாக வளர்கிறது எனினும், சீனாவைப் போன்று கடன்கனை வாரி வழங்கவும், உட்கட்டமைப்பில் முதலீடு செய்யவும் இந்தியாவால் உடனடியாக முடியாது.    மேலும் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. மாநிலங்கள் குறிப்பிட்டளவு சுயாட்சித்தன்மையைக் கொண்ட நாடு. அங்கே ஜனநாயகக் கட்டமைப்புகள் இயங்குகின்றன. சுதந்திர ஊடகத்துறை, நீதித்துறை இயங்குகின்றன. பொறுப்புக்கூறலுக்கான தேவையும் அவசியமும் இருக்கிறது.    ஆகவே, சீனாவின் செயற்படு வேகத்துக்கு இந்தியாவால் ஈடுகொடுக்க முடியாது. இன்று, தெற்காசிய நாடுகளில் சீனாவின் செல்வாக்கைத் தடுக்கவோ, சமன்செய்யவோ இந்தியா தடுமாறுவதற்கான அடிப்படைக்காரணம் இதுதான்.    ‘கொவிட்-19’ பெருந்தொற்றின் போது, தடுப்பூசிகள் விநியோகம் தொடங்கியபோது, ‘தடுப்பூசி இராஜதந்திரம்’ என, இந்தியா வௌிநாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி, தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டது.    ஆனால், கொரோனா வைரஸின் பரவல், இந்தியாவுக்குள் அதிகரிக்கவே, தடுப்பூசிக்கான உள்ளூர்த்தேவையை சமாளிக்கவே இந்தியா திணறும் நிலையை அடைந்தது. அதனால், ‘தடுப்பூசி இராஜதந்திரம்’ ஸ்தம்பித்துப் போனது. அந்த இடைவௌியையும் தற்போது சீனா பற்றிப் பிடித்துக்கொண்டது. தன்னுடைய சீனத் தடுப்பூசியை வழங்குவதன் மூலம், தடுப்பூசி இராஜதந்திரத்தை சீனா கைப்பற்றிக்கொண்டது.    இந்த இடத்தில், இலங்கை ஒன்றைப் புரிந்துகொள்வது அவசியம். இலங்கை, பாகிஸ்தான் அல்ல. இந்தியாவுக்கோ சீனாவுக்கோ இலங்கை எதிரி நாடல்ல! மாறாக, நட்பு நாடாகும். இதுவே வரலாற்று ரீதியான யதார்த்தமும் கூட.   அந்தச் சமநிலையை, இலங்கை பேணுவதுதான் இலங்கையின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் சிறப்பானது. அதேவேளை, இலங்கை தன்னாட்டு மக்களுக்கு இறுமாப்பாய்ச் சொல்லிக்கொள்ளும் இறைமையை, அந்நிய ஆதிக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதும் அவசியமாகும்.    இந்த இடத்தில்தான், ‘சமநிலை’ பற்றி இலங்கையின் கொள்கைவகுப்பாளர்கள் சிந்திக்க வேண்டியது காலத்தின் அத்தியாவசியத் தேவையாகிறது. இலங்கையின் அமைதியான, வளமான எதிர்காலத்துக்கு இலங்கையானது சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுடனும் நட்புறவைப் பேணுதல் அவசியமாகிறது.   இதில் ஒன்றை விடுத்து, இன்னொன்றைப் பற்றிக்கொள்ளுதல், நீண்டகாலத்தில் இலங்கைக்கு பெரும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தோற்றுவிப்பதாகவே அமையும். சீனா, இந்தியா ஆகிய நாடுகள் விடயத்தில், இலங்கை ‘அணிசேராக் கொள்கை’யைப் பின்பற்றும் நாடாக இருப்பதே, இலங்கைக்கு நன்மையானதாகும்.       http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சீனாவும்-இந்தியாவும்-இலங்கையும்/91-271385
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.