-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஈழப்பிரியன் · Posted
வணக்கம் பரணி உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இணைந்திருங்கள். -
By ஈழப்பிரியன் · Posted
சிலவேளை மலையாளம் பிறந்து 500 வருடங்ளாக இருக்கலாம். -
By Paranee · பதியப்பட்டது
சினத்தை குளிர்விப்பதற்காய் பெருநடை ஒன்றை பற்றிப்பிடித்திருந்தேன் செவிகளை உரசி உரசி சீண்டியபடி நகர்ந்தது காற்று நாசியறைந்தபடி மிதந்து திரிந்தது வெம்மை விழிகளில் நீந்தியபடி விளையாடித்திரிந்தது சினம் விரைந்து விரைந்து வேர்வைக்குளியலோடு வீசியகைகளில் வேகத்தை விதைத்தபடி நடை பயணத்தை நகர்த்திக்கொண்டிருந்தேன் காலம் பலவற்றை நினைவூட்டி செல்கிறது எத்தனை வலிகள் எத்தனை குதறல்கள் எத்தனை குமுறல்கள் அத்தனையும் காலம் பதிந்துகொண்டே நகர்கிறது புரிந்தும் புரியாதவர்களாய் புதர் மறைவில் புதையும் வெளிச்சரேகைகளாய் பலர் இன்றும் வாழ்வதாய் நினைத்தபடி வரைந்த கோடுகளில் மீள மீள வாழ்வை வரைந்தபடி நகர்கிறார்கள் காலம் அவர்களயும் பதிய மறுக்கவில்லை என்.பரணீதரன் ( கரவை பரணீ) நோர்வே 99ம் ஆண்டு பாலைவன மண்ணில் இருந்து தமிூழ தேடித்திரிந்தபோது விழிகளிற்குள் அகப்பட்டது யாழ் இணையம். அன்று இணைந்ததுதான் காலச்சழற்சியில் இடையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இன்று 25வது அகவையோடு இணைகின்றேன். என்னை எனக்கும் எல்லாரிற்கும் அறிமுகம் ஆக்கிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துகள்.
Recommended Posts