Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நஞ்சுண்டகாடு கருத்துப் பகிர்வும் குணா கவியழகனுடனான கலந்துரையாடலும்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

10347423_377696795768510_616732517726421

 

 

"நஞ்சுண்டகாடு" கருத்துப் பகிர்வும் குணா கவியழகனுடனான கலந்துரையாடலும்.
 

காலம்:21-03-2015 மாலை 4:30 மணி.
இடம் :07 rue cail 75010 paris.
(குளோபல் மொழி பெயர்ப்பு நிலையம்) 
 

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
 

தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை,

நன்றி .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்று குணா கவியழகன் அவர்களுடன்  ஓர் சந்திப்பும் கலந்துரையாடலும் தமிழ் இலக்கிய இளையர்  பேரவை சார்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றது ..

 

 கி பி  அரவிந்தன்  அவர்ளுக்கு நினைவு  சுடர்  ஏற்றப்பட்டு  அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பம் ஆகியது ....

நஞ்சுண்ட காடு  நூல்  பற்றிய  ஆசிரியர்  அவர்களின்  விளக்க உரையுடன் ஆரம்பம் ஆகிய கலந்துரையாடல்  மிக  சுவாரசியமா கருத்தாடலுக்கு நகர்த்துவது ,இந்த  நூலை  எழுதி வெளியிடும் நேரத்தில் ஏற்ப்பட்ட சிக்கல்கள்  தொடர்பாக நூலை  வெளியிட  காலதாமதம் ஏற்ப்பட்டதும் அதன்  பின்னர் ,அதை  வெளியிடும்  நேரத்தில்  இது  புலிகளால்  தடைபண்ணப்பட்ட  நூல் என்பது  போன்ற  ஒரு  மாயை உருவாக பட்டதும்  பின்னாளில் அதை  தான் வெளியிட  சம்மதம் தெரிவித்து  கிபி  அரவிந்தன் அவர்களின்  அறிவுறுத்தலின் பெயரில் மீண்டும்  இன்  நூலை வெளிகொண்டுவந்ததும் ,பற்றி பேசினார் ...

 

 

கேள்வி நேரத்தில் அவர்  அளித்த  சில பதிகள் ....

 

கேள்வி ::பெரும்பாலும்  இப்பொழுது  ஈழ  இலக்கிய எழுத்தாளர்கள் குறிப்பா  புலிகள்  பற்றியும் ,சூழல் பற்றியும் ஒரு புனைவு  இலக்கியம் படைப்பது  ஆரோக்கியமான விடையமா .

 

பதில் .....கண்டிப்பா அவர்கள்  எழுதலாம் ஏனெனில் அவர்கள் எழுதுவது நாவல் அது ஒன்றும் வரலாறு  இல்லை  ஆகவே அது பற்றி  நீங்கள்  குழம்பிக்க  தேவையில்லை ,அவர்களின்  சுகந்திரம் அது  அதில்  தலையிட  அனுமதி  இல்லை காலம் தானே  நகரும்  அது  தனக்கு  தேவையான வரலாற்றை  எடுத்துக்கொள்ளும்  இவர்கள்  எழுதுவது  அப்படியான  வரலாற்று  நூல்கள்  இல்லை  ஒரு  தரவுகள்  இல்லை  ஆகவே அவர்களின்  எழுத்துக்களில்  நாம் கடந்து  போகலாம் ....

 

கிபி அரவிந்தன்  அண்ணா  சொல்வது  போல  சந்தானம்  தேய்க்க   தேய்க்கத்தான் வாசனை  வரும் மலம் அப்படி  அல்ல  இருந்த உடன் மனம்க்கும்  பின்னர்  சில  மணித்தியாலத்தில்  காய்ந்து  இல்லாமல்  ஓரமா தள்ளி  வைக்கப்படும்  ஆகவே  காலம்  ஜீவன்  உள்ள  எழுத்துக்களை  தன்னகத்தே வாங்கி  கொள்ளும் ஆற்றல் உள்ளது ..

 

......................................................................

 

கேள்வி ::போராளி  என்பவர்கள்  பற்றிய  உங்கள்  பார்வை 

 

என் புத்தகத்தில்  நான் வடித்த  கதாபாத்திரம் ஒரு போராளி அவன் ஆயுதம்  ஏந்தித்தான்  போராடி  இருக்கணும்  என்று  இல்லை ஒரு  ஒடுக்கபட்ட  இனத்துக்கு  ஒருவன் குரல்  கொடுத்தால் அல்லது  அதுக்க வேலை  செய்தால் அவன்  போராளி  அவன் சக பயணியா  பயணித்தபடி  இருப்பன் ஆனால் அவனின்  கொள்கை ஒன்றாகவே  இருக்கும் ....

 

பலரின் கேள்வி கடைசி  சண்டையில்  நீ  ஏன்  சாகவில்லை  என்பதே  பல போராளிகளை பார்த்து  கேட்பபடுது ,அதுக்கு  அவன்  என்ன  செய்வான் அவனுக்கு  மரணம் வரவில்லை  என்பதுக்கு  அவன் காரணமா இல்லையே  பல லட்சம்  ரவையில் ஒருரவை   இவைகூட  அவனை  தாக்க  வில்லை  என்பதுக்கு  அவன் என்ன  செய்திட  முடியும் ஆக மரணம் என்பது ஒரு காலத்தின்  தேவை  ஆகுது அது  நிகழும் போது பார்க்கலாம் ...

 

பத்து  நாளுக்கு முன்னம் உரையாடிய அரவிந்தன் அண்ணாவுடன் நேரில் வந்து  சந்திக்கிறேன் என்று  சொல்லிவிட்டு  இருந்தேன் ஆனால் அவரின்  மரணத்துக்குத்தான்  வந்தேன் என்பது  ஒரு வேதனையாது ,ஆனால் அவர்  நோயில் வாடிய  நிலையை பார்க்க  கூடாது  என்று  நினைத்தாறோ  என்னவோ ....

 

ஆகவே அதிகாரத்துக்கு  எழுதுவது என்பது அரசியல் நோக்கானது அது நாவல் அல்ல  ஒரு புனை நவீனத்துவ  இலக்கியம் வியாபார  ரீதியில்  வெற்றி  பெறும்  ஆனால் காலம் கடந்து  பேசப்படாது அவர்  சொன்னார்  இவர்  எழுதினார் என்னும்  நிலையில் போய்விடும் .

.................

இறுதியா தான் கடந்து வந்த போரின் நிகழ்வுகளை  கண்டிப்பா எழுதுவதாகவும் அரசியல் முழுமையா அது இருப்பதால் தான் அந்த  துறையில் இருந்து வந்தவன்  என்பதால் தவறுகள் சரிகளை பற்றி மீள்  ஆய்வு  செய்ய வேண்டிய  தேவை  இருக்கிறது ஆகவே  அதை படைப்பதுக்கு  காலங்கள்  ஆகலாம்  ஆனால் அதை  செய்தே முடிப்பேன் என்றார் ...

 

 

இவ்வாறான  பல கருத்து முரண்களுக்கு தன்னால்  ஆனா பதில்களை  அளித்தார் ...

நிகழ்வுக்கு வருகை எதிர்பாத்த  மக்களை விட  அதிகமா வந்தார்கள் என்பதால் இளையர்  பேரவை மகிழ்வு  அடைகிறது ..

 

உங்களின் ஊக்கத்துக்கும்  ஆதரவுக்கும் நன்றிகள் .

11041219_378909595647230_275216062519477

 

14712_378909492313907_898418955098098297

 

10645218_378909495647240_454838853310189

 

 

12907_378909642313892_161002376344557471

 

20822_378909625647227_998026017228402019

 

10984206_378909465647243_317324660142358

 

 

 

10391010_1636967546524452_86737913847839

 

 

11063424_378909578980565_471626054360769

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேற்று ; நஞ்சுண்டகாடு எழுதிய குணா- கவியழகன் உடனான சந்திப்பு உரையாடலுக்கு சென்றிருந்தேன். 

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னால் , புலிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சிலரின் எழுத்துக்கள் புத்தகங்களாக வெளிவந்தபோது அவற்றைப் படிப்பதற்கான ஆர்வம் என்னிடமிருந்தது. 

ஆனால்,இவ் எழுத்துக்கள் பற்றிய இவ் "எழுத்தாளர்களின்" பேட்டிகளை படிக்க நேர்ந்தபோது எனக்கு அவ் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. 

புலிகளை விமர்சிப்பதாக கூறிக்கொண்டு, இலங்கைப் பேரினவாத ஒடுக்குமுறை அரசுக்கு "சேவகம்" செய்பவர்களாகவே இவர்களின் வார்த்தைகள் இவர்களை இனம் காட்டியது.

அத்தோடு இவர்களின் அரசியல் உறவு நிலை என்பது பேரினவாத அரசோடு சேர்ந்தியங்கும் குழுக்களோடும், நபர்களோடும் பின்னிப் பிணைந்திருப்பதையும் காணமுடிந்தது.

குணா - கவியழகனின் நஞ்சுண்டகாடு வெளிவந்தபோது புகலிட பேரினவாத அரசு ஆதரவு நபர்கள் இப் புத்தக்தை விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரதியாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

நேற்றைய குணா -கவியழகன் உடான உரையாடலின்போது இவை பற்றிய என் அபிப்பிராயங்களை அவரிடம் கூறினேன். மிகவும் நேர்மையாக ,அறிவார்ந்த உணர்வு பூர்வமான மொழிகளோடு , இன்றும் மக்களை நேசிக்கும் ஒரு போராளியாக தன் எதிர்வினைகளை முன்வைத்தார்.

நீண்டகாலங்களுக்குப் பின்னர்.நேர்மைத்திறன் கொண்ட, விடுதலைப் புலிகளைச் சேர்ந்த படைப்பாளி ஒருவரை புகலிடத்தில் சந்திக்க நேர்ந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

இச் சந்திப்பை ஒழுங்கு படுத்திய 'தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை' நண்பர்களுக்கு என் நன்றிகள்.

 

அசோக் யோகன் ...

Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கம் பெற்ற ஈழத்தவர்களின் நாவல்களில் பெரும்பான்மையானவை வாசிப்பதற்கு உருசியாக இருந்தவைதான். அவற்றில் பல நளினத்தொனியில் ஈழப்போராட்தை விமர்சனம் செய்தவை. தமிழையும், ஈழப்போராட்டத்தையும் அவற்றின் தீயபக்கங்களால் மாத்திரம் படம் பிடித்துக் காட்டிய சிறுகதைகள் பிரபல்யம் அடைந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறான கதைகள், நாவல்களுக்குத் தமிழ்நாட்டிலும் சந்தை வாய்ப்புகள் அதிகமாகவே கிடைத்தன.

இவ்வாறான படைப்புகள் நளினச் சிரிப்பைத் தந்துவிட்டுச் சென்றுவிடுபவை. வாசிக்கும் கணத்தில் வாசிப்பவர்களுக்குக் கிளுகிளுப்பூட்டுவதுடன் அவற்றின் கடமை முடிந்துவிடுகிறது.

குணா கவியழகனின் "நஞ்சுண்ட காடு" அவ்வாறானதல்ல. அது பற்றியெரியும் ஒரு காடு. வாசகரின் உடலையும் உள்ளத்தையும் தீக்குளிப்புக்கு அழைத்துச் செல்கிறது இந்நாவல். தம்மைப் போராளிகள் என்று பிரகடனம் செய்யும் எத்தனைபேரின் இலக்கியத்தில் போரின் துல்லியத்தைக் காணமுடிந்தது ? ஈழப்போரை வெறும் புறநிiலைச் சம்பவங்களாகவும், சிறுபிள்ளை வேளாண்மையாகவும் மற்றும் இயக்க அடிபாடுகளாகவும் சித்தரித்த போலிப் போராளிகளின் இலக்கியங்கள் "நஞ்சுண்டகாட்டின்" முன் வெற்றுப்பாத்திரங்கள்.

 

வாசுதேவன்  .....பாரிஸ் 

மொழிபெயர்ப்பாளர் ..எழுத்தாளர் 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பவா அண்ணை ( கவியன்பன்) , இப்போதும் போராளி என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தலைவர் இருந்த காலத்தில் போராளியாய் இருந்தார்கள்.இப்போது தங்கள் வாழ்க்கையை பார்க்கிறார்கள். என் அபிப்பிராயத்தில் தற்போது  போராளிகள் என்று எவரும் இல்லை. போராளிகள் என்ற பதம் எப்போதும் மதிப்புக்குரியது.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வசதியாக குந்தியிருந்து கடந்தகாலத்தை  இரைமீட்பதை போன்ற சுகமான அனுபவம் உண்டா?  
  • நேற்று இந்தக் காணொளியை பார்க்க நேர்ந்தது.. இவர் கூறும் கூற்றில் மெய், பொய் தெரியாது, பார்வையளர்களின் முடிவுக்கு விட்டுவிடலாம்..! 🤔  காலத்திற்குள் செய்யாத உதவியும், எல்லாம் முடிந்த பின் மக்களின் மனநிலைக்கு ஏற்ப புகழ்ந்து தள்ளுவதும் குப்பைக்கு சமம் என்ற உண்ர்வே மேலிட்டது.    
  • 1) திருமணம் சுபமுகூர்த்தத்தில் நிறைவேறியது.  காதல் கரிநாள் ஆனது  ..... 2) உறவுகள் பறிபோனது.  காதல் வந்தது.  .... 3) நொடி மூச்சு நிலையில்லை.  காதல் நிலையானது.  ... 4) கண்ணால் காதல் வந்தது.  இதயம் நொறுங்கிப்போனது.  ... 5) நித்திரையில் சிரித்தேன்.  திட்டி எழுப்பினார் அம்மா  @ கவிப்புயல் இனியவன் 
  • பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது! . ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது ! பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன ! மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன ! ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன ! சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன ! தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன ! ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன ! இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் உன்னால் வாழ முடியாதோ? அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ்கின்றாய் ! அதை ஏன் நொந்துபோய் வாழ்கின்றாய் ! அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ்கின்றாய் ! அதை ஏன் அழுதுகொண்டு வாழ்கின்றாய் ! வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை. . சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் ! இது உன் வாழ்க்கை... அதை ஆனந்தமாக வாழ். . . https://www.facebook.com/நல்லதே-நினைப்போம்-நல்லதே-நடக்கட்டும்-1639711246245226/photos/சிந்தனைசெய்-மனமேநன்றி-தே-சௌந்தர்ராஜன்அவன்-சொன்னான்-இவன்-சொன்னான்-என்று-எதையும்-ந/1752318084984541 திருவாசகத்தில் ஒரு வாசகம் -39    
  • பழைய காலத்தில் தான் பாம்பை முடிந்தால் அடித்து கடி வாங்கியவருடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தது. இப்போது polyvalent antivenom என்று நாகம், புடையன், கண்டங்கருவளை என பல பாம்புகளின் விஷத்தை முறிக்கும் மருந்து ஒன்றாகவே பாவனையில் இருக்கிறது.  இந்த மருந்துகளை பாம்புக் கடி வாங்கிய நாய்களுக்கு ஏற்றிய அனுபவம் இருக்கிறது. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.