Jump to content

யாழ்ப்பாணத்தில் உயிர் வாழப் போராடும் ஓர் சிறுமியின் உயிர் காக்க,கருணையோடு உதவிட முன் வாருங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!


Recommended Posts

1553414_540877942682274_3629476110471719

யாழ்ப்பாணத்தில் உயிர் வாழப் போராடும் ஓர் சிறுமியின் உயிர் காக்க,கருணையோடு உதவிட முன் வாருங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

Father - Yoga

Mother - Jeyagowri

Bank Account number- 8108042022(Commercial Bank)

Mobile Number - 0094779672133

யாழ்ப்பாணம் வல்லிபுரம் புலோலி பகுதியினைச் சேர்ந்த,செல்வி.யுலக்சனா யோகா என்னும் பெயருடைய சிறுமி கடந்த 6 வருட காலமாக தொண்டைப்பகுதியில் புற்றுநோய் இருப்பதை உறுதிப்படுத்திய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் அவருக்கு இரண்டுதடவைகள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய்க் கட்டிகளை அகற்றினர்.

அதன் பின்னர் தொண்டைப்பகுதியில் துவாரம் இட்டு அதனாலேயே சிறுமி சுவாசிப்பதற்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டிருந்தனர்.இந்நிலையில் தொடர்ந்து கிளினிக் சென்று வரும் சிறுமிக்கு மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்-தெரிவிக்கப்படுகின்றது.

பன்னிரெண்டு வயதாகும் சிறுமிக்கு தற்போது சுவாசக்குளாய் விரிவடையவில்லை என்றும் அவசரமாக சத்திரசிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம்.

வறுமையில் வாடும் இச்சிறுமியின் தந்தையோ நாட்கூலி வேலை செய்தே குடும்பத்தைக் காப்பாற்றுவதாகவும்-உடனடியாக சிறுமிக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு தம்மிடம் வசதியில்லையென்று என்று சிறுமியை வீட்டில் வைத்து பராமரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்கள் நகருமானால் இச்சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கவலை தெரிவிக்கப்படுகின்றது.

மற்றவர் துன்பத்தில் பங்கு கொள்ளும் கருணை உள்ளம் படைத்தவர்களே! இவர்களிடம் 0094779672133 என்ற இலக்கத்துடன் பேசுங்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திற்கென ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு இப்படியான இக்கட்டான நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்பது எனது அவா.
தற்சமயம் என்னால் முடிந்த உதவியை செய்ய முயற்சிப்பேன்.

Link to comment
Share on other sites

யாழ் களத்திற்கென ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு இப்படியான இக்கட்டான நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்பது எனது அவா.

தற்சமயம் என்னால் முடிந்த உதவியை செய்ய முயற்சிப்பேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திற்கென ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு இப்படியான இக்கட்டான நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்பது எனது அவா.

தற்சமயம் என்னால் முடிந்த உதவியை செய்ய முயற்சிப்பேன்.

 

வணக்கம் வாத்தியார்...

 

யாழ் களம் பொன்ற முகம் தெரியாத உறவுகளின் பங்களிப்போடு இவ்வாறான திட்டங்களைத்தொடர்ந்து செய்யமுடியாது..

இவ்வாறு அவசர உதவிகள் வேண்டி

நடக்க

இயங்க

பேச முடியாத

பல ஆயிரம் முன்னாள் போராளிகள் உட்பட பல ஆயிரம் பொதுமக்களும் உள்ளனர்..

என்னைப்பொறுத்தவரை

எனது அனுபவ அடிப்படையில்

இவை அரசால்  அல்லது அரச சார்பற்ற உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அமைப்பக்களால் மட்டுமே செய்யமுடியும்

ஏனெனில் இவற்றின் செலவுகளும் தொடர் சேவையும் கோடிக்கணக்கான செலவீனங்களாகும்...

 

தமிழரிடையே உள்ள

அல்லது யாழ் களத்திலுள்ள

ஒரு குறிப்பிட்டவீத இரக்ககுணம் கொண்டவர்கள்மீது  தொடர்ந்து சுமைகளை சுமத்துவோமாயின்

அது சில காலத்தின்பின் எமது போராட்டம் போல் தீண்டத்தகாததாகிவிடும் நிலையே வரும். .... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...

 

 

 

தமிழரிடையே உள்ள

அல்லது யாழ் களத்திலுள்ள

ஒரு குறிப்பிட்டவீத இரக்ககுணம் கொண்டவர்கள்மீது  தொடர்ந்து சுமைகளை சுமத்துவோமாயின்

அது சில காலத்தின்பின் எமது போராட்டம் போல் தீண்டத்தகாததாகிவிடும் நிலையே வரும். .... :(  :(  :(

 

விசுகு அண்ணா நான் சொல்வது

யாழ் நிதியம் என்று ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்து நீண்ட கால அடிப்படையில் நிதி திரட்டலாம்.

கள உறவுகள் தங்களுக்கு முடிந்த நேரத்தில் விரும்பினால் அந்த நிதியத்திற்கு தங்கள் அன்பளிப்பை வழங்கலாம்.

அதைவிட கள உறவுகளின் உதவியுடன் நடைபெறும் கலை நிகழ்வுகள், சந்திப்புக்கள்,

நூல் வெளியீட்டு விழாக்கள் போன்ற நிகழ்வுகளில் களத்திலே இல்லாதவர்களிடமும் நிதி சேகரிக்கலாம்.

முக்கியமாக இந்த நிதியத்திற்கு நிதி சேகரிப்பதற்கென்றே கலைநிகழ்ச்சிகளை நடத்தலாம்.

ஆனால் இதற்கு நிர்வாகம் என்ன சொல்லும் யார் அதற்குப் பொறுப்புக் கூறுவது போன்ற சில சிக்கல்கள் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நான் சொல்வது

யாழ் நிதியம் என்று ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்து நீண்ட கால அடிப்படையில் நிதி திரட்டலாம்.

கள உறவுகள் தங்களுக்கு முடிந்த நேரத்தில் விரும்பினால் அந்த நிதியத்திற்கு தங்கள் அன்பளிப்பை வழங்கலாம்.

அதைவிட கள உறவுகளின் உதவியுடன் நடைபெறும் கலை நிகழ்வுகள், சந்திப்புக்கள்,

நூல் வெளியீட்டு விழாக்கள் போன்ற நிகழ்வுகளில் களத்திலே இல்லாதவர்களிடமும் நிதி சேகரிக்கலாம்.

முக்கியமாக இந்த நிதியத்திற்கு நிதி சேகரிப்பதற்கென்றே கலைநிகழ்ச்சிகளை நடத்தலாம்.

ஆனால் இதற்கு நிர்வாகம் என்ன சொல்லும் யார் அதற்குப் பொறுப்புக் கூறுவது போன்ற சில சிக்கல்கள் இருக்கும்.

 

 

நீங்கள் சொல்வது நல்லவிடயம் தான் வாத்தியார்

ஆனால் நடைமுறைச்சாத்தியம் பற்றித்தான் நான் பேசுகின்றேன்

யாழில்  இருந்து தொடங்கப்பட்ட நேசக்கரம் ஏற்கனவே உள்ளதே.....

 

முன்பும் பலமுறை இது பற்றி பேசியிருக்கின்றோம்

யாழ் நிர்வாகம் பொறுப்பெடுக்காது

அதேநேரம் கள உறவுகளும் பொறுப்பு மற்றும் பணப்புழக்கம் என்றதும் பின் வாங்கிவிடுவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல அனுபவங்கள் அப்படிப் பின்வாங்க வைத்துள்ளது.

 

 


.

 

முன்பும் பலமுறை இது பற்றி பேசியிருக்கின்றோம்

யாழ் நிர்வாகம் பொறுப்பெடுக்காது

அதேநேரம் கள உறவுகளும் பொறுப்பு மற்றும் பணப்புழக்கம் என்றதும் பின் வாங்கிவிடுவார்கள்..

Link to comment
Share on other sites

இந்தச் சிறுமி தொடர்பாக ஏதாவது தொடர்புகள் / முயற்சிகள் செய்தீர்களா வாத்தியார் ? அப்படி ஏதும் செய்தால் இங்கே பதிவிடுங்கள். என்னால் முடிந்த பொருளாதார உதவிகளை உங்களுடன் இணைந்து செய்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிறுமி தொடர்பாக ஏதாவது தொடர்புகள் / முயற்சிகள் செய்தீர்களா வாத்தியார் ? அப்படி ஏதும் செய்தால் இங்கே பதிவிடுங்கள். என்னால் முடிந்த பொருளாதார உதவிகளை உங்களுடன் இணைந்து செய்கிறேன். 

 

செய்தியை  இணைத்ததுடன் no  fire  zone .தனது பங்களிப்பை முடித்துவிட்டார்.

ஆனால் இதில் நம்பகம் இருக்குமா என்பதில் எனக்குச் சந்தேகம்.

தொலைபேசியில் தொடர்பு கிடைக்கவில்லை.

அல்லது அவர்கள் தொடர்பிற்கு வரவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.