-
Topics
-
Posts
-
பிரோ எங்க தமிழ் சமுதாயம் ரொம்ப கெட்டு போச்சு , மனித நேயம் இல்லா தந்தை , வயது கூடினதொலிய , அறிவு தந்தையிடம் சுத்தமாய் இல்லை 😓, வாழ் நாள் பூரா சிறையில் வாடனும் 😠
-
மீண்டும் களத்தில் புத்தன் முழுமூச்சுடன்??? அதை நாங்க சொல்லணும் ராசா வாங்கோ வாங்கோ வாங்கோ
-
வெடி தான்.....
-
நூறு கதை நூறு படம்: 35 சேது June 22, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர் காதல் யூகத்திற்குள் அகப்படாத வினோதங்களில் ஒன்று. பாலுமகேந்திராவின் பள்ளியிலிருந்து கிளம்பியவர்களின் பட்டியலில் முக்கியப் பெயராக பாலாவின் பெயரை எழுதுவதற்கான காரணப் படம் சேது. கையாள்வதற்குச் சிரமமான காதலின் தனித்த கடினத்தைச் சொல்ல முற்பட்ட படம். அச்சு அசலான பதின்பருவத்தின் தளைகளற்ற ஆண் மனம் ஒன்றை கொஞ்சமும் புனைவுத் தன்மை துருத்தாத வண்ணம் சித்தரித்தார் விக்ரம். நாயகவேஷத்தின் அதீதங்கள் எதுவும் கலக்காமல் படிகம் போன்ற துல்லியத்தோடு ஆடவனின் தனியாவர்த்தன உலகம் நம் கண் முன்னால் விரிந்தது. அங்கே தென்பட்ட தேவதை அபிதாவின் மீது சேதுவுக்கு ஏற்பட்ட வாஞ்சை ஆதுரமாகித் தேடலாய்க் கனிந்து காதலாவதெல்லாமும் நம்பகத்தின் ஓடுபாதையில் பிசகாமல் நிகழ்ந்தேறியது. சொல்லவந்த காதலின் ஒற்றை இழையை, முன்பறியா யதார்த்த நேர்த்தியுடன் சித்தரித்ததும், தன்னைத் தானே நகர்த்திக் கொண்டு செல்லக்கூடிய திரைக்கதையின் சொலல் முறையும் சேதுவின் பலங்கள். குரல் மொழி இசை எனத் தன் மூன்று மலர்களைக் கொண்டு இந்தப் படத்தை உயிர்ப்பித்தார் இளையராஜா. திரைப்படத்தின் பாடல்கள் என்பவை இந்தியசினிமாவின் கதாநம்பகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று திருப்புவது எப்படி நோக்கினாலும் காட்சியனுபவத்தில் இடையூறாகவே விளையும். அபூர்வமாக சேதுவின் பாடல்கள் லேசாக வெளுத்த, முகிழ்ந்து முடிக்காத, மொட்டும் பூவுமான, பாதி மலர் ஒன்றாகவே இயைந்து ஒலித்தன. கலை, காதலைக் கையாளும்போது மாத்திரம் ஒரு சிட்டிகை புனிதத்தை அதன்மீது கூடுதலாய்த் தெளித்துவிடுகிறது. பரஸ்பரம் சரிவர நுகரப்படாத, பாதியில் கலைந்த ஒரு கனவேக்கத்தை ஒத்த அரிதான காதலை சேதுவும் அபிதாவும் கொண்டிருந்தார்கள். மலர் பறிப்பதுபோலக் காதலைக் கையாண்டு கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், உயிர் பறிக்கிற கடினத்தோடு தன் காதலை முன்வைத்தான் சேது. ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிந்தும் நிராகரிக்கவே முடியாது என்பதையும் தெரிந்துகொண்டு அவனைப் பெற்றுக்கொண்டு, தன் மனதைத் தர முனைந்தாள் அபிதா. அவனது தாமத வீதியில் உதிர்ந்து கிடக்கும் சருகுப் பூக்களில் ஒன்றென உயிரைத் துச்சம் செய்து கொண்டு, கதைகளை முடிவுக்கு அழைத்தாள் அபிதா. பச்சை வண்ணம் ததும்பும் பிறழ் மனங்களின் வனாந்திரமாம் பாண்டி மடத்திலிருந்து, தன் மன மீள்தலை நிரூபித்தபடி, காதலாளைத் தேடி வருகிற சேது, அவளற்ற தன் உலகில் எஞ்சுகிற ஒரே இடமான அதே இடத்துக்குத் திரும்புகிறதோடு முடிகிறது படம். துக்கமும், கண்ணீரும் காதலை எப்போதும் சுற்றி இருக்கிற எடையற்ற குறளிகள் அல்லது காதலின் இருபுறச் சிலுவைகள். வென்ற காதல்களின் பேரேடுகள் தணிக்கைக்கு அப்பால் கைவிடப்படுகிற வெற்றுத் தகவல்கள் காலச்செரிமானத்துக்குத் தப்பிப் பிழைக்கிற வல்லமை தோற்ற காதல்களுக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில் தேவதாஸ் பார்வதி வரையிலான பாதிமுழுமைகளின் சின்னஞ்சிறிய பட்டியலில் சேதுவும் அபிதாவும் நிரந்தர ஒளிப்பூக்கள். யதார்த்தமான மனிதர்களைப் பாத்திரமாக்கியதன் வெற்றியை அறுவடை செய்தார் பாலா. தன்னை எந்தளவுக்கும் வருத்திக்கொள்ளக் கூடிய இன்னொரு மகா நடிகனாகவே விக்ரம் தன் அடுத்த கணக்கைத் தொடங்கினார். அனேகமாக இந்திய அளவில் நெடிய காத்திருத்தல் காலத்தினைக் கடந்து ஒளிவட்டம் பெற்ற நட்சத்திரமாக விக்ரமைச் சொல்ல முடியும். பாடல்களும் ஒளிப்பதிவும் இயல்பின் சுவர்களுக்குள் இயங்கிக் கடந்த வசனங்களும் சிவக்குமார் ஸ்ரீமன், மோகன் வைத்யா, அபிதா என பாத்திரங்களுக்கான நடிக தேர்வுகளும் என்று எல்லாமே காரணங்களாயின. சேது தமிழ் நிலத்தின் அடுத்த தேவதாஸ் ஆகவே தன் தடத்தைப் பதித்தது. சொல்லாக் காதலில் தொடங்கி வெல்லாக் காதல் வரைக்கும் வென்ற காதல் வெல்லக் கட்டி தோற்ற காதல் வைரக்கட்டி என்பதுதான் காதலுக்கான புனைவுலக அந்தஸ்து. அதனைக் கம்பீரமாகப் பொன்னேட்டில் பொறித்துத் தந்த படம் சேது. https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-35-சேது/
-
By goshan_che · Posted
8 வயது சிறுமியை ஒரு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்த தந்தையை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள 4ஆம் காலனி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கூலித் தொழிலாளியான தந்தை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கடந்த 26ஆம் திகதி வரை தனது 8 வயதான மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். இதனையடுத்து சம்பவதினமான நேற்றிரவு குறித்த தந்தையாரை பொலிஸார் கைதுசெய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள தந்தையாரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/8-வயது-சிறுமியை-ஒரு-வருடமா/?fbclid=IwAR2JQHF0Zafn1WP50RnHOjdTRDFI1GFRGeRl-dHk6j13Kta-mhRNiKh5FrY
-