Jump to content

வேதாகமத்தில் வரலாற்று முரண்பாடுகள் | அகழ்வாய்வு நிபுணர்கள்!


Recommended Posts

வேதாகமத்தில் வரலாற்று முரண்பாடுகள் | அகழ்வாய்வு நிபுணர்கள்!

http://www.marumoli.com/2014/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81/

 

வரலாற்றை எழுதிய விதத்தில் வேதாகமம் தவறிழைத்திருக்கிறது – சொல்கிறார்கள் ரெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்களான லிடார் சேபிர்-ஹென் மற்றும் ஈரேஸ் பென்-ஜோசெப் ஆகியோர்.

இதுவரை அறியப்பட்ட அதி புராதன ஒட்டக எலும்புகளில்  மேற்கொள்ளப்பட்ட  கார்பன் வயதறிமுறை ஆதாரங்களைக் காட்டி  மத்திய கிழக்கில் ஒட்டகங்களின் வருகை கிறிஸ்து காலத்திற்கு  9 நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான்  என இவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் பழைய ஏற்பாடு  (ஹீப்ரூ வேதாகமம்) ஆபிரகாம் காலத்திலேயே ஒட்டகங்கள் இருந்ததாகச் சொல்கிறது.  ஆபிரகாம் இருந்ததற்கான அகழ்வாய்வுத் தடயங்கள் எதுவுமில்லாதிருந்த போதிலும் மத, விஞ்ஞான சமூகங்களிலுள்ள பலர் கி.மு.  20ம் நூற்றாண்டை ஆபிரகாமின் பிறந்த காலமாகக் கருதுகிறார்கள். தற்போதைய ஆய்வுகள் ஏற்கப்படின் வரலாற்றை விஞ்ஞானம் விளக்கும் முறைக்கும் வேதாகமம் விளக்கும் முறைக்குமிடையில் பல முரண்பாடுகள் வெளிக்கொணரப்படலாம்.

அரவா பள்ளத்தாக்கிலுள்ள செப்பு உற்பத்திப் பிரதேசங்களில் ஆராய்ச்சியாளர்கள் தேடுதல் நடத்தியபோது பெறப்பட்ட ஒட்டக எலும்புகள் கி.மு. 9ம் 10ம் நூற்றாண்டுகளுக்குரியவை எனவே ஆய்வுகள் தெரிவிப்பதாக சேபிர்-ஹென் மற்றும் பென்-ஜோசெப் ஆகியோர் கூறுகிறார்கள்.

“அப் பிரதேசமெங்கும் செப்பு உற்பத்தி முறையில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களைத் தொடர்ந்து ஒட்டகங்களின் திடீர் வருகை ஆரம்பிக்கிறது. மத்திய தரை வணிக மார்க்கத்தினூடு எகிப்தியர்கள் ஒட்டகங்களைக் கொண்டுவந்திருக்கலாம்.” எனவும் இறையியல் சமூகத்தினருக்கு இது ஆச்சரியமளிக்க முடியாது. காலத்திற்கொவ்வாத பல விடயங்கள் வேதாகமத்திலுள்ளன   என்பது பற்றி நாம் ஒரு தலைமுறையாகவே அறிந்துவந்திருக்கிறோம் எனவும் யூத இறையியற் பள்ளியைச் சேர்ந்த கலாநிதி ரொபேர்ட் ஹரிஸ் கூறுகிறார்.

 

 ஆதியாகமம்24: 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான்.   31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான்.  32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான். 

 இஸ்ரேலில் ஒட்டகம் புழங்கத் தொடங்கியது பொ.மு.930 வாக்கில், புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எலும்புகள் கூறும் உண்மைகள். இஸ்ரேல் டெல்-அவிவ் பல்கலைக் கழக ஆய்வுகள். இது சுரங்கம், அரசு பணி போன்றவற்றின் பயன்பாடு- ஆபிரகாமிற்கு 1000 வருடம் பின்பு தான் என நிருபிக்கிறது.

 

ஆனால் இங்கு உள்ளது, ஆபிரகாம் வீட்டு கொட்டிலில் ஒட்டகம், அது எப்போது நடந்தது. இது ஆபிரகாமிற்கு 1800 வருடம் பின்பு தான் பரவலாக வீட்டுக் கொட்டிலில் கட்டிபயன்படுத்தியது பொ.மு.200 வாக்கில்தான்.  விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்- இங்கே

http://en.wikipedia.org/wiki/Exodus_from_Egypt//

 

The mention of the dromedary in Exodus 9:3 also suggests a later date of composition – the widespread domestication of the camel as a herd animal did not take place before the late 2nd millennium, after the Israelites had already emerged in Canaan, and they did not become widespread in Egypt until c.200–100 BCE.//

Link to comment
Share on other sites

ஆதியாகமம்14:14 தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண் -வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.
 
யோசுவா19:40 ஏழாவது சீட்டு தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. 47 தாண் மக்களின் எல்லை ஒடுக்கமாக இருந்ததால், அவர்கள் புறப்பட்டுப்போய் இலசேமை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டனர்: அதை வாள் முனையில் தாக்கித் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு அங்கு வாழ்ந்தனர். தங்கள் மூதாதையான தாணின் பெயரை ஒட்டி, இலசேமிற்குத் 'தாண்' என்று பெயரிட்டார்கள்.
 
நியாயாதி18: 14 இலாயிசு நாட்டை வேவு பார்க்கச் சென்றிருந்த ஐவரும் உடன்வந்த பிறரிடம் கூறியது .... 8 ஏனெனில் இலாயிசு மக்கள் சீதோனிலிருந்து தொலையில் இருந்ததாலும், அவர்களுக்கு மற்ற மனிதர்களுடன் தொடர்பு இல்லாதிருந்ததாலும் அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை. இலாயிசு நகர் பெத்ரகோபின் பள்ளத்தாக்கில் இருந்தது. தாண் மக்கள் நகரை மீண்டும் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தனர்.29 இஸ்ரயேலுக்குப் பிறந்த தங்கள் தந்தை தாண் பெயரால் அந்நகரை "தாண்" என்று அழைத்தனர். அந்நகரின் முன்னைய பெயர் இலாயிசு.
 
ஆபிரகாம் - மோசஸ் தலைமுறைகளுக்குப் பின் சில தலைமுறைக்குப்பின் தான் இப்பகுதிக்கு இப்பெயர் வந்ததாம்.  
 
கடவுள் சொல்ல மோசே எழுதியது பொய்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தை... படுற, பாட்டுக்குள்ளை...
குத்தியன், குத்தி.... முறியுறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் வகுப்பில் இருந்து நான் சமயம் படிக்கின்றேன். எங்கேயும் பைபிள், சம்பவங்கள் நடந்த போது சமகாலத்தில் எழுதப் பட்ட நூல்களின் தொகுப்பு என்று நான் கற்கவில்லை. எப்பவோ நடந்ததை வாய் வழி செவி வழி மூலம் கேட்டு பின்னாட்களில் எழுதினார்கள். இவை எழுதுபவரின் கற்பனை கலந்து எழுதப் பட்டது பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. இதனால் கிறிஸ்தவர்களுக்கு இது அதிர்ச்சியான கண்டு பிடிப்பு அல்ல, கிறிஸ்தவர்கள் அல்லாதோருக்கு இருக்கலாம்! :D

Link to comment
Share on other sites

நீங்கள் உணர்ந்துள்ளதை அனைவரும் அறியவே தந்துள்ளேன். நடந்த சம்பவம் அல்ல, புனையப்பட்ட கதைகள்.
 
பைபிள் பழைய ஏற்பாடு காலத்டில் இஸ்ரேல் என்ற நாடு இருந்ததே இல்லை, என்பது இப்போது பன்னாட்டு பல்கலைக் கழக புதைபொருள்- பைபிளியல் ஆய்வாளர் ஏற்கும் முடிவு.
 
தவறன செய்தி இருந்தால் கண்டிப்பாக தெரிவிக்கவும்.
Link to comment
Share on other sites

ஆதியாகமம்: 12:10 – 20

கர்த்தர் தேர்ந்தெடுத்த கானான் தேசத்தில் பஞ்சம் வர எகிப்து செல்ல எகிப்து மன்னன் ஆபிரகாம் மனைவி சாராளை காதலோடு நோக்குவதைத் தடுக்க சாராளைத் ஆபிரகாம் தங்கை என்றாராம்.

பிறகு மீண்டும் 

 

  sarah-at-65.jpg 70 வயதில் எகிப்து மன்னனை    sarah-at-90.jpg  100 வயதில்கேராரின்    
மயக்கிய  கவர்ச்சி ராணி .                 அபிமெலேக் மயக்கிய  கவர்ச்சிஅழகி

இந்த இரண்டு கதையில் ஆபிரகாமின் மனைவி கிழவி, இரண்டாவது கதையின் போது மாதவிடாய் நின்றுபோனவள். ஆனால் ஒரு நாட்டு ராஜா கிழவியை காதலுடன் பார்த்ததாக் கேவலமான கதை.

ஆபிரகாம் மகன் ஈசாக்கும் இதே கதை அதுவும் இதே  கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் எனக் கதை ஆதியாகமம்26:1-6

ஆபிரகாம் – இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் பைபிளியல் அறிஞர்கள் சொல்வது -இந்தக் கதைகள் பிதாக்கள் கர்த்தரிடம் செல்வாக்குடையவர்கள்-பாதுகாப்பு பெற்றவர்கள்,  மனைவிகள் அழகானவர்கள் எனக்காட்ட புனையப்பட்ட கதைகள்.

Jewish Encyclopedia:-“From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity.

 

Link to comment
Share on other sites

ஆபிரகாம் யூதம், கிறிஸ்துவம் - இஸ்லாம் மூவருக்கும் குல பிதாவானவர்.
 
ஆபிரகாம் பற்றிய வரலாற்று தேடல் அவசியமே.
 
பல கோடி மக்கள்  தினமும் தங்கள் மதநூல் என்பதை ஆராயும்போது - நடுநிலையோடு செயல்படுங்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கம் மக்களை சுரண்ட 
உருவாக்கபட்டதுதான் சமயம்.
 
மேல்தட்டு வர்க்கம் பாதிக்க பட்டது இருக்க 
எல்லா மதத்திலும் புனைகதைகள் உண்டு.
 
புனைகதைகளை விட்டால் சமயம் இல்லை.
 
கடவுள் இருந்தால் நேரடியாக கும்பிடலாமே .....?
ஏன் மத ரீதியாக சுத்தி வளைக்க வேண்டும் ? 
 
கடவுளுக்கு மனிதர் பேசினால் புரியாதா ?
Link to comment
Share on other sites

ஜெருசலேம் யாருடையது? யூதா-ஜெருசலேமில் வாழ்ந்தவர்கள் எமோரியர்கள், வென்றது யோசுவா.  யோசுவா 10 :1-11 

 

1அக்காலத்தில் அதோனிசேதேக் எருசலேமின் அரசனாக இருந்தான். யோசுவா ஆயீ நகரைத் தோற்கடித்து முற்றிலும் அழித்துவிட்டான் என்ற செய்தியை அந்த அரசன் அறிந்தான். எரிகோவிற்கும் அதன் அரசனுக்கும் யோசுவா அவ்வாறே செய்தான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவன் அறிந்திருந்தான். அந்த ஜனங்கள் எருசலேமுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்தனர். எனவே அதோனிசேதேக்கும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்தனர். கிபியோன் ஆயீயைப் போன்ற சிறிய நகரமன்று. கிபியோன் ஒரு பெரிய பலமான நாடு. அங்கிருந்த ஆண்கள் அனைவரும் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள். எருசலேமின் அரசனாகிய, அதோனிசேதேக், எபிரோனின் அரசனாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் அரசனாகிய பீராமுடனும், லாகீசின் அரசனாகிய யப்பியாவுடனும், எக்லோனின் அரசனாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் அரசன் இவர்களிடம், “என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளனர்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். இந்த ஐந்து எமோரிய அரசர்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.) ஜெருசலேமில் வாழ்ந்தவர் கானானியர்கள், வென்றது   யூதா கோத்திர மனிதர்கள். நியாயாதிபதிகள் 1 : யூதா மனிதர்கள் பேசேக்கின் அரசனை எருசலேமிற்குக் கொண்டு சென்றார்கள். அவன் அங்கு மரித்தான்.யூதா மனிதர்கள் எருசேலேமுக்கு எதிராகப் போரிட்டு அதனைப் பிடித்தார்கள். எருசலேம் ஜனங்களைக் கொல்ல யூதா மனிதர்கள் தங்கள் வாள்களைப் பயன்படுத்தினார்கள். பின்பு நகரை எரித்தார்கள். பின்னர் யூதா மனிதர்கள் கானானியர் சிலரை எதிர்த்துப் போரிடச் சென்றார்கள். அந்தக் கானானியர்கள் பாலைவனப்பகுதியிலும், மலை நாட்டிலும், மேற்கு மலையடிவாரங்களிலும் வசித்தார்கள்.10 பின்பு யூதா மனிதர்கள் எபிரோன் நகரில் வாழ்ந்த கானானியரோடு போரிடச் சென்றார்கள் (எபிரோன், ”கீரியாத்அர்பா” என்றும் அழைக்கப்பட்டது.) சேசாய், அகிமான், தல்மாய் ஆகிய மனிதர்களையும் யூதாவின் ஜனங்கள் தோற்கடித்தனர்.

 

ஜெருசலேமில் வாழ்ந்தவர் எபூசியர்கள் வென்றது   தாவீது ராஜா. 

1நாளாகமம்11: 4 பின்பு தாவீதும் இஸ்ரயேலர் அனைவரும் எருசலேமுக்குச் சென்றனர். அது அந்நாட்களில் எபூசு என்று அழைக்கப்பட்டது: எபூசியர் அங்கே அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.5 எபூசுவாழ் மக்கள் தாவீதை நோக்கி: நீர் இங்கு நுழையவே முடியாது என்றனர்: ஆயினும் தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே ‘தாவீதின் நகர்’ ஆயிற்று.6 தாவீது, எபூசியரை முதலில் வெட்டி வீழ்த்துபவன் படைத்தலைவனும் தளபதியுமாய் இருப்பான் என்று அறிவித்திருந்தார்.

ஜெருசலேமில் சாலமோன் கட்டியதான தேவாலயமோ, ஏன் எஸ்ரா -நெகேமியா காலத்து தேவாலயம் என்பதிலிருந்து புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் ஒரு செங்கல் கூடக் கிடைக்கவில்லை.

 
ஆனால் ஜெருசலேமில் அப்போது வாழ்ந்த மக்கள் தொகை 1000 பேருக்கும் குறைவே என இஸ்ரேலின் டெல்-அவிவ் பல்கலைகழக ஆசிரியர் கட்டுரையின் சில பகுதிகள்.

PERSIAN PERIOD FINDS FROM JERUSALEM: FACTS ANDINTERPRETATIONS -ODED LIPSCHITS; INSTITUTE OF ARCHAEOLOGY, TEL AVIV UNIVERSITY.

http://www.jhsonline.org/Articles/article_122.pdf

Link to comment
Share on other sites

//மேல்தட்டு வர்க்கம் மக்களை சுரண்ட 
உருவாக்கபட்டதுதான் சமயம்.//
 
மிகச் சரி.
 
However, between 500–100 BC, Bactrian camels attained military use. New saddles, which were inflexible and bent, were put over the humps and divided the rider's weight over the animal. In the seventh century BC, the military Arabian saddle appeared, which improved the saddle design again slightly.
 
ராணுவப் பயன்பாட்டிற்கு ஒட்டகம் வந்ததே கி.மு. 700க்குப் பின் தான்.
 
பின் எப்படி கி.மு.2000 ஆபிரகாம் வீட்டு கொட்டிலில் ஒட்டகம்.
 
ஆபிரகாம் கதைகள் கட்டுக்கதையே.
 
ஜெருசலேம் பற்றியவை மேலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இஸ்ரேலின் உண்மையான வரலாற்றையும், பழைய ஏற்பாடு கதைகள் உருவானவிதம் எனத் தெளிவாக் பைபிளியல் பேராசிரியர் தாமஸ் தாம்சன் நூல் இலவச இணைப்பாக இங்கே உள்ளது.

f54a37bbc769e17263bd04b39b5da030-d.jpg

http://bookzz.org/book/873345/64e2b7

Link to comment
Share on other sites

 

ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கம் மக்களை சுரண்ட 
உருவாக்கபட்டதுதான் சமயம்.
 
மேல்தட்டு வர்க்கம் பாதிக்க பட்டது இருக்க 
எல்லா மதத்திலும் புனைகதைகள் உண்டு.
 
புனைகதைகளை விட்டால் சமயம் இல்லை.
 
கடவுள் இருந்தால் நேரடியாக கும்பிடலாமே .....?
ஏன் மத ரீதியாக சுத்தி வளைக்க வேண்டும் ? 
 
கடவுளுக்கு மனிதர் பேசினால் புரியாதா ?

 

 

உங்களைப் போன்றவர்களிடமிருந்து இத்தகைய கேள்விகள் வரலாம் என்று தீர்க்கதரிசனமாக யூகித்து அதற்கான பதிலையும் என்றோ எழுதிவிட்டனர். கலியுகத்தில் கடவுளைக் காணமுடியாது. கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் நிகழும்.
 
லி யுகம் (Kali Yuga) இந்து தொன்மவியலில் புராணங்களில் உலக சமுதாயம் மேற்கொள்ளும் நான்கு வளர்ச்சிகாலங்களில், யுகங்களில், இருண்டகாலம் எனப்படும் கடைசி காலகட்டமாகும்.மற்றவை கிருதயுகம் (அல்லது) சத்திய யுகம்,திரேதாயுகம், துவாபரயுகம்.இவற்றின் காலவரையாக கூறப்படுபவை: கிருதயுகம் - 17 லட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள்,திரேதாயுகம் - 12 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள்,துவாபரயுகம் - 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்.கலியுகம் - 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.தற்போது கலியுகம் நடப்பதாக நம்பப்படுகிறது.
 
கலியுகத்தில் இவ்வாறெல்லாம் நடக்கும் எனக் கூறப்படுபவை:
 
அரசர்கள் செங்கோல் தாழும்.கொடுங்கோல் ஏற்றமுறும். வரிகள் அதிகமாகும். அரசுகள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். அரசே மக்களை துன்புறுத்தும். மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்காக இடம் பெயர்வர்.
மக்கள் மனப்பான்மை: பொறாமை அதிகமாகும்;ஒருவருக்கொருவர் வெறுப்பு வளரும்.
கொலைகள் எந்தவொரு குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தாது.
காமம் மற்றும் பாலின ஒழுக்கமின்மை சமூகத்தில் ஏற்கப்படும்.
ஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்காது.அவர்களுக்கு மாணவர்களால் ஆபத்து உண்டாகும்.
திருமணம் அவரவர் இஷ்டப்படி தான் நடக்குமே தவிர பெரியவர்கள் சம்மதத்தின் பேரில் அல்ல.
கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் நிகழும்.
வெள்ளை குதிரையில் வந்து கலியுக நிகழ்வுகளுக்குக் காரணமான "கலி"யுடன் போரிட்டு தீயசக்திகளை அழிப்பார்.
அதன் முடிவில் உண்மை வெல்கின்ற சத்திய யுகம் (கிருத யுகம்) பிறக்கும்.
Link to comment
Share on other sites

அப்ப்டியென்றால் கலியுகத்தின் முடிவில்.. முன்பு வந்து சென்ற ஏலியன்கள் மறுபடியும் வரப்போகிறார்கள்.. :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்களைப் போன்றவர்களிடமிருந்து இத்தகைய கேள்விகள் வரலாம் என்று தீர்க்கதரிசனமாக யூகித்து அதற்கான பதிலையும் என்றோ எழுதிவிட்டனர். கலியுகத்தில் கடவுளைக் காணமுடியாது. கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் நிகழும்.
 
லி யுகம் (Kali Yuga) இந்து தொன்மவியலில் புராணங்களில் உலக சமுதாயம் மேற்கொள்ளும் நான்கு வளர்ச்சிகாலங்களில், யுகங்களில், இருண்டகாலம் எனப்படும் கடைசி காலகட்டமாகும்.மற்றவை கிருதயுகம் (அல்லது) சத்திய யுகம்,திரேதாயுகம், துவாபரயுகம்.இவற்றின் காலவரையாக கூறப்படுபவை: கிருதயுகம் - 17 லட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள்,திரேதாயுகம் - 12 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள்,துவாபரயுகம் - 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்.கலியுகம் - 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.தற்போது கலியுகம் நடப்பதாக நம்பப்படுகிறது.
 
கலியுகத்தில் இவ்வாறெல்லாம் நடக்கும் எனக் கூறப்படுபவை:
 
அரசர்கள் செங்கோல் தாழும்.கொடுங்கோல் ஏற்றமுறும். வரிகள் அதிகமாகும். அரசுகள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். அரசே மக்களை துன்புறுத்தும். மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்காக இடம் பெயர்வர்.
மக்கள் மனப்பான்மை: பொறாமை அதிகமாகும்;ஒருவருக்கொருவர் வெறுப்பு வளரும்.
கொலைகள் எந்தவொரு குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தாது.
காமம் மற்றும் பாலின ஒழுக்கமின்மை சமூகத்தில் ஏற்கப்படும்.
ஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்காது.அவர்களுக்கு மாணவர்களால் ஆபத்து உண்டாகும்.
திருமணம் அவரவர் இஷ்டப்படி தான் நடக்குமே தவிர பெரியவர்கள் சம்மதத்தின் பேரில் அல்ல.
கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் நிகழும்.
வெள்ளை குதிரையில் வந்து கலியுக நிகழ்வுகளுக்குக் காரணமான "கலி"யுடன் போரிட்டு தீயசக்திகளை அழிப்பார்.
அதன் முடிவில் உண்மை வெல்கின்ற சத்திய யுகம் (கிருத யுகம்) பிறக்கும்.

 

இதெல்லாம் 1000 வருடம் முன்பு மிகவும் மலிவாக இருந்தது 
இப்போது குறைந்து வருகிறது ......
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.