-
Tell a friend
-
Topics
-
Posts
-
By நன்னிச் சோழன் · Posted
அடிபாட்டுச் செய்திகள் செய்திகள் இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 27 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்திலும் 'உதயன்' என்ற உள்ளூர் தமிழ் நாளேட்டிலும் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக. ஆனையிறவு அருகே கடும் சண்டை மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4437 செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:38 தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022 இயக்கச்சி சிறிலங்கா தரைப்படை தளத்திற்கு வடக்கே உள்ள சிறிலங்கா தரைப்படையின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்களை முடுக்கிவிட்டதால், ஆனையிறவுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் சண்டை வெடித்தது. விடுதலைப் புலிகள் சிறிலங்கா தரைப்படை நிலைகளை சேணேவி மற்றும் கணையெக்கி மூலம் குத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், படையினர் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் கூறின. யாழ்ப்பாண நகரின் புறநகர்களான நாவற்குளி, கைதடி தெற்கு, மறவன்புலவு, கோவில்கண்டி மற்றும் அரியாலை கிழக்கு, கொழும்புத்துறை தெற்கு ஆகிய ஊர்கள் மீது எறிகணைகள் தாக்கியதாக யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன. நாவற்குளி வீடமைப்புத் திட்டத்தில் உள்ள பல வீடுகள் நேற்றிரவு எறிகணைத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எறிகணைகள் விடுதலைப் புலிகளால் வீசப்பட்டதா அல்லது சிறிலங்கா தரைப்படையினராலா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இந்த ஊர்களில் உள்ள பொதுமக்கள் ஓம்பலான பரப்புகளுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உமையாள்புரம் முகாம் முற்றுகையிடப்பட்டுள்ளது - வானொலி மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4438 செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:03 தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022 -
அவசரப்படாதீர்கள் கோசான். RT. news ஐ இணைத்தது உங்களுடன் முரண்படுவதற்கல்ல. நாம் எல்லோரும் எதிர்பார்த்ததை விட, அதி வேகமாக கழுத்தறுப்பு நடைபெற்றுவிட்டது என்பதைக் காட்டவே அந்தச் செய்தியை இணைத்திருந்தேன். வேறு நோக்கம் எதுவும் இல்லை. 👍
-
By goshan_che · Posted
எனக்கும் அப்படித்தான் படுகிறது. ஆனால் சிங்களவர் இதை ஜீரணிக்க கஸ்டபடுவார்கள். படட்டுமே🤣 -
By goshan_che · Posted
பண்டிதர் பூங்காவை நினைவு படுத்தியமைக்கு நன்றி. இங்கே இரு முதலையும் இருந்ததாக நினைவு. தீக்கோழி என்பார்கள் யாழில் இல்லை என நினைகிறேன். அதுவும் இருந்தது. அதே போல் ஆனைக்கோட்டையில் தியாகசீலம் என்று ஒரு அருமையான சிறுவர் பூங்காவும். மானிப்பாய் அந்தோனியாருக்கு அருகில் உறுதியின் உறைவிடம் என்று ஒரு அருங்காட்சியமும் இருந்தது. 87 க்கு முந்திய முயற்சிகள். இந்தியன் ஆமி வருகையோடு அழிந்து போனது. @நன்னிச் சோழன் எதிர்காலத்தில் தகவல் தேவைப்படலாம். -
By பிரபா சிதம்பரநாதன் · Posted
இரு நாட்களுக்கு முன், எனது தந்தையுடன் கதைத்த பொழுது, இலங்கையில் இந்திய நாணயத்தை உபயோகிக்கும் சாத்தியம் பற்றி கூறிவிட்டு அப்படி போனாலும் பரவாயில்லை எனக் கூறினார் ஏனெனில் சனம் சொல்லமுடியாத கஷ்டங்களை அனுபவிக்கிறது என்று.. ஆனால் கடஞ்சா இங்கே எழுதியதுதான் நினைவிற்கு வந்தது, அதனைப்பற்றி மெதுவாக அவரிடம் கூறிய பொழுது.. கொஞ்சம் யோசித்தார்.. ஆனால் பொதுவாக சாதாரண மக்கள் இந்த பிரச்சனையில. இருந்து மீள அதுதான் வழி என யோசிக்க தொடங்கிவிட்டார்கள் போல உள்ளது.. அரசாங்கத்தில் நம்பிக்கை அறவே போய்விட்டது..
-
Recommended Posts