Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

திருநாவுக்கரசர் பாடல்கள்


Recommended Posts

தேவார முதலிகளில ஒருவரான திருநாவுக்கரசருக்கு மருணீக்கியார்> தருமசேனர்> வாகீசர்> அப்பர்> தாண்டகவேந்தர் என்னும் நாமங்களுமுண்டு.  இதில் அப்பர் என்னும் திருநாமம் திருஞானசம்பந்தரால் கொடுக்கப்படது என்பர்.  அப்பர் பாடிய முதற்பாடல் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்..” என்று தொடங்குவதாகும்.   இந்தப் பதிகம் முழுவதும் அவர் வயிற்று உபாதையால் அதாவது சூலை நோயாற் பட்ட துன்பத்தின் ஆற்றாமையையும் அதனைக் குறைக்குமாறு இறைவனை வேண்டுவதையுமே காட்டி நிற்கின்றது.

அப்பர் தான் பெற்ற இறையனுபவத்தைப் பற்றிப் பாடும் “மாசில் வீணையும்…” பாடல் மிகுந்த இயற்கை நுகர்வை அனுபவிக்கும் ஓர் கவிஞனாக அவரை வெளிப்படுத்துகின்றது.  அவரின் து}ய இசைப்பற்றும் அதில் தெரிகின்றது.   அபசுரம் தட்டாத> பழுதுபடா மாசில் வீணையின் நாதம்> மாலையில் தோன்றும் குளிர் நிலா> உடலை இதமாக வருடி வீசும் தென்றல்> பூக்கள் மலர்ந்து சிரிக்கும் வசந்த காலமான இளவேனில்> ரீங்காரமிட்டு பூக்களெங்கும் மொய்த்துத்திரியும் வண்டுகள் நிறைந்த பொய்கை - இவைகளைப் போன்று இன்பம் தருவதே இறைவனின் பாத சரணாகதியென்று அவர் அந்த இன்பநிலையை ஒப்பிடுகிறார்.

இங்கு ஒரு கேள்வியெழுகின்றது.  மேற்சொன்னவையெல்லாம் எளிதில் கிடைக்கக் கூடியவையே.  பூரண சரணாகதி மூலம் இறைவனைக் கலத்தலால் வரும் பேரின்பத்தை இவற்றிற்கு நிகராகக் கொள்ள முடியுமா? என்பதுதான் அந்தக் கேள்வி.  உண்மையில் அந்தப் பேரானந்த அனுபவத்தைத் தம்முள் உணர்ந்த அப்பர் இயற்கையை நுகரும்போது அங்கே இறையருளைக் காண்கிறார்.  அதுவே அவரை அவ்வாறு ஒப்பிடச் செய்கின்றது.

பாரதியும் காக்கைச் சிறகினிலே நந்தலாலா உன்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா பார்க்குமிடங்களெல்லாம் நந்தலாலா உன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா என்று தான் பெற்ற தெய்வீகவுணர்வை தனது இயற்கை நுகர்ச்சியினூடாக வெளிப்படுத்துவதையும்> வாடிய பயிரைக் கண்டால் வாடுமென் நெஞ்சு என்று வள்ளலார் பசுமைக்காய் ஏங்குவதையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

அப்பர் இறைவனை இயற்கை நிகழ்வுகளில் கண்டின்புறுவதை  அவரது இன்னொரு பாடலான “மாதர்ப் பிறைக்கண்ணியானை…” என்னும்பாடல் விளக்குகின்றது.  திருவையாற்றில் கங்கையையும் இளம் பிறையையும் சூடிய சிவனை மலைமகளுடன் சேர்த்துப் பாடிச்செல்லும் அடியார் கூட்டத்துள் யாரும் அடையாளம் காணாதபடி செல்கையில் களிறெொன்று மடப்பிடியோடு காதல் செய்வதைக் கண்டேன்.  நான் கண்டறியாத விடயமது. அந்த இயற்கை நிகழ்வு இறைவனின் திருப்பாதத்தை எனக்கு நினைவூட்டியது> கண்டேனவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். என்று இரண்டு தடவைகள் வியந்து சொல்கிறார்.  இந்த இயற்கைச் செயற்பாட்டில் இறைவனைக்காணும் அப்பரின் பாடலை குழந்தைகளெல்லாம் ஆலய பஜனைகளில் பக்தியோடு பாடுவதை சைவ சமய ஆர்வலர்கள் கேட்டு மகிழ்கிறார்கள்.

அப்பரின் பாடல்களில் அஞ்சாமையை வெளிப்படுத்தும் “நாமார்க்கும் குடியல்லோம்  நமனையஞ்சோம்…” என்னும்பாடல் இறைபக்தியுள்ளோருக்கு வாழ்வில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.  தருமசேனராயிருந்தபோது சூலைநோயென்னும் வயிற்று உபாதையால் துன்ப்பபட்ட அப்பர் “ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் இன்பமே ஒருநாளும் துன்பமில்லை..” என்று உறுதியோடு கூறுவது இறை நம்பிக்கையால் அவரடைந்த சுகத்தை வெளிப்படுத்துகிறது.  சிவபெருமானின் சுற்றத்தார் நாம் அஞ்சுவதற்கு எதுவுமில்லை அஞ்சப் போவதுமில்லை  என்று “சுண்ண வெண் சந்தனச் சாந்தும்..” என்று தொடங்கும் பாடலில் இவ் அஞ்சாமையை அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

மகா அலெகஸாண்டர் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தபோது ஒரு திகம்பரர் இவ்வாறு அந்த மன்னனின் அழைப்பைப் பயமின்றி மறுத்ததாக வரலாறுண்டு. பின்னர் மன்னனே சென்று அவரைச் சந்தித்தானாம்.  வடக்கிருந்து மகாநிர்வாண நிலையடைந்த இத்தகைய ஜைன ஞானிகளிடமிருந்த அச்சமற்ற போக்கு> தர்மசேனராயிருந்து வைதிகத்திற்கு மீண்ட திருஞானசம்பந்தரிடமும் குடிகொண்டிருந்தது தனது ஜைன வாழ்வில் அவர் பெற்ற பக்குவ நிலையாலேயே என்று ஊகிக்கத் தோன்றுகின்றது.  அல்லாவிடில்> சைவத்திற்கு மீண்ட குறுகிய காலத்தினுள்ளேயே மகேந்திர பல்லவ மன்னனின் அழைப்பை மறுத்து அவர் இவ்வாறு கூறுமளவுக்குப் பரிபக்குவ நிலை ஏற்பட்டிருக்க நியாயமில்லை.

அப்பரின் இறை தொடர்பான கொள்கையில் அவர் தன் பக்தியின் பயனாய் இறைவனின் இருப்பிடத்தைக் கண்டுகொண்டமையை “தேடிக் கண்டு கொண்டேன் தேடிக் கண்டு கொண்டேன் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்..” என்ற வரிகள் மூலம் தெளிவாக்குகிறார்.   “உள்ளம் பெருங்கோயில்> ஊனுடம்பு ஆலயம்> தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்..” என்னும் திருமூலர் திருமந்திரம்> “நட்டகல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்துறீர் நட்ட கல்லுப் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்..” என்னும் சித்தர் பாடல்;;> “தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே…” என்னும் மணிவாசகர் கூற்று போன்றவற்றால் இறைவன் மேற் பக்திசெய்த அனைவரும் இறுதியில் இறைவனைத் தம் உள்ளத்திலேயே கண்டு இன்புறுவதைக் காண முடிகின்றது.  யேசுபிரானும் தனது மலைப்பிரசங்கத்தில் இவ்வாறே உள்ளத்தைத் தட்டுங்கள் திறக்கப்படும்> கேளுங்கள் தரப்படும்> அங்கே தேடுங்கள் கிடைக்குமென்று  என்று வேறொரு வகையாகக் கூறுகிறார்.

கைவல்ய நவனீதனான இறைவன் விறகில் தீயைப் போலவும் பாலின் நெய்யைப் போலவும் மறைய நிற்கிறான்.  அவனுடன் உறவு கொண்டு உணவென்னும் மத்தால் முறுகக் கடையும்போது முன்வந்து நிற்பான் என்கிறார் அப்பர்.  தனியே வைதிகத்தின் சகுண பக்திக்கு மட்டும் உட்படாது ஆரம்பத்தில் நிர்க்குண பிரமத்தில் ஈடுபாடு காட்டிப் பல யோக தியான சாதனைகளின் மூலம் புறச் சமயங்களைத் தழுவியவர்கள்; இறைவனைத் தம் உள்ளத்திற் காணலாம் என்னும் நம்பிக்கையுடனேயே வைதிகத்திற்கு மீண்டு வருகிறார்கள்.  மணிவாசகரும் பற்பல மதி மயக்களுக்குட் சிக்கி இறுதியில் “அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையினால்..” சிவனவன் என் சிந்தையுள் நின்றவதனால் அவனருளாலே அவன்றாள் வணங்கினேன்..” என்கிறார். அப்பரும் இவ்வாறே தருமசேனராயிருந்து பல சமண தியான சாதனைகளால் தன்னுணர்வு பெற்றவராதலால் வைதிகத்திற்கு மீண்டபோது தான்பெற்ற அனுபவங்களைக் கொண்டு வந்ததோடல்லாமல் “தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்..” என்கிறார்.

அப்பரின் பாடல்களில் சங்ககால அக இலக்கிய மரபைத் தழுவிய பாடலுக்கு உதாரணமாக “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்..” என்னும் திருத்தாண்டகத்தைக்; குறிப்பிடலாம்.  தன் கணவன் பெயரைப் பிறர் சொல்லக் கேட்டு இன்புறுவது தலைவியாகிய மனைவிக்கு இயல்பு.  “சிறையாரும் மடக்கிளியே இங்கே வா தேனொடுபால் முறையாலே உணத்தருவேன்… துலங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயோ!”  என்று சம்பந்தர் நாயகன் நாயகி பாவத்துடன் இறைவனைப் பக்தி செய்கிறார்.  அவர் இறைவியின் திருமுலைப்பாலை உண்டு சிவனுக்கு மகனானதாகவும் வரலாறுண்டு.  ஆனால் அதனைத் தந்தையாருக்குச் சொன்ன போதும்கூட “காடுடைய சுடலைப் பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன்..” என்று ஒரு இளநங்கை காதலனைப்பற்றிக் கூறுவதைப் போன்றே கூறியிருக்கிறார்.  இதே நாயகன் நாயகி பாவத்தில் தன்னைமறந்து இறைவனிடம் சரண்புகும் ஓர் பெண் இறைவனின் நாமம்> அவனிருக்கும் வண்ணம்> அவன் எழுந்தருளியிருக்கும் ஊர் ஆகியவற்றைக் கேட்டு அவன் மேற் பித்துப்பிடித்தவளாகி> தன் குல ஒழுக்கத்தை மறந்து> தாய் தந்தையரைத் துறந்து காதல் வயப்பட்டு தலைவன் திருவடிகளிலேயே சரணடைந்து விடுகிறாள்.  என்பதை ஓர் அழகிய அக இலக்கிய வடிவில் பக்திச் சுவை ததும்ப அப்பர் எடுத்துரைக்கிறார்.

ஓர் மிகச்சிறந்த கவிஞராகவும் சிந்தனாவாதியாகவுமிருந்த அப்பர்> இளமையிலேயே தாய் தந்தையரையிழந்து பின் நிச்சயிக்கபபட் மணவாளனையுமிழந்த தனது தமக்கையாரான திலவதியாரின் அன்பு வேண்டுகோளைத் தட்ட முடியாது> எல்லா வழியுமொன்றே என்ற உறுதியான நம்பிக்கையோடு சைவத்தைத் தழுவிக்கொண்டார். பிற்காலத்தில் அவர் சமணத்தை எதிர்த்தாராயினும் தருமசேனராயிருந்த அவரது காலப்பகுதியில் அவர் ஜைன மார்க்கம் தொடர்பான பல்வேறு அருட்பாக்களை இயற்றியிருக்கவும் கூடும். “தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” என்று பாடிய அவர் தனது இளமைக் காலத்தில் எதையும் எழுதாமல் இருந்திருக்க நியாயமில்லை.

சரித்திரம் இருண்ட காலமென்று பலவற்றை ஒதுக்கி விட்டது போல அப்பரின் ஜைன மதம் தொடர்பான கருத்துக்களையும் பாடல்களையும் இருட்டடிப்புச்செய்து விட்டது போலும்.  அவையெல்லாம் இன்று நமக்குக் கிடைத்திருக்குமாயின் தமிழிலக்கியத்தில்>  குறிப்பாக தத்துவ இலக்கியத்தில் மேலும் அரிய ஆக்கங்கள் எமக்குச் சேர்ந்திருக்கும். ஒரு வள்ளுவம் எம் தமிழை உலகில் உயர்த்தி வைத்திருப்பது போல தர்மசேனரின் பாடல்களும் வியத்தகு சொத்தாய் தமிழ்த் தாயை அலங்கரித்திருக்கும்.

- By Karu -

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தேவார முதலிகளில் ஒருவரான திருநாவுக்கரசருக்கு மருணீக்கியார், தருமசேனர், வாகீசர், அப்பர், தாண்டகவேந்தர் என்னும் நாமங்களுமுண்டு. இதில் அப்பர் என்னும் திருநாமம் திருஞானசம்பந்தரால் கொடுக்கப்படது என்பர். அப்பர் பாடிய முதற்பாடல் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்..” என்று தொடங்குவதாகும். இந்தப் பதிகம் முழுவதும் அவர் வயிற்று உபாதையால் அதாவது சூலை நோயாற் பட்ட துன்பத்தின் ஆற்றாமையையும் அதனைக் குறைக்குமாறு இறைவனை வேண்டுவதையுமே காட்டி நிற்கின்றது.

அப்பர் தான் பெற்ற இறையனுபவத்தைப் பற்றிப் பாடும் “மாசில் வீணையும்…” பாடல் மிகுந்த இயற்கை நுகர்வை அனுபவிக்கும் ஓர் கவிஞனாக அவரை வெளிப்படுத்துகின்றது. அவரின் தூய இசைப்பற்றும் அதில் தெரிகின்றது. அபசுரம் தட்டாத, பழுதுபடா மாசில் வீணையின் நாதம், மாலையில் தோன்றும் குளிர் நிலா, உடலை இதமாக வருடி வீசும் தென்றல், பூக்கள் மலர்ந்து சிரிக்கும் வசந்த காலமான இளவேனில், ரீங்காரமிட்டு பூக்களெங்கும் மொய்த்துத்திரியும் வண்டுகள் நிறைந்த பொய்கை - இவைகளைப் போன்று இன்பம் தருவதே இறைவனின் பாத சரணாகதியென்று அவர் அந்த இன்பநிலையை ஒப்பிடுகிறார்.

இங்கு ஒரு கேள்வியெழுகின்றது. மேற்சொன்னவையெல்லாம் எளிதில் கிடைக்கக் கூடியவையே. பூரண சரணாகதி மூலம் இறைவனைக் கலத்தலால் வரும் பேரின்பத்தை இவற்றிற்கு நிகராகக் கொள்ள முடியுமா? என்பதுதான் அந்தக் கேள்வி. உண்மையில் அந்தப் பேரானந்த அனுபவத்தைத் தம்முள் உணர்ந்த அப்பர் இயற்கையை நுகரும்போது அங்கே இறையருளைக் காண்கிறார். அதுவே அவரை அவ்வாறு ஒப்பிடச் செய்கின்றது.

பாரதியும் காக்கைச் சிறகினிலே நந்தலாலா உன்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா பார்க்குமிடங்களெல்லாம் நந்தலாலா உன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா என்று தான் பெற்ற தெய்வீகவுணர்வை தனது இயற்கை நுகர்ச்சியினூடாக வெளிப்படுத்துவதையும், வாடிய பயிரைக் கண்டால் வாடுமென் நெஞ்சு என்று வள்ளலார் பசுமைக்காய் ஏங்குவதையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

அப்பர் இறைவனை இயற்கை நிகழ்வுகளில் கண்டின்புறுவதை அவரது இன்னொரு பாடலான “மாதர்ப் பிறைக்கண்ணியானை…” என்னும்பாடல் விளக்குகின்றது. திருவையாற்றில் கங்கையையும் இளம் பிறையையும் சூடிய சிவனை மலைமகளுடன் சேர்த்துப் பாடிச்செல்லும் அடியார் கூட்டத்துள் யாரும் அடையாளம் காணாதபடி செல்கையில் களிnறொன்று மடப்பிடியோடு காதல் செய்வதைக் கண்டேன். நான் கண்டறியாத விடயமது. அந்த இயற்கை நிகழ்வு இறைவனின் திருப்பாதத்தை எனக்கு நினைவூட்டியது, கண்டேனவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். என்று இரண்டு தடவைகள் வியந்து சொல்கிறார். இந்த இயற்கைச் செயற்பாட்டில் இறைவனைக்காணும் அப்பரின் பாடலை குழந்தைகளெல்லாம் ஆலய பஜனைகளில் பக்தியோடு பாடுவதை சைவ சமய ஆர்வலர்கள் கேட்டு மகிழ்கிறார்கள்.

அப்பரின் பாடல்களில் அஞ்சாமையை வெளிப்படுத்தும் “நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்…” என்னும்பாடல் இறைபக்தியுள்ளோருக்கு வாழ்வில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. தருமசேனராயிருந்தபோது சூலைநோயென்னும் வயிற்று உபாதையால் துன்ப்பபட்ட அப்பர் “ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் இன்பமே ஒருநாளும் துன்பமில்லை..” என்று உறுதியோடு கூறுவது இறை நம்பிக்கையால் அவரடைந்த சுகத்தை வெளிப்படுத்துகிறது. சிவபெருமானின் சுற்றத்தார் நாம் அஞ்சுவதற்கு எதுவுமில்லை அஞ்சப் போவதுமில்லை என்று “சுண்ண வெண் சந்தனச் சாந்தும்..” என்று தொடங்கும் பாடலில் இவ் அஞ்சாமையை அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

மகா அலெகஸாண்டர் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தபோது ஒரு திகம்பரர் இவ்வாறு அந்த மன்னனின் அழைப்பைப் பயமின்றி மறுத்ததாக வரலாறுண்டு. பின்னர் மன்னனே சென்று அவரைச் சந்தித்தானாம். வடக்கிருந்து மகாநிர்வாண நிலையடைந்த இத்தகைய ஜைன ஞானிகளிடமிருந்த அச்சமற்ற போக்கு, தர்மசேனராயிருந்து வைதிகத்திற்கு மீண்ட திருஞானசம்பந்தரிடமும் குடிகொண்டிருந்தது தனது ஜைன வாழ்வில் அவர் பெற்ற பக்குவ நிலையாலேயே என்று ஊகிக்கத் தோன்றுகின்றது. அல்லாவிடில், சைவத்திற்கு மீண்ட குறுகிய காலத்தினுள்ளேயே மகேந்திர பல்லவ மன்னனின் அழைப்பை மறுத்து அவர் இவ்வாறு கூறுமளவுக்குப் பரிபக்குவ நிலை ஏற்பட்டிருக்க நியாயமில்லை.

அப்பரின் இறை தொடர்பான கொள்கையில் அவர் தன் பக்தியின் பயனாய் இறைவனின் இருப்பிடத்தைக் கண்டுகொண்டமையை “தேடிக் கண்டு கொண்டேன் தேடிக் கண்டு கொண்டேன் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்..” என்ற வரிகள் மூலம் தெளிவாக்குகிறார். “உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம், தௌ;ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்..” என்னும் திருமூலர் திருமந்திரம், “நட்டகல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்துறீர் நட்ட கல்லுப் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்..” என்னும் சித்தர் பாடல்;;, “தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே…” என்னும் மணிவாசகர் கூற்று போன்றவற்றால் இறைவன் மேற் பக்திசெய்த அனைவரும் இறுதியில் இறைவனைத் தம் உள்ளத்திலேயே கண்டு இன்புறுவதைக் காண முடிகின்றது. யேசுபிரானும் தனது மலைப்பிரசங்கத்தில் இவ்வாறே உள்ளத்தைத் தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும், அங்கே தேடுங்கள் கிடைக்குமென்று என்று வேறொரு வகையாகக் கூறுகிறார்.

கைவல்ய நவனீதனான இறைவன் விறகில் தீயைப் போலவும் பாலின் நெய்யைப் போலவும் மறைய நிற்கிறான். அவனுடன் உறவு கொண்டு உணவென்னும் மத்தால் முறுகக் கடையும்போது முன்வந்து நிற்பான் என்கிறார் அப்பர். தனியே வைதிகத்தின் சகுண பக்திக்கு மட்டும் உட்படாது ஆரம்பத்தில் நிர்க்குண பிரமத்தில் ஈடுபாடு காட்டிப் பல யோக தியான சாதனைகளின் மூலம் புறச் சமயங்களைத் தழுவியவர்கள்; இறைவனைத் தம் உள்ளத்திற் காணலாம் என்னும் நம்பிக்கையுடனேயே வைதிகத்திற்கு மீண்டு வருகிறார்கள். மணிவாசகரும் பற்பல மதி மயக்களுக்குட் சிக்கி இறுதியில் “அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையினால்..” சிவனவன் என் சிந்தையுள் நின்றவதனால் அவனருளாலே அவன்றாள் வணங்கினேன்..” என்கிறார். அப்பரும் இவ்வாறே தருமசேனராயிருந்து பல சமண தியான சாதனைகளால் தன்னுணர்வு பெற்றவராதலால் வைதிகத்திற்கு மீண்டபோது தான்பெற்ற அனுபவங்களைக் கொண்டு வந்ததோடல்லாமல் “தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்..” என்கிறார்.

அப்பரின் பாடல்களில் சங்ககால அக இலக்கிய மரபைத் தழுவிய பாடலுக்கு உதாரணமாக “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்..” என்னும் திருத்தாண்டகத்தைக்; குறிப்பிடலாம். தன் கணவன் பெயரைப் பிறர் சொல்லக் கேட்டு இன்புறுவது தலைவியாகிய மனைவிக்கு இயல்பு. “சிறையாரும் மடக்கிளியே இங்கே வா தேனொடுபால் முறையாலே உணத்தருவேன்… துலங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயோ!” என்று சம்பந்தர் நாயகன் நாயகி பாவத்துடன் இறைவனைப் பக்தி செய்கிறார். அவர் இறைவியின் திருமுலைப்பாலை உண்டு சிவனுக்கு மகனானதாகவும் வரலாறுண்டு. ஆனால் அதனைத் தந்தையாருக்குச் சொன்ன போதும்கூட “காடுடைய சுடலைப் பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன்..” என்று ஒரு இளநங்கை காதலனைப்பற்றிக் கூறுவதைப் போன்றே கூறியிருக்கிறார். இதே நாயகன் நாயகி பாவத்தில் தன்னைமறந்து இறைவனிடம் சரண்புகும் ஓர் பெண் இறைவனின் நாமம், அவனிருக்கும் வண்ணம், அவன் எழுந்தருளியிருக்கும் ஊர் ஆகியவற்றைக் கேட்டு அவன் மேற் பித்துப்பிடித்தவளாகி, தன் குல ஒழுக்கத்தை மறந்து, தாய் தந்தையரைத் துறந்து காதல் வயப்பட்டு தலைவன் திருவடிகளிலேயே சரணடைந்து விடுகிறாள். என்பதை ஓர் அழகிய அக இலக்கிய வடிவில் பக்திச் சுவை ததும்ப அப்பர் எடுத்துரைக்கிறார்.

ஓர் மிகச்சிறந்த கவிஞராகவும் சிந்தனாவாதியாகவுமிருந்த அப்பர், இளமையிலேயே தாய் தந்தையரையிழந்து பின் நிச்சயிக்கபபட் மணவாளனையுமிழந்த தனது தமக்கையாரான திலவதியாரின் அன்பு வேண்டுகோளைத் தட்ட முடியாது, எல்லா வழியுமொன்றே என்ற உறுதியான நம்பிக்கையோடு சைவத்தைத் தழுவிக்கொண்டார். பிற்காலத்தில் அவர் சமணத்தை எதிர்த்தாராயினும் தருமசேனராயிருந்த அவரது காலப்பகுதியில் அவர் ஜைன மார்க்கம் தொடர்பான பல்வேறு அருட்பாக்களை இயற்றியிருக்கவும் கூடும். “தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” என்று பாடிய அவர் தனது இளமைக் காலத்தில் எதையும் எழுதாமல் இருந்திருக்க நியாயமில்லை.

சரித்திரம் இருண்ட காலமென்று பலவற்றை ஒதுக்கி விட்டது போல அப்பரின் ஜைன மதம் தொடர்பான கருத்துக்களையும் பாடல்களையும் இருட்டடிப்புச்செய்து விட்டது போலும். அவையெல்லாம் இன்று நமக்குக் கிடைத்திருக்குமாயின் தமிழிலக்கியத்தில், குறிப்பாக தத்துவ இலக்கியத்தில் மேலும் அரிய ஆக்கங்கள் எமக்குச் சேர்ந்திருக்கும். ஒரு வள்ளுவம் எம் தமிழை உலகில் உயர்த்தி வைத்திருப்பது போல தர்மசேனரின் பாடல்களும் வியத்தகு சொத்தாய் தமிழ்த் தாயை அலங்கரித்திருக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
திருவள்ளுவரின் முதலாவது குறளே சமண சமயத்தின் கடவுள் கொள்கையில் இருந்து விலகுகின்றது. அப்படி இருக்க வள்ளுவரை எப்படி சமணர் என்பது ?
 
அப்பர் சமண சமய பாடல்களைப் பாடி இருக்க அவை அழிக்கப்பட்டிருக்கலாம் என்பது கற்பனையாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில்..
 
சைவம் தவிர்ந்த ஏனைய‌ படைப்புகள் அழிக்கப்பட்டிருக்கும் என்றால் மணிமேகலை எப்படித் தப்பியது ?
 
 
 
   
Link to post
Share on other sites

நன்றி ஈசன்!

வள்ளுவரைப்பற்றி நானொன்றும் இங்கு எழுதவில்லையே! வள்ளுவம் தமிழுக்கு அழகு செய்வது போல அப்பரின் சமணக் கருத்துக்களும் அவை கிடைத்திருந்தால் தமிழுக்கு மேலும் அழகூட்டியிருக்குமென்றே எழுதினேன். அதை நீங்கள் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள்.  

இயற்கையிலேயே சிறந்த கவிஞரான நாவுக்கரசர் சமணராயிருந்தபோது இளைஞராக இருந்திருப்பார்.  பல பாடல்களையும் பாடித்தானிருப்பார்.  ஆனால் எமக்கு அவை கிடைக்கவில்லை.  அது ஒரு இழப்பல்லவா?

 

மணிமேகலை  (பெளத்த காவியம்) சிலப்பத்திகாரம், சீவக சிந்தாமணி (சமண காவியங்கள்)போன்ற நூல்கள் தப்பிப்பிழைத்ததற்காக சமய ரீதியாக எதுவும் ஒதுக்கவோ அழித்தொழிக்கவோ படவில்லையென்று கூறமுடியாது.  பல நூல்களை அப்படி அழித்திருக்கிறார்கள்.  அழிந்தவை போக மிஞ்சியவைதான் இப்போது எம் வசமுள்ளன.

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
அப்பர் உண்மையில் சமண பாடல்களை இயற்றி இருப்பாரயிருந்தால் சில சமயம் அவரே தன் தவறுணர்ந்து அவற்றை அழித்திருக்கலாமல்லவா ? (சைவத்திற்கு மீண்ட போது )
 
அப்பரின் பாடல்கள் தன் உணர்வின் வெளிபாடுகளே.
 
சம‌ணத்தில் தன் உணர்வை வெளிப்படுத்தவல்ல கவித்துவமான விசயங்களும் இல்லை.  :unsure:  :)
 
உதாரணமாக சைவத்தில் அவன் இவன் என்று சொல்லவல்ல உறவுமுறையான இறைவன் இருக்கிறான். ஆட்கொள்ளல் என்னும் பந்தமும் அங்கே வந்து விடுகின்றது. பின் கவிதைகளுக்கா பஞ்சம் ? 
 
Link to post
Share on other sites

குண்டல கேசி,  நீலகேசி போன்ற பெளத்த சமணத் தருக்க நூல்கள் (குண்டலகேசி முழுமையாக இல்லை) தமிழில் உள்ளன. மணிமேகலையும் அத்தகையதே. அவைகள் கதைகளாயிருந்தாலும் சமயக் கோட்பாடுகளை வலியுறுத்துவனவாகவே யுள்ளன.  நாவுக்கரசரின் நாவன்மையால் சமணக்கருத்துக்களை அவர் கூறாமல் விட்டிருக்க மாட்டார்.   ஆனால்,  இருவேறு கொள்கைகளை ஒருவரே பரப்பக்கூடாது என்பதற்காகத் தனது ஆக்கங்களைத் தானே அழித்திருக்கலாம்.  அவ்வகையில் நீங்கள் கூறுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு கூட்டமைப்பினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட  26 பேருக்கு தடை மட்டக்களப்பு 12 பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு  26 பேருக்கு தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை அமைப்புக்கள் உள்ளிட்ட  26 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1216209
  • சீனாவில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பொருட்கள் டெல்லியை வந்தடைந்தன! சீனாவில் இருந்து 3 ஆயிரத்து 600 ஒக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லியை வந்தடைந்துள்ளன. ஒக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து ஒக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வருகின்றது. அந்தவகையில் இதுவரை இல்லாத வகையில் சீனாவில் இருந்து ஒக்சிஜன் செறிவூட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி சுமார் 100 டன் எடைக் கொண்ட செறிவூட்டிகள், சீனாவின் ஹொங்கொங் விமானநிலையத்தில் இருந்து போயிங் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேநேரம் மேலும் பல மருத்துவ பொருட்கள் சீனாவில் இருந்து அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2021/1216160
  • ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் இராணுவம் இடையிலான மோதல் 7ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்த நிலையில், காசா நகரில் ஹமாஸ் போராளிகள் அமைப்பின் அரசியல் தலைவரான யஹ்யா சின்வாரின் வீட்டை குண்டு வீசித் தகர்த்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.‌ அத்தோடு, யஹ்யா சின்வாரின் சகோதரரான முஹமது சின்வாரின் வீடும் தரைமட்டமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் தலைவரின் வீடு குண்டு வீசி தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தளவாடங்கள் மற்றும் மனிதவள தலைவர்களாக இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. யஹ்யா சின்வாரின் வீடு குண்டு வீசித் தகர்க்கப்பட்டதை பாலஸ்தீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் யஹ்யா சின்வார் மற்றும் முஹமது சின்வார் குறித்து உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1216193
  • புங்கையூரான்....  சனி பகவான், ஏற்கெனவே... சமூக இடைவெளி இல்லாமல், மற்றைய நவக்கிரகங்களுடன் நெருக்கமாக, நின்றுள்ளதால்.... அவர்களுக்கும் சேர்த்து... மருந்து அடிக்க வேணும். 🤣
  • Dr Hugh McDermott, a member of New South Wales Legislative Assembly, has called on both the Premier and Opposition leader in New South Wales, Australia, to follow the lead of Ontario in recognising Sri Lanka’s genocide against Tamils and to refer the perpetrators of the genocide to the International Criminal Court. McDermott’s statement comes in advance of Mullivaikkal remembrance on 18 May. 12 years have passed since the end of the armed conflict however no military official has been held accountable for grievous war crimes that took place. In his statement, McDermott highlights report UN reports which revealed that in the last stages of the war; He further adds: In his statement, McDermott stressed that “as Sri Lanka is not a party to the Rome Statute, the referral [to the International Criminal Court] must receive unanimous support from all UN Security Council members”. He further notes the efforts of parliamentarians across Europe to achieve this such as the “twenty-one parliamentarians from across France [who] have called on President Macron to use France's influence as a member of the United Nations Security Council to make that referral happen”. His statement further maintained that Australia should follow suit and recognise Sri Lanka’s “appalling acts as genocide”. McDermott also thanked the Tamil community in western Sydney noting; He added: Responding to his statement, Gajen Ponnambalam, thanked him on Twitter stating: https://www.tamilguardian.com/content/calls-new-south-wales-recognise-tamil-genocide   நியூ சவுத் வேல்ஸ் சட்டமன்றத்தின் உறுப்பினரான டாக்டர் ஹக் மெக்டெர்மொட், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் இனப்படுகொலையை அங்கீகரிப்பதில் ஒன்ராறியோவின் முன்னணியைப் பின்பற்றவும், இனப்படுகொலையின் குற்றவாளிகளைக் குறிப்பிடவும் அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு. மெக்டெர்மோட்டின் அறிக்கை மே 18 அன்று முல்லிவைக்கல் நினைவுக்கு வருவதற்கு முன்கூட்டியே வருகிறது. ஆயுத மோதல் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன, இருப்பினும் நடந்த கடுமையான போர்க்குற்றங்களுக்கு எந்த இராணுவ அதிகாரியும் பொறுப்பேற்கவில்லை. தனது அறிக்கையில், யுனைடெட் அறிக்கைகளை மெக்டெர்மொட் சிறப்பித்துக் காட்டுகிறார், இது போரின் கடைசி கட்டங்களில் வெளிப்படுத்தியது;
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.